Saturday, January 26, 2013

மக்களின் தெய்வங்கள் கதை

தூக்குத்துரை

வித்தியாசமானது அந்த ஜமீன். வெறுமனே சுகபோகங்களிலேயே மற்ற ஜமீன்களைப் போல மூழ்கிக் கிடக்கவில்லை.
‘தன்னை நம்பியவர்களைத் தனது தலையைக் கொடுத்தாவது காப்பாற்றியாக வேண்டும்’ என்பதில் அவ்வளவு தீவிரம்!
அந்த நம்பிக்கைக்கேற்றபடியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறது ‘சிங்கம்பட்டி ஜமீன்.’
பெரியசாமித் தேவர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பட்டியின் 24-வது தலை முறையின் ஜமீன்தார். அவருடைய நண்பர் ராமசாமித் தேவர். அந்தச் சமயத்தில் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சொல்லி மதுரை சிறையில் அடைத்திருந்தார்கள். தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டாகி விட்டது. தர்மசங்கடமான நிலையில் நண்பரான சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சிறையிலிருந்தபடியே கடிதம் எழுதியிருந்தார்.
நம்பி எழுதியிருக்கிற நண்பரைக் கைவிட முடியுமா? நேரே மதுரைக்குப் போனார் ஜமீன். ஜெயிலுக்குள் எப்படி நுழைவது? மதுரை ஜெயிலரைப் பழக்கம் பிடித்தார். அவர் மூலம் ஜெயிலுக்குள் போனார். கைதிகளுக்கு உதவினார். அங்கே சந்தடி சாக்கில் தனது நண்பர் ராமசாமித் தேவரையும் பார்த்தார். நம்பிக்கையூட்டினார்.
ஜெயிலரைப் பலவழிகளில் வசப்படுத்தி எப்படியாவது ராமசாமித் தேவரை வெளியே கொண்டு போய்விட முயற்சி பண்ணினார். ஜமீன்தாரின் நோக்கம் தெரிந்ததும் கோபமாகி விட்டார் ஜெயிலர். பார்த்தார் ஜமீன். ஒரே போடு. சாய்ந்து விட்டார் ஜெயிலர்.
அவருடைய உடம்பைக் கொண்டு போய்ப் பத்திரமாக ஆற்று மணலில் புதைத்தார். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஜெயிலரின் நண்பராகவே ஜெயிலுக்குள் போய் ராமசாமித் தேவரை தனியே பேச அழைத்துக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறார்.
நேரே இருவரும் சிங்கம்பட்டி ஜமீனுக்குப் போய் விடுகிறார்கள். ‘இவ்வளவு கஷ்டப்பட்டுத் தன்னைக் காப்பாற்றியிருக்கிறாரே’ என்று பெருமிதம் தாளவில்லை ராமசாமித் தேவருக்கு.
அந்தச் சந்தோஷமெல்லாம் சில நாட்களுக்குத்தான். ஆற்று மணலில் புதைக்கப்பட்டிருந்த ஜெயிலரின் சடலம் வெளியே தெரியவர, அடையாளம் காட்டிவிட்டது அங்கிருந்த குதிரையின் சேனத்தில் இருந்த ஜமீன் அடையாள முத்திரை.
சிங்கம்பட்டி ஜமீன்தான் கொலை செய்திருக்கிறார் என்று ஆதாரங்கள் தெளிவானதும் கைதாகிறார். வழக்கு விசாரணை. பிறகு ஜமீனுக்குத் தூக்குத் தண்டனை – அதிலும் பொது இடத்தில்.
‘ஜமீன்தாரைத் தூக்கில் போடுகிறார்கள்’ என்று ஒரே பேச்சு. எதிரே தூக்குமரம். அதில் சுருக்குக் கயிறு. சுற்றிலும் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட மக்கள்.
கூட்டத்தை விலக்கிவிட்டு, தூக்குமரத்தை நெருங்கினார் ஜமீன். கழுத்தில் சுருக்கு விழுகிறது. பகல் நேரத்தில் யாரிடமும் கெஞ்சிக் கதறாமல் கம்பீரத்துடனேயே உயிர் பிரிகிறது.
117 வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
திருமணம் செய்து கொள்ளாமலேயே வைராக்கியமும், வீர உணர்வும், நட்பை மதிக்கிற குணமும் கொண்டிருந்த ஜமீன்தார் இப்போது சிலையாக அதே இறுக்கத்துடன் கும்பிட்டபடி நிற்கிறார். சிங்கம்பட்டியிலுள்ள சுப்பிரமணியசாமி கோயிலிலேயே ஒரு பக்கத்தில் ஜமீனின் சிலை. ‘தூக்குத்துரை’ என்றே சொல்கிறார்கள் சிங்கம்பட்டி மக்கள். இப்போதும் அவரை வழிபடுகிறார்கள்.
ஜமீனிலேயே அடுத்து எட்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. இப்போது சிங்கம்பட்டி ஜமீனாக இருக்கிறார் முருகதாஸ் தீர்த்தபதி. தூக்குத்துரை தூக்கிலிடப்பட்ட இடத்தை இன்னும் நினைவுடன் கொண்டாடுகிறார்கள் ஊர் மக்கள்.

வன்னியடி மறவன் கதை

நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 

எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.
மணிக்காஞ்சி நாட்டில் மாடப்பன் என்ற மறவன் வாழ்ந்து வந்தான். அவன் புலியின் வாலை உருவும் அளவுக்குப் பெருவீரன். அவனுக்கு வயது 22 னதும் சமுதாயத்தார் கூடி கருமறத்தியை அவனுக்கு மணமுடிதது வைத்தனர். நாட்கள் பல சென்றன. அவர்கள் மகிழ்வோடு வாழ்ந்தனர். னால் அவர்களுக்குக் குழந்தையில்லை. அதனால் கருமறத்தி மணம் மிக நொந்தாள்.

நான் மலடி என எல்லோரும் ஒதுக்குகின்றனரே! நமக்கு கொள்ளி வைக்க மகன் வேண்டாமோ? இல்லை என்றால் உலகோர் பழிப்பார்களே, 12 வயதிலே எனக்கு மாலையிட்டீர். இப்போது வயது 32 கிறதே, என் அரசே என் வார்த்தைகளைக் கேளும். நான் குழந்தைகளுக்காக தவம் செய்யப் போகிறேன் என்றாள்.

அவள் பேசுவதைக் கேட்ட மறவன் கவலைப்படாதே.இந்த நகரத்திலிருந்து குழந்தை ஒன்றை எடுத்து உனக்கு வளர்க்கத் தருகிறேன் என்றான்.
ஆனால் அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. சொந்த ரத்தம் போலாகுமா பிறர் ரத்தம்? எடுத்து வளர்த்த குழந்தை ஓடிவிடும். வேண்டாம். நான் இறைவனுக்கு நேர்ச்சை செய்து பிள்ளையை வாங்கிக்கொள்வேன். என் தோழிகளுடன் செல்வேன் என்றாள்.

கருமறத்தி தன் தோழிகள் ஐந்து பேருடன் பலவகைப் பொருள்களுடன் புறப்பட்டாள். தொலை வழி நடந்தாள். வழியில் உள்ள தெய்வங்களுக்கெல்லாம் நேர்ந்தாள். எல்லா தெய்வத்தினிடமும் வேண்டினாள். தெய்வங்கள் அவள் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை. பலன் கிடைக்கவில்லை. அவள் பல ஊர்களைக் கடந்து சென்றாள்.

அவள் திருவனந்தபுரம் காட்டுவழிச் சென்றபோது அச்சுதனார் குறத்தி வேடம் கொண்டு வந்தார். கருமறத்தியைக் கண்டார். நீ எந்த ஊர் மகளே, நீ வந்த காரணத்தைக் கூறுகிறேன். அடக்காயும் வெத்திலையும் தா வாடி மகளே என்றாள்.

கருமறத்தி நெல்லை அளந்து அவள் முன்னே வைத்தாள். குறத்தி நெல்லைக் குவித்து வைத்துவிட்டு பார்த்தாள். பெண்ணே உனக்குப் பல நாட்களாகக் குழந்தை இல்லை. போகாத குளமெல்லாம் குளித்தாய். கோவிலகள் பல சென்றாய். பின்னர் குழந்தைச் செல்வம் இல்லை. உறியில் தயிர் இருக்கும்போது வெண்ணைய்க்கு அலைந்தால் யார் மகளே தருவார்? பெண்ணே உன் குடும்ப தெய்வம் ஒன்று போகமாய் நிற்கிறது. கோவிலின் சுவர்கள் பாழடைந்து கிடக்கிறது. அதற்குக் குருபூஜை காத்து கோவிலைச் செப்பனிடு. உனக்கு ண் மகவு பிறக்கும். அதற்கு மேல் குழந்தை இல்லை. போய் வருவாய் கருமறத்தியே என்றாள்.

கருமறத்திக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குறத்திக்கு பொன்னாபரணம் ஒன்று கொடுத்தார். அதைக் குறத்தி வாங்கவில்லை. மறத்தியை அனுப்பி வைத்தாள் குறத்தி.

மறத்தி திருவட்டாறு மலைவிட்டு இறங்கி தோவாளை வழி பணகுடி. வள்ளியூர் வந்து தன் வீட்டிற்கு வந்தாள். குடும்ப தெய்வம் வாழ்ந்த கோவிலைச் செப்பனிட்டாள். தெய்வத்திற்கும் குலபூசை செய்தாள். உடனே தன் மடியில் பாம்பு வந்து படம் எடுத்து டுவதுபோல் கனவு கண்டாள். பொன் எழுத்தாணியும் புத்தகமும் கண்டாள். கணவனிடம் தான் கண்ட கனவைச் சொன்னாள். கணவன் அதனால் மிக மகிழ்ந்தான். கனவு கண்ட சிலநாளில் கர்ப்பமுற்றாள்.

கருமறத்தியின் தனங்கள் கறுத்தன. கர்ப்பமுற்றதற்கு அடையாளங்கள் தோன்றின. மாதம் பத்தாகியது. மருத்துவச்சியை அழைத்துவரச் சொன்னான் மறவன். தூதன் ஓட்டமாக ஓடிச் சென்றான். மருத்துவச்சியின் வீட்டிற்கு சென்று அழைத்தான். அவள் என்னடா மணிக்காஞ்சி மறத்திற்குத்தானே மருத்துவம்? வரமாட்டேன் போ. அவள் எனக்கு எதைத் தந்துவிட்டாள் வருவதற்கு என்றாள்.
தூதன் விடவில்லை. அவள் காலில் விழுந்தான். கட்டிப் பொன்னைத் தருகிறேன் என்றான். மருத்துவச்சி அதற்கு இசைந்து வழி நடந்தாள். மருத்துவச்சி வந்ததும் குழந்தை பிறந்தது. கன்னிக்குடம் உடைந்தது. கொப்புளும் அறுத்தாள். பிறந்த ண் குழந்தைக்கு வன்னியப்பனின் பெயரை வன்னியடி மறவன் என விட்டனர்.

குழந்தைக்கு நாள் கோள் பார்த்தவர்கள் இக்குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. இவனுக்கு 22ம் வயதில் இவந்தந்தை மாடப்பதேவன் மறவர்களால் வெட்டப்படுவான் என்றனர். மறத்திக்கு அதனால் துன்பம்தான். என்றாலும் மகனுக்கு னை ஏற்றம் குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்பித்தாள். கலைகள் பல படித்தான் மகன்.

வன்னியடி மறவன் வளர்ந்தான். சோதிடன் கூறியபடி ஊற்றுமலை மறவர்கள் கூடி ஒரு சண்டையில் மாடப்பனை வெட்டிக் கொன்றனர். வன்னியடி மறவன் தாயின் பாதுகாப்பில் வளர்ந்தான். தலால் அவனுக்கு போதிய உரம் இல்லாமல் இருந்தது. அவன் உரிய வயது வந்ததும் ஊர்த்தேவனான பொன் பாண்டித் தேவனுடன் கச்சை கட்டிக்கொண்டு களவு செய்யப் புறப்பட்டான்.

போனவிடத்தில் அவன் ஒரு செட்டியைக் கண்டான். அவனிடம் கள்ளரின் குறியீட்டு மொழியில் பஞ்சுக்குப் புண்ணுக் கொடுப்பீரோ ?" எனக் கேட்டான். வலிமையானவானாக இருந்த செட்டி வன்னியடி மறவனின் செவிட்டில் ஓங்கி அடித்தான். எதிராபாராத அடி பொறுக்காத வன்னியடி மறவன் அப்படியே வீழ்ந்தான். செட்டி தப்பிச்சென்றுவிட்டான். மற்ற மறவர்கள் அதைக்கண்டு அருவருப்பும் கோபமும் கொண்டார்கள். இவன் என்ன மறவன்! அடி தாங்காதவன்! இவனை இப்போதே வெட்டிவிடுங்கள் ! என்றனர்.

மறவர்கள் வன்னியடி மறவனை சூழ்ந்துகொண்டு வெட்டிவிட்டனர். இறந்துபோன வன்னியடி மறவன் யுள் அறமல் இறந்தமையால்ற்றாமல் பேயாகி அலைந்தான். நீலராசனிடம் வரம் வேண்டி, இசக்கி அம்மை அருள் கொடுக்க வடக்கு சூரன்குடியில் கோயில் கொண்டான்.







வன்னியன் கதை


வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணமாகி பல நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. மலடி என்ற பழி ஏற்பட்டதனால் மனம் நொந்த அவள் கோவில்கள் பல சென்று நேர்ந்தாள். குழந்தைக்காக தவமிருந்தாள். கடைசியில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று வேண்டித் தவம் இருந்தாள். அக்கோவிலிலேயே படுத்துக்கொண்டாள்.

அம்மையடி மறத்தி உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டாள். கனவில் தென்கரை சாஸ்தாவின் துணைச்சாமியான தளவாய் மாடன் கோடங்கி அடிப்பவராக வேடம் தாங்கி வந்தார். அவர் அம்மையிடம் பெண்ணே நம்பி ற்றங்கரையில் ஒரு சாஸ்தான் கோவில் இருக்கிறது. அங்கே வந்து தவமிருப்பாய். உனக்கு எட்டுக் குழந்தைகள் பிறக்க சாஸ்தா வரம் கொடுப்பார். அந்தப் பிள்ளைகளை உரிய காலத்தில் சாஸ்தாவின் கோவிலுக்குக் காவு கொடுக்கவேண்டும் என்றார்

மறத்தி கனவில் கண்ட நிகழ்ச்சியை எண்ணி வியபப்டைந்தாள். தளவாய் சொன்னபடி தென்கரைக்கு வந்தாள். நாட்கள் 41 னதும் அவள் சாஸ்தாவிடம் மேலும் கெஞ்சி வேண்டினாள். அப்போது அவளுடன் இருந்த அவளது கணவன் பெண்ணே என் நிலபுலன்களைக் கவனிக்கவேண்டும். பயிராக்கவேண்டிய காலம் வந்துவிட்டது . இப்படியே எத்தனைநாள் தவ்மிருப்பது? நான் ஊருக்குப் போகிறேன் என்று கூறி அவளிடம் விடை பெற்றுக்கொண்டு தன் ஊருக்குச் சென்றான். அவள் தொடர்ந்து தவம் செய்து வந்தாள்.

அம்மையடி மறத்தியும தென்கரையில் ஒரு இடத்தை வெட்டிச் சீர்திருத்தி வீடுகட்டி வாழ்ந்தனர். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு ண்குழந்தைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர். ண்மக்களுக்கு சின்னத்தம்பி வன்னியன், சிதம்பர வன்னியன், முத்துமாலை வன்னியன், ண்டுகொண்ட வன்னின். அழகு விலங்காடி வன்னியன், தென்கரை வன்னியன், வடகரை வன்னியன் எனப் பெயரிட்டாள். பெண்மகள் வன்னிச்சி எனப் பெயர் பெற்றாள்.

அம்மையடி மறத்தித் தன் குழந்தைகளை தன் மறக்குல வழக்கப்படி வளர்த்தாள். அவர்களும் நல்ல உடல்வாகு கொண்டவர்களாய் விளங்கினர். வேல்கம்பு, சிலம்பு போன்ற பயிற்சிகள் பெற்றனர். அவர்களுக்குத் திருமணப் பருவம் வந்தது. அம்மையடி தன் மக்களுக்குத் திருமணம் செய்ய விரும்பினாள். தன் குலத்தில் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் பெண் கேட்டாள். அவர்களின் மாமன்மார்கள் நம் குல வழக்கப்படி இந்த ஏழு பேரும் திருட்டுத் தொழிலில் திறம் காட்டிச் சாதனை செய்தால் பெண்ணைத் தருகிறோம் என வாக்களித்தனர்.

அம்மையடியாள் தன் மக்களிடம் மாமன்மார்களின் வேண்டுகோளைத் தெரிவித்தாள். வன்னியர்கள் குலவழக்கப்படி களவுத்தொழில் செய்யத் தயாராயினர். திருச்செந்தூர் கோவில் கருவறையில் அளவு கடந்த பொற்குவியல் இருப்பதைக் கேள்விப்பட்டனர். னால் அங்கே கடுங்காவல் இருப்பதை அறிந்து அங்கே செல்லவேண்டாம் என முடிவு கட்டினர். இப்படி இருக்கும்போது மூத்த வன்னியனின் கனவில் தளவாய் சுவாமி சோதிடர் உருவில் வந்தார். தென்கரை அருகே வெங்கலராசன் கோட்டை ஒன்று உள்ளது. அங்கே சென்று திருடுங்கள் என்றார்.

மூத்த வன்னியன் தம்பிகளிடம் தான் கண்ட கனவைப் பற்றிக் கூறினான். அவர்களும் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்வோம் என்றனர். அடுத்தநாள் மாலை நேரத்தில் தென்கரைக்கு வந்தனர் சகோதரர்கள். அவர்களில் ஒருவன் இப்போது நல்ல வெளிச்சம் இருக்கிறது. இப்போதே நாம் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்லவேண்டாம். அதுவரை இங்கே கிளியாந்தட்டு விளையாடுவோம் என்றான்.

அவர்கள் நம்பியாற்று மணல்வெளியில் கிளியாந்தட்டு விளையாட ரம்பித்தபோது மாடு மேய்க்கும் சிறுவனைப்போல் வேடமிட்டு தளவாய்சாமி வந்தார். அவர் வன்னியர்களிடம் மணலில் விளையாடினால் சரியாக இருக்காது. நம்பியாற்றின் நடுவே ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பெரிய பாறை மீது விளையாடுவோம் என்றார்.

வன்னியர்கள் தளவாய் சுவாமியாக வேடமிட்டிருந்த மாடுமேய்க்கும் சிறுவன் சொன்னபடி நம்பிப்பாறைக்குச் சென்றனர். அங்கே அவர்கள விளையாட ரம்பித்தனர். நேரம் போவது தெரியாமல் விளையாடினர். வானத்து நட்சத்திரங்களின் போக்கை பார்த்த மூத்த அண்ணன் நேரம் கடந்துவிட்டது. இனி வெங்கலராசன் கோட்டைக்குப் போனால் நேரம் விடிந்துவிடும். என்ன செய்வது ? எனக் கேட்டான்.

உடனே மாடு மேய்க்கும் சிறுவன் நீங்கள் சாமர்த்தியமான சிறுவர்களாகத் தோன்றவில்லையே. தென்கரை மகாராசன் கோவிலிலேயே திருடலாமே. அங்கே அளவு கடந்த பொன் இருக்கிறது. இதற்கு வெகுநேரம் நடக்கவும் வேண்டாம் என்றான்.

சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலில் திருட முடிவு செய்தனர். மாட்டுக்கார சிறுவன் கோவிலின் கருவறை இருக்கும் இடத்தை அடையாளம் சொன்னான். அவர்களிடம் மேலைவாசல் வழியாகச் செல்லுங்கள் அதுவே நல்ல வழி ! என்றும் கூறினான். பின்னர் நான் என் வழி செல்லுகிறேன். நீங்கள் உங்கள் தொழிலைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.

ஏழு சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலின் மேற்குபக்கம் வந்து சுவரில் ஏறினர். மேல் சுவரின் ஒரு பகுதியை இடித்தனர். இந்த நேரத்தில் தயவாய் சாமி ஒரு சாதாரண மனிதனாக அந்த ஊர் அரசனிடம் சென்றார். தென்கரை சாஸ்தா கோவிலில் 7 பேர்கள் திருடிக்கொண்டிருக்கின்றனர். என்னுடன் கொஞ்சம் குதிரை வீரர்களை அனுப்புங்கள். அவர்களைப் பிடித்துவிடலாம் என்றார்.

ராஜா அந்த மனிதருடன் குதிரை வீரர்களை அனுப்பினார். தளவாய்சாமி தென்கரைக்கு வரும்போது வன்னியர்கள் கோவிலில் திருடிவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். தூரத்தில் குதிரை வீரர்கள் வருவதைக் கண்டு கையிலுள்ள திருட்டுப் பொருட்களைக் கோவிலின் பக்கத்திலிந்த கிணற்றில் போட்டுவிட்டனர். னால் அதற்குள் குதிரைவீரர்கள் அவர்கள் அருகே வந்துவிட்டனர். வன்னியர்கள் ஓட்டமாய் ஓடினர். தளவாய்சாமி அவர்களைக் குருடராகும்படிச் செய்தார். அவர்களும் குருடராயினர்.

எழுவரும் கண் தெரியாமல் தட்டுத்தடுமாறித் தவித்தனர். குதிரை வீரர்கள் அவர்கள் ஏழு பேரையும் பிடித்துக் கயிற்றால் கட்டினர். கோயிலருகே இருந்த புளியமரத்தில் கட்டி வைத்தனர்.

திருடர்களின் கழுத்தில் ஊமத்தை பூமாலை போட்டனர். வில்லன்புதூர், கண்ணன்புதூர் என்னும் ஊர்களிலிருந்து வந்த வீரர்கள் வன்னியர்களை வாளால் வெட்டினர். இந்தச் சமயத்தில் வன்னியர்களின் சகோதரி வன்னிச்சி அண்ணன்மார்கள் கேட்டுக்கொண்டபடி பலவகைக் கறிகளுடன் அடுக்குப் பானைகளில் சாதம் கொண்டுவந்தாள். அண்ணன்மார்கள் அவளைத் தென்கரை நம்பியாற்றங்கரையில் கோழி கூவும்போது காத்திருக்கச் சொல்லியிருந்தார்கள். அதன்படி அவள் அங்கே வந்தாள். அவள் வரும்போது தீய சகுனங்களைக் கண்டு திடுக்கிட்டாள். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.

தென்கரை நம்பியாற்றங்கரையில் அண்ணன்மார்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டாள். தரையில் விழுந்து அழுதாள். அரற்றினாள். தலைகளை அதனதன் உடலில் பொருத்தினாள். அவர்களின் வாயில் அரிசியைப் போட்டாள். தன் நாக்கைப் பிடுங்கி அவர்களின் முன்னே போட்டாள். இந்தப் பெரிய ஊர் சிற்றூர் கட்டும். இங்கு ஏழு வீடுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. இங்கே கோழி கூவக்கூடாது. நாய் குரைக்கக்கூடாது என்று சாபம் இட்டாள். அவளும் இறந்துபோனாள்.

ஏழு மக்களும் வெட்டுப்பட்டு இறந்த செய்தியை அம்மையடி மறத்தி கேள்விப்பட்டாள். ஓடோடி வந்தாள். எல்லா மக்களும் செத்துக் கிடக்கும் காட்சியைக் கண்டாள். அப்போது அவளுக்குப் பழைய நினைவு வந்தது. தென்கரை மகராஜனுக்குக் காவலாக ஏழு பேரும் இருப்பார்கள் என்று கனவில் தான் கண்டதை நினைத்தாள். அவளும் நாக்கைப் பிடுங்கி உயிர் விட்டாள்.

இறந்துபோன ஒன்பது பேரும் சாந்தி அடையாமல் கைலாயம் சென்றனர். அவர்களுக்குச் சிவன் வரம் கொடுத்தார். வன்னியர்களில் கடைசித் தம்பியான வன்னிராசன் தெய்வமாகத் தென்கரையில் நிலைபெறட்டும் என சி வழங்கினார். எல்லோரும் தென்கரையில் சாஸ்தா கோவிலில் நிலைபெற்றனர்.

விருமாண்டி கதை பாடல் – தமிழ் மண்ணின் சாமிகள்


கமலஹாசனின் இயக்கத்தில் வந்த படம் விருமாண்டி. கதையின் தளம் மரணதண்டனையை ரத்துசெய்வதை மையமாக கொண்டிருந்தாலும், விருமாண்டி என்ற கிராம தெய்வத்தினை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது. சண்டியர் என்று பெயர் சர்ச்சையில் விருமாண்டி பெரிய விளம்பரத்தை தேடிக்கொண்டாலும், தெய்வத்தின் பெயரை தாங்கியே இறுதியாக வெளிவந்தது. “இதுக்கெல்லாம் அந்த சாமிதாலே காரணம். அது பேர வைச்சுக்கிட்டுதான் படத்தை வெளிவிடனும்முன்னு இப்படி பண்ணுது” என்று சொல்லி சிரித்தார்கள் நண்பர்கள். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் தலையிட்டு பிரட்சனையை தீர்த்ததாக சொன்னார்கள்.
விருமாண்டி பாடல் -
கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்
காளியம்மன் போல வந்தாள் பேச்சியம்மா (கருமாத்தூர்)
சைவசமையல் படையல் வைச்சு
சர்வசட்டியில் பொங்கல் வைப்பா
சாமிக்கெல்லாம் பூச வைப்பா
சங்கெடுத்து ஊதி நிப்பா (கருமாத்தூர்)
சங்குசத்தம் அந்தபொற்குலத்தில் உள்ள
பேய்க்காமன் காதில் கேட்டது… கேட்டது… கேட்டது…
பொங்கலோடு பழங்களும் சைவபடையல் வைச்சு
சாமிக்கு யார் அங்கு படைப்பது
சைவவாடையது கொஞ்சமும் சகிக்கவில்ல
தாக்கி முகம் சுழிக்க வைக்குது
என்று செங்கண் துடிதுடிக்க அங்கம் பளபளக்க
போங்கினானே பேய்க்காமனே!
மாட்டுக்கொடலெடுத்து மாலையாக போட்டுதான்
பேச்சியம்மா இடத்துக்குஅவன் வந்தானே (மாட்டுக்கொடலெடுத்து)
நானாளும் பகுதியே என்னென்னவோ சத்தம்தான்
நீயெழுப்பும் சத்தம் எல்லாம் சுத்தம்தான்
சத்தத்தாலே நேத்துபூரா தூங்கல
உங்க சங்கு சத்தம் கொட்டு சத்தம் தாங்கல
ஏழுநாளில் இங்கிருந்து கிளம்பனும்
அட இல்லாவிட்டால் நீங்களெல்லாம் புலம்பனும்
அச்சமூட்டி எல்லாரையும் மிரட்டுனான்
பொருளை அடிச்சு நொறுக்கி ஆவேசமா விரட்டுனான்
விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்
விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்
அன்னக்கொடுச்சி அழகுமயில் பேச்சியம்மா
தன்னந்தனியே வாடுரவ
கண்ணான கழுவநாதன் கண்டுமனம் கலங்கி நின்னு
அவ உள்ளங்கை ரேகையை ஊடுருவி பார்த்துட்டான்
புறங்கை ரேகையை புரட்டி புரட்டி பார்த்துட்டான்
உன்னையை காப்பாற்ற ஒரேஒரு ஆளைவிட்டா
உலகத்திலே யாருமில்லை… ஆமாம்
ஒட்டிநிக்கும் துன்பமெல்லாம்
ஒட்டடையா ஓட்டிடுவான் ஒருத்தனாக.. ஆமாம்
அனாதைக்கு ஆதாரவு தருவாண்டி
அவன்பேரு நான்சொன்னேன் விருமாண்டி
விருமாண்டிய வேண்டிவரதான் அந்த பேச்சியம்மா புறப்புட்டாளே
வனந்தரம் காடு கடந்து அந்த வண்ணமயில் புறப்புட்டாளே
எறும்பேற முடியாத எட்டு சுத்து கோட்டைக்குள்ளே
பாம்பேற முடியாத பத்து சுத்து கோட்டைக்குள்ளே
ஆதரவு இல்லாத ஆறாம்பிடி கோட்டைக்குள்ளே
அண்ணனிவ சந்திக்க அழகியவள் போனாளே!
விவரம் கோட்டு விருமாண்டி
வீரம் கொண்டு பொங்கி எழுந்தானே!
கன்னிப்பொண்ணு கதை கேட்டு
கண்ணுசெவக்க எழுந்தானே!
பெத்தபுள்ள துயரம் கேட்டு
பெத்தவங்க துடிப்பது போல்
பெரும்புழுதி புயலயடிக்க பேய்க்காமனும் இருக்குமிடம்
பிரமாண்டம் கிடுகிடுக்க விருமாண்டி வந்தானே…வந்தானே…வந்தானே…
வெண்பொங்கல் தேங்காப்பழம் விபூதி – அதை
வெறுப்பதென்ன அர்த்தம்கெட்ட கபோதி
இது பேச்சியம்மா குடியிருக்கும் திடலுடா
எதிர்த்து பேசினாக்க கிழிந்துபோகும் குடலுடா
மாட்டுகுடலில் மாலைபோடும் பராரி
உன்முதுகில் ஏறி செய்யப்போறேன் சவாரி… சவாரி.. சவாரி
இப்படி விருமாண்டி சொன்னதும் இரண்டு பேருக்கும் கடுமையா சண்டை நடந்துச்சு.அப்ப பூமியெல்லாம் நடுங்குச்சு மலையெல்லாம் உடைஞ்சுச்சு. இதைப்பார்த்த சிலபேரு வீணா ஏதுக்கையா சண்டை போடரிங்க, சமாதனமா பேசிதீர்த்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. அவங்களும் சம்மதிச்சாங்க. அதுக்கப்புறம் பஞ்சாயத்தார் தீர்ப்பு சொன்னாங்க.
என்ன சொன்னாங்க.
தொட்டப்பநாய்க்கனூரிலையும், மதுரை மொட்ட கோபுரம் பக்கத்துளேயும் கொடியென்னு நட்டுவைப்போம், உங்க ரெண்டு பேருலையும் யார் முதலபோய் அந்த கொடியை தூக்கிட்டு வாராகளோ, அவுங்களுக்கு அந்த எல்லை சொந்தமுன்னு பஞ்சாயத்தார் தீர்ப்பு சொல்ல பேய்க்காமன் யோசிச்சான். யோசிச்சு சதியொன்னு பண்ணுனான். விருமாண்டி கையில நொண்டி குதிரையொன்னு கொடுத்து, அவன் போன எங்கடா கொடிய தூக்கிக்கிட்டு வரப்போரான்னு நினைச்சான்.
ஆகா,..
மொட்டக்கோபுரந் தொட புறப்புட்டான் பேய்க்காமனும்
தொட்டப்பநாய்க்கனூரை தொட்டுட விருமன் போனான் (மொட்ட)
ஏய்க்க நினைச்ச அந்த
பேய்க்காமன் எல்லையையும்
சேர்த்தே அளந்துவந்து
ஜெயிச்சானே விருமாண்டியும்
ஜெயிச்சானே விருமாண்டியும்!
அண்ணே திரும்பிபோனா
இங்கே இவன் சும்மா இருப்பானா
பொண்ணுக்கு தொல்ல கொடுக்கும்
எவனும் இங்கே நல்லாருப்பானா
என்ன நானும் செய்யப்போறேன்
எனக்கு ஒன்னும் தெரியவில்லையே
அட அண்ணன்காரன் விருமன் போனா
வேறு ஏதும் வழியுமில்லையே
அதனால என்ன பண்ணறதுன்னு யோசிச்சு ஒரு தந்திரம் பண்ணுனா பேச்சியம்மா.
என்ன செஞ்சா.
தான் விரலுள்ள போட்டிருந்த மோதிரத்தை கிணத்துக்குள்ள போட்டுட்டு, அண்ணே அண்ணே மோதிரம் விழுந்துடுச்சு எடுத்துக்கொடுங்கன்னு அண்ணேன்னு சொன்னா.
தங்கச்சி வேண்டுதல நிறைவேத்தி வைக்கிற அண்ணன், தங்கச்சுக்காக கிணத்துல குதிச்சு மோதிரத்த எடுக்கையில, கிணத்துமேல வைச்சிருந்த கல்லை வைச்சுமூடி பேச்சியம்மா விருமாண்டிய கிணத்துக்குள்ளேயே சிறை வைச்சுப்புட்டா.
என்ன தங்கச்சி, உனக்கு உதவிபண்ண வந்த எனக்கு இதுதான் நீ காட்டுற நன்றியான்னு விருமாண்டி கேட்க, பேச்சியம்மா யோசிச்சு தினம் தினம் அண்ணனுக்கு சூலி பொண்ணும், சூலி மாடும் கொடுக்க நம்மலால முடியுமா. கொடுத்தா உலகம்தான் இத தாங்குமா அப்படின்னு நெனச்சு, அண்ணன்கிட்ட சொன்னா, அண்ணே நீ கேட்ட படி உனக்கு பூசை பண்ண முடியாது. ஆனா நாங்க என்ன பண்ணுவோம்னா,.
ஆடிக்கடைசி வெள்ளி
ஒனக்கொரு பூசை வப்போம்
ஆகாசப் பொங்கல் வச்சு
அப்போ படைய வப்போம்
ஆடிக்கடைசி வெள்ளி
ஒனக்கொரு பூசை வப்போம்
ஆகாசப் பூசை வச்சு
அப்போ படைய வப்போம்
அதிலே நீ கேட்டதெல்லாம்
ஆமாமா செஞ்சு வைப்போம்.
அதுக்காக எங்களையே எப்போவுமே காத்து இருந்து
இங்கே நீ இருக்க வேனும் – எங்கும்
பொங்கும் மங்கலம் தங்க வேனும்.
சாமி இங்கே நீ இருக்க வேனும் – எங்கும்
பொங்கும் மங்கலம் தங்க வேனும்.
பாடலோடு கதையின் சுருக்கத்தை தந்து, மேலும் விவரங்கள் சேர்த்து சொல்லாம் என நினைத்திருந்தேன். பாடலை கேட்டு எழுதவே இரண்டரை மணி நேரம் எனக்கு தேவைப்பட்டதால், இன்று முடியவில்லை. விருமாண்டி பதிவு அடுத்த இடுகையிலும் தொடரும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.