Thursday, June 27, 2013

பார்க்கவ குல மக்கள்.மலாடர்=மலையர்=சேதியர்.

பார்க்கவ குல மக்கள் வேளாண்மையில் ஈடுபடுவதால் வெள்ளாளர் போன்ற ஒரு ஜாதியாக பொதுவான அறியாமையால் கருதப்படுகின்றனர்.ஆனாலும் உண்மையில் மலையர்,மலாடர்,சேதியர் என்ற சத்திரிய சமூகமான இவர்கள் எவ்வாறு எப்போது நில உடைமையாளர்களாக வேளாண்மைத் தொழிலில் இறங்கினர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த விளக்கம் .....


      LITERATURE CASTE AND SOCIETY.(REFERENCE BOOK)

TAMIL SOCIETY AND THE MILITARY IN THE AGE OF THE MEDIEVAL CHOLAS.

                                              WARFARE AND SOLDIERS.

Noboru karashima examined seven inscriptions from uttathur which belongs to the periods of the RAJARAJA 3rd.

These inscriptions all recorded within three years of the reign of RAJARAJA3rd show land transaction (selling and buying) by several suruthimans fellows in the Thiruchchirapalli district.
The suruthimans seem to be closely related to the palli, vanniya or agambadiyar castes and claimed kshathriya origin.

we find the earliest reference of the surutiman community in an inscription dated 1015 AD where a suruthiman lays down his life as a vanguard soldier in the battle of katakkam.
Another suruthiman referred to in 1141AD as a member of the urattur nadu and as landholding was an important qualification for being a nattar,we can presume that this person was a kani-holder.in the next one referred to in 1150AD we find the person mentioned as a land holder(UDAIYAN) Natalvan.
so here we find an erstwhile non-peasant martial community slowly transforming itself and becoming substantial landlords in the lower cauvery basin in the thirteenth century.

சேர வம்சத்தின் மலையர் மழவர் வம்சத்தைச் சேர்ந்த மக்களான இவர்கள்...

"கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்லவே வந்து வெள்ளாளர் ஆனாரே"

என்ற பழமொழிக்கு ஏற்ப மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆயினர். அதாவது பனிரெண்டாம் நூற்றாண்டு காலத்தில் நில உடைமை சமூகமாகி உடையார்,நாட்டார்,நாடாள்வார்,
கிழார்(மூப்பனார்),வேளாளர் என்ற அந்தஸ்துகளில் இருந்து கால மாற்றத்தின் போது உண்டாகும் பல்வேறு அரசியல் காரணங்களால் பதினெட்டாம் நூற்றாண்டு முதலாய் பார்க்கவ குலத்தாரில் பலரும் முழுமையான விவசாயிகளாக மாறினார்கள்.

ஆனாலும் என்றைக்கும் தம்மை வெள்ளாளர் என்று கூறிக் கொண்டதும் கிடையாது. வெள்ளாளர்களோடு மண உறவு கொண்டதும் கிடையாது.
சித்திர மேழி பெரியநாட்டார் என்ற அமைப்பில் நாட்டார் பதவியில் இருந்த இவர்கள் வெள்ளாளர்களில் இருந்து தம்மை வேறுபடுத்திக்காட்டவே பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தம்மை பார்க்கவ குல சத்திரியர் என்று அழைத்துக் கொண்டனர்.
ஏனெனில் மன்னராட்சிக் காலந்தொட்டே வெள்ளாளரிடம் வரிவசூல் செய்யும் கடமை கொண்ட பண்டாரத்தார், பண்டரையர்,பாளையத்தார் போன்ற பதவிகளைக் கொண்டவர்கள் பார்க்கவ குல சமூகத்தவர்.பார்க்கவ வம்சத்து மலையமான் மக்கள் அனைவரும் மழவர்,மலையர் மலாடர் என்று வழங்கப்படும் ஒரு மரபைச் சேர்ந்தவர்கள்.சேதியர் என்றும் பொதுப் பெயரால் அழைக்கப்படுபவர்கள்.
எட்கர் தர்ஸ்டன் பார்க்கவர்களைப் பற்றிய குறிப்புகளில் சேர மறவர்கள் என்கிறார்.இது மழவர்களை நேரடியாக சுட்டுகிறது. .Tradition traces the descent of the three castes from a certain Deva Raja, a Chera king, who had
three wives, by each of whom he had a son, and these
were the ancestors of the three castes. There are other
stories, but all agree in ascribing the origin of the castes
to a single progenitor of the Chera dynasty.
 It seems
probable that they are descendants of the Vedar soldiers
of the Kongu country,
 who were induced to settle in the
eastern districts of the Chera kingdom.

மேலும் வன்னியரான சதாசிவ பண்டாரத்தார் கூட அதியர் மரபையும், மழவராயர் மரபையும் மலாடு நாடு (பார்க்கவ குலம்)மலையர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்.
மேலும் போரின் போது ஆநிரைகளை கவர்தல் என்பது மலாடர்களின் முக்கிய தொழிலாக இருந்துள்ளது.
தஞ்சைக்கள்ளர்,மறவர் ஆகியோர் பார்க்கவ குலத்தாருக்கு உடன் பிறப்பு போன்றோரே.
பார்க்கவ குல மக்களின் முன்னோர் என்பவர்கள் தமிழ் நாட்டின் சிறந்த போர்க்குடியான சேதியர்களே.
சேதியன் எனில் வெட்டுபவன்,அழிப்பவன்=மறவன் எனப்பொருள் வரும்.
(சேதித்தல் என்பது வெட்டுதலை,அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.)

எடுத்துக்காட்டு..
தாதை தனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப... (திருவாசகம்-15, 7) 2. அழித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். மேலுலகுஞ் சேதித்தீர்... (உபதேசகாண்டம்-சூராதி., 50) 3. "'அவர்களை சேதித்தனர்"" என்பது உறுப்புச் சேதித்தலைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.

(வெட்டுதல் அழித்தல்)பகைவரை சேதிக்கும் தொழிலே மறவனின் வாளின் வேலை.ஆகவே மறக்குல மலையர்கள் சேதியர்களாக ஆண்ட நாடு சேதிநாடு எனப்பட்டது.
சேதியன் என்ற கத்தி கொண்ட மறவர்களே பார்க்கவ குலத்தில் சுருதிமான் (மூப்பனார்=கிழார்) பட்டம் கொண்டு கத்திரியர் என்ற கத்திக்காரர்கள், சவளக்காரர்கள் என்று போர்க்கருவிகளின் பெயரினையே பட்டப்பெயராகக் கொண்டு இன்றைக்கும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களில் சவளக்காரர் என்போரில் சிலர் மட்டும் கால ஓட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக வேறு சில இனக்குழுக்களில் குறிப்பாக மீனவரோடும்,அண்ணாவி என்ற ஏதோ ஒரு தெலுங்கு சாதியினரோடும் கலந்து விட்டாலும்,இன்றைக்கும் தன் இன மரபு மாறாமல் பார்க்கவ குலத்தில் சுருதிமான்(மூப்பனார்) பட்டம் கொண்டு நெல்லைச்சீமையில் சில சவளக்காரர்கள் மட்டுமே பார்க்கவ குல மூப்பனார் என்று தனித்து விளங்குகின்றனர்.இவர்கள் எல்லாம் மலையமான் வழிவந்த சேதியர் என்பது அவர்களுக்கே தெரியாது.
ஆனாலும் தம் முன்னோர்கள் சவளம் என்னும் வளையும் கத்தி பிடித்து போர் செய்தவர்கள்,பாரி மன்னரின் பார்க்கவ குல வம்சம் என்று மட்டுமே இன்றைக்கும் மறவாமல் கூறுவார்கள்.

சேதியர்களாய் பாண்டிய நாடு சென்று கத்திக்காரர்களும், சவளக்காரர்களுமாக போர்களின் போதெல்லாம் முன்னணி சிப்பாய்களாக பணியாற்றியவர்கள்.முன்னணிப் படையினர் என்பவர்களே வாளும்,கத்தியும்,வேல் என்ற ஈட்டியும் கொண்டு போரின் போது முதல் வரிசையில் களம் இறங்குபவர்கள்.படைக்கு முன் வரிசைத் தலைவன் என்ற பொருளில்
 HEAD MAN மூப்பனார் என்று இருந்து, பின்னாளில் விவசாயத்திற்கு திரும்பிய குழுக்களான சேதியர்கள் இவர்களே.(அநேகமாக ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் வன்னியர் என வழங்கப்பட்டவர்களும் இவர்களே)

இன்றைக்கும் பாரியின் வம்சம் நாங்கள் என்று மட்டுமே மார் தட்டிச் சொல்லத் தெரிந்த மழவர்,சேதியர் இனமான பார்க்கவ குலத்தோரே நீங்கள் வேள் பாரி மட்டுமல்லாது மலையமான்கள்,அதியமான்கள் என்ற வேளிர்களின் குலத்தில் வந்தவர்கள்.
நீங்கள் அனைவரும் மலாடர்,மலையர்,சேதியர் என்றழைக்கப்படும் மறக்குலத்தை சேர்ந்தவர்கள்.
கத்திரியர்,கத்திக்காரர்,சவளக்காரர் என்று வாள் பிடித்து போரிட்ட சத்திரிய குல சேதியர் சமூகம் நீங்கள்.
பார்க்கவ குலத்தோரே இவ்வாறு ஆண்ட வரலாறு கூறுவது உங்களை சிறப்பாக உயர்த்திக் காட்ட வேண்டி மட்டுமல்ல.

ஈகையும்,வீரமும் சமதர்ம நோக்கமும்,நல்லொழுக்கங்களும் நமது வேளிர் குலச் சிறப்பு என்பதையும் அதனை எல்லாம் பின்பற்ற வேண்டிய கடமையையும் உங்களுக்கு உண்டென்பதை உணர்ந்த வேண்டியும் தான் நம்மவர்களாலேயே தற்பெருமை கூடாது என்று கருதி சொல்லாமல் விடப்பட்ட நம் குல வரலாற்று உண்மைகள் இன்றைக்கு பொதுவில் உங்களுக்காக வெளிப்படுத்தப் படுகின்றது.

நன்றி:
செய்தி வழங்கியவர்:
சேரமான் பெருமாள்

Wednesday, June 26, 2013

ஈழ மறவர் தாலாட்டு


முற்காலத்தில் ஈழத்தில் மறவர்கள் நெடுந்தீவூ பகுதியில் குடியிருந்தனர். இக்குலத்தவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால் அதிலும் ஆண் குழவி வந்தால் பிள்ளை பிறந்த முப்பத்தொராம் நாளை வெகு சிறப்பொடு கொண்டாடுவார்கள். உற்றார் உறவோர் நண்பர் முதலானோருக்குத் திருமுகம் போக்கி யாவரும் வரவழைக்கப்பட்டு அக் கொண்டாட்டம் நடைபெறும். இவ் வைபவத்தின் போது நடுவீட்டில் இதற்கென சாணத்தால் மெழுகிடப்பட்ட இடத்தில் மஞ்சள் மாவினால் ஒருசிங்க உருவம் கீறுப்பட்டிருக்கும். அதன்மேல் வயதுமுதிர்ந்த மூதாட்டி ஒருத்தி பிறந்த சிசுவை மடியில் வைத்துக்கொண்டு ஒரு பாடல் படிப்பாள். அப்பாட்டில் குறிப்பிடும் சாமான்களெல்லாம் பிள்ளைக்கு அன்பளிப்பாக இனசனங்கள் கொண்டுவந்து வைப்பார்கள். அப்பாடல் வருமாறு:


“சோழநாடு கண்டு வந்தீரோ தம்பி
சோழப் பொரி கொண்டு வந்தீரோ தம்பி
சேரநாடு கண்டு வந்தீரோ தம்பி
செந்நெல் பொரி கொண்டு வந்தீரோ தம்பி
பாண்டிநாடு கண்டு வந்தீரோ தம்பி
பச்சை முத்துக்கொண்டு வந்தீரோ தம்பி
சென்னை நாடு கண்டு வந்தீரோ தம்பி
சீரகம் கொண்டு நீ வந்தீரோ தம்பி
மதுரைநாடு கண்ட வந்தீரோ தம்பி
மஞ்சள்பொடி கொண்டு வந்தீரோ தம்பி
கொங்குநாடு கண்டு வந்தீரோ தம்பி
கொத்தமல்லி கொண்டு வந்தீரோ தம்பி”


இவ்வண்ணம் ஒவ்வொரு நாட்டையும் சரக்குகளையும் சொல்லி முடித்த பின்.

“அப்பாவைப் பார்த்திடவந்தீரோ தம்பி
ஆனைக்குட்டி வாங்கவந்தீரோ தம்பி
ஆச்சியைப் பார்த்திட வந்தீரோ தம்பி
ஆட்டுக்குட்டி வாங்க வந்தீரோ தம்பி
மாமனைப் பார்த்திட வந்தீரோ தம்பி
மான்குட்டி வாங்கிட வந்தீரோதம்பி
அத்தையைப் பார்த்திட வந்தீரோ தம்பி
அன்னக்குஞ்சு வாங்க வந்தீரோ தம்பி
பாட்டனைப் பார்த்திட வந்தீரோ தம்பி
பசுக்கன்று வாங்கிட வந்தீரோ தம்பி
பாட்டியைப் பார்த்திட வந்தீரோ தம்பி
பால் மோர் குடித்திடவந்தீரோ தம்பி”


இப்பாடலைப்பாடும்போது பெற்றார், பேரர்கள், மாமன்மார்கள் முதலானோர்கள் ஆட்டுக்குட்டி, பசுக்கன்று, கோழிக்குஞ்சுகளையும் மாமன், அத்தை முதலானோர் ஆனை, குதிரை, மான் முதலியவைகளை வெள்ளித் தகட்டிலும், செம்பத்தகட்டிலும், சில பணம் படைத்தவர்கள் தங்கம் பொன்னிலும் செய்து அன்பளிப்புச் செய்வர். இவைகள் முடிந்ததும் வயது முதிர்ந்த பெரியவரொருவர் பிள்ளையைத் தூக்கி மடியில்வைப்பர். அப்போது மறவ வாலிபர்கள் மறாட்டியமும்@ சிலம்பும் அடிப்பர் (மறாட்டியம் என்பது ஒரு முளத்தடிகொண்டடிக்கும் கோலாட்டம்) இவர்கள் கோலாட்டம் அடிக்கும்போது, பிள்ளையை வைத்திருக்கும் பெரியவர் கீழ்வரும் பாடலைப்பாடுவர்.

“ஆனைமுது கேறிவந்தீரோ தம்பி
அரசைப் பிடித்திடவந்தீரோ தம்பி
குதிரை முதுகேறி வந்தீரோ தம்பி
கொடியை உயர்த்திட வந்தீரோ தம்பி
தேரினிலேறி நீ வந்தீரோ தம்பி
தேசம் பிடித்திட வந்தீரோ தம்பி
வேலைச் சுழற்றி நீ வந்தீரோ தம்பி
வெற்றியெடுத்திட வந்தீரோ தம்பி
வாளைச் சுழற்றி நீ வந்தீரோ தம்பி
வடநாடு வென்றிட வந்தீரோ தம்பி
ஈட்டி சுழற்றி நீ வந்தீரோ தம்பி
ஈழம் பிடித்திட வந்தீரோ தம்பி
படைகள் திரட்டி நீ வந்தீரோ தம்பி
பகைவனை வென்றிட வந்தீரோ தம்பி”

இப்பாடலில் மறவர்களின் வீரமும், அவர்கள் பணி யாற்றும் படைகளின் வரிசையும், பாவிக்கும் ஆயுதநாமங்களும் நாடு பிடிக்கும் திறனும் தொனிக்கிறது. அன்றியும் சிங்கரூபம் கீறி பிள்ளையை வளர்த்திவைத்திருப்பதின் காரணம் இவர்களின் குலதெய்வமான துர்க்கையின் சிங்கவாகனத்தை நினைப்பூட்டுதற்கென எண்ண இடமுண்டு

மறவருக்கமைந்த வடிவத்தைப் “பண்டைத் தமிழர் பண்பாடு” என்னும் நூலில் கூறப்பட்டதைப்போல், “கல்லெனத்திரண்டதோளர், கட்டமைந்த மேனியர், முறுக்கு மீசையர், தருக்குமொழியினர், வீறிய நடையினர், சீறிய விழியினர், முதலாம் அம்சங்கள் இவர்களுக் கிருப்பதையும் பரக்கக்காணலாம்.

மறவர் குலத்தவர்களில் ஒரு பகுதினரான கருங்கை மறவர் போரில்லாக் காலங்களில் காடுகளில் சென்று புலிகளை வேட்டையாடி அப்புலிகளின் பற்களை எடுத்துவந்து தம் மாதர்களுக்கு மாலையாகக் கோர்த்துக் கழுத்தில் அணிவதற்குப் பரிசாகக் கொடுப்பர்.
புலியாட்டம் என்பது விளையாட்டுக்களில் இடம் பெறும் ஒரு வகை விளையாட்டு. ஒருவர் புலிபோல் சோடித்துக் கொண்டு மணமக்களுக்கு முன்னால் பாய்ந்து, பாய்ந்து விளையாடிக்கொண்டு வருவார். இவ்வழக்கம் இவர்கள் மத்தியில் மாத்திரம் இருந்ததாக அறிகிறோம். திருவிழாகளிலும் இவர்கள் சந்தோஷத்திற்காகவும் சென்று புலியாட்டம் ஆடுவது வழக்கம். புலிப்பல்தாலி, புலிசகமாலை முதலியனயாவும் இக்குலத்தவர்களின் உரிமைச் சொத்தாகத் தெரிகிறது

“மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலி” என ஒரு பழங்காலக் கவிதை இதன் உண்மையை எடுத்தோதுகிறது.

நெடுந்தீவில் வாழ்ந்த இக்குலத்தவர்களும் சங்கு மணிகளாலும், பொன்னாலும் அணிகலன்களைத் தேடாது, புலிப்பல், புலிநகம் முதலானவைகளையே சிறு நூல்களில் கோர்த்துக் கழுத்தில்கட்டியும், பன்றி முள்ளுகளைக் கொண்டையில் செருகியுமுள்ளார்க ளெனப் பரம்பரைக் கதைகளுமுண்டு.

மணவீடுகளில் புதுமாப்பிள்ளையும், புதுப்பெண்ணையும் வியந்து கூறிப் பெண்கள் வாழ்த்துக்கள் படிப்பது தமிழர் வழக்கம். இவ்வழக்கம் இவர்களுள்ளும் இருந்து வந்தது. ஒரு பெண் மாப்பிள்ளையை வியந்து கூறிப்படிக்கும் பாடலில் ஒன்றைக் கீழே தருகிறேன்.

ஆனைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
ஆலமரம் போதாது


குதிரைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
கொல்லைகளம் போதாது


சிங்கங்களைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
சிறுதோட்டம் போதாது


வேங்கைகளைக் கட்டுதற்கோ - பெண்கொடுத்த
வெளிநிலங்கள் போதாது


வேல் சொருகி வைப்பதற்கோ - பெண்கொடுத்த
வீட்டுவளை போதாது


அம்புவில்லு வைப்பதற்கோ - பெண்கொடுத்த
அரண்மனையோ போதாது


போதாது போதாது - பெண்கொடுத்த சீதனங்கள் போதாது.

இவ்வாழ்த்துப்பா மூலம் இவர்கள் மறவர் குலத்தவர்களென்பதும், புலிவேட்டையாடு வர்களென்பது தெரிகிறது.

அன்றியும் அக்காலம் இக்குலத்தவர்களின் மணக்கோல ஊர்வலங்களில் மணமுரசோடு, கோலாட்டம், மறாட்டியம், புலியாட்டம் முதலாம் விளையாட்டுக்களும் இடம் பெறும். ஒருவர் புலிபோல் சோடித்துக் கொண்டு மணமக்களுக்கு முன்னால் பாய்ந்து, பாய்ந்து விளையாடிக்கொண்டு வருவார். இவ்வழக்கம் இவர்கள் மத்தியில் மாத்திரம் இருந்ததாக அறிகிறோம். வேறுசாதியாரின் மண்வீடுகளிலும் இவர்கள் சந்தோஷத்திற்காகவும் சென்று புலியாட்டம் ஆடுவது வழக்கம். புலிப்பல்தாலி, புலிசகமாலை முதலியனயாவும் இக்குலத்தவர்களின் உரிமைச் சொத்தாகத் தெரிகிறது.

வல்லம்பர் நாட்டார்

வல்லம்பர் நாட்டார்

எங்கள் பக்க கிராமங்களில் (சிவகங்கை,புதுக்கோட்டை,இராமநாதபுர மாவட்ட கிராமங்கள்)
வல்லம்பர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி 'பாலையநாடு' என்றும்
கள்ளர் சமூகம் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் 'கள்ள நாடு' என்றும்,
மறவர் சமூகம் வசிக்கும் கிராமப்பகுதிகளை 'மறவர் சீமை' என்றும் பிரிவுகள் உண்டு.
இதில் எங்கள் வல்லம்பர் சமூக மக்களில் மேலின வல்லம்பர், கீழின வல்லம்பர் என்ற இரு பிரிவுகள் உண்டு. இதன் பொருள் மேற்கத்திய கிராம மக்கள்,கிழக்கத்திய கிராமமக்கள் என்பது.எங்கள் மேலின வல்லம்பர் மக்கள் வாழும் பதினாறு கிராமங்களை பாலைய நாடு என்கின்றனர்.நாங்கள் கொள்ளக்,கொடுக்க என்று எல்லா உறவுகளையும் இந்தப் பதினாறு ஊர்களுக்குள் தான் வைத்துக்கொள்வோம். இந்தப் பதினாறு ஊர் மக்களும் உலகின் எல்லா இடங்களிலும் பல்கிப் பெருகி உள்ளனர்.இப்போது சில ஆண்டுகளுக்கு முன் கீழின,மேலின மக்கள் ஒன்று கூடி உறவுகளை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

           எங்கள் கிராமங்களில் நகரத்தார் மக்களின் கொடையால் தடுக்கி விழுந்த இடமெல்லாம் மேல்,உயர் நிலைப்பள்ளிகள்,மகளீர்,இருபாலரும் படிக்கும் கல்லூரிகள். அதனால் 1950க்குப் பிறகு எங்கள் ஊரில் படித்த மக்கள் அதிகம்.எங்களின் பதினாறு கிராமங்களில் நான் பிறந்த ஊர் பாலையூர் - கண்டனூர்.(நடுவண் அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின் ஊர்) இந்த ஊரில் ஒரு வருடம் விளையும். ஒரு வருடம் விளையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிழைப்புத் தேடி எங்கள் மக்களும் புலம் பெயரத்தொடங்கினர்.புலம் பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி கைகொடுத்தது.நகரத்தார் மக்களுடன் எங்கள் மக்களும் அவர்களோடு உதவியாளர்களாக,கணக்குப்பிள்ளைகளாக அன்னிய தேசங்களுக்கு பொருளீட்டச் சென்றனர்.ஊரில் எஞ்சியிருந்த மக்கள் விவசாயம்,ஆடுகள்,மாடுகள்,கோழிகள் வளர்ப்பில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.இத்தோடு குழந்தைகளைப் பள்ளியனுப்பி படிக்கவைத்துள்ளனர்.வீடு,தோட்டம்,வயல்,கட்டுத்தறி தான் எங்கள் பெண்களின் உலகம்.மாலை நேரம் திரைப்படம்.திரையரங்கம் முன் கூடும் கூட்டம், அதை நம்பி தேநீர்,உணவு விடுதிகள்,பத்திரிக்கை,வார,மாத இதழ்கள்,நாவல்கள்,திரைப்படப்பாடல் புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒரு புத்தகக்கடை இப்படி ஊரே களையாக இருக்கும். நாங்களும் பிழைப்பிற்காக வேற்று ஊரில் இருந்து, அவ்வப்போது வயல் வேலைக்காகவும்,திருவிழா,உறவுகளில் திருமணங்கள் இப்படி வந்து போவதுண்டு.அப்போதெல்லாம் எங்களைக்கவரும் விசயங்கள் மூன்று.1.கண்மாய்,2.வயல்,3.திரையரங்கம்.நாங்கள் இருந்த ஊரில் திரையரங்கம் இருந்தாலும் கட்டுப்பாடு அதிகம். சொந்த ஊரில் சொந்தங்களின் சலுகை. இப்படி எங்களின் குழந்தைப்பருவ சொர்க்கம்.எல்லா சமூக மக்களும் குறிப்பறிந்து உதவி,இயைந்து வாழ்ந்தார்கள்.

  காலம் மாறியது.மாற்றங்களுக்கு எங்கள் கிராமங்களும் விதிவிலக்கல்ல.எங்கள் ஊரில் எல்லா சமூகத்திலும் கற்றவர்கள் அதிகமாகி,பணப்புழக்கம் அதிகமாகி வாழ்க்கை வசதிகள் பெருகின.தோட்டங்கள் தரிசாகிப் போயின. பசுக்கள் நிறைந்தன.கண்மாய் மழைக்காலத்திலும் நிறையாது போனது. காரணம் கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்தது.காடு,மேடுகள் மனைகளாகிய காரணம்.கண்மாயில் நீர் குறைந்ததால் ஊரில் இரு சமூக மக்களின் வேறுபாடுகளால் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு.மற்ற சமூக மக்களுக்கு யார் பக்கம் சேருவது என்ற குழப்பம்.இப்படி வயல் வரப்புகளும் தரிசாகி கருவேலமரம் மண்டி முள் காடாய்க் கிடக்கிறது.பசுக்களுக்கு வைக்கோல்,புல் கிடைக்காது கட்டுத்தறிகளும் வெறுமையாயின. இந்த வெறுமைகளை நிரப்ப தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டுக்கு வீடு வருகை தந்தன.திரையரங்கம் நஷ்டத்தில் ஓடுகிறது என்று அதன் உரிமையாளர் அதையும் இழுத்து மூட அதை நம்பியிருந்த உணவகம்,புத்தகக்கடைகளும் தன் கதவுகளை அடைக்க நம்மைப்போல் வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு வெறுமையான ஊரைப்பார்த்து துக்கத்தில் தொண்டை அடைக்கிறது.கூடிக்களித்திருந்த,உறவுகளாய் இருந்த எல்லா சமூக மக்களும் பழைய இணக்கமில்லாது அவரவர் வேலை அவரவர்க்கு.

              இந்த வேறுபாடுகளைக் களைய, எங்கள் ஊர் மறுபடி பசுமை பெற எந்த அவதாரத்தை இறைவன் அனுப்புவாரோ? காத்திருக்கிறோம்.

நன்றி:மாயன் தேவர்

ஞான சேதிராயர்-உடையார் வம்சம்

வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது  மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு  பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.அரைய தேவன்,நாடாழ்வான் என்ற பட்டங்களும் மூப்பனார்களுக்கு(சுருதிமான்) இருந்துள்ளது.
மலையமான் சேதிராயன் வன்னியநாயகன் என்பவர்களுக்கு படை முதல்வராக ஆதியாம் கத்திக்கார மெய்க்காப்பாளர்கள் என்று இருந்துள்ளனர். 

அரசன் தொண்டைமான் சேதிராயர்:

இவர் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கோயில் இறைவனுக்கு நிலகங்களை தானமாக கொடுத்தை செய்தியாக தெரிகிறது
காலம்: மூன்றாம் இராஜராஜர் கி.பி.1238
"ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி கோயிலுக்கு...... அரைசன் தொண்டைமான் பெருமாள் பிள்ளையான் சேதிராய தேவனான அரும்ப 
உடையார்................."
இவர் இப்பகுதியை ஆண்ட சேதிராய உடையாராக இருக்கலாம் என்றும் அரும்பாவூர் சேதிராயராக இருக்கலாம்

மந்திரி ஞான சேதிராயன்:


காளையார் கோயில் தலத்தையும் விஞ்சை என்னும் தலத்தையும் உயர்த்தி திருப்பனி செய்தவன் சேது நட்டு சேதிராயன் என்னும் 
மந்திரி,பாண்டியநாட்டை சோழர் வென்றுகொண்ட போது பாண்டியன் நாடு வேண்டி வர பாண்டிய ராஜாவால் சோழருக்கு தூது சென்ற தலைவன்.
"தெருக்களுமாடமும் கோபுரம்மும்..... .....திருக்குளமும்கண்டான் மந்திரி சேதிராயன்." இவர் பாண்டியனின் மந்திரி ஆக இருந்தவர்.

வேனாடன்:


இவர் சேர நாட்டில் இருந்து சேது நாட்டுக்கு குடி புகுந்த "கொடுமூர் பெரிய பிரபு வேனாடன்" இவரை விக்கிரம்சோழணூலா வில்"கலி தனை பாரில் விலக்கிய வேனாடன்". இவரே சேது நாட்டில் சாளைகிரமங்கள்(வைனவ திருத்தலங்கள்) கண்டவர்.இவர் சேர நாட்டை சார்ந்த வேனாடு எனற பகுதியை ஆண்ட நாடாழவ சேதிராயராக இருக்கலாம். இவர்களளெல்லாம் சேதிராய உடையார் வம்சத்தவர்களெ 

சேதிராயர்


என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி(Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது. 

சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர். 
திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார் 
கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று. 

தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு'{சேதிநாடு} என்று அழைத்தனர். சேதிராயர் என்பவர்கள் தமிழ்நாட்டின் நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் என்பது புலனாகிறது. தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். இதற்கு வேறு ஏதும் ஆதாரம் உண்டா ? 
உண்டு. 

சொல்ஆய்வின் படி சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரிபடும். 

சேதி என்பது நாட்டின் பெயர் அரையர் என்பது அரசர் என பொருள்படும். 
ராயர் -> அரையர் -> அரைசர் -> அரசர் 
இதன்படி 
சேதி + அரசர் -> சேதி நாட்டு அரசர்
 என நேரடி பொருள் தருகிறது. 

சேதிராயர் என பட்டபெயர் தரித்திருப்போர் சேதி நாட்டு அரச வம்சத்தினர் ஆவார்கள். 

இதற்க்கு மேலும் ஆதாரம் உண்டு. 

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ் பேருரையளராக பணிபுரியும் முனைவர் மு. பழனியப்பன் சில தகவல்களை தருகிறார். அதை கீழே காணலாம். " திரு விசைப்பாவின் திரு கடைகாப்பு பதிகம் பாடிய சேதிராயர் " .......... 


" ஏறுமாறு எழில் சேதிபர் கோன் தில்லை நாயனாரை நயந்துரை செய்தன " என்ற அடிகள் 10 ஆம் பாடலில் இடம் பெறுகின்றன. 

இங்கு 

சேதிராயர் " சேதிபர் கோன் " என விளிக்கப்பட்டுள்ளனர். 
இதன் வழியாக இவர் அரசர் என்பது உறுதிபடுத்தப்படுகிறது. 
சேதி என்பது குல பெயர் ஆகும். 

" முதற் குலோத்துங்கன் (1070-1120) காலத்திலும் 
இராசராசர் சேதிராயர், இராசேந்திர மலையம்மான் என்று பட்டம் தரித்தவர்கள். திருக்கோவிலூர், கிளியூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். 

திருக்கோவிலூரில் வாழ்ந்த 
மெய்பொருள் நாயனாரும் சேதிநாட்டை சார்ந்தவர் என்ற பெரிய புராண குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப் பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது 
என முனைவர் மு. பழனியப்பன் குறிப்பிடுவது உறுதியான ஆதாரமாகும். 

ஆனால் வரலாறு என்பது இலக்கிய ஆதாரத்தை மட்டும் எடுத்து கொள்ளவதில்லை. மேலும் நாணயம், கல்வெட்டு போன்றவற்றையும் துணை கொள்கிறது. 

அதன்படி 
கல்வெட்டு ஆதாரம் 
ஏதும் உண்டா? எனில் உண்டு. 

1. இராசராசன், இராசேந்திரன் முதலான சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் சேதிராயன் என்ற பெயர் காணப்படுகிறது. என நா.மு. வே. நாட்டார் அவர்கள் கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிடுக்கிறார். 


2. விழுப்புரம் மாவட்டத்தில் நெய்வனை என்னும் ஊரில் சிவன்கோவிலில் கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது கல்வெட்டு முதல் குலோத்துங்கன் சோழனின் 48 வது ஆண்டு காலத்திலிருந்து .......................இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோவில் நடராசா மூர்த்தியை பிரதிட்டை செய்தார் என்ற குறிப்பு உள்ளது. 


மேலும் சில கருத்துக்களை பார்ப்போம். 


போத்தப்பிராயர், காடவராயர், பல்லவர்(பல்லவதரையர்), தொண்டையர், சம்புவரையர், இலடராயர், மலைமான்(சேதிராயர்), வானகோவைரையர், முனையதரையர், ஓயமானர், முத்தரயர், மழவராயர், பழுவேட்டரையர், இருக்குவேளிர் முதலிய பல்குடி சிற்றசர்கள் சோழர்களுக்கு அடங்கியவர் என்று சில குறிப்புகள் கூறுகின்றது. ஆனால் இவர்கள் (சேதிராயர்) சூரியகுலத்தினரான சோழர் குலத்தின் கிளை குலத்தினர் ஆவார்கள். மேலும் 


சர்க்கரை புலவரின் வழித்தோன்றலான திருவாளர், சர்க்கரை ராமசாமி புலவர் அவர்களின் வீட்டில் இருந்ததொரு மிக பழமையான ஏட்டில் ஏழு கூட்ராமும், பதினெட்டு நாடும், ஏழு ராயரும் குரப்பட்டுள்ளது. 


ராயர் எழுதுவராவர்: 1 . சேதிராயர் 2 . காலிங்கராயர் 3 . 
வாணதிரியர் 4 . கொங்குராயர் 5 . விசையராயர் 6 . கனகராயர் 7 . கொடுமளுர்ராயர் என திரு ந. மு. வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம் 3 ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

நாம் மேலே கண்ட கல்வெட்டு இலக்கிய ஆதாரங்களில் இருந்து சேதிராயர் என்பவர்கள் சேதிநாட்டு அரசகுலத்தினர் என்பதும் அவர்கள் சூரிய குலமான சோழர் குலத்தின் கிளைகுடியினர் என்பதும் தெளிவாகிறது. 


அவர்கள் தமிழ்நாட்டில் திருகோவிலூர், மற்றும் கிளியூர் என்ற நகரங்களை தலைநகரமாக கொண்டு நாடு நாடான செதினாட்டை ஆட்சி செய்தனர் என்பதும் அவர்கள் சேதிராயர் மற்றும் மலையமான் என்ற பட்டங்களை தரித்து ஆட்சி செய்தனர் என்பது புலனாகிறது.

“பெரியதேவர்” இராசராச சோழன்


மனோகரா திரைப்படத்தில் கடைசி காட்சியில் இளவரசன் மனோகரன்(சிவாஜி கணேசன்) கைகள் இரண்டும் இரண்டு இரும்புச்சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு அத்தாணி மண்டபத்தில் இணைத்து பூட்டப்பட்டிருக்கும். அவ்போது மனோகரனின் தாய்(அந்நாட்டின் அரசி கண்ணம்மா) வீரவசனம் பேசி முக்குலத்தோரைபெருமை படுத்துவார். அவ்வசனம் வருமாறு: “மனோகரா! பொறுத்தது போதும். பொங்கி எழு!! உன் உடலில் ஓடுவது வீர மறவர் குல ரெத்தம் என்பது உண்மையானால். . . . மறவர்குல பெண்கள் மாசுமருவற்ற கற்புக்கரசிகள் என்பது உண்மையானால். . . . அக்கற்புக்கரசிகள் கடவுளுக்குச்சமமானவர்கள் என்பது உண்மையானால். . . . உன் கைகளைப் பிணைத்திருக்கும் இரும்புச்சங்கிலி அறுந்து தூள் தூளாகட்டும். . . . இந்த அத்தாணி மண்டபம் இடிந்து தூள் தூளாகட்டும். . . . இப்படி வசனம் எழுதியவர் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள். இப்படி மறவர்களை வசனத்தால் பெருமைபடுத்தியவரின் அரசு. . . . வீர மறவர்களைப்பற்றிய வரலாற்றுச் செய்திகளை மறைத்து இருட்டடிப்பு செய்வது ஏன்? தஞ்சை பெரியகோயிலுக்கு ஆயிரமாவது ஆண்டு நிறைவுவிழா கொண்டாடினார். அதற்கு முக்குலத்துமக்களின். . . . உலகத்தமிழர்கள் அனைவரின் சார்பிலும் அவருக்கு கோடானகோடி நன்றி! நன்றி!!. ஆனால் அக்கோயிலைக்கட்டிய பேரரசன் இராசராச சோழன் தேவர் குலத்தில் பிறந்தவர் என்பதை வரலாறுகள் மிகச்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. உலகம் முழுவதும் தமிழர்களின் வீரம், பண்பாடு, நாகரிகத்தை பரப்பிய தமிழ் மாமன்னர் இராசராசசோழன்,உலகத்தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுடையவர் என்பது மறுக்கமுடியாத, மறுக்கக்கூடாத உண்மை. ஆனால், அவர்” போர்த் தொழில் உரிமையி லெய்தி யரசு வீற்றிருந்து. . . “ என்று வீர்ராசேந்திர சோழதேவரின் கல்வெட்டுக்கூறுவதும், கொடும்பாளூர் இருக்குவேளிர் என்னும் கள்ளர் அரசர்குடியிலிருந்து பிறந்ததே சோழர்குடியென்று, மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதல் அமைச்சர் சேக்கிழார் பெருமானும், மூவர் பாடிய தேவார திருமுறைகளை தொகுத்து பேரரசன் இராசராசசோழனுக்கு தொண்டுசெய்த திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அடிகளும் சோழர் காலத்திலேயே பாடி அரங்கேற்றம் செய்து -- இராசராச சோழன் கள்ளரே என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.(ஆதாரம்:முப்பது கல்வெட்டுக்கள் என்ற நூலின் பக்கம் 203, முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு ER.140/1928 கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் கள்ளர்களே என எழுதியுள்ள கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகம் 1 பக்கங்கள் 184, 146, 224, 225, திருத்தொண்டர் புராணம்(பெரியபுராணம் பக்கம் 491) & திருத்தொண்டர் திருவந்தாதி). இந்நிலையில் இராசராச சோழன் பிறந்தது கள்ளர் குலமே என்ற வரலாற்றுச்செய்தியை யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.அவ்வாறு செய்துவது முக்குலத்து மக்களையே புறக்கணிக்கும் செயலாகும்..இராசராச சோழனையே அவமதிக்கும் செயலாகும். அரசு அதிகாரிகளே உண்மை வரலாற்றை மறைத்ததின் விளைவாகத்தான் சிவநேசச்செல்வனை, சிவபாதசேகரனை(சிவனின் பாதங்களை தலையில் தாங்கியவன் என்ற விருதுகொண்டவனை) “வாங்கக் குடம் நிறைக்கும் பால்தரும் பசு”(எ) காமதேனுவை “நந்திகேசுவரராக” தஞ்சை பெருவுடையார்(சிவபெருமான்) முன் பிரதிஸ்டை செய்து,குடம் குடமாக பாலாபிசேகம், பன்னீர் அபிசேகம், மஞ்சள்அபிசேகம் செய்து, பூவிட்டு பொட்டுவைத்து தேங்காய் உடைத்து சூடக்கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்ட அந்த இராசராசசோழனை--- “பசுவை வெட்டிக்கொன்று அதன் ஊன் உண்டவனா?” என்று பொதுமக்கள் கேட்கின்றனர். இதற்கு யார் காரணம்?அதுமட்டுமல்ல. “இராசராசனின் சிலையை பெரிய கோயிலுக்குள் வைக்காமல் கலைஞர் வெளியில் வைத்து திறந்ததற்குக்காரணம், இராஜராஜசோழன் தீண்டத்தகாகவன்” என்று அவர்களே ஒரு காரணமும் சொல்கின்றனர். இதை என்னிடமே கேட்டார்கள்? “தீண்lடத்தகாதவன், எப்படி பெரியகோயிலை கட்டி அதனுள்ளே சென்று கும்பாபிஸேகம் செய்தான்? இராசராசன் என்ற பெயரை தில்லைவாழ் அந்தணர்களதான், தில்லை நடராசர் கோயில் வைத்து பெயர் சூட்டினார்கள். அவர்தீண்டத்தகாதவர் என்றால் எப்படி தில்லை நடராசர் கோயிலுக்குள் வைத்து இந்தப்பெயரை சூட்டியிருக்கமுடியும். இன்றும் கள்ளர்களுக்கு ஈராயிரத்துக்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு பெயராவது உங்களுக்கு உண்டா? இருந்தால், உங்கள் வீட்டு திருமண அழைப்பிதழ் ஏதாவது இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம். கிராமங்களில் இருக்கும்வரை நீங்கள் பள்ளர் என்று கூறிக்கொள்கிறீர்கள். நீங்கள் சென்னை போன்ற பகுதிக்குச்சென்றவுடன் உங்களை தேவர் என்று கூறிக்கொண்டு சென்னைவாசிகளை நம்ப வைத்து பொய்மையை அரங்கேற்றம் செய்கிறீர்கள்..எடுத்துக்காட்டிற்கு ஒரு உண்மையை இங்கு குறிப்பிடுகிறேன். என் நண்பன் ஒருவன் சேரியைச்சேர்ந்தவன் மகாலிங்கங்கம் என்று பெயர் என்னுடன் பள்ளியில் படித்தவன். அவன் அசோக் லைலாண்டு நிறுவனத்தில் வேலைகிடைத்து சென்னை சென்றுவிட்டான். அவன் எங்கள் கிராமத்திற்கு வந்தவுடன், சென்னையில் நீ இருக்கும் விலாசம் கொடு என்று கேட்டேன். தன்னை மகாலிங்கம் தேவர் என்று கேட்டால், என் தெருவாசிகள் என் வீட்டிற்கு வழி சொல்வார்கள். என்றான். என்னப்பா? நீ? நம் சொந்த ஊரில் உள்ள உண்மையான பேரை மறைத்து, சென்னையில் போய் ஏன் பொய்யாக தேவர் என்று முக்குலத்துமக்களின் பட்டப்பெயரை கூறுகிறாய்? சென்னையில் எல்லாம் தேவர் என்று சொன்னால்தான் மதிப்பு மரியாதை தருவார்கள். அதனால்தான், என்னை அங்கே தேவர் என்று கூறிக்கொள்கின்றேன். என்றான். அவன் மட்டும்தான் பொய்கூறுகிறானா? நாங்கள் இராசராச்சோழனின் குலத்தில் பிறந்தவர்கள் என்று அவர்களின் இனத்தவர் முழுவதும் கூறிகொண்டு சுவரொட்டிமூலம் விளம்பரமும் செய்கின்றனரே!” உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்”(குறள் 294) என்ற திருவள்ளுவரின் வாக்கை மறந்தே அவர்கள் நடந்துகொள்கின்றனர். பின் எப்படி அவர்களுக்கு மதிப்பு மரியாதை ஏற்படும். மதிப்பு மரியாதை எல்லாம் தானாகவே பிறக்கவேண்டுமே அல்லாமல், பொய் கூறுவதாலும், பொய் வேடம் போடுவதாலும் கிடைக்காது. மல்லர்கள் என்போர் மல்யுத்தம் தெரிந்த வீர்ர்களைக் குறிக்கும் அம்மல்யுத்தம் தெரிந்த வீர்ர்கள் எல்லா சாதியிலும் இருந்துள்ளனர் என்று வரலாறு தெளிவாக கூறுகிறது. எடுத்துக்காட்டாக காஞ்சிப்பல்லவன் முதலாம் நரசிம்மவர்மன்(கி.பி.630-668) சிறந்த சிவபக்தன். மாமல்லபுரத்துச் சிற்பங்களை படைத்துத் தமிழகத்து வரலாற்றில் அழியாத புகழிடத்தைப்பெற்றான். இவனுக்கு மாமல்லன் என்ற சிறப்புப் பெயருண்டு. இவன் மல்யுத்த வீரன். இவன் என்ன பள்ளரா? பொய்மை கூடாது. அது நல்லொழுக்திற்கு விரோதி. சமூகத்தில் யாரும் அவனை மதிக்க மாட்டார்கள். பொய்மையை அவர்கள் சொற்பகாலத்திற்கு மட்டுமே அரங்கேற்றலாம். பின் சாயம் வெளுத்துவிடும். இராசராசசோழனின் பெரிய பாட்டியார் மழவராயர் மகள் செம்பியன் மாதேவியார் பலசிவாலயங்களை கற்றளியாக எடுப்பித்து அதற்கு நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் அளித்துள்ளாரே.அதுமட்டுமல்ல தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரம் (எ) திருநல்லம் என்னும் ஊரிலுள்ள சிவாலயத்திற்கு தன் கணவன் பெயரான ஸ்ரீ கண்டராதித்தன் என்று தன் கணவன் பெயரையே வைத்து மக்கள் நாள்தோறும் வழிவட்டுவந்தனரே. அம்மழவராயர் மகள் என்ன தீண்டத்தகாதவரா? அதுமட்டுமல்ல. அக்கோயிலினுள் தன்கணவர் கண்டராதித்த தேவர் சிவலிங்கத்தை வழிபடுவதாக படிமம் வைத்துள்ளதை இன்று காணலாம். கண்டராதித்த தேவர் தீணடத்தகாதவர் என்றால் எப்படி கோயிலினுள் படிமம் வைத்து நாள்தோறும் பூசைசெய்தார்கள்.(ஆதாரம்: “SII. Vol.III No.146). மேலும் நாகப்பட்டிணம் தாலுக்காவிலுள்ள செம்பியன்மாதேவி கோயிலில் தற்போதும் ஆண்டுதோறும் செம்பியன்மாதேவி படிமத்தை ஊர் முழுவதும் வீதிஉலா செய்து அதற்கு கற்பூர ஆரத்தி எடுத்து அனைவரும் பிராமணர்கள் உட்பட அனைவரும் வணங்கி வருகின்றனர்.(சதாசிவப்பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச்சோழர் வரலாறு பக்கம் 69) தீண்டத்தகாதவருக்கு எப்படி கற்பூர ஆரத்தி எடுக்கிறார்கள்? இந்த மழவர் அரசி செம்பின் மாதேவியார் கற்றளியாக அமைத்த பிற கோயில்கள் :”விருத்தாசலம், திருகோடிகா, தென்குரங்காடுதுறை,செம்பியன் மாதேவி, திருவாரூர் அரநெறி, திருத்துருத்தி, ஆநாங்கூர், திருமணஞ்சேரி, திருவக்கரை என்னும் ஊர்களிலுள்ள சிவாலயங்களாம். முதல் இராசராச்சோழன் மகனாகிய கங்கைகொண்டசோன், செம்பியன் மாதேவியிலுள்ள திருக்கயிலாயமுடையார் கோயிலில் கி.பி.1019இல் இவ்வம்மையின் படிம்ம் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளான். எனவே, இவ்வம்மை இறைவன திருவடியையடைந்த அண்மையிலேயே தெய்வமாக்க் கருதி கோயியலில் படிம்ம் வைந்து முடிமன்னனால் வணங்கப்பெற்றுள்ளமை அறியத்தக்கது(எழுதியவர் வரலாற்றுப்பேரறிஞர் அமரர் தி.வை.சதாசிவப்பண்டாரத்தார். பிற்காலச்சோழர் வரலாறு பக்கம்.72 கல்வெட்டுக்கள் Ins 47 of 1918, Ins.36 of 1931, SII.Vol.III No.144, Ins.485 of 1925, Ins.571 of 1904, Ins.103 of 1926 துருத்தி—குற்றாலம்.I:ns.75 of 1926, Ins.9 of 1914. Ins.200 of 1904 & Ins.481 of 1925) தெய்வமாக் கருதி மன்னன் உட்பட அனைத்துபொதுமக்களாலும் அந்தணர் உட்பட அனைவராலும் வணங்கப்பட்ட செம்பியன் மாதேவியார் தீண்டத்தகாதவரா? இவர்கள் சிவனின் வாகனமான ஆ இனத்தை உண்டவர்களா? . சோழர் காலத்தில் “ஆ உரித்துத்தின்போர்” சமூகத்தில் தாழ்ந்தவராவார்(ஆதாரம்: டாக்டர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய மக்களும் பண்பாடும் பக்கம்.332) செம்பியன் மாதேவியார் அந்த இனத்தில் பிறந்திருந்தால், அவருக்கு எப்படி கற்பூர ஆரத்தி எடுத்து வணங்குவர். இன்றும் அவரை வணங்கிவருகின்றனரே? அது எப்படி? தீண்டத்தகாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குள்தான். இராசராசன் காலத்தில்தான் தீண்டத்தகாத கொள்கை மிகவும் உச்சக்கட்டத்தில் இருந்தது என்று பாகூரிலுள்ள திருமூலநாதர் கோயில் கல்வெட்டு கூறுகிறது. அவர்கள் தீண்டாச்சேரியில் வாழவேண்டும் என்றும் பள்ளப்பகுதியில்தான் வாழவேண்டும் என்று அக்கல்வெட்டில் ஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் கிராமங்களில் சேரிகள் 1 கி.மீ. தள்ளி ஊருக்கு வெளியில்தானே இருக்கிறது. இந்த நிலை உங்களுக்கு ஏன் ஏற்பட்டது. இதற்கு இந்த ஆணையும் ஒரு காரணம் என்பதை நீங்கள் அறிவீர்களா? அந்த ஆணைபிறப்பித்த இராசராச சோழன் தீண்டத்தகாதவர் என்றால், இந்த ஆணையை அவர் வெளியிட்டு கோயில் கல்வெட்டிலும் எப்படி பொறித்துவைத்திருக்கமுடியும்?. நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப்போல், உங்கள் நடவடிக்கையால் உங்களைப்பற்றிய பழைய கதைகளையெல்லாம் கிளறி ஏன் நீங்களே உங்களை தாழ்வுபடுத்திக்கொள்கின்றீர்கள்.. மாட்டுப்பொங்கல் அன்று பசுவிற்கு மாலை மரியாதையெல்லாம் செய்கின்றீர்கள். நீங்கள் இந்துக்கள்தானே? காமதேனு (எ) பசுவும் அதன் இனமும் சிவனின் வாகனமல்லவா? இன்னும் ஏன் அவற்றை வெட்டி உண்ணுகின்றீர்கள். குறைந்தபட்சம் இனிமேலாவது ஆ வினை வெட்டிக்கொல்லாமல் இருங்கள். பார்ப்போம். அப்பொழுதாவது உங்களுக்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படலாம். என்று அறிவுரைசெய்தபின் பதிலேதும் சொல்லமுடியாமல் சென்றுவிட்டனர்.. அதுமட்டுமல்ல தீண்டத்தகாதவன் எப்படி கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்திருக்கமுடியுமா? என்றுகூட அவர்களுக்கு யோசிக்கத்தெரியவில்லை. யாரோ சென்னதை அப்படியே வந்து ஒப்பிக்கின்றனர்.இராசராசன் சிலையை வெளியேவைத்ததற்கு இராசராச சோழன் காலத்தில் கொண்டுவந்த ஆகமவிதிதான் காரணம் என்றும், ஆகமவிதிப்படி மனிதனின் சிலையை கோயிலுக்குள் வைக்கக்கூடாது என்று ஆகமவிதிகளை விதித்து சட்டம் இயற்றி அதை அமுல்படுத்தியவனே இராசராசன்தான் என்றும்—அவ்விதிகளைக்காட்டி முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களின் மத்திய அரசு, இராசராசனின் சிலையை பெரியகோயிலுக்குள் வைக்கவேண்டும் என்று கலைஞரின் தமிழக அரசு அனுமதி கேட்டபோது மறுத்துவிட்டது என்று 12-06-2006 திங்கள் கிழமை மாலை தஞ்சை திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே கலைஞர் அவர்கள் விளக்கமாக குறிப்பிட்டு பேசியுள்ளார்.தமிழக அரசு அம்மன்னனின் இயற்பெயர் அருண்மொழிச் சோழன் என்று கல்வெட்டில் தவறாக வெட்டிவைத்திருப்பதை அழித்துவிட்டு அம்மன்னனின் இயற்பெயர் அருண்மொழித் தேவன் என்று இப்போதாவது தவறைத்திருத்தி அக்கல்வெட்டில் பொறித்துவைக்கவேண்டும். இல்லையேல் அவர்களின் பொய்விளம்பரமும் தவறான நடவடிக்கையும் தொடர்ந்து சட்டம் ஒழுங்குப்பிரச்சினை ஏற்பட காரணமாகக்கூடும்.. இராசராச தேவேந்திர சோழதேவர் என்று அவர்கள் பொய்விளம்பரம் செய்கின்றனர். தேவேந்திர சோழதேவர் என்று எந்த கல்வெட்டில் இருக்கிறது? அவர்கள் ஆதாரம் காட்டமுடியுமா? இராசராச தேவர் என்றுதான் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. “உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து அலகையாய் வைக்கப்படும்” (குறள்-850) அவர்கள் அவ்வாறு விளம்பரம் செய்வது மட்டுமேல்ல. இராசராசன் பிறந்த சதயத்திருநாள் அன்று தஞ்சை பெருவுடையார் கோயில் முன் உள்ள அப்பேரரசனின் திருஉருவச்சிலையின் இரண்டு கைகளிலும் அவர்களின் கட்சிக்கொடியை கட்டி வரம்புமீறி செயல்பட்டுவருகின்றனர். (கடந்த சதயத்திருநாள் அன்று இப்படி சிலையியன்மீது கொடியைகட்டி முக்குலத்து மக்களின் கோபத்தை தூண்டிவிட்டார்கள்.) போலீசார் இதனை கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. . இதற்கு காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் துணைபோகின்றனர். இதனால், சட்டம் ஒழுங்குப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன.. அவ்வினத்தோர் இவ்வாறு செய்வதற்கு காரணம், அவர்கள மேல் சமுதாயத்தில் வலுக்கட்டாயமாக கலப்புத்திருமணம் செய்யவேண்டும் என்று பொதுமக்களின்முன் அநாகரீகமாகவும் கீழ்த்தரமாகவும் மேடைபோட்டு பேசியும் வருகின்றனர்.அதுமட்டுமல்ல.. நீங்கள் இந்து நாளிதழில் Matrimonial Colum பார்க்கவும். அதில் அவர்களுடைய மகன், மகள்கள் நல்ல அரசுப்பணியில் இருக்கிறார்கள் என்றும் அவர்களைத்திருமணம் செய்துகொள்ள சாதி எதுவும் தடைஇல்லை என்று விளம்பரம் செய்கின்றனர். இப்போதாவது அவர்களின் உள்நோக்கம் புரிகிறதல்லவா? சமத்துவமும், சமதர்மமும் தானாகவே மலரவேண்டுமே அல்லாது வலுக்கட்டாயமாகத் திணித்தால், தமிழகத்தின் அமைதிக்கு ஊறு ஏற்படக்கூடுமல்லவா? இதற்கு அரசு அதிகாரிகளே துணை போகலாமா? இராசராசசோழனின் சிலையில் இயற்பெயரான அருண்மொழித் தேவன் என்ற பெயர் மறைக்கப்பட்டுள்ளது.ஏன்? .உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலுக்கு எதிரில் இராசராச சோழனின் சிலையை தமிழக முதல்வர் திறந்துவைத்துள்ளார்கள். தமிழக முதல்வர் அவர்களின் பெயருக்கு அருகிலேயே இராசராச சோழனின் இயற்பெயர்: அருண்மொழிச் சோழன் எனறு கல்வெட்டில் தவறாக வெட்டிவைத்துள்- ளார்கள். அருண்மொழிச்சோழன் என்று எந்த வரலாற்றுப்பதிவிலும் இல்லை. இருட்டடிப்பு செய்து வரலாறு மறைக்கப்பட்டுள்ளது இராசராசசோழனின் இயற்பெயர்: அருண்மொழித் தேவன் என்பதே சரியானது:. இதைப்பற்றி ஆராய்ச்சிப் பேரறிஞர் அமரர் திரு.தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் அவர்கள் பிற்காலச்சோழர் வரலாறு பக்கம் 74 மற்றும் 92ல் எழுதியுள்ளது வருமாறு.:”இவனுடைய பெற்றோர்கள் இவனுக்கு இட்டு வழங்கிய பெயர் அருண்மொழிவர்மன் என்பது.(SII. Vol.V Verse 61) அவ்வேந்தற்கு வழங்கிய சிறப்புப் பெயர்களுள் இராசராசன் என்பது யாண்டும் பரவி இயற்பெயர்போல் வழங்கி வந்தமையின் இவனது இயற்பெயராகிய அருண்மொழித்தேவன் என்பது வழக்கற்றுப்போயிற்று. முடிசூட்டிக்கொள்ளும் முன் இயற்பெயர் அருண்மொழித் தேவன் என்பதை டாக்டர் மு.வ.இராச மாணிக்கனார் அவர்களும் அவருடைய சோழர் வரலாறு என்னும் நூலில் பக்கம்144ல் குறிப்பிட்டுள்ளது வருமாறு: “சோணாட்டுக்குடிகள் அருள் மொழித்தேவனை .. பட்டம் ஏற்குமாறு தூண்டினர். ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை. தன் சிற்றப்பனான மதுராந்தகனுக்கு (உத்தமசோழனுக்கு)நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான். அவனை அரசனாக்கினான். தான் அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான். முடிசூட்டிக்கொள்ளும் முன் இளவரசன் அருண்மொழித்தேவன் என்றே குறிப்பிடப்பட்டார் என்பதை முனைவர் சி.கோ.தெய்வநாயகம் அவர்களும் அவருடைய சோழர் வரலாறு என்னும் நூலில் பக்கம் 53ல் எழுதியுள்ளது வருமாறு: “சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச்சோழபிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்ற நான்கு பிராமணச்சகோதரர்களால் இரண்டாம் பராந்தக சோழனான சுந்தரசோழனின் மூத்த மகனும் போரில் வீரபாண்டியனின் தலையை கொய்த பெரும்வீரனான ஆதித்தகரிகாலன் சதிச்செயல்மூலம் வஞ்சகமாக கொலைசெய்யப்பட்டான்.(ஆதாரம்: காட்டுமன்னார் கோயிலுக்கணித்தாகவுள்ள உடையார் குடிகல்வெட்டு எண். Ep.Ind.Vol. XXI No.27). எனவே, ஆதித்தகரிகாலனின் தம்பி அருண்மொழித் தேவன் என்ற இளமைப்பெயருடைய இராசராசனே முடிபுனைந்து அரசப்பொறுப்பினை ஏற்கவேண்டும் என்றே மக்களும் அறிஞர்களும் சோழ அரசியல் அதிகாரிகளும் விரும்பி வேண்டி நின்றனர். அந்நிலையில் இரண்டாம் பராந்தகன் இராசகேசரி சுந்தரசோழனின் பெரிய தந்தை கண்டராதித்த தேவரின் மனைவியும் மழவர் குலத்தில் பிறந்தவளும் சைவத் திருக்கோயில் வழிபாடு மற்றும் திருப்பணிகளில் மிகுந்த ஈடுபாடு காட்டியவளும் அரசியல் திருக்கோயில் பணியாளரிடையே பெரும் செல்வாக்குப்பெற்றவளுமாகிய செம்பியன் மாதேவி தம் திருவயிறு உதித்த மதுராந்தக உத்தமசோழன் சோழ அரியணை ஏறி ஆட்சிசெய்ய பெருவிருப்பம் கொண்டவனாக இருந்துள்ளான. எனவே, சிறிய தகப்பன் முறையிலான உத்தமசோழனது விருப்பத்தை மதித்து தமக்குரிய அரியணை ஏற்றத்தை விட்டுக்கொடுத்து உத்தமசோழனை(மதுராந்தகனை) கி.பி.970 முதல் கி.பி.985 வரை சோழ நாட்டை ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆட்சிசெய்ய அனுமதித்த பேருள்ளம் படைத்தவனாக …. இராசராசனை குறித்து திருவாலங்காட்டுச் செப்பேடுகள் பெருமிதம் அடைகின்றன.” “கோப்பரகேசரிவர்மரான ஸ்ரீ உத்தமசோழ தேவர்” என்று திருவிடைமருதூர் கல்வெட்டு கூறுகின்றது (Ibid.Nos.128,131 and 150) மேலும் முனைவா சி.கோ.தெய்வநாயகம் பக்கம் 47ல் எழுதியுள்ளது வருமாறு:”உத்தமசோழனுடைய கல்வெட்டு ஒன்று அருண்மொழித்தேவ கைக்கோளர் படை ஒன்றை சுட்டுகிறது. எனவே, வாலிப வயதில் அருண்மொழித்தேவன், உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களின் ஒரு குறும்படைப் பிரிவிற்கு தலைவனாகவும் பாட்டியார் செம்பியன் மாதேவியின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு அன்போடு உதவியுமுள்ளான் என அறியமுடிகிறது. சோழநாட்டின் தலைநகரான தஞ்சாவூர் அரண்மனையில் அருண்மொழி தேவத் தெரிந்த திருப்பரிகலத்தார் என்ற வேளம் இருந்தது. இந்த அரண்மணைப்பகுதிக்கும் அருண்மொழித்தேவன் என்ற பெயரே சூட்டப்பட்டிருந்தது(பக்கம் 56). இராசராசசோழன் பிறந்தவுடன் பெற்றோர்கள் சூட்டிய அருண்மொழி வர்மன் என்ற பெயர் வழங்கப்படவில்லை. அவர் தேவர் குடும்பத்தில் பிறந்ததால், அருண்மொழித்தேவன் என்றே அனவரும் அழைத்ததால், சுமார் 42 வயதுவரை அருண்மொழித் தேவன் என்ற பெயரே இயற்பெயராகவும் இளமைகாலப் பெயராகவும் அமைந்தது. தமிழகம் ஊரும் பேரும் எழுதிய ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் அந்நூலின் பக்கம் 120 & 161ல் குறிப்பிட்டுள்ளதாவது: “இம்மன்னனது இயற்பெயர் அருண்மொழித்தேவன் என்பதாகும். தஞ்சை (தற்போது நாகை) மாவட்ட மாயவர வட்டத்தில் அருமொழித் தேவன் என்ற பெயருடைய இரண்டு ஊர்களும், நாகப்பட்டின வட்டத்தில் ஒர் அருமொழித்தேவனும் உள்ளன. தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்திலும் அருமொழித்தேவன் என்னும் ஊர் உண்டு.. பாண்டி மண்டலத்தைச்சேர்ந்த அருண்மொழித்தேவபுரம் என்றொரு ஊரும் உண்டு.இவ்வூர்கள் யாவும் அருண்மொழித் தேவன் நினைவாக ஏற்பட்ட ஊர்களாகும். உத்தமசோழன் கி.பி.985ல் இறந்தான். பக்கம் 53ல் முனைவர் சி.கோ. தொடர்ந்து எழுதியுள்ளது வருமாறு: “15 ஆண்டுகள் உத்தமசோழன் ஆட்சியில் போர்கள் ஏதுமின்றி, தாய்செம்பியன் மாதேவியின் சைவத் திருக்கோயில் பணிகளுக்கு உதவிய அமைதியான சூழலில் அமைந்தது. அந்நிலையில் முதல் பராந்தகனாலும், சுந்தரசோழனாலும், ஆதித்த கரிகாலனாலும் வெற்றிகொள்ளப்பட்டு அடக்கி வைக்கப்பட்டு இருந்த சேரர்களும் பாண்டியர்களும், வேங்கிநாட்டவரும் எழுச்சிபெற்று சோழப்பேரரசை எதிர்க்கலாயினர். அந்நிலையில் சோழநாட்டின் எல்லைப்பகுதிகளில் அமைதி குலைந்து கலக்கம் ஏற்படுவது இயற்கை. இச்சூழலில்தான், மக்களின் பெருவிருப்பத்தைத் தவிர்க்க இயலாதவனாக இளவரசன் அருண்மொழித்தேவன் இராசராசன் என்ற ஆட்சிச்பெயருடன் கி.பி. 985ஆம் ஆண்டு ஜுலை மாதம், 18ஆம் நாளுக்கு இணையான ஆடிமாதம் புனர்பூச நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையில் முடிசூட்டப்பட்டு சோழப்பேரரசின் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ளான். இதனை திருவாலங்காடு, கரந்தை செப்பேடுகள் எடுத்துரைக்கின்றன. (Mysore Gazetteer Vol. II. Part II, page 943) அப்போது ஏறத்தாழ 42 வயது.(பக்கம் 102) இராசராச சோழனின் மகன் இராசேந்திரசோழனும், தன்தந்தையின் இயற்பெயரால் அருமொழி தேவனிற்க் கோயில். . எனக்குறிப்பிட்டு கி.பி.1016ஆம் ஆண்டு கல்வெட்டு வெளியிட்டார்.,இக்கல்வெட்டைக்காண்க:”. . . யாண்டு நாலாவது நடுவிருக்கும் கொட்டையூர் வூவத்தபட்ட ஸொமாஜியார் . . சொளெந்திரசிங்க ஈஸ்வரமுடையார் கோயிலின் வடபக்கத்து சாலை அருமொழிதேவனிற்க். கோயில் கருமமாராயாவிருந்து. . . .(ஆதாரம்:முனைவர் சி.கோ.தெய்வநாயகம் எழுதிய சோழர் வரலாறு பக்கம் 62) . இக்கல்வெட்டில் இராசராசன் கட்டிய கோயில் என்று இராசேந்திரசோழன் குறிப்பிடவில்லை. தன் தந்தையின் இயற்பெயராகிய அருண்மொழித் தேவன் கட்டிய கோயில் என்றே குறிப்பிட்டுள்ளதிலிருந்தே, அம்மன்னர்கள் தாங்கள் பிறந்த தேவர் குலத்தில் எவ்வளவு ஈடுபாடும் மனச்சார்பும் உடையோராய் இருந்தனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறதல்லவா?இக்கோயில் பற்றிய வரலாற்றுச்செய்தியை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இக்கோயில், இராசராச சோழன் முடிசூட்டிக்கொண்டபிறகு, அவரது 14வது ஆட்சி ஆண்டில் இராச ராசசோழனால் கட்டப்பட்டது. எனவே, “இராசராச சோழனிற்க் கோயில்” என்றுதானே இராசேந்திரசோழனின் கி.பி.1016ஆம் ஆண்டில் வெட்டப்பட்ட அக்கல்வெட்டுக் குறிப்பிடவேண்டும். ஆனால், அவ்வாறு குறிப்பிடாமல், இராச ராசசோழனின் இயற்பெயராகிய அருண்மொழி தேவனிற்கோயில் என்று கல்வெட்டில் வெட்டிவைக்கப்பட்டதிலிருந்து,முடிசூட்டிக்கொண்டபிறகும் இராசராசனின் இயற்பெயரிலேயே அக்கோயில் அனைவராலும் அழைக்கப்பட்டிருந்தது என்பது தெள்ளிதின் தெளிவாக தெரிகிறது அன்றோ?.அதுமட்டுமல்ல. இளவரசன்

அருண்மொழித்தேவன் முடிசூட்டிக்கொண்டபிறகும், அவரை “பெரிய தேவர்” என்றுதான் அனைவரும் அழைத்துள்ளனர். எனவே, பெரிய தேவர் என்ற விருதுபெயர் பெற்றார் (ஆதாரம்..முனைவர் தெய்வநாகம் எழுதிய சோழர் வரலாறு பக்கம் 49) இராசராசசோழன் பெரியதேவர் என்றால், இராசேந்திரசோழனை அனைவரும் சிறியதேவர் என்று அழைத்திருக்கவேண்டும் என்பது உய்த்துணரக் கூடியதாகும்.. இராசராச சோழன் முடிசூட்டிக்கொண்ட பிறகு “திரு.இராஜ ராஜ தேவன்” என்ற பெயர் தாங்கிய வெள்ளிக்காசை வெளியிட்டார்(ஆதாரம்..ஹுல்ஸ் EA.XXV பக்கம்317 கே.ஏ.நீலகண்டசாஸ்திரிகளின் சோழர்கள் புத்.1 பக்கம்.23) அருண்மொழித் தேவ வளநாடு, அருண்மொழித்தேவ பெருந்தெரு,அருண்மொழித்தேவ மரக்கால், அருண்மொழிதேவ சாலை, அருண்மொழித்தேவ வாய்க்கால் என்று இராசராச சோழனின் ஆட்சியின்போது வழங்கிவந்த பெயர்கள் யாவும், அவருடைய இயற்பெயரான அருண்மொழித் தேவன் என்பதை உறுதிபடுத்துகின்றன.

(ஆதாரம்: TAS VPP 29-30. 186 OF 1925, 227 OF 1921, 401 OF 1921, SII III 1908)
குறிப்பு: பிரிட்டிசு அரசு குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவந்ததற்கு ஒரு காரணம், முக்குலத்து மக்கள் நாடாண்ட அரசர் குலம் என்பதை மறைத்துதான் கொண்டுவந்தது. அதுபோல்தான், தற்போது சில அரசு அதிகாரிகள் நம் வரலாற்றை மறைக்க முயல்வதையும், அதற்கு ஒரு இனத்தாரை தூண்டிவிடுவதையும் கண்டித்தே இக்கட்டுரையை இந்த தலைப்பிலேயே எழுதியுள்ளேன். முக்குலத்து மக்களுக்காக மட்டுமல்ல. மற்ற இனத்தவர்களுக்காகவும் சிலரின் பொய்மையையும், பொய்வேடங்களையும் தோலுரித்துக்காட்டியுள்ளேன். இவர்களிடமிருந்து உங்களுடைய திருமணம் ஆகவேண்டிய பெண் ஆண்களைக் காப்பாற்றிக்கொள்ள நீங்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய நேரம் இது. வாய்மையே வெல்லும்.!

Sunday, June 23, 2013

கற்க்குறிச்சி(கல்லாம்பாறை) மறவர்கள்

அழகுபாண்டித் தேவர்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில் கற்க்குறிச்சி மறவர்கள் என்றோர் மறவர்களில் ஒரு பிரிவினர்கள் உண்டு.இவர்கள் கற்க்குறிச்சி என்ற கல்லாம்பாறை என்ற ஊரின் மறக்குல மக்கள் ஆதனால் ஊர் பெயரே 'கற்க்குறிச்சி' மறவர் என்று மறவரில் 38 பிரிவினர்களில் இவர்களும் ஒருவராவர்.இவர்களை 'அழகுபாண்டித்தேவர்கள்' என அழைப்பது வழக்கம் இவர்கள் பல நிலப்பரப்புகளுக்கு முடிமன்னர்களாக வாழ்ந்துள்ளார்கள்.'அழகு பாண்டித்தேவர்கள்' என்ற பட்டம் தூத்துக்குடி பரதவர்களிடமும் காணப்படும்.கொண்டையங்கோட்டை மறவர்களிலும் இந்த 'அழகு பாண்டியன்' கிளை உண்டு.இவர்கள் பல நிலப்பிரபு அதிபர்களாகவும் சிற்சில பாளையங்களுக்கு அதிபராகவும் வாழ்ந்துள்ளனர்.

சில வரலாற்று நூல்கள் 4 தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
[Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974]

ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் ஆகியோரின் பழைய ஆவணப்பதிவுகளை வாசித்த பின் உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை(திருநெல்வேலி), குமாரகிரி பாளையம் போன்றவை கற்குரிச்சி மறவர்கள். [திருநெல்வேலி கெஜட்: ஹெச்.ஆர்.பேட் மற்றும் நெல்சன்).

இவர்கள் குமாரகிரி பாளையம்,புதுக்கோட்டை பகுதிகள் மட்டும் ஆளவில்லை பாஞ்சாலங்குறிச்சி அருகில் இருந்த அழகுபாண்டியாபுரம் என்ற இடத்தையும் ஆண்டுள்ளனர்.இவர்களை கற்க்குறிச்சி வீர அழகுபாண்டித்தேவர்கள் என்று தான் பட்டம் இருந்துள்ளது.இந்த பாளையத்தை தவிர குமாரபாளையத்தை ஆண்ட "குமார அழகு பாண்டிய தேவர்" களின் வம்சாவளியினர் குமாரகிரி பாளையத்திலும் புதுக்கோட்டை பகுதியிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்களை பற்றிய கல்வெட்டு செய்திகள் ஒன்று கல்லாம்பாறை தூத்துக்குடியில் கிடைத்துள்ளது. அதில்

இடம்: கோயில் ம்க மண்டபம் நுழைவாயிலின் தென்புறச்சுவர்.
காலம்: கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு.

கல்வெட்டு: ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறபன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு 11 வதின் எதிர் மூவாண்டு திரு வழுதி வளநாட்டு கற்க்குறிச்சியாண மணத்தியில் நாயனாரிடையாற்றீச்வரம் உடைய நாயனார்க்கு இம்மணத்திக்கு
காரியஞ் செய்கின்ற மலை மண்டலத்துக்கு
கண்ணணூருடையான் 'ஸ்ரீ க்யிலாசமுடையான் வீரமழகிய பாண்டியத்தேவர்க்கு
இந்நாயனார் முப்பது வட்டத்து சிவப்பிராமணரோம்
பிடிபாடு குடுத்த ப்ரிசாவது இந்நாயனார்க்கு இவர் வைத்த சந்தியா தீபம் ஒன்று இஸ்ந்தியா தீபம் ஒற்றுக்கு
இவர் பக்க் இவ்வாட்டை ஆடிமாதங்க் கொண்ட அச்சு அரையும் ஒன்றுங்க் கொண்டு
சந்திராதித்தவரை செலுத்த்வோமாக கைக்கொண்டோம்.

செய்தி: 'திருவழுதி வளநாட்டு கற்க்குறிச்சியாண மனத்தியில் குறிப்புள்ள நாயனார் இடையாற்றீச்வரமுடையார்' என இறைவர் குறிப்பிடப்டுகின்றார். கற்க்குறிச்சி என்ற ஊர் 'கல்லாம்பாறை' என்ற பெயரில் தனி ஊராக அருகில் உள்ளது. தாமிரபரணிக்கும் தேரிக்கால்வாய்க்கும் இடையில் அமைந்த கோயில் என்பதால் இடையாற்றீச்வரம் என வழங்கபட்டுள்ளது. இவ்வூர் தொடர்பாண பணிகளை கவனிக்கும் செயலராக இருந்த மலை மண்டலத்துக் கண்ணனூருடையான் 'ஸ்ரீ க்யிலாசமுடையனான் வீரமழகிய பாண்டிய தேவன் என்பவர் இந்த கோய்லில் சந்தியா தீபம் எரிக்க இக்கோய்லில் மாத்ததின் முப்பது நாள்களும் பூசை பணிபுரியும் உரிமை படைத்த சிவ பிராமணர்களிடம் அரை அச்சும் ஒரு காசும் கொடுத்துள்ளார்.

நன்றி:
'மனத்தி சிவன் கோயில் கல்வெட்டுகள்' அர.அகிலா,மு.நளினி இப்பகுதிக்குகான கள ஆய்வுகள் திருமதி தமிழரசி வேலுசாமி ,திருமதி.சிவ அரசி முத்துகாளத்தி ஆகியோர் அமைத்திருக்கும் "திரு.கன்னம்மாள் இராசமானிக்கனார் அறக்கட்டளை".

பார்க்கவ குலத்தின் பட்டங்களும் விருதுகளும்.

தெய்வீகன் மலையமான் நரசிங்க உடையாரின் வம்சாவழியினரான சுருதிமான்,மலையமான்,நத்தமான் மரபினர் பார்க்கவ குலம் என்று அழைக்கப் படுவர். இவர்கள் மரபுவழி வந்தவர்களே சேதிநாடு,மலையமாநாடு,நடுநாடு,நத்த நாடு,மாவலி நாடு,பெண்ணை நாடு,கோவல நாடு,தெய்வீக நாடு,முள்ளூர் நாடு  என்றெல்லாம் அழைக்கப்படும் நடுநாட்டுப் பகுதிக்கு அரசனாகவும், வேளிராகவும்,போர் வீரராகவும்,சோழனின் போர்ப்படைத் தளபதியாகவும்,பெரிய அதிகார பதவிகளிலும்,கருவூலக் காவல் அதிகாரியாகவும் இருந்த இவர்களுக்கு அநேகமான பட்டங்களும்,விருதுப் பெயர்களும் உண்டு.

 

பட்டங்கள்

மலையமான்
நத்தமான்
சுருதிமான்
உடையார் 
நயினார் 
மூப்பனார்

இவை ஆறும் தற்போது பார்க்கவ குலத்திற்கு வழங்கி வரும் பொதுவான பட்டங்கள்.

..............................................................................................................

விருதுகளும் பட்டங்களும்.

மலையமான்
நத்தமான்
சுருதிமான்
வேளிர் 
வேள்
சேதிராயர்
மலாடுடையார்
மிலாடுடையார்
முனையரையர்
மலையரையர்(மலையர்களை ஆண்டவன்)
கோவலரையர்(கோவலர்களை ஆண்டவன்)
கொங்குராயர்(கொங்கர்களை ஆண்டவன்)
பண்டரையர் 
பண்டாரத்தார்(கருவூல காவல் அதிகாரி)
பண்டாரியார்
பாளையத்தார்
கொங்கராய பாளையத்தார்
நாட்டார்
பெரிய நாட்டார்
சீமை நாட்டார்
வானாதிராயர்
வானராயர்
வானகோவரையர்
தேவன்
அரையத்தேவன்
வானவிச்சாதரன்
வானவிச்சாதிர நாடாழ்வான் 
மலையராயர்
மலையரசன்
மழவராயர்(மழவர்களை ஆண்டவன்)
மலாடர்
சேதியர்
சேதிபர்
சேதியர் கோன்.(சேதியர்களின் அரசன்)
மகத நாடாள்வார்
மகத நாடன்
சேதி நாடன்
நாடாள்வான்
கத்திக்காரர்
சவளக்காரர்
அகமுடையார்(முதலியார்,உடையார்)
வன்னியர்
காவல்காரர்
வன்னிய நாயகன்(வன்னியர்களை ஆண்டவன்)
காடவராயர்
பல்லவராயர்
நான்முடியன்
நரசிங்க மைந்தன்
நந்திப் பொருப்பன்
பெண்ணை நாடன்
மாவலி நாடன் 
வில்லாளன்
பதினெண் புவியன்
கோவல் வேந்தன்
வலாரித்துறையன்
பெண்ணைத் துறைவன்
நத்த நாட்டேந்தல்
இறையாபுரியான்
இரண கேசரி 
வர்மன்
தொண்டைமான்
கச்சிராயர்
மலைய குல ராசன்
மலாடர் கோமான்(மலையர்களின் அரசன்)
அருணாட்டேந்தன்
மூப்பர்பிதா
வேதமுணர்ந்தோன்
வேனாட்டான்
கொங்கர் கோன்
கோவலூரான்
குடவல கோவல காவலன்
பெண்ணையம் படப்பை நாடு களவோன்.
மலைய நத்தன்
மலையமன்னன் (உடையார்,நயினார்)
நத்தமன்னன் (உடையார்)
சுருதிமன்னன் (உடையாரில் மூப்பனார்)
இருங்கோவேளர்(சுருதிமான்)

இன்னும் அநேகம் பட்டங்களும் விருதுகளும் உண்டு.
நன்றி:
செய்தி வழங்கியவர்:
சேரமான் பெருமாள்

வெள்ளைச்சாமித் தேவர் என்ற மதுரகவி பாஸ்கரதாஸ்

ச.முருகபூபதி தொகுத்த “மதுரகவி பாஸ்கர தாஸின் நாட்குறிப்புகள்”
தாத்தா தாஸின் நாட்குறிப்புகளை அவரது பேரன் முருகபூபதி பல ஆண்டுகள் தேடித் தேடி அவற்றைக் கோர்த்து அற்புதமாய் இந்நூலை நமக்குத் தந்துள்ளார். இந்த நாட்குறிப்பு 1.1.1917 லிருந்து துவங்குகிறது. 92 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழக மக்களையும், அவர்களது கலைவாழ்வையும் முழுமையாக 20.9.1951 வரை 34 ஆண்டுகள் பதிவு செய்துள்ளார். இது ஒரு கடிதம், தகவல் இலக்கியமாய், கலைக்களஞ்சியமாய் 719 பெரிய பக்கங்களாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தின் சமூக, அரசியல், கலை வரலாற்றை, நூறாண்டுகளுக்கு முன்பிருந்த வாழ்க்கையை நாம் நேரில் தரிசிக்க முடிகிறது. அந்த வகையில் இப்பெருநூல் ஒருகலைஞனின் காலப்பெட்டகமாய்த்திகழ்கிறது.

தாஸ் 1892ம் ஆண்டு ஜூன் 6ம்நாள் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் என்ற ஊரில் பிறந்தார். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று நாடகக் கலைஞராய் மலர்ந்தார். கதரை உடலிலும் காந்தியை உள்ளத்திலும் ஏந்தி கடைசி வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் போலீசாரால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருமேடை நாடக நடிகராக, பெருங்கவிஞராக, நடன, நாட்டிய, பாடல், ஆடல், நாடக நடிப்புப் பயிற்சியாளராக, திரைக்கதை மற்றும் உடையாடல் எழுதுபவராக, கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராக இவர் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கலைஞராக வாழ்ந்ததை இந்நாட்குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. தனக்கு மேடையிலும், தனிப்பட்ட முறையிலும் கிடைக்கும் பணம் மற்றும் பரிசுகள் சககலைஞர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக வாழ்ந்துள்ளார். சாதி வேறுபாடுகளைப் பாராமல் சக கலைஞர்கள், தலித்துக்கள் வீடுகளில் சாப்பிட்டு, அவர்களுக்கும் தனது வீட்டில் விருந்தளித்திருக்கிறார். தீண்டாமையை எதிர்த்தவராக இருந்துள்ளார்.
வெள்ளைச்சாமி என்ற இவரது இயற்பெயரை ராமனாதபுரம் சேதுபதி இவரைத் தனது அரசவையில் பாடவைத்து “முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ்” என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது பஸ்கர சேதுபதி மன்னரைக் குறிக்கும். இவரது பாடல்கள் பெரும்பாலும் விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களது தியாகங்கள், குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சிகள் பற்றியதாகவே எழுதியுள்ளார். பிரிட்டிஷாருக்கு அஞ்சாமல் ஒவ்வொரு பாடலிலும் தனது பெயரையும் பதிவு செய்துள்ளார். மதுரை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வைத்தியநாதய்யருடன் பேசி மதுரையில் நடிகர்களைத் திரட்டி கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்தியுள்ளார் தாஸ். புதுச்சேரி சென்று மூன்று மாத காலம் தலைமறைவு வாழ்க்கையும் நடத்தியுள்ளார்.
தாஸ் தனது காலத்தில் வாழ்ந்த விடுதலைப் போராளிகள் மகாத்மா காந்தி முதல் அனைத்துத் தலைவர்களோடும் தொடர்புடன் இருந்துள்ளார். காந்தியைப் பற்றிப்பாடல் எழுதி அவரிடமே கொடுத்துள்ளார். நாமக்கல் கவிஞர் போன்ற அவர் காலத்திய கவிஞர்களோடும் நெருக்கமாக இருந்துள்ளார். அக்கால நாடகக் கலைஞர்கள் அனைவரோடும் குருபீடத்தில் மதிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ்.சுப்புலெட்சுமி, கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற கலைஞர்கள் இவர் இயற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர். நடிகர்களுக்கு மனக் குவிப்பு, நடுங்காத தேகம், ஞாபக சக்தி, குரல் வலிமை, உடை பற்றிய ஞானம் பற்றி வகுப்புகள் நடத்தியுள்ளார். அவரது மனக் குவிப்பு இதுவரை கேள்விப்படாத ஒரு சொல்லாகும்.
“ஜட்கா ஓட்டி சின்னுத்தேவன் பீட்டர் குடும்பனின் மகள் ஜெபமேரியைத் திருமணம் பண்ணிவைக்குமாறு அழுது வேண்டினான். அவனுடன் சென்று பீட்டர் குடுமபனின் குடும்பத்தாருடன் பேசி முடித்தேன். பீட்டர் குடும்பனின் பூட்டி என்னை ஆசீர்வசித்து அனுப்பினாள்” என்று தாஸ் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார். சாதிக்குரோதங்கள் மலிந்த அன்றைய சமூகத்தில் இதையெல்லாம் செய்து முடிக்கிற அளவுக்கு செல்வாக்குமிக்கவராய் திகழ்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, மணப் பெண் ஜெபமேரிக்கு ஒரு தங்கச் சங்கிலியும் பட்டுச்சேலையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனக்குக் கிடைக்கும் பணத்தை எல்லாம் வாரி இறைத்திருக்கிறார். பணமில்லாத போது நோட்டு எழுதியும், சொத்தை அடமானம் வைத்தும் கடன் வாங்கிக் கூட பலருக்கு உதவியுள்ளார். நாடகத் துறைப் பணிகளோடு அவர் விவசாயமும் தொடர்ந்து செய்து வந்தது வியப்பாயிருக்கிறது.
தமிழகம் முழுவதும் சுற்றிய இவர் கொழும்பு யாழ்ப்பாணம் முதல் ஆலப்புழை வரை சென்று நாடகங்கள் நடத்தியுள்ளார். பின்னாளில் கம்யூனிஸ்ட்டுத் தலைவரான கே.பி.ஜானகியம்மாள் ஸ்திரீபார்ட் நடிகையாக ஏராளமான நாடகங்களில் நடத்துள்ளார். அவரது இளவயது புகைப்படமும் இந்நூலில் வந்துள்ளது. 1929ம் ஆண்டில் தங்கம் பவுன் ரூ.13க்கு கிடைத்துள்ளது. தாஸ் மதுரை அமெரிக்கன்கல்லூரி மாணவர்கள், மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே நாடகப் பயிற்சியளித்துள்ளார். அவர் எழுதிய பாடல்களில் பனங்காட்டுப் பாடல்கள், சேவல் கட்டுப்பாடல், வன்னிமரப்பாடல்கள் வரை உள்ளன. 1931ல் ஒரு சந்தன சோப் விலை 4 அணா தான். அவர் தனது நாட்குறிப்பில் அன்றாட வரவு – செலவுகளையும் தவறாது எழுதியிருப்பதால் அக்கால விலைவாசி நிலைமைகளை நம்மால் புரிய முடிகிறது.
1938ல் மதுரையில் பேய் பொம்மை என்ற ஆங்கிலப்படத்தை தாஸ் பார்த்துள்ளார். சினிமா காட்சியின் போது பயந்து ஓடியசிலருக்கு தியேட்டர்காரர்கள் பாலும் பழமும் கொடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். வயக்காட்டில் நின்ற மயில் கூட்டத்தில் காலில் காயம் ஏற்பட்ட ஆண் மயிலுக்கு மருந்திடச் சொல்லியிருக்கிறார் தாஸ். அவரது இறுதி நாட்களில் நாட்குறிப்பு பெரும்பாலும் நாகலாபுரத்திலேயே நிலைத்து விடுகிறது. நோயும் ஊசி மருந்துகளுமாய் குறிப்புகள் உள்ளன. ஆனால், பாடல்கள் எழுதுவது, பாடுவது மட்டும் குறையவே இல்லை. பலவிதமான மனிதர்கள், வினோதங்களைப் படித்தறிய முடிகிறது. கொடுத்தவன் ஏகாலியானாலும் அவனளித்த கொக்குக் கறியும் குதிரை வாலிச் சோறும் தாஸுக்கு இனிக்கிறது.
சினிமா சகாப்தம் தமிழகத்தில் 1931ல் துவங்குகிறது. தாஸ் திரைப்படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதியுள்ளார். காளிதாஸ், வள்ளிதிருமணம், பிரகலாதா, சுலோசனாசதி, திரௌபதி, வஸ்திராசுரன், ராதாகிருஷ்ணன், சதி அகல்யா, சாரங்கதாரா, ராஜா தேசிங், ராஜசேகரன், போஜராஜன், உஷா கல்யாணம், சித்திரஹாசன், ராதாகல்யாணம் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார்.
விடுதலைப் போராளிகள் போராட்டங்களை நடத்திச் சிறை சென்ற காலத்தில் தாஸ் தனது நாடகங்கள், பாடல்கள் மூலம் மக்களுக்குத் தேசபக்தியூட்டியுள்ளார். விடுதலைப் போரில் மக்கள் உற்சாகமுடன் பங்கேற்க அவரது பாடல்கள் உதவியுள்ளன. 75 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக மக்களின் வாழ்க்கை, வளமைகள், நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், தலைவர்கள் என அனைவரையும் இந்த நாட்குறிப்பில் ஒரு சேர தரிசிக்கலாம். ஒப்பற்ற கலைஞனாக இருந்தும் எளிய மனிதர்களை நேசிக்கும் எளிய மனிதராகவே வாழ்ந்திருக்கிறார். இதை ஊன்றிப் படித்தால் ருசிகரமான தகவல்களும், ஆய்வாளர்களுக்கான விபரங்களும் கிடைக்கும். இம்மாபெரும் கலைஞர் 20.12.1952ல் நாகலாபுரத்தில் காலமானார்.
மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதியை மணந்த மருமகன் திரு.சண்முகம், ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவரது புதல்வர்கள் தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருகபூபதி மூவருமே படைப்பாளிகள். மற்றொரு சகோதரர் பாலசுப்பிரமணியன் இவர்களுக்கு எல்லா வகையிலும் துணை நின்று வருகிறார். மதுரகவியின் பாரம்பரியத்தையும் சாதனைகளையும் இந்த நாட்குறிப்புகளில் நயம்படக் காண்கிறோம். மிகுந்த சிரமப்பட்டு இந்த நாட்குறிப்புகளை அவரது பேரன் ச.முருகபூபதி தொகுத்துள்ளார். இதே போன்று அவரது பாடல்களையும் தொகுப்பதோடு அவற்றை விசிடிகளில் பதிவு செய்து வெளியிட்டால் பெரும் சாதனையாய் நிலைத்து நிற்கும். இந்நூலை பாரதி புத்தகாலயம் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
அப்போது தேவர்கள் மாநாடு ஒன்று கூட்டியிருக்கிறார்கள். அந்த மாநாட்டிற்கு மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களையும் முதுகுளத்தூர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களை-யும் கூப்பிட்டார்களாம். இருவருமே ஒரு ஜாதியின் பெயரால் கூட்டப்படும் மாநாட்டிற்கு வரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்களாம். மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்கள் மிகப் பெரிய இந்துஅபிமானி என்பது தெரிய வருகிறது. ஆனால், அவர் எல்லா ஜாதிக்காரர்-களோடும் மதத்தினரோடும் நல்லுறவு கொண்டு அற்புத மனிதராகத் தெரியவருகின்றார் அவருடைய நாட்குறிப்பின் மூலம்….
நாடகத்தில் தீவிர ஈடுபாடுகொண்ட வெள்ளைச்சாமித் தேவரென்ற பாஸ்கரதாஸ் 1925இல் இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம் என்னும் பாடல் நூலை வெளியிட்டார். இவரது பாடல்கள் சாதாரண வர்ண மெட்டுகளுடன் எளிதாகப் பாடக்கூடியவையாயிருந்ததால் மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்றன. இவரது பல நாடக மேடைப் பாட்டுகளும் தனிப் பாடல்களும் பிராட்காஸ்ட் கம்பெனியின் கிராம்ஃபோன் தட்டுகளாக வெளிவந்தன. அதிலும் ‘வந்தே மாதரமே, நம் வாழ்விற்கோர் ஆதாரமே’ என்னும் பாட்டு மக்களிடையே மிகப் பிரபலமடைந்தது. இவரது பாடல்களைப் பாடாத கலைஞரே இல்லை….
மதுரையில் நாற்பதுகளில் இயங்கிய சித்ரகலா என்ற ஸ்டுடியோவுடன் பாஸ்கரதாஸ் கொண்டிருந்த தொடர்பு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. நடிகர்களின் அமைப்பிற்கெல்லாம் முன்னோடியாய் அமைந்த மதுரை நடிகர் சங்கத்தை 1926இல் தோற்றுவித்தவர் பாஸ்கரதாஸ்….
ஈ. வே. ரா, இ. மா. பாலகிருஷ்ண கோன், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், எம். எஸ். விஜயாள், முத்துராமலிங்கத் தேவர், தண்டபாணி தேசிகர் எனப் பல தமிழ்நாட்டு வரலாற்று நாயகர்களுடன் தொடர்புகொண்டிருந்தார். எம். எஸ். சுப்புலட்சுமிக்கு பாஸ்கரதாஸ் பாட்டுகள் எழுதித் தந்திருக்கின்றார்….
நன்றி :மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்.
புத்தக விலை ரூ.400
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 18.
© தேவர் தளம்