Tuesday, April 22, 2014

பட்டமங்கலம் தொண்டைமான்கள்

பட்டமங்கல நாடு என்று அழைக்கபடும் நாடு சிவகங்கை ஜில்லா காளையார்கோவிலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் நாடு. இந்த நாட்டை ஆளும் குறுநில அதிபர்கள் தங்களை அறந்தாங்கி தொண்டை மன்னனின் வம்சத்தில் உதித்தவர்கள் என கூறுகின்றார்கள். இந்த பட்டமங்களம் திருவிளையாடல் புரானத்தில் வரும் படலமான "பட்டமங்கை காத்தருளிய ஈசர் படலம்" பெற்ற தக்ஷினாமூர்த்திக்குரிய குருஸ்தலமாகும்.


பட்டமங்கல அதிபர்களான அம்பலக்காரர்களுக்கு திருக்கோஷ்டியூர் தேர் திருவிழாக்களில் முதல் மரியாதைகள் தரப்படுகின்றன. இவர்களது வரலாறுகளில் இலங்கையை படையெடுத்து அதை வென்ற அறந்தாங்கி தொண்டையர் மன்னனின் வழிவந்ததாக இவர்களின் குல தெய்வ கோயிலான "பைரவர் கோவில்" பதிகம் கூறுகின்றது.இந்த பட்டமங்களம் தொண்டைமாண்கள் நாட்டார் கள்ளர் இனத்தை சார்ந்தவர்கள்

இந்த பட்டமங்கல தொண்டைமான்களின் வரிசையில் வந்த வைத்தியலிங்க தொண்டைமான் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் தெரிவிக்க படுகின்றது. இவர்கள் சிவகங்கை சம்ஸ்தானத்துக்குட்பட்ட பாளையக்காரர் எனவும். இவர் சிவகங்கை மன்னருக்கு நெருக்கமானவராக திகழ்ந்துள்ளனர். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத தேவரின் மறைவிர்க்கு பின் நடந்த வாரிசுரிமை சண்டையில் மருதுசகோதரர்களுக்கு எதிராக படமாத்தூர் கௌரி வல்லபதேவரை ஆதரித்தற்க்காக முன்பு நட்பாய் இருந்த மருது சகோதரர்களின் எதிர்ப்புக்கு ஆளானார் என தெரியவருகின்றது. மருதுசகோதர்களுக்கும் இவருக்கும் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்ததாக தெரிகின்றது.

ஒரு முறை சின்ன மருது காளையார்கோவிலின் கோபுரத்தை பெரிதாக கட்டியபோது இவரை அழைத்து கோபுரம் எப்படி என கேட்க இவர் சகஜமாக ஒரு பனைமரம் அளவே உள்ளது என வேடிக்கையாக கூறினார். அதற்க்கு மருது என்ன பனைமரம் அளவா எப்படி சொல்கிறீர்கள் என வினா எழுப்ப. ஒரு வளரியை வாங்கி தான் பனைமரம் அளவு வளரி வீசுவேன் என வைத்தியலிங்க தொண்டைமான் வளரியை கோபுரத்தின் மேல் வீசி அந்த கோபுரத்தை தாண்டி வீசி எறிந்து காட்டினார் என ஒரு சம்பவம் தெரிவிக்கின்றது.

ஒரு முறை காளையார்கோவிலில் தெப்பக்குளம் அமைத்த சின்ன மருது அந்த தெப்பக்குளத்தில் பல் நீரூற்றுகள் கிளம்பி அதன் தன்னீர் சமையத்தி அளவுக்கு அதிகமாக பெருக வைத்தியலிங்க தொண்டைமானை அழைத்து அதை சரி செய்ய யோசனை கேட்டார் எனவும். அதற்க்கு தொண்டைமான் அயிரைமீண்கள் பல வாங்கி விட்டால் இந்த தேவையில்லாத நீரூற்றுகளை சரி செய்யலாம் என யோசனை தெரிவித்திருந்தார்.

பின்னர் ஒரு முறை வாரிசுரிமைபோட்டியில் படமாத்தூர் கௌரிவல்லபரை வளைத்த மருது அவரை சிறையில் அடைத்ததாகவும் அப்போது ஒரு நாட்டிய காரப் பெண்ணின் உதவியோடு அவரை தப்பிக்க வைத்ததற்க்காக வைத்தியலிங்க தொண்டைமான் மீது கோபம் கொண்ட மருது அவரை தனது திருப்பத்தூர் கோட்டைக்கு அழைத்தார். வைத்தியலிங்க தொண்டைமானும் திருப்பத்தூருக்கு வருகை தந்து மருது இல்லாத காரனத்தால் திரும்பும் பொழுது மருது வீரர்களாள் சுற்றி வளைக்கப்பட்டர். தான் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளாவோம் என தெரிந்த வைத்தியலிங்க தொண்டைமான் தனது கத்தியாலேயே தன்னை குத்தி தற்கொலை செய்து கொண்டார்.இது திருப்பத்தூர் கோட்டை கருப்பர் கோவிலுக்கு அருகே நடந்தது.

The Role of Vaithiyalinga thondaiman in the escape of padamathur gowri vallaba thevar

It would not be out of place here to make a mention of Vaithyalinga thondaiman of pattamangalam, who was an ardent supporter of padamathur gowri vallabha thevar. It was popularly known that Vaithyalinga thondaiman was poligar of pattamanagalam nadu in sivaganga kingdom. He had schemed a plan to rescue padamathur Gowri Vallabha thevar,the adopted son of Rani Velu Nachiyar,who was kept imprisoned at kalaiyarkoil temple by china Marudhu.

Vaithyalinga thondaiman arranged a bullock cart with roof covered. He and particular dancing girl at Kalayarkoil temple hide the adopted prince into bullock cart and safely dispatched him secretely to Aranthangi via Thuvarankurichi. Few months later the spies employed by Chinna maruthu informed him that it was Vaithilinga Thondaiman who had master minded that plan of escape of the prince to Arantangi. Having been infuriated and enraged,Chinna Maruthu vowed to punish the pattamangalam poligar at any cost for this act of treachery.

Later Chinna Marudhu was at the for of thiruputtur Vaithiling Thondaiman,being afraid of Chinnamarudhu wanted to meet him and offer his explanations regarding the escape wanted to meet him and offer his explanations regarding the escape of the prince. He went into the fort of thiruputtur to meet china Maruthu. In the absence of china marudhu at the fort Vaithyalinga thondaiman returning from fort.

At the southern gate of the fort a number of soldiers of china maruthu with swords drawn surrounded Vaithilinga Thondaimaan and attempted to kil him. H knowing the intentions of the soldiers,drew his personal sword and stabbed himself to death. The thondaiman avoid arrest and torture by china maruthu so he ended his live in front of kottai Karuppar temple at thirupputtur kottai karuppar was his tutelary diety. After his being installed as zamindar of sivagangai,padamathur Gowri Vallabha Thevar and residents of pattamanagalam honoured his bravery by eracting a statue at kottai karuppar temple at thiruppathur.

Thiru Sowmiya narayana madhava thondaiman,the lineal descent of vaithiyalinga thondaiman served as minister in Srilanka.

Evidence:”Kathai sollum Kalvettu” a book of pagai naadan and pattamangalam kumbabisheka malar.

இதன் பின்பு பட்டமேற்ற கௌரிவல்லபத் தேவர் வைத்தியலிங்க தொண்டைமானின் தியாகத்தையும் உதவியையும் பாராட்டி அவருக்கு திருப்பத்தூர் கோட்டை கருப்பர்கோவிலுக்குள் ஒரு சிலை வைத்தார். இன்றும் அந்த கோவிலில் வைத்தியலிங்க தொண்டைமானின் சிலையை கானலாம்.

வைத்தியலிங்க தொண்டைமானின் வம்சாவளியினர் பட்டமங்கலத்திலும் இலங்கையிலும் நிறைபேர் வாழ்கின்றனர். இலங்கையை சேர்ந்த தமிழ் அமைச்சரான சௌமிய மாதவ தொண்டைமான் வைத்தியலிங்க தொண்டைமானின் வம்சத்தை சார்ந்தவர் ஆவார்.

ஆய்வுக்கு துனை.:
பாகேனேரி நாடும் பட்டமங்கல தேரோட்டமும்(ஆண்டு கும்பாபிசேக மலர்)
மதுரை நாட்டின் மானுவல்-அலெக்சாண்டர் நெல்சன்
Reference:
Litigation of Sivaganga Zamindary by K.Annasamy Iyer
Report of the collector of Madurai dated 11th February 1792 Madura District Record Vol 1209

Tuesday, April 15, 2014

ராமப்பையன் அம்மானையும் சேதுகரை யுத்தமும்


தாயகத்தையும் அதன் உயரிய மான்புகளையும் காக்க போரிட்ட மறக்குல மக்களையும் இந்த யுத்தத்தில் பங்கெடுத்த மறவர் நாட்டின் மாபெரும் படைத்தலைவர்களான வன்னிய தேவன்,மதியழகன்,குமாரத்தேவன்,மத்ததேவன்,வீசுகொண்ட தேவன்,கருத்துடையான் ஆகியோர்களை என்றென்றும் நினைவு கூறுவோம்.உங்களின் வீரத்தையும் தாய்நாட்டிற்கு போரிட்ட கதைகளை எங்களின் சந்ததிக்களுக்கு கூறுவோம். என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்.

"போரெனில் புகலும் புனை கழல் மறவர்"(கலித்தொகை)

"பகையெனில் கூற்றம் வரினும் தொலையான் மறவனே"

மதுரை கைப்பற்றி,ஆண்டு கொண்டிருந்த விஜயநகரின் படைப்பிரிவின் தலைவனான விசுவநாத நாயக்கனின் வம்சத்தை சார்ந்த திருமலை நாயக்கரின் காலம். இவரது படைத்தலைவனான ராமப்பைய்யர் என்பவர் தலைமையிலான தெலுங்கு மற்றும் கன்னட கூட்டமைப்பு படைகளுட அவர்களின் துனைபடைகளாக சென்ற சில கூலிப்படைகளும் மறுபுரம் தமிழை தாய்மொழியாக கொண்ட மதுரையின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த தமிழை தாய்மொழியாக கொண்ட செம்பி நாடு மறவர்களின் இராமநாதபுரம் அரசுகளின் மறவர் படைகள் மறுபுறமும்.

இராமப்பையன் அம்மானை(சரஸ்வதி மகால் சுவடி என்.405)

இராமப்பையன் வரலாறு

சங்கையுள்ள வேதியர் குலத்தில் வந்தவன் கான்
துங்க வளனா துலங்க வந்த புத்திரன் காண்

சண்டைக்கு அனுப்புமாறு நாயக்கனை வேண்டியது
"மதுரை நகர் வாழும் மன்னவனே,நீ கேளாய்
நாலுதிக்கு மெட்டும் பதினாறு கோணமெல்லாம்
திக்கடங்க வெட்டித் திறை கொண்டே தானு மின்று வணங்காத
மன்ன்ர் தம்மை வணங்கு வித்தேன்.....
எனக்கு விடை தாரு" மேங்க்கேட்டான்"

திருமலை மன்னர் தடுத்தல்

"வீண்புகழி ராம நீ வீரியங்கள் பேசாதே
பண்டு முன்னாள் நஞ்சேனை பாருலகில்
கோரைவாய்க் காலதனில் கொள்ளையிட்டோம்..
வேண்டாங்கான் ராமா நீ வீரியங்கள் பேசாதே

இராமப்பையன் இனியும் கேட்டல்

"பட்டவாய் மதங்கள் பேசி மறவன் நிருபத்தை கண்டால்
கிழித்தெறிவேன் கச்சி திருமலேந்திரன்
தாடான்மை யாக அவன் வைத்த தானையும் முன்னாள் நஞ்சேனை முனைசமரில் வென்றதுவும்
இன்றளவுங்க கப்பங்க கட்ட திருந்ததுவும்
திருமுகத்தைத் தான் கிழித்த திறமுஞ் சமர்தறிய

அதற்கு நாயக்கன் விடை

"வாள் வீர ராம மன்னவனே நீ கேளாய்
கடும் பரியானையும் கனத்த பெருங்க் குஞ்சரமும்
அங்காரி சொல்லும் அருனா திரிதனையும்
தாங்காமல் நின்று சதிர்மானஞ் செய்தவன் காண்

இராமன் சொல்

"ஆண்டவனே இப்போ தடியேன் சொல் விண்ணப்பம் கேள்
பாளையக்காரரெல்லாம் பயந்து வணங்குவர் கான்
வணங்காமல் தானிருக்கும் வண்டமறவனையும்
வளைத்துப்பிடித்து வந்து வணங்க வைப்பேன் ஆண்டவனே
எனக்கு விடைதாருமய்யா!"

நாயக்கர் சொல்

"வேண்டாமடா ராம வீரியங்கள் பேசாதே
பண்டுமுன்னாள் நம்சேனை பாருலகு தானறிய
குழல்வாய்க்(பீரங்கி) கிரையாக கொள்ளைக் கொடுத்தோம்
யின்று பகைத்தால் எதிர்த்த மன்னர் தான் நகைப்பார்
சேதுக்கரை தனிலே சென்றவர்கள் மீண்டதில்லை
வாளுக்கு இரையிட்ட மறவன் வலுக்காரன்
துப்பாக்கி மெத்த உண்டான் தோலா மறவனுக்கு
தன்னரசு நாடு தனிக்கோட்டை யாளுவனாம்
மதுரைப் படையென்றால் மதியான் மறவனுந்தான்
மறவர்கள் சற்று மதியார் வடுகன் என்றால்
உன்னுடைய வாள் திறத்தை ஒருக்காலு மென்னுகாண்
வேண்டாமட ராம வீரயங்கள் பேசாதே

இராமய்யன் சொல்

"அரசர் பெருமானே ஆண்டவனே சொன்னீரே
பண்டு வடுகரென்று ப் ஆராமல் நின்றுரைத்தீர்
எங்கீர்த்தி தன்னை யிளிக்கேளு மாண்டவனே
வஞ்சனைகள் பண்ணுகிற மறவர்களெல்லாரும்
தஞ்சம் என்று வந்து சரணம் சரணம் என்பர். மைசூர் கோட்டைதனை மதியாமல் நானிடிப்பேன்
வங்காளம் கொங்கு மலையாள முள்ள தெல்லாம்
தாங்காம் லுன்பாதம் சரணம் பனியவைப்பேன்
கட்டத கப்பமெல்லாம் கட்டவைத்தே உன் அருளால்
மதுரை திருவாசலிலே வந்து பணிய வைத்தேன்
வையத்துள்ள மன்னர் மனு ராசக்கள்
"சென்ற மறவனிட செய்தியெல்லாம் பார்த்துவர
பண்டைப் படைவெட்டும் பார்த்துவர
போய்வாரேனென்ற புகழ்ராமனிப்பார்த்து

நாயக்கர் சொல்

வணங்காமுடி வேந்தன் வாகாய் சிரித்துரைப்பான்
"எப்படியோ வென்று யெண்ணி நினையாமல்
இல்லாத செய்தியெல்லாம் ஏனுரைத்தாய் ராமா நீ
முன்னமே தானிறந்த முனைவடுகர் பற்றாதோ
மறவனுடைய பூமியிலே மாள்வையென்று கற்றிலையோ"
"பெற்றார் பிறந்தார் பெயர்போன் நங்குலத்தார்
உற்றாருறன்முறையோருள்ள வடுகரெல்லாம்
பாளையக்காரர் படைத்தலைவரெல்லாரும்
வேளையதில் வென்றுவரும் வீரப் பரிவாரங்களும்
தொட்டியர் கம்பளத்தார் தோறாத சேவகரும்
சூரப்பையனை வெட்டிச் சூறையிட்டான் கண்டாயே
ஆங்காரியஞ் சொல்லும் அருணாத்திரிதனியும் பண்டு
வடுகர் படைத்தலைவரத்தனையும்
சதுரேறி வெட்டி சதிமானம் செய்தவன் காண்
சேதுக் கரை தன்னில் சேர யிறந்து விட்டார்
காட்டிலே வெட்டி கழுகுபசி தீர வைத்தான்
வெற்றி சங்கூதி விருது பறித்தவன் காண்
முன்னமே வெட்டி முணைகண்டான் மறவனுந்தான்
இந்நாளிலேதான் என்னேம் வடுகரென்றால்
வேண்டாங்கான் ராமய்யனே வீரியத்தை விட்டுவிடும்"

இராமய்யன் சொல்

தென்னவரே முன்னமே நம்சேனை முடிந்தார்களென் றுரைத்தீர்
மன்னவர்கள் மெத்த மடிந்தார்களென்றுரைத்தீர்
' அந்த மறவன் படும்பாடு கேளுமய்யா

"அரக்கர் குலத்தை அனுமாரறுத்தது போல்
மறக்குலத்தை நானும் மாய்த்து கருவருப்பேன்"
"வெட்டி சிறைபிடித்து வேந்தன் சடைக்கனையும்
கட்டிக் கொண்டுவருவேன் கர்த்தனே உன்பாதம்
போய்வாரேனய்ய பொருந்த விடை தாரு" மென்றான்

திருமலை மன்னர் விடை தந்து அனுப்புதல்

வணங்கா முடிவேந்தன் மனமகிழ்ந்து தான் சிரித்து
பல ஆபரனங்கள் தந்து மரியாதைகள் பல செய்து
சொக்கர் மீனாட்சி அருளாலே நல்லது நிறைவேற என அனுப்பி வைத்தான்.

முதலாவதாக தெலுங்கு படைகளை பொருத்தவரை அது தமிழ் மன்னை ஆக்கிரமித்து நிலைகொண்ட படை அந்நிய ஆக்கிரமிப்பு படை. மறவர் படையை பெருத்தளவில் தமிழ் மக்களின் காவல் உரிமையையை தங்களின் பிறப்புரிமையாக கொண்டவர்கள் மறவர்நாடு தங்களின் தாயகம் என்றும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மறவர்களின் புனிதமிக்க மன். போருக்கான காரணம் மறவர்களின் வாரிசுரிமை பிரச்சனையில் மதுரை தெலுங்கரான நாயக்க மன்னரை அனுகி உதவி கேட்ட ஒருவருக்காக உதவி செய்ய காரணம் காட்டப்படுகின்றது. அன்றை கிரித்துவ மிஷினரி பாதிரியார்களின் கடிதங்கள் தான் கிழக்கில் இருந்த மறவர் அரசு தெலுங்கு கூட்டமைப்பு முன் பனியாமல் இருந்ததாக தெளிவாக கூறுகின்றனர். போருக்கு அனுமதி கேட்கிறார் மதுரைப்படைத் தலைவரான ராமப்பைய்யன். திருமலை நாயக்கரோ "வேண்டாம் ராமா வடுகன் என்றால் மறவர்கள் மதிக்க மாட்டார்கள் மதுரை நாயக்க படை என்றால் மறவர்கள் மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கென்ற என்று தனிநாடு,கோட்டைகள் உண்டு மறவர்கள் தன்னரசு நாடு உடையவர்கள். மறவர்களுடன் போரிட்டு ஜெயித்தவர் யாரும் இல்லை சேதுக்கரைக்கு சென்றவர் மீண்டதில்லை வாளுக்கு இரையிட்ட வழுக்காரன் மறவன்" வீன் வசனங்கள் பேசாதே வேண்டாம் என மறுக்கிறார்.
மேலும் ஏற்கனவே நாம் மறவர்களோடு நடத்திய போர்களில் மறவர்களின் பீரங்கிகளுக்கும் வாளுக்கும் ஆயிரம் நமது படை வீரர்களை பலியாக கொடுத்துள்ளோம் ஏற்கனவே நமது படைகள் மறவ நாட்டில் பட்ட பாட்டையெல்லாம் மறந்துவிட்டாயா எனத்திருமலை நாயக்கர் கேட்கிறார்.

"அருனாத்திரி" என்ற படைதலைவரையும் அவருடன் சென்ற ஆயிரம் ஆயிரம் படைவீரர்களை மறவர்களிடன் பலிகொடுத்து தோல்வி மேல் தோல்வி பெற்று பின் வாங்கி ஒடிவந்ததை மறந்து விட்டாயோ என கேட்கிறார் இம்முறை கண்டிப்பாக மறவர்களை வெற்றி கொள்ள முடியும் என ராமப்பையன் தொடர்ந்து வற்புறுத்துகிறான். தெலுங்கு படைகளோ ஒரிசாவை,மராட்டியத்தை வென்றபடை மறவர்களை ஜெயித்து விடலாம். என வற்புறுத்துகின்றான். வேண்டா வெறுப்பாக திருமலை மன்னரின் அனுமதி கொடுக்கிறார்.

ஒரு லடசம் பேருக்கு அதிகமாக படைதிரட்டப்படுகின்றது. யார் கலந்து கொண்டார்கள் என ராமப்பையன் அம்மானை தெளிவாக விளக்குகிறது.பல்வேறு கூலிப்படைகள் ராமப்பையனால் திரட்டப்படுகின்றன மேலும் இலங்கையில் இருந்து போர்த்துகீசியர் ,சிங்கள படைகளும் திருமலை நாயக்கருக்கு உதவியாக வருகின்றன. படைகள் திருப்புவனம் வழியாக மானாமதுரை வந்து முகாமிடுகின்றன.அங்குள்ள காடுகளை வெட்டி கோட்டையை சீர்மைக்கின்றனர். ஒரு தூதுவனை போர் தூது சொல்ல அனுப்புகின்றனர்.தூதுவன் சேதுபதியிடம் செய்தியை கூறுகின்றான்

சடைக்கன் உறைத்தல்

"ஆண்டவனே யிப்போது அடியேன் பயந்து வந்தேன்
என்று சொன்ன தூதுவனை யேறிட்டுத் தான்பார்த்து
ஒன்றுக்கு மஞ்சாதே உரையை இடு தூதுவனே
கச்சித்திருமலேந்திரனுக்கு கன்னான ராமய்யனும்
மானா மதுரையிலே வளைந்தடித்தான் கூடாரம்
கோடிக் குறுவெள்ளம் கொண்டுவந்து விட்டாற்போல்
இந்தப் பெருஞ்சேனை எங்கே யிருந்ததோ
கண்டு பயந்து வந்தேன் கர்த்தாவே அய்யாவே"

சடைக்கன் சீற்றம்

பூண்ட மணிமார்பன் புகழ்சடை காணும்போது
சீறுவடி வாளசைத்துஸ் சினந்தான் சடைக்கணுந்தான்
எறிந்துவிட்டு பம்பரம்போல் யிங்கே நீ வோடிவந்தாய்
முன்னால் நம்மாலே முண்டுவந்த மன்னரெல்லாம்
பரம்பக்குடி கோட்டையிலே பட்டன் தரிப்பரே
துப்பாக்கி தன்னாலே சூறையிட்டான் கண்டாயே
அறிந்திருந்தும் பார்ப்பான் அவன் படைதான் வந்ததேன்றால்
................................
பார்ப்பானை கண்ணை பிடுங்கி காட்டிலே யோட்டிடாமல்
என் பெயர் தான் சடைக்கனோ எடுத்ததுவு ஆயுதமோ
பின்குடுமி தன்னில் தேங்காயைக் கட்டி சிதற அடிக்காவிட்டால்
என்பேர் சடைக்கனோ எடுத்ததுவு மாயுதமோ
ராமநாதஸ்வாம் பூசைபண்ணு நல்லொதோர் பண்டாரமே

வாள்கோட்டைராயர்(சேதுபதி) வன்னியத்தேவனிடம் கூறுதல்

"எம்மருகா வன்னியரே யிப்புதமே கேட்கலையோ
மதியானவர்களை வாவென்று தானழைத்து
மக்கதிலானையெனும் மதப்புலியை தானழைத்து
சின்னாண்டி பெரியாண்டி சென்று சமர் வென்றவனே
வெண்ணிமாலை குமரா வீரா வாவென்று
சேதுக்கு வாய்த்த சேவகனே வாவென்று
வாதுக்குபடிவரும் மதுரை வழி கண்டவனே
கொண்டையங்கோட்டை மன்னவனே
செம்பி நாட்டிலுள்ள சேர்ந்த படை மன்னவனே
வீசுகொண்ட தேவனை அழைத்து
மங்கல நாட்டு வணங்காத மன்னவரே
குமாரன் அழகனையும் கூப்பிட்டு கிட்டவைத்து
கன்னன் கலியானி காவலனே வாருமென்று ராவுத்த
நரைபடை காவாளும் மாப்பிள்ளை வன்னியரே
வேங்கை புலியாரே வீரப் பரிவாரங்களை அழைத்து
மானா மதுரையில் சென்று சேருமின்
மறவர் பதில்
மதுச்சடைக்கன் தானுரைக்க மறவருமங்க் கேதுரைப்பார்
வீசு கொடை தேவன் வேந்தன் முகம் பார்த்து
பார்ப்பான் படையெடுத்தால் பறாமென்று சொன்னீரே
வந்த வடுகெரெல்லாம் மடிந்தார்களன்னாளில்
இந்த விசை வாரான் இவன் பிழைத்து போவேனோ
வாரபடை யத்தனையு மடியவே போர்டுவோம்
சூறையிட்டு சுத்தித் துணிபிடுங்கி வாரோமய்யா"

மறவர்களின் தரப்பிலோ சடையக்க சேதுபதிகளது மருமகனும் படைதலைவனான பட்டினம் காத்தான் வன்னிய தேவன் தன்னுடைய படைவீரர்களை அழைக்கிறார். வன்னியதேவனிடம் மறவர்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்கிறார் மறவர் படையினரோ எந்த வித சமரசம் வேண்டாம் எனவும் தாங்கள் போரிட விரும்புவதாகும் தாங்கள் தலைவரிடம் தெரிவிக்கின்றனர். ஐந்து பெரும் படைதலைவர்கள் தலைமையில் மறவர் படைகள் யுத்தத்திற்கு தயாரகின்றன "மத்ததேவன் என்கிற ஒரு தளபதி இவர் பரமக்குடி அருகில் உள்ள கீழப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்தவர் என கருதப்படுகின்றது. இரண்டாவதாக உடையான் என்ற கருத்துடையான் என்ற தளபதி இவர் சிவகங்கை அரசர்களின் முன்னோரான பர்த்திபனூர் அருகில் இருக்கும் குளந்தாபுரி என்ற அருங்குளத்தை சார்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. அடுத்தாக வீசுகொண்ட தேவன் என்ற கொண்டையங்க் கோட்டை மறவர் தலைவர் தமது படைகலுடன் வருகிறார். ஐந்தாவதாக ஒரு தமிழ் இஸ்லாமிய தளபதி அவரது பேரும் இதில் குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் சேது மன்னர்கள் மீது மிகுந்த பற்று கொண்ட கன்னிராஜ புரம் கனிசேர்வை என்ற சேர்வை பட்டமுடைய தமிழ் முஸ்லீம் தளபதியாக இருந்தார். இது தவிர மதியழகன்,குமரத்தேவன் என்கிற இரண்டு தளபதிகள் பற்றிய குறிப்புகள் அம்மானையில் வருகிறது.இவர்களுடன் பெரும்படை பூதாலுடைய தேவர்,வெற்றிமாலையிட்டான், செறுவாறுடை சிங்கத்தேவர், பகழியூர் கூத்ததேவர்,வில்லை கொண்ட வேதமுடைய தேவர், வல்வேல் சத்த உடையான், நற்சோனை சேர்வைக்காரர்,பெரியசந்தனத் தேவர்,கூரி சாத்த பெரிய உடையன தேவர்கோட்டைசாமி தேவர்,திருக்கை உடையன தேவர்,கொம்மாயத்தேவர்,பகைவென்ற ஜெயக்கொடி தேவர். படைதளபதிகள் உள்ளனர். இப்போரில் மறவர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தளபதி வன்னியத்தேவனின் பெரும் பேராற்றல் வெளிப்படுகின்றது. போருக்கு செல்லும் முன் பெண்கள் குலவையிடுகின்றனர். படைவீரர்கள் குளித்து அரச முறைப்படி சந்தனமிட்டு வேல் கம்பில் பூ கட்டி. சேதுபதி அரசரின் அரச விருந்து ஏற்பாடாகின்றது.

வன்னிய தேவன் சொல்

மட்டுப்படாத வன்னியன் மதம்பொழிந்து கொக்கரித்து
"கெட்டனோ பார்ப்பன் கீழ்திசை நோக்கிவந்து
பஞ்சாங்க சொல்ல வேறு இடமில்லையா
பூசைபண்ணித் தான் பிழைக்க பிள்ளையார்
தானில்லையோ
பார்ப்பனும் முன் வந்து தெரிபட்ட முதலிமார் சொல்லவில்லையோ
வடுகர்பட்ட பாடெல்லாம் மறந்தார்கள் மன்னவர்கள்
பார்ப்பானு மிதுதேசம் படையெடுக்க வந்தானோ
"பார்ப்பான் குடுமியில் தேங்காயை கட்டி யடிப்பேன் என்றான் கன்னன் புலி
வன்னியன்றான் "மார்பிலிடும் பூனூல் பறித்து மாட்டுவடம் போட்டிடுவேன்
ஆண்பிள்ளை சிங்கம் வன்னி அம்மான் முகம் பார்த்து
"வேண்டாம் மறவர் விசாரமினி வேண்டாங்காண்"
வங்கார மான வன்னி வாது சொல்லி தாம் மெழுந்து.

சேனை செல்கை

மற்றைநாள் தானும் மன்னன் புலி வன்னித்துரை
மதியாற்றழகனையும் மன்னன் குமாரனையும்
சின்னயாளியவுக்கு சேர்ந்த படை யத்தனையும் அரியாணிபுரக் கோட்டைக்கு அதிசீக்கிரத்தில் போகசொன்னான்
புயத்தையுடைவாள் போர்வேந்தன் தன்
படையும் வீசுகொண்ட தேவன் வீமன் பெரும்படையும்
புதுக்குடி கோட்டைய்க்கு போமென்று தாமுரைத்தார்
மதுரை வழிகண்ட மத்ததேவன் தன்படையும்
கறுத்த உடையான் கன்னன் பெரும்படையும்
ராவுத்த உடையான் காத்தன் நல்லபடைக்கு காவாளும்
போகலூர் கோட்டைக்கு போமென்று தானுரைத்தார்
வட்டாணதொண்டியில் வையுந்தன் தானியத்தை இளையாங்குடிக்கோட்டை யெச்சரிக்கை
மற்றநாள் தாண்தானும் மன்னன் புலிவன்னியவன் அரியானிபுறக்கோட்டை
அதிசீக்கிரம் போயிறங்கி கோட்டை புகுந்து கொத்தளத்து மேலேறி
யெதிரி படையை யேறிட்டு தான்பார்த்து
"எங்கே இருந்த்தடா இந்த பெரும்படை
கோடாங்கிக்காரன் வெள்ளமென கொண்டு வந்து விட்டனோ" என வன்னியத்தேவன் வீரியங்கள் பேசினான்.

முதல் நாள் சண்டை

இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிடவேண்டும். திப்பு சுல்த்தான் காலத்திலே இராக்கட் வெடி பயன்படுத்தபட்டது என சிலர் கூறுகின்றனர். ஆனால் திப்புசுல்த்தானுக்கு 300 வருடங்களுக்கு முன்பே இராக்கட்டை நம் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். மேலும் சேதுபதிகளின் மறவர் படையில் குழல்வாய்(பீரங்கி),துப்பாக்கி,எறிவாணம்(இராக்கட்) முதலிய நவீன ரக ஆயுதங்கள் பயன்படுத்தியுள்ளதாக போர்ச்சுகீசியர் மற்றும் அரசு ஆவன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பார்ப்பான் படைமேலே பாருலகு தானறிய
எறிந்தார் எரிவாணம்(இராக்கட்) எல்லையற்ற சேனைமேல்
சுடரா க்குவைக்கார சொல்லரியா மன்னரைத்தான்
குத்தி விரட்டிக் கூடாரன் கொள்ளையிட்டார்
வெறுப்பட்டு குத்தி விரண்டோடிப் போவாரும்
குத்துண்டு போர்க்களத்தில் கொலவையிட்டு நிற்பாரும்
காலறுந்து வீழ்வாரும் கையறுந்து வீழ்வாரும்
குறைப்பிண்மாய் நின்று கூத்தாடி நிற்பாரும்
மன்னன் புலி வன்னியவன் வாகாகவே திரும்பி
வெற்றி சங்கூதினான் விருது சடைக்கனவன்
பார்ப்பன் பெரும்படையில் பட்டார்கள் முன்னூறு
மறவர் அறுபது பேர் மாண்டார் களத்திலே

தெலுங்கர் படைக்கு தலைமை ஏற்றவர்கள்

அந்தநாள் சென்று அலைகதிரோன் போய் மறந்தான்
பாளையக்காரர்களுக்கு அழைப்பு விடுமென கதறினான்
"மண்டூறு பார்ப்பானே வாருமென்று
நத்தத்து லிங்கையனும் நல்ல படையாலும்
கோடப்ப நாயக்கன் கூட்டப் பெரும்படையும்
வீரமலை நாய்க்கன் வேந்த பெரும்படையும்
எட்டப்ப நாயக்கன் எல்லையற்ற காலாளும்
தொட்டப்ப நாயக்கனும் தொறாத சேவகனும்
இருவப்ப நாயக்கன் யெதிரில்ல மன்னவனும்
பூச்சி நாயக்கன் போர்வேந்தன் தன்படையும்

முத்தைய நாயக்கன் போர்வேந்தன் தன்படையும் முருக்கு நாடு மூவரைய தேவன் படையும்
தெண்காஞ்சி மூக்கன் சிவிலிமாறன் படையும்
கோத மறுடி கோத்ஹ்ட பெரும்படையும்
குற்றால தேவன் கூட்டப் படையும்
தென்மலை வன்னியனும் சேனை தளமும்
கட்டபொம்மன் நாயக்கன் கனத்த சேனையும்
ஊற்றுமலையானும் உகந்த பெரும்சேனையும்
கீழ்முகத்து தும்பிச்சி நாயக்கனும்
மேல்முகத்து தும்பிச்சி விருதுபுகழ் காலாளும்
ஏழு மடையிலி வைப்பான் தன்படையும்
வென் நாயக்கனும் உற்ற புகழ் காவலாளும்
போருக்கு அதிகாரி பொம்ம நாயக்கன் படையும்
அப்பச்சி கவண்டன் ஆன பெரும்படையும்
ஏழாயிரம் பண்ணை எதிரில்லான் தன்படையும் கணக்கதிகாரி கவண்டன் பெரும்படையும்

நரிக்கு விருந்தாக்கும் நல்ல சிறுபொம்மனும்
முட்டிவெட்டி சூறையிடும் முத்தப்ப நாயக்கனும்
இருந்துமாந்து இலப்பையூர் நாயக்கனும்
பள்ளியில் சின்னையனும் பார்வேந்தன் தன்படையும்
ஆய்க்குடி கொண்டைய நாயக்கனும் விருப்பாச்சி நாயக்கன் வேந்தன் படையும்
கன்னிவாடி நாயக்கனும் கதித்த படை காலாளும்
லிங்கம நாயக்கன் நீதியுள்ளன் தன் படையும
பெருஞ்சேனை பெத்த நாயக்கன் அனைத்தும்
வாலப்ப நாயக்கன் வலுவுள்ளான் படையும்
வெங்கம நாயக்கன் காவலாளும்
விசுங்க நாடு விருது புகழ் காவலாளும்
செல்வப்பொட்டி நாயக்கன் சேனையும்
திருமலை பூச்சியனும் சேனைபடையரும்
சொக்கலிங்க நாயக்கன் தன்படையும்
மனலூறு நாயக்கன் வேந்தன் படையும்
வேலப்ப நாயக்கன் வேந்தன் படையும்
மருதப்ப தேவன் வேந்தன் படையும்
கோடாங்கி ரெட்டிக் குலைகளும்
மூங்கிலனை பூசாரி படையும்
பட்டத்து நாயக்கன் பரிவாரமும்
அரியலூரும் அவன் படைகளும்
வால சமுத்திரத்தின் மன்னன் படை தளமும்
குன்னத்து ரெட்டி குமரன் படையனைத்தும்
நாஞ்சில் நாட்டு துரையும்
மலையாள ராஜாவும் பார்வேந்தன் தன்படையும்
கொளும்பினில் ராசாவும் கூட்டு படையும்
ஈரோடுவொன்ன கொங்குமன்னரும்
நல்லம நாயக்கனும் நாகம நாயக்கனும்
கரட்டிமலை நாயக்கன் கனத்த பெரும்படை
கச்சைகட்டி நாயக்கன் காங்கேய நாடன் படையும்
என பெரும்படை திரள்கிறது.

புரோயன்சா பாதிரியார் குறிப்பில் "மறவர்கள் வெற்றிபெரும் நற்திறத்தோடு போரிட்ட வீரமக்கள்" என கூறுகிறார்.
ஒவ்வொரு கோட்டையை பிடிப்பதற்க்கு கோரயுத்தம் நடைபெறுகிறது. ஒரு அதிரடி தாக்குதலை மறவர் தளபதிகளான மதியழகனும்,குமாரத்தேவனும் மேற்கொள்ளும் பொருட்டு தெலுங்கு படைகளிடம் சிக்கிகொண்ட இருவரும் கொடூரமாக ராமப்பையன் கொலை செய்து விடுகிறார்.
யுத்தம் பாம்பன் கோட்டையில் நடக்கிறது, மானாமதுரையிலிருந்து இளையான்குடி கோட்டை,அரியானி கோட்டை(அரியாண்டிபுரம்) அத்தியூத்து,போகலூர்,பாம்பன்,குந்துக்கால்,சேதுகரை,ராமேஸ்வரம் என ஆறுமாதங்கள் இந்த யுத்தம் நடக்கிறது.
முதலாவது போர் மானாமதுரைக்கு அருகில் உள்ள புதுக்கோட்டையில் நடைபெற்றதாக கருதப்படுகிறது.அரியானி என்ற ஊரில் தெலுங்கு கூட்டு படைகள் முழுவதுமாக மறவர்களால் சூறையாடப்படுகின்றது. 300 பேர்களுக்கு அதிகமாக தெலுங்கு படைகள் மடிகின்றனர். மறவர் தரப்பிலோ 60 மறவர்கள் இறந்தனர். தெலுங்கு படைகள் சிதறியடிக்கபடுகின்றனர். ராமப்பையைனோ தமது படைவீரர்களை மிரட்டி, மீண்டும் தூண்டி யுத்தத்தை தொடர்கிறான். மீண்டும் மதுரைப்படை சூறையாடப்படுகின்றது. இத்தோல்வியினால் சோர்வு அடைந்து விடாமல் இராமப்பையான் அரியாண்டிபுரக்கோட்டையை கைப்பற்றினான்.
இளையாங்குடி,அத்தியூத்து,அரியானி பாம்பன் என மறவர் நாட்டில் ஒவ்வொறு அடியில் யுத்தம் நடைபெற்றது. போகலூர் யுத்தத்தில் சேதுமன்னரான சடையக்க தேவரோ நேரடியாக போரிடுகிறார் மறவர்களின் மாமன்னருக்கு யுத்தத்தில் தோள்பட்டையில் வெட்டுகாயம் ஏற்படுகின்றது. தான் உயிருடன் இருக்கும் பொழுது தமது மைத்துனரும் அரசரான சடையக்கத் தேவருக்கு காயம் ஏற்பட்டதை என்னி வன்னியதேவன் கண் கலங்குவதாக அம்மானை கூறுகிறது.

மறவர் வளைகுடா என அழைக்கப்டும் பாக்ஜலசந்தியிலும், மன்னார் வளைகுடாவிலும் யுத்தம் நடைபெறுகிறது. மதுரை ராமப்பையனின் படைக்கு ஆதரவாக போர்ச்சுகீசியர்கள் போரிடுகின்றனர். ஐரோப்பிய கடற்படை தெலுங்கர்களுக்கு அதரவாக போரிட்டு மறவர்களால் கடற்போரில் சிதரடிக்கபடுகின்றது. கப்பல்களின் பெயர்களும் அம்மானையில் குறிப்பிடபடுகின்றது.

யுத்தத்தில் தோல்வி மேல் தோல்வி பெற்ற தெலுங்கு,கன்னட ஆக்கிரமிப்பு படையும் அவர்களின் கூலிப்படையுடன் தன்மான தமிழ் மறவர்களின் நாட்டை விட்டு ஓடுகின்றது. ஆறாயிரம் வருடங்களாக போரை மட்டும் தொழிலாக செய்து வந்த இனக்குழுவுக்கு முன் ஆனைகுந்தி நாட்டில் மாடு மேய்க்கும் தெலுங்கு மற்றும் கன்னட கூலிப்படையினரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. திருமலை நாயக்கர் ராமப்பையானை மதுரைக்கு அழைக்கிறார்.

மதுரைக்கு வந்த ராமப்பையன் மீண்டும் படை உதவிகள் பெற்று பெரும்படையுடன் ஒராண்டு கழித்து ராமேஸ்வரம் தீவை முற்றுகையிடுகிறார். இராமேஸ்வரத்தை முற்றுகையிடுவதற்காக இராமப்பையன் ஒரு பாலம் கட்ட திட்டமிடுகிறார்.புரானங்களில் சொல்லப்படும் சேது என்ற பாலத்தை புதிப்பதாக கதை கூறுகிறது. இதில் அவரது படை பாளையக்காரர்களுக்கு பிடிக்கவில்லை அதிலும் பலரை கல் சுமக்க வைத்து பாலத்தை கட்டுகிறார்.

வைசூரி கண்ட நிலையிலும் மாபெரும் படைத்தலைவனும் சேதுமன்னரின் மருகனுமான வன்னியத் தேவன் பாம்பன் முற்றுகை போரை வெற்றிகரமாக தகர்தெரிந்து உயிர்விடுகிறார். வன்னிய தேவனின் மனைவி கனவனுடன் உடண்கட்டை ஏறுகிறார்.

ராமப்பையன் நோய் வாய்பட்டு இறந்ததாகவும் விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இருதரப்பிலும் பெரும் அழிவுகள் ஏற்படுகிறது.

வடநாட்டை சேர்ந்த இந்து மத துறவிகள் திருமலை நாயக்கரை சந்தித்து போரை நிறுத்தவும்,சடைக்கத் தேவனை சந்திக்கவும் ஏற்பாடு செய்கின்றனர். அப்போது நடந்த சந்திப்பில் திருமலைநாயக்கருடன் இராமப்பையன் இருக்கிறான் திருமலை நாயக்கரை மீறி அவனே அதிகாரமிடுகிறார். ஆத்திரம் கொண்ட ராமப்பையன் சடையக்க தேவனை சிறையில் அடைக்கபடுகிறார். இச்செய்தி மறக்குல மக்களை ஆத்திரம் கொள்ளச்செய்கிறது. ஆயிரக்கனக்கான மறவர்கள் தங்கள் விளைநிலங்களை துறந்து படைகளில் சேர்ந்து ஆவேசத்துடன் நாயக்கர்களின் காவல் அரண்களை தாக்குகிறார்கள் நாடெங்கும் வன்முறை வெடிக்குறது.
அப்போது, திருமால் சடைக்கத்தேவருக்குக் காட்சி கொடுத்தார். பூட்டியிருந்த கால் விலங்கு 'கலீரென தான் தெரித்து போனது'. அதை அறிந்த திருமலை நாயக்கரும் சடைக்கத்தேவரை அழைத்துவரச்செய்து அவரை மீண்டும் சேதுநாட்டுக்கு அனுப்பிவைத்தார்மறக்குல மக்கள் வெற்றி முழக்கமிடுகிறார்கள் ஆக்கிரமிப்பு படைகள் வெளியேறி ஓடுகிறது. சடைக்கத்தேவரும் இராமநாதபுரம் திரும்பி செங்கொல் நடத்தி மாயன் அருளால் மண்டலத்தை ஆண்டிருந்தார்.

இந்த செய்தி இயேசு சபைப் பாதிரிமார்களில்ன் கடிதங்களாலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.இரு படைகளும் கடல் சண்டைகள் நடைபெற்றதற்கான் ஆதாரங்கள் கூறுகின்றது. இந்த யுத்தத்தை தலைமை தாங்கி நடத்திய சடைக்க சேதுபதியின் மருகன் வன்னிய தேவன் குடும்பம் ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தன் என்ற ஊரில் வசிக்கின்றனர். வன்னிச்சாமி தேவர்,ராமவன்னி எண்கின்ற பெயரை இன்றும் அந்த குடும்பத்தினர் பழமைமாறாமல் தங்கள் குழந்தைகளுக்கும் சூட்டுகின்றனர்.இரமநாதபுரம் காங்கிரஸ் தலைவர் ரவிசந்திர ராமவன்னி தேவர் இவர்களில் முக்கியமானவர்.

எனது குறிப்பு:
ஆர்.சத்தியநாத ஐயர் மதுரை நாயக்கர்கள் வரலாறு, நெல்சன் மதுரை மானுவலும் இப்போரில் இராமப்பையன் இறந்ததாக கூறுகிறார்கள். ஆனால் ஸ்ரீசைலத்தில் 1648-ல் கானப்பட்ட ஒரு கல்வெட்டு இராமப்பையன் கல்வெட்டு என குறிப்பிடுகின்றது. இந்த தளபதி மறவர் போர் முடிவடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார் என குறிப்புகள் வருகிறது

விசுவநாத நாயக்கன் ஜெயதுங்க தேவரோடு ஒரு போரும், திருமலை நாயக்கருடன் இரு போரும், சொக்கநாத நாயக்கனுடன் இருமுறையும் மங்கம்மள் மற்றும் ரங்ககிருஷ்ன நாயாக்கருடன் இரு போர்கள் நடைபெற்றது.
மதுரை தெலுங்கு கூட்டுபடைகளால் மறவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் மறவர்களோ தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யும் தமிழர்களின் உயரிய மான்பிற்கு ஏற்றவகையில் கன்னட படைகளை முறியடிக்க பேருதவி சொக்கநாதனை ருஸ்டம் கான் பிடியிலிருந்து முஸ்லீம் ஆக்கிரமிப்பை விடுவித்து மதுரையிலிருந்து அகற்றியது. தென்னாட்டு பாளையக்காரர்களை ஒடுக்கியது என மதுரை தெலுங்கர்களுக்கு நன்மையே செய்துள்ளனர்.

ங்காரு திருமலை நாயக்கரின் குடும்பம் நாட்டைவிட்டு நாடிழந்து ஓடிய போது திருப்பச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சியில் தங்கவைத்து திருமலை நாயக்கரின் வாரிசுக்கு நிலங்களை ஆதரித்தவர்கள் சிவகங்கை மன்னர்கள் தான். இவ்வாறு இராமப்பையன் அம்மானை கூறுகிறது.

நன்றி:முத்துராஜா(வழக்கறிஞர்) அவர்கள்

Tuesday, April 8, 2014

ஒரு நாட்டுபுற பாடல் காட்டும்(விரையாச்சிலை வகைப்பாட்டு)

                                                                                                           
கோனாட்டு மறவர் வகைப்பாடல் வரலாற்று செய்திகள் ஒரு பார்வை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் விரையாச்சிலை என்றொரு ஊர் உள்ளது.விரையாச்சிலை ஊரைச்சுற்றிப் பல கோவில்கள் இருந்தாலும் விரையாச்சிலையின் சிறப்புக்கும் பெருமைக்கும் காரணமாக விளங்குவது விரையாச்சிலை ஊரின் நடுவில் அமைந்துள்ள ஸ்ரீ மது அடைக்கலம் காத்த அம்மன் கோவில் எனலாம், மேற்படி அடைக்கலம் காத்த அம்மன் கோவிலில் வருடம்தோரும் வைகாசி மாதத்தில் வரும் திருவிழாவிற்கு காப்புகட்டி 10 நாட்கள் திருவிழா நடத்தபடுகின்றது. 9 ஆம் நாள் திருநாளன்று மது எடுப்பு விழா விரையாச்சிலை செவ்வாய் திருவிழாவில் முக்கியமான திருவிழாவாகும் அம்து எடுப்பு விரையாச்சிலை 10 கரை(வகை) மறவர்களின் பெண்களைக் கொண்டு நடத்தப்படுகின்றது. இந்த மது எடுப்பு விரையாச்சிலை செவ்வாய் திருவிழாவில் முக்கியமான திருவிழாவாகும். மது எடுப்பு சங்ககாலத்தில் கொற்றவை வழிபாட்டின் அடியொற்றியதாகும். 10 ஆம் நாள் மஞ்சள் நீராட்டம் மற்றும் சந்தாதர்ணத்தோடு திருவிழா நிறைவு பெறும். இந்த அடைக்கலம் காத்த அம்மன் கோவில் நிர்வாகம் திருவிழா செய்தல் அனைத்தும் விரையாச்சிலை மறவர்களை சார்ந்ததே.

விரையாச்சிலை அடைக்கலம் காத்த அம்மனுக்கு திருவிழா செய்வதற்கு முடிவு செய்ததும் திருவிழாவிற்கு நெல் வசூலிப்பதற்கு மேற்படி கோவிலுக்கு காப்புக் கட்டுமுன் விரையாச்சிலை மறவர்கள் விரையாச்சிலை தெருக்களில் குழுவாக சென்று கோலாட்ட முறையில் வளந்தான அடிப்பது திருவிழாவிற்கு முளை போட்டு பாலிகை வளர்ப்பதும் முக்கிய நிகழ்ச்சியாகும். முளைப்போட்ட நாளிலிருந்து முளைப்பாரி பிரிக்கும் வரையுள்ள ஏழு நாட்களும் முளைப்போடபட்டுள்ள செவ்வாய் வீட்டின் முன் ஒவ்வொரு நாள் இரவிலும் விரையாச்சிலை மறவர்கள் குழுவாக சென்று காலில் சலங்கை கட்டிக்கொண்டு கையில் துனியை பிடித்து ஒயிலாட்ட முறையில் 10 வகை மறவர்களின் வீரதீரச் செயல்களைப் பாடி ஆடப்படும் பாடலே விரையாச்சிலை வகைப்பாட்டாகும். இனத வளந்தானப் பாட்டு,வகைப்பாட்டு ஆகிய நாட்டுப்புறப் பாடல்கள் கூறும் வரலாற்று செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விரையாச்சிலை வளந்தானை பாட்டு வகைப்பாட்டு வராலாற்று செய்திகளை அறிவதற்கு முன் அப்பாடலில் கண்டுள்ள மறவர்கலின் தொன்மையை தெரிந்து கொண்டால்தான் விரையாச்சிலை மறவர்களின் சிறப்புகளைப் புரிந்து கொள்ள முடியும். மறவர் என்போர் மதுரை,இராமநாதபுரம்,திருநெல்வேலி,விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்களேயாவர்.

மெக்கன்சி என்ற ஆங்கிலேயர் தொகுத்த மறவர் ஜாதி வர்னனை பற்றிய ஏட்டுப் பிரதி ஒன்றில்,மறவர்களில் செம்பிய நாட்டு மறவர்,கொண்டையன் கோட்டை மறவர், ஆப்பநாட்டு மறவர், உப்புக்கோட்டை மறவர்,குறிச்சிக்கட்டு மறவர்,அகத்தா மறவர்,ஒரூர் நாட்டு மறவர் என ஏழு பெரும் பிரிவுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தேவநேயப்பாவனர் அவர்களது தமிழர் வரலாறு என்ற நூலில் 38 பிரிவுகள் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. பாவனர் அவர்களது நூலை ஆராய்ந்தால் மறவர்களிடத்தில் கிளை,நாடு,கோட்டை,தாலி என்ற பாகுபாட்டில் 55 பிரிவுகள் உள்ளதாக தெரிகின்றது.

மறவர்களில் செம்பியன் நாட்டு மறவரை நாட்டு வழக்கில் செம்மநாட்டு மறவர் என்று கூறுவர்.இந்த செம்பியன் நாடு என்றழைக்கப்பட்டதை பல வரலாற்று மத்திய காலக் கல்வெட்டுகள் மூலம் தெரிவிக்கின்றன.

செம்பி நாட்டு மறவர்கள்:

செம்பியன் நாட்டு மறவர்கள் இராமர் சிதையை மீட்பதற்கு இலங்கை செல்வதற்கு கட்டிய திருவணையை(சேதுவை) காப்பதற்க்கு நியமிக்க பட்ட ஒரு தலைவனின் வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இன்னோர் அதாரமாக சோழ மன்னன் இராஜராஜ சோழன் இலங்கை படையெடுப்பின் போது சேதுவையும் பாண்டிய நாட்டையும் காக்க தன்னுடைய தளபதிகளில் ஒருவனை இப்பூமியின் காவலனாய் நியமித்ததாக ஒரு வரலாறு கூறுகின்றது. செம்பிய நாடு மறவர்களில் சேதுபதிகள் முக்கியமானவர்கள். செம்பிநாட்டு மறவர்கள் சேது அனையைக் காப்பதற்கு வந்தவர்களாதலால் சேதுகாவலர்கள் என்றும் சேதுபதிகள் என்றும் அழைக்கபட்டனர். செம்பிய நாட்டு மறவர்களில் சேதுபதிகள் முடிதரிக்கும் மன்னர்களாதலால் செம்பியநாட்டு மறவர்களுக்கு மறமன்னர் என்றும் கரந்தையர்கோன் என்ற பட்டம் உண்டு. செம்பி நாடு மறவர்களுக்கு பிச்சாகிளை,மரிக்கார் கிளை,கற்பகத்தார் கிளை,தனிச்சான்(துனிஞ்சான்) கிளை,பிச்சாகிளை,குடுதனார் கிளை,தொண்டமான் கிளை என பல உட்பிரிவுகள் உண்டு. செம்பிநாட்டு மறவர்களில் ஒரு பகுதியினர் இராமநாதபுரம் திருவாடனைக்கு என்ற ஊரின் நாரை பறக்காத 48 மடைப்பாசணத்தினுள்ள ஒருமடைப் போக்கிலிருந்தவர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக புதுக்கோட்டை பகுதிக்கு வந்ததாக பொது வரலாறு கூறுகின்றது. இராசசிங்க மங்கலம் கம்மாயில் 48 மடைகள் இருந்ததை 18 ஆம் நூற்றாண்டு நூலான மதிலைப்பட்டி அழகிய சிற்றம்பல கவிராயரின் சுசிலவள்ளல் அம்மானை என்ற நூல் பேசுகின்றது.

அவ்வாறு புதுக்கோட்டை வந்து தங்கிய மறவர்களது ஊர்களில் விரையாச்சிலையும் ஒன்று.கி.பி.12-ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக நடந்து இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றது.புதுக்கோட்டைபகுதி மறவர்களின் குடியேற்றத்தின் காலத்தை அறிவதற்கு புதுக்கோட்டை கல்வெட்டு நமக்கு உதவுகிறது. புதுக்கோட்டை பகுதிக்கு மறவர்கள் கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்.கல்வெட்டுகளில் மறவர்களை கி.பி.10. ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கிறது.விரையாச்சிலை வந்து தங்கிய மறவர்கள் விரையாச்சிலையினை பல விதங்களில் மேம்படுத்தியதோடு விரையாச்சிலையை ஒரு படைப்பற்று ஊராகவும் தங்களை பாண்டிய படைப்பற்றின் ஊரவையராகவும் உயர்த்திக் கொண்டு விரையாச்சிலை கோவில்கலையும் நிர்வாகித்து வந்தனர்.

இக்கல்வெட்டுகள் மூலம் மறவர்கள் ஊரவையர்,அரையர், பேரரையர்,நாடாள்வார்,நாட்டர் போன்ற பட்டங்களை கொண்டவர்களாக வீரதீர செயல்கள் மிக்கவர்களாக விளங்கினர் என தெரியும். இதில் மறவர்களை செம்பியன் நாட்டு பேரரையன்(புரையர்) என்ற பட்டம் வழக்கில் கானப்படுகின்றது. பேரரையன்,அரையன் என்பது அரசமக்கள் எனும் பொருள் படும்.எனவே இங்கு உள்ள பேரரையர் 10 வம்சத்தை வளந்தானை பாட்டு குறிப்பிடுகின்றது.

இந்த வளந்தானை பாடலையும்,வகைப்பாட்டினையும் சுமார் 200 வருடங்கலுக்கு முன்பு விரையாச்சிலையில் வாழ்ந்த கருத்தக் குட்டை தேவர் என்பார் பாடியதாக கூறப்படுகின்றது. அது வாய்மொழிப் பாடலாகவே இன்று வரை இருந்து வருகிறது.

"சீரிலங்கும் கனயோகம் செழுந்தருளும் கானாடாம் தாரிலங்கும்
கானாட்டில் தழைக்கும் ஐந்தூர்ப் படைபத்தாம்(பற்று)"

கானாடு இதற்கு மற்றொரு பெயரும் உண்டு விருதராஜ பயங்கர நாடு கானாடு என்பது வடக்கே புதுக்கோட்டை அன்மையிலுள்ள பேரையூரையும்,மேற்கில் விரையாச்சிலையின் ஒரு பகுதியையும்,காரைக்குடியையும் தெற்கே அரிமளத்திற்கு அடுத்துள்ள நெடுங்குடியையும் எல்லையாக கொண்டது. பாடலில் கண்டுள்ள ஐந்தூர் படைப்பத்து, இதில் தேக்காட்டூர்,கோட்டூர்,லெமலக்குடி,விரையாச்சிலை,புலிவலம் ஆகிய ஐந்து ஊர்களேயாம். இந்த படைப்பற்று ஊர்களே கானாட்டு பேரையூர் நாகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தில் இன்றைக்கும் இந்த ஐந்து ஊர்களுக்கும் வரிசைக்கிராமத்தில் கோவில் மரியாதை கொடுக்கப்படுகின்றது குறிப்பிடதக்கதாகும்.


"பெருநகரில் மறமன்னர்கள் பெருகி வளர் வீடுகளாம் பெருகிய பத்துஅம்பலமாம் பேரான பாக்கியமாம் பாக்கியம் சேர் பல்தெருவாம் பனிமுகப்பாம் தோரனமாம்"

மறமன்னர்கள் என்போர் மறவர்களாவர், இவர்கள் சேதுபதியை சேர்ந்தவர்கலாதலால் மறமன்னர் என்றழைக்கப்பட்டனர்,இவர்கள் செம்பியன் நாடு மறவர்களைச் சார்ந்தவர்களான சேதுபதிகளுக்குரிய சேது காவலர் வாள் கோட்டைராயர் போன்ற பட்டங்களின் மூலம் அறியலாம். சேதுபதிகளுக்கு முன்னரே மறவர்கள் தென் தமிழ் நாட்டில் கி.பி.13.ஆம் நூற்றாண்டளவில் 8 இடங்களில் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்ததாக இலங்கை மகாவம்சம் கூறுகிறது ஆதாவது கொண்டையன் கோட்டை,வேம்பக் கோட்டை மறவர்,நாலுக்கோட்டை மறவர், அஞ்சுக்கோட்டை மறவர், அணில் ஏறாக் கோட்டை மறவர் என்ற இவர்களின் பெயர்களே சான்றாகும்.
முதலாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் நிறுவிய மறமானிக்க ஈஸ்வர நாயனார் ஆலையம்
அம்பலம் என்ற சொல் இறைவன் ஆடும் சபை,நடுவூர் மன்றம்,கள்ளர் மறவர்களின் தலைவன் பட்டம், வலையர் சாதிக்குரிய குலப்பட்டம் அதிகாரம் என பல பொருள் தரும் ஒரு சொல்லாகும். இங்கு பெருகிய பத்தம்பலமாம் என்றால் விரையாச்சிலை மறவர்களில் 10 கரை அம்பலத் தேவர்களை குறிக்கும்.

"ஓங்கி முளை வளர்த்திடவே உருமாப் பெண்கள் காப்பு கட்டி காப்புக் கட்டி பாலிகைக்கு கனமாக நூலைச் சுற்றி"
இதில் முளிப்பாரி ஓடும்பாது பானையை மஞ்சள் கட்டுவதை குறிக்கு.
"பாடுவாளாம் விடங்கேசுவரர் உய்யவந்தம்மனும் துய்ய
கருப்பரும் பைரவர் சுவாமி பரிவாரங்களும்
தெய்வமது புதுமையுள்ள தேவி பத்திரகாளி அம்மன்
அடிக்கலாம் காத்த ஆயிதன் மேல் பாடுங்கடி"

விரையாச்சிலை சிவன் கோவில் இறைவன் உலகவிடங்கேசுவராவார். அக்கோவில் அம்மன் உய்யவந்த அம்மன் என்றழைக்கபடுகிறார்.
இந்த முளைப்பாரி பாடலின் தொடர்ச்சியும் அதன் சிறப்புகளையும் பலவகையில் விளக்குகிறது.
வகைப்பாட்டும் வரலாற்றுச் செய்திகளும்:

வகை என்றால் வம்சம்,கரை,கூட்டம் என்று பல பொருள் உண்டு. அதாவது ஒரு தலைவன் வழி வந்தவர்கள் அல்லது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக கொண்டவர்களின் பங்காளி கூட்டமே வகை(கரை) எனப்படும்.

விரையாச்சிலை மறவர்கள் செம்பி நாட்டு மறவர் பிரிவை சார்ந்தவர்கள்.விரையாச்சிலையில் மறவர்களிடத்திலே 10 வகை பங்காளிக் கூட்டம் உள்ளது இந்த 10 வகை மறவர்களது பெண்களில் வகைக்கு ஒருவர் வீதம் விரையாச்சிலை அடைக்கலம் காத்த அம்மன் கோவில் திருவிழாவிற்கு மது எடுக்கின்றனர். இந்த பத்து வகை மறவர்களின் வீரப் பிரதாபங்களையும் சிறப்புகளையும் பாடும் நாட்டுப் புறப்பாடலே விரையாச்சிலை வகைப்பாட்டாகும். வகைப்பாட்டு ஒவ்வொரு கரையின் தலைவரான அம்லக்காரரை பாடுவதன் மூலம் கதையின் சிறப்புகள் பாடப்படுகின்றன. வகைப்பட்டு தன்னானே நானேனோம் என்ற இசை குறிப்பின் தொடங்கி பல பாடல்கள் பின் இசையாக பாடப்படுகின்றது.

வகைப்பாட்டில் விரையாச்சிலை மறவர்களின் முதல் வகையில் ஆதி பொன்னம்பல அம்பலக்காரரை வகையில் வலஞ்சியரை வெட்டிய தேவனின் உட்கரை ஆவார். இவரை முன் வைத்தே இவ்வகைப்பாட்டு ஆரம்பிக்கின்றது.


"ஆகா ! சேனையும் தானும் படைமுகத்தில் சென்று துணிந்து ரணகளத்தில்
ஆணையைக் குத்தியஐநூற்றுவ புரையராம் ஆண் பிள்ளை என்றுமே பெயரும் கொண்டான்"


யானையின் பலம் தும்பிக்கையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப யானையின் அசுர பலத்தை கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் படைகளத்தில் யானைத் தும்பிக்கை வெட்டி கொண்டதால் இப் பெயர் என்றழைக்கப்பட்டனர் போலும்.

ஐநூற்று புரையர் என்ற பட்டமும் இவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது. பனையூரில் வலஞ்சுவெட்டிய தேவனின் வகையும் வயிரமிதிச்சான் என்ற வயிரத்தேவன் கரையும் வகையும் உள்ளனர். இவர்கள் தனிக் கரையனராக இருந்தாலும் மறவர்களின் பெருங்கரையில் ஒரே கரையினர் ஆவர். சுமார் 300 வருடங்களுக்கு முன்பு நிலக் கொடையின் காரனமாக இவர்களது முன்னோர்களுக்கு கொடுக்கப் பெற்ற இவர்களது முன்னோர்களுக்கு கொடுக்கப் பெற்ற செப்பு பட்டயத்தில் கலங்காத கண்டன் மறமன்னர் வாள்கோட்டைராயர் அவிராய புரையர் வயிரமிச்சான் உள்ளிட்டாரும் ஆனை வெட்டி மாலை சூடும் ஐநூற்றுப் புரையர் வலஞ்சு வெட்டி தேவரும் கரை ஒன்று எனச் செப்பேடு கூறுவதிலிருந்து மறவர் வலஞ்சு வெட்டி தேவர்கள் யானையை வெட்டி வெற்றி கண்டதை அறியலாம். இது போல

குளிபிறையில் ஒரு வகையினர் மாச்சார் வெட்டி தேவர் என்றும் கோட்டூர் மறவர்களில் ஒரு வகையினருக்கு கரிசல் வெட்டி தேவர் என்றும் உள்ள பட்டங்கள் யானை வெட்டி என்ற பட்டத்துடன் தொடர்புடையவை எனலாம் அடுத்து.

"முன்னம்பலமாம் முதல்வகையானவன் முன் வைத்த காலை பின்னே வையான் பொன்னம்பலம் ரெண்டு மதுவினில் பூவும் சிங்காரத்தை பாருங்கடி"

பொன்னம்பல அம்பலகாரர் முதல் வகையை சேர்ந்த இவர் 10 அம்பலகாரர்களுக்கு முன்னவர் ஆவார். முன் வைத்த காலை பின்னே வையான் என பாராட்டபடுகிறார். முன் வைத்த காலை பின்னே வையான் எனபதற்கு போர்களத்தில் எதிரியை கண்டு அஞ்சி பின்வாங்கி செல்லாமல் முன்னேறி சென்று வெற்றி வாகை சூடுவதையே குறிக்கோளாக கொண்டவர் எனலாம். பனையூர் மறவரில் ஒரு வகையினர் கண்டு போகாப் புரையர் என்ற பட்டமுள்ளது. ஆதாவது எதிரியை கண்டு பின் வாங்கி போகாதவன் என்று பொருள்,முன் வைத்த காலை பின்னே வையான் என்பது கண்டு போகா என்பது ஒன்றே எனலாம்.

"மேனாட்டு பூச்சியன் சேனை தளத்தையும் வெட்டி
ஜெயம் பெற்ற சேவகனாம் கானாடு எல்லைக்கு அதிபதியாம்
நல்ல கானாட்டுக் காரிய சேகரனடி தென்பாலும் போலும் இனசன
சேகரன் நல்ல செல்வ மிகுந்த கனயோகனான அம்பலக்காரன்
மது வரும் சந்தோசம் பாருங்கள்"


கானாட்டு புரையர் இரண்டாவது வகை மறவர்களின் தலைவராவார். அவர் கானாட்டு காரியக்காரர். அவர் புதுக்கோட்டை தொண்டைமானுக்கும் மருங்காபுரி பூச்சைய நாயக்கருக்கும் நடந்த எல்லைப் போரில் தொண்டைமான் பக்கம் நின்று பூச்சைய நாயக்கரை வென்றவர் என்பதை இப்பாடல் வரிகள் பெருமை சேர்க்கிறது.

"செம்பொன் நிதி செல்வ முள்ளவனாம் சிங்கடாகை சிவிகை உடையவனாம்
அன்பென்னும் கொம்ப ராச துரைத்தனம் ஆனவனாம் புவி ஆண்டவனாம்
சாயாத செல்வம் படைத்தவனாம் சௌபாக்கியனாம் வெகுயோக்கியனாம்
ஓயாமாறி மதுதான் கொண்டிருந்த உத்தமி வாரதைப் பாருங்கடி"

ஓயாமாறி என்றி சொல்லின் பொருள் எந்த நேரத்திலும் போருக்கு செல்வதை பெருவிருப்பாக கொண்டவர் என்பதை சுட்டுவதாகும், சிங்கடாகை சிவிகை உடையவர் என ஓயாமாறி போற்றப்படுகிறார். சிங்கடாகை சிவிகை என்றால் சிங்கமுகப் பல்லாக்கை குறிக்கும். இவர் சிவகங்கை மாவட்டம் காளையாட் கோவிலருகிலுள்ள புலியடி தம்பம் என்ற ஊரில் பாடி காவல் பார்த்த்ததாகவும் சுமார் 80 வருடங்களுக்கு முன் இவரது வீட்டில் பழைய பல்லாக்கு ஒன்று கட்டிக் கிடந்ததை பார்த்ததாகவும் இன்றைக்கு 80 வயதுக்கு மேற்பட்ட விரையாச்சிலை கா.சுப்பிரமணி தேவர் அவர்கள் கூறுகிறார்கள். விரையாச்சிலை அம்மன் கோவிலுள்ள ஒரு சிலை ஓயாமாறி தேவர் என்ற கல்வெட்டு உள்ளது.

அடுத்து விரையாச்சிலையில் தொண்டைமான் என்னும் பெயருடைய ஒரு வகை மறவர்கள் உள்ளனர். இவரை

"சண்டப்பிர சண்டனாம் மூவிராஜாக்களில் தம்பியைத் தானிவர் நம்பினவர்
தொண்டைமானென்னும் புரையரடி துரை துலங்கு நகுலன்களின் தீரனடி"

செம்பி நாட்டு மறவர்கலில் தொண்டைமான் என்னும் கிளை ஒன்றுண்டு இவர் செம்பி நாட்டு மறவரில் தொண்டைமான் கிளை ஒன்றுண்டு. இவர் செம்பி நாட்டு மறவரின் கிளையை சேர்ந்தவர். பெண்ணுக்கு தான் கிளைகள் குறிக்கும்அறந்தாங்கி தொண்டைமான் களில் இவர்கள் பெண் எடுத்திருக்க கூடும் அதனாலே இவர்கள் தொண்டைமான் கிளை கூறுகின்றனர்.

அடுத்து மூவி ராஜாக்களில் தம்பியைத் தானிவர் நம்பினவர் என்பதில் பாண்டிய மன்னர்களில் சுந்தரபாண்டியன்,வீரபாண்டியன் என்ற அண்ணன் தம்பிகளில் இவர்கள் வீரபாண்டியைன் அணியிலே நின்றதை இது காட்டுகிறது.

விரையாச்சிலையில் பாண்டியம்பலகாரன் என்றொரு தலைவன் வழி பங்காளிகள் தங்களை பாண்டியர்களின் வம்சம்(வகை) எனச் சொல்வர். இப் பாண்டியம்பலகாரன்

"காண்டீபன் பாம்பாறு காவல் கொண்டான் கிளை சார்ந்தவனாம் இனம் சேர்ந்தவனாம்
பாண்டியன் சீமையில் பாண்டி மதுவிது பாருங்கள் பாருங்கள் தோழிப் பெண்கள்"

இவர் பாம்பாற்று நாட்டில் பாடிகாவல் செய்ததை இப்பாடல் வரிகாட்டுகிறது இவர் பாண்டியன் என்னும் இயற்பெயர்
கொண்டவர்,ஓயாமாறிக்கும் இப்பாண்டியனுக்கும் விரையாச்சிலை அம்மன் கோவிலில் கற்சிலைகள் உள்ளன்.

"சென்னி மகுட முடிராசன் கொடி செலுத்தும் ராசன் மகாராசன்
மன்னியராசர் மறமன்னர் மகாராசன் அனும-கருட கொடியுடைய ஜெயமுடையோன்
அபிமானம் உள்ளவனாம் நல்ல இலங்கு யோகம் மிகுந்தவனாம்
கண்ணுக்கு கண்ணனான் கொப்புடைய நாயகி காவல் கொண்ட கானாடன்
அன்னதானம் பசுஞ்சொர்ணதானம் செய்ய அஞ்சாத நெஞ்சன் அபிராமன்
கர்ணனெனவே பிறந்தவனாம் இந்த காசினியோர்க்கு உகந்தவனாம்
வேலன் துனை பெற்ற சீலன் அனுகூலன் விரசை நாட்டுக் கதிபதியாம்
மேல வணங்கின தேவனடி வெகு மேன்மை செளந்திர வாகனடி"

இவர் மேல வணங்கின தேவர் என்ற பட்டமுடையதேவர் . மேல வணங்கின தேவர் என்ற பட்டத்திற்கு மேற்க்கு எல்லையான கொப்புடைய நாயகி அம்மன் குடி கொண்டுள்ள காரைக்குடி பாடிகாவல் காத்தவர் என குறிக்கபடுகிறார்.

சேதுபதிகளுக்கு நாயக்க மன்னர்கள் அனும-கருட கொடி வழங்கினர். அதற்குமுன் பாண்டியர் வழங்கிய கயல்கொடி,புலிக்கொடி முதலான பெயர்களில் கயல்கொடி கேதனன், புலிக்கொடி கேதனன், கருட-அனுமக் கொடி கேதனன் முதலிய பெயர்கள் உள்ளன. மேல வனங்கின தேவர் சேதுபதிகளின் முன்னோர்களை சேர்ந்த நேரடி தொடர்பு காரணமாக இவரும் மறமன்னர்,கருட-அனும கொடியுடையவர் எனப்பட்டம் வந்தது.

"உபரி மந்திரி யோசனை வாசனை யுக்தி புத்தி மதியூகிகள் நகூரி
பூவன் வழிக்கால் நாட்டி மது நாகரிகத்தையும் பாருங்கடி"

விரையாச்சிலை மறவர்கலில் நகரி அம்பலகாரரும் அவரைச்சார்ந்தவரும் நகர காவல் செய்தவர்கள் ஆதலால் நகரி அம்பலம் என பெயர் பெற்றது எனலாம்.

அடுத்ததாக கீழ வணங்கின தேவர் என்ற பெயருடைய ஒரு வகை உண்டு

" காலபய்ங்கரன் கானாடன் இந்தக் காசினியோருக்கு உகந்தவனாம்
கீழ வணங்கின தேவரடி கிளை சார்ந்தவனாம் இனம் சேர்ந்தவனாம்"

எண்கின்ற பாடலில் கீழ வனங்கின தேவர் என்ற பட்டத்திற்கு பொருள் கானாட்டின் கிழக்கு பகுதியினை காவல் செய்தவர்.

"பாந்துவமான் சனக்காரன் கன் பக்கியக்காரன் பதக்காரன்
சாந்திமது தான் அவரும் சந்தோசம் பாருங்கள் தோழிப்பெண்காள்"

எண்கின்ற பாடலில் சாந்தி அம்பலகாரர் என்ற பட்டத்தில் வரும் தலைவரை குறிக்கும்.

"தேனாறு பாயும் மல்லாங்குடியும் செல்வம் செழிக்கும் விராச்சிலையில்
வானாதிராயர் நிலைமையடி நல்வாழ்வு மிகுந்த விவேகனடி".

வானாதிராயர் என்ற வகையின் பங்காளிகள் மல்லாங்குடி(மலையாளங்குடி) என்ற பக்கத்து ஊரில் குடியேரியுள்ளதால் மல்லாங்குடி என்று பேசப்படுது. இந்த வாணாதிராயர் போன்ற பட்டம் மறவர்களுக்கு கி.பி.12,13, ஆம் நூற்றாண்டுகளில் சில அரசியல் தலைவர்கள் வாணவராயர் போன்ற குறுனிலத்தலைவர்கள் இருந்தனர். 

"அங்குசமானவன் வங்குசமானவன் நல்ல அம்பலமான அரசர்களாம்
சிங்கான் மதுவரும் சிங்காரம் நல்ல சென்பக வல்லியே பாருங்கடி"

இந்த சிங்கான் அம்பலகாரரின் வகையினைப் பாராட்டும் வரிகளும்,விராச்சிலைக்கு அன்மையிலுள்ள பனையூர் சிவன் கோவிலில், குளமங்கல மறவர்களில் மழவர்மாணிக்கம் என்ற மழவசக்கரவர்த்தி என்பவரும் மாளுவராய பேரரையர் என்பவரும் கி.பி.15 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு கல் உத்திரம் கொடுத்ததன் பொருட்டு வெட்டி வைத்துள்ள கல்வெட்டில் "பனையூர் மறவரில் மழவராய சோழ சிங்க பெரியான்" என்றும். இம்மழவராயன் தன்னை மழவராய சோழசிங்கன் என்று கூறிக்கொள்கிறார். கார்காத்த வேளாளருக்கு நிலம் வழங்கிய செப்புபட்டயத்தில் "மறமன்னர் மாளுவிராயப்புரையர் தனி மதிச்சான் உள்ளிட்டாற்கும் அசையாக்கட்டை மதியா வீரனுள்ளிட்டாற்கும் ஊரது புறவில் ஒன்பதிலே ஒரு கரைக்கு வகைப்பிரியல் நஞ்சையில்" என்றும் கூறுகின்றது. இவர் பாண்டிய தொடர்புடைய மழவராயர், இவன் பாண்டிய அரசு அதிகாரத்தில் பாண்டியனால் காளையார்கோவில் பாடிகாப்போனாக நியமிக்கப்பட்டவன்.இவனுக்கு குருவாக விளங்கிய ஈஸ்வர முடையாருக்கு நிலம் வழங்கியதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.இவனுக்கு பாண்டியனால் மழவசக்கரவர்த்தி என்று பட்டம் கொடுக்கபட்டவன்(பாண்டியர் வரலாறு:சதாசிவ பண்டாரத்தார்). இவன் தன்னை சோழசிங்கன் என்று ஆதாவது சோழனுக்கு சிங்கத்தை போன்றவன் என்று பட்டம் கொண்டவனாக இருக்கிறார். இவர் சிங்கான் அம்பலக்காரரின் கரைப்பாட்டு விளக்குகிறது.இவரது குலதெய்வம் வடக்கி வாசல் கருப்பர்.

"பொன்னனூர் முற்றிலும் காவல் கொண்டான் வர்ணப்புரவியேறும்
பரிநகுலன் சொர்ணநிதி பெற்ற நஞ்சுண்டான் வாபோசி
சொல்ல சொல்லும் புவிதேசமெங்கும்"

இந்த நஞ்சுண்டான் வாபோசி பற்றிய பாடல்வரியாகும். இவருக்கு பரி நகுலன் நன்சுண்டான் எனும் பட்டம் பாண்டிய ஐவர் சகோதரர்களில் நகுல பெருமாள் பாண்டியனை உணர்த்துகிறது.

"மிக்க புகழ்பெற்ற திக்கு விஜயமும் மேன்மை செலுத்தும் விவேகனடி மொக்கன்
மதுவிது திக்கும் மொய்க்கவே முன்மையாய் பாருங்கள் தோழி பெண்கள்"

மொக்கன் அம்பலக்காரர் வகையைப் பற்றியும் அவரது பங்காளிகளைப் பற்றியும் இப்பாடல் வரிகள் தெரிவிக்கிறது. புதுக்கோட்டை பகுதி மறவர்கள் சிலருகு அதிராப்புலி,செண்டுப்புலி,வீரப்புலி,ஈரப்புலி,கலங்காப்புலி என்ற பட்டப்பெயர்கள் உள்ளது போல இவ்வம்பலக்காரர் மொக்கன்புலி என்றழைக்கபட்டார் இவர் புலியின் வீரத்திற்கு ஒப்பானவர் என கருத்தில் கொள்ளலாம்.

"தாலிக்கு வேய் மணிகட்டியான் சௌபாக்கியனாம் வெகுயோக்கியனாம்
வாலிசுக்கிரிவன் போல் வந்துதித்த மறவர் குலம்"

இந்த மணிகட்டியான் தாலிக்கு வேலி என்பவர் கரையில் இரு சகோதரர்கள் வாலி சுக்கிரீவன் போல இருந்த கதை உள்ளது போல.

10வது வகையாக பல்லவராயர் வகையினைப் பற்றி

"வல்லவனாம் வெகு நல்லவனாம் அவன் மார்கண்டேயன் ஆயுசு
பெற்றவனாம் பல்லவராயன் மதுவரும் வேடிக்கை பார்க்க
வாருங்கள் தோழிப் பெண்காள்"

என்று பல்லவராயர் சுட்டப்படுகிறார்.  பல்லவராயர் என்ற பெயர் இப்பகுதி கள்ளர்,மறவர்,அகம்படியர்,வெள்ளாளர்களுக்கு வழங்கும் பட்டமாகும்.

"சதுராய் பொட்டிட்டு முளை வாட்டி படை தத்தளிக்கும்படி வெட்டியொட்டி எதிர் மிகுதியாக வந்த தளத்தையும் எல்லை கடக்க விரட்டினான் முப்பாடு தானும் கொடுக்காத வாள்வீச்சான் முகமை மதுவீடு பாருங்கடி"

முற்பாடு கொடாத வாள்வீச்சான் என்பது விரையாச்சிலை மறவர்களில் ஒருகரையினரின் பட்டமாகும். மேலப்பனையூர் சிவன் கோயிலில் கல்வெட்டு கூறும் குளமங்கல மறவரை குறிக்கும்போது இந்த உத்திரம் குளமங்கலம் மறவரில் அடைக்கலம் காத்தனான வாள்வீசி காட்டினன் தன்மம்" என்று கூறுகின்றது. தற்போது குளமங்கலம் மறவர்களில் வாள்வாசி என்ற பெயருடைய ஒரு கரையினர் உள்ளனர். வாள்வீச்சான் என்ற பட்டம் வாள்வீசி என்ற பட்டத்தின் திரிபு எனலாம்.இதைப்போல் பூவாலைக்குடி கல்வெட்டில் மறவரில் முற்பாடு கொடாதான் சூரிய தேவன் என ஒரு மறவனை குறிக்கின்றது.

இது போக பனையூர் குலமங்கலத்தில் மொத்தம் 18 மறவர்கள் உள்ளனர். அதில் பனையூரில் 1)வைரத்தவன் புறம் 2)சோழயான் கூட்டம் 3)வலஞ்சுவெட்டி பிச்சதேவன் கரை 4) வெள்ளை ஆவுடையாபுறம் 5)ஆதியான் கரை

குளமங்கலத்தில் 1)மழவராயன் புறம் 2)குமுடத்தேவன் புறம்3)கொம்பன் புறம் 4)ராமநாதன் புறம் 5)காலிங்கராயன் கரை 6)வாவாசி கூட்டம் 7)கோடாள் புறம் 8)சின்னழகன் கூட்டம் 9)ராஜராஜ பெரியான் வகை 9)வலங்கி புறம் 11) செல்லத்தேவன் கூட்டம் 12)சோழயான் கரை என பன்னிரண்டு கரை உள்ளது.மொத்தம் 18 கரைகளில் பெருங்கரை 9 ஆக சிறு கரைகள் 18 ஆக கணக்கிட பட்டுள்ளது.

நிலக்கொடயின் பொருட்டு கார்காத்த வெளாளருக்கு மறவர் வழங்கிய செப்பேடுகளில் பனையூர் குலமங்களத்து கரை மறவர்களை குறிக்கும் பொழுது "சேது காவல் பேரரையன் மற மன்னர் வாள்கோட்டை ராயர் சிறுகரை 18க் கும் 9 பெருங்கரைக்கும்" என்ற குறிப்புக்களும் மற்றோரு செப்பேட்டின்ல் "பனையூர் குளமங்கலம் ஊராயமந்த ஊரவர் அனைவர் உள்ளிட்டாரும் கூடி கரப்பிரியல் பட்டயம் வகையாவது வாள்கோட்டைராயன் சேது காவலப் பேரரையர் மறமன்னர் கலங்காத கண்டன் அவராயபுரையர் வைரமதிச்சான் உள்ளிட்டாரும் ஆனைவெட்டி மாலை சூடும் ஐநூற்றுவ பேரரையர் வளஞ்சுவெட்டி உள்ளிட்டாரும் 1 ஊரது புறவில் ஒன்பதிலே ஒரு கரைக்கு ஒன்பது வகைப்பிரியல்" என்று மேலப்பனையூர் ஸ்ரீ கோனட்டு நாயகி அம்மன் கோவில் திருவிழவில் முதல் மண்டகப்படி முதல் குளிபிரை,செம்பூதி,மூலங்குடி ஊர்களின் மறவருக்கு மரியாதை வழங்கும் செய்திகள் அவரவர்க்குரிய செப்பு பட்டயங்கள் மூலம் அறிகிறோம்.

சோழயான் கரை:

சோழயான் என்பது சோழகன் என்று இன்று சோழயான் என வழங்கபடுகின்றது.இது சோழ படைதலைவனின் பட்டம் என விக்கிரமசோழன் உலாவில் மூலம் அறிகின்றோம். இந்த சோழயான் கரையை சார்ந்தவன் பனையூர் சிவன் கோவிலில் கி.பி12. ஆம் நூற்றாண்டில் செய்தமைத்த கல்வெட்டு தனில் தன்னை சோழத்தேவன் என கூறிகொள்கிறான் சோழயா கூட்டத்தில் ஆசிரியன் வீடு,குத்தார வீடு,கோனாட்டன் வீடு,சுந்தாயி வீடு ,குண்டத்தீத்தார் வீடு என்ற பெயர்களில் உடைய குடும்பகளுக்கு கதவங்குடிகண்மாய் கரையிலுள்ள சம்பந்தகருப்பு குலதெய்வமாகும்.

திணியத்தேவன் புறம்:

இவன் திண்மை மிகுந்த மறமன்னாக இருக்கலாம் அதனால் இந்த திண்ணியன் என்ற பெயர் பெற்றவராக இருக்கலாம்.இக்கரையில் சித்திரையன்,கண்டுவான்(கண்டுபோகாதவன்) ஆதாவது எதிரியை கண்டு பின்வாங்கி போகாதவன் குப்பாத்தேவன்,சாத்தப்பன் என்ற குடும்பங்கள் இருக்கின்றது. இது போக "ஆனைவெட்டி மாலைசூடிய ஐநூற்றுபுரையர்" கரையாரைப் பற்றிய மாறவர்மன் குலசேகரனின் கல்வெட்டில்[கி.பி.12-ஆம் நூற்றாண்டு] இவர்களை "விரையாச்சிலை மறவர் நம்பி ஐநூற்றுவ பெரியான்" என கூறுகின்றது.

செல்லத்தேவன் கூட்டம்:

இவர்கள் கோனாட்டில் 3ஆம் கரையை சார்ந்தவர்கள்.இவர்களுக்கு கருப்பர் மற்றும் பட்டனவன் கரையை சார்ந்தவர்கள். சேதுபதிகளில் பலர் செல்லத்தேவன் என இருந்துள்ளனர். இவர்களில் கௌரிப் பாண்டியன்,சேதுராயன்(சேதிராயன்) என்ற பெயர்களில் பலர் இருந்துள்ளனர்.இந்த கௌரியர் பாண்டியர் தொடர்புடையவர்கள். இந்த சேதுராயன் மலையர்க்கு அரசராகி சேதிராயரை குறிக்கும் அல்லது சேதுவேந்தர்களை குறிக்கும் தொடராகும்.

`வீரமே துணையாக` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய இராஜகேசரி வர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் 46 ஆவது ஆட்சியாண்டில் கீழையூர் மலையமான் நானூற்றுவன் மலையமானாகிய இராஜேந்திரசோழ சேதுராயன், இத்திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தியை எழுந்தருளுவித்து, அத் தேவர்க்கு நித்திய வழிபாட்டிற்கும் விளக்கினுக்கும் வீரசோழனல்லூர் நிலங்களின் வரிகளைக் கொடுத்துள்ளான்.

கொம்பையன் புறம்:

இவர்கள் ரண்டன் கொம்பன் என்னும் யானை(கொம்பன்)யை போன்ற வலிமையை உடையவர்கள் என்பதை குறிக்கும் தொடராகும். இவர்களை கொம்பன் பேரரையர் அல்லது கொம்மாயத்தேவர் என குறிப்பிடுகின்றனர்.

இராமநாதன் கரை:

இவர்கள் 4-ஆம் கரையை சார்ந்தவர்கள் இவர்களுக்கு பட்டவன் மற்றும் கருப்பர் தெய்வமாகும்.கி.பி.1553-ம் ஆண்டு கல்வெட்டில் ஊரணிக்கு எல்லை சொல்லும்போது இராமநாத தேவர் பக்கல் என்று இவரது நிலம் குறிப்பிடபட்டுள்ளது.

காலிங்கராயன் புறம்:

மழவராயன் காலிங்கராயன் என்பது பாண்டிய அரசு அதிகாரிகளின் அரியனைக்கு வழங்கிய பெயர்களாகும்.பிற்கால சோழர் படையில் தளபதியாக காலிங்கராயன் என்று ஒருவன் சுட்டபடுகின்றான்.காலிங்கராயன் பெயர் இவரது மூன்னோர்களில் ஒருவனது பெயராக இருக்கலாம். இவர்களுக்கு குலதெய்வம் ஆலடி-கருப்பர்.

கோடாளி புறம்:

கோடாளி கரை அம்பலங்களின் குடும்பங்களுக்கு கோடாளி வகையில்கோடாளியர் கூட்டம் என்ற பெயர் வழங்குகிறது.செப்பேடு ஒன்று "பரியேறு தேவர் கோடாளி புரையர்" என்று குறிப்பிடுகின்றது.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் 72 ஆம்பாட்டு

"படையுன் கொடியுங்க் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிருந்தேரும் தாரும்
முடியும் நேர்வன பிறவும் தெரிவு
கொள் செங்கோல் அரசர்க்குரியன"
மேற்கண்ட 72 ஆம் செய்யுளில் "அரசர்க்குரிய"

என்றதொடருக்கு விளக்கம் தரும்பாது முடி,செங்கோல்,வெண்கொற்றக்குடிய,யானை,குதிரை,தேர் முதலியன குறிப்பிடுகிறார்கள்.

அதைப்போல் 84 ஆம் நூற்பாவில் வரும் "வேலும் கழலும் ஆரமும்தேரும் மாவும்" மன்னருக்கு உரிய வில்,வேல்,வீரக்கழல், குதிரை,மாலை,முரசு,யானை, குறிப்பிடுகின்ற கோட்பாடினை ஒட்டியே பனையூர் குலமங்கலம் மறவர்கள் குதிரை ஏறிவந்தனர் எனத்தெரிகின்றது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டத்தை சார்ந்த இடிந்த சிவன் கோவிலில் அர்த்த மண்டபத்தின் வெளிப்புறசுவரிலிருந்த கிபி.12 அல்லது 13 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்றில் "குளமங்கல மறவரில் பரியேறு சேவகனான" என சொற்றொடர் காட்டப்படுகின்றது. அதன்பின் 15 ஆம் நூற்றாண்டுகலில் புதுக்கோட்டை பகுதியில் நில பிரபுக்களான கார்காத்த வேளாளர்கள் பனையூர் குலமங்கல மறவர்களுக்கு வழங்கிய செப்புபட்டயத்தில் "பனையூர் குலமங்கலத்துக்கு வந்தவன் தெஷினபூமிக்கு கர்த்தராகிய சேதுக்காவலப் பேரரையர் மறமன்னர் வாள்கோட்டையாரின் பரியேறு தேவர் கோடாளிப் புரையர்" என வருகின்றது.இதில் இருந்து இவர்கள் பாடிகாவல் முதல் திருமணம் வரை பரியேறும் சம்பிரதாயம் அடையாளப்படுத்ஹ்டபடுகின்றது.இவர்கள் திருமணத்தின் போது இவர்களை சார்ந்தோர் குதிரையேறுவதை சடங்காக கொண்டுள்ளனர்.

சின்னழக தேவன் புறம் :

இவர்கள் குலமங்கலத்தில் ஒன்பதாவது கரையினர்.இவர்களுக்கு பட்டவன் மற்றும் கருப்பர் தெய்வமாகும்.

ராஜராஜ பெரியான் கரை:

இவர்கள் குலமங்கலத்தில் பத்தாவது கரைக்காரர். இவர்களுக்கு தெய்வம் ஆலடி கருப்பர்.

வலங்கி புறம்:

இவர்கள் 11வது கரையாகும்.வலங்கை-இடங்கை சண்டையில் இவர்கள் வலங்கை பக்கம் நின்ரதால் வலங்கை ஆண்டான் என வழங்கப்படுகின்றது. இது பின்னாளில் குறுகி வலங்கி என மருவி வலங்கியை வலம்புரியான்.இவர்கள் விரையாச்சிலை,செவலூரில் அதிகமாக வாழ்கின்றனர். பனையூர் கல்வெட்டு ஒன்று ஸ்ரீ உத்தமரான வலங்கை ஆண்டான் என ஒரு மறவனை கூறுவது காண்க.

சோழயான் கரை: இவர்கள் 12வது கரையாகும். இவர்கள் குடும்பகளுக்கு கதவங்குடிகண்மாய் கரையிலுள்ள சம்பந்தகருப்பு குலதெய்வமாகும்.

மேற்கண்ட விராச்சிலை வளந்தானைப்பாடு,வகைப்பாட்டு என்ற நாடுப் புறப் பாடல்களால் விரையாச்சிலை மறவர்களின் வீரதீரச் செயல்,குணநலன்,குலத் தொன்மை,பட்டப் பெயர்களின் சிறப்புகள் ஆகியவை இவர்களின் பண்பாட்டை விளங்கும் காலக் கண்ணாடியாகும் எனலாம்.

 நன்றி:
 கட்டுரை வழங்கியவர்: 
உயர் திரு.அமரர் மாணிக்கம் அவர்கள்

Thursday, April 3, 2014

தன்னிகரில்லா தளகர்த்தன் மயிலப்பனின் கதை


‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! "(புறம்)

பார்போற்றும் சீர்மிகு செந்தமிழ் சீமையாம் சேது சீமை.இச்சீமையில் முதன்மையான நாடுகளில் ஒன்றாம் ஆப்பநாடு. அப்ப நாட்டு கோமறவர் கொண்டையங்கோட்டை கரந்தை மறவரின் பெருங்குடியில் சித்திரங்குடி(முதுகளத்தூர் அருகே) பிறந்தவராம் எங்கள் பெரிய வெள்ளைய தேவர் என்ற இயற்பெயரை கொண்டவராம் மயிலப்பன் சேர்வைக்காரர்.அவரின் வீறுகொண்ட வெஞ்சமர் கதை கூற வந்தோம் யாம்.

சித்திரங்குடி என்பது ஆப்பனூர் நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்த ஊர் இராச விசுவாசத்திலும் பாரம்பரிய வீர உணர்வுகளுக்கும் பேர்போன ஊர். கி.பி 1772-ல் இராமநாதபுரம் கோட்டைப் பிடித்த ஆற்காடு நவாபும் கும்பெனியாரும் சேது நாட்டை 9 ஆண்டுகள் நிர்வாகம் செய்த போது பலவிதமான இடைஞ்சல்களை ஏற்படுத்தி அந்த பகுதிக்குள் அன்னியர் நுழையாதபடி செய்தனர் அந்த ஊர் மக்கள் . அத்தகையை ஊரில் பிறந்தவர்தான் தளபதி மைலப்பன் சேர்வைக்காரர்.சேர்வைக்காரர் என்றால் அரச சேவையில் உள்ள தளபதி என்ற பொருளாகும். மைலப்பன் என்பது இவரது இயற்பெயர் அல்ல இவருக்கு முன் வாழ்ந்த மைலப்பன் என்ற பெருமகனாரின் வழித்தோன்றலான இவருக்கும் அந்த பெயர் வந்தது.

சிறுவயதில் மறவர் நாட்டை சென்று 3000 மாமறவர்களின் உயிர் கொன்ற கூலிப்படையான ஆங்கிலேய கம்பெனியும் அவனின் அன்றைய எஜமானனான ஆர்க்காடு நவாப்பின் படைகளும் ராம்நாதபுரம் கோட்டையை கைப்பற்றி சிறுவயது பாலகனான மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து திருச்சி கோட்டைக்கு கொண்டு சென்றதை எதிர்த்து மாப்பிள்ளை தேவனுடன் சென்றதை எதிர்த்து போராடியது1797-ல் சேதுபதி மன்னருக்கு வழங்கிய வரி,இறைகளை கும்பெனியாருக்கு கொடுக்க மறுத்தது மைலப்பரின் போராட்டம் வவரிக்க முடியாத வரலாறு.

மயிலப்பனின் முதல் போர்: 
1763-இல் மறவர் நாட்டு முக்கிய நகரங்களில் ஒரு உள்நாட்டு கலவரம் வெடித்த போது அந்த குழப்பத்தை பயன்படுத்திகொண்டு அவர்களுக்குகெதிராக தனது விரிவாக்கத்திர்கான அரசியல் நடவடிக்கைகளை நவாப் திட்டமிட்டான்.

1772 ஜனவரியில் நவாப் படைகள் சிவகங்கையில் நுழைந்து முக்கியமான துறைமுகம் தொண்டியைக் கைப்பற்றினர். சௌமியலிங்க பிள்ளை தலைமையிலான மறவர் படைகள் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற இயலாது கலைந்து செல்ல நேரிட்டது. ஆனாலும் நவாப் கர்னாடகா மீது மராட்டியர்கள் படையெடுத்தையொட்டி தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டான். மறுபடியும் மே-1772 இல் நவாப் மற்றும் ஜோசப் ஸ்மித் தலைமையிலான் கும்பினிப் படைகள் மீண்டும் தங்கள் தாக்குதலை தொடர்ந்து இராமநாதபுரம் கோட்டை ஒரு பெரும் பீரங்கியை ஐம்பது இலகுரக துப்பாக்கிகைளையும் பெரும் திடலையும் நாற்பத்து நாண்கு அரங்குகளையும் ஒரு அகழியையும் கொண்டிருந்தது அரசுக்கு எதிராக எந்த புகாரும் தெரிவிக்காத நிலையில் மே 28-ஆம் நால் இரானுவம் கோட்டைக்கு எதிரே திரண்டது. பாஞ்சேர் தலைமையில் மற்றோரு நிலைப்படை மதுரையிலிருந்து புறப்பட்டு சிவகங்கை கிழக்கு பகுதியில் முன்னேறி திருப்புவனத்தை கைப்பற்றியதன் மூலம் சிவகங்கை படைகள் சேதுபதிகளுக்கு உதவி செய்ய முடியாமல் தடுத்துவிட்டது.

ஆற்காடு முகமது அலியின் மகன் படையின் குழுத்தலைமை ஏற்று அரசியின் தூதரோடு பேச்சு வார்த்தை நடத்தி பாளயங்களை பனியவைக்க எடுத்த முயற்ச்சி தோற்றுப்போனது. ஜூன் முதல் நாள் ஸ்மித் ஒரு பொது முற்றுகை போருக்கு உத்தரவிட்டு மறுநாள் கோட்டை சுவரில் ஒரு பிளவை ஏற்படுத்தினான்.வையிட் தலைமையில் ஒரு எறிகுண்டுப்படையினர் கோட்டையை தாக்கினர். இதில் 3000 மறவர் படையினர் இறந்துவிட வளமிக்க நகரை சூறையாடினர் ஆங்கில படையினர்.

பின் இந்த சமஸ்தானத்தை கிழக்கில் ஜோசப்பும் மேற்க்கில் பான்சேரும் 1772 இல் கைப்பற்றினான். இது போன்ற படையெடுப்பை எதிர்பார்ததே சிவகங்கை உடையத்தேவர் சாலைகளில் தடைகளை நிறுவியும் பதுங்கு குழிகளை நிறுவியும் அமைத்திருந்தார்.

முகமது அலி அவரிடம் திரைப்பணம் ஒரு லட்ச ரூபாய் தருமாறு கேட்ட போது அவர் மறுத்து விட்டார். ஜூன்-21 ஆம் நாள் ஸ்மித்தும் பான்சேரும் ஒருங்கினைந்து சிவகங்கையை ஆக்கிரமித்தனர். மறுநாள் படைகள் காளையார் கோயிலை நோக்கி சென்று கீரனூர் சோழவரம் ஆகிய சாவடிகளைக் கைப்பற்றினான். இந்த சூழ்நிலையில் சிவகங்கை அமைச்சர் தாண்டவராய பிள்ளை முகமது அலிக்கு ஒரு உடன்பாடு தயாராகயிருப்பதாக செய்தி அனுப்பினார். ஆனால் அந்த கடித்ததை சிவகங்கை படைகள் தடுத்தி நிறுத்தி வட்டனர். ஜூன் 25 ஆம் ஆண்டு 1772 ஆம் ஆண்டு சிவகங்கை படைகளோடு மோதினான். இதில் சிவகங்கை அரசர் தனது ஆதரவார்களோடு போரில் இறந்தார் அவரது மனைவியும்,தளபதிகளான மருது சகோதரர்களும் திண்டுக்கல் விருப்பாச்சிக்கு தப்பி சென்றனர்.படையெடுத்து வந்தவர்கள் 50000 பகோடா மதிப்புள்ள நகைகளை கைப்பற்றிக்கொண்டனர்.

நவாப் இவ்வாறு மறவர்களை வென்று அவர்களது பெரும் பகுதிகளை இனைந்த்து கொண்டான். இந்த நிலை உருவாக காரணம் அவ்விரு அரசுகளும் வலுவற்றிருந்தது மட்டுமின்றி தென்னிந்தியாவின் மற்ற பாளையங்களில் இருந்து தனிமை பட்டிருந்தது. மேலும் சிவகங்கை அரச குடும்பம் தனது எதிரி நாடான மைசூருக்கு ஓடியது. பிரச்சனைக்கு கூடுதல் காரணமாகியதால் இவ்வாறு அரச குடும்பம் ஒடுக்கபட்டது மக்களின் உறுதியான சுதந்திரத்துக்கும் உணர்வுக்கும் அரச விசுவாசத்திற்கும் ஒத்து போகவில்லை.

இரண்டாம் மைசூர் யுத்த தொடக்கத்தில் இராம்நாதபுரம் மற்றும் சிவகங்கையின் கட்டுப்பட்டினை முகம்மது அலி இழந்த போது இந்தப்பாளையங்கள் இணைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் பின்னும் நவாப்புக்கும் பாளையக்காரர்களுடனான சமரசம் தோல்வியை கண்டது.

இராமநாதபுரம் பகுதிகளில் போர் வீரர்களாகவும் விவசாயிகளாகவும் இருந்த மறவர்களுக்கு போர் தொடுப்பதிலும் பின்பு அங்கிருந்து விடுபட்டு தங்கள் பயிர் நிலங்களுக்கு திரும்புவதிலும் ஆக இருவகையிலும் சூழலுக்கு ஏற்ப மாறி கொண்டும் கள்ளர்களோடு உடன்பாடுகண்டும் நெருங்க முடியாத வனங்களில் சாவடி அமைத்தும் மற்றும் சர்க்கார் பகுதிகளில் கலவரங்களை உருவாக்கி கொண்டும் இருந்தனர். ஈட்டிகளையும்,துப்பாக்கிகளையும் ஏந்தி கும்பினியின் முகாம்களைக் கொள்ளையிட்டதோடு நவாப் படை கொண்டிருந்த கோட்டைகளுக்குள் எறிகணைகளை வீசினர். இதன் விளைவு 1780 இல் நவாப் நிர்வாகம் கோட்டைக்ளுக்குள் புகலிடம் கேட்க நேரிட்டது. நாட்டின் பெரும் பகுதி சேதுபதிகளின் மாமனான மாப்பிள்ளை தேவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இதற்கிடையில் சிவகங்கையின் முன்னாள் திவான் தாண்டவராயபிள்ளை போரில் இறந்துபட்ட உடையத்தேவரின் நாடு மீட்கப்பட உதவுமாறு கைதர் அலியை வேண்டினார் மைசூர் மன்னர், மறவர் நாடுகளை மீட்க உறுதியளித்த சில மாதங்களுக்குள் தாண்டவராய பிள்ளை மறைந்தார். அவரது மறைவுக்கு பின் மருது சகோதரர்கள் இருவரும் ஆக்கிரமிக்கப்ட்ட பகுதிகளின் பிரச்சனைகளில் முன் நின்றனர்.1780-இல் கைதர் அலி ஆற்க்காட்டின் மீது படைஎடுத்து திண்டுக்கல்லை கைப்பற்றி நவாப்பின் ஆட்சிப் பகுதிகளில் மதுரை நகர் எல்லை வரை கைப்பற்றி விட்டனர். மருது சகோதரர்கள் சிவகங்கையில் நுழைந்து விட்டவுடன் உள்ளூர் மக்கள் அவர்களுடன் சேர்ந்து கொள்ள கலவரம் பரவியது. இதில் வேலுநாச்சியாருடன் சிவகங்கை படைக்கு தலைமையேற்ற மருது பாண்டியர் மிகப்பெரிய வெற்றியை பெற்றனர்.

நாடு துண்டாடபட்ட போதும் தகர்க்கவியலாத சுதந்திர உணர்ச்சியுடைய மக்கள் இறுதியில் வென்றனர். அதன் பின்.முகமது அலி கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கு வளர்வதை தடுக்க 20 வயது நிரம்பிய முத்துராமலிங்க சேதுபதியை சிறையிலிருந்து விடுத்து 1781-இல் சேதுபதியாக நியமித்தான்.இதனால் கோபமான மாப்பிள்ளைத்தேவர் ஹைதர் அலியுடன் சேர்ந்து கொண்டார்.1772-இல் மே மாதம்,கடைசி வாரம் மீண்டும் ஒரு பெரும் படை இராமநாதபுரம் கோட்டை வெளியில் தஞ்சை படையை விட அளவிலும்,வலிமையிலும்,மிஞ்சிய அற்க்காடு நவாப்பின் படையும் கும்பெனியாரின் பரங்கிப்படையுடன்

கி..பி 1799 ஏப்ரல் 24-ல் காலை,அமைதியைக் குழைத்து முதுகுளத்தூரில் துப்பாக்கிகள் படபடக்கும் ஓசை கேட்டது. சர்க்கார் கச்சேரி முன்னர் வேலும் வாளும் நாட்டு துப்பக்கிகளும் பிடித்த மறவர் கூட்டம் ஒன்று திரண்டு நின்றது. கச்சேரிக்குள்ளிருந்து அமில்தார் அடித்து இழுத்து வரப்பட்டார். அங்கு காவலில் இருந்த கும்பெனி சிப்பாய்களது துப்பாக்கிகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. மறுத்த சிப்பாய்களுக்கு உதை விழுந்தது. அடுத்து அபிராமம் கச்சேரியைத் தாக்கி அங்கும் ஆயுதங்களைக் கைப்பற்றினர். அமில்தாரை அழைத்து சென்று கும்பென்யாரது துணிக் கிடங்கை திறந்து விடுமாறு பலவந்தப் படுத்தினர். கூடி நின்ற மக்கள் சர்க்கார்த் துனிகளை கொள்ளையிட்டு அள்ளிச் சென்றனர். இதனை போன்றோ கமுதிக் கச்சேரி ஆயுதங்களும் தானியக் கிடங்கும் கைப்பற்றப்பட்டன.

பொது மக்கள் கும்பெனியாருக்கும் எதிராக கிளர்ந்து எழுந்து வன்முறையில் ஈடுபட்ட இத்தகைய நிகழ்ச்சி, அன்று முதுகுளத்தூர் தொடங்கி அபிராமம், கமுதி ஆக்ய ஊர்களில் தொடர்ந்து நடைபெற்றன். இந்த கிளர்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர் மைலப்பன் என்ற குடிமகன் ஆவார்.

அவரது அறிவுரைப்படி குடிமக்கள் கும்பெனியாருக்கு செலுத்த வேண்டிய தீர்வைப் பணத்தை செலுத்த மறுத்தனர். இந்த கிளர்ஹ்க்சிகளின் பாதிப்பு பற்றி மதுரைச் சீமை வரலாற்றில் இவ்விதம் குறிப்பிடபட்டுள்ளது.

சிறையில் உள்ள சேதுபதி மன்னரை மீண்டும் பதவியில் இருத்த வேண்டும் என்ற இலட்சியத்தில் ,23-4-1797-ல் துவக்கப்பட்டது போன்ற புதிய கிளர்ச்சியொன்று மையிலப்பன் சேர்வைக்காரர் புதிய கிளர்ச்சி யொன்று கும்பெனியாருக்கு எதிராக உருப்பெறுவது போல்த் தோன்றியது. இராமநாதபுரம் கிளர்ச்சியால் பாதிப்புக்கு ஆளானது.

மைலப்பன் ஏற்கெனவே இராம்நாதபுரம் அரசில் சேர்வைக்காரராக இருந்தவர். முதுகுள்த்தூரை அடுத்த சித்திரங்குடியில் பிறந்த விவசாயி. அன்று இந்த சிற்றூர் வீரத்தின் விளை நிலமாக விளங்கியது. கி.பி.1772-ல் கும்பெனியாரும் நவாப்பும் கூட்டாக இராமநாதபுரத்தை பிடித்த பொழுது நிகழந்த போரிலும் கி.பி.1781-ல் மாப்பிள்ளைத் தேவன் தலைமையிலான புரட்சி அணியுடன் இளைஞர் முத்துராமலிங்கம் போரிட்ட பொழுதும் தங்கள் உயிரை கானிக்கையாக தந்து, மறவர் சீமையின் மாண்பை உயர்த்தியவர்களில் குறிப்பிடதக்கவர்கள் இந்த சித்திரங்குடி ஊரினர். இந்த கிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காடல்குடி பாளைய்க்காரரும் தளபதி மையிலப்பனது உதவிக்கு முன்னூறு வீரர்களை அனுப்பி வைத்ததுடன், சர்க்கார் சீமைக் கிராமங்களில் தமது ஆட்களுடன் அவர் கொள்ளைகளை மேற்க்கொண்டார்.

மைலப்பனின் கிளர்ச்சி ஒரு முக்கியமான குறிக்கோளுடன் சிறையில் உள்ள சேதுபதி மன்னரை விடுவிப்பதற்காக துவக்கபட்டுள்ளது என்றும் அதனை கும்பெனி தளபதி மார்டின்சின் விசாரனைகள் உறுதிப்படுத்துவதுமாகவும் குறிப்பிட்டிருந்தார். சேதுபதி மன்னர்டம் சேர்வைக்காரராக பனியாற்றிய மையிலப்பன் என்வவர் அந்த கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி வருவதாகவும் அவர் அன்மையில் திருச்சி கோட்டைக்கு சென்று சேதுபதி மன்னரச் சந்தித்து திரும்பிய பிறகு கிளர்ச்சியை முடுக்கிவிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

சேதுபதி மன்னரிடம் பனியாற்றிய பல அலுவலர்கள் தொடர்ந்து திருச்சியில் உள்ள சேதுபதி மன்னருடன் தொடர்பு கொண்டு இருப்பதால் மைலப்பனது முயற்ச்சிக்குச் சேதுபதியின் ஆதரவு இருந்துவருவது நம்பகத்தன்மையுள்ளதாக உள்ளது என அதன் காரணமாக மறவர் சீமையில் உள்ள நாட்டுத்தலைவர்கள் பலருக்கும் மையிலப்பன் ஒலைகள் அனுப்பி,சேதுபதி மன்னருக்கு ஏற்பட்டுள்ள சிறுமையைக் களையவும் கும்பெனியாரிடமிருந்து மறவர் சிமையை விடுவிக்கவும் குடிகள் அனைவரும் கிளர்ந்து எழுமாறு கோரிக்கை விடுத்து இருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் ஆகையால் இந்த கிளர்ச்சி நடவடிக்கைகளை முழுமையாகத்தடுத்து நிறுத்த தவறினால் விபரிதமான விளைவுகளை எதிர்கொள்ள இருக்கின்றன என்று அச்சுறுத்தி இருந்தார். சேதுபதி மன்னர் திருச்சிக்கோட்டையில் இருந்து தப்பித்து செல்ல இயலாத முறையில் நெல்லூர் இரானுவ தளத்திற்கு அனுப்பி வைக்க யோசனை தெரிவித்தார்.

இதற்கிடையில் மக்கள் கிளர்ச்சி பங்குனி மாத பகற்பொழுது போன்று கடுமையாககிக் கொண்டுவந்தது கும்பெனியாரது கூலிப்பட்டாளத்திடம் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றுவதும் அவர்களது இருப்புக் கிடங்குகளில் உள்ள துனிகள்,தானியங்களைச் சூறையாடி பேரிழப்பு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்களில் மட்டும் கிளர்ச்சிக்காரர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அபிராமத்திலும்,கமுதியிலும், தவிர்க்க முடியாத நிலையில் பொது மக்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதத் தவிர வெறுக்கதக்க போக்கு வேறு எதுவும் கிளர்ச்சியில் காணப்படவில்லை என்றாலும் கிளர்ச்சி வேகமாகப் பரவியது. பாப்பான் குளம்,பள்ளிமடம் ஆகிய பகுதிளில் கிளிர்ச்சிக்காரர்கள் முனைந்து நின்றனர். பொதுவாக வைகைப் பகுதிக்கும் குண்டாற்றுக்கு இடைப்பட்ட நீண்ட பகுதியில் கிளர்ச்சி உச்சநிலையில் இருந்தது அதனை கிளர்ச்சி தலைவர் மையிலப்பனின் சொற்களில் சொல்ல வேண்டுமானால் இந்த இயக்கம் காட்டாற்று வெள்ளம் போல் பரந்து பரவிக் காணப்பட்டது. பண்ணிரண்டாயிரம் மக்கள் அதில் பங்கு கொண்டனர்.

கிளர்ச்சியின் போது கலெக்டர் லூசிங்டன் அதன் நிலவரத்தை அறிந்து கொள்ள நாண்கு கள்ளர்களை முதுகளத்தூர் பகுதிக்கு அனுப்பி வைத்தார் அவர்களும் கிளர்ச்சியாளர்களை கண்டு அவர்களின் எண்ணிக்கை முதலிய பல விஷயங்களை நோட்டமிட்டு தெரிவித்தனர்.

கும்பெனியாரது முதல் அணி முதுகளத்தூருக்கு இராமநாதபுரம் கோட்டையிலிருந்து தளபதி மார்டின்ஸ் தலைமையில் புறப்பட்டது.வழியில் அந்த அணி மறைந்து இருந்த கிளர்ச்சிக்காரர்களால் பலமாக தாக்கப்பட்டது கும்பெனிப் பட்டாளத்தில் ஐவர் மடிந்தனர். மார்டின்ஸ் மேலும் முன்னேறாமல் தன் இராமனாதபுரம் கோட்டைக்கு திரும்பினான். இன்னோர் அணி மேஜர் கிரீம்ஸ் தலைமையில் 100 பேர்களுடன் 50 துப்பாக்கிகளுடன் 200 ஈட்டிக்காரர்களுடனும் மற்றொரு வழியாக மேற்கே காமன் கோட்டை பாதையில் தெற்கே முதுகுளத்தூரை அடைய முடியவில்லை மிகவும் பீதியடைந்த கலைக்டர் லூசிங்டன் பாளையங்கோட்டை தொடர்பு கொண்டு மேஜர் பானர்மேனைப் புறப்பட்டு வருமாறு கேட்டுக் கொண்டார். அவரும் மூன்று பவுண்டர் பீரங்கி அனியுடன் புற்ப்பட்டு 26-5-1779-ல் பள்ளி மடம் வந்து சேர்ந்தார். மதுரையிலிருந்து மேஜர் டக்பர்ன் தலைமையில் இன்னொரு சிறிய அணியும் பள்ளிமடம் வந்து மேஜர் பானர்மேனுடன் சேர்ந்து கொண்டது. பிறகு கமுதியை நோக்கி ஒரு அனும் அப்பனூரை நோக்கி இன்னோரு அனுய்மாகப் புறப்பட்டன் மன்னொரு சிறிய அனியில் அத்தனை பேரும் அயுதங்களைத் தாங்கியவர்களாக இருந்தனர். ஒரு சிலரிடம் துப்பாக்கிகளும் "மட்ச்லாக்கும்" இருந்தனர். ஊருக்கு அரை மைல் தொலைவில் இருந்த வெளியில் பட்டப்பகலில் தங்களது தாக்குதலை பயமின்றி தொடுத்தனர். இராமநாதபுரம் அரசரது முன்னாள் பிராதனியாக இருந்த முத்துக்கருப்ப பிள்ளை ஒரு கருப்புகுடையை பிடித்து கொண்டு கிளர்ச்சிக்காரகளுக்கு அவ்வபோது கட்டளைகளைப் பிறப்பித்தும் ஆப்பனூர் சேர்வைக்காரர்கள் கும்பெனிக்கு அளித்து வந்த உதவிகள் காரனமாக கிளர்ச்சிக்காரர்கள் பலத்த காயங்களுடன் பக்கத்தில் இருந்த காட்டிற்குள் பின்வாங்கினர். சேதுபதி மன்னருக்கு பரம வைரியான அபிராமம் வீசுகொண்ட தேவர் என்ற கிளர்ச்சிக்காரர்களுக்கு மிகுந்த இழப்புகள் ஏற்பட்டன. அன்றைய கிள்ர்ச்சியின் முக்கிய தலமாக கமுதிக்கோட்டை விளங்கியது. முழ்வதும் கல்லினாலாகிய இந்த வலிமையான அரனை பிரஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு அமைத்தவர் விஜய ரகுநாத சேதுபதி மன்னர்(கி.பி.1711-21) அதனுடைய பாதுகாப்பு இடமாக கிளர்ச்சிக்காரர்கள் பயன்படுத்தி வந்தனர். கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்கலான சிங்கன்செட்டி,பட்டூர்,மைலப்பன் ஆகியோர்களது நடமாட்டமும் அங்கு மிகுந்து இருந்தது. கும்பெனிப் படைக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இங்கு பயங்கர மோதல்கள் பல ஏற்பட்டன. மறவர்களிடையே வீர சாகஸங்கள் புகுந்து இருந்த பொழுதும் கும்பெனியாரது சக்தி வாய்ந்த வெடிமருந்து திறனுடன் இயங்கிய பீரங்கிகளுக்கு முன்னர் கிளர்ச்சிக்காரர்களது தாக்குதல் பயனற்று போயின.

அந்த வீர போரில் தங்களது தோழர்கள் பலரைக் களப்பலியாக கொடுத்த கிள்ர்ச்சிக்காரர்கள் வடதிசையில் நழுவினர். அவர்களைப் பின் தொடர்ந்த சுபேதார் சேக் மீரானும் அவந்து அணியும் கிளர்ச்சிக்காரர்களை வீர சோழன், அபிராமம் ஆகிய பகுதிகளில் இருந்து விரட்டி இராமநாதபுரத்தின் தெற்கு பகுதிக்குப் பின்னடையுமாறு நிர்ப்பந்தம் செய்தனர். மையிலப்பனும் அவரை சூழ்ந்து நின்ற நானூருக்கும் அதிகமான மறவர்களும் கீழ்க்குளம் காட்டிற்குள் நுழந்தனர்.

அதே சமயத்தில் இராமநாதபுரத்திலிருந்து கலெக்டர் லூசிங்டன், சிவகங்கை சேர்வைக்காரர்களிடமிருந்த பெற்ற கூலிப்படையின் பாதுகாப்பில் கமுதி கோட்டைக்கு வந்து சேர்ந்தார் பெரும்பாலும் அவர் மானாமதுரையிலிருந்து திருச்சுழி வழியாக அழிமானம் மிகவும் பரந்த அளவில் இருப்பதாக லூசிங்டன் பணியில் அவர் தீவிரமாக முனைந்தார். இப்போது அவர் அடக்க சிவகங்கை சீமை சேவைக்காரர்கள்படையை பயன்படுத்துவது அவர்களின் அடுத்த திட்டம்.

கீழ்குளம் காட்டில் சண்டை தொடர்ந்தது கிளர்ச்சிக்காரர்கள் வீரப் போரிட்டு முப்பது மறவர்களை இழந்தனர். ஐம்பது பேருக்கு படுகாயம், நாற்பது பேர் சிறைபிடிக்கபட்டனர். எஞ்சியவர்கள் வெள்ளைகுளம் நோக்கி சென்றனர்.சிங்கண்செட்டியும் கிளர்ச்சிக்கரர்களான தேவர்களும் சேர்வைக்காரர்களும் சிதறியோடினர். மைலப்பனும் அவனை சேர்ந்த முப்பதுபேர்களைக் கொண்ட படை கிழக்கில் நோக்கி பின்வாங்கியது. மறவர் சீமையில் சேது மன்னருக்கு இழைக்கப்பட்ட கும்பெனியாரது கொடுமைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள் பலர் கொலலப்பட்டனர் சிலரது தலைகள் நீண்ட ஈட்டி நுனிகளில் சொருகி பல கிராமங்களில் ஆங்காங்கு நட்டுவைத்து தங்களது "அ(நாகரீக)" தன்மையை வெளிப்படுத்தினர்.இறந்தவர்களுக்கு மனமுவந்து மிக்க மரியாதை செய்யும் இந்த புனித பூமியில் அவர்களது சடலங்களை இங்கனம் இழிவுபடுத்துவதை அவர்களால் சகித்து கொள்ள முடியாமல் இருந்தது.

அப்போது மறவர் சீமையெங்கும் இராமநாதபுரம் கலெக்டர் பகிரங்கப்படுத்திய பொது மன்னிப்பு விளம்பரத்தையும் வேண்டுகோளையும் தொடர்ந்து குடிகள் பலர் வீடுகளுக்கு திரும்பினர். ஆனால் இந்த மன்னிப்பு கிளர்ச்சியை தலைமை தாங்கி நடத்திய மைலப்பனுக்கும் முத்து இருளப்பபிள்ளை ஆகிய இருவருக்கும் மட்டும் பொருந்தாது ஆனால் அவர்களை உயிரோடு பிடிப்பதற்குத் திட்டமிட்டனர். அவர்கள் தலைக்கு விலையாக பரிசுகளும் ஏற்படுத்தினார்கள். மையிலப்பன் கடலாடி வழியாக காடல்குடிக்கும் பின்னர் பிள்ளையார் குளம், வில்லார் கோயில் ஆகிய ஊர்களுக்கும் சென்று சில நாட்களைக் கழித்த் பிறகு கமுதிக்குள் நுலையாமல் மண்டலமாணிக்கத்திற்கு வந்தார். அங்குள்ள நிலவரங்களைக் நன்கு புரிந்து கொண்டு மாறு உடையில் தஞ்சை பகுதிக்கு தப்பிச் சென்றார். அங்கு வெள்ளூர் பகுதியில் சிலகாலம் விவசாயக் கூலியாக தலைமறைவு வாழ்க்கை நடத்தியதாகவும் தெரிகின்றது.

மைலப்பனின் இரண்டாவது போர்: 


அன்னிய எதிர்ப்பு உனர்வும் ஆவேசமும் கொண்ட போர்கோலம் பூண்ட மறவர்களின் வீழ்ச்சியை கேள்விபட்ட திருச்சி கோட்டை சிறையில் இருந்த ரெபல் முத்துராமலிங்க சேதுபதியின் கவலை ஆயிரமடங்கு அதிகமாகியது. தொன்று தொட்டு வந்துள்ள மறவர் மக்களின் தன்னரசைப் புறக்கணித்து அவர்களது சுதந்திர உணர்வுகளை மதிக்காது ஆட்சி செய்யும் பரங்கியரையும்,நவாப்பையும் மதிக்காத அடிபனியாத மானமிகுந்த சுதந்திர மன்னனாக மறவர் சீமையை என்றென்றும் மிளிரச் செய்ய வேண்டும் என்ற சிறப்பான இலட்சியங்களச் செயல்படுத்த சேதுபதிமன்னர் தனக்காக கிளர்ச்சிகளை தலைமை தாங்கிய மாவீரன் மைலப்பன் தன் பிறந்த மன்ன்னான முதுகளத்தூரில் தொடங்கி மாப்பிள்ளைத் தேவனுடன் நடத்திய மோதல்களில் பங்கு கொண்டு இராமநாதபுரம் அரசுக்கு சிறந்த சேவை செய்த சேர்வைக்காரர் ஏற்கெனவே சேதுபதி மன்னரைத் திருச்சி கோட்டைக்குள் சிறை வைத்த பின்னரும் அவரை விடுவிக்க முனைந்தவர் கிளர்ச்சி நடந்த பகுதியகலையும் அங்குள்ள மக்களையும் நன்கு அறிந்தவர் நிலமைகளை தெரிந்து திட்டங்களுடன் எதிரிக்கு பலமான இழப்பையும் தோல்வியையும் ஏற்படுத்தகூடிய அரசியல் தலைவர் சித்திரங்குடி,ஆப்பனூர் வேண்டா புல்லுருவிக் கயவர்களால் அவனுக்கு எதிரான் அணியில் சேர்ந்து இவ்விதம் துரோகத்தை செய்தனர்.

இதன் பின் சிவகங்கை சின்னமருது தஞ்சை தரனியில் தலைமறைவாக இருந்த மைலப்பனை சந்தித்து தென்னாட்டு கலகத்துக்கும் ஆயுதப்புரட்சிக்கும் தலைமை தாங்குமாறு அழைப்பு விடுத்தார். இதன் பின்பு தஞ்சை சீமையில் தலைமரைவாக இருந்த தளபதி மைலப்பன் மறவர் சீமைக்கு திரும்பினார்.

அவரையும் அவரது கிளர்ச்சி ஆதரவாளர்களையும் அடக்கி ஒடுகக் முன்பு கும்பெனியாருக்கு சிவகங்கை படைகளைக் கொடுத்து உதவியவர்கள், இப்பொழுது மயிலப்பனை, தங்களுக்கு பக்கபலமாக பரங்கியருக்கு எதிரான புரட்ச்சித் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். மைலப்பனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது எனவே இருவருக்கும் பொது எதிரியான பரங்கியாரை அழிக்க இனைந்து செயல்பட்டார். அவரது தாக்குதல்கள் இப்பொழுது இன்னும் கடுமையானதாக இருந்தது. பரங்கிகளது குறிப்புகளில் மைலப்பனுக்கு "முரடன்"(ரோக்) என்ற அடைமொழி சேர்க்கபட்டது.அவரது பேராற்றலை கண்ட சின்னமருதும்,பாஞ்சை பாளையக்காரரும்,அவருக்கு பல அன்பளிப்பு வழங்கி சிறப்பித்தனர். மேல மாந்தையிலிருந்த் மறவமங்களம் வரை அவர் சுழன்று சுழன்று போரிட்டு வந்தார்.

மைசூர் மன்னர் திப்புசுல்தானுட்ன் தொடுத்த போர் முடிந்து விட்டதால் தங்களது மூல பலம் முழுவதையும் மறவர் சீமையின் மீது முடுக்கி விட்டனர் கும்பெனியார்.பரங்கி அணிகள் பல இராமநாதபுரம் சிமையையும் சிவகெங்கை சீமையையும் துளைத்து தொல்லைகள் கொடுத்து சுடுகாடாக்கினர்.

1799-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி வைகறைப் பொழுதில் மைலப்பன் சேர்வைக்காரர் தலைமையிலான புரட்சிக்காரர்கள் முதுகளத்தூரிலுள்ள கும்பெனியார் கச்சேரியைத் தாக்கி, அங்கு காவலில் இருந்த கும்பெனிப் பனியாளர்களை விரட்டியடித்து விட்டு அவர்களது ஆயுதங்களை எடுத்து சென்றனர். அடுத்து அபிராமத்திற்குச் சென்று அங்குள்ள கச்சேரியையும் கைத்தறிக் கிட்டங்கியையும் தாக்கி துணிகளை சூறையாடினர். இந்த நிகழ்ச்ச்களின் தொடர்ச்சியாக அவர்கள் கமுதிக்கும் சென்று கச்சேரியை தாக்கி நெற்களஞ்சியங்களையும் கொள்ளையிட்டனர். இந்த கிளர்ச்சியினால் முதுகளத்தூர்,கமுதி சீமை மக்கள் ஒரு புதிய தெம்புடன் கிளர்ந்து எழுந்ததுடன் கும்பெனியாரைத் துரத்தி விட்டு மீண்டும் சேதுபதி மன்னரது ஆட்சியை ஏற்படுத்தி விடலாம் என நம்பினர். இதனால் அந்த பகுதியில் ஆங்காங்கு குடிமக்களின் உதவியை பெற்று ஆங்கில கலெக்டர் லூசிங்டன் அந்த பகுதி நிலவரத்தை அறிய இயலாதவாறு துண்டித்து விட்டனர்.காமன்கோட்டை,கமுதி,முதுகுளத்தூர்,கிடாரத்திருக்கை,கருமல் முதலிய பகுதிகளில் 42 நாட்களுக்கு மேல் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினர். சிவகங்கை,எட்டையபுரம் தலைவர்களின் உதவியதன் காரனமாக ஆங்கிலேயருக்கு உதவியதால் தன்னுடைய கிளர்ச்சியாளர்களின் பெரும்பகுதியினரையும்,சிங்கன்செட்டி,இப்ராஹிம் சாகிப் போன்ற அவரது தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சிக்காரர்கள் கை ஓய்ந்ததால் அந்த பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்த கும்பெனியர் முயன்றனர். மைலப்பன் சேர்வைக்காரரை தவிர அனைத்து கிளர்ச்சிக்காரகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கினர்.பின்பு மைலப்பன் சேர்வைக்காரரைத் தம்மிடம் ஒப்படைகுமாறு மருது சகோதரர்களுக்கு தாக்கீது அனுப்பினார். ஆனால் மருது சகோதரர்கள் கலெக்டர் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை

மருது சகோரர்களது இறுதி முயற்ச்சியான காளையார் கோயில் போரில் 02-10-1801 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர். அவர்களை சார்ந்திருந்த மீனங்குடி முத்துகருப்பு தேவரையும்,சித்திரங்குடி மைலப்ப சேர்வைக்காரர் பிடிப்பதற்க்கு தீவிரமான முயற்ச்சிகளில் கும்பெனி இறங்கியது. தன்னந்தனியாக மைலப்பன் சேர்வைக்கரர் முதுகளத்தூர் கமுதிப் பகுதிகளில் தலைமறைவாக சுற்றித் திரிந்தார். அவர் சக துரோகி ஒருவனால் காட்டிக் கொடுக்கபட்டு 06-08-1802 அன்று அபிராமத்தில் தூக்கிலடப்பட்டனர்.

தொடர்ந்து இழப்புகளும்,வேதனைகளும் உங்களை துரத்திய பொழுதும்,தன் குடும்பமே அழிந்தும் மனம் கலங்காமல் தாயகத்திற்காக நின்று அஞ்சாது போரிட்ட வீர மறவனே!

எங்களின் ராஜ கோபுரம் நீங்கள்,ஆங்கிலேய கம்பெனியோடு உறுதியாக நின்று போரிட்ட
வீரமறவர்களும்,வீரமைந்தர்களும் கொல்லப்பட்ட போதும்,
சூரியனாய் விளங்கி எதிரிகளை சுட்டெரித்து எங்களின் மறமைந்தனே!

நீன் போர் களத்தில் நின்றபோது உமது தோற்றம் கண்டு, நீர்போரிடும் ஆற்றலை கண்டு எதிரிகள் மலைத்து உம்மைபற்றி
கூறியவை வராலாற்றின் பதிவுகளாய் உள்ளது

உமது வாழ்வு எங்களுக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும்
தளராத நெஞ்சுறுதியோடு யுத்த முனியிலே நின்ற எங்கள் மாவீரரே!

எங்கள் தேவனே! உங்கள் வாழ்வு எங்களுக்கு வழிகாட்டடும்!
எந்தநிலையிலும் விலை போகாத துரோகம் இழைக்காத

இந்த மான மறவனின் வாழ்க்கை ஒவ்வொரு மறவ்னுக்கும் பாடமாகட்டும்
சத்தியம் காத்திட களமாடிய எங்கள் மாவீரரே

என்றும் உங்கள் வாழ்கை எங்களுக்கு சரித்திரமாகட்டும்
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்.

நன்றி: உயர்திரு. ஐயா எஸ்.எம்.கமால், சேதுபதிகள் சரித்திரம்
நன்றி:முத்துராஜா(வழக்கறிஞர்) அவர்கள்

ஆய்வுகளின் துனை:

1.Military consulation, vol.188 A,21-7-1794,pp.3302
2.Madurai Dist, Records, vol.1133
3.Madurai Consulation, vol.179,25-2-1975
4.Revenue Consulation, vol.161
5.Fort st.George diary consulations,letter 22-6-1794 from collection Madras
6.Alexandar Nelson Madurai district manual(1896)
7.Rajayyan, k.vol South Indian Rebellion(1800,1801)...