Tuesday, January 7, 2014

மலையமானே வேளிர்களுக்கு எல்லாம் தலைவன்

வேளிர் யார் என்ற கேள்விக்கு விடையாக குறிஞ்சிக் கோமான் கபிலர் அவர்கள் இருங்கோவேள் என்ற வேளிர் குல அரசனை நோக்கி பாடிய பாடல் ஒன்று விடை கூறும்.பாடல் இது தான்...

நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை யாண்டு நாற்பத்து ஒன்பது வழி முறை வந்த வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல், தாரணி யானைச் சேட்டிருங் கோவே! ஆண் கடன் உடைமையின் பாண் கடன் ஆற்றிய ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் யான் தர இவரைக் கொண்மதி; வான்கவித்து இருங்கடல் உடுத்த இவ்வையகத்து அருந்திறல் பொன் படு மால் வரைக் கிழவ, வென் வேல் உடலுநர் உட்கும் தானைக் கெடல் அருங் குரைய நாடு கிழவோயே!

பாடலின் பொருளாக அறிஞர்கள் கூறுவது.

வடக்கே இருந்த முனிவன் ஒருவன், எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட “தடவு” என்று சொல்லப்படும் இடம் ஒன்றில் வாழ்ந்தான். உன் முன்னோர்கள் அந்தத் தடவிலிருந்து வந்தவர்கள். நீ அவர்கள் வழியினன்; நீ செம்பால் அலங்கரிக்கப்பட்ட நெடிய உயர்ந்த மதிற்சுவர்களைக்கொண்ட கோட்டைகளையுடையவன்; விரும்பத்தக்க ஈகைத் தன்மையுடையவன்; துவரை நகரத்தை ஆண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள்களுக்குள் சிறந்த வேள். போர்களில் வெற்றிபெற்ற தலைவ! மாலையணிந்த யானையையுடைய பெருமைமிக்க இருங்கோவேளே! நீ தலைவனின் கடமையை அறிந்து பாணர்களுக்கு உதவுபவன். தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே! வானத்தின் வளைவுக்குள் பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் அரிய வலிமையுடைய, பொன் விளையும் பெரிய மலைக்குத் தலைவ! வெற்றி பொருந்திய வேலும், பகைவர்கள் அஞ்சும் படையும், அழியாத பெருமையும் உடைய நாட்டுக்கு உரியவனே! நான் இவர்களை உனக்கு அளிக்கிறேன்; நீ இவர்களை ஏற்றுக்கொள்.

நச்சினார்கினியர் குறிப்பு: 

நச்சினார்கினியர் தொல்காப்பியத்தின் உறையில் துவாரகையில் கன்னன் வழி வந்த 18 வேளிரும், 18 அரசரும் கொண்டு பல்வேறு இடத்தில் குடியேற்றினார்.
இதனை,
"மலைய மாதவன் நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் உழை நரபதியுடன் கொனர்ந்த பதினென் குடி பிறந்த வேளிர்" என்ற தொடர் விளக்குகிறது ஆதாவது மலையமாதவன் வழி வந்த 18-வேளிர்கள் ஒரு தலைவன் கீழும் ஒரு குல குருவின் தலைமையில் இப்பகுதிக்கு வந்தனர் என கூறுகின்றனர்.

வேளிர்களுக்கு தலைவனான அந்த " நெடு முடி அண்ணல்" யார்?

இந்த 18-வேளிர்களுக்கு தலைவனான துவரை கண்ணனின் வாரிசான அந்த மலை மாதவன் யார்? என்ற கேள்விக்கு.........................

"மலையமான் திருமுடிக்காரி" என்ற பெயரின் சமஸ்கிருத விளக்கத்தை பார்ப்போம்.............

மலையமான்=கிரிதரன்.
திரு=ஸ்ரீ.
முடி=கேசம்
காரி=கரியவன் (அ) கிருஷ்னன்.


சமஸ்கிருத மொழியின் "கிரிதர ஸ்ரீ கேசவ கிருஷ்னன்" என்ற சமஸ்கிருத பெயரின் தமிழாக்கமே "மலையமான் திருமுடிக்காரி". 
இது எத்தனை பேருக்கு தெரியும் "கேசவ கிருஷ்னன்" என்பது தான் "திருமுடிக்காரி" என்ற பொருள்.
எனவே, நச்சினார்கினியர் தம் உறையில் குறிப்பிட்ட "மலைய மாதவ நெடுமுடி அண்ணல்" என்பது மலையமான் திருமுடிக்காரியை குறிக்கும்.


மலையமான் வேளிருள் ஒருவரல்ல வேளிர் தலைவனான கன்னனின் வாரிசு: 

கரிகாலனும் மலையமான் மன்னவனும்.
அபிதான சிந்தாமணி என்னும் நூலில் கரிகாலனும் மலையமானும் நண்பர்கள் என்று கூறியுள்ளது. கரிகாலன் சிறுவனாய் இருந்தபோது அவனது உறவினர்கள் அரியணைக்கு போட்டியிட்டு அதற்கு உரிமையான கரிகாலனை பொய் வழக்கிட்டு சிறையில் அடைத்தனர்.சிறையிலிருந்து தப்பிய கரிகாலன் மலையமான் பாதுகாப்பில் தான் வளர்ந்துள்ளார். கரிகாலன் தந்தை இளஞ்சேட் சென்னி வடுகரை வென்று பாழி அரணை அழிக்க மலையமான் பெரும் படைகள் கொடுத்து உதவியுள்ளார்.இளஞ்சேட் சென்னியால் வெல்லப்பட்ட பாழியின் மகன் பதினோரு வேளிர்களை சேர்த்துக் கொண்டு போர்த் தொடுத்துள்ளான். இங்கு மலையமான் வேளிர்களில் சேர்க்கப்படவில்லை.கரிகாலனின் பெயரர்களாக அறியப்படும் கிள்ளிவளவன்,நலங்கிள்ளி,நெடுங்கிள்ளி ஆகியோரின் காலத்தில் சோழநாடு மூன்றாய்ப் பிரிந்தது.அதே சமயம் தான் மலையமான் திருமுடிக்காரி வேந்தனுக்கு பாதுகாப்பும் படை பலமும் அளிக்கக்கூடிய வலிமை பொருந்திய தனி முடி சூடிய சிற்றரசராக இருந்தார். 
இதிலிருந்து மலையமானே வேளிர்களுக்கு தலைவனாக உள்ள முடியரசன் என்றும் இவரின் சொல் வருதிக்கே அனைத்து வேளிரும் கட்டுபட்டு இருந்தனர் என்பது பாடல் மூலம் தெரிகின்றது. 
தடவு என்ற சொல்லுக்கு மேற்கூறியவாறும்,மண்பாண்டம்,மலை சூழ் இடம் என்றும் பலரும் பலவிதமாக பொருள் கூறுகின்றனர். வேளிர்கள் என்போர் துவாரகையிலிருந்து கண்ணன் எனப்படும் யாதவ அரசரால் தென்னகம் நோக்கி அனுப்பப்படுகின்றனர்.அது ஏதேனும் ஒரு போரின் நிமித்தமாகவோ, எல்லைகளை விரிவு கொள்ளும் நோக்கத்தோடோ இருக்க வேண்டும்.ஆய்வுகளின் படி தோராயமாக 3250 - 3,300 ஆண்டுகளுக்கு முன் துவாரகையில் இருந்து தென்னகம் நோக்கி வந்துள்ளனர்.

அப்போது ஒரு முனிவர் இவர்களுக்கு குருவாக வழிநடத்தியுள்ளார்.அவரது வழிநடத்துதலை ஏற்று அவரின் பெயரையே குலத்தின் பெயராக சூடியுள்ளனர்.

இதனாலேயே மலையமாண்கள் தங்களை "பார்க்கவ கோத்திரம்" என அறியப்படுகின்றனர். பார்க்கவர் என்பது வெள்ளி என்ற சுக்கிராச்சார்யாரை குறிக்கும் என்பது பொருள். ஆனால் நச்சினார்கினியர் உறையின்படி வேளிர்களை கொனர்ந்த முனிவர் அகத்தியர். அகத்தியரும் பிரம்மா வழியில் தோன்றிய பார்க்கவ முனிவரின் வழிதோன்றலே. எனவே பார்க்கவ முனிவர் என்ற வார்த்தையும் அகத்தியருக்கு பொருந்தும். 

கடந்த ஈராயிரம் வருடங்களுக்கு மேலாக தன் வழிநடத்திய குல குருவின் பெயரை குலமாகவும் கன்னனின் வாரிசான மலையமாதவன் என்பதின் பெயரான மலையமான் என்னும் மூத்த முதுகுடியின் வழிவந்த குடியாக வரலாற்று பாரம்பர்யத்தில் கீர்த்தி பெற்ற குலமாக பார்க்கவ குலம் திகழ்வது மிக மிக ஆச்ச்ர்யமான விஷயமாகும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.