Sunday, April 7, 2013

மலையமான்களில் சுருதிமான்கள் கல்வெட்டும் வரலாறும்

பார்க்கவ குல மூப்பனார் என்னும் சுருதிமான்களின் கல்வெட்டுகளும் வரலாறும்.



அரியலூர் மாவட்டம்-பெரம்பலூரில் கி.பி 1226 இல் எழுதியுள்ள சுருதிமான் பற்றிய கல்வெட்டு செய்தி.
அரியலூர் மாவட்டம்,பெரம்பலூர் வட்டம்,கொளக்காநத்தம் ஊரில் குமரவேல் ஆசிரியர் வீட்டுப் படிக்கல் காலம் - கி.பி. 1226 மூன்றாம் இராஜராஜன்-ஆட்சியாண்டு.10 காலத்தையக் கல்வெட்டு
..ஸ்வஸ்திஸ்ரீ இராஜராஜதேவற்கு யாண்டு10வது இத் தாம்பு செய்வித்தான் ஊற்றதூருடையான் சுருதிமான் சனனாதர் அரைய தேவநான வாண விச்சாதிர நாடாழ்வான்.
சுருதிமான் என்பது மலையமானின் வம்சம்.
ஊட்டத்தூர் என்பது திருச்சிக்கு அருகில் உள்ளது.சுருதிமான்கள் ஆதியிலிருந்தே தஞ்சையிலிருந்து..திருச்சி வரைக்கும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.இன்றைக்கும் இவ்விடங்களில் சுருதிமான்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தும் வருகின்றனர்.தமிழக ஜாதிப்பட்டியலில் பார்க்கவ குலத்தைத் தவிர எவருக்கும் சுருதிமான் மலையமான் நத்தமான் பட்டங்களும் கிடையாது.

மூப்பனார் என்ற பட்டம் கொண்டோரெல்லாம் சுருதிமான்களும் அல்ல.
மேலே காணும் கல்வெட்டு பட்டவர்த்தனமாக சுருதிமான் என்ற  இனப்பெயரையே கொண்டுள்ளது.

வாணர் என்றாலே மாவலி வம்சத்தோர் என்றே பொருள்.மாவலியின் குரு சுக்கிரச்சாரியர் என்னும் பார்க்கவரே ஆவார்.மாவலி சேர அரசர்.அசுரனாக அவரைக் கூறுதல் கட்டுக்கதையே.திராவிட அரசர்களையே புராணங்கள் அசுரன் எனக்கூறுகிறது.பார்க்கவ குலம் மாவலி வழி வந்த சேர வம்சமே.ஆதலால் தான் இன்றைக்கும் மாவலியின் குரு பெயரால் பார்க்கவ குலம் என வழங்குகின்றது.


நாடாழ்வான் =நாடு + ஆழ் + வ் + ஆன்
நாடாழ்வான் அரசன் என்ற பொருளில் கூறப்படும் பட்டம்..
இது எந்த ஒரு சமூகத்தையும் குறிப்பிட்டுக் கூறும் பட்டம் அல்ல.


அரையன்=அரசன் என்று பொருளாகும்.

யானைப்படைத்தளபதி  சுருதிமான் நக்கன் சந்திரன்:

 கி.பி.1007ல் சோழன் முதலாம் ராஜேந்திரனுக்கும் மேலைச்சாளுக்கிய மன்னன் இரிவபதுங்க சத்தியராய் என்பவனுக்கும் நடந்த போரில் ராஜேந்திர சோழரின் யானைப் படையை தலைமை ஏற்று நடத்தியவன்
சுருதிமான் நக்கன் சந்திரன் ஆவான்.இந்த படைத்தலைவன் நினைவாக ராஜேந்திர சோழன் ஊட்டத்தூர் கோவிலுக்கு நிவந்தம் அளித்தார். என்ற  குறிப்பு காணப்படுகிறது.ஆதாரம் (S.R.Balasubramaniam Middle Chola temple page 257)
சுருதிமான்கள் போர்ப்படைத் தளபதியாக,அதிகாரிகளாக,குறுநில மன்னர்களாக,இருந்தமைக்கு அநேக சான்றுகள் உண்டு.இவர்களே
கத்திக்காரர்கள்,சவளக்காரர்கள் போன்ற சேதியர் என்னும் போர் மறவர்களாகவும் இருந்தவர்கள்.

காந்தளூர்ச் சாலை படையெடுப்பும்  சுருதிமான்களும்.

 உடையார் ராஜராஜ சோழரின் நான்காம் ஆட்சியாண்டில் கி.பி.988ம் வருடம் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான காந்தளூர்ச்சாலை என்னும் இடத்தின் மீது படையெடுத்து அழித்துள்ளார் என அவரது மெய்க்கீர்த்தி மூலம் அறிய முடிகிறது.இதற்கு காரணமாக கூறப்படும் வரலாறு......
திருவிதாங்கூர் அரசை அப்போது பாஸ்கர ரவிவர்மன் என்ற சேர மன்னன் ஆண்டு வந்துள்ளான்.
உடையார் ராஜராஜனின் தூதாக சென்ற தூதுவனை பாஸ்கர ரவிவர்மன்  உதயகிரிக்கோட்டையில் உள்ள சிறையிலும் அடைத்து விடுகின்றான்.
இதனால் கடுங்கோபம் கொண்ட உடையார் ராஜராஜன் தனது பகைவரான சேரர்களின் பலம் வாய்ந்த துறைமுகமாகவும்,போர்ப்பயிற்சிகள் அளிக்கும் வலிய சாலையாகவும்,கடற்படையின் மூலத்தளமாகவும் விளங்கும் காந்தளூர்ச்சாலையை அழித்து சேரனின் கொட்டம் அடக்கவும் முடிவெடுத்து தனது கடற்படையை குமரி வழியாக அனுப்பிவிட்டு பெரும் படையுடன் பாண்டிய நாடு வழியாக சென்றார்.
அப்போது சேரனின் நண்பரான பாண்டியன் அமரபுஜங்கன் சோழனை எதிர்க்க அவரையும் புறமுதுகிட்டு ஓடச்செய்த சோழன் ராஜராஜன் கடற்கரைப்பட்டினமான காந்தளூர்ச்சாலையை அழித்து நிர்மூலமாக்கி  அங்கு வலியசாலையில் அளிக்கப்பட்ட போர்ப்பயிற்சிகள்,கடற்படை செயல் பாட்டுத்தளங்கள்,தாந்த்ரீக வழிபாடுகள் இவற்றை அழித்து தடை செய்து,  மீண்டும் அச்செயல்பாடுகள் தலை தூக்காதவாறு தனது நம்பிக்கைக்கு உரிய தளபதிகளையும் படை வீரர்களையும் அங்கேயே குடியேற்றியுள்ளார்.
இதனையே களம் அழித்து.... அருளி என்ற சொற்றொடர் குறிக்கிறது......
அவ்வாறு நடைபெற்ற போருக்கு ராஜராஜனுடன் சென்ற பார்க்கவ குல சேதியர்களான சுருதிமான்கள் கத்திக்காரர்கள்(கத்திரியர்),சவளக்காரர்கள் போன்ற படைவீரர்கள்  அங்கு மீண்டும் அச்செயல்கள் தலை தூக்காத படி  கண்காணிக்க வேண்டி குடியேற்றப்பட்டனர்.
அவர்களில் சவளக்காரர் சிலர் பின்னாளில் பரதவர் போன்ற இனக்குழுக்களோடு கலந்து தனியே வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு அன்றைய திருவிதாங்கூர் நாட்டைச்சேர்ந்த கன்னியாகுமரி,தூத்துக்குடி,திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் குடியேறிய   கத்திக்காரர்,சவளக்காரர் போன்றோர் அவ்விடங்களில் பார்க்கவ குல மூப்பனார்  என்ற பட்டங்களோடும் வாழ்ந்து வருகின்றனர்.

சுருதிமானில் கள்ளர்

திருப்பட்டூர்க் கல்வெட்டு.
நெற்குளம் என்ற ஊரில் பெரும் ஜமீனாக இருந்த சுருதிமான் சொர்ண வேந்தனான லங்கேசுவரன் என்பவர் தனது நிலங்களை  விற்பது சம்பந்தமான செய்தியை திருப்பட்டூர் கல்வெட்டு தெரிவிக்கின்றது.மேலும் ஊட்டத்தூர் கல்வெட்டுகள் பெரும்பாலான சுருதிமான்களைப் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது.ஆனந்தவாடி செப்பேட்டு செய்திகளில் காணியாட்சி உள்ள மக்களில் அதிகம் பேர் பார்க்கவ குல மூப்பனார்கள் என்கிறது.
கத்திரியர்,கத்தியர் என்னும் கத்திக்காரர்களையும்,மேலும் சவளக்காரர் என்ற முன்னணிப் படை வீரர்களாக,தளபதிகளாகக் கொண்டு போர்க்குடியினராக மட்டுமே இருந்து வந்த சத்திரிய சமூகமான இவர்கள் எப்போதிலிருந்து நிலவுடைமை சமூகமாக மாறினார் என்பதைக் கீழ்க்காணும் குறிப்பின் மூலம் அறிய முடிகிறது.

 LITERATURE CASTE AND SOCIETY.(REFERENCE BOOK)

TAMIL SOCIETY AND THE MILITARY IN THE AGE OF THE MEDIEVAL CHOLAS.

                                              WARFARE AND SOLDIERS.


Noboru karashima examined seven inscriptions from uttathur which belongs to the  periods of the  RAJARAJA 3rd. 
These inscriptions all recorded within three years of the reign of RAJARAJA3rd show land transaction (selling and buying) by several suruthimans fellows in the Thiruchchirapalli district. 
The suruthimans seem to be closely related to the palli, vanniya or agambadiyar castes and claimed kshathriya origin.
we find the earliest reference of the surutiman community in an inscription dated 1015 AD where a suruthiman lays down his life as a vanguard soldier in the battle of katakkam.

Another suruthiman referred to in 1141AD as a member of the urattur nadu and as landholding was an important qualification for being a nattar,we can presume that this person was a kani-holder.in the next one referred to in 1150AD we find the person mentioned as a land holder(UDAIYAN) Natalvan.

so here we find an erstwhile non-peasant martial community slowly transforming itself and becoming substantial landlords in the lower cauvery basin in the thirteenth century.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.