Wednesday, September 12, 2018

திருமலை நாயக்கருகும் சடையக்க சேதுபதிக்கும் நடந்த மறவர் நாட்டு யுத்தம்(பகுதி -2) :

முதல் பகுதி:
(https://m.facebook.com/story.php?story_fbid=165516364341156&id=100026483794321

http://thevar-mukkulator.blogspot.com/2018/08/1.html )

(இந்த பதிவை படிக்கும் முன்பு முதல் பகுதியை படித்து விடுங்கள்.)

முதல் நாள் போர்:
போர் நடந்த இடம் மறவர் கோட்டைகளின் ஒன்றான அரியாண்டிபுரம் கோட்டைக்கு அருகில்.

"பார்ப்பான் படைமேலே பாருலகு தான்றிய
எறிந்தனர் எரிவாணம் எல்லையற்ற சேனையின் மேல"
"குத்தி விரட்டிக் கூடாரங் கொள்ளையிட்டார்"
"மன்னன் புலிவன்னியன் வாகாகவே திரும்பி
வெற்றிச்சங்கூதினர் விருது சடைக்கனவன்
பார்ப்பான் பெரும்படையில் பட்டார்கள் முன்னூறு
மறவர் அறுபதுபேர் மாண்டார்கள் களத்தில்"- ரா.அ

முதல் நாள் மறவர்கள் ராமப்பய்யர் படை மீது மூர்கத்தனமான தாக்குதல் நடத்தினர்.
முதல் நாள் வெற்றி மறவர் பக்கம்.இந்த நாளில் வடுகர் படையில் முன்னூறு நபர்களும் மறவரில் அறுபது நபர்களும் களத்தில் மாண்டனர்.

"அஞ்சாமல்தான் மறவன் நெஞ்செதிரே வந்தானே
மாப்பிள்ளை கொண்டையா மன்னவனே வாருமென்று
திருமலை கொண்டபையா தீரனே வருமான்று
சத்துருகாளப்பா தார்வேந்தே வாருமென்று
பென்னமராயா போர் வேந்தே வாருமென்று
மண்டூறு பாப்பயனே மன்னவனே வாருமென்று"-ரா.அ

கொண்டைய்யர்,திருமலை கொண்டபையர்,சத்துருக்களப்பையர், பொன்னமராய்யர்,பாப்பையர் ஆகிய மற்ற பிராமணர் தளபதிகளை ராமப்பய்யன் அழைக்கிறார்.

அழைப்பு விடுக்கப்பட்ட பாளையக்காரர் பெரும்படை அறியாண்டிபுரம் கோட்டையை நெருங்கி வந்து கூடாரமடித்தது. 
இதில் நத்தம் நிங்கம நாயக்கர், தொட்டப்ப நாயக்கர்,இருவப்ப நாயக்கர்,பூச்சி நாயக்கர், முத்தைய்ய நாயக்கர்,சிவிலி மாறன், முருக்கு நாட்டு மூவரையன்,குற்றாலத்தேவன், தென்மலை வன்னியர், சின்னனைஞ்ச்ச தேவன், கட்டபொம்ம நாயக்கன், ஊற்றுமலையான்,தம்பிச்சி நாயக்கன்,வென்ன நாயக்கர், பெம்ம நாயக்கர், அப்பாச்சி கவுண்டர், ஏழாயிரம் பண்ணை எதிரில்லார், கனக்கதிகாரி கவுண்டர்,முத்தப்ப நாயக்கர்,காமாட்சி நாயக்கர்,ஆயக்குழக்கொண்டையர்,விருப்பச்சி நாயக்கர், கன்னிவாடி நாயக்கர், லிங்கம்ம நாயக்கர், பெத்தன நாயக்கர், செல்வபெட்டி நாயக்கர், திருமலை பூச்சியனும்,சொக்கலிங்க நாயக்கர், விசுவப்ப நாயக்கர், மணலூறு நாயக்கர்,வேலப்ப நாயக்கர், கொடாங்கொப்ரெட்டி, அரியலூரார், மறுநூற்று நாயக்கர்,வால் சமூத்திர மன்னன்,குன்னத்து ரெட்டி,நாஞ்சி நாட்டு துரை,மலையாள ராஜா ,கொங்கு மன்னர்,கரட்டுமலை நாயக்கன், காமய நாயக்கர்,நாகம நாயக்கர்,பெருந்திகிரி பொம்மணன்,சிங்கமலத்தாபிள்ளை,சிலுப்பெட்டி நாயக்கர் ஆகியோரின் பெரும் படை ராமப்பய்யர் படையில் சேர்கிறது.

இது தவிர வாய்பூசகான், வாவுகான், சின்ன ராவுத்தர், முசெகான்,காதுறு சாய்பு, சுரனு தாதத்தராவுத்தர்,மீற சாயுபு,அதிரி சாயுபு, முகமது சாயுபு,முகமது கான், எலிசுக்கான் ஆகிய இசுலாமியரின் பெரும் குதிரைகளும் படையும் ராமபய்யர் படையில் சேர்கிறது.

இரண்டாம் நாள் போர்:
"இன்றைக்கு இலக்காக எதிர்த்த மறவனையும் சென்று பிடிக்கவென்று சீறி விடிவாளெடுத்தய்
மாப்பிள்ளை கொண்டையான் மதயானைபோல் சீறி
பாளையக்காரர் பல்பேரை தானழைத்து
பதினெட்டு வகையான பாங்குடனே தான்பிரித்து
எட்டப்பனயக்கன் எதிரில்லான் தன்படையும்
ஏரப்பனயக்கன் எதிரில்லான் தன்படையும்
எர்ப்பனயக்கன் யெல்லையற்ற காலளும்
பூச்சினயக்கன் போர்வேந்தன் தன்படையும்
கட்டபெம்மனாயக்கன் கன்னன் பெரும் படையும்"- ரா.அ

ராமப்பய்யரின் பெரும்படை பதினெட்டாக பிரிக்கப்படுகிறது

"அஞ்சு வகையாய்த்தான் பிரித்து அடர்ந்த பெருக்க
கறுத்த உடைவாள் கன்னன் ஒரு கையிலே
வீசு கொடைத்தேவன் வீமனொரு கையிலே
பொத்தை யுடையான் போர் வேந்தனொரு கையிலே
மதுரை கடைவழி மாதத்தேவனொரு கையிலே
றவுத்தர் கூத்தன் நல்ல படையொரு கையிலே
அஞ்சு வகையாய்தான் பிரித்து அடர்ந்து சமர்" - ரா.அ

கருத்தவுடையான்,வீசுகொண்டைத்தேவன், பொத்தவுடையான்,மாதத்தேவன், ராவுயத்தர் காத்தான் ஆகிய மறவர் தளபதிகள் கீழ் மறவர் படை ஐந்தாக பிரிக்கப்படுகிறது.

"யெறிந்த ரெரிவாணம் யெல்லையற்ற சேனையின்மேல்"
"வாளோடு வாள்முறிய மஷம் பெருத்தார்கள்"
"ஆனைகுத்திச்சேர்ந்து அலறி விழ்ய்வாரும்"
"இருபடையு முன்னு மெதிர்த்து சமர் பொருத்தனர்"
"வாணமடிபட்டு மண்மேல் கிடப்பாரும்
குத்துண்டு போர்களத்தில் கொலவியிட்டு நிற்பாரும்
குறை பிணமாய் நின்று கூத்தாடி நிறபாரும்
வேல் குத்துபட்டு விராண்டோடி போவாரும்"
"காலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்"- ரா.அ

நாயக்கர் படையும் மறவர் படையும் முட்டி கைகளத்தனர்,வலைத்து எதிர்த்து போர் செய்தனர்,எரிவாணம் எறிந்தனர்.வாளோடு வாள் வீரியமாக மோதின.

குத்து பட்டு நின்றர் சிலர், குறை பிணமாய் நின்றர் சிலர்,வேலால் குத்துபட்டு ஓடினர் சிலர், காலற்று வீழ்ந்தனர் சிலர், கையற்று வீழ்ந்தனர் சிலர்.

"வலங்கையிலே நின்றபடை வளர்த்துப்போர் செய்தார்கள்
இடங்கையிலே நின்ற படை எதிர்த்துப் போர் செய்தார்கள்
தேக்கிலையில் நீரதுபோல் தியங்கிவே தான் மறவன்
மன்னன் புலிராமன் மறித்தான் மறவரைத்தான்
மன்னன் புலி வன்னி வாகாகத்தான் திருப்பி
யெதிர்த்துப் போர்செய்தான் யெதிரில்ல வன்னியும்தான்
பார்ப்பான் பெரும்படையும் பறந்து கொலவியிட்டுக்
குத்தி விரட்டிக் கூடாரங் கொள்ளையிட்டு
மதச்சடைக்கன் தான் வளைத்து வன்னிக்கு வாய்த்ததென்று
ஊடுருவிச்சென்றான் உலகங்கிடுகிடென"
"வெட்டித்துரத்தி வன்னி விருதுகளுந் தான்பேசி
மன்னன் புலிராமன் படை மட்டில்லாச் சேனைவெள்ளம்
தட்டழிந்து கெட்டது போல் தலைகெட்ட நூலது போல்"
"மூவாயிரம் பேர் முழுது மங்கேதாப் மடிந்தார்கள்
மறவர் படையில் மடிந்தார்கள் முன்னூறு
வெற்றிச்சங்கூதி விருதுகளும் பேசிவந்தார்"

ராமப்பய்யர் படை மறவர்களை மறித்தது. தேக்கிலையில் நீரைப்போல மறவர்கள் தயங்கி நின்றனர்.இதைக்கண்ட வன்னியதேவர் உலகம் கிடுகிடன ராமப்பய்யர் படையை ஊடுருவிச்சென்றார். 

வன்னியரும் அவர் வீரர்களும் எதிரியை வெட்டு துரத்தினர். ராமப்பய்யர் படை தலைகெட்ட நூலது போல் சிதறியது. நாயக்கர் படையில் மூவாயிரம் பேர் மாண்டனர். மறவர்கள் முன்னூறு பேர் மடிந்தார்கள். வன்னியத்தேவர் இன்றும் வெற்றிச்சங்கூதினார்.

"மறவனே ஆண்பிள்ளை காண் மண்டலத்தி லுள்ளோரே
பெண்களோவென்று பெருமூச்சுத் தானெருந்து"
"மாப்பிள்ளை கொண்டையன் மாகோபங் கொண்டெழுந்து
வெங்கடகிருஷ்ணய்யன் வீமனே வாருமென்று"
"இன்றைக்கு இலக்காக யெதிர்த்த மறவனைத்தான் 
சென்று பிடித்து திசை நாலுங் கொள்ளை யிட்டு
கைபிடியாய்த்தான் பிடித்து கட்டிகொண்டு வரட்டால்
என்பேரோ ராமன் எடுத்துதவும் ஆயுதமோ" -ரா.அ

"மறவர் மட்டுமே ஆண் பிள்ளையா உலகத்தில் மற்றவர் அனைவரும் பெண்களா" என பொருமிய ராமப்பய்யர் 
தன் படைத்தலைவர் கொண்டய்யர், வெங்கடகிருஷ்னப்பய்யர் என அனைவரையும் அழைத்து என்று சேதுபதியை பிடித்து திசை நாலும் கொள்ளையிட்டுப்வருவேன் என் சூளுரைக்கிறார்.

மறுநாள் ஒற்றன் மூலம் வன்னியர் சடையக்கனுக்கு போர் விபரங்கள் மற்றும் வெற்றி குறித்த ஓலை அனுப்புகிறார்.
"இந்த வெற்றி போதாது என் மருகா வன்னியனே"-ரா.அ

"மண்டலத்திலுள்ள மகாசேனை அத்தனையும்
கூட்டிவந்து ராமய்யனும் கூடாரந்தானடித்தான்
என்னை யெடுக்க எவரால் முடியுமோடா
இராமநாதர் பாதம் நமக்குதவியாயிருக்க
முக்கோடி தீர்த்தம் முழுதுமங்கே தானிருக்க
வாமஞ் செகநாதர் வாய்த்த துணை யிங்கிருக்க
பார்பா நெருபொருட்டோ பாருலகில் மன்னவனே
யெதிர்த்து வந்த பார்பானை யினிவிடப் போறோமோ"

"பார்ப்பானைக்கொன்றால் பாவம் வந்து சூழுமென்று
பின் குடுமிதன்னிலே பேருலகம் தான்றிய
தேங்காயைக்கட்டி சிதற வடிப்பேனன்
கண்ணை பிடுங்கி காட்டிலே ஓட்டிடுவோம்
என்று சொல்லி ஓலையெழுது" -ரா.அ

ராமநாதர் பாதன் நமக்கு உதவியாய் இருக்க, மலைவளர் கதலி இருக்க, திருபுல்லானி ஜகன்னாதர் துணை இருக்க பார்ப்பான் ஒரு பொருட்டா.பார்ப்பன் குடுமியில் தேங்காயைன்கட்டி அடிப்பேன். கண்ணை பிடுங்கி கட்டிலோ ஓடவிடுவேன் என சேதுபதி ராமபய்யருக்கு ஓலை அனுப்புகிறார்.

ஓலையை பார்த்து மிகவும் கோபன் கொண்ட ராமப்பய்யன்
"சதுரகிரி பறுவதத்தை தான் பார்த்து நாய்குலைத்தால் சேதமுண்டோ" என சிரிக்கிறார்.
"சடையக்கனுட பெண்டின் தாலி தனையறுத்து
அரண்மனை தோறும் ஆசார வாசலல்லாம்
எருக்கும் குறுக்கும் இனிவிரைப்பேன்"- ராமபய்யர் (ரா.அ)
என பதில் ஓலை ராமப்பய்யர் அனுபுகிறார்.

" என் மருகா வன்னி இவ்வசனம் கேட்கிலையோ
பார்ப்பான்னகைத்து பகடி பண்ணி பேய்விட்டான்" -சடையக்கர் (ரா.அ)
"மாதச்சடையக்கன் தான் வளர்த்த வன்னிக்கு வாய்த்ததொன்று
போத்தை யுடையான் போர் வேந்த னொருகையிலே
வீசுகொண்டைதேவன் வீமனொரு கையிலே
கறுத்த உடையான் கன்னன் ஒருகையிலே
மதிரை வழிகண்ட மதத்தேவன் ஒருகையிலே
ரவுத்தன் கூத்தன் நல்ல படை ஒரு கையிலே
ஆறு வைகையாய் தான் பிரித்து அடர்ந்து போர் செய்யவென்று"

வன்னியன்,வேந்தன் பொத்தையுடையான், வீமன் வீசுகொண்டைத்தேவன், கறுத்தவுடையான்,மதுரை வழி கண்ட மாதத்தேவன் ராவுத்தர் கர்த்தன் என சேனை ஆறாக பிரிக்கப்படுகிறது.

"மன்னன் புலிராமன் மட்டில்லா சேனை வெள்ளம்"
"வெங்கடகிருஷ்ணய்யன் வெகுளியாய் தானெழுந்து"
"மண்ணூறு பாப்பைய்யனும் மாகோபாங் கொண்டெழுந்து
சற்றுரு கையன் தார்வேந்தன் தானெழுந்து
பாளையக்காரர் படைத்தலைரெல்லாரும்"
"போகலூர் வெளியில் போருக்கு வந்தார் கள்"-ரா.அ
ராமப்பய்யர், வெங்கடகிருஷ்ணய்யர், பாப்பையர் மற்றும் பாளையக்காரர் தலைவர் அனைவரும் போகலூர் கோட்டைக்கு வெளியில் போருக்கு வந்தார்கள்.

போகலூர் போர்.
"இருவர் படை முன் எதிர்த்து போர் செய்தார்கள்
வன்னி யொருபுறமாய் மார்க்கமாய் வந்து நின்று
மாபோகி யென்றுமொரு வான்பரிமேல் தானேறி
ஊடுருவி சென்றன் உலகங் கிடுகிடென
இடதுசாரி வலசாரி யெய்யாமல் ஊடருத்தான்" -ரா.அ

இரு தரப்பு சேனையும் எதிரெதிராக நின்றார்கள் 
போர் செய்ய. வன்னியர் மாபோகி என்ற குதிரை மேல் ஏறி நாயக்கர் படையில் ஊடுருவிச்சென்றார்.

"மன்னன் புலிராமன் மட்டில்லாச்சேனை வெள்ளம்
தட்டழிந்து கெட்டது காண் தலைகெட்ட நூலதுபோல்
மாப்பிள்ளை கொண்டையன் மதயானை போல் சீறி
யெதிர்த்த மறவனை யினிவிடப் போறேமோ
என்று சொல்லி அய்யன் எல்லோரையுஞ் சினந்து
தொட்டிய கம்பளத்தார் துடிகாரரையுஞ் சினந்து
பல்கடித்துச் சீறிவிழ ஏகினர் காணம்மனை
மறவர் படை மேல் மண்டிப் பெருத்தார்கள்"-ரா.அ

வன்னியர் ஊடுருவலால் ராமபய்யர் சேனை தட்டழிந்தது. இதனை கண்ட கொண்டைய்யர் மதயானை போல் சீறி தொட்டிய கம்பளத்தார் துடிக்காரர் ஆகியோர் துனையுடன் மறவர் படை மேல் பொருத்தார்.

" புலியை நரிபாய்ந்து போகுமோவம்வென்று சொல்லி"
"வன்னியவர் துணிந்து மசைப்போர் செய்தார்கள்
அரியாசை புரத்தார் அதிசீக்கிரம் வந்துதவ
கடந்தகுடி கோட்டையார் கடுகித்தான் வந்தார்கள்
எல்லோரும் வந்து இனிவிடப் போறோமோ
என்று சொல்லி மறவர் எதிர்த்து போர் செய்தார்கள்
மன்னன் புலிராமன் மட்டில்லா சேனை வெள்ளம்
கட்டவிழ்ந்த மான்போல கதறிதே ஓடலுற்றர்"
"வெட்டி கருவறுத்தான் விருதுபுகழ் வன்னியுந்தான்"-ரா.அ

மறவர் வெகுண்டு ஓடியதை பார்த்த வன்னியத்தேவர் நரி பாய்ந்து புலி ஓடுமோ என சொல்லிப்பாய்ந்தார்.
அம்பட்டு சேர்ந்து அலறி விழுந்தனர் சிலர், வானமடிபட்டு மன்மேல் கிடந்தனர் சிலர், வேலவனே என்றனர் சிலர், விதி வசமோ என்றனர் சிலர்,கையிழந்து நின்றனர் சிலர்.தவித்து கொண்டிருந்த மறவர்களுக்கு
அரியாண்டிபுரம் மற்றும்
கடரந்தக்குடி கோட்டைகளில் இருந்து உதவிக்கு வீரர்கள் வந்தனர். இனி விடப்போகிறோமா என்று சொல்லி மறவர்கள் எதிர்த்து வீரியமாய் போர் செய்தார்கள். ராமப்பயர் சேனை கதறி ஓடியது.விருது புகழ் வன்னியர் வெட்டி கருவறுத்தார்.

" குதிரை யிறுநூறு குண்டுபட்டு தான் விழுந்து
ஆனையுமோ பத்து அம்புடனே தான் சோர்ந்து
கூடாரங் கொள்ளை யிட்டு குடல் பிடுங்கி மாலையிட்டு
விருப்பாட்சினயக்கன் விருது சொல்லு ஒடிவ்ந்தான்
காமாட்சினயக்கன் கழுத்தை யறுக்கலுற்றன்
வெங்கமனயக்கன் வெட்டிப் பிளந்ததெரிந்தான்
பாளையக்காரரை தான் பார்த்து கழுத்தறுத்தான்" -ரா.அ

இருநூறு குதிரைகள் குண்டு பட்டு விழுந்தன. பத்து யானைகள் அம்புக்கு இரையாகின.
விருபாச்சி நாயக்கர் குடல் பிடுங்கபட்டது, காமாட்சி நாயக்கர் கழுத்து துண்டிக்கப்பட்டது. வெங்கம நாயக்கர் வெட்டி பிளக்கப்பட்டார். நாயக்கர் பாளையக்காரர் பலர் கொடுரமாக கொலை செய்யப்பட்டனர்."மன்னன் புலிராமன் மட்டில்லாச்சம்சேனையிலே
மூவாயிரம் பேர்முழுது மங்கேதான் மடிந்தார்கள்
மறவரிட படையிலுமே மடிந்தார்கள் பலபோர்கள்"
நாயக்கர் படையிலே மூவாயிரம் நபர்கள் மடிந்தார்கள்.மறவர் படையில் ஐநூறு நபர்கள் மடிந்தார்கள். இந்த நாலும் வெற்றி மறவர் பக்கம்.

அடுத்த நாள் வெற்றியொடு வன்னியதேவர் சேதுபதியை காணசெல்கிறார்.வந்து வணங்கிய வருமகனை கட்டித்தழுவி திருஷ்டி கழிய ஆயிரம் ஆலாத்தி எடுக்கசெய்கிறார்.

"இந்த வெற்றி போதாதோ யென்மருகா வன்னியென்றார்
கேட்ட படைத்தலைவர் கெடிகலங்கி போவார்கள்
இனி இளப்பமில்லை யென்மருகா வன்னி"

அடுத்த நாள்...

தொடரும்...

நன்றி:
கட்டுரை வழங்கியவர்,
கார்த்திக் தேவர்