Friday, April 24, 2020

மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு



பாண்டியர்
-----------------
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்
MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai
மறவர் குல பாண்டியன் மானக்கவசன்
திருவாடானை பாண்டியர்கள்
கவுரியன்(பாண்டியன்)
சங்கம்  மறுவிய தமிழ் கூறும் நல் உலகத்தை ஆண்ட வேந்தரில் பண்டையோன்,செழியன்,வழுதி,மீனவன் போன்ற புகழ் மொழிக்கு உரியவன் தென்னவன்பாண்டியன் ஆவான். அவனை "மறப்போர் பாண்டியன் மறக்களிறு மறப்போர் ஏறு" என சங்க இலக்கியங்கள் குறிக்கின்றது. அவன் மறக்குடியை சார்ந்தவன் என நாம் பல சான்றுகள் காட்டினாலும்
சில பொறாமைகொண்ட விஷமிகளால் பொறுக்க முடியாமல் நம்மில் சில சிகண்டிகளை
முன்னிறுத்தி அம்பெரிந்து வருகின்றனர். அந்த அறியாமையை நீக்க மேலும் ஒரு சான்றாக
தஞ்சையை சோழர்களுக்கு முன் ஆண்ட முத்தரையன் கல்வெட்டு பாண்டியனை சங்க இலக்கியம் கூறும் "மறப்படை பாண்டியன்" என்பதை போல் "மறப்படை மீனவன்" என்று முத்தரையன் கல்வெட்டு கூறுகின்றது.

கல்வெட்டு கூறும் செய்தி யாதனில் முத்தரையன் செந்தலை என்ற சந்தரலேகையை வைத்து
தஞ்சை   நகரத்தை தலைநகராக கொண்டு சோழ நாட்டை பல்லவர்களுக்கு உட்பட்டு ஆண்ட ஒரு குறுநிலை மன்னன். முத்தரையன் பல்லவனின் தலைமையில் பாண்டியனை போரில் எதிர்க்கிறான். அப்போது விளக்கும் காட்சியே இந்த கல்வெட்டு இது திருச்சிராப்பள்ளி அருகே
செந்தலை என்னும் ஊரில் கானப்படுகின்றது. இங்குள்ள பிடாரி அம்மன் கோவில் என்ற
7-ஆம் நூற்றாண்டு பல்லவர் கால கோவிலில் தென்முகத் தூனில் உள்ள கல்வெட்டு
வாசகம்.

இடம்:செந்தலை தூன் கல்வெட்டு
தெற்கு தூன் முகம்:
ஆண்டு : 8-ஆம் நூற்றாண்டு
மன்னன்: பெரும்பிடுகு முத்தரையன்

செய்தி:
மறப்படை மீனவன் வல்லரன்
பல்லவன் சேனைகண்று புறப்படுமாறு
....பெருங்களிறுக்......

விளக்கம்:
மறப்படையுடைய பாண்டியனை எதிர்க்க வல்லமை கொண்ட பல்லவன் தன்
சேனைகளுடன் தன் யானை மீது அமர்ந்து செல்கிறான்.

மறப்படையுடையவனுக்கு தலைவன் யாராக இருப்பான் மறவனாகவே இருப்பான்.
இருந்தாலும் சில ஆதாரங்களை முன் வைப்போம். எனவே மறப்படைக்கு தலைவனான பாண்டியனும் மறவனே ஆவான்.

மறப்படை என்பதும் மறவர் படையே இதற்க்கும் ஆதாரம் கூறுகிறோம்.

இதே போல் குலோத்துங்க சோழன் கல்வெட்டும் பாண்டிய மறவர் படையுடன் ஏழகப்படையை
வென்றதாக நிறைய கல்வெட்டு வருகிறது.

இருந்தும் சில தற்குறிகள் அந்த மறவர் நீங்களா என கேக்க கூடும் அதற்கும் பொன்னமராவதியில் பாண்டியனுடன் சோழநாட்டுக்கு படை எடுத்த மறவர்கள்பற்றிய மறமானிக்கர் குறிப்பு இவர்கள் இன்னமும் பொன்னமராவதியில் இருக்கின்றனர்.


பாண்டியன் மறவனே என்பதற்கு பல ஆதாரங்களுள் இவையும் ஒன்று

நன்றி:
தென் இந்திய கல்வெட்டு தொகுதிகள்
இராகவ ஐயங்கார்(செந்தமிழ்).


நஞ்சன்கோட்டை கட்டிய தூங்கானை மறவன்( வன்னாடுடையார்)

Thanks:vikatan
https://www.google.com/amp/s/www.vikatan.com/amp/story/oddities%252Fmiscellaneous%252F150815-did-you-know-about-perambalur-ranjankudi-fort
# வன்னாடுடையார் #மறநாட்டு வேளார் #தூங்கானை மறவன்
மறவர் நாடு என்று கல்வெட்டில் அறிவித்த மறநாட்டு வன்னாடுடையார்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோட்டை. இது, பல போர்கள் நடந்ததற்கான சுவடுகளைத் தாங்கி நிற்கும் வரலாற்றுச் சின்னம். இந்தக் கோட்டையின் பெயரைக்கொண்டே ஊரும் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. 


வரலாறு 

பிற்கால பாண்டிய மன்னனின் வம்சாவளியில் வந்த தூங்கானை மறவன், 1,600 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டையைக் கட்டினார். பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டதற்குச் சான்றாக மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக அந்தக் காலத்தில் அகழியும் மதில்சுவர்களும் வைத்து, சுமார் 57.5 ஏக்கர் அளவில் இந்த ரஞ்சன்குடி(நஞ்சன்கோட்டை) கோட்டை அமைந்துள்ளது. தூங்கானை மறவன் நோய்வாய்ப்பட்டிருந்ததால் (குஷ்டம்)  இந்தக் கோட்டையின் வேலை முடிக்கப்படாமல் இருந்துள்ளது. கோட்டை முற்றுபெறாத நிலையில் மன்னன் இறந்துவிட்டான். அவருடைய சமாதி இங்கு உள்ளது.
சோழர்காலத்தில் தட்டுப்போர்

சுந்தரசோழனின் கல்வெட்டொன்று மறவன் தூங்கானை என்ற பராந்தக வளநாடுடையானும் அவன் மைத்துனன் வானராயர் அரவிந்தன் இராசாதித்தனும் தங்களுக்குள் தட்டுப் போர் தொடங்க அதில் வாணராயர் தோற்கடிக்கப்பட்டு மாண்டு போனான். அவன் ஆன்மா அமைதி பெற வாலிகண்டபுரம் கோயிலில் அவனை அழிந்தவனான மறவன் தூங்கானை என்பவன் நொத்தாவிளக் கொன்று எரிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டது.7




இடம்:அரியலூர் தட்சனாமூர்த்தி மண்டபம்
காலம்::இராசகேசரிவர்மன் சுந்தரசோழன் கிபி(968)
செய்தி:வன்னாடு(வளநாடு) பகுதியை ஆண்ட சிற்றரசனான மறவன் தூங்கான் பராந்தக வன்னாடுடையான் வரி அளவை நிர்மானம்g

இடம்:அரியலூர் தட்சனாமூர்த்தி மண்டபம்
காலம்::இராசகேசரிவர்மன் சுந்தரசோழன் கிபி(968)
செய்தி:வன்னாடு(வளநாடு) பகுதியை ஆண்ட சிற்றரசனான மறவன் தூங்கான் பராந்தக வன்னாடுடையான் மனைவி தன் குலதெய்வமான பகவதிக்கு நந்தா விளக்கு வைத்தல்.



குறிப்பு: இதே கன்னி பகவதி பாண்டியர்களுக்கும் குல தெய்வம்.

இடம்:அரியலூர் அர்த்தமண்டபம் ஜகதிப்படை கீழ்பகுதி
காலம்:ராஜாதித்த சோழன் கிபி(956)
செய்தி:வன்னாடு(வளநாடு) பகுதியை ஆண்ட சிற்றரசனான அக்கோபுகழரையர்
ஏழு கழஞ்சு பொன் கொடுத்துள்ளார்.



கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ கோவிராஜகேசரிபன்மருக்கு யாண்டு.........
பரமேஸ்வரனும் புசங்க ..கன் மறவனும் மாதேவபட்டனும்.

மறவர் நாடு என்று கல்வெட்டில் அறிவித்த மறநாட்டு வன்னாடுடையார்.

இடம்:அரியலூர் தட்சனாமூர்த்தி மண்டபம் காலம்:இராசகேசரிவர்மன் பராந்தக சோழன்
காலம்: கிபி(918) எண்:25 48/1928
\


கல்வெட்டு:
ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி...திருவேண்காடுதேவர்க்கு.....வன்னாடுடையார் மறநாட்டு வேளார்...நந்தா விளக்கெரிய
செய்தி:
மறநாட்டு வேளார் என்ற வன்னாடுடையார் திருவெண்காடு சிவனுக்கு விளக்கெரிய நிவதனம்.
இதைவிட முக்கியம் மறவர் நாடு என்ற மறநாடு(வன்னாடு) முதலில் கல்வெட்டு குறித்துள்ளனர்.
முதன் முதலில் மறவர் நாடு என்ற இடத்தை குறித்தவர் வன்னாடுடையார் ஆவார்.

இத்துடன் வன்னாடுடையார் என்ற வளநாட்டை ஆண்ட மறவர் அரசன் கல்வெட்டு உள்ளது.




சோழ, பாண்டியர்கள், போஜலர்கள், விஜய நகர மன்னர், நாயக்கர்கள் இந்தப் பகுதியை ஆட்சிசெய்தனர். அந்த மன்னர்கள் கோயில் கட்டுவதில் ஆர்வமாக இருந்ததால், இந்தக் கோட்டையைச் சீரமைக்கவில்லை. 1680-ல் முகலாயர்கள் படையெடுப்பில் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார்கள். பிறகு, முதல் நாவப் டெல்லி முகமதுகான் இந்தக் கோட்டையைச் சீரமைத்துக் கட்ட ஆரம்பித்தார். அவருடைய சமாதியும் இந்தக் கோட்டையில்தான் உள்ளது.

அதன் பிறகு முஸ்லிம்கள் இந்தக் கோட்டையை ஆட்சிசெய்தனர். 1733-ல் ஆற்காடு நவாப் தோஸ்த்தலி கட்டுப்பாட்டில் வந்தது இந்தக் கோட்டை. 1735-ல் அவருடைய மகன் சப்தர் அலிக்கு இந்தக் கோட்டையின் பொறுப்பைக் கொடுத்தார் தோஸ்த்தலி. சப்தர் அலிதான் இந்தக் கோட்டையின் முற்றுபெறாமல் இருந்த வேலைகளைச் செய்து முடித்தார்.

முகமது அலி இந்தக் கோட்டையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, இவருக்கும் தோஸ்த்தலியின் மருமகனான சந்தா சாகிப்புக்கும் 1751-ல் போர் நடைபெற்றது. இதில் முகமது அலிக்கு க்ளைவ் ஆங்கிலேயர்களும், சந்தாசாகிப்க்கு ப்ரஞ்சு படைகளும் சாதகமாக இருந்தன. 1751-ல் இந்தக் கோட்டையில் பெரிய போர் நடைபெற்றது. அந்தப் போரின் பெயர் `வால்கண்டா போர்'. போரில் இறந்தவர்கள் எல்லோரையும் இந்தக் கோட்டைக்கு வடபுறத்தில் உள்ள சப்தர் ஜங்மகான் என்ற பகுதியில் புதைக்கப்பட்டனர். இந்த வால்கண்டா போர், இந்தக் கோட்டையில் நடைபெற்றபோது இந்தக் கோட்டை சேதமடைந்தது. இந்தப் போரில் முகமது அலி படை வெற்றிபெற்றது.

முகமது அலி ஓய்வுபெற்ற பிறகு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இந்தக் கோட்டை வந்தது. 1946-ல் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் இந்தக் கோட்டை உள்ளது.               

கோட்டையின் அமைப்பு:

கோட்டை மதில் சுவர்கள் மூன்று அடுக்குகள்கொண்டவை. மேலிருந்து பார்க்கும்போது அரைக்கோள வடிவத்தில் இருக்கும். கோட்டை வெளிப்புறத்தில் மதில்சுவர்களையொட்டி அகழி இருக்கிறது. அகழிக்குத் தேவையான தண்ணீர், அருகில் உள்ள நீரோடையிலிருந்து கொண்டுவரப்படுகிறது. 

கோட்டையின் முதல் தளத்தில் வழிபாடு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை, பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு சிறு சிற்பங்களும் உள்ளன. அதேபோல் இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்துவதற்காகப் பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவர் தொடர்புடைய விஷயங்கள் இந்தக் கோட்டையில் நிறைய இருப்பது வரலாற்று ஆய்வாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்தக் கோட்டையில் தண்டனை கிணறு ஒன்று உள்ளது. அந்தக் காலத்தில் குற்றம் செய்த ஆண், பெண் இருவரையும் உயிரிழக்கும் வரை தண்டனை கிணற்றில் போட்டுவிடுவார்கள். இதை வரலாற்று ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் கோட்டையில் தற்காப்பு வழியும் உள்ளது. இவை மட்டுமல்லாமல் கொடிமேடை, பீரங்கிமேடை, வெடிமருந்துக் கிடங்கு ஆகியவை மேல் கோட்டையில் அமைந்துள்ளன. கீழ் கோட்டையில் நுழைவுவாயிலுக்கு அருகில் ஒரு மண்டபம், எதிர்புறம் தண்டனை கிணறு, பள்ளிவாசல் ஆகியவை உள்ளன. இதற்கு தென்புறத்தில் வட்டவடிவமான மூன்று தடயங்களும், தற்காப்பு வழியும் உள்ளன. 

கோட்டையில் உள்ள மண்டபத்தின் அருகில் சுரங்கப்பாதை உள்ளது. போர்கள் உச்சகட்டம் அடையும்போது அரசர்கள் தப்பிச் செல்வதற்காக சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கத்திலிருந்து நகரின் மையப் பகுதிக்கும், ஊரின் எல்லைக்கும் செல்வதற்கு பாதைகள் உள்ளன. இதை தற்போது தொல்லியல் துறை  மூடிவைத்துள்ளது.

உட்கோட்டையில் இரண்டு குளங்களும், முரசுமேடை, பள்ளிவாசல், உப்பளப் பாத்திகள் உள்ளன. காலப்போக்கில் உப்பளப் பாத்திகள் எல்லாம் மண்மூடிப்போய் அழியும் நிலையில் உள்ளன. இந்தக் கோட்டையில் குடிநீர்க் கிணறு மற்றும் 9 கிணறுகள் உள்ளன. அநேகக் கிணறுகள் மண்மூடியே காணப்படுகின்றன. மழைநீர் சேகரிப்பு குளமும் உள்ளது. இந்தக் கோட்டையைப் பற்றிய கல்வெட்டு, வாலிகண்டாபுரத்தில் உள்ள வாலிஸ்வரன் ஆலயத்தில் உள்ளது.

வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் ஓர் இடமாக ரஞ்சன்குடி கோட்டை இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக வரலாற்றுச் சுவடுகள் தெரிவிக்கின்றன

# வன்னாடுடையார் #மறநாட்டு வேளார் #தூங்கானை மறவன்