Tuesday, January 7, 2014

கொடும்பாளூர் இருக்குவேளிரான இருங்கள்ளர் குலத்தவர்கள்

வேளிர்
========
இளையர் என்ற இளமறவர்
மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்
கொடும்பாளூர் இருக்குவேளிரான இருங்கள்ளர் குலத்தவர்கள்
மறவர் என்பது இனப்பெயர்.. பன்பு பெயரல்ல!!
இருக்குவேளிர்---->இருங்கோவளர்----->இருங்கோளர்----->இருங்கள்ளர் = கள்ளர் குலத்தவர்கள். 


இருக்குவேளிர் என்பன ஒருபொருட் பெயர்கள்.இவ்வார்த்தைகள் மருவி தற்போது இருங்கோவேள்,இருங்கோளர், இருங்களர், இருங்கள்ளர் என்று வந்துள்ளன. இவைகள் யாவும்,இப்போதும் கள்ளர்களின் பட்டப்பெயர்களாக வழங்கிவருகின்றன. மேலும், வேளான் என்ற பெயர் மருவி தற்போது வேளார்,வேள் என்ற பட்டப்பெயர்களாக கள்ளர்களுக்கு தற்போதும் வழங்கிவருகின்றன.



வேளிர் யார் என்ற கேள்விக்கு விடையாக குறிஞ்சிக் கோமான் கபிலர் அவர்கள் இருங்கோவேள் என்ற வேளிர் குல அரசனை நோக்கி பாடிய பாடல் ஒன்று விடை கூறும்.பாடல் இது தான்...

நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்து ஒன்பது வழி முறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்,
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண் கடன் உடைமையின் பாண் கடன் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
யான் தர இவரைக் கொண்மதி; வான்கவித்து
இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல்
பொன் படு மால் வரைக் கிழவ, வென் வேல் உடலுநர் உட்கும் தானைக்
கெடல் அருங் குரைய நாடு கிழவோயே!

பாடலின் பொருளாக அறிஞர்கள் கூறுவது. வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வாழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக்கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே! வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள்.

தடவு என்ற சொல்லுக்கு மேற்கூறியவாறும்,மண்பாண்டம்,மலை சூழ் இடம் என்றும் பலரும் பலவிதமாக பொருள் கூறுகின்றனர்.

வேளிர்கள் என்போர் துவாரகையிலிருந்து கண்ணன் எனப்படும் யாதவ அரசரால் தென்னகம் நோக்கி அனுப்பப்படுகின்றனர்.அது ஏதேனும் ஒரு போரின் நிமித்தமாகவோ,
எல்லைகளை விரிவு கொள்ளும் நோக்கத்தோடோ இருக்க வேண்டும்.ஆய்வுகளின் படி தோராயமாக 3250 - 3,300 ஆண்டுகளுக்கு முன் துவாரகையில் இருந்து தென்னகம் நோக்கி வந்துள்ளனர்.
அவ்வாறு வந்த வேளிர்களின் வம்சத்தில் வந்தோர் தான் தற்போதுள்ள வேளிர் குடியினர்.அதனால் தான் கோத்திரம் கூறும் மரபு வேளிர் குல சத்திரியர்கள் இடையே காணப்படுகிறது.


அவ்வாறு வந்த வேளிர் குடியினர் கன்னன் மரபினர் என்பது புறநாநூறு மூலம் ருசுவாகிறது.

கன்னன் = கள்ளன் = கிருஷ்னன் என்பதும் தெள்ள தெளிவாகிறது. சம்ஸ்கிருத்ததில் "காளா" என்பது கரிய நிறம் என்பதும் "காளி என்பவள் கரிய நிறமுடைய கன்னனின் தங்கை என்பது . காளி தேவிக்கு 'கிருஷ்ன பிங்கலா' என்றொரு பெயர் உண்டு அதற்கு கரிய நிறத்துடையவள் என்று பொருள்.

கண்ணனும் கள்ளனும் கருப்பனும் கிருஷ்னனும் யாதும் ஒரே பொருளையுடைய பல பெயர்களே. 


கன்னனை கோவல மைந்தன் என கூறுகின்றது. இதன் அர்த்தம் 'கோவலர்' என்னும் இம்மன்னையுடைய பூர்வ முல்லை நில குடியினை குறிக்கும் வார்த்தையாகும்.

இந்த கோவலர்------>கோளவர்------>களவர்----->கள்ளர்குடி ஆயினர்.

இப்படி தமிழ் நாடெங்கும் கோவில் கொண்ட முல்லை நிலத்து மாதவன் மதுரை அழகர் கோவிலில் "கள்ளழகன்" என்றும் திருவைகுண்டத்தில் "கள்ளர்பிரானாகவும்" கேரள ஆலப்புழாவில் "கள்ளர்பெருமானாகவும்" திருப்பதியில் "கள்ளர் கோமானாகவும் கோவில் கொண்டுள்ளான்".

நாராயணப் பேரரசு மக்கள் கள்ளர் படைத்தலைவர்
====================================================
பெருவயல் செப்பேட்டில் ஒப்பம் இட்டிட்ருக்கும் ஒவ்வொரு கள்ளர் குல நாட்டர்கள் தங்களை நாராயணப்பேரரசு வழிவந்த கள்ளர் படைத்தலைவர்கள் என கூறியுள்ளனர்



கொடும்பாளூர் வேளிர் திருப்பனந்தாள் கல்வெட்டு மூலம் கள்ளர் என்பது உறுதி செய்யபட்டுள்ளது.

கொடும்பாளூர் வேளிர்கள் 'யது வம்ச கேது(வால்)' என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் இவர்கள் கள்ளர் மரபினர் என கல்வெட்டு ஆய்வாளர் திரு. மகாதேவன் கூறுகிறார்.

திருப்பழனம் கல்வெட்டில் (No.169) "கள்வன் அமரக்காலன்" என்ற மன்னர் குறிப்பிடபடுகிறான்.

அதைப்போலவே, மதுரைக்கொண்ட பரகேசரி வர்மனின், திருப்பழனம் கல்வெட்டில்
(No.140) "கள்ளன் அச்சப் பிடாரி" என்ற கொடும்பாளூர் அரசியின் பெயர்
குறிப்பிடப்பட்டுள்ளது.

"Damaged and incomplete. Gift of gold by a lady named
Kallan-Achchapidari of Kodumbalur in Urattur-Kurram for a lamp in the
temple"

(A.R.E. No. 140 of 1927-28), Parakesari Varman, 17th year), (Tanjore
district, Tiruppalanam, on the north wall of the central shrine in the
Apatsahayesvara temple).

"அதிச்ச பிடாரி", "அச்சப் பிடாரி" போன்ற பெயர்கள், வேளிர் குல
கொடும்பாளூர் அரசக்குலத்தினருக்கு இருந்திருக்கிறது என்பதை சான்றுகள்
குறிப்பிடுகின்றனர். முத்தரையர்களுக்கும் கொடும்பாளூர் வேளிர்களுக்கும்
மிக நெருங்கிய திருமண உறவுகள் இருந்திருக்கிறது என்பதை கல்வெட்டு
சான்றுகள் உறுதிசெய்கின்றன.

எனவே (A.R.E. No.140 of 1927-28) குறிப்பிடும் "கள்ளன் அச்சப் பிடாரி" கொடும்பாளூர் அரசியானவர்.

மேலும் திரு நீலகண்ட சாஸ்திரி அவர்கள் சோழர்கள் புத்தகத்தில் கொடும்பாளூர் வேளிர்கள் கள்ளர் இனம் என்று குறிப்பிடுகிறார்.


மேலும் பாண்டியர் கல்வெட்டான, திருக்கோட்டிகா கல்வெட்டு குறிப்பிடும்
"பனையூர் அரையன் கள்வன்" என்பவனும் கள்ளர் வம்சத்தவரே ஆவார். (A.R.E.
No.21 of 1930-31) (Pandiyar, 9th century A.D.)


இருக்கு வேளிர் தம்மை "இருங்கோள குல தீப" ஆதாவது "இருங்கள்ளர்" வழிவந்தவர்கள் என குறித்துள்ளனர்:

இருங்கள்ளர் மன்னர் வம்சத்தில் வந்தவர்கள்:


கொடும்பாளூர் இருக்குவேளிர் என்னும் கள்ளர் அரசர்குடியிலிருந்து பிறந்ததே சோழர்குடியென்று, மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதல் அமைச்சர் சேக்கிழார் பெருமானும், மூவர் பாடிய தேவார திருமுறைகளை தொகுத்து பேரரசன் இராசராசசோழனுக்கு தொண்டுசெய்த திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அடிகளும் சோழர் காலத்திலேயே பாடி அரங்கேற்றம் செய்து -- இராசராச சோழன் கள்ளரே என்பதை உறுதிபடுத்தியுள்ளனர்.(ஆதாரம்:முப்பது கல்வெட்டுக்கள் என்ற நூலின் பக்கம் 203, முதலாம் பராந்தக சோழனின் கல்வெட்டு ER.140/1928 கொடும்பாளூர் இருக்குவேளிர்கள் கள்ளர்களே என எழுதியுள்ள கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய சோழர்கள் புத்தகம் 1 பக்கங்கள் 184, 146, 224, 225, திருத்தொண்டர் புராணம்(பெரியபுராணம் பக்கம் 491) & திருத்தொண்டர் திருவந்தாதி).


மதுரை கொண்ட பரகேசரியின் 17-வது கல்வெட்டு கூறும் "கள்ளர்":


மழவர்களை வென்ற கள்ளர்கோமானான இருக்குவேள்:



1.கழல் புனை திருந்தடிக் களவர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி. .
விழவுடை விழுச்சீர். வேங்கடம். . (அகம்.61) (மாமூலனார் பாடியது)
பொருள்..வீரக்கழல் அணிந்தவன் களவர் கோமான். அவன் வீர்ர்கள் பலரோடுசேர்ந்து வில்லில் வலிமையான நாணை ஏற்றி அம்புமழைப்பொழிந்து மழவர் நாட்டை வென்று அவர்களை அடிபணியச்செய்தவன். அவன் திருவேங்கடமலையில் உறைபவன்.
2.வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட் டோங்குவெள்ளருவி வேங்கடத்தும்பர் அகம்.213) (தாயங்கண்ணனார் பாடியது)


பொருள்..வேங்கடமலையானது போர்ப்பயிற்சி உடைய யானைகளை வெல்லும் . தொண்டை நாட்டினருக்கு உரியது.
திருப்பதி 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உடையது. இம்மலைப்பகுதியை ஆண்ட கள்ளர்கள் அக்காலத்திற்கு முன்பிலிருந்தே அப்பகுதியை ஆண்டனர்.. எந்த அரசனின் ஆணைக்கும் அடங்கி நடக்காத மழவர்(மறவர்) குடியினர் எவ்வித தடையுமின்றி தமிழ்நாட்டின் வடக்கே திருவேங்கட மலைவரையில் சுற்றித்திரிந்தனர்(அகம்.61).
இம்மழவர்கள் (மறவர்கள்) தமிழகம் எங்கும் எவ்வித தங்குதடையுமின்றி குறும்படைத்தரித்து சுற்றித்திரிந்தனர் என்றும், எந்த மன்னனின் ஆணைக்கும் இவர்கள் கட்டுப்பட்டு நடக்கவில்லை என்பதையும் வரலாறு கூறுவதை நோக்குங்கால், இவர்கள் வேங்கடமலைவரை சுற்றித்திரிந்தபோது, அங்கு ஆட்சிபுரிந்த களவர் கோமான் புல்லியுடன் பிணக்கு ஏற்பட்டு போர் மூண்டது என்பதை அகம்.61ல் ..மழபுலம் வணக்கிய. மாவண் புல்லி.. என்ற வரிகள் மூலம் அறிகிறோம். குறும்படை என்றால், மழவர்கள்(மறவர்கள்) எப்போதும் இடதுதோளில் நெடிய நாண்ஏற்றப்பட்ட வில்லை தொங்கவிட்டிருப்பர்.அத்துடன் தனது முதுகில் வலதுதோளில் இணைத்துக்கட்டப்பட்ட அப்பறா தூளியில் கற்றை கற்றையான கூர்மையான அம்புகளை சேர்ந்துவைத்திருப்பர். இடது இடையில் குறுவாளை கச்சையினுள் தயார்நிலையில் வைத்திருப்பர். வலது கையில் நீண்ட (நெடிய) காற்றுப்புகாதஇடத்தில்கூட நுழைந்துவிடும் கூர்மையான வில்லை தயார்நிலையில் பிடித்துக்கொண்டு திரிவர்.இவர்கள் கரந்தை மறவர் (அகம்.35) ஆயினும் மழவர்களைக்காட்டிலும், மாவலிமை மிக்கவரான களவர் கோமான், மழவர்களுடன் விற்போர் புரிந்து, சரமாரியான அம்புமழை பொழிந்து அவர்களை வென்று அடக்கியதையும் நாம் அறியமுடிகிறது. ஆகவே, மழவர்கள் தங்கள் விருப்பம்போல் எங்குவேண்டுமானாலும் சுற்றித்திரிந்து வேங்கட மலையிலும் சுற்றித்திரிந்த காலத்தில் வாழ்ந்தவர் களவர் கோமான் புல்லி என்பதை நோக்குங்கால், அவருடைய காலம் கி.மு.6-ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலமாக இருக்கக்கூடும்


மறவர்களுடனான இனவழித்தொடர்புகள் கொண்ட இருக்கு வேளிர்: 


இருக்குவேளிரின் பல கல்வெட்ட்டில் இருக்குவேளிர் தம்மை மறவன் என குறிப்பிட்டுள்ளனர்.இதற்கு காரனம் இவர்கள் மறவர்களான பழுவேட்டரையர்களுடன் திருமண உறவு கொண்டுள்ளனர் எண்ற செய்திகள் நமகு தெரிவிக்கின்றன.

Chedi Vanshi Kings are also called as Maravars in Yewur chalukya Inscriptions.
Chedirayar clan of velirs belong to maravars


வேளிரும் மறவர் என  பெயர் கொண்டிருந்தனர்:

அதிலும் கொடும்பை வேளிர் தொன்மறவன்(தொன்மையான மறவன்) என குறிக்க பட்டுள்ளனர்.




4. No. 288 from Kudimiyamalai mentions two local chiefs by name Perumbidugu-Muttaraiyar and Muttaraiyar Nambi Manatongalar, both evidently close relations of each other. Nangaiyar Nangai Dayanidhiyar, the wife of the former, is said to have made a gift of a lamp to the temple on behalf of Nangai Vikramakesariyar, the daughter of the latter. Perhaps of the same family and having jurisdiction over a tract of Ramanathapuram was Marpidugu Tirukkottiyurkalvan Makalan Anai-udaiyan (No. 299) who figures as a donor to the temple at Tiruppalanam in the 22nd year of the king’s reign.

 Two other persons who were perhaps new recipients of similar offices under Aditya himself were Sembiyan Malanattuvelan alias Korran Maran of Kaikalur in Kilalkuruvidam (No. 313) and Sembiyan Arkattuvelan alias Maravan Nakkan the headman of Purisai in Parivandatturai of Arkattu-kurram (No. 315). The latter’s son evidently was Nakkan Singan the headman of Purisai who endowed some land to the temple at Tirumalavadi (No. 324).


Tracing the genealogical table of the Irrukuvel chiefs of Kodumbalur and their inter – relationship with the house of Vijayalaya Cola, he says it is hard to identify the Cola House to which Cattan Maravan (the eighth chief of the Kodumbalur line) was matrimonially related. It may either have been that of the Maharaja Kumarankusa or that of the house of Vijayalaya Cola, which was then gradually gaining power in the Tanjavur area. In any case the Irrukuvels, from at least the late years of the son of Sattan or Cattan namely Maravan Pudi alias Tennavan Ilangovelar (who is styled Bhuti Vikramakesari in an undated Muvarkoil inscription) were intimately connected with the house of Vijayalaya Cola both matrimonially and by a political alliance which never broke.




By a series of complicated equations based on epigraphical data, Maravan Pudi alias Tennavan Ilangovelar alias Bhuti Vikramakesari has now been established to be a senior contemporary of Cola Aditya I; Maravan Pudi had two wives, one Varaguna and the second Nangai Karrali Pirattiyar Maravan Pudi’s sister Madevadigal was married to Kannaradeva, son of Cola Aditya I by the Rashtrakuta princess… His daughter Pudi Aditta Pidari was given in marriage to prince Arikulakesari, son of Cola Parantaka I and the grandson of Aditya I… To Maravan Pudi’s first son Sembiyan Ilangovelar alias Pudi Parantakan, Aditya I gave in marriage his sister Nangai Varaguna… Maravan Pudi’s second son was named Pudi Aditta Pidaran alias Adityavarma, perhaps in honour of the Cola Potentate Aditya I, while Pudi Parantakan the alias of his eldest son, was perhaps taken after the name of Cola Parantaka I, Aditya’s son. (And that shatters my dreamy conception that the Aditham Pudi and his son Parantakan mentioned in one of the inscriptions at the temple could perhaps be Aditya Cola himself and his son Parantaka Cola !!!) 

Talking about the Tiruchendurai temple he says ** A building that still has some of the Muvarkoil look, is the Chandrasekhara Temple at Tiruchendurai. Founded by Maravan Pudi’s daughter, Pudi Aditta Pidari, sometime before the 23rd year of Rajakesarivarma (Aditya I) A.D.894, it represents one more royal foundation of the Irrukuvel House. In size it is slightly smaller than the Muvarkoil buildings.




There are two inscriptions of Pudi Aditta Pidari of the second and third years of Parakesari (Parantaka I A.D.909 and 910) in which the temple has been specifically referred to as “karrali’ (stone building) – the first inscription also revealing the fact that the temple in stone was built by her. These facts are not mentioned in the earlier inscription of the 23rd year of Rajakesarivarma (Aditya I – AD.894) recorded by the same royal donor. This has led Douglas Barrett to surmise that the royal lady had replaced the original building in brick in or before A.D.909. But a certain formal nearness of this building to the Muvarkoil, together with the style of pilaster decorations and the bhutas of the bhutamala, seem to warrant a date in or before A.D.894 when the princess made her first donation. *** 

Continuing, Soundara Rajan says that in addition to the famous Muvarkoil of Kodumbalur, two other temples are related in style; the Sundareswara Temple at Tirukkattalai, and the Candrasekhara Temple at Tiruchendurai near Tiruchi, which was founded by Pudi Aditta Pidari, daughter of Maravan Pudi, alias Bhuti Vikramakesari, and grand-daughter-in-law of Cola Aditya I. It shows features characteristic both of Malanadu (Kaverinadu) and Konadu schools plus local traits of the Tiruchi territory. The buildings of sons and grandson of Bhuti Vikramakesari, are few and inconsequential. 


இதர கொடும்பாளூர் செய்திகள்:





இவ்வறு பெருமை மிகு கொடும்பாளூர் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதை ஆண்ட பெருமக்கள் பண்டைய வேளிரான கள்ளர் சமூகத்தவர் என்பதும் புலனாகிறாது

கொடும்பாளூர் வேளிர்களிலிருந்துதான் நமக்குச் சாசனச் சான்றுகள் கிடைக்கின்றன.

மதுரை கொண்ட பரகேசரியின் 17 வது ஆட்சியாண்டிற்குரிய திருப்பழனம் கல்வெட்டு கள்ளன் அச்சப்பிடாரி எனும் கள்ளர்குல நங்கையை “உறத்தூர் கூற்றத்துக் கொடும்பாளூர் ஆச்சப்பிடாரி” என்கிறது. ஆயினும் இருங்கோவேள்கள் தொடர்ச்சியாக தம் பெயரில் மறவன் என்று பயின்று வருகின்றனர். இது முக்குலத்தோர் ஒரே கால்வழியினர் என்பதைக்குறிக்கும்.

இருங்கோவேள்களில்,..

“மறவம் பூதி விக்கிரமகேசரி” [ 258, மற்றும் 273 of 1903]

“தென்னவன் இளங்கோவேளாயின மறவம் பூதியார்” [S.I.I.Vol VII No.615. ARE. 306 of 1903]

“மாற்பிடுகு இளங்கோவேளான் ஆயின சாத்தன் மறவன் தொல்லவனி வேந்தன்”

மேலும் விடேல்விடுகு இளங்கோ அதியரையனாயின விக்கிரமபூதி என்பவனுடைய மகள் சாத்தன் மறவன் என்பவனுடைய மனைவி ஆவாள். அதாவது மறவர்களாகிய இருங்கோவேள்கள் தமது மகளையும் சாத்தன் மறவன் எனும் மறக்குலத்தவனுக்கே மணம் செய்து தந்துள்ளார்கள் என்பது தெளிவு!.

இதுபோக,.. திருவெள்ளறைக் கல்வெட்டு, “தொன்மறவன் செல்லிக்கோமான்” என்கிறது.

நந்திவர்மனாகிய பல்லவன் காலத்தில் இருங்கோவேளிர்கள் பல்லவர்களுக்குரிய மாற்பிடுகு, விடேல்விடுகு எனும் விருதுப் பட்டங்களைத் தாங்கியுள்ளனர்.

திருப்பழனம் கல்வெட்டு ஒன்றைத் தவிர மற்ற சாசனங்களில் இருங்கோவேளிரின் குடிப்பெயராக மறவன் என்றே உள்ளது. இருப்பினும் முக்குலத்தோர் ஒரே குடியினர் என்ற நிலையில் இருங்கோளப் பெண்டிர் ஒருவர் கள்ளன் ஆச்சப்பிடாரி எனக் குறிக்கப்பட்டதில் எந்த தவறும் இருக்கமுடியாது.

இது போக ,..கொடும்பாளூர் வேளிர் கட்டிய நங்கவரம் சிவன் கோயிலானது,

“மறவ ஈஸ்வரக் கிருஹம்” [386 of 1903 ] .-என்றும்,

“திரு மறவன் ஈஸ்வரம் [332 of 1903] -எனவும் வழங்கப்பட்டது. இது கொடும்பாளூர் வேளீர் பள்ளிப்படையாக இருக்கலாம் என கருத இடமளிக்கிறது.

கொடும்பாளூர் இருங்கோவளிர் •௨

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

இளங்கோவேளாயின மறவன் பூதியாரும், இருங்கோவேள் விக்கிரம கேசரியும் ஒன்றா அல்லது வெவ்வேறா? என்பதை சாசனங்களின் வழி சரி பார்ப்போம். முதலில் கொடும்பாளூர் மூவர் கோயில் சாசனம் {IPS: 14}.மற்றும் ARE. 273 of 1907 இரண்டிலுமுள்ள சங்கதிகளை அலசுவோம்.

•மூவர் கோயில் கல்வெட்டு•

இதில் ஐந்தாவது வரிகளிலிருந்து நமக்கு “விக்கிரமகேசரி” பற்றியும் அவனது மனைவி “கற்றளி” பற்றியும் அவனது வீரச்செயல் பற்றியும் குறிப்புகள் கிடைக்கின்றன..

5. “தஸ்யாமஸ்ய பபூவ பூதிரபராம்மீனாம்மளாக்யம் ததன் ‘ஸ்ரீமான் விக்ரமகேசஸரீதி’ ஸமரே லப்தான்யநாமா ந்ருப: காவேரீவாரி சோணம் ஸமக்ருதருதிரை; பல்லவஸ்ய த்வஜின்யா: யோ வீரோ:[ரோ] வீரபாண்ட்யம் வ்யஜயத ஸமரே வஞ்சவேளந்தகோபூத்”

•தமிழ் விளக்கம்•

அந்த மகளிடத்தில் அவனுக்கு பூதி மீனாமழவன் எனும் பெயரோடு ஓர் அரசன் தோன்றினான். அவன் போர்களில் விக்ரமகேஸரி எனும் மற்றொரு பெயரை அடைந்தான்.அவன் பல்லவப் படைகளின் இரத்தத்தைக் கொண்டு காவேரி நீரைச் சிவப்பாக்கினான். அவன் போரில் வீரபாண்டியனை வென்றான். வஞ்சிவேளுக்குக் காலனானான்.

6.” மத்காரீ[த்தாரி] ஸாமஜா[ன்] ஹத்வா வஸன் விக்ரமகேஸரீ கொடும்பாளூப்-புராதீந்திர-மாளிகா-விவரோதரே.”

•தமிழ் விளக்கம்•

அவன் மதம் பிடித்த எதிரியின் யானைகளை அழித்து கொடும்பாளூரிலுள்ள இந்திர மாளிகையின் இடையில் வாழ்கிறான்.

அடுத்துளள 7வது வரிகளில் அவனது உருவகம் உவமைகள் கூறப்படுகிறது. ஆகவே நாம் 8வது வரிகளைப் படிப்போம்.

8.”தஸ்யாபூத் தேவ்யௌ ‘கற்றளிவரகுணஸமாஹ்வயே’ ஸத்யௌ ‘கற்றளிரபவத் ஜனனீ பராந்தகாதித்யவர்ம்மணோ கம்ரகம்ராணம்”

•தமிழ் விளக்கம்•

அவனுக்கு பதி விரதைகளான கற்றளி, வரகுணா என்பவர் தேவியராக இருந்தனர். அவர்களில் கற்றளி பராந்தகன்-ஆதித்யவர்மன் எனும் அழகிய புதல்வர்களுக்குத் தாயானாள்.

•அடுத்ததாக 273 of 1903 சாசனம்•

“…… தென்னவ னிளங்கோ வேளாராயிந மறவன் பூதியார் தேவியார் நங்கை கற்றளிப்பிராட்டியார்”- என பயின்று வருகிறது.

மேலே மூவர் கோயிலின் சாசனத்தில் விக்கிரம கேசரியின் மனைவி கற்றளி என்று சாசனத்தின் எட்டாவது வரிகளில் படித்தோம். அவள்தான் தென்னவன் இளங்கோ வேளாராயின மறவன் பூதியாரின் மனைவியும் என்பது இங்கு விளங்கும். அதேபோல தென்னவன் இளங்கோவேள் மறவன் பூதியே விக்கிரம கேசரி என்பதும் இங்கு தெளிவாகும்.பூதி விக்கிரம கேசரியின் மனைவியே கற்றளிப்பிராட்டியார் மற்றும் வரகுணை.

கொடும்பாளூர் வேளிர்க்குரியதான மூவர் கோயில் சாசனம் இருக்குவேளிரின் வம்சாவழியைச் சொல்கிறது. அதை வெட்டியவன் விக்கிரமகேசரி. ஆக அவன் கொடும்பாளூர் வேளிர் வழியினன் என்பதும் தெளிவு! மேலும் அவனது மனைவி கற்றளிப்பிராட்டி என்பது உறுதி செய்யப்பட்டதாகும்.

மறவம்பூதி விக்கிரமகேசரியின் மற்றொரு பெயர் தென்னவன் இளங்கோவேளாயின மறவம்பூதியார். மற்றும் தென்னவன் இளங்கோவேளாராயின மறவன் பூதி. என்பதும் சிலாசாசனங்கள் வழியாக உறுதி செய்யப்படுகிறது.

இளங்கோவேள் என்பது இளவரசுக்குரிய நிலை. முத்தரையர் என்பதற்கு மூத்த அரையர் என்பதும், இளவரையர் என்பதற்கு இளைய அரையர் என்பதும் போலவே இருங்கோவேள்-இளங்கோவேள் என்பதும் ஆகும்.

கொடும்பாளூர் இருங்கோவளிர் •௨

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

இளங்கோவேளாயின மறவன் பூதியாரும், இருங்கோவேள் விக்கிரம கேசரியும் ஒன்றா அல்லது வெவ்வேறா? என்பதை சாசனங்களின் வழி சரி பார்ப்போம். முதலில் கொடும்பாளூர் மூவர் கோயில் சாசனம் {IPS: 14}.மற்றும் ARE. 273 of 1907 இரண்டிலுமுள்ள சங்கதிகளை அலசுவோம்.

•மூவர் கோயில் கல்வெட்டு•

இதில் ஐந்தாவது வரிகளிலிருந்து நமக்கு “விக்கிரமகேசரி” பற்றியும் அவனது மனைவி “கற்றளி” பற்றியும் அவனது வீரச்செயல் பற்றியும் குறிப்புகள் கிடைக்கின்றன..

5. “தஸ்யாமஸ்ய பபூவ பூதிரபராம்மீனாம்மளாக்யம் ததன் ‘ஸ்ரீமான் விக்ரமகேசஸரீதி’ ஸமரே லப்தான்யநாமா ந்ருப: காவேரீவாரி சோணம் ஸமக்ருதருதிரை; பல்லவஸ்ய த்வஜின்யா: யோ வீரோ:[ரோ] வீரபாண்ட்யம் வ்யஜயத ஸமரே வஞ்சவேளந்தகோபூத்”

•தமிழ் விளக்கம்•

அந்த மகளிடத்தில் அவனுக்கு பூதி மீனாமழவன் எனும் பெயரோடு ஓர் அரசன் தோன்றினான். அவன் போர்களில் விக்ரமகேஸரி எனும் மற்றொரு பெயரை அடைந்தான்.அவன் பல்லவப் படைகளின் இரத்தத்தைக் கொண்டு காவேரி நீரைச் சிவப்பாக்கினான். அவன் போரில் வீரபாண்டியனை வென்றான். வஞ்சிவேளுக்குக் காலனானான்.

6.” மத்காரீ[த்தாரி] ஸாமஜா[ன்] ஹத்வா வஸன் விக்ரமகேஸரீ கொடும்பாளூப்-புராதீந்திர-மாளிகா-விவரோதரே.”

•தமிழ் விளக்கம்•

அவன் மதம் பிடித்த எதிரியின் யானைகளை அழித்து கொடும்பாளூரிலுள்ள இந்திர மாளிகையின் இடையில் வாழ்கிறான்.

அடுத்துளள 7வது வரிகளில் அவனது உருவகம் உவமைகள் கூறப்படுகிறது. ஆகவே நாம் 8வது வரிகளைப் படிப்போம்.

8.”தஸ்யாபூத் தேவ்யௌ ‘கற்றளிவரகுணஸமாஹ்வயே’ ஸத்யௌ ‘கற்றளிரபவத் ஜனனீ பராந்தகாதித்யவர்ம்மணோ கம்ரகம்ராணம்”

•தமிழ் விளக்கம்•

அவனுக்கு பதி விரதைகளான கற்றளி, வரகுணா என்பவர் தேவியராக இருந்தனர். அவர்களில் கற்றளி பராந்தகன்-ஆதித்யவர்மன் எனும் அழகிய புதல்வர்களுக்குத் தாயானாள்.

•அடுத்ததாக 273 of 1903 சாசனம்•

“…… தென்னவ னிளங்கோ வேளாராயிந மறவன் பூதியார் தேவியார் நங்கை கற்றளிப்பிராட்டியார்”- என பயின்று வருகிறது.

மேலே மூவர் கோயிலின் சாசனத்தில் விக்கிரம கேசரியின் மனைவி கற்றளி என்று சாசனத்தின் எட்டாவது வரிகளில் படித்தோம். அவள்தான் தென்னவன் இளங்கோ வேளாராயின மறவன் பூதியாரின் மனைவியும் என்பது இங்கு விளங்கும். அதேபோல தென்னவன் இளங்கோவேள் மறவன் பூதியே விக்கிரம கேசரி என்பதும் இங்கு தெளிவாகும்.பூதி விக்கிரம கேசரியின் மனைவியே கற்றளிப்பிராட்டியார் மற்றும் வரகுணை.

கொடும்பாளூர் வேளிர்க்குரியதான மூவர் கோயில் சாசனம் இருக்குவேளிரின் வம்சாவழியைச் சொல்கிறது. அதை வெட்டியவன் விக்கிரமகேசரி. ஆக அவன் கொடும்பாளூர் வேளிர் வழியினன் என்பதும் தெளிவு! மேலும் அவனது மனைவி கற்றளிப்பிராட்டி என்பது உறுதி செய்யப்பட்டதாகும்.

மறவம்பூதி விக்கிரமகேசரியின் மற்றொரு பெயர் தென்னவன் இளங்கோவேளாயின மறவம்பூதியார். மற்றும் தென்னவன் இளங்கோவேளாராயின மறவன் பூதி. என்பதும் சிலாசாசனங்கள் வழியாக உறுதி செய்யப்படுகிறது.

இளங்கோவேள் என்பது இளவரசுக்குரிய நிலை. முத்தரையர் என்பதற்கு மூத்த அரையர் என்பதும், இளவரையர் என்பதற்கு இளைய அரையர் என்பதும் போலவே இருங்கோவேள்-இளங்கோவேள் என்பதும் ஆகும்.

reference

1. கொடும்பாளூர் வேளிர் வரலாறு.{வே.மகாதேவன்}

2. inscriptions (texts) of pudukottai state

ARRANGED ACCORDING TO DYNASTIES:2002

நன்றி!

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.

reference

1. கொடும்பாளூர் வேளிர் வரலாறு.{வே.மகாதேவன்}

2. inscriptions (texts) of pudukottai state

ARRANGED ACCORDING TO DYNASTIES:2002

நன்றி!

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்

நன்றி :
புத்தகம்:கொடும்பை வேளிர் வே.மகதேவன்.
செய்தி வழங்கியவர்: திரு.காலிங்கராய தேவர்
செய்திகளின் துனை ஆய்வுகளுக்கு நன்றி : பாரிவேள்,சம்பந்த மூர்த்தி மழவராயர்.......................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.