Sunday, April 16, 2023

மாவலி வாண குலத்து மறவர் ஜாதி

 மாவலி வாண குலத்து மறவர் ஜாதி 

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

சங்கரன்கோயில் கோமதியாபுரம் தெருவிலிருக்கும்  கிருஷ்ணவாணாதிராயத்தேவர் மூத்த  குமாரர் திரு. கி.பழனித்தேவர் அவர்கள் வசம் இருக்கும் 1911 ம் ஆண்டித்திய அனுபவ ஒத்தியல் பத்திரம். 

செய்தி

- - - - - - -

1911 வருடம் ஜூலை தியதி 1க்கு முதல் விரோதிக்கிருதி வருடம் ஆடி மாதம் சனிவாரம் சுக்லபக்ஷ்ம் சஷ்டி திதி மிதுனச் சூரியன் சிம்மச் சந்திரன் கூடிய சுபதினத்தில் கஸ்பா சங்கநயினார் கோவில் தானிருக்கும் வாணாதிராய வலசை மேற்படி கலெக்கட்டார் வலசையிலிருக்கும் உறங்காலி வாணாதிராயத்தேவர் "மாவெலி வாணா குலத்து மரவர் ஜாதி" விவசாயம். மேற்படியார் குமாரர் சங்கரசுப்பு வாணாதிராயத்தேவர் / மேற்படியார் மகன் மேற்படியார் ஜாதி விவசாயம் ஜீவனம் தூங்கன்வாணாதிராயத்தேவன் 

2 பேர்களும் மேற்படி ஊரிலிருக்கும் மேற்படி ஜாதி விவசாயம் ஜீவனம் சொக்க வாணாதிராயத்தேவருக்கு எழுதிக் கொடுத்த நஞ்சை நிலம் அனுபவ ஒத்தியல் என்னவென்னால்,

நம்முடைய காணிவயல் கஸ்பா சங்கநயினார் கோவில் கண்டிகைப்பேரி மேற்படியூரிலிருக்கும் ஆனையூர் மலைக்கு மேற்காயுள்ள சித்திரபுத்திரத்தேவர் காணி நஞ்சைக்கு கீழ்பால் எல்லைக்கு வடக்கு வீறப்பத்தேவர் காணி நஞ்சைக்கு தெற்கு .... பாறைக்கு கிழக்கு எல்கையிலுள்ள புஞ்சைக்குக்கீழ் சித்திரபுத்திர பூலித்துரை மடத்துக்கு வட மேற்கு நீள்பாக எல்லை ஆக 3 குழி நிலம் கொடுக்க சம்மதிக்கிறோம். இது எது காரணம் பற்றியென்னால் 


திருநெல்வேலி ஜில்லா ஆக்டிங் கலெக்கட்டார் சுபாவில் சென்ற பிறகு சாணாரைக் குத்திப்போட்ட காரணத்தினாலே துப்பாக்கி குண்டில் மரணிச்சபடியினாலே பட்டபிரான் தேவர் மக்கள் மனைவி இரணியன் தேவர் மக்கள் மனைவி யிவர்கள் யாவரும் ஜலத்தில் வாரிக்கொண்டு போன படியினாலே நீர் நிர்கதியற்தும் நாதியற்றும் ...... எங்களுடைய கூட்டத்தார் எங்களைத் தூற்றாமலிருக்கவும் இளையதாரத்து பிள்ளையான நீரே மேற்படி நஞ்சைநிலம் மேற்படி ஊர் மேற்படி கஸ்பா மேற்படி விலாஸத்திலிருப்பதை அனுபவ ஒத்தியலாக எடுத்து அனுபவித்துக் கொள்ளவும் இவை பௌத்திர பாரம்பரியமாக .... உமது சந்ததி....

..........

........  சங்கரநமச்சிவாயத்தேவர்.. .{இதற்கு மேல் படிக்க இயலவில்லை } .. 

இப்பத்திரத்தில் பல்வேறு வரலாற்றுத் தகவல்களும் உள்ளன. அவை ஸ்காட் துரை- சாணார் -மறவர் கலவரம் - வெள்ளப்பெருக்கு  {ஜலத்தில் வாரிக்கொண்டு போன படியினாலே } - இது தாமிரபரணி வெள்ளமா ? அல்லது சிற்றாற்றின் வெள்ளப்பெருக்கா என்பது தெரியவில்லை. 

நன்றி!  

அன்பன். கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.