சிவகிரி ஜமீன்-மறவர்கள்
சிவகிரி ஜமீன்தார்களை மறவர்கள் என்று குறிப்பிட்டுள்ள பத்திர நகல்.
கீழ் கண்ட பத்திர நகல் 1877 ஆகஸ்ட் மாதத்திய நகல் பத்திரம் ஆகும். இது திருநெல்வேலி மேடைத் தளவாய் முதலியார் வகையறாவில் வந்த, அழகப்ப முதலியார் மகன்கள், தளவாய் அ. திருமலையப்ப முதலியார் மற்றும் தீர்த்தாரப்ப முதலியார் ஆகிய இருவரும் சேர்ந்து குற்றாலத்தில் உள்ள குறிஞ்சி பங்களா மற்றும் தோட்டத்தை, சிவகிரி ஜமீன்தார் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் மகன் சங்கிலி வீர பாண்டிய சின்னத்தம்பி -ஆகிய " மறவர்களுக்கு" எழுதிக் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
[ இரண்டாவது பக்கம் 5 வது வரிகள்]
இது கிரய ஒப்பந்தம் ( Endorsement ) காட்ட எடுக்கப்பட்ட நகல் ஆகும்.
குறிப்பு:
பதிவில் இது நகல் பத்திரம் என்று குறிப்பிட்டதைக் கவனிக்கவும். இது விற்பனை மற்றும் சரிபார்த்தலுக்காக பழைய மூலப் பத்திரத்தை கேட்டுப் பெறும் வகையில் வருவதும், மூலப் பத்திரம் எந்த வால்யூம் ல் எந்தெந்த பக்கங்களில் இருக்கின்றன என்பதையும், பவர் ஆஃப் அட்டர்னி யார் என்பதை தெரியப்படுத்துவனவுமாகும்.
அதன்படி மூலப்பத்திரம் 18 ம் தேதி ஆகஸ்ட் 1877 ல் எழுதப்பட்டுள்ளது. இது 24 வது வால்யூமில் 151,152 பக்கங்களில் 1355 நம்பர் தாஸ்தாவேஜாக பதியப்பட்டுள்ளது. அதன் தகவல்கள் கீழே உள்ளன. சரியாக முதலில் வாசித்த பிறகு கேள்வி கேளுங்கள் உடனே 20 ரூபாய் தற்காலத்து ஸ்டாம்ப் பேப்பர் என்று உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டாதீர்கள்.
அதனால இவங்களுக்கு புரிய வைக்கணும்னா நாமளே அந்தப் பத்திர நகலை வாசித்து வேறொரு பேப்பரில் எழுதி அதைப் புரியும்படி கொடுத்து விடுவோம் என்று முடிவு கட்டினேன்.
இப்பவாவது புரியுமா? இல்லை ட்யூப் லைட்ஸ் தானா?..
வர வர lkg வாத்தியார விட மோசமாப் போச்சு என் நிலமை! 😂
சிவகிரி ஜமீன்தார் செந்தட்டிகாளைப் பாண்டிய சின்னத்தம்பியார் அவர்களின் குமாரரும் SK.வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் மற்றும்
SKN. ரவீந்திரநாத ராஜா அவர்களின் இளைய சகோதரருமான SK.ஜெகநாதராஜாவாகிய கண்ணராஜா சின்னத்தம்பியார் அவர்களுக்கும்,
16/12/88 அன்று, பாளையங்கோட்டை பெருமாள்புரம் கல்யாண மண்டபத்தில் வைத்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நெல்லை பிரபாகரனின் கச்சேரி நடைபெற்றுள்ளது.
அக் கால கட்டத்தில், நெல்லை பிரபாகரனின் கச்சேரிக்கு மிகுந்த புகழும், அதிக வரவேற்பும் இருந்தது.
சங்கரன்கோயில் ஆடித்தபசு தேவர் மண்டகப்படி திருநாளுக்கும், பைம்பொழில் தைப்பூசம் தேவர் மண்டகப்படி திருநாள்களுக்கும் இவரின் கச்சேரிகள் நடக்கும். எஸ்பி பாலசுப்பிரமணியம் குரலில் அருமையாகப் பாடுவார்.
இன்று எத்தனையோ ஆடலும் பாடலும் நிகழ்வுகள் - ஆர்க்கெஸ்ட்ரா குழுக்கள் வந்துவிட்டாலும் நெல்லை பிரபாகரனின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
அப்படிப்பட்ட டிமாண்ட் ஆன நிலையில் இருந்த பிரபாகரன் கச்சேரி நமது ஜமீன்தார் கல்யாணத்திற்கு நடந்தது என்பது பெருமைக்குரியது.
மேற்கண்ட திருமணத் தம்பதியருக்கு பிறந்தவர்தான் நமது சிவகிரி இளைய ஜமீன்தாரவர்களான ஜெகநாத. ஹரிஹர ராஜா சின்னத்தம்பியார். அவர்கள்.
கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.