வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.
வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் மறவர், எயினர் போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில்
(அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ).மறவருள் ஒரு பிரிவினராகிய அகத மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகத்தா மறவர்களின் மண்டபம் திருப்பரங்குன்றம் கோயில் அருகில் உள்ளது.அகத்தா மறவர்கள் திருப்பரங்க்குன்றம்,திருச்சுழி,வருசநாடு,வத்திரயிருப்பு,அருப்புக்கோட்டை பகுதியில் கானப்படுகின்றனர். கூறப்பட்டுள்ளது.
From the blog Maya Devar comes another photo that spresents a dozen of Valari :http://mayadevar.blogspot.com/2009/04/poomarang-valari.html . By interpreting the automatic translation of the Tamil comments, I guess those Valari were exposed in the palace of the ex-ruling family in Ramanathapuram / Ramnad, South East India.
We can guess that most of those valaris are only slightly flattened : except the one in the center ; they may have been unable to really fly. 4 are broken in a way that let think they were not perfectly cut along the grain of the wood. Maybe because, for handiness, the knob had to diverge slightly from the overall curve.
On http://tamilnation.co/heritage/weapon.htm we find another article about boomerangs used by the Tamils (but no source is cited) : "Valari - An Unique Weapon of the Tamils". The url "tamilnation.co" is said to replace temporarily "tamilnation.org", so be sure to go there when this url doesn't work anymore. And there is an image of a valari that is said to have been found in Thondi (city, port, in Ramanathapuram District, Tamil Nadu). Associated person names : Dr Jeyachandrun (the man who holds the valari in the photo), Dr Jayabarathi (the author of the article)
On http://vikingsword.com/vb/showthread.php?p=56083 we find two photos. The first one is of a metal boomerang, from the book of Robert Elgood (2004) "Hindu Arms and Ritual: Arms and Armour from India 1400-1865" where it is said to be on page 191 (also said : more boomerang from India to be seen on page 193 ; the author states that there are 6 types of boomerangs in India - [can't verify that, this book is to recent to be freely read online] ).
இத்தகைய வீரம் நிறைந்த மறக்குல மக்கள் தம் குலக் கருவியாக வேட்டையாடவும்,போருக்காகவும் இளம்பிறை வடிவமுள்ள் தாக்கி திரும்பக் கூடிய வளைதடியை பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
"படிகாக்கும் தனிக் கவிகை பார்வேந்தர் தங்கமனி முடிகாக்கும் செங்க்கோன்மை முறைக்கும் படிபாதிக் குடிக்காக்கும் வழுதி தனிக் கொடியை அடல் கெருண்டா வடமேரிற் கயல் காக்கும் மறவர் கையில் வளைதடியே"
-தருமபுத்திரர்(வாளெழுபது).
இதில் பாண்டிய மன்னனின் திருமுடியையும் பாண்டிய நாட்டையும் காக்கும் மறவர்களின் முதன்மையான ஆயுதமாக வளரியை கூறுகின்றது.
இதை மறவர்களுக்கு ஸ்ரீராமபிரான் வழங்கியதாக கூறப்படுகின்றது.இது மகாவிஷ்னுவின் சக்கராயுதத்தைப்போல தாக்கி திரும்பும் தன்மையது.இது இன்று இராமநாதபுரம் அரன்மனையில் உள்ளது.
" Boomerangs," Dr. G. Oppert writes,* " are used by the Maravans and Kalians when hunting deer. The Madras Museum collection contains three (two ivory, one wooden) from the Tanjore armoury. In the arsenal of the Pudukottai Raja a stock of wooden boomerangs is always kept. Their name in Tamil is valai tade (bent stick)." To Mr. R. Bruce Foote, I am indebted for the following note on the use of the boomerang in the Madura district. " A very favourite weapon of the Madura country is a kind of curved throwing-stick, having a general likeness to the boomerang of the Australian aborigines. I have in my collection two of these Maravar weapons obtained from near Sivaganga. The larger measures 241" along the outer curve, and the chord of the arc 17!". At the handle end is a rather ovate knob 2%" long and i-J-" in its maximum thickness. The thinnest and smallest part of the weapon is just beyond the knob, and measures -J-J-" in diameter by i-J." in width. From that point onwards its width increases very gradually to the distal end, where it measures 2-f-" across and is squarely truncated. The lateral diameter is greatest three or four inches before the truncated end, where it measures i". My second specimen is a little smaller than the above, and is also rather less curved. Both are made of hard heavy wood, dark reddish brown in colour as seen through the
Egyptian God (Amun-Ra) Ra with Boomerang stick
(Sun God with Boomerang stick Wepon)
Free Egyptian-boomerang Clipart
Maat-Egyptian-goddessAmenhotep-II
* Madras Journ. Lit. Science, XXV.
47 MARAVAN
varnish covering the surface. The wood is said to be tamarind root. The workmanship is rather rude. I had an opportunity of seeing these boomerangs in use near Sivaganga in March, 1883. In the morning I came across many parties, small and large, of men and big boys who were out hare-hunting with a few dogs. The parties straggled over the ground, which was sparsely covered with low scrub jungle. And, whenever an unlucky hare started out near to the hunters, it was greeted with a volley of the boomerangs, so strongly and dexterously thrown that poor puss had little chance of escape. I saw several knocked out of time. On making enquiries as to these hunting parties, I was told that they were in observance of a semi-religious duty, in which every Maravar male, not unfitted by age or ill-health, is bound to participate on a particular day in the year. Whether a dexterous Maravar thrower could make his weapon return to him I could not find out. Certainly in none of the throws observed by me was any tendency to a return perceptible. But for simple straight shots these boomerangs answer admirably. "
இலக்கியங்களில் வளரி
மகாபாரதப் போரில் கிருஷ்ணன் பயன்படுத்திய சுதர்சனச் சக்கரம் தமிழர்களிடையே வழங்கி வந்த வளரி என்னும் ஆயுதமாகும் (மணிமாறன், தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, 2016, ப.31).
இது சுதர்சனம் என்னும் சக்கராயுதம் குறித்துச் சங்க நூலான கலித்தொகை சுட்டுகிறது. இது திருமாலின் ஆயுதமாகக் கூறப்பட்டுள்ளது.
மல்லரைமறம் சாய்த்த மலர்த்தண்தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்றுஓட உருத்துஉடன் எறிதலின்
கொல்யானை அணிநுதல் அழுந்திய ஆழிபோல்
கல்சேர்பு ஞாயிறு கதிர்வாங்கி மறைதலின் (134:1-4)
எனும் அடிகள் மூலம் அறியமுடிகிறது.
களித்த வீரர் விரட்ட நேமி
கண்டு வீசு தண்டிடைக்
குளித்த போழ்து கைப்பிடித்த
கூர்மழுக்கள் ஒக்குமே (கலிங்கத்துப்பரணி:418)
எனும் அடிகளானவை போரில் மகிழ்ச்சி கொண்ட வீரர்கள் சக்கரப்படையை விடுத்தனர். எதிர்த்துப் போர் புரியும் மற்ற வீரர்கள் அவற்றின்மேல் தண்டாயுதத்தை மோத அடித்தனர். தண்டாயுதத்தில் பதிந்த சக்கரப்படை கூர்மையான மழுவாயுதம் போன்று இருந்ததாகக் கலிங்கத்துப்பரணி வளரி பற்றிக் குறிப்பிடுகின்றது.
எரிகோல் அஞ்சா அரவின் அன்ன (புறம்.89-5)
எனும் அடியில் உள்ள எரிகோல் என்பது இங்கே வளரியைச் சுட்டுகின்றது. இவ்வளரியானது வேட்டைக் கருவியாகவும் பிறரைத் தாக்கும் கருவியாகவும் சங்க காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை மேற்கூறிய பாடலடி மூலம் அறிய முடிகிறது.
மாலை வெண்காழ் காவலர் வீச
நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் (ஐங்குறு.421:1-2)
எனும் ஐங்குறுநூற்று (விரவுபத்து) அடிகளில் வெண்காழென்றது மாலைக்காலத்து முயலெறியும் தடியை என்னும் வளரியாகிய வளைதடியாகும். இவ்வடியில் ‘காவலர்’ எனும் சொல்லினை ஆராய்ந்து நோக்குகையில் காவலர் என்பார் ஊர்க்காவலை மேற்கொண்டவராவார். இம்மக்கள் ஊர்க்காவலராக இருந்த வழக்கம் ஆங்கிலேயர் இங்கு ஆட்சி செய்ய வருவதற்கு முன்னர் வரை தென்தமிழகத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்ததைத் தர்ஸ்டன் எனும் ஆய்வறிஞர் குறிப்பிட்டுள்ளதாக மணிமாறன் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி - IV), பக்.37-38) குறிப்பிடுகின்றார்.
வளரி என்பது குறுங்கோல் வளைதடி என்பதைக்
குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் (புறம்.339:4)
எனும் அடி குறிப்பிடுகின்றது.
நைடதம் எனும் நூலில் வளரியைக் ‘குணில்’ எனக் குறிப்பிடுகின்றது. இதனைக்
கொடுங் குணில் பொருத வெற்றிப்
போர்ப்பறை குளிற வெம்போர்க்
கடுந்திறல் வயவர் வில்நாண்
புடைப்பொலி கடலின் ஆர்ப்பது’ (நைடதம்.729)
எனும் அடிகளில் காணமுடிகின்றது. குணில் என்பதற்கு வளைந்த குறுந்தடியால் ஆக்கப்பெற்ற வெற்றியைக் கொடுக்கின்ற போர் முரசு ஒலிக்க என்பதாகும் என்றும் போர்க்களத்தில் நிறைய பேர் இறக்கும்படிச் செய்யும் போர்ப்பறையை அப்பதனால் குணில் என்னாது கொடுங்குணில் என்றார் எனவும் தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் (தொகுதி I) எனும் நூலில் மணிமாறன் குறிப்பிடுகின்றார்.
இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவையில் வளரி பற்றிய செய்தி குறிப்பிட்டுள்ளது. அதனை
வரகிலையின் பொலுங் கோட்டின் வளரி வரைந்துலகை
முரசிலை யாக்கிய சீராச ராசன் முகில் வரையீர் (160)
எனும் அடிகள் மூலம் காணமுடிகிறது
சேதுபதியும் வளரியும்
“இதனை ஆளுதலிலிவர் மிகக் கைதேர்ந்தவராவர். கருதிய குறியினைத் தப்பாமலெறிதலும் எறிந்த வளரியை மீண்டும் தங்கைக்கு எய்துவித்தலும் இவர்க்கே சிறந்த பெருஞ்செயல்களாயிருந்தன என்ப” (தமிழக குறுநிலவேந்தர், ப.121)
எனத் தளசிங்க மாலையில் சேதுபதிகள் முற்காலத்து எட்டன் எனப் பெயர் கொண்ட ஒருவனோடு போர் புரிந்து அவன் தலையையே தம் வீரக்கழலில் அணிந்து கொண்டனர் எனும் செய்தியைக் கூறுகின்றது. இதனைச்
சிலையா மெழுத்துஞ் சகாயமுங் கீர்த்தியுஞ் செந்தமிழு
நிலையாகு மன்னச்சொல் வார்த்தையு மென்றைக்கு நிற்குங் கண்டாய்
கலையாருங் கானில்வன் கல்லைப்பொன் னாக்கிய காலிலெட்டன்
றலையார் விசய ரகுநாத சேது தளசிங்கமே
எனும் அடிகள் பாடிய மிதிலைப்பட்டிச் சிற்றம்பலக் கவிராயர் மூலம் அறியமுடிகின்றது.
“சேதுபதிகளது வடிவமைத்த பண்டைக் கல்லுருவங்களிலெல்லாம் இடையிற் சுற்றிய வீரக்கச்சையில், இவ்வளரியே செருகப்பட்டுள்ளது. இன்றைக்கும் காணலாம். இதுவே இவர்க்குரிய பேரடையாளமாவது. இவரது வீரக்கழல் சேமத்தலை எனப் பெயர் சிறக்கும். இது தம்மால் வெல்லப்பட்ட பகைவனது தலையே தமக்குச் சிறந்த தாளணியாக்கிக் கொண்டு விளங்கியமை குறிப்பதாகும்” (இராகவையங்கார்.இரா., தமிழகக் குறுநில வேந்தர்கள், 1994, ப.121)
தற்காலத்தில்
பாண்டி நாட்டினர் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் வளரியைப் பயன்படுத்தியதாக எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்துள்ளார். “மருதுபாண்டியர்கள் கி.பி.1780 ஆம் ஆண்டில் நவாப் படைகளையும் கி.பி.1801இல் ஆங்கிலேயப் படைகளையும் எதிர்த்துப் போரிட்டபோது வளரியைப் பயன்படுத்திய குறிப்பு காணப்பெறுகின்றது. இவ்வளரியைக் கண்டு ஆங்கிலேயர்கள் மிகவும் அஞ்சினார்கள் என்றும் இதனாலேயே போர் முடிந்ததும் கர்னல் அக்னியு சிவகங்கைப் பகுதியில் பத்தாயிரம் வளரிகளைக் கைப்பற்றியதாகவும் சென்னைப்படை வரலாறு தெரிவிக்கின்றது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I), ப.40). ஆங்கிலேயத் தளபதி கர்னல் வெல்த் என்பவர் (1795இல்) சிவகங்கையை ஆட்சி செய்த சின்னமருதுவிடம் வளரி வீசும் பயிற்சியினைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பெரிய மருது, ஆங்கிலேயரை எதிர்த்து நின்று வளரியைக் கையாளுவதில் திறம்படைத்தவராகத் திகழ்ந்துள்ளார் எனும் செய்தியை அறியமுடிகிறது. ஆங்கிலப் படைகள் தன்னைச் சுற்றிய நிலையில் வளரியை எடுத்துப் போர் செய்ய முயலும்போது பக்கவாத நோயின் விளைவால் மருதுவால் வளரியைப் பயன்படுத்த முடியவில்லை. அச்சூழலில் ஆங்கிலேயத் தளபதியைப் பார்த்து
மன்னவனே யிற்றென்முன் வந்ததுபோல்
ஒருமாதத் துக்குமுன் வந்தாயானால்
என்னைப் பிடிக்க உன்னால் ஆகாது
மேலும் வளரியால் தலைதுணித் திடுவேன்
எனும் அடிகளைப் பாடுகின்றார்.
“மருது சகோதரர்கள் காலம் வரையில் வளரி என்ற ஆயுதத்தைப் பாண்டிய நாட்டில் முக்குலத்தோர் எனப்படும் மக்களிடையே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது என்பதை Stone Age in India, எனது இராணுவ நினைவுகள் எனும் இரண்டு நூல்களை மேற்கோளாகக் கொண்டு ச.அருணாச்சலம் எழுதியுள்ளார்” (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி I, ப.36)
என மணிமாறன் குறிப்பிடுகின்றார்.
வளரிக்குத் தடை
இருபதாம் நூற்றாண்டு வரை வளரி பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் கீழ்க்காணும் விளக்கத்தின் மூலம் அறிய முடிகின்றது. கி.பி.1915 இல் மதுரை மாவட்டத்தில் கொண்டு வரப்பெற்ற குற்றச்சட்டத்தை எதிர்த்துப் பிறமலைக் கள்ளர் சமுதாயம் கி.பி.1921-இல் கிளர்ந்தெழ உசிலம்பட்டி வட்டம் பெருங்காம நல்லூரில் பெருங்கிளர்ச்சி வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இக்கிளர்ச்சியின்போது இம்மக்கள் பயன்படுத்திய ஆயுதங்களில் வளரியும் ஒன்றாகும். இதன் காரணமாக இவ்வாயுதத்தைப் பயன்படுத்த ஆங்கில அரசு தடை விதித்தது.வீடுகளில் வளரி வைத்திருந்தால் அவர்களைக் குற்றவியல் தண்டனைக்கு உட்படுத்தினர். எனவே இதனை வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகக் கோயில்களில் வைத்துப் பாதுகாத்தனர் (தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் தொகுதி I, மணிமாறன், 2016, ப.41).
வளரி பிரசாதமும் குலமரபின் ஆயுதமும்
முற்காலத்தில் போர்புரியும் வீரர்கள் தம் கொண்டையில் வளரியைச் சொருகி வைத்திருப்பர். போர் மூளும்போது கொண்டையிலிருந்து உருவி வளரியின் மூலம் எதிரிகளைப் போரிட்டு வீழ்த்துவர். இத்தகுச் சிறப்புமிகு வளரியினைத் தற்போதும் சில முக்குலத்து இன மக்களின் பழைய குடும்பங்களில் காணலாம்.பூசைக்குரிய பொருளாக வளரியைப் பயன்படுத்துகின்றனர். வளைதடியை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வரும் வழக்கமும் இவர்களிடையே இருந்துள்ளது என்றும் திருமணத்திற்கு முன் வளைதடியை இருவீட்டாரும் மாற்றிக் கொள்வதும் உண்டு. இதனாலேயே மறவர் கொடுப்பது வளரிப் பிரசாதம் என்ற பழமொழி ஏற்பட்டதென மணிமாறன் குறிப்பிடுகின்றார்.“விஜய சேதுபதி (கி.பி.1710-1725) தனது மகள் அகிலாண்டேஸ்வரியைச் சிவகங்கைக்கு மணமுடித்து அனுப்பி வைத்தபோது சீர்களில் ஒன்றாகத் தம் குலமரபு ஆயுதமான வளரியையும் அனுப்பி வைத்ததாகக் கல்வெட்டு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது (தமிழக ஆய்வுக் கட்டுரைகள், தொகுதி II, ப.43).
இப்படிப்பட்ட வளரியைப் பூமராங் எனும் பெயரில் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களான அபோர்ஜினியர்கள் பயன்படுத்தி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே தமிழனால் கண்டறியப்பட்டது என்பதே நிதர்சன உண்மையாகும். திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வின் மூலம் இரண்டு மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவ்விரண்டு மண்டை ஓடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் திராவிடரும் அபோர்ஜினியரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் என்ற முடிவினைக் கருதியுள்ளனர். மேலும் இங்குக் கண்டெடுத்த மண்டை ஓடுகளில் ஒன்று திராவிடருக்கும் மற்றொன்று ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் முன்னோருக்கும் உரியது என ஜி.எலியட் ஸ்மித் கூறியுள்ளார்.
இவ்வாறு சிறப்புமிக்க ஆயுதமான வளரி தற்போதும் பாதுகாப்பாகவும் கண்காட்சியாகவும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இராமநாதபுரம் ராமவிலாசத்தில் தொல்லறிவியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் இவ்வளரி பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.
ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.