Tuesday, February 5, 2013

EVIDENCE சிவகிரி ஜமீன்-வன்னிகொத்து மறவர்கள்





நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 

எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.

திருநெல்வேலியில் 20-ஆம் நூற்றாண்டில் எடுத்த சாதிக் கனக்கெடுப்பில் வெள்ளாளர் (அ) பிள்ளை 33,975
வன்னியர் (அ) மறவர் 47,945 சாணார் 13,313 கோனார் 12,395 பிராமின் 10,791 பறையர் 13,456 என கனக்கெடுத்துள்ளனர்.


திருநெல்வேலி ஜாதிய அறிக்கை இது.இதில் "பள்ளி" என்னும் சாதி கிடையாது.








சிவகிரி ஜமீன்தார்களை மறவர்கள் என்று குறிப்பிட்டுள்ள பத்திர நகல்.
கீழ் கண்ட பத்திர நகல் 1877 ஆகஸ்ட் மாதத்திய நகல் பத்திரம் ஆகும்.‌ இது திருநெல்வேலி மேடைத் தளவாய் முதலியார் வகையறாவில் வந்த, அழகப்ப முதலியார் மகன்கள், தளவாய் அ. திருமலையப்ப முதலியார் மற்றும் தீர்த்தாரப்ப முதலியார் ஆகிய இருவரும் சேர்ந்து குற்றாலத்தில் உள்ள குறிஞ்சி பங்களா மற்றும் தோட்டத்தை, சிவகிரி ஜமீன்தார் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் மகன் சங்கிலி வீர பாண்டிய சின்னத்தம்பி -ஆகிய " மறவர்களுக்கு" எழுதிக் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
[ இரண்டாவது பக்கம் 5 வது வரிகள்]
இது கிரய ஒப்பந்தம் ( Endorsement ) காட்ட எடுக்கப்பட்ட நகல் ஆகும்.
குறிப்பு:
பதிவில் இது நகல் பத்திரம் என்று குறிப்பிட்டதைக் கவனிக்கவும். இது விற்பனை மற்றும் சரிபார்த்தலுக்காக பழைய மூலப் பத்திரத்தை கேட்டுப் பெறும் வகையில் வருவதும், மூலப் பத்திரம் எந்த வால்யூம் ல் எந்தெந்த பக்கங்களில் இருக்கின்றன என்பதையும், பவர் ஆஃப் அட்டர்னி யார் என்பதை தெரியப்படுத்துவனவுமாகும்.
அதன்படி மூலப்பத்திரம் 18 ம் தேதி ஆகஸ்ட் 1877 ல் எழுதப்பட்டுள்ளது. இது 24 வது வால்யூமில் 151,152 பக்கங்களில் 1355 நம்பர் தாஸ்தாவேஜாக பதியப்பட்டுள்ளது. அதன் தகவல்கள் கீழே உள்ளன. சரியாக முதலில் வாசித்த பிறகு கேள்வி கேளுங்கள் உடனே 20 ரூபாய் தற்காலத்து ஸ்டாம்ப் பேப்பர் என்று உங்கள் புத்திசாலித்தனத்தைக் காட்டாதீர்கள்.









வன்னிய மறவர் என்ற சாதி இருந்ததற்க்கு ஆதாரம்:


ஏழாயிரம் பண்ணை ஜமீன் சிவகிரி ஜமீன் ஆகிய இருவரும் வன்னிய மறவர் சாதியை சேர்ந்தவர்கள். இதில் ஏழாயிரம் பன்னையை பூர்வீகமாக கொண்டு இன்று பழனியில் வசிக்கும் சந்தன துரை என்னும் பெரியவரிடம் உள்ள இருபத்திரத்தில் 1898 மற்றும் 1920 ஆகிய பத்திரங்களில் வன்னிய மறவர் சாதி என வந்துள்ளது.

1898 ஆம் ஆண்டில் ஆதாவது சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் பழனியில் இருந்த மறவர் மடம் ஒன்றின் தலைவர் அப்போதைய 5 ரூபாய் பத்திரத்தில் நன்கு கவனிக்கவும் விக்டோரியா மகாரானி உருவம் பொரித்த பத்திரத்தில் இந்த வாசகம் வருகிறது.

"பழனியாண்டித் தேவர் மகன் வன்னிய மறவர் சாதி வசமுள்ள வீரயாத்தேவர்"........ இப்படி செல்கிறது.

இதைப்போல்,
1920 ஆம் ஆண்டில்  1 ரூபாய் பத்திரத்தில் நன்கு கவனிக்கவும் விக்டோரியா மகாரானி உருவம் பொரித்த பத்திரத்தில் இந்த வாசகம் வருகிறது.

"வன்னிய மறவர் சாதி வசமுள்ள மடமொன்றில்"



வணங்காமுடி வன்னிய மறவர் ஜாதி! 
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

அன்பு நண்பர்களே! வன்னிய மறவர் சாதி என பழங்கால பத்திரப்பதிவுகளில் {1898-மற்றும்-1928}உள்ளதையும்,அவ்விதம் வருவதையும் ஏற்கனவே நான் பதிவிட்டிருந்தேன். இப்போது மேலும் சில பத்திரங்களையும் பதிவிடுகிறேன்.

பத்திரம்:1
~~~~~~~
"வணங்காமுடி வன்னிய மறவர் ஜாதி"
{1916ம் வருடத்திய பத்திரம்.}

1916ம் வருடம்,அக்டோபர் மாதம்,11ம் தேதி, நள வருடம், புரட்டாசி மாதம் 26ம் தேதி, கஸ்பா பழனியிலிருக்கும், பழனிச்சாமி முதலியார் மகள் "செங்குந்த முதலியார் ஜாதி" விவாசாயம்,  பருவதத்துக்கு ..

மேற்படி ஊரிலிருக்கும் பழணியாண்டித்தேவர் குமாரர், "வணங்காமுடி வன்னியமறவர் ஜாதி" விவாசாயம், வீரய்யாத்தேவர், மேற்படி ஜாதி, மேற்படி ஜீவனம்,ராமசாமித்தேவர்:2,...

பத்திரம் 2.
~~~~~~~

1902 -அக்டோபர் மாதம்-25ம் தேதி, சுபகிருது ஆண்டு, ஐப்பசி மாதம் பழனியூரிலிருக்கும் ....

"வன்னியமறவர் ஜாதி"

பத்திரம்:3
~~~~~~~
"வன்னிய மறவர் ஜாதி" -1907 ம் வருட பத்திரம்.

பத்திரம்:4
~~~~~~~
பழனி டவுண், பொன்னையாத்தேவர் சந்திலிருக்கும், மாரியப்பத் தேவர் அவர்கள் மனைவி "வணங்காமுடி வன்னிய மறவர் ஜாதி " சுகஜீவனம் சுமார் 52 வயது, இருளாயி அம்மாள் அவர்களுக்கு, மேற்படி டவுண், "சவளக்காரர்" தெருவிலிருக்கும் சுப்பு பண்டாரத்து குமாரர் "துழுவ வேளாளர் ஜாதி" விவாசாயம் -வியாபாரம், சுமார் 48 வயது,பழனியப்பபிள்ளை:1, மேற்படியார் குமாரர் மைனர் சுமார் 16 வயது, சண்முகம் பிள்ளை: 1, ...... {தேதி:25•12•1937}

'சவளைக்காரர் எனும் சாதியார் இப்பத்திரத்தின் வாயிலாக "சவளைக்காரர்" என்றே இக்கால கட்டங்களில் வழங்கப்பட்டனர் என்பதை அறியமுடிகிறது'. மேலும் பழனியில் 'பண்டாரம்' எனப்படுவோர் துளுவ வேளாளர் சாதி என தம்மை குறிப்பிட்டுள்ளதையும் அறியமுடிகிறது. இதனால் 'பண்டாரச்சாதி' என்போர் பிள்ளை எனும் பட்டத்தோடு உடைய வேளாண் சாதியினர் என்பதும் உறுதியாகிறது.

பத்திரம்:5
~~~~~~~

1951- ஏப்ரல் 18,

.... பழனி டவுண், கருப்பண தேவர் சந்திலிருக்கும், வீ.ராமசாமித்தேவர் அவர்கள் பாரியை "வணங்காமுடி வன்னியமறவர் ஜாதி" சுகஜீவனம், சீதையம்மாளுக்கு....

அன்புடன்.
கி.ச. முனிராஜ் வாணாதிராயன்.


















இந்த மறவர் மடம் இன்று வழக்கில் உள்ளது பழனி பண்டாறம் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யபட்டு அதன் வழக்கு நடைபெற்று வருகிறது.

இப்படி ஒரு ஆதாரம் எவரிடமும் இருக்காது இன்றைக்கு 
திருநெல்வேலி பெருமாள் கல்வெட்டில் மறவரின் வன்னிய பட்டம்
க.என்:35
ஆட்சி ஆண்டு:கி.பி.1547
இடம்:இளவேலங்கால்
குறிப்பு: போரில் இறந்துபட்ட மறவர்க்கு கல்
அரசன்: திருநெல்வேலி பெருமால்
கல்வெட்டு:
சகாத்தம் துல் கில வருசம் மாதம் ..
திருநெல்வேலி பெருமாளாம்
வெட்டும் பெருமாள் இளவேலங்காலிருண்
தருளி போது.......வெங்கல ராச வடுக படை.....
வெட்டிய கோனாடு வகை பொது வேலங்காலிருக்கும்
குண்டையன் கோட்டை மறவரில் லிங்க தேவ வன்னியனை...
...பட்டான் வென்று முடிகொண்ட விசயாலய தேவன்

இதிலிருந்து கல்வெட்டில் வன்னியர் பட்டம் 15- ஆம் நூற்றாண்டு முன்னாலிருந்து வழக்கில் உள்ளது.


undefined


15 ஆம் நூற்றாண்டுக்கு முன் வன்னியபட்டம் உள்ளதா?

அதலையூர் நாடாள்வான் = விஜயாலத்தேவன் = வன்னியநார் அடைக்கலம் காத்த சூரைக்குடி அரையன்.
நாடாள்வான் விஜயாலயத்தேவன்
ஆதளையூர் நாடாள்வான் பொன்னனான விஜாயலயத்தேவர் கி.பி(1219) 

I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம் 

ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு.......திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவன் அவையன் சாத்தன் நாட்டானான அதளையூர் நாட்டுப்பேரரையன்............................ 




சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
"இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்"

பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.




கி.பி.1424



"வன்னிநார் அடைக்கலம் காத்த விஜயாலத்தேவன்"



















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.