Sunday, April 16, 2023

தமிழ் வளர்த்த ஸ்ரீ ராமன்

 தமிழ் வளர்த்த ஸ்ரீ ராமன்

~~~~~~~~~~~~~~~~~~~



மூவேந்தரும் இல்லாமல் தோற்றுவித்த தமிழ் சங்கமும் போய், 21 தலைமுறைக்கு தமிழ் வளர்க்கும் கோ வேந்தர் எவருமின்றி, எந்த மன்னரும் கொடையளிக்காத காலத்தில், பாட்டியற்றும் பாவேந்தர்கள் வாழ்க்கை நலிவுற்றும், ஆதரிப்பார் இன்றியும் பாழ்பட்டு கிடந்தது.


அவர்கள் காற்றடிக்கும் இடமெல்லாம் இலவம் பஞ்சு பறப்பதைப்போல, ஆதரிப்பாரின்றி அன்னார் ஆலாய்ப் பறந்து திரியும் போது, கேட்டதெல்லாம் தரும் தேவேந்திரத் தாருவான கற்பக விருட்சம் போல இருந்து, தமிழையும் தமிழ் புலவர்களின் வாழ்வினையும் வளமாக்கியவன் மன்னன் ஜெயதுங்கன் -.என்று சேதுபதிகளைப் பற்றிப் பாடுகிறது.


ஜெயதுங்கன் என்பது சோழரின் ஒரு பட்டம்.


மேலும்,


இந்த மண்டலங் காக்கும் அதிபதிகள் வம்சத்து பதி. மன்னர்களுக்கு நீதிபதியாக விளங்குபவன், எதிரிகளும் தலைவனாக ஏற்கும் தலைவன், சமஸ்தானங்களின் பதியாக இருப்பவன், படைசெலுத்திய நிலமெல்லாம் வெற்றிபெற்று , வெற்றிமகளை துணையாகக் கொண்டவன், காலாட்படை, தேர்ப்படை, யானைப்படை, கொண்டு விளங்குபவனாகிய தேனைப் போல இனிமையான சேதுபதியைத் தரிசிப்பது, ராமேஸ்வரத்தில் வாழும் ராமலிங்க நாதரைத் தரிசனம் செய்வது போன்றதாகும்


-என்று ராமநாதரைத் தரிசித்து சேதுபதி தரிசனம் செய்யும் ஐதீகம் விளக்கப்படுகிறது.


தவிர,


சேதுபதி என்ற பெயருடன் மனித அவதாரம் கொண்டாய், இந்த பெரும் பூமியில் நீயே ரகுராமன் ஆவாய், - என்று சேதுபதியே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாகப் பாடப்படுகிறார். See less


மாவலி வாண குலத்து மறவர் ஜாதி

 மாவலி வாண குலத்து மறவர் ஜாதி 

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

சங்கரன்கோயில் கோமதியாபுரம் தெருவிலிருக்கும்  கிருஷ்ணவாணாதிராயத்தேவர் மூத்த  குமாரர் திரு. கி.பழனித்தேவர் அவர்கள் வசம் இருக்கும் 1911 ம் ஆண்டித்திய அனுபவ ஒத்தியல் பத்திரம். 

செய்தி

- - - - - - -

1911 வருடம் ஜூலை தியதி 1க்கு முதல் விரோதிக்கிருதி வருடம் ஆடி மாதம் சனிவாரம் சுக்லபக்ஷ்ம் சஷ்டி திதி மிதுனச் சூரியன் சிம்மச் சந்திரன் கூடிய சுபதினத்தில் கஸ்பா சங்கநயினார் கோவில் தானிருக்கும் வாணாதிராய வலசை மேற்படி கலெக்கட்டார் வலசையிலிருக்கும் உறங்காலி வாணாதிராயத்தேவர் "மாவெலி வாணா குலத்து மரவர் ஜாதி" விவசாயம். மேற்படியார் குமாரர் சங்கரசுப்பு வாணாதிராயத்தேவர் / மேற்படியார் மகன் மேற்படியார் ஜாதி விவசாயம் ஜீவனம் தூங்கன்வாணாதிராயத்தேவன் 

2 பேர்களும் மேற்படி ஊரிலிருக்கும் மேற்படி ஜாதி விவசாயம் ஜீவனம் சொக்க வாணாதிராயத்தேவருக்கு எழுதிக் கொடுத்த நஞ்சை நிலம் அனுபவ ஒத்தியல் என்னவென்னால்,

நம்முடைய காணிவயல் கஸ்பா சங்கநயினார் கோவில் கண்டிகைப்பேரி மேற்படியூரிலிருக்கும் ஆனையூர் மலைக்கு மேற்காயுள்ள சித்திரபுத்திரத்தேவர் காணி நஞ்சைக்கு கீழ்பால் எல்லைக்கு வடக்கு வீறப்பத்தேவர் காணி நஞ்சைக்கு தெற்கு .... பாறைக்கு கிழக்கு எல்கையிலுள்ள புஞ்சைக்குக்கீழ் சித்திரபுத்திர பூலித்துரை மடத்துக்கு வட மேற்கு நீள்பாக எல்லை ஆக 3 குழி நிலம் கொடுக்க சம்மதிக்கிறோம். இது எது காரணம் பற்றியென்னால் 


திருநெல்வேலி ஜில்லா ஆக்டிங் கலெக்கட்டார் சுபாவில் சென்ற பிறகு சாணாரைக் குத்திப்போட்ட காரணத்தினாலே துப்பாக்கி குண்டில் மரணிச்சபடியினாலே பட்டபிரான் தேவர் மக்கள் மனைவி இரணியன் தேவர் மக்கள் மனைவி யிவர்கள் யாவரும் ஜலத்தில் வாரிக்கொண்டு போன படியினாலே நீர் நிர்கதியற்தும் நாதியற்றும் ...... எங்களுடைய கூட்டத்தார் எங்களைத் தூற்றாமலிருக்கவும் இளையதாரத்து பிள்ளையான நீரே மேற்படி நஞ்சைநிலம் மேற்படி ஊர் மேற்படி கஸ்பா மேற்படி விலாஸத்திலிருப்பதை அனுபவ ஒத்தியலாக எடுத்து அனுபவித்துக் கொள்ளவும் இவை பௌத்திர பாரம்பரியமாக .... உமது சந்ததி....

..........

........  சங்கரநமச்சிவாயத்தேவர்.. .{இதற்கு மேல் படிக்க இயலவில்லை } .. 

இப்பத்திரத்தில் பல்வேறு வரலாற்றுத் தகவல்களும் உள்ளன. அவை ஸ்காட் துரை- சாணார் -மறவர் கலவரம் - வெள்ளப்பெருக்கு  {ஜலத்தில் வாரிக்கொண்டு போன படியினாலே } - இது தாமிரபரணி வெள்ளமா ? அல்லது சிற்றாற்றின் வெள்ளப்பெருக்கா என்பது தெரியவில்லை. 

நன்றி!  

அன்பன். கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.


Saturday, April 15, 2023

உத்தம க்ஷத்திரியன்

 


சதுரகிரி, சுவாமி குழந்தையானந்தர் மடத்திற்கு, சிறுதேட்டு கிராமத்தை தானமாக வழங்கிய சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதத் தேவரின் செப்பேடு, அவரை " உத்தம க்ஷத்திரியன்" ( க்ஷத்திரியரில் மேலானவன்) - என்று குறிப்பிடுகிறது.




மேலும் "ராச நச்சேத்திர சந்திரோதையன்"- என்றும் தெரிவிக்கிறது. இதற்கு நட்சத்திரங்களைப் போன்றிருக்கும் ராஜ கூட்டத்தில் 'சந்திரன்' போல உதயமானவன்,- என்பது பொருள்.


நூல் உதவி:

சீர்மிகு சிவகங்கை சீமை.

Tuesday, April 11, 2023

சிவகிரி ஜமீன்தார் அவர்களை மறவர்கள் என்று குறிப்பிட்ட பத்திர நகல்




சிவகிரி ஜமீன்தார்களை மறவர்கள் என்று குறிப்பிட்டுள்ள பத்திர நகல்.
கீழ் கண்ட பத்திர நகல் 1877 ஆகஸ்ட் மாதத்திய நகல் பத்திரம் ஆகும்.‌ இது திருநெல்வேலி மேடைத் தளவாய் முதலியார் வகையறாவில் வந்த, அழகப்ப முதலியார் மகன்கள், தளவாய் அ. திருமலையப்ப முதலியார் மற்றும் தீர்த்தாரப்ப முதலியார் ஆகிய இருவரும் சேர்ந்து குற்றாலத்தில் உள்ள குறிஞ்சி பங்களா மற்றும் தோட்டத்தை, சிவகிரி ஜமீன்தார் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் மகன் சங்கிலி வீர பாண்டிய சின்னத்தம்பி -ஆகிய " மறவர்களுக்கு" எழுதிக் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
[ இரண்டாவது பக்கம் 5 வது வரிகள்]
இது கிரய ஒப்பந்தம் ( Endorsement ) காட்ட எடுக்கப்பட்ட நகல் ஆகும்.
குறிப்பு:
பதிவில் இது நகல் பத்திரம் என்று குறிப்பிட்டதைக் கவனிக்கவும். இது விற்பனை மற்றும் சரிபார்த்தலுக்காக பழைய மூலப் பத்திரத்தை கேட்டுப் பெறும் வகையில் வருவதும், மூலப் பத்திரம் எந்த வால்யூம் ல் எந்தெந்த பக்கங்களில் இருக்கின்றன என்பதையும், பவர் ஆஃப் அட்டர்னி யார் என்பதை தெரியப்படுத்துவனவுமாகும்.
அதன்படி மூலப்பத்திரம் 18 ம் தேதி ஆகஸ்ட் 1877 ல் எழுதப்பட்டுள்ளது. இது 24 வது வால்யூமில் 151,152 பக்கங்களில் 1355 நம்பர் தாஸ்தாவேஜாக பதியப்பட்டுள்ளது. அதன் தகவல்கள் கீழே உள்ளன. சரியாக முதலில் வாசித்த பிறகு கேள்வி கேளுங்கள் உடனே 20 ரூபாய் தற்காலத்து ஸ்டாம்ப் பேப்பர் என்று உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டாதீர்கள்.










 அதனால இவங்களுக்கு புரிய வைக்கணும்னா நாமளே அந்தப் பத்திர நகலை வாசித்து வேறொரு பேப்பரில் எழுதி‌ அதைப் புரியும்படி கொடுத்து விடுவோம் என்று முடிவு கட்டினேன். இப்பவாவது புரியுமா? இல்லை ட்யூப் லைட்ஸ் தானா?.. வர வர lkg வாத்தியார விட மோசமாப் போச்சு என் நிலமை! 😂

சிவகிரி - தலைவன் கோட்டை
சிவகிரி ஜமீன்தார் செந்தட்டிகாளைப் பாண்டிய சின்னத்தம்பியார் அவர்களின் குமாரரும் SK.வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் மற்றும்
SKN. ரவீந்திரநாத ராஜா அவர்களின் இளைய சகோதரருமான SK.ஜெகநாதராஜாவாகிய கண்ணராஜா சின்னத்தம்பியார் அவர்களுக்கும்,
தலைவன்கோட்டை ஜமீன்தார், இந்திரன் ராமசாமி ரகுநாத பாண்டியத் தலைவனார் அவர்களின் குமாரத்தியும், ராஜகுமார காசிநாத துரை அவர்களின் பேத்தியுமான, கோமதி சிவப்பிரியாநாச்சியார் அவர்களுக்கும் 15/12/88 அன்று சங்கரன்கோவில் அசெம்பிளி லாட்ஜ் கல்யாண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
16/12/88 அன்று, பாளையங்கோட்டை பெருமாள்புரம் கல்யாண மண்டபத்தில் வைத்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நெல்லை பிரபாகரனின் கச்சேரி நடைபெற்றுள்ளது.
அக் கால கட்டத்தில், நெல்லை பிரபாகரனின் கச்சேரிக்கு மிகுந்த புகழும், அதிக வரவேற்பும் இருந்தது.
சங்கரன்கோயில் ஆடித்தபசு தேவர் மண்டகப்படி திருநாளுக்கும், பைம்பொழில் தைப்பூசம் தேவர் மண்டகப்படி திருநாள்களுக்கும் இவரின் கச்சேரிகள் நடக்கும். எஸ்பி பாலசுப்பிரமணியம் குரலில் அருமையாகப் பாடுவார்.
இன்று எத்தனையோ ஆடலும் பாடலும் நிகழ்வுகள் - ஆர்க்கெஸ்ட்ரா குழுக்கள் வந்துவிட்டாலும் நெல்லை பிரபாகரனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
அப்படிப்பட்ட டிமாண்ட் ஆன நிலையில் இருந்த பிரபாகரன் கச்சேரி நமது ஜமீன்தார் கல்யாணத்திற்கு நடந்தது என்பது பெருமைக்குரியது.
மேற்கண்ட திருமணத் தம்பதியருக்கு பிறந்தவர்தான் நமது சிவகிரி இளைய ஜமீன்தாரவர்களான ஜெகநாத. ஹரிஹர ராஜா சின்னத்தம்பியார். அவர்கள்.
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.