Sunday, June 23, 2013

கற்க்குறிச்சி(கல்லாம்பாறை) மறவர்கள்

அழகுபாண்டித் தேவர்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில் கற்க்குறிச்சி மறவர்கள் என்றோர் மறவர்களில் ஒரு பிரிவினர்கள் உண்டு.இவர்கள் கற்க்குறிச்சி என்ற கல்லாம்பாறை என்ற ஊரின் மறக்குல மக்கள் ஆதனால் ஊர் பெயரே 'கற்க்குறிச்சி' மறவர் என்று மறவரில் 38 பிரிவினர்களில் இவர்களும் ஒருவராவர்.இவர்களை 'அழகுபாண்டித்தேவர்கள்' என அழைப்பது வழக்கம் இவர்கள் பல நிலப்பரப்புகளுக்கு முடிமன்னர்களாக வாழ்ந்துள்ளார்கள்.'அழகு பாண்டித்தேவர்கள்' என்ற பட்டம் தூத்துக்குடி பரதவர்களிடமும் காணப்படும்.கொண்டையங்கோட்டை மறவர்களிலும் இந்த 'அழகு பாண்டியன்' கிளை உண்டு.இவர்கள் பல நிலப்பிரபு அதிபர்களாகவும் சிற்சில பாளையங்களுக்கு அதிபராகவும் வாழ்ந்துள்ளனர்.

சில வரலாற்று நூல்கள் 4 தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
[Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974]

ஜெ.எச்.நெல்சன்,எச்.ஆர்.பேட் ஆகியோரின் பழைய ஆவணப்பதிவுகளை வாசித்த பின் உதாரணமாக பாளையப்பட்டுகக்ளை விவரிக்கும் பேட் அவற்றில் எது எந்த சாதி என்றும் சாதிக்குள் எந்த உபசாதி என்றும் சொல்கிறார். நெல்லைப்பகுதி பாளையப்பட்டுக்கள் பெரும்பாலும் கொண்டையங்கோட்டை மறவர்கள்.புதுக்கோட்டை(திருநெல்வேலி), குமாரகிரி பாளையம் போன்றவை கற்குரிச்சி மறவர்கள். [திருநெல்வேலி கெஜட்: ஹெச்.ஆர்.பேட் மற்றும் நெல்சன்).

இவர்கள் குமாரகிரி பாளையம்,புதுக்கோட்டை பகுதிகள் மட்டும் ஆளவில்லை பாஞ்சாலங்குறிச்சி அருகில் இருந்த அழகுபாண்டியாபுரம் என்ற இடத்தையும் ஆண்டுள்ளனர்.இவர்களை கற்க்குறிச்சி வீர அழகுபாண்டித்தேவர்கள் என்று தான் பட்டம் இருந்துள்ளது.இந்த பாளையத்தை தவிர குமாரபாளையத்தை ஆண்ட "குமார அழகு பாண்டிய தேவர்" களின் வம்சாவளியினர் குமாரகிரி பாளையத்திலும் புதுக்கோட்டை பகுதியிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவர்களை பற்றிய கல்வெட்டு செய்திகள் ஒன்று கல்லாம்பாறை தூத்துக்குடியில் கிடைத்துள்ளது. அதில்

இடம்: கோயில் ம்க மண்டபம் நுழைவாயிலின் தென்புறச்சுவர்.
காலம்: கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு.

கல்வெட்டு: ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறபன் திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு 11 வதின் எதிர் மூவாண்டு திரு வழுதி வளநாட்டு கற்க்குறிச்சியாண மணத்தியில் நாயனாரிடையாற்றீச்வரம் உடைய நாயனார்க்கு இம்மணத்திக்கு
காரியஞ் செய்கின்ற மலை மண்டலத்துக்கு
கண்ணணூருடையான் 'ஸ்ரீ க்யிலாசமுடையான் வீரமழகிய பாண்டியத்தேவர்க்கு
இந்நாயனார் முப்பது வட்டத்து சிவப்பிராமணரோம்
பிடிபாடு குடுத்த ப்ரிசாவது இந்நாயனார்க்கு இவர் வைத்த சந்தியா தீபம் ஒன்று இஸ்ந்தியா தீபம் ஒற்றுக்கு
இவர் பக்க் இவ்வாட்டை ஆடிமாதங்க் கொண்ட அச்சு அரையும் ஒன்றுங்க் கொண்டு
சந்திராதித்தவரை செலுத்த்வோமாக கைக்கொண்டோம்.

செய்தி: 'திருவழுதி வளநாட்டு கற்க்குறிச்சியாண மனத்தியில் குறிப்புள்ள நாயனார் இடையாற்றீச்வரமுடையார்' என இறைவர் குறிப்பிடப்டுகின்றார். கற்க்குறிச்சி என்ற ஊர் 'கல்லாம்பாறை' என்ற பெயரில் தனி ஊராக அருகில் உள்ளது. தாமிரபரணிக்கும் தேரிக்கால்வாய்க்கும் இடையில் அமைந்த கோயில் என்பதால் இடையாற்றீச்வரம் என வழங்கபட்டுள்ளது. இவ்வூர் தொடர்பாண பணிகளை கவனிக்கும் செயலராக இருந்த மலை மண்டலத்துக் கண்ணனூருடையான் 'ஸ்ரீ க்யிலாசமுடையனான் வீரமழகிய பாண்டிய தேவன் என்பவர் இந்த கோய்லில் சந்தியா தீபம் எரிக்க இக்கோய்லில் மாத்ததின் முப்பது நாள்களும் பூசை பணிபுரியும் உரிமை படைத்த சிவ பிராமணர்களிடம் அரை அச்சும் ஒரு காசும் கொடுத்துள்ளார்.

நன்றி:
'மனத்தி சிவன் கோயில் கல்வெட்டுகள்' அர.அகிலா,மு.நளினி இப்பகுதிக்குகான கள ஆய்வுகள் திருமதி தமிழரசி வேலுசாமி ,திருமதி.சிவ அரசி முத்துகாளத்தி ஆகியோர் அமைத்திருக்கும் "திரு.கன்னம்மாள் இராசமானிக்கனார் அறக்கட்டளை".

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.