Saturday, February 9, 2013

PARKAVA KULAM பார்கவ குல சத்திரியர்கள்.(மூப்பனார்,உடையார்,நயினார்)

காரி வழிமுறையும் காசினியில் வேளிர்,வேள் பாரி வழிமுறையும் பல்கற்கே நீருள்ளீர்.--முது கபிலர்.

I

















வேளிர்
========
இளையர் என்ற இளமறவர்
மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்
கொடும்பாளூர் இருக்குவேளிரான இருங்கள்ளர் குலத்தவர்கள்
மறவர் என்பது இனப்பெயர்.. பன்பு பெயரல்ல!!

கோவற் கோமான் மலையமான் வம்சமாக ஆதாரப்பூர்வமாக வாலிகண்டபுரம் கல்வெட்டு ,வரஞ்சுரபுரம் கல்வெட்டு மேலும் திருச்செங்கோட்டில் ஐம்பது கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்,16,17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மோரூர் கல்வெட்டுகள் முதல் திருக்கோவிலூர் வீரட்டானம் கல்வெட்டு,உலகளந்த பெருமாள் கோவில் கல்வெட்டு வரை உறுதிசெய்யப்பட்டு அறியப்படுவோர் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே.


தென்னிந்திய அரச குலங்களில் மலையமான் குலமும் முக்கியமான ஒன்று. மூவேந்தரின் சதியால் ஏற்பட்ட பாரியின் மறைவிற்கு பின்,தந்தையை இழந்து நின்ற பாரிமகளிரை,புலவர் கபிலர் பெருமான் தனது முயற்சியின் மூலமாக  திருக்கோவிலூரையாண்ட மலையமான் தெய்வீகன் நரசிங்க உடையான் என்ற அரசனுக்கு சங்கவை,அங்கவை இருவரையும் மணம் செய்விக்க வேண்டி ,பாரியை சதியால் கொன்ற மூவேந்தரையுமே ஔவையாரின் உதவியுடன் அழைத்து, அவர்களின் முன்னிலையிலேயே பாரிமகளிருக்கும் மலையமான் தெய்வீகனுக்கும் திருமணம் செய்வித்தார்.
இவ்வாறு மூவேந்தர் முன்னிலையில் ஏற்பட்ட மண உறவின் காரணமாகவும், மூவேந்தரின் மக்களுடனும் உண்டான மண உறவின் காரணமாகவும் மலையமான் தெய்வீக ராஜனின் சந்ததியினர் பார்கவ குலம்,பாரியின் வம்சம் எனவும் அழைக்கப்படுகின்றனர்.தெய்வீகராஜனின் மக்கள் மலையமன்னர் நரசிங்க முனையரையர் ,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன் என்ற மூவர்.அதில் மலையை ஆட்சி செய்பவர் மலையமான் எனவும் சமதளத்தை ஆட்சி செய்தவர் நத்தமான் எனவும்,மண்ணும்,மலையும் ஆள்பவர்கல்வி,வீரம்  எல்லாவற்றிலும் சிறந்தவர் தேர்ந்தவர் சுருதிமான் எனவும் வழங்கப்பட்டார்கள்.மேற்படி பட்டங்களைக்கொண்ட மலையமான்களாகிய தண்ணிழல் வாழ்நர் (சேர அரச குலத்தார்)என்று அழைக்கப்பட்ட இவர்களின் இனத்தார் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்குமே மலையமன்னர்,நத்தமன்னர் என்ற குறுநிலமன்னர்களாக,பாளையக்காரர்களாக 
நாட்டார், உடையார்,நயினார்,மூப்பனார் என கிராம நிர்வாகிகளாக தலைவர்களாக இருந்தனர். அவர்களின் வம்சாவழியினர் இன்றைக்கும் அதே பட்டங்களுடனேயே அழைக்கப்படுகின்றனர்.
குல முதல்வராக குலசேகரன் சுருதிமன்னர் அறியப்படும் காரணத்தால் அவர்தம் வம்சத்தினர் மூப்பனார் ஆவார்.குலசேகரன் சுருதிமானை,குலசேகர ஆழ்வாராகவே கருத வேண்டியுள்ளது.ஏனெனில் பார்க்கவ குலத்தில் சைவ மதத்தின் தாக்கம் பிற்காலத்தே  நயினார் என்றே பட்டம் கொள்ளும் அளவிற்கு மேலோங்கி நின்றதால் வைணவப் பற்றுடைய ஆழ்வார் குலசேகரருக்கு முக்கியத்துவம் தராமல் ஒதுக்கியுள்ளனர்.தெய்வீகன் மலையமான் வம்சத்தோர் ஆண்டதாக செப்பேடு குறிப்பிடும் பகுதிகள் அனைத்தும் சேரமான் குலசேகர ஆழ்வார் ஆண்ட பகுதிகள்.சுருதிமானின் வரலாறும் ஆழ்வாரை அநேகமாக ஒன்றே என்று காட்டினாலும் வைணவப் பற்றுடையவர் என்ற உண்மையை மறைக்க வேண்டி செய்த பிசகு இன்றைக்கு பார்க்கவ குலத்தார் குலமுதல்வன்(சுருதிமான்) பற்றியே அறியப்படாமல் இருக்கின்றனர்.
மலையமான்களின் நேரடி மரபு வழி வந்தோர் பாரியின் வம்சமான பார்க்கவ குலத்தார் மட்டுமே.பார்கவ குலத்தோர் சோழனுக்கு பெண் கொடுக்கும் உயர் நிலையில் இருந்த அரச குடும்பத்தார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள
சோழ பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி,

"பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்"
என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி.
இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார்.
என்றைக்கும் பாரியின் வம்சமாக கல்வெட்டு கூறும்
பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு வம்சத்தோர்
பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே.
மேலும் “
தெய்வக்கவிதைச்செஞ்சொற்கபிலன் மூரிவண்தடக்கை பாரிதனடைக்கலப்
பெண்ணைமலையற் குதவிப்பெண்ணை அலைபுனல்அழுவத்து அந்தரிட்சம்செல மினல்புகும்விசும்பின் வீடுபேறெண்ணி கனல்புகும் கபிலக்கல்லது*.
” –என இராசராச சோழன் கல்வெட்டும் மலையமான் பாரி வம்ச உறவினை மெய்ப்படுத்தும் கல்வெட்டு மூலமும் இவ்விரு வேளிர் வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே..

சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்க்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழனின் கிளைக்குடியாகவும் பார்க்கவ குலத்தார் வரலாற்றாளர்களால் கூறப்படுகின்றனர்.ஆனால் பெரும்பாலும் இவர்கள் தனித்தே பார்கவ குல க்ஷத்ரியர் என இயங்குகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்(மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடும் மண உறவு கொண்டுள்ளனர்.  பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்னும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள்.

காளியை குலதெய்வமாக கொண்ட போர்க் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.சோழனது படை பலமாக,காவலாக விளங்கிய போர்க்குடிகளில் மலையமான் இனம் முதன்மையானது.

மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவர், திருமுடிக்காரியின் மைந்தர் இருவருள் இவரும் ஒருவர். இவர் சோழனின் சேனாதிபதியாக பொறுப்பேற்றவர்.முள்ளூர் மலையை ஆண்டவர்.

சோழ மன்னன் பகை மன்னர்களால் தோற்கடிக்கப்பட்டு இவருடைய முள்ளூர் மலையில் அடைக்கலம் புகுந்தார்.மலையமான் திருக்கண்ணன் பெரும்வீரன் என்பதால் பகைவரை போரிட்டு வென்று சோழ நாட்டை சோழனுக்கே மீட்டுக்கொடுத்தார் என்ற செய்தி புறநானூற்றுப்பாடலில் காணப்படுகிறது.



மன்னர்காலத்திற்கு பின்னர் போர்க்குடியினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர் என்னும் காலமாற்றத்திற்கு ஏற்ப இவர்களும் விவசாய குடிகளானார்கள். குறுநில மன்னர்கள், வேளிர்கள்,போர் மறவர்கள்,தளபதிகள், ஆகிய இவ்வினத்தார் ஜமீன்களாகவும்,பண்ணையார்களாகவும் மாறினர்.

பார்க்கவ வம்சத்து மன்னர்களில் சிலர்.......

தெய்வீகன் நரசிங்க உடையான்,
மலையமன்னர் நரசிங்க முனையரையர்,
நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,
சுருதிமன்னர் குலசேகரன்,(குலசேகர ஆழ்வார் தான் இவர்)
மலையமான் திருமுடிக்காரி,
தேர்வண் மலையன் என்னும் தேர்வீகன், 
மலையமான் சோழியவேனாதிதிருக்கண்ணன், 
மலையன்,
வேள் பாரி,
பாண்டியராய திரணி சுருதிமான்,
கூத்தன் வாணராயன் திரணி சுருதிமான்,
நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,
ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்,
கிளியூர் மலையமான் பெரிய உடையானான சேதிராயன், 
சதிரன் மலையனான ராசேந்திர சோழ மலையமான், 
சூரியன் சாவன சகாயனான மலையகுலராசன், 
சூரியன் மறவனான மலையகுலராசன், 
சூரியன் பிரமன் சகாயனான மலையகுலராசன், 
கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்தி ராஜேந்திர சோழ சேதிராயன் 
கிளியூர் மலையமான் குலோத்துங்க சோழன் சேதிராயன், 
கிளியூர் மலையமான் அரச கம்பீர சேதிராயன், 
கிளியூர் ராசகம்பீர சேதிராயன் கலியபெருமாள் பெரிய நாயனான சேதிராயன், 
கிளியூர் ராசகம்பீர சேதிநாடன், 
ராசராச மலையராயன் ஆகிய அருளாளப்பெருமான் ராசராச சேதிராயன், 
கிளியூர் ஆகாரசூர மலையமான், 
ராசேந்திர சோழ மலையகுல ராசன்விக்கிரம சோழ சேதிராயன். 
சித்தவடத்தடிகள் எனும் நரசிம்ம வர்மன்
உத்தம சோழ மிலாடுடையான் 
மிலாடுடையான் நரசிம்ம வர்மன் (௨)
சேதி திரு நாடன் 
பெரிய உடையான் கரிய பெருமான் சொக்கப் பெருமாள்.
இறையூரன் சேதிராயன்.
பெரிய உடையான் கோவலராயன்
கரிகால சோழ ஆடையூர் நாடாழ்வான்
ராசராச சேதிராயன்(கோப்பெருஞ்சிங்கன் மருமகன்)

இவர்கள் போன்று இன்னும்  எண்ணற்ற சிற்றரசர்களையும்,தளபதிகளையும்,வேளிர்களையும் கொண்ட அரச குடும்பமே பார்க்கவகுலம்.
அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில்

முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன்,
மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான்,
மலையமான்,சேதியராயன்,வன்னிய நாயகன்,பண்டரையர், கோவலராயர்,வாணகோவரையன்,வாணராயர்,வாணவிச்சாதிரன்,
காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)பல்லவராயர்,அரையதேவன்,நாடாழ்வான் போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள்.
மலையமான்,நத்தமான்,சுருதிமான்,இம்மூவரும் அரசன் என்று பொருள் படும் உடையார் என்ற பொதுப்பட்டம் கொண்டவர்கள்.(சுருதிமான்)மூப்பனார் என்ற பட்டம் குல முதல்வர் (HEAD MAN)என்ற பொருளிலும்,நயினார்,என்றபட்டம்  நாயன்மார் (மெய்ப்பொருள் மன்னர்,நரசிங்க முனையரையர்)வழியில் பிறந்தோர் என்ற அர்த்தத்தையும் கொண்டது.உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மேற்காண்பவை.

(கன்னட,தெலுங்கு பேசும் உடையார்கள் என உடையார் பட்டம் கொண்டு பலர் இருப்பினும்,பார்க்கவ குலத்தாருக்கு ஆதியிலிருந்தே உடையார் பட்டம் மலைநாட்டு அரசன் என்ற பொருளில் மலாடுடையார் என்ற பொருளில் வந்துள்ளது.மேற்கண்டோருக்கு பார்கவ குலத்தாரோடு எத்தொடர்பும் கிடையாது.
U


சதுர்த்த கோத்திரம் காலாக்கள் தோழ உடையார் ஆவார்கள் உடையார் பாளையத்தின் பாளையக்காரர் இதைபோல் துறையூர் ரெட்டியார்களும் சதுர்த்த கோத்திரம் என கூறுகிறார்கள் இருவரும் உறவினர்கள் என "அனந்தரங்க பிள்ளை டைரி" என்ற பாண்டிசேரி பிரஞ்சு கவர்னர் டுப்லெஸ் எழுத்தர் கூறுகிறார் . சதுர்த்த என்பதற்கு  நான்காம் வர்ணம் என பொருள். ஆதாவது நான்காவது வர்ணத்தை சார்ந்த நயினார்,ரெட்டி என்ற பட்டம் கொண்டோர் .உடையார் பாளையம் உறவினர்கள் முகப்பருசூர் கச்சிராயர் மற்றும் விளந்தை இராவுத்த நயினார் இருவருக்கும் முதலியார் பட்டம் உள்ளதாக கூறும் இவர்களுடன் பிச்சாவரம் பாளையக்காரர் என சொல்பவரும் உடையார்பாளைய உறவினரே. இவர்களுடன் அரியலூர் நயினார் விஜயநகர சுபேதாராக இருந்த பூம நயினார் வழியினர் என கூறுகிறார் . இவர்கள் அனைவரும் தொண்டை மண்டலமுதலியார்  என்ற கன்னட வொக்காலிகர் என தோன்றுகிறது.தொண்டை மண்டலா முதலியார் வழியினர் தமிழர் கிடையாது . விஜயநகர கணக்கராக இருந்த அரியநாத முதலியார் என்ற வொக்காலிகர் வழியினர் என ருசுவாகும்.





The Nayak flavour


March 13, 2014 06:11 pm | Updated May 19, 2016 08:24 am IST - chennai

A performance in the presence of the King: A fresco at the Ramanathapuram TempleA performance in the presence of the King: A fresco at the Ramanathapuram Temple

Dancer and dance historian Swarnamalya Ganesh writes:

“Song and dance were the principle pre-occupations of the society for which he was the leader,” says N. Venkataramaiyyah in his preface to the work, ‘Raghunathabhyudayamu.’ An ‘Abhyudayamu’ is technically the description of a day in the life of the King through dvipada (couplet poems), songs and dialogue. These Abhyudayams were performed as dance and music discourses everyday in the courts.

The Nayaks, who were feudatory kings under the Vijayanagara emperors, used this literary form to actively steer a course of identity for themselves. In many of their epithets and inscriptions, they address themselves as ‘chaturtha gotra putra-s.’

Pasupuleti Rangajamma in her work, ‘Mannarudasa Vilasamu,’ addresses Vijayaraghava Nayaka as ‘Mannaru gotra’ indicating his allegiance to Lord Mannarudasa or Rajagopala, perhaps tracing their lineage to Gollavaru (the neat herd). This raise of the non-ruling class saw many new cultural and social operations that set newer norms and core values for society and the performing arts.




In my work, while studying the music and dance of the Nayaks, I understood that the study of ancestral memory along racial lines is a significant debate in critical race theory. The study of dance in this political racial shift is intertwined with the understanding of their memories, class struggles, issues of identity and authority.

The Nayaks may have made unabashed proclamations of their class, but displayed great ebullience in identifying with the already existent norms of lifestyle and behaviour that befit ‘royal blood.’ The ‘ Tanjavuri Andhra Rajula Caritramu ’, the Achyuthabhyudayamu written by Raghunatha Nayaka,‘Raghunathabhyudayamu’ written by Vijayaraghava Nayaka and several such works not only documented the life, conquests and contributions of the Nayak kings but also reflected their lifestyle which resembled that of the Vijayanagara emperors, as described in the Rayavacakams.

The Nayaks were exuberant patrons of music, dance, literature and temples. It is interesting to note that they were active participants too in many of these creations by being composers, poets, musicians and experts themselves. They were often also the ‘subjects’, in the sense that from being a mere objective patron the King became the very subject (nayaka) of poetry, padas and kavyas that were embodied as dances and musical repertoires in their courts.

The phenomenon, where the subject watched his own story narrated, sung, told and danced every day, like the Abhyudayams even while he was the active participant in the very creation of such literature, is in many ways a deliberate attempt to create a sui generis cultural identity. This aspect was perhaps the most significant feature of this historical period.

Therefore a journey through their music, dance and repertoires as part of ‘ FROM THE ATTIC ’ is an attempt to reflect upon the context in which the immediate cultural memory of Bharatanatyam and classical music of today rests.”


ஆனால் வன்னிய குலத்திலும் பார்கவ குலத்திலும் ஒரே பட்டம் கொண்ட குடும்பத்தார் சிலர் உள்ளனர் என்பதை விளக்குகிறது 18ம் நூற்றாண்டைச்சேர்ந்த கிருஷ்ணாபுரம் செப்பேடு.இதன் மூலம் பார்கவ குலத்தார் வன்னியப்பட்டமும் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.

சுருதிமான் மூப்பனார்கள் கத்திக்காரர்கள்(கத்திரியர்) என்ற மெய்க்காப்பாளர் பட்டம் பெற்றவர்கள் இவர்கள் ராஜராஜனின் காந்தளூர் சாலைப்படை எடுப்பின் போது அவரோடு கேரளம் சென்று போரிட்டவர்கள். காந்தளூர் சாலையை வேரறுத்த ராஜராஜன் மீண்டும் அங்கு கேரளர்கள் தலை தூக்காதவாறு அடக்கி வைக்க இவர்களை அங்கு இருக்குமாறு வைத்து விட்டு தஞ்சைக்கு வந்துள்ளார்.அவ்வாறு அங்கே குடியேறிய பார்கவ குல மலையமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள்(படையாட்சிகள்)என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக் காணலாம்.சுருதிமான்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான்,வாணகோவரையன்,வாணராயன்,வாணவிச்சாதரன் என்ற பட்டங்களும் மூப்பனார்களுக்கு(சுருதிமான்) இருந்துள்ளது.

பாளையக்காரர்,,பாளையத்தார்,(பாளையங்களின் மன்னர்கள்) காவல்காரர்(ஊர்க்காவல் பணி) பண்டாரத்தார்,பண்டாரியார்(கருவூல அதிகாரி)உடையார்(அரசர்),மலையமன்னர்,நத்தமன்னர்,சீமை நாட்டார்,சில்லரை கிராமத்து நாட்டார்,மூப்பனார்,நயினார் (நாயன்மார் சைவ மதம் தழுவியவர்கள்) என்று பல வகையான அதிகார பட்டங்களைக்கொண்டு ஆட்சி செய்தவர்கள் பார்க்கவ குல க்ஷத்திரியர்கள்.

பாடம் கற்கும் குல குருவின் பெயரை கோத்திரமாக கூறிக்கொள்ளும் மரபு பிராமணர்,வைசியர் மற்றும் சத்திரியரிடையே மட்டுமே காணப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பல்லவர்கள் தம்மை பரத்வாஜ கோத்திரமாக கூறிக்கொண்டனர்.
அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.
சேரனின் நேரடி வாரிசாகவும்,சோழர்களின் கிளைக்குடியாகவும் உள்ள மலையர் குல அரச குடும்பமாகிய இவர்களுக்கு இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட பாரம்பரியம் உண்டு.புறநானூற்றில் இவர் மரபோர்க்கு அநேக பாடல்களும் உண்டு.

இவர்கள் முதுகுடி அரச மரபினர் என உணர்த்தும் விதமாக,காரியின் மக்களை கிள்ளிவளவனிடமிருந்து காக்கும் பொருட்டு புலவர் பாடுகையில் சோழனின் குடிப்பெருமைகளை கூறி இவர்களும் உன்போன்றே பெருமை கொண்ட தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர் குடி (வேளிர் குல அரச குடி) எனக்கூறும் புறநானூற்றுபாடல் உள்ளது.

இரண்டாயிர வருடத்திற்கும் மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட இவர்கள் பதினைந்தாம் நூற்றாண்டிலேயே வடமொழி ஆதிக்கத்தால் அரச குடி வீரர்கள் கத்திரியர் என்ற தமிழ் சொல்லின் அர்த்தப்படும்படி பார்கவ குல சத்ரியர் என அறிவித்துள்ளனர்..சில அறிவாளிகள் கூறுவது போல மலையமான் நாட்டு மக்கள் அனைவரும் மலையமான்,சுருதிமான் என்று கூறிக்கொண்டால் ஐம்பது லட்சம் மனிதர்களாவது பார்க்கவ குலம் என்று அறியப்படுவார்கள் மற்றும் மலையமான் நாட்டில் வேறு சாதிகளே காணப்படாது.

பார்க்கவ குலத்தவரே மலையமானின் வம்சத்தவர்கள் என்று ஆதாரங்கள் அநேகம் உண்டு.அதனை மாற்றவே முடியாது.
மலையமான் குலமான இவர்கள் தற்போதும் சில லட்சம் பேர்களே உள்ளனர்.இவர்களை ஜாதி அமைப்பு என்பதைக்காட்டிலும் தமிழ் நாட்டில் தற்போதும் உள்ள மலையமான் வம்சத்தின்  பார்கவ கோத்திர க்ஷத்ரியக் குடும்பமாக கூறுவதே தகுதியானது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.