Thursday, January 31, 2013

கொற்றவை

கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாகப் தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. எயினர்களும், வேட்டுவர்களும்,மறவர்களும் கொற்றவையை வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. எயினர் பாலை நிலத்துக்குரிய ஆறலை கள்வர்களாவர். இதனால் கொற்றவை என்பவள் குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாகப் சில பழந் தமிழ் நூல்களிலே குறிப்பிடப்பட்டாலும், பிற்காலத்தில் கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய தெய்வமாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறாள். பாலைக்கு என்று தனி நிலம் இருந்திடாமல் முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என ஆனதால், குறிஞ்சி நிலத்தில் வழிபட்டதாக கருதப்படும் கொற்றவை பாலை நிலக் கடவுளாக ஆகியிருக்கலாமென கருதவும் வாய்ப்புண்டு. கொற்றவை மறவருக்கு அவர்கள் தொழிலில் வெற்றியைக் கொடுப்பவள் என இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது.கிளியும் கொற்றவையும்

சங்ககாலத்திற்கும் முன்னும் சங்கம் மறுவிய காலத்தில் பின்னும் கொற்றவையே முதன்மையான தெய்வமாக தமிழ் கூறும் நல்லுலகத்தில் மன்னர்களாலும் மறவர்களாலும்
வழிபடப்பட்டுள்ளது.

இதன் பின்பு சைவ,வைணவ பக்தி எழுச்சியினால் நிறைய கொற்றவை தெய்வம் சங்கு,சக்கரம் ஏந்திய திருமாலாகவும்,சிவனின் மனைவியாக மாற்றபட்டுள்ளது. இதற்காக போலியான பல கதைகள் சொல்லபட்டு வைதீக சடங்குகள் பின்பற்றபட்டுள்ளது.


கொற்றவை:


கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. மறவர் மற்றும் எயினர் (தற்போது எயினர் என அறியப்படும் சாதி இல்லை. ஆயினும் மறவர்கள் உள்ளனர்) கொற்றவையை வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. மறவர் பாலை நிலத்துக்குரிய பூர்வகுடி மக்களாக அறியப்பட்டாலும், அவர்கள் ஐவகை நிலங்களிலும் பரவி வாழ்ந்தனர்.கொற்றவை என்பவள் குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாகப் சில பழந் தமிழ் நூல்களிலே குறிப்பிடப்பட்டாலும், பிற்காலத்தில் கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய தெய்வமாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறாள். பாலைக்கு என்று தனி நிலம் இருந்திடாமல் முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என ஆனதால், குறிஞ்சி,முல்லை,பாலை நிலத்தில் வழிபட்டதாக கருதப்படும் கொற்றவை பாலை நிலக் கடவுளாக ஆகியிருக்கலாமென கருதவும் வாய்ப்புண்டு. கொற்றவை மறவர்களுக்கு தொழிலில் வெற்றியைக் கொடுப்பவள் என இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது.( நளினி, மு., கலைக்கோவன், இரா. பக். 11, 12.)


சிலப்பதிகார மதுரையில் மீனாட்சி கோவில் இல்லை கொற்றவை கோட்டம்
உண்டு.


மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,

மையறு சிறப்பின் வான நாடி

ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு - என்”

(காடுகாண் காதை, சிலம்பு)


சிலம்பு கூறும் கொற்றவை
வெண்ணிறப் பாம்புக்குட்டி போன்ற பொன் இழையால் கட்டப்பட்ட நீண்ட சடைமுடி. பிறைச் சந்திரன் போலத் தோற்றமளிக்கும்படி அச் சடைமுடியிலே சாத்திய காட்டுப் பன்றியின் வளைவான கொம்பு. கழுத்தில், அஞ்சாத வலிமை கொண்ட புலியின் வாயைப் பிளந்து பெற்ற அதன் பற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புலிப்பல் தாலி. இடையில் வரிகளும் புள்ளியும் பொருந்திய புலித்தோல் ஆடை. கையிலே வில் ஆகியவற்றுடன் கூடி நீளமான முறுக்கிய கொம்புகளையுடைய கலைமான் மேல் ஏறி இருக்கும் தோற்றமே கொற்றவையின் தோற்றமாகக் காட்டப்படுகின்றது
புறப்பொருள் வெண்பாமாலை. துறை-கொற்றவை நிலை.

மானை வாகனமாக கொண்ட கொற்றவை. சிம்ம வாகினி அல்ல!!!!!!!!!

கிளி ஏந்தும் கொற்றவை:கொற்றவையை குமரி,கன்னி என்ற இளம் பெண்ணாக விவரிக்கபடுகிறது. கொற்றவைக்கு கிளியை படைக்கும்  பண்பு பண்டைய காலத்தில் இருந்து உண்டு. கிளியை கொல்வதில்லை.கிளியை கொற்றவை கோவிலுக்கு நேர்ந்து விடுவது வழக்கும். காரணம் பெண் கணவனை அடையாமல் பிள்ளை பெறுவதில்லை ஆனால் கிளி பெண் என்ன சொன்னாலும்
திரும்ப சொல்லும் குழந்தையை போல. கல்யாணம் ஆகும் வரை கிளியே பெண்ணுக்குகுழந்தையாக கருதப்படும். 
அதனலே கொற்றவை என்ற குமரிக்கண்ணி கிளி ஏந்துகிறாள்

கிருத்துவத்தில் கூட கன்னி மரியால் ஏசுவை பெற்றடுப்பது கூட கிளி கொற்றவை
போலத்தான்.கிளிப்பிள்ளை தாங்கும் கண்ணி தாயாக காட்சி அளிக்கிறாள் கொற்றவை.


கிளியுடன் கூடிய பல கொற்றவை சிற்பங்களும் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இரண்டாவது பழந்துர்க்கை வடிவமாகக் கொள்ளத்தக்க சிற்பம் செஞ்சிக்கருகிலுள்ள சிங்கவரம் குன்றின் மேற்பகுதியில் குடையப்பட்டுள்ள அரங்கநாதர் குடைவரையின் தெற்கில், கீழ்ப்புறமுள்ள பாறையில் இடம்பெற்றிருக்கிறது. அண்மையில் நாங்கள் பார்க்க நேர்ந்த இச்சிற்பத்தின் விளக்கத்தைக் கீழே காணலாம்.


சடை : கரண்ட மகுடம் (நீண்ட கூந்தலைக் குறுக்கிக் கட்டப்பட்ட கோலம்)
பிறைநிலவு : இல்லை
குண்டலங்கள் : வலது செவியில் பனையோலைக் குண்டலம், இடது செவி வெறுஞ்செவி
கழுத்தணி : சரப்பளி, கண்டிகை, சவடி
கையில் உள்ள ஆயுதங்கள் : இடப்பின்கையில் சங்கும் வலப்பின்கையில் எறிநிலைச் சக்கரமும். வலமுன்கை கடகத்திலும் இடமுன்கை கடிஹஸ்தத்திலும் இருக்கின்றன. இடமுன்கையின் மணிக்கட்டு அருகே கிளி அமர்ந்திருக்கிறது.
ஊர்தி : இல்லை
நெற்றி : சென்னி இல்லை, நெற்றிக்கண் இல்லை
மார்பகங்கள் : கச்சால் மூடப்பட்டிருக்கின்றன
மேலாடை : இல்லை
காலணிகலன்கள் : சதங்கை, சிலம்பு
காலடியில் : எருமைத்தலைவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் என்ற ஊரிலுள்ள துர்க்கையின் சிற்பத்தையும் அண்மையில் நாங்கள் பார்க்க நேர்ந்தது. அதன் விளக்கம் கீழே.

சடை : கரண்ட மகுடம்
பிறைநிலவு : இல்லை
குண்டலங்கள் : இரண்டு செவிகளிலும் பனையோலைக் குண்டலங்கள்
கழுத்தணி : சரப்பளி மற்றும் வீரச்சங்கிலி, முப்புரிநூல் நிவிதமாக உள்ளது
கையில் உள்ள ஆயுதங்கள் : இடப்பின்கைகளில் சங்கும், கேடயமும், வில்லும் உள்ளன. இடமுன்கை கடியவலம்பிதமாக இருக்கிறது. வலப்பின்கைகளில் எறிநிலைச் சக்கரமும், வாளும், மணியும் உள்ளன. வலமுன்கை ஏந்தலாக இருக்கிறது. வலமுன்கையின் முழங்கைக்கு அருகே கிளி அமர்ந்திருக்கிறது. தோள்வளைகள் உள்ளன.
ஊர்தி : சிங்கம் மற்றும் மான் ஆகியன காட்டப்பட்டுள்ளன.
நெற்றி : சென்னி இருக்கிறது. நெற்றிக்கண் இல்லை
மார்பகங்கள் : கச்சு அணியப்பட்டுள்ளது.
மேலாடை : இல்லை
காலணிகலன்கள் : முழங்காலிலிருந்து கணுக்கால் வரை இரு கால்களிலும் கழல்கள், இடதுகாலில் சிலம்பு இருக்கிறது.
காலடியில் : எருமைத்தலைவிஷ்னு (எ) திருமாலாக மாற்றபட்ட கொற்றவை


ஆந்தையை ஏந்திய கிரேக்க தேவதை அத்தீனா

மானை வாகனமாக பரவை ஏந்திய கிரேக்க  பெண் கடவுள் ஆர்டிமிஸ் அன்னப்பரவை ஏந்திய ரோம பெண் கடவுள் டையானா
கொற்றவை குறித்த தொடக்ககாலச் சான்றுகள்இன்று கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணத்தில் கொற்றவை நிலை என்னும் ஒரு பிரிவு சொல்லப்படுகிறது. போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது[1]. காலத்தால் முற்பட்ட இந்த நூலிலேயே கொற்றவை இடம்பெற்றிருந்தும், சங்க இலக்கியங்கள் எதிலும் கொற்றவைத் தெய்வம் பெயர் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. கொற்றவை கானகத்தில் உறையும் மறவர்களுடைய கடவுள் ஆவாள். எனவே "ஓங்குபுகழ் கானமர் செல்வி" என அகநானூறு குறிப்பிடுவது கொற்றவையையே எனலாம். அத்துடன் குறுந்தொகையில் "விறல் கெழு சூலி" எனவும், பதிற்றுப்பத்தில் "உருகெழு மரபின் அயிரை" எனக் குறிக்கப்படுவதும் கொற்றவையையே என்பது சில அறிஞர் கருத்து. சங்க காலத்துக்குப் பிற்பட்ட சங்க மருவியகால இலக்கியங்களில் கொற்றவை பற்றிய சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. கலித்தொகையில், தலைவனின் தன்னிடம் கூறும் வஞ்சக வார்த்தைகளுக்கு உவமை கூறுவதாக, "பெருங்காட்டுக் கொற்றவைக்குப் பேய் நொடி சொல்வதுபோல" என்னும் பொருள்படும் பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு என்னும் வரி உள்ளது. பரிபாடலிலும், நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண் என்ற வரியில் கொற்றவை பற்றிய குறிப்பு வருகின்றது. திருமுருகாற்றுப்படை, தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகனைக் "கொற்றவை சிறுவ"[2], "பழையோள் குழவி"[3] என்னும் தொடர்களால் குறிப்பிடுகிறது. இது கொற்றவையை முருகக் கடவுளின் தாயாகப் பழந்தமிழர் கருதியதைக் காட்டுவதுடன், "பழையோள்" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் கொற்றவை வழிபாட்டின் தொன்மையும் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம். இதிலிருந்து, திருமுருகாற்றுப்படைக்கு முந்திய பெரும்பாணாற்றுப்படையில் "சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும் அழகையும் உடைய இறைவி" என்னும் பொருள்படும் கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி[5] என்னும் குறிப்பும் கொற்றவையையே குறிக்கிறது என்பது வெளிப்படை.( திருமுருகாற்றுப்படை 258
திருமுருகாற்றுப்படை 259,நாராயணவேலுப்பிள்ளை, எம்., 2003. பக்.153.பெரும்பாணாற்றுப்படை, 460)

சிலப்பதிகார மதுரையில் மீனாட்சி தெய்வம் இல்லை என வாதிடுவோர் உள்ளனர். ஆனால் கொற்றவை தெய்வம் இல்லை என கூறுவோர் இல்லை.

கண்ணகி, தனது கணவன் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டவுடன், அவள் வளையல்களை உடைத்தெரிகிறாள். இதுவும் கொற்றவை கோவிலில் நடந்த நிகழ்ச்சி


கொற்றவையின் இயல்புகள்

கொற்றவை பற்றிய நேரடியானதும் மறைமுகமானதுமான குறிப்புக்கள் முற்பட்ட நூல்களிலேயே காணப்படினும் சிலப்பதிகாரமே கொற்றவை பற்றிய விரிவான பல தகவல்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது பற்றிய தகவலும் அத் தெய்வம் பற்றிய விளக்கமும் காணப்படுகிறது. மழை வளம் இல்லாத பகுதியில் வாழும் மறவர்கள் வில்லையேந்திப் பகைவரிடத்துச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் என்றும், அதற்குக் கைமாறாக வீரத்தன்மைக்கு அடையாளமான அவிப்பலியை எதிர்பார்ப்பவள் என்றும், அவள் நெற்றிக்கண்னை உடையவள், விண்ணோரால் போற்றப்படுபவள், குற்றம் இல்லாத சிறப்புக் கொண்ட வான நாட்டினை உடையவள் என்றும் கொற்றவையின் இயல்பும் சிறப்பும் விவரிக்கப்படுகின்றன[.
சிலப்பதிகாரம் 11:210-215

கொற்றவையின் தோற்றம்
கொற்றவை எப்படியான தோற்றம் கொண்டவள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் சிலப்பதிகாரத்துக்கு முந்திய நூல்களில் காணப்படவில்லை. எனினும், கொற்றவைக்கு அத்தெய்வத்தின் இயல்பை விளக்கும்படியான வடிவம் இருந்தது என்பதை உய்த்து உணரும்படியான தகவல்கள் அந்நூல்கள் சிலவற்றில் காணப்படுகின்றன[. சிலப்பதிகார வரியில், மறக்குலப் பெண்ணான சாலினியைக் கொற்றவையாகக் கோலம் புனைந்தது பற்றிய விவரங்கள் தரப்படுகின்றன. இது அக்காலத்தில் மக்கள் கொற்றவையை எப்படியான தோற்றத்தில் வழிபட்டனர் என்பதை அறிய உதவுகின்றது.
நளினி, மு., கலைக்கோவன், இரா. பக். 12.


கலித்தொகையில் கொற்றி
கொற்றவையைக் கலித்தொகை கொற்றி எனக் குறிப்பிடுகிறது. கொற்றியே ஒரு பேய். அவளுக்கே பேய் பிடித்துவிட்டது என்று சொன்னால் யார் நம்புவார்கள் என்று தலைவி தலைவனிடம் கூறுவதாகப் பாடல் வருகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் கொற்றவை பெயர் கொண்ட பிற் காலத்தில் கொற்றிகோடு என்ற பெயர் கொண்ட. மறவர் ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள மக்கள் கொற்றவை வழிபாட்டை செய்து வந்தவர்கள்
தலைவன் பரத்தையிடம் போய்வந்ததை மறைப்பது இவ்வாறு உள்ளதாம்.
ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா!
பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து (கலித்தொகை 89 அடி 7-9).

குலோத்துங்க சோழன் எதிரிகளின் யானைகளின் எழும்பகுகளால் கொற்றவைக்கு கோவில் 
எடுத்தான் என கலிங்கத்து பரணி கூறுகிறது 

சோழர் குலதெய்வம் நிசும்பசூதினி 

போர்த் தெய்வமாகிய கொற்றவையின் நாள் பரணி. இந்நாளில் நடத்தப்படும் வழிபாடு காரணமாகப் பரணி நூல் என அழைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கின்றனர். பரணியின் நோக்கம் கொற்றவையைப் போற்றுதல் என்றும் அரசனின் வெற்றியைப் போற்றுதல் என்றும் சொல்லப்படுகிறது.

கடவுள் வாழ்த்து, தேவியைப் பாடியது, காளிக்குக் கூளி கூறியது என கலிங்கத்துப் பரணி 13 படலங்களைக் கொண்டுள்ளது. இதில் 599 தாழிசைப் பாடல்கள் உள்ளன. படலங்களின் பெயர் களில் கோயில் பாடியது, தேவியைப் பாடியது, இந்திர சாலம், காளிக்குக் கூளி கூறியது ஆகிய நான்கும் காளியோடு தொடர்புடையவை. இராச பாரம்பரியம். அவதாரம் ஆகியவை சோழன் குலோத்துங்கனோடு தொடர்புடையவை.
இவ்வாறு கொற்றவை பொருட்டுப் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப் பெறும் விழாவில் மகளிர் கூழும் துணங்கையும் கொடுத்து காடு கெழு செல்வியை வழிபடும் வழக்கம் பண்டையது என்பதை முன்னர்க் குறிப்பிட்டோம். அவ்விழாவின்பொழுது துணங்கை, குரவை முதலிய கூத்துக்களையும், அம்மான பந்து ஊசல் முதலிய ஆட்டங்களையும் மேற்கொண்டு தம் அரசனைப் பாட்டுடைத் தலைவனுக்கி அவன் வெற்றித்திறன்களைக் கொண்டாடுவர்; வெற்றிக்குரிய அரசனையும் அவனது நாட்டையும் வாழ்த்துவர். பண்டையில் இவ்வழக்கம் உண்டென்பதை குறுந்தொகை, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களாலும் அறியலாம். காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள மறக்குடிப் பெண்டிர் நாளங்காடி பூதத்திற்குப் பூவும் பொங்கலும் சொரிந்து குரவை யாடி அரசன வாழ்த்துவதை,
 காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை 
  புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் 
 பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து

மலையும் காடும் மிகுதியாக இருந்த சேர நாட்டினர் இத்தெய்வத்தை மிகுதியாக வணங்கினர் என்ற குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. சேர நாட்டில் இருக்கும் அயிரை மலை என்றொரு மலை குறிக்கப்பட்டு அந்த அயிரை மலையில் வாழும் கொற்றவையைப் போற்றும் பாடல்கள் இருக்கின்றன. அந்த அயிரை மலைக் காவலனாக சேரர்கள் குறிக்கப்படுகின்றனர். 


புறப்பொருள் வெண்பாமாலையில் கொற்றவையின் தோற்றம்.:
இவள் சிங்கக் கொடியும், பசுங்கிளியும் ஏந்தியவள். கலைமானை ஊர்தியாக உடையவள். பேய்களைப் படையாகப் பெற்றவள். ஒளியோடு வெற்றிமிக்க சூலப்படையை உயர்த்தியவள். நோலை(எள்ளுருண்டை) ,பொரி,அவரை,மொச்சை இவற்றின் புழுக்கல்(சுண்டல்), பிண்டி(அவல்), நிணம், குருதி, குடர்,நெய்த்தோர் என்பவற்றால் நிறைந்த மண்டையை வலக்கையில் ஏந்தியவள். மறவன் ஒருவன் ஆகோள் கருதுவானாயின் அவனுக்கு அறுளவும், பகைவர் தமது பகை நீங்கவும் முற்பட்டு வருவாள். அரசனொருவன் படையெடுக்கும்போது அவனது பகைவர் கெடுமாறும் முற்பட்டு வருவாள்.
புறப்பொருள் வெண்பாமாலை. துறை-கொற்றவை நிலை.
சிலப்பதிகாரம் 12:22-32
சிறீ சந்திரன், ஜெ., 2001. பக் 221
சிலப்பதிகாரம் 12:33-45

.

பதுக்கைகளையும் நெடுங்கற்களையும் ஆராய்ந்த ராஜன் (2004) இந்நினைவுச் சின்னங்களின் பெரும்பகுதி வெட்சிப் போரில் ஆநிரை கவர்ந்து / மீட்டு (தொறுமீட்டு) மாண்ட மறவர்க்கு நடப்பட்ட நிலையைச் சங்க இலக்கியச் சான்றுகள் வழியே விரிவாக ஆராய்ந்துள்ளார். இதன்வழிச் சங்ககாலத்திற்கும் முன்பு சுமார் ஆயிரம் ஆண்டுகள் காலப் பரப்பில் வாழ்ந்த பெருங்கற்படைப்பண்பாட்டு மக்களின் வாழ்வியலின் ஒரு பகுதி வெட்சித் திணையாக உருவெடுத்துள்ள நிலையை உணர முடிகின்றது. இப்பண்பாட்டுக் காலத்தில் கொற்றவை வழிபாடு வெகு சிறப்புடன் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை எளிதாக உய்த்துணர முடியும்.

மேலே தரப்பட்ட கொற்றவையின் தோற்றம் தமிழர் மரபுவழிக் கொற்றவையின் தோற்றத்தை வெளிப்படுத்திய அதே வேளை, ஆரியச் செல்வாக்குக்கு உட்பட்ட கொற்றவையின் தோற்ற அம்சங்களையும் சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது. இதன்படி கொற்றவை, தலையில் பிறையாகிய வெண்ணிற இதழைச் சூடியவள், நெற்றிக்கண் உடையவள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப்போல் ஒளிவீசும் புன்னகையை உடையவள், நஞ்சை உண்டதனால் கருநிறமான கழுத்தை உடையவள், நச்சுப் பாம்புகளை மார்புக் கச்சாக அணிந்தவள், கையில் வளையல்களை அணிந்திருப்பவள், சூலத்தை ஏந்தியிருப்பவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலில் சிலம்பும் வலக்காலில் கழலும் அணிந்தவள், வெற்றியைத் தருகின்ற வாளையுடையவள், மகிடாசுரனைக் கொன்று அவன் தலைமேல் நிற்பவள், கரு நிறத்தவள், கலைமானை ஊர்தியாக உடையவள் என்று கொற்றவையின் கோலம் கூறப்படுகின்றது[12]. இவற்றில் ஆரியப் புராணக் கதைகளின் தாக்கம் தெளிவாகத் தெரிவதுடன் கொற்றவை துர்க்கையாக மாற்றம் பெறும் நிலைமையையும் காண முடிகிறது. அது மட்டுமன்றி சிவனுக்குரிய தோற்ற இயல்புகளில் பலவும் கொற்றவைமீது ஏற்றிக் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொற்றவை வழிபாடு

பாவை, கிளி, காட்டுக்கோழி, மயில், பந்து, கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்து மான் மீது கொற்றவையை உலாவரச் செய்து, பின்னால் வண்ணக் குழம்பு, சுண்ணப் பொடி, மணமுள்ள சந்தனம், அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோறு, புகை முதலியவற்றைத் தாங்கியபடி பெண்கள் வருவர். வழிப்பறியின் போது கொட்டும் பறை; சூறையாடும்போது ஊதப்படும் சின்னம், கொம்பு, புல்லாங்குழல் என்பவை முன்னால் இசைத்துக்கொண்டு வருவர்[13].

கொற்றவையும் சமசுக்கிருதவயமாக்கமும்

கொற்றவை
தொடக்கத்தில் மறவர் தமது தொழிலுக்கு வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகவே கொற்றவையைக் கருதி வழிபட்டனர். பழந்தமிழ்க் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டாள். கலித்தொகை முருகனைச் சிவனின் மகனாகக் காட்டுகின்ற போதிலும், சிவனுக்கும், கொற்றவைக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிச் சிலப்பதிகாரத்துக்கு முந்திய நூல்கள் எதிலும் பேசப்படவில்லை. கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற சங்ககாலத்துக்குப் பிற்பட்ட நூல்கள் சிவனின் துணைவியாக உமையை முதன்மையாகப் பேசுகின்றன. எனினும் இம்மூன்று நூல்களும் கொற்றவை பற்றியும் பேசத் தவறவில்லை. திருமுருகாற்றுப்படை முருகனை "மலைமகள் மகன்" என்று உமையின் மகனாகக் காட்டுவதையும் காணலாம். இவ்வாறு பல்வேறு கருத்துக்களும் கலந்து காணப்படுவது அக்காலத்தில் சமசுக்கிருதவயமாக்கத்தின் தொடக்க நிலையைக் காட்டுவதாகக் கொள்ளலாம். சிலப்பதிகாரமும் உமை, கொற்றவை இரண்டு பெண்தெய்வ வடிவங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. இதில் கொற்றவையே முதன்மை பெறுகின்றது எனினும், முன்னரே குறிப்பிட்டபடி கொற்றவையில் சமசுக்கிருதவயமாக்கத்தின் தாக்கம் புலப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கொற்றவை திருமாலின் தங்கையாகக் காட்டப்பட்டதுடன் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் முதலியவற்றையும் கொற்றவை தாங்கியிருப்பதாகக் காட்டப்பட்டது.
சிலப்பதிகாரம் 12:22-32
சிறீ சந்திரன், ஜெ., 2001. பக் 221
சிலப்பதிகாரம் 12:33-45காலப்போக்கில், உமையின் முக்கியத்துவம் அதிகரித்ததுடன், கொற்றவை உமையின் இன்னொரு அம்சம் எனப்பட்ட துர்க்கையுடன் ஒன்றிணைக்கப்பட்ட நிலை காணப்படுகிறது. சிலப்பதிகாரத்திலேயே இதற்கான அடிப்படைகளைக் காணலாம்.

கொற்றவை வழிபாடு மறவர்களுக்கு அவசியமாகும்.

ஆங்கிலேயர் காலத்தில் ஆயுத ஒழிப்புக்கு பின் மறவர்களின் மறத்தன்மை அழிந்து போணதானது. இதை முன்னவே சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் நம்மை எச்சரித்துள்ளார் சிலப்பதிகாரத்தில்,

சிலப்பதிகாரம் 12:11-20

மறவர் குடியிலே பிறந்த சாலினி தெய்வம் ஏறிய நிலையில் கூறுவதாகக் கொற்றவைக்குப் பலி கொடா விட்டால் ஏற்படக்கூடிய நிலையையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. மறவரின் மன்றங்கள் பாழ்படும்
, போர் வாய்ப்பு இல்லாமல் மறவர் சினம் குறைந்து செருக்கு அடங்குவர், கொற்றவை மறவரின் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள் என்று மறவரின் தொழிலும், இயல்பும் வாழ்வும் பாழ்படும் நிலை கூறப்படுகின்றது

எனவே மறவர்கள் அனைவரும் கொற்றவை வழிபாட்டை பின்பற்றி வர வேண்டும்.

Sunday, January 27, 2013

மறப்படை


மறப்படை


ஆதிகாலம் முதல் முடியாட்சி முடிவுக்கு வரும்வரை மானம் காத்த மறவர்களையும் பிறந்த மண்ணைக்காக்க தங்கள் உதிரத்தை ஆறாக போர்க்களங்களில் ஓடவிட்ட மறக்குல மக்களையும் அவர்கள் போர்க்களங்களில் வீரமரணம் அடைந்தவுடன் அவர்களின் மனைவிகள் உடன்கட்டைஏறி உயிர்துறந்து இந்த தமிழ்மண் கற்பென்னும் கனலோடு பிறந்தது என்பதை உலகுக்கே உணர்த்தி தமிழ் இனத்திற்கும் தமிழ் மண்ணுக்கும் மதிப்புமரியாதையை ஏற்படுத்திக்கொடுத்த கற்புக்கரசிகள் பிறந்த மறக்குலத்தையே அவமதிக்கும் விதத்தில் வீனர்கள் சிலர் வீண்வதந்திகளைப்பரவவிட்டு அவர்களின் மானம் மரியாதைக்கு பங்கம் விளையும் விதத்தில் சிலம்பு போன்றவர்கள் தவறாக பின்னோட்டம் எழுதுவதை கடுமையாக இதன்மூலம் சாடுகிறேன் , அந்த அன்பருக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும். அவருக்குமட்டுமல்ல அவரைப்போன்றவர்களும் ஒரு கேள்வியை என்முன் வைப்பார்கள். அந்த கேள்வி இதுதான். “முக்குலத்து மக்கள் மட்டும்தான் போர்க்களம் சென்று போரிட்டு உயிர்த்தியாகம் செய்தார்களா? மற்ற இனத்தவர்கள் போர்க்களம் செல்லவில்லையா?” உங்கள் கேள்வி நியாயமானதுதான். மன்னர்களின் ஆட்சியிலும் முற்காலத்திலும், அரசனின் படைகள் இரண்டு வகை. ஒன்று, மூலப்படை. மற்றொன்று தற்காலிகப்படை. போர்க்காலங்களில் மட்டும் திரட்டப்படும் படை தற்காலிகப்படை. போர்முடிந்தவுடன் அத்தற்காலிகப்படைகள் கலைக்கப்பட்டுவிடும். தற்காலிகப்படைகளுக்கும் போர்பயிற்சி அளித்து போர்க்களம் புகும்படி செய்கின்ற படை மூலப்படை. மூலப்படை ஒன்றுதான் தலைமுறை தலைமுறையாக களவர் என்னும் குடும்பத்திலிருந்து பாட்டன், பூட்டன், முப்பாட்டன், எள்ளுப்பாட்டன், கொள்ளுப்பாட்டன் காலத்திலிருந்தும் அதற்கும் முற்பட்ட அவனுடைய மூதாதையர்கள் காலத்திலிருந்தும், ஆண்களாய் பிறந்த களவர்குல மக்கள் அனைவரும் உலகம் தோன்றிய காலம் முதல் போர்த்தொழிலை குலத்தொழிலாகக் கொண்டவர்கள். மற்ற இனத்தவர்கள் அவ்வாறில்லை. அவர்களின் குலத்தொழில் வேறு. தலைமுறை தலைமுறையாக போர்க்களத்தொழில் அவர்களுடையது அல்ல. மற்ற இனத்திலிருந்து போருக்கு தந்தை சென்றிருந்தால், மகன் சென்றிருக்கமாட்டான். செல்லவேண்டிய கட்டாயமும் இல்லை. விருப்பப்பட்டால் மட்டுமே சென்றிருப்பான். அவர்கள் போருக்குச்சென்றால் அதற்கான ஊதியம் பெற்றிருப்பான். ஆனால், முக்குலத்துமக்கள் ஊதியத்தை கருதாது அரசனின் வெற்றி, பிறந்தமண்ணின் மானம் ஒன்றையே கருத்தில்கொண்டு உயிரைப்பற்றி கவலைப்படாமல் சென்றனர். இது அவர்களின் கட்டாய தொழில். மறக்குலப்பெண்களும் தன்குலஆண்களை கட்டாயமாக போர்க்களம் அனுப்பிவைத்ததை தொல்காப்பியரும்(புறத்.சூத்.4) இளம்பூரணாரும்,புறநானாறும்(279) சான்று கூறுகின்றன., இதைப்பற்றி மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் எழுதியுள்ளதை இங்கு குறிப்பிடுகிறேன். ” மூலப்படையை வள்ளுவர் தொல்படை என்பர். வாழையடி வாழையாக இருந்து வருவதும், எவ்வகை ஊற்றையும் பொருட்படுத்தாததும், இறப்பிற்கு அஞ்சாததும், போரையே விரும்புவதும், அரசனைக் காக்க என்றும் உயிருவந்தீவதும், எக்காரணத்தையிட்டும் அறைபோகாததும், வென்றே மீள்வதும் தொல்படைத் திறங்களாம்.”(ஊற்று-ஊதியம் அல்லது பிரதிபயன். அறைபோகாதது-சோரம்போகாதது அல்லது விலைபோகாதது)(ஆதாரம்: பழந்தமிழாட்சி என்ற நூலில் பக்கம்.47) (இதனைப்பற்றிய விரிவான விவரங்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் எழுதுவேன். இக்கட்டுரையில் இதுபோதும் என விரிவஞ்சி விடுக்கிறேன்.) இதுபோன்ற நல்லசெய்திகளையெல்லாம், சிலம்பு போன்றவர்களும் பெரும் பதவி வகித்தவர்களும் திட்டமிட்டு மறைத்தே வந்தனர். இன்றும் இருட்டடிப்பு செய்து வருகின்றனர். இதனை எதிர்த்து முக்குலத்து இளைஞர்கள் தங்கள் குலப்பெருமை. காக்க மறைத்துவைக்கப்பட்டுள்ள அருமை பெருமைகளை மீட்டுவர முயற்சி செய்யவேண்டும். தமிழ் இலக்கியங்கள் கூறும் புறப்பொருள் நம் குலத்திற்குரியது என்பதை மனதில் கொள்ளவேண்டும். பழம்பெருமை எதற்கு என்று நீங்கள் நினைக்க்க்கூடாது. பழம்பெருமையைமீட்டு நாம் முன்னோர்களைப்போல் புகழ்பட வாழவேண்டும். பிறந்த மண்ணின்மீதும், தாய்த்திருநாட்டின்மீதும், தன் உடல்,பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் நம்முன்னோர்கள். அதனால்தான், அவர்களைப்பற்றி கல்வெட்டுக்கள் பேசுகின்றன. செப்புப்பட்டயங்கள் சான்று கூறுகின்றன. இலக்கியங்கள் புகழ்மாலை சூட்டுகின்றன. கம்பநாட்டாள்வார், சேக்கிழார் பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார், நம்பியாண்டார் நம்பி அடிகள்,ஒட்டக்கூத்தர் போன்ற புகழ்ப்பெற்ற புலவர் பெருமக்கள் வாயார நம் குலப்பெருமையை பாடியுள்ளனர்.. இதை அறியாத அறிவிலிகள் மட்டுமே நம்மை திருடர் என்று தவறாக பொருள்கூறுகின்றனர். நம் முன்னோர்களின் மரபணுவும் குருதி ஓட்டமும் நம் உடலில் ஓடுகின்றன. நாம் மட்டும் அவர்களின் புகழுக்கும் பெருமைக்கும் மாறுபட்டவர்களா? அல்லது விதிவிலக்கா?. நாமும் அவர்களின் அடிச்சுவட்டை பிறழாது பின்பற்றவேண்டும். இது மறவர் பூமி என்றால், பகைவனும் இடியோசைகேட்ட நாகம்போல், நடுங்கி ஒடுங்கி ஓடிவிடுவான். நாட்டை நாசப்படுத்தும் நாசகார சக்திகள் சூரியனைக்கண்ட பனிபோல் விலகிஓடிவிடும்,. வாழ்வதும், வீழ்வதும் தாய்மண்ணுக்காக என்பதே நம் முன்னோர்களின் தாரக மந்திரம். அதுவே நம்முடைய வழி.! பிறந்த மண்ணையும் பெற்றதாயையும் காப்பது நம் கடமை!! (தொடரும்,,,PART IV)

Saturday, January 26, 2013

கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். 
பூர்வீகம்:
இவர் தமிழ் மூவேந்தர் காலத்தில் தோன்றிய மன்னர் வம்சமாகும். இவர்கள் மூதாதையர்கள் பல்லவ நாட்டில் இருந்தவர்கள். என்று கூறுகின்றனர். இவர்கள் பண்டாற மறவர் என்ற "வணங்காமுடி பண்டார மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள்.
பின்பு அங்கு இருந்து பெயர்ந்து சோழ நாட்டை அடைந்தனர். பின்பு சோழனிடம் தளபதிகளை வேலை செய்தனர். ஆதாவதுவந்தியதேவர்-குந்தவை நாச்சியாரின் வாரிசுகள் என்று தம்மை கூறி கொள்வதாக கொல்லம்கொண்டான் வம்சாவளி நமக்கு கூறுகிறது. வந்தியதேவர்கள் என்ற வார்த்தையே "வாண்டாயாத்தேவர்கள்" என மறுவியதாக கூறுகின்றனர்.
இவர்கள் சோழர்களுடன் ஆதரவாக பாண்டியரை வென்று பின்பு சேரநாட்டில் உள்ள கொல்லத்தை வென்று சோழர்கள் இவர்களை இப்பகுதிக்கு குறுநிலை மன்னராக முடிசூட்டி சோழ நாட்டிற்கு சென்று விடுகின்றன்ர்.கொல்லம் கொண்டான் தோன்றிய ஆண்டு 11-ஆம் நூற்றாண்டு என கால்டுவெல்லும் கூறுகிறார்.சோழ ஆளுகை இப்பகதியில் இருந்தததற்கு "சோழபுரம்" என்ற ஊர் அருகில் உள்ளது. இதன் பின்பு பாண்டிய மன்னர்கலுக்கு உட்பட்ட குறுநில மன்னர்களாக இருந்தனர்.


நாயக்கர் ஆட்சி காலத்தில் கொல்லம் கொண்டான் ஜமீன் 72 பாளையங்களில் ஒன்றாக மாற்றபட்டது.அப்போது திருமலை நாயக்கர் இப்பகுதியிலிருந்து மீன் உனவு செல்லுமாம்.ஒரு தடவை இம்மன்னன் அந்த உனவை தன் எல்லை தாண்டி செல்ல அனுமதிக்கமல் தடை செய்தாராம். இதனால் வெகுண்ட திருமலை நாயக்கர் இப்பாளயத்தின் மீது படை நடத்தி அழித்தாராம். பின்பு வருந்திய திருமலை நாயக்கர் இந்த அரன்மனையை கட்டி கொடுத்தாரம். அதிலிருந்து திருமலை என்ற பட்டமும் வழங்கினாராம். இதன் பின்பு இம்மன்னர்களுக்கு திருமலை வாண்டாயாத்தேவர் என்ற பெயர் உருவாகிஉள்ளது.(எ-டு)லிங்க திருமலை வாண்டாயதேவர்,சங்கர பாண்டிய திருமலை வாண்டாயதேவர், அரிகர திருமலை வாண்டாயதேவர் என பலர் வாழ்ந்துள்ளனர். முதற்போர்
இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அந்த படையை மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர்.

 முரட்டுத்தனமான போர்

1766ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை வாண்டாயத் தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முரட்டுத்தனமான போர் என்று கூறுகின்றனர். பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப்படுகிறது. பரங்கிப்படை வாண்டாயத்தேவனின் தாக்குதல் முறையை கணிப்பதற்கு முன்பே பரங்கிப்படையில் பாதியை வாண்டாயத்தேவன் அழித்துவிட்டான். மேலும் அதில் ஐந்து முக்கிய பரங்கித்தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால் வலிமையிழந்த பரங்கிப்படை பின் வாங்கியது.

இரண்டாம் போர்

1767ல் மீண்டும் பரங்கிப்படை கொல்லங்கொண்டான் கோட்டையை கர்னல் டொனால்ட் கேம்பல் கீழ் பீரங்கிப்படையுடன் தாக்கியது. இம்முறை பரங்கிப்படை நெல்லை தவிர்த்து சென்னையிலிருந்தும் வந்ததால் கொல்லங்கொண்டான் கோட்டை தகர்க்கப்பட்டது. அப்போது வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். போர் நடைபெறும் போது ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம் அல்லது வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரலாம். எனவே, தன் குல வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும் தன் மனைவியை, அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று வாண்டாயத் தேவன் நினைத்தார். அதனால் தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் துணையுடன் தன் மனைவியை, ரகசிய வழி ஒன்றின் மூலம் அரண்மனையை விட்டு வெளியேறச் செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அடுத்த நாள் காலையில் போர் உக்கிரமாக நடந்ததால் வாண்டாயத்தேவன் வீர மரணம் அடைந்தார்.

 மகன்

இரவோடு, இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத் தேவனின் மனைவி, தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஊரில் போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார். எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும், அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன் மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். தாயையும் சேயையும், அவ்வூர் மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து வந்தார்கள்.அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட நாச்சியார், காலம் செய்த கோலத்தால் வெள்ளையரின் படை எடுப்பால் பஞ்சைப் பதாரி போல், ஏழை, எளிய மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால், பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் பஞ்சம் பட்டி என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த தகவலாளர் ஒருவர் கூறினார்.

வலைவீச்சு

இவரது மகனுக்கும் வாண்டாயத் தேவன் என்றே பெயரிடப்பட்டது. இவர் சிறிய வயதிலேயே அக்கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலியை அடக்கினார். அந்த புகழினால் இவர் வாண்டாயத்தேவனின் மகன் என ஊர் மக்கள் கண்டு கொண்டனர். அந்த செய்தி பரங்கியருக்கும் எட்டி விட்டதால், பரங்கியர் தங்களைத் தாக்கக் கூடும் என்றறிந்த வாண்டாயத் தேவன் குடும்பமும் அந்த கிராம மக்களும் பஞ்சம்பட்டி கிராமத்தை காலி செய்து விட்டு வேறொரு ஊருக்கு சென்று விட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

 நடன மங்கையர்

கொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவனின் கோட்டைக்கு அருகில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாட்டியமாட மயிலாள், குயிலாள் என்ற இரண்டு தேவதாசிப் பெண்களை நியமித்திருந்தார் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களுடன் போர் தொடங்கிய காலத்தில், வெள்ளையர்களின் படை பலத்தை அறிந்து கொள்வதற்காகவும், உளவுபார்த்து வரவும் இவ்விரு நடன மங்கையர்களை வாண்டாயத் தேவன் அக்கம்பக்கத்துப் பாளையங்களுக்கும் அனுப்பி வைத்தார். இப்படி, கலைப்பணியையும், அரசியல் பணியையும் ஒருசேரச் செய்த சகோதரிகளுக்கு, இருகுளத்துப்பரவுகளை (குளத்துநீர் பாயும் வயல்களை) தானமாகக் கொடுத்துள்ளார்.
வாண்டாயத் தேவர் கொடுத்த அக்குளங்கள் இன்றும் குயிலாள் குளம்மயிலாள் குளம் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன.

முடிவுரை:
KollamkondanLocation of Kollamkondan in Tamil NaduKollamkondan (Tamil: கொல்லன் கொண்டான்) was a territory (Zamin) in the former Tirunelveli province of Madurai Nayak Dynasty ruled by Polygar. Post Independence of India it split into as 2 villages Ayan Kollan Kondan and Zamin Kollan Kondan and come under Virudhunagar District in the southern Indian State of TamilNadu in India.[1] Contents [hide] 1 Palayam Location 2 Polygar 3 Decline and Merger with Sethur Zamin 4 Post abolition of Zamindari 5 References [edit] Palayam Location This Maravar palayam was located near Rajapalayam, at the foot of the Western Ghats, in the former Tirunelveli province of the Nayak dynasty of Madura.[2] [edit] Polygar Polygar Vanda Thevar belonged to the Pandara subcaste of the Maravar. The polygar family was granted the lands by Raja Parakrama Pandya of Pandya Dynasty before the establishment of the Madurai state by Visvanatha Nayaka in the 16th century.[3] It joined Puli Thevar’s coalition in 1754-1762. The polygar of Kollamkondan led a new insurrection in 1764, following Yusuf Khan’s execution for having betrayed the Nawab. Victories over the Anglo-Nawabi forces helped the revolt spread to other polygars. [3] See also: Polygar [edit] Decline and Merger with Sethur Zamin After 1766, General Donald Campbell began a systematic campaign, taking the forts of the major confederates one by one. In 1802, the polygar of Kollamkondan, held only four villagesIn 1879, the zamindari had an area of 1.35 sq. m., and a population of 9,021. Later in 19th century it was included in the zamindari of Sethur. [3] [edit] Post abolition of Zamindari Kollamkondan post independence comprises 2 villages . Both are revenue villages under the Rajapalayam Taluk[1] Zamin Kollan kondan Ayan Kollan kondan - Notable person post independence - Dr.N.Rasaiah - Tamilwriter 

இதன் பின்பு 18-ஆம் நூற்றன் இறுதியில் சேத்தூர் ஜமீனுடன் இனைக்க பட்டது கொல்லம்கொண்டான்.
இந்த வரலாற்றை தற்போதய ஜமீன் வாரிசானலிங்க திருமலை வாண்டாயதேவர்,இராமநாதன் கூற நாம் வழங்கியுள்ளோம்.

 மூலம்


-முத்தாலங்குறிச்சி காமராசு

ஜமீன் கோயில்கள்
 

கொல்லங் கொண்டான், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்திருந்த ஜமீன்.  இயற்கை வனப்புடன், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிற்றூர். தற்போதும் காணப்படும் பிரமாண்டமான அரண்மனை, சிறந்து விளங்கிய ஜமீனுக்குச் சான்றாக நிற்கிறது. மேற்குகடற்கரைப் பகுதியில் பிரசித்திபெற்ற நகரம் கொல்லம். இவ்விடத்தினை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவன் கேரள சிற்றரசன் மாறவர்மன். இவன் போர்புரிந்து பல பகுதிகளில் தன் ஆட்சியை விஸ்தரித்தான். 

இவனால் பாதிக்கப்பட்டவர்கள், ராஜபாளையத்தின் அடுத்தப் பகுதியை ஆண்ட வாண்டையத்தேவன் என்ற சிற்றரசனிடம் வந்து முறையிட்டார்கள். வாண்ைடயத்தேவன் பெரும்  படை திரட்டி கொல்லத்துக்கு சென்று போரிட்டு வென்றான்; இதனால் ‘கொல்லங்கொண்டான்’ என்றழைக்கப்பட்டான். கொல்லத்து அரசனிடமிருந்து மீட்ட நிலங்களை, அந்தந்த சிற்றரசர்களிடமே ஒப்படைத்தான்.

நாயக்கர் மன்னர் காலத்தில் பாளையக்காரர்களாக இருந்த கொல்லங்கொண்டான் ஜமீன்தாராக விளங்கிய வாண்டையத்தேவன் திருமலை நாயக்கருக்கு எதிராகப் போரிடவேண்டிய சூழல் வந்தது. தனக்குப் பாளையக்காரராக பணிபுரிந்துகொண்டு தன்னையே எதிர்ப்பதைக் கண்டு கொதித்த திருமலை நாயக்கர் தேவனின் அரண்மனையை இடித்து நாசமாக்கினார். அப்போது வாண்டையத்தேவன் வீரமாகப் போராடினார். அவருடைய வீரத்தை மெச்சிய நாயக்கர், பாளையத்தை அவரிடமே ஒப்படைத்து விட்டுத் திரும்பினார். 

அதன்பின் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நல்லெண்ணத்தின் விளைவாக தங்களுடைய வாரிசுகளின் பெயருக்குப் பின்னால் திருமலை என்ற பெயரையும் சூட்டினார் வாண்டையத்தேவன். சங்கரபாண்டி திருமலை வாண்டையத் தேவர், பொன்னையா திருமலை வாண்டையத் தேவர், ஹரிஹரபுத்ர திருமலை வாண்ைடயத் தேவர் என்ற அவரது வாரிசுகளின் பெயர்கள் சில உதாரணங்கள்.

திருமலைநாயக்கரால் தரைமட்டமான அரண்மனையை அப்படியே  விட்டுவிட்டு புதிதாக அரண்மனை கட்ட ஆரம்பித்தனர். அதற்கான வேலையில் இறங்கியபோதெல்லாம் பிரச்னை ஏற்பட்டது. சங்கரபாண்டிய திருமலை வாண்டையத் தேவர், தனது அரண்மனை ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டார். ‘முதலில் ஒரு பிள்ளையார் கோயிலை கட்டி வணங்குங்கள்; அதன்பிறகு அரண்மனை வேலை தானாகவே நடைபெறும்’ என்றார் அவர். அதன்படி கோயிலைக் கட்டி, ‘ஆதி விநாயகர்’ என்று பெயரிட்டனர். 

அந்த விநாயகர் கோயில் தற்போதும் அரண்மனை முகப்பில் காணப்படுகிறார். ஆதி விநாயகர் கோயில் கட்டி முடித்தவுடன் அரண்மனை வேலை தங்கு தடையின்றி நடந்தது. அரண்மனை முன்பு பிரமாண்டமான நுழைவாயில்  கட்டப்பட்டது.  தற்போதைய ஜமீன்தார் வாரிசு லிங்க சுந்தரராஜ் தினமும் பிள்ளையாருக்கு பூஜை செய்தபின்பே தினசரிப் பணிகளை மேற்கொள்கிறார். அரண்மனை மட்டுமல்ல, ஊரில் திருமணம் முதலான எந்த சுபவிசேஷம் என்றாலும் இவருக்குதான் முதல் அழைப்பு! 

இவர்களது குலதெய்வம் ராஜபாளையம் நீர் காத்த அய்யனார். ராஜபாளையத்துக்கே குடிதண்ணீர் தரும் நீர்தேக்கத்தினை காத்தருளும் தெய்வமாக, நீர் காத்த அய்யனார் அருளாட்சி புரிகிறார்.  ராஜபாளையம் பஸ் நிலையத்தில் இறங்கி, அய்யனார் கோயில் என்று கேட்டால் யாரும் வழிகாட்டுவர். பங்குனி உத்திரம், சித்திரை விஷு இங்கு சிறப்பாக நடைபெறும். பல்லாயிரம் பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். புதன்கிழமையும், சனிக்கிழமையும் இவருக்கு உகந்த நாட்களாதலால், அந்நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

இந்த ஆலயத்தில் கொல்லங்கொண்டான் ஜமீன்தாரின் முன்னோர்களான பெரியபூமி ஆண்டவர், சின்னபூமி ஆண்டவர் ஆகியோருக்கு தனிச் சந்நதி காணப்படுகிறது. சிலசமயம் அய்யனார் ஆற்றில் திடீரென்று வெள்ளம் வந்துவிடும். நடுக்காட்டில் உள்ள இந்த அய்யனார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றை தாண்டுவது கடினம். அவர்களுக்குரிய பாதுகாப்பு கொடுத்து காத்தனர் இவ்விருவரும். 

ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவரையுமே வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. ஆனாலும் அவர்கள் தெய்வமாக நிலைபெற்று மக்களைக் காத்துவருகிறார்கள் என்பது ஐதீகம். ஜமீன் வாரிசுகள் இந்தத் தம் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்து தொழுது வருகிறார்கள். தம் குடும்பத்து காது குத்துதல் உள்பட பல விழாக்களை அவர்கள் இங்குதான் நடத்துகிறார்கள். 

சித்திரை விஷு திருவிழாவில் இந்த வாரிசுகள், வித்தியாசமான பானம் தயாரித்து, அய்யனாருக்குப் படைத்துவிட்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவார்கள்.  புளி, கருப்பட்டி கலந்த இந்த பானத்துக்கு ‘பானக்காரம்’ என்று பெயர். திருவிழாவின்போது அய்யனாரை வணங்க வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஜமீனுக்குச் சொந்தமான தோட்டத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

50 வருடங்களுக்கு முன்புவரை நீர்காத்த அய்யனாரை தினமும் ராஜபாளையம் சென்று வணங்குவதை வழக்கமாக  வைத்திருந்திருந்தனர் ஜமீன்தார்கள். நாளாவட்டத்தில் அவ்வாறு செய்ய இயலாததால், ஹரிஹரி வாண்டையத் தேவர் காலத்தில் அய்யனார் கோயில் பிடிமண் எடுத்துவந்து கொல்லங்கொண்டான் அரண்மனைக்கு அருகில் பிரதிஷ்டை செய்து அய்யனாருக்கு கோயில் கட்டினார். தினமும் அய்யனாருக்கு பூஜை நடைபெற ஏற்பாடு செய்தார். தான் பணிக்குச் செல்லும்போதெல்லாம் அய்யனாரை வணங்கிவிட்டே சென்றார். 

தற்போதும்கூட அவரது வாரிசுகள் அய்யனார் கோயிலை மிகச்சிறப்பாகப் பராமரித்து வருகிறார்கள். ஒருசமயம் கான்சாகிப்புக்கும் பூலித்தேவன் தலைமையான மறவர் பாளையத்துக்கும் சண்டை ஏற்பட்டது. அதில் வடக்கு அரணாக இருந்து பூலித்தேவனை பாதுகாத்தது கொல்லங்கொண்டான் ஜமீன்தார்தான். முதல் சண்டையில் கான்சாகிபை புறமுதுகிட்டு ஓடும்படி விரட்டினார்  ஜமீன்தார்.  இரண்டாவது சண்டையில் ஜமீன்தார் இறந்து விட்டார். அவரது இளம் கர்ப்பிணி மனைவி தப்பி ஓடினார். 

அவரையும் அவரது வயிற்றில் வளரும் வாரிசையும் அழித்துவிடும் நோக்கத்தில் கான்சாகிப் படை விரட்டியது. ராணி பஞ்சம்பட்டி என்னும் கிராமத்திற்கு வந்தார். அங்கு ஒரு வீட்டு மாட்டு தொழுவத்தில் மறைந்து கொண்டார். அந்த ஊர் மக்கள் அவரைக் காவல் காத்தனர். பல இடங்களில் ராணியைத் தேடிய கான்சாகிப் வீரர்கள் பஞ்சம்பட்டிக்கும் வந்து மக்களை மிரட்டினர். ஆனால், அவர்கள் ராணியைக் காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்தனர். காலங்கள் கடந்தன. 

ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி பெரியவனாக்கி அவனுக்கு போர்ப் பயிற்சி கொடுத்து போர்படை தளபதியாக்கினர். பின் அவர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு மீண்டும் கொல்லங்கொண்டான் அரண்மனையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கொல்லங்கொண்டான் ஜமீன்தாரின் சிறப்பைக் கருதி, அவருக்கு ஒரு சிறப்பான மண்டகப்படி சேத்தூர் ஜமீன்தார் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஆலயத்தில் வழங்கப்படுகிறது. 

தேவதானம் அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் சேத்தூர் ஜமீன்தார்தான் இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர். இங்கு வைகாசி விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். 5வது நாள் திருவிழாவில் கொல்லங்கொண்டான் ஜமீன்தாருக்கு இரவு மண்டகப்படி வழங்கப்படுகிறது. இதை வருடந்தோறும், அழைப்பிதழிலேயே தெரிவித்து கொல்லங்கொண்டான் ஜமீன்தாரை பெருமைபடுத்துகிறார்கள். 

அன்றைய தினம் பகலில் சுவாமி-அம்பாள் ஒருசேர வெள்ளி ரிஷப வாகனத்திலும், இரவு இந்திர வாகனத்திலும் காட்சி தருவார்கள். தற்போது வாரிசுகள் லிங்க சுந்தர்ராஜ் மற்றும் அவரது சகோதர்கள் இந்த மண்டகப்படியில் கலந்துகொண்டு மரியாதை பெறுகிறார்கள். ஒருகாலத்தில் மனநோயாளிகளை குணமாக்கும் இயற்கை இலவச மருத்துவமனையை அரண்மனை வளாகத்திலேயே நடத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல், ராஜபாளையம் சேர்மனாக இருந்த ஜமீன்தார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறார். இதற்காக இவ்வூரை சேர்ந்த பெரிய தனக்காரரிடம் இடத்தினையும் இலவசமாக பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
 • குங்குமம் வார இதழ் கட்டுரை[1]
 1.  இரா. மணிகண்டன் (மார்ச் 2011). “வீரப்புலி வாண்டாயத் தேவன்”. குங்குமம் (8): 124 – 129.

சிவகங்கைச் சிங்கம் முத்துவடுகநாதர்


முத்து வடுகநாதர் (? - 25 சூன், 1772) என்பவர் சிவகங்கை பாளையத்தை ஆண்ட மன்னர் ஆவார். 1749ல் இவரின் தந்தையான சசிவர்ணத்தேவர் இறந்தவுடன் இவர் சிவகங்கைச் சீமையின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். வெள்ளையரை எதிர்த்து விடுதலைக்குரல் கொடுத்த பாளையக்காரர்கள் வரிசையில் இவர் குறிப்பிடத்தக்கவர்.

பொருளடக்கம்

[தொகு] மதுரை மீட்பு

1752ல் மதுரையை ஆண்ட விசயகுமார நாயக்கர் மீது பரங்கியர் கேப்டன் கோப் தலைமையில் போர் தொடுத்து கைப்பற்றினர்.அதையறிந்த முத்துவடுகநாதர்விசய குமார நாயக்கரை காப்பாற்றி வெள்ளிக்குறிச்சி என்ற ஊரில் வைத்து பாதுகாத்து மதுரை மீது போர் தொடுத்து அங்கிருந்த கேப்டன் கோப்பையும் அவர் படைகளையும் விரட்டியடித்து மீண்டும் விசயகுமார நாயக்கரையே மதுரை மன்னராக பதவி அமர்த்தினார். இதனாலேயே நவாப், பரங்கி மற்றும் கும்பினி படைகளுக்கு சிவகங்கை மீது கோபம் இருந்தது.

முத்துவடுகநாதர் என்ற பெயரின் விளக்கம்?

சில இழிசன கூட்டத்தினர் மிக வண்மையான காழ்புணர்ச்சி காரணமாக முத்துவடுகநாதர் என்ற பெயரை வைத்து இவர் தெலுங்கு நாய்க்கர் என கூவுகின்றனர். ஆனால் இந்த மல்லு கூட்டம்
வடுகையும் தாண்டி குஜராத் படேல் மற்றும் எகிப்து,கிரீஸ்,நேபாளம்,அமெரிக்கா என கப்பைகால் விரித்து கணவு காண்கின்றனர்.

முத்து வடுகநாதர் என்னும் பெயர் பிராண்மலை வடுக பைரவரை குறிக்கும் பெயராகும்.
பிரான்மலை சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட  போர் கோட்டையும்
என்னற்ற பீரங்கீகளும் இருந்த கோட்டையாகும். இதில் கோயில் கொண்ட ஈசன்தி ருகொடுங்குன்றநாதர் என்று பைரவர் வடுகு பைரவர் என அழைக்கபடுகின்றனர்.
முதலாம் சசிவர்ண தேவர் மகன் வேண்டி இப்பைரவரை வழிபட்டு அதன் நினைவாக முத்துவடுகநாதர் என அழைக்கபட்டார்.
Kodunkundranathar siva Temple Piranmalai

[தொகு] வரி மறுப்பு

இச்சமயத்தில் கும்பினியர் தலைவனாக லார்டு டீகார்ட் என்பவன் பதவியேற்றான். முதல் வேலையாக முத்துவடுகநாதர் சிவகங்கை சார்பாக கும்பினியருக்கு திரை செலுத்த வேண்டும் என்று தூதனுப்பினான். அதை முத்துவடுகர் மறுத்ததால் கான்சாகிப் மூலம் கொலை மிரட்டலும் விட்டுப் பார்த்தான் டீகார்டு. இரண்டுக்குமே இவர் பணியாததால் 1963ஆம் ஆண்டில் மன்னர் காளையார் கோவிலுக்குச் சென்ற சமயம் பார்த்து சிவகங்கை மீது போர் தொடுத்து சூறையாடினான். இதையறிந்த முத்துவடுகநாதர் கலவரத்தைத் தடுத்து கான்சாகிப்பையும் விரட்டினார்.

[தொகு] இராமநாதபுரம் இழப்பு

அதே நேரத்தில் பரங்கிப்படை ஒன்று இராமநாதபுரத்தைக் கைப்பற்றியது. அப்போது இராமநாதபுரத்தின் பரங்கித் தளபதியாக மார்டினசு பொறுப்பேற்றான். அதற்கு உதவியவன் இராமநாதபுர தளபதிகளில் ஒருவனான இராயப்பன் என்றவனே. தனக்கு முத்துவடுகநாதர் மந்திரி பதவி அழிக்காததால் தான் அவன் இந்தத் துரோகச் செயலில் இறங்கியதாகத் தெரிகிறது. அதன்பிறகு இதுவரை சிவகங்கைக்குக் கட்டாத வரியைத் திருப்பித் தருமாறும் இராமநாதபுரத்தைக் குடக்கூலிக்கு தருமாறும் செய்தியனுப்பினான். அதற்கு மறுத்து இராமநாதபுரத்தின் மீது படையெடுக்க மறவர் சீமையை சேர்ந்தவர்களின் உதவியை நாடினார் முத்துவடுகநாதர்.

[தொகு] இராமநாதபுரம் மீட்பு

மறவர் சீமைப் படைகளுடன் சேர்ந்து பரங்கியர்களின் துப்பாக்கிப் படைமீதும் பீரங்கிப்படை மீதும் போர் தொடுத்து இராமநாதபுரத்தை மீண்டும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இனிமேல் வடுகநாதரை வெல்ல முடியாது என்றறிந்த பரங்கியர் அன்றிரவே சிவகங்கை மீது இனி போர் தொடுப்பதில்லை என சமாதானம் பேசினர். அதை உண்மையென வடுகநாதர் நம்பினார்.

[தொகு] சதியில் மரணம்

சமாதானம் என்று கூறியதால் பாதுகாப்புகளைக் குறைத்து விட்டு இதுவரை இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த காளையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார் வடுகநாதர். இதையறிந்த பரங்கிப்படை தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஒன்றை காளையர் கோவிலுக்கு முத்துவடுகநாதரைக் கொல்ல பான்சோர் என்ற பரங்கித்தளபதியின் கீழும் மற்றொரு பிரிவை மருது சகோதரர் படை மீதும் செலுத்திப் போர் தொடுத்தது. கோவிலுக்குச் சென்றதால் ஆயுதம் எடுத்துக் கொள்ளாமல் சென்ற வடுகநாதரை பான்சோர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். வடுகநாதரின் மூத்த மகளும் கொல்லப்பட்டார்.

[தொகு] போலி வரலாறு

சமாதானம் பேசுவதாக பொய் கூறிவிட்டு கோவிலுக்கு ஆயுதமின்றி சென்ற நேரம் பார்த்து முத்துவடுகநாதரை கொன்றுவிட்டு சிவகங்கையும் காளையர்கோவிலையும் வெற்றி கொண்டதாக பரங்கியர் தம்பட்டம் அடித்துக்கொண்டனர். அந்த சதிச்செயலுக்கு லண்டன் நகரவாசிகள் வெட்கத்துடன் வெளியிட்ட ஆங்கில நாளிதழ் செய்திகளே சாட்சி.

[தொகு] சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்

முத்துவடுகநாதர் இறந்ததை அறிந்த அவரின் மனைவியான வேலு நாச்சியார் தன் இரண்டாவது மகளான வெள்ளச்சி நாச்சியார் மற்றும் மருதுசகோதரர்களுடன் சேர்ந்து விருப்பாச்சிக்குத் தப்பிச்சென்றார். அதன்பிறகு கைதர் அலி உதவிபெற்று மீண்டும் சிவகங்கை, இராமநாதபுரம், காளையார்கோவில் போன்ற இடங்களை கைப்பற்றி 4 ஆண்டுகள் அரசாண்டார். சசிவர்ணத்தேவர் முதல் வெள்ளையர் ஆட்சிவரை இராமநாதபுரத்தை ஆண்டவர்களின் பட்டியல் பின்வருமாறு,
1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1783 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1783 - 1801 - மருது பாண்டியர்கள் - பெரிய மருது (எ) வெள்ளை மருது மற்றும் சின்ன மருது
5. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்
9. 1848 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
12. 1878 - 1883 - துரைசிங்கராஜா
13. 1883 - 1898 - து. உடையணராஜா
 • 1892ம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார்.
 • 1910ம் ஆண்டில் ராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது.
 • சுதந்திரத்திற்கு பின் 1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ராமநாதபுரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது.[1]

[தொகு] மூலம்

 • குங்குமம் வார இதழ் கட்டுரை[2]

[தொகு] மேற்கோள்கள்

 1. ராமநாதபுரம் வரலாறு
 2. இரா. மணிகண்டன் (மே 2011). "சிவகங்கைச் சிங்கம் முத்துவடுகநாதர்". குங்குமம்


 1. பிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு...அப்போது பிரம்மனுக்கு ஐந்து தலைகள் (நான் முகன் என்ற பெயர் பிற்பாடு வந்திருக்க வேண்டும்...திசைகளின் காவலனாக, படைப்புத் தொழிலின் அதிபதியாக விளங்கியதாலும், ஐந்து தலைகளுடன் வதரித்தாலும் உலக இரட்சகனான சிவ பெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன்...அதோடு, தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்...இதுகுறித்து சிவனிடம் சென்று முறையிட்டனர் தேவர்கள்...சினம் கொண்டார்... சிவபெருமான்...பிரம்மனின் செருக்கை அடக்கத் தீர்மானித்தார்...தனது சக்தியால் பைரவரை உருவாக்கி, பிரம்மனின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி வரும்படி ஆணையிட்டார்...வீராவேசத்துடன் புறப்பட்ட பைரவர், பிரம்மனின் ஐந்து தலைகளுள் நடுவில் இருந்த ஒரு தலையைத் தன் நகத்தால் கிள்ளி எடுத்தார்.. இந்த பைரவர் அம்சமே வடுகதேவர்...(வடுகன் என்றால் பிரம்மச்சாரி).. புராணத்தில் சொல்லப்பட்டத் தகவல் இது.

பயன்பாடு[தொகு]

 • பயறாக்கிய முத்துவடுகநாத சுவாமி: ஒருமுறை சேர நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் வண்டிகளில் மிளகு மூட்டைகளை எடுத்துப் புறப்பட்டனர். இரவு நேரம் நெருங்கவே இந்த வனத்தில் தங்கிவிட்டு மறுநாள் புறப்படத் தீர்மானித்தனர். அப்போது இலந்தை மரத்தின் அடியில் குடிகொண்டிருந்த பைரவர் கிழ வடிவம் எடுத்து மிளகு வியாபாரி ஒருவரை நெருங்கினார். உடல் நிலை சரியில்லை, கஷாயம் வைக்க வேண்டும். நீங்கள் கொண்டு வந்த மூட்டையில் இருந்து சிறிது மிளகு எடுத்துத் தாருங்கள் என்றார். வியாபாரிக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே மூட்டைக்குள் இருப்பது மிளகு இல்லை, பாசிப்பயறு என்றார். கிழவரும் அப்படியா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து மறைந்தார். நாட்கள் ஓடின. மதுரைக்குப் போய்ச் சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம் ஒரு விலை பேசி சரக்குகள் அனைத்தையும் விற்றனர். மூட்டைகளை எடுத்துக் கிடங்கில் அடுக்குவதற்கு முன் அரண்மனைச் சிப்பந்தி ஒருவனிடம், ஒரு மூட்டையைப் பிரித்து உள்ளே இருப்பது மிளகுதானா என்று சோதிக்கும்படி, பாண்டிய மன்னன் சொன்னான். அதன்படி சிப்பந்தி ஒரு மூட்டையைப் பிரிக்க, உள்ளே இருந்தவை பாசிப்பயறு. மிளகு வியாபாரிகளுக்கோ வியர்த்துவிட்டது. முகம் சுளித்த மன்னன், வேறொரு மூட்டையைப் பிரித்துப் பார்க்கச் சொன்னான். அதிலும் பாசிப்பயறு. இப்படி எல்லா மூட்டைகளிலுமே பாசிப்பயறு இருப்பதைக் கண்ட மன்னன், சேர நாட்டு வியாபாரிகள் தன்னை ஏமாற்ற முயன்றதாகச் சொல்லி, அவர்களுக்குத் தண்டனை தரத் தீர்மானித்தான். அப்போது, பைரவரின் திருவிளையாடல் நிகழ்ந்தது. எந்த வியாபாரியிடம் பைரவர் மிளகு கேட்டாரோ, அவருக்கு திடீரென சாமி வந்தது. மிளகு மூட்டைகளை பாசிப்பயறு ஆக்கியது. நான்தான்டா என்றார் அந்த வியாபாரி. மற்றவர்கள் நம்பினாலும் மன்னன் இதை நம்பத் தயார் இல்லை. எனவே சாமி ஆடிய செட்டியாரைப் பார்த்து “எனக்கு இருப்பது இரண்டு குழந்தைகள். பெண்ணுக்கு வாய் பேச முடியாது. பையனுக்கு நடக்க முடியாது. இந்த இரு குழந்தைகளையும் நீ குணப்படுத்தினால் நீ சொல்வதை நான் நம்புகிறேன்” என்றார். நான் குடிகொண்டிருக்கும் புற்றை அழித்து என்னை சந்நிதியில் குடியேற்று; அபிஷேகங்கள் செய்; மிளகு சாற்றி வழிபடு; உன் குழந்தைகளைக் குணப்பத்துகிறேன்” என்று வியாபாரி வடிவில் வந்த பைரவர் சொன்னார். பாண்டியமன்னனும் அதை சிரமேற்கொண்டு சேரநாட்டு எல்லைக்கு வந்தான். இலந்தை மரத்தின் அடியில் புற்றில் குடி கொண்டிருக்கும் பைரவரை வெளியே எடுத்தான். மண்டபம் கட்டி பிரதிஷ்டை செய்தான். பைரவருக்கு மிளகு சாற்றி வழிபட்டான். பைரவர் அருளியபடியே, எட்டுநாட்களில் மன்னனின் குழந்தைகள் நலம் பெற்றன. இதனால் இந்த பைரவரை “பயறாக்கிய முத்துவடுகநாத சுவாமி” என்றும் அழைப்பது உண்டு. குண்டடம், திருப்பூர் மாவட்டத்தில் அருள்மிகு காலபைரவ வடுகநாதர் என்ற கோவிலுள்ளது.அந்த கோவில் கல்வெட்டில் உள்ள வரலாறே இது. இதனால்தான் காலபைரவரின் சொரூபமாகிய சிவபெருமானை வடுகநாதன் என்று அழைக்கிறார்கள்.

ஆதாரம்...சமூகச் சார்பானவற்றிற்கு:
https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D


மக்களின் தெய்வங்கள் கதை

தூக்குத்துரை

வித்தியாசமானது அந்த ஜமீன். வெறுமனே சுகபோகங்களிலேயே மற்ற ஜமீன்களைப் போல மூழ்கிக் கிடக்கவில்லை.
‘தன்னை நம்பியவர்களைத் தனது தலையைக் கொடுத்தாவது காப்பாற்றியாக வேண்டும்’ என்பதில் அவ்வளவு தீவிரம்!
அந்த நம்பிக்கைக்கேற்றபடியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறது ‘சிங்கம்பட்டி ஜமீன்.’
பெரியசாமித் தேவர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பட்டியின் 24-வது தலை முறையின் ஜமீன்தார். அவருடைய நண்பர் ராமசாமித் தேவர். அந்தச் சமயத்தில் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சொல்லி மதுரை சிறையில் அடைத்திருந்தார்கள். தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டாகி விட்டது. தர்மசங்கடமான நிலையில் நண்பரான சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சிறையிலிருந்தபடியே கடிதம் எழுதியிருந்தார்.
நம்பி எழுதியிருக்கிற நண்பரைக் கைவிட முடியுமா? நேரே மதுரைக்குப் போனார் ஜமீன். ஜெயிலுக்குள் எப்படி நுழைவது? மதுரை ஜெயிலரைப் பழக்கம் பிடித்தார். அவர் மூலம் ஜெயிலுக்குள் போனார். கைதிகளுக்கு உதவினார். அங்கே சந்தடி சாக்கில் தனது நண்பர் ராமசாமித் தேவரையும் பார்த்தார். நம்பிக்கையூட்டினார்.
ஜெயிலரைப் பலவழிகளில் வசப்படுத்தி எப்படியாவது ராமசாமித் தேவரை வெளியே கொண்டு போய்விட முயற்சி பண்ணினார். ஜமீன்தாரின் நோக்கம் தெரிந்ததும் கோபமாகி விட்டார் ஜெயிலர். பார்த்தார் ஜமீன். ஒரே போடு. சாய்ந்து விட்டார் ஜெயிலர்.
அவருடைய உடம்பைக் கொண்டு போய்ப் பத்திரமாக ஆற்று மணலில் புதைத்தார். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஜெயிலரின் நண்பராகவே ஜெயிலுக்குள் போய் ராமசாமித் தேவரை தனியே பேச அழைத்துக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறார்.
நேரே இருவரும் சிங்கம்பட்டி ஜமீனுக்குப் போய் விடுகிறார்கள். ‘இவ்வளவு கஷ்டப்பட்டுத் தன்னைக் காப்பாற்றியிருக்கிறாரே’ என்று பெருமிதம் தாளவில்லை ராமசாமித் தேவருக்கு.
அந்தச் சந்தோஷமெல்லாம் சில நாட்களுக்குத்தான். ஆற்று மணலில் புதைக்கப்பட்டிருந்த ஜெயிலரின் சடலம் வெளியே தெரியவர, அடையாளம் காட்டிவிட்டது அங்கிருந்த குதிரையின் சேனத்தில் இருந்த ஜமீன் அடையாள முத்திரை.
சிங்கம்பட்டி ஜமீன்தான் கொலை செய்திருக்கிறார் என்று ஆதாரங்கள் தெளிவானதும் கைதாகிறார். வழக்கு விசாரணை. பிறகு ஜமீனுக்குத் தூக்குத் தண்டனை – அதிலும் பொது இடத்தில்.
‘ஜமீன்தாரைத் தூக்கில் போடுகிறார்கள்’ என்று ஒரே பேச்சு. எதிரே தூக்குமரம். அதில் சுருக்குக் கயிறு. சுற்றிலும் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட மக்கள்.
கூட்டத்தை விலக்கிவிட்டு, தூக்குமரத்தை நெருங்கினார் ஜமீன். கழுத்தில் சுருக்கு விழுகிறது. பகல் நேரத்தில் யாரிடமும் கெஞ்சிக் கதறாமல் கம்பீரத்துடனேயே உயிர் பிரிகிறது.
117 வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
திருமணம் செய்து கொள்ளாமலேயே வைராக்கியமும், வீர உணர்வும், நட்பை மதிக்கிற குணமும் கொண்டிருந்த ஜமீன்தார் இப்போது சிலையாக அதே இறுக்கத்துடன் கும்பிட்டபடி நிற்கிறார். சிங்கம்பட்டியிலுள்ள சுப்பிரமணியசாமி கோயிலிலேயே ஒரு பக்கத்தில் ஜமீனின் சிலை. ‘தூக்குத்துரை’ என்றே சொல்கிறார்கள் சிங்கம்பட்டி மக்கள். இப்போதும் அவரை வழிபடுகிறார்கள்.
ஜமீனிலேயே அடுத்து எட்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. இப்போது சிங்கம்பட்டி ஜமீனாக இருக்கிறார் முருகதாஸ் தீர்த்தபதி. தூக்குத்துரை தூக்கிலிடப்பட்ட இடத்தை இன்னும் நினைவுடன் கொண்டாடுகிறார்கள் ஊர் மக்கள்.

வன்னியடி மறவன் கதை

நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 

எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.
மணிக்காஞ்சி நாட்டில் மாடப்பன் என்ற மறவன் வாழ்ந்து வந்தான். அவன் புலியின் வாலை உருவும் அளவுக்குப் பெருவீரன். அவனுக்கு வயது 22 னதும் சமுதாயத்தார் கூடி கருமறத்தியை அவனுக்கு மணமுடிதது வைத்தனர். நாட்கள் பல சென்றன. அவர்கள் மகிழ்வோடு வாழ்ந்தனர். னால் அவர்களுக்குக் குழந்தையில்லை. அதனால் கருமறத்தி மணம் மிக நொந்தாள்.

நான் மலடி என எல்லோரும் ஒதுக்குகின்றனரே! நமக்கு கொள்ளி வைக்க மகன் வேண்டாமோ? இல்லை என்றால் உலகோர் பழிப்பார்களே, 12 வயதிலே எனக்கு மாலையிட்டீர். இப்போது வயது 32 கிறதே, என் அரசே என் வார்த்தைகளைக் கேளும். நான் குழந்தைகளுக்காக தவம் செய்யப் போகிறேன் என்றாள்.

அவள் பேசுவதைக் கேட்ட மறவன் கவலைப்படாதே.இந்த நகரத்திலிருந்து குழந்தை ஒன்றை எடுத்து உனக்கு வளர்க்கத் தருகிறேன் என்றான்.
ஆனால் அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. சொந்த ரத்தம் போலாகுமா பிறர் ரத்தம்? எடுத்து வளர்த்த குழந்தை ஓடிவிடும். வேண்டாம். நான் இறைவனுக்கு நேர்ச்சை செய்து பிள்ளையை வாங்கிக்கொள்வேன். என் தோழிகளுடன் செல்வேன் என்றாள்.

கருமறத்தி தன் தோழிகள் ஐந்து பேருடன் பலவகைப் பொருள்களுடன் புறப்பட்டாள். தொலை வழி நடந்தாள். வழியில் உள்ள தெய்வங்களுக்கெல்லாம் நேர்ந்தாள். எல்லா தெய்வத்தினிடமும் வேண்டினாள். தெய்வங்கள் அவள் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை. பலன் கிடைக்கவில்லை. அவள் பல ஊர்களைக் கடந்து சென்றாள்.

அவள் திருவனந்தபுரம் காட்டுவழிச் சென்றபோது அச்சுதனார் குறத்தி வேடம் கொண்டு வந்தார். கருமறத்தியைக் கண்டார். நீ எந்த ஊர் மகளே, நீ வந்த காரணத்தைக் கூறுகிறேன். அடக்காயும் வெத்திலையும் தா வாடி மகளே என்றாள்.

கருமறத்தி நெல்லை அளந்து அவள் முன்னே வைத்தாள். குறத்தி நெல்லைக் குவித்து வைத்துவிட்டு பார்த்தாள். பெண்ணே உனக்குப் பல நாட்களாகக் குழந்தை இல்லை. போகாத குளமெல்லாம் குளித்தாய். கோவிலகள் பல சென்றாய். பின்னர் குழந்தைச் செல்வம் இல்லை. உறியில் தயிர் இருக்கும்போது வெண்ணைய்க்கு அலைந்தால் யார் மகளே தருவார்? பெண்ணே உன் குடும்ப தெய்வம் ஒன்று போகமாய் நிற்கிறது. கோவிலின் சுவர்கள் பாழடைந்து கிடக்கிறது. அதற்குக் குருபூஜை காத்து கோவிலைச் செப்பனிடு. உனக்கு ண் மகவு பிறக்கும். அதற்கு மேல் குழந்தை இல்லை. போய் வருவாய் கருமறத்தியே என்றாள்.

கருமறத்திக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குறத்திக்கு பொன்னாபரணம் ஒன்று கொடுத்தார். அதைக் குறத்தி வாங்கவில்லை. மறத்தியை அனுப்பி வைத்தாள் குறத்தி.

மறத்தி திருவட்டாறு மலைவிட்டு இறங்கி தோவாளை வழி பணகுடி. வள்ளியூர் வந்து தன் வீட்டிற்கு வந்தாள். குடும்ப தெய்வம் வாழ்ந்த கோவிலைச் செப்பனிட்டாள். தெய்வத்திற்கும் குலபூசை செய்தாள். உடனே தன் மடியில் பாம்பு வந்து படம் எடுத்து டுவதுபோல் கனவு கண்டாள். பொன் எழுத்தாணியும் புத்தகமும் கண்டாள். கணவனிடம் தான் கண்ட கனவைச் சொன்னாள். கணவன் அதனால் மிக மகிழ்ந்தான். கனவு கண்ட சிலநாளில் கர்ப்பமுற்றாள்.

கருமறத்தியின் தனங்கள் கறுத்தன. கர்ப்பமுற்றதற்கு அடையாளங்கள் தோன்றின. மாதம் பத்தாகியது. மருத்துவச்சியை அழைத்துவரச் சொன்னான் மறவன். தூதன் ஓட்டமாக ஓடிச் சென்றான். மருத்துவச்சியின் வீட்டிற்கு சென்று அழைத்தான். அவள் என்னடா மணிக்காஞ்சி மறத்திற்குத்தானே மருத்துவம்? வரமாட்டேன் போ. அவள் எனக்கு எதைத் தந்துவிட்டாள் வருவதற்கு என்றாள்.
தூதன் விடவில்லை. அவள் காலில் விழுந்தான். கட்டிப் பொன்னைத் தருகிறேன் என்றான். மருத்துவச்சி அதற்கு இசைந்து வழி நடந்தாள். மருத்துவச்சி வந்ததும் குழந்தை பிறந்தது. கன்னிக்குடம் உடைந்தது. கொப்புளும் அறுத்தாள். பிறந்த ண் குழந்தைக்கு வன்னியப்பனின் பெயரை வன்னியடி மறவன் என விட்டனர்.

குழந்தைக்கு நாள் கோள் பார்த்தவர்கள் இக்குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. இவனுக்கு 22ம் வயதில் இவந்தந்தை மாடப்பதேவன் மறவர்களால் வெட்டப்படுவான் என்றனர். மறத்திக்கு அதனால் துன்பம்தான். என்றாலும் மகனுக்கு னை ஏற்றம் குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்பித்தாள். கலைகள் பல படித்தான் மகன்.

வன்னியடி மறவன் வளர்ந்தான். சோதிடன் கூறியபடி ஊற்றுமலை மறவர்கள் கூடி ஒரு சண்டையில் மாடப்பனை வெட்டிக் கொன்றனர். வன்னியடி மறவன் தாயின் பாதுகாப்பில் வளர்ந்தான். தலால் அவனுக்கு போதிய உரம் இல்லாமல் இருந்தது. அவன் உரிய வயது வந்ததும் ஊர்த்தேவனான பொன் பாண்டித் தேவனுடன் கச்சை கட்டிக்கொண்டு களவு செய்யப் புறப்பட்டான்.

போனவிடத்தில் அவன் ஒரு செட்டியைக் கண்டான். அவனிடம் கள்ளரின் குறியீட்டு மொழியில் பஞ்சுக்குப் புண்ணுக் கொடுப்பீரோ ?" எனக் கேட்டான். வலிமையானவானாக இருந்த செட்டி வன்னியடி மறவனின் செவிட்டில் ஓங்கி அடித்தான். எதிராபாராத அடி பொறுக்காத வன்னியடி மறவன் அப்படியே வீழ்ந்தான். செட்டி தப்பிச்சென்றுவிட்டான். மற்ற மறவர்கள் அதைக்கண்டு அருவருப்பும் கோபமும் கொண்டார்கள். இவன் என்ன மறவன்! அடி தாங்காதவன்! இவனை இப்போதே வெட்டிவிடுங்கள் ! என்றனர்.

மறவர்கள் வன்னியடி மறவனை சூழ்ந்துகொண்டு வெட்டிவிட்டனர். இறந்துபோன வன்னியடி மறவன் யுள் அறமல் இறந்தமையால்ற்றாமல் பேயாகி அலைந்தான். நீலராசனிடம் வரம் வேண்டி, இசக்கி அம்மை அருள் கொடுக்க வடக்கு சூரன்குடியில் கோயில் கொண்டான்.வன்னியன் கதை


வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணமாகி பல நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. மலடி என்ற பழி ஏற்பட்டதனால் மனம் நொந்த அவள் கோவில்கள் பல சென்று நேர்ந்தாள். குழந்தைக்காக தவமிருந்தாள். கடைசியில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று வேண்டித் தவம் இருந்தாள். அக்கோவிலிலேயே படுத்துக்கொண்டாள்.

அம்மையடி மறத்தி உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டாள். கனவில் தென்கரை சாஸ்தாவின் துணைச்சாமியான தளவாய் மாடன் கோடங்கி அடிப்பவராக வேடம் தாங்கி வந்தார். அவர் அம்மையிடம் பெண்ணே நம்பி ற்றங்கரையில் ஒரு சாஸ்தான் கோவில் இருக்கிறது. அங்கே வந்து தவமிருப்பாய். உனக்கு எட்டுக் குழந்தைகள் பிறக்க சாஸ்தா வரம் கொடுப்பார். அந்தப் பிள்ளைகளை உரிய காலத்தில் சாஸ்தாவின் கோவிலுக்குக் காவு கொடுக்கவேண்டும் என்றார்

மறத்தி கனவில் கண்ட நிகழ்ச்சியை எண்ணி வியபப்டைந்தாள். தளவாய் சொன்னபடி தென்கரைக்கு வந்தாள். நாட்கள் 41 னதும் அவள் சாஸ்தாவிடம் மேலும் கெஞ்சி வேண்டினாள். அப்போது அவளுடன் இருந்த அவளது கணவன் பெண்ணே என் நிலபுலன்களைக் கவனிக்கவேண்டும். பயிராக்கவேண்டிய காலம் வந்துவிட்டது . இப்படியே எத்தனைநாள் தவ்மிருப்பது? நான் ஊருக்குப் போகிறேன் என்று கூறி அவளிடம் விடை பெற்றுக்கொண்டு தன் ஊருக்குச் சென்றான். அவள் தொடர்ந்து தவம் செய்து வந்தாள்.

அம்மையடி மறத்தியும தென்கரையில் ஒரு இடத்தை வெட்டிச் சீர்திருத்தி வீடுகட்டி வாழ்ந்தனர். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு ண்குழந்தைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர். ண்மக்களுக்கு சின்னத்தம்பி வன்னியன், சிதம்பர வன்னியன், முத்துமாலை வன்னியன், ண்டுகொண்ட வன்னின். அழகு விலங்காடி வன்னியன், தென்கரை வன்னியன், வடகரை வன்னியன் எனப் பெயரிட்டாள். பெண்மகள் வன்னிச்சி எனப் பெயர் பெற்றாள்.

அம்மையடி மறத்தித் தன் குழந்தைகளை தன் மறக்குல வழக்கப்படி வளர்த்தாள். அவர்களும் நல்ல உடல்வாகு கொண்டவர்களாய் விளங்கினர். வேல்கம்பு, சிலம்பு போன்ற பயிற்சிகள் பெற்றனர். அவர்களுக்குத் திருமணப் பருவம் வந்தது. அம்மையடி தன் மக்களுக்குத் திருமணம் செய்ய விரும்பினாள். தன் குலத்தில் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் பெண் கேட்டாள். அவர்களின் மாமன்மார்கள் நம் குல வழக்கப்படி இந்த ஏழு பேரும் திருட்டுத் தொழிலில் திறம் காட்டிச் சாதனை செய்தால் பெண்ணைத் தருகிறோம் என வாக்களித்தனர்.

அம்மையடியாள் தன் மக்களிடம் மாமன்மார்களின் வேண்டுகோளைத் தெரிவித்தாள். வன்னியர்கள் குலவழக்கப்படி களவுத்தொழில் செய்யத் தயாராயினர். திருச்செந்தூர் கோவில் கருவறையில் அளவு கடந்த பொற்குவியல் இருப்பதைக் கேள்விப்பட்டனர். னால் அங்கே கடுங்காவல் இருப்பதை அறிந்து அங்கே செல்லவேண்டாம் என முடிவு கட்டினர். இப்படி இருக்கும்போது மூத்த வன்னியனின் கனவில் தளவாய் சுவாமி சோதிடர் உருவில் வந்தார். தென்கரை அருகே வெங்கலராசன் கோட்டை ஒன்று உள்ளது. அங்கே சென்று திருடுங்கள் என்றார்.

மூத்த வன்னியன் தம்பிகளிடம் தான் கண்ட கனவைப் பற்றிக் கூறினான். அவர்களும் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்வோம் என்றனர். அடுத்தநாள் மாலை நேரத்தில் தென்கரைக்கு வந்தனர் சகோதரர்கள். அவர்களில் ஒருவன் இப்போது நல்ல வெளிச்சம் இருக்கிறது. இப்போதே நாம் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்லவேண்டாம். அதுவரை இங்கே கிளியாந்தட்டு விளையாடுவோம் என்றான்.

அவர்கள் நம்பியாற்று மணல்வெளியில் கிளியாந்தட்டு விளையாட ரம்பித்தபோது மாடு மேய்க்கும் சிறுவனைப்போல் வேடமிட்டு தளவாய்சாமி வந்தார். அவர் வன்னியர்களிடம் மணலில் விளையாடினால் சரியாக இருக்காது. நம்பியாற்றின் நடுவே ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பெரிய பாறை மீது விளையாடுவோம் என்றார்.

வன்னியர்கள் தளவாய் சுவாமியாக வேடமிட்டிருந்த மாடுமேய்க்கும் சிறுவன் சொன்னபடி நம்பிப்பாறைக்குச் சென்றனர். அங்கே அவர்கள விளையாட ரம்பித்தனர். நேரம் போவது தெரியாமல் விளையாடினர். வானத்து நட்சத்திரங்களின் போக்கை பார்த்த மூத்த அண்ணன் நேரம் கடந்துவிட்டது. இனி வெங்கலராசன் கோட்டைக்குப் போனால் நேரம் விடிந்துவிடும். என்ன செய்வது ? எனக் கேட்டான்.

உடனே மாடு மேய்க்கும் சிறுவன் நீங்கள் சாமர்த்தியமான சிறுவர்களாகத் தோன்றவில்லையே. தென்கரை மகாராசன் கோவிலிலேயே திருடலாமே. அங்கே அளவு கடந்த பொன் இருக்கிறது. இதற்கு வெகுநேரம் நடக்கவும் வேண்டாம் என்றான்.

சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலில் திருட முடிவு செய்தனர். மாட்டுக்கார சிறுவன் கோவிலின் கருவறை இருக்கும் இடத்தை அடையாளம் சொன்னான். அவர்களிடம் மேலைவாசல் வழியாகச் செல்லுங்கள் அதுவே நல்ல வழி ! என்றும் கூறினான். பின்னர் நான் என் வழி செல்லுகிறேன். நீங்கள் உங்கள் தொழிலைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.

ஏழு சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலின் மேற்குபக்கம் வந்து சுவரில் ஏறினர். மேல் சுவரின் ஒரு பகுதியை இடித்தனர். இந்த நேரத்தில் தயவாய் சாமி ஒரு சாதாரண மனிதனாக அந்த ஊர் அரசனிடம் சென்றார். தென்கரை சாஸ்தா கோவிலில் 7 பேர்கள் திருடிக்கொண்டிருக்கின்றனர். என்னுடன் கொஞ்சம் குதிரை வீரர்களை அனுப்புங்கள். அவர்களைப் பிடித்துவிடலாம் என்றார்.

ராஜா அந்த மனிதருடன் குதிரை வீரர்களை அனுப்பினார். தளவாய்சாமி தென்கரைக்கு வரும்போது வன்னியர்கள் கோவிலில் திருடிவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். தூரத்தில் குதிரை வீரர்கள் வருவதைக் கண்டு கையிலுள்ள திருட்டுப் பொருட்களைக் கோவிலின் பக்கத்திலிந்த கிணற்றில் போட்டுவிட்டனர். னால் அதற்குள் குதிரைவீரர்கள் அவர்கள் அருகே வந்துவிட்டனர். வன்னியர்கள் ஓட்டமாய் ஓடினர். தளவாய்சாமி அவர்களைக் குருடராகும்படிச் செய்தார். அவர்களும் குருடராயினர்.

எழுவரும் கண் தெரியாமல் தட்டுத்தடுமாறித் தவித்தனர். குதிரை வீரர்கள் அவர்கள் ஏழு பேரையும் பிடித்துக் கயிற்றால் கட்டினர். கோயிலருகே இருந்த புளியமரத்தில் கட்டி வைத்தனர்.

திருடர்களின் கழுத்தில் ஊமத்தை பூமாலை போட்டனர். வில்லன்புதூர், கண்ணன்புதூர் என்னும் ஊர்களிலிருந்து வந்த வீரர்கள் வன்னியர்களை வாளால் வெட்டினர். இந்தச் சமயத்தில் வன்னியர்களின் சகோதரி வன்னிச்சி அண்ணன்மார்கள் கேட்டுக்கொண்டபடி பலவகைக் கறிகளுடன் அடுக்குப் பானைகளில் சாதம் கொண்டுவந்தாள். அண்ணன்மார்கள் அவளைத் தென்கரை நம்பியாற்றங்கரையில் கோழி கூவும்போது காத்திருக்கச் சொல்லியிருந்தார்கள். அதன்படி அவள் அங்கே வந்தாள். அவள் வரும்போது தீய சகுனங்களைக் கண்டு திடுக்கிட்டாள். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.

தென்கரை நம்பியாற்றங்கரையில் அண்ணன்மார்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டாள். தரையில் விழுந்து அழுதாள். அரற்றினாள். தலைகளை அதனதன் உடலில் பொருத்தினாள். அவர்களின் வாயில் அரிசியைப் போட்டாள். தன் நாக்கைப் பிடுங்கி அவர்களின் முன்னே போட்டாள். இந்தப் பெரிய ஊர் சிற்றூர் கட்டும். இங்கு ஏழு வீடுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. இங்கே கோழி கூவக்கூடாது. நாய் குரைக்கக்கூடாது என்று சாபம் இட்டாள். அவளும் இறந்துபோனாள்.

ஏழு மக்களும் வெட்டுப்பட்டு இறந்த செய்தியை அம்மையடி மறத்தி கேள்விப்பட்டாள். ஓடோடி வந்தாள். எல்லா மக்களும் செத்துக் கிடக்கும் காட்சியைக் கண்டாள். அப்போது அவளுக்குப் பழைய நினைவு வந்தது. தென்கரை மகராஜனுக்குக் காவலாக ஏழு பேரும் இருப்பார்கள் என்று கனவில் தான் கண்டதை நினைத்தாள். அவளும் நாக்கைப் பிடுங்கி உயிர் விட்டாள்.

இறந்துபோன ஒன்பது பேரும் சாந்தி அடையாமல் கைலாயம் சென்றனர். அவர்களுக்குச் சிவன் வரம் கொடுத்தார். வன்னியர்களில் கடைசித் தம்பியான வன்னிராசன் தெய்வமாகத் தென்கரையில் நிலைபெறட்டும் என சி வழங்கினார். எல்லோரும் தென்கரையில் சாஸ்தா கோவிலில் நிலைபெற்றனர்.

விருமாண்டி கதை பாடல் – தமிழ் மண்ணின் சாமிகள்


கமலஹாசனின் இயக்கத்தில் வந்த படம் விருமாண்டி. கதையின் தளம் மரணதண்டனையை ரத்துசெய்வதை மையமாக கொண்டிருந்தாலும், விருமாண்டி என்ற கிராம தெய்வத்தினை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது. சண்டியர் என்று பெயர் சர்ச்சையில் விருமாண்டி பெரிய விளம்பரத்தை தேடிக்கொண்டாலும், தெய்வத்தின் பெயரை தாங்கியே இறுதியாக வெளிவந்தது. “இதுக்கெல்லாம் அந்த சாமிதாலே காரணம். அது பேர வைச்சுக்கிட்டுதான் படத்தை வெளிவிடனும்முன்னு இப்படி பண்ணுது” என்று சொல்லி சிரித்தார்கள் நண்பர்கள். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் தலையிட்டு பிரட்சனையை தீர்த்ததாக சொன்னார்கள்.
விருமாண்டி பாடல் -
கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்
காளியம்மன் போல வந்தாள் பேச்சியம்மா (கருமாத்தூர்)
சைவசமையல் படையல் வைச்சு
சர்வசட்டியில் பொங்கல் வைப்பா
சாமிக்கெல்லாம் பூச வைப்பா
சங்கெடுத்து ஊதி நிப்பா (கருமாத்தூர்)
சங்குசத்தம் அந்தபொற்குலத்தில் உள்ள
பேய்க்காமன் காதில் கேட்டது… கேட்டது… கேட்டது…
பொங்கலோடு பழங்களும் சைவபடையல் வைச்சு
சாமிக்கு யார் அங்கு படைப்பது
சைவவாடையது கொஞ்சமும் சகிக்கவில்ல
தாக்கி முகம் சுழிக்க வைக்குது
என்று செங்கண் துடிதுடிக்க அங்கம் பளபளக்க
போங்கினானே பேய்க்காமனே!
மாட்டுக்கொடலெடுத்து மாலையாக போட்டுதான்
பேச்சியம்மா இடத்துக்குஅவன் வந்தானே (மாட்டுக்கொடலெடுத்து)
நானாளும் பகுதியே என்னென்னவோ சத்தம்தான்
நீயெழுப்பும் சத்தம் எல்லாம் சுத்தம்தான்
சத்தத்தாலே நேத்துபூரா தூங்கல
உங்க சங்கு சத்தம் கொட்டு சத்தம் தாங்கல
ஏழுநாளில் இங்கிருந்து கிளம்பனும்
அட இல்லாவிட்டால் நீங்களெல்லாம் புலம்பனும்
அச்சமூட்டி எல்லாரையும் மிரட்டுனான்
பொருளை அடிச்சு நொறுக்கி ஆவேசமா விரட்டுனான்
விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்
விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்
அன்னக்கொடுச்சி அழகுமயில் பேச்சியம்மா
தன்னந்தனியே வாடுரவ
கண்ணான கழுவநாதன் கண்டுமனம் கலங்கி நின்னு
அவ உள்ளங்கை ரேகையை ஊடுருவி பார்த்துட்டான்
புறங்கை ரேகையை புரட்டி புரட்டி பார்த்துட்டான்
உன்னையை காப்பாற்ற ஒரேஒரு ஆளைவிட்டா
உலகத்திலே யாருமில்லை… ஆமாம்
ஒட்டிநிக்கும் துன்பமெல்லாம்
ஒட்டடையா ஓட்டிடுவான் ஒருத்தனாக.. ஆமாம்
அனாதைக்கு ஆதாரவு தருவாண்டி
அவன்பேரு நான்சொன்னேன் விருமாண்டி
விருமாண்டிய வேண்டிவரதான் அந்த பேச்சியம்மா புறப்புட்டாளே
வனந்தரம் காடு கடந்து அந்த வண்ணமயில் புறப்புட்டாளே
எறும்பேற முடியாத எட்டு சுத்து கோட்டைக்குள்ளே
பாம்பேற முடியாத பத்து சுத்து கோட்டைக்குள்ளே
ஆதரவு இல்லாத ஆறாம்பிடி கோட்டைக்குள்ளே
அண்ணனிவ சந்திக்க அழகியவள் போனாளே!
விவரம் கோட்டு விருமாண்டி
வீரம் கொண்டு பொங்கி எழுந்தானே!
கன்னிப்பொண்ணு கதை கேட்டு
கண்ணுசெவக்க எழுந்தானே!
பெத்தபுள்ள துயரம் கேட்டு
பெத்தவங்க துடிப்பது போல்
பெரும்புழுதி புயலயடிக்க பேய்க்காமனும் இருக்குமிடம்
பிரமாண்டம் கிடுகிடுக்க விருமாண்டி வந்தானே…வந்தானே…வந்தானே…
வெண்பொங்கல் தேங்காப்பழம் விபூதி – அதை
வெறுப்பதென்ன அர்த்தம்கெட்ட கபோதி
இது பேச்சியம்மா குடியிருக்கும் திடலுடா
எதிர்த்து பேசினாக்க கிழிந்துபோகும் குடலுடா
மாட்டுகுடலில் மாலைபோடும் பராரி
உன்முதுகில் ஏறி செய்யப்போறேன் சவாரி… சவாரி.. சவாரி
இப்படி விருமாண்டி சொன்னதும் இரண்டு பேருக்கும் கடுமையா சண்டை நடந்துச்சு.அப்ப பூமியெல்லாம் நடுங்குச்சு மலையெல்லாம் உடைஞ்சுச்சு. இதைப்பார்த்த சிலபேரு வீணா ஏதுக்கையா சண்டை போடரிங்க, சமாதனமா பேசிதீர்த்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. அவங்களும் சம்மதிச்சாங்க. அதுக்கப்புறம் பஞ்சாயத்தார் தீர்ப்பு சொன்னாங்க.
என்ன சொன்னாங்க.
தொட்டப்பநாய்க்கனூரிலையும், மதுரை மொட்ட கோபுரம் பக்கத்துளேயும் கொடியென்னு நட்டுவைப்போம், உங்க ரெண்டு பேருலையும் யார் முதலபோய் அந்த கொடியை தூக்கிட்டு வாராகளோ, அவுங்களுக்கு அந்த எல்லை சொந்தமுன்னு பஞ்சாயத்தார் தீர்ப்பு சொல்ல பேய்க்காமன் யோசிச்சான். யோசிச்சு சதியொன்னு பண்ணுனான். விருமாண்டி கையில நொண்டி குதிரையொன்னு கொடுத்து, அவன் போன எங்கடா கொடிய தூக்கிக்கிட்டு வரப்போரான்னு நினைச்சான்.
ஆகா,..
மொட்டக்கோபுரந் தொட புறப்புட்டான் பேய்க்காமனும்
தொட்டப்பநாய்க்கனூரை தொட்டுட விருமன் போனான் (மொட்ட)
ஏய்க்க நினைச்ச அந்த
பேய்க்காமன் எல்லையையும்
சேர்த்தே அளந்துவந்து
ஜெயிச்சானே விருமாண்டியும்
ஜெயிச்சானே விருமாண்டியும்!
அண்ணே திரும்பிபோனா
இங்கே இவன் சும்மா இருப்பானா
பொண்ணுக்கு தொல்ல கொடுக்கும்
எவனும் இங்கே நல்லாருப்பானா
என்ன நானும் செய்யப்போறேன்
எனக்கு ஒன்னும் தெரியவில்லையே
அட அண்ணன்காரன் விருமன் போனா
வேறு ஏதும் வழியுமில்லையே
அதனால என்ன பண்ணறதுன்னு யோசிச்சு ஒரு தந்திரம் பண்ணுனா பேச்சியம்மா.
என்ன செஞ்சா.
தான் விரலுள்ள போட்டிருந்த மோதிரத்தை கிணத்துக்குள்ள போட்டுட்டு, அண்ணே அண்ணே மோதிரம் விழுந்துடுச்சு எடுத்துக்கொடுங்கன்னு அண்ணேன்னு சொன்னா.
தங்கச்சி வேண்டுதல நிறைவேத்தி வைக்கிற அண்ணன், தங்கச்சுக்காக கிணத்துல குதிச்சு மோதிரத்த எடுக்கையில, கிணத்துமேல வைச்சிருந்த கல்லை வைச்சுமூடி பேச்சியம்மா விருமாண்டிய கிணத்துக்குள்ளேயே சிறை வைச்சுப்புட்டா.
என்ன தங்கச்சி, உனக்கு உதவிபண்ண வந்த எனக்கு இதுதான் நீ காட்டுற நன்றியான்னு விருமாண்டி கேட்க, பேச்சியம்மா யோசிச்சு தினம் தினம் அண்ணனுக்கு சூலி பொண்ணும், சூலி மாடும் கொடுக்க நம்மலால முடியுமா. கொடுத்தா உலகம்தான் இத தாங்குமா அப்படின்னு நெனச்சு, அண்ணன்கிட்ட சொன்னா, அண்ணே நீ கேட்ட படி உனக்கு பூசை பண்ண முடியாது. ஆனா நாங்க என்ன பண்ணுவோம்னா,.
ஆடிக்கடைசி வெள்ளி
ஒனக்கொரு பூசை வப்போம்
ஆகாசப் பொங்கல் வச்சு
அப்போ படைய வப்போம்
ஆடிக்கடைசி வெள்ளி
ஒனக்கொரு பூசை வப்போம்
ஆகாசப் பூசை வச்சு
அப்போ படைய வப்போம்
அதிலே நீ கேட்டதெல்லாம்
ஆமாமா செஞ்சு வைப்போம்.
அதுக்காக எங்களையே எப்போவுமே காத்து இருந்து
இங்கே நீ இருக்க வேனும் – எங்கும்
பொங்கும் மங்கலம் தங்க வேனும்.
சாமி இங்கே நீ இருக்க வேனும் – எங்கும்
பொங்கும் மங்கலம் தங்க வேனும்.
பாடலோடு கதையின் சுருக்கத்தை தந்து, மேலும் விவரங்கள் சேர்த்து சொல்லாம் என நினைத்திருந்தேன். பாடலை கேட்டு எழுதவே இரண்டரை மணி நேரம் எனக்கு தேவைப்பட்டதால், இன்று முடியவில்லை. விருமாண்டி பதிவு அடுத்த இடுகையிலும் தொடரும்.