Sunday, July 21, 2013

வெள்ளைச்சாமி,வெள்ளையன்,வெள்ளைதுரை பெயர்கள் எதனால்?

நம் தேவர் சமூகத்தில் வெள்ளைச்சாமி,வெள்ளையன்,வெள்ளைதுரை பென்னின் பெயர் வெள்ளச்சி போன்ற பெயர்கள் எதனால்? அதுவும் கரிய நிறம் பூண்ட தமிழ் தொல்குடிக்கு இந்த பெயர் எதற்கு? என்ற கேள்வி நெடுநாள்களாக வரலாற்று ஆய்வாலர்களும் பல யூகங்களை எழுப்பி வந்தனர்.நம் சமூகத்தில் மட்டுமல்ல மற்ற சமூகத்திலும் [ஆதாவது குறிப்பாக சொல்லப்போனால் தாமிரபரனி உற்பத்தியாகும் குற்றால மலையிலிருந்து கடலில் கலக்கும் பகுதி]வரை மறவர் சமூகம் மட்டுமல்ல மற்ற சமூகத்திலும் கானப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இதில் குறிப்பாக சுரண்டை ஜமீன் வெள்ளைதுரை,ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட வீரர் வெள்ளையத்தேவன்,சுதந்திரபோராட்ட வீரர் பாஸ்கரதாஸ் வெள்ளைசாமி தேவர்,வெள்ளச்சி நாச்சியார். முதலிய பெயர்கள் நெல்லை மாவட்டத்தில் புழங்க காரனம் இதுவே.

பாலை என்பது தனி நிலப்பரப்பே:

பல இடங்களில் சங்கப் பாடல்கள் மாயோனையும், வாலியோனையும் அழுத்தமாகக் குறிக்கின்றன. முல்லைநிலத் தெய்வம் மாயோன் தானே? (வாலியோன் மாயோனின் அண்ணன்; இவனைக் குறிப்பிடும் வழக்கம் சங்க இலக்கியத்தில் கொஞ்சம் அதிகம் தான். வாலியோனை வழிபாட்டிற் சிறப்பிப்பது பழந்தமிழகமும், இன்றைய ஒரிசாவும் தான்.)

பொதுவாகச் சங்க இலக்கியத்தில் பாலைத்திணையில் (சங்க இலக்கியத்தில் இந்தத் திணைப் பாட்டுக்கள் மிகுதியாய் உள்ளன.) பொருள்வயின் பிரிதலைக் குறிக்கும் எல்லா இடங்களிலும், சிலம்பில் (11:63-67) சொல்லப் படுவது போல்,

"வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலம் திருகத் தன்மையிற் குன்றி முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் வடிவம் கொள்ளும்"

என்ற அளவில் முல்லையும் குறிஞ்சியும் திரிந்த இடமே பாலை என்பதாக ஒரு தமிழ் நாட்டு வரையறையைக் குறிப்பதாகக் கொள்ள முடியவில்லை. அவை வேறு ஏதோ ஒரு நிலைத்த இடத்தை, அதுவும் தமிழ்கூறும் உலகைத் தவிர்த்து, ஒரு மொழிபெயர் தேசமாகவே, குறிப்பதைக் கவனிக்க முடியும் . அதோடு வெய்யிலில் வேகும் பகுதியையே முதலில் குறித்திருக்க வேண்டுமோ என்றும் ஐயுற வேண்டியிருக்கிறது.
(மெய்யியற் சிந்தனை தமிழ்க் குமுகாயத்தில் அழுந்தியது கி.மு. 200 களுக்கு அப்புறமே. தொடக்க காலத்தில் தெய்வ வழிபாடு இருந்தது; ஆனாற் சமய நெறி கிடையாது. கி.மு.2300-2500 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இடப்பெயர்கள் பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே அமைந்திருப்பதை நாவலந்தீவின் பல இடங்களின் பெயர்களில் பார்க்கலாம்.

வெள்ளைச்சாமி=பலராமன் வழிப்பாட்டின் வழிதோன்றிய திருநாமமே:

வாலியோன் பற்றிய செய்திகள் சிலம்பிலும், பரிபாடலிலும் காண்பது ஒரு புதிர். விடை இன்னும் நான் காணவில்லை. அவன் பலராமன் என்று சொல்லுவதே வடநாட்டில் (குறிப்பாக கலிங்கம், வங்கம் போன்ற இடங்களில்) வகரத்தை பகரமாக்கும் பலுக்கல் தெரிவு. தமிழில் வால் என்றால் வெள்ளை என்று பொருள். வாலியோன் = வெள்ளையோன். அவனுடைய சித்தரிப்பின் முழுப் பரிமானமும் தமிழ்வேர் வழி பார்த்தால் தான் புரிபடும். வால்/ வாலம் என்பது அப்படியே நேர்பொருளில் வெள்ளை நிறம் என்று புரிந்து கொள்ளக் கூடாது. கொஞ்சம் வெளுத்தவன் என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது, கண்ணனைப் பார்க்க இவன் வெளுத்தவன்; அவ்வளவு தான். இவனும் கருப்புத் தான். கொஞ்சம் வெளிரிய கருப்பு. தமிழ்நாட்டுப் பெண்கள் இன்றும் எப்படி நிறங்கள் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொள்ளுவார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

பலராமன்=வாலியோன்[வெள்ளையோன்]=வெள்ளைச்சாமி பெயரானது:

வெள்ளைச்சாமி பெயர் இதனால் தான்.ஒருகாலத்தில் குறிஞ்சி,முல்லை மற்றும் பாலை நில மக்களின் வழிபடு தெயவமான பலராமனைத்தான் வெள்ளைச்சாமி என்று பெயர் வந்தது இது பழைய பலராமன் வழிபாட்டின் எச்சமே பண்டைய தொல்குடி சமூகத்தில் ஒன்றான மறவர் சமூகத்திலும் மற்ற தொல்குடி சமூகத்திலும் கான இதுவே காரனமாகும். எனவே தமிழ் கூறும் பொதிகைமலை பகுதியில் வெள்ளை என்ற பெயர் அந்த பகுதியில் ஒரு காலத்தில் இருந்து இன்று மறைந்த பலராமன் என்ற மாயோன் அன்னன் வழிபாடே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.