Wednesday, August 29, 2018

திருமலை நாயக்கருகும் சடையக்க சேதுபதிக்கும் நடந்த மறவர் நாட்டு யுத்தம்(பகுதி -1)

===============================================

(சற்று விரிவான பதிவு பொருமையாக படிக்க வேண்டுகிறேன்)

மதுரை நாயக்க மன்னரில் மிக முக்கியமானவர் திருமலை நாயக்கர் இவர் ஆட்சி காலம் 1623 முதல் 1659. இவர் காலத்தில் பல போர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கடுமையான போர் 1639 ஆம் ஆண்டு சடையக்க சேதுபதியுடன்  நடந்த மறவர் நாட்டு போர்.(1)

போருக்கான காரணம்:

========================

திருமலை நாயக்கர் கலத்தில் மறவர் நாட்டை ஆண்டு வந்த மன்னர் இரண்டாம் சடையக்க தேவர்.இவருக்கு முந்தய அரசர் கூத்தனின் சோர புத்திரன் பதவிக்கு ஆசைப்பட்டு சேதுபதியை எதிர்க்க திருமலை நாயக்கர் உதவியை நாடுகிறான்.(2)







ஆனால் திருமலை நாயக்கருக்கும் அவர் தளபதி ரமபய்யாவுக்கு போருக்கு இதைவிட முக்கிய காரணம் ஒன்று இருந்தது.அது சேதுபதியின் தன்னாட்சி அரசு. தளவாய் (எ) சடையக்கன் சேதுபதி திருமலை நாயக்கருக்கும் விஜய நகர அரசருக்கும் கட்டுப்படாமல் தன்னாட்சி செலுத்தினார். அவர்களுக்கு எந்த ஒரு திறையும் செலுத்தவில்லை.(3)

இதே நேரத்தில் தம்பியை நாயக்கர் உதவியை நாட ஒரு வடுகர் படையை நாயக்கர் தம்பியுடன் அனுப்பி வைக்கிறார். அந்தப்படையுடன் வந்த தம்பி தனக்கு பதவியை விட்டுக்கொடுத்குவிட்டு நாயக்கரிடம் சரணடையும் படி சடையக்கனிடம் முறையிடுகிறார்(4) .

மிகுந்த துனிவுடையரான சடையக்க தேவர் விட்டுக்கொடுக்கவோ சரணடையவோ தயாராக இல்லை.தம்புயுடன் வந்த வடுகர் படை வீழ்த்தப்படுகிறது. (யாரெல்லாம் கொலை செய்யப்பட்டனர் என்பதை பின் பார்க்கலாம்). சடையக்க தேவரை அடக்க அந்த படை போதுமானதாக இல்லை.

இந்த நேரத்திலும் சரனடைய மாட்டேன் என சடையக்க தேவர் அறிவிக்கிறார். சரியோ தவறோ அவரது ஆணை படி அனைவரும் நடக்க வேண்டும் என்ற மனநிலை உடையவர் திருமலை நாயக்கர்.

சேதுபதி தன்னை உடனே சந்திக்க வேண்டும் நடந்த தவறுக்கு உரிய அபராதம் கட்ட வேண்டும் என திருமலை நாயக்கர் செய்தி அனுப்புகிறார். சேதுபதியோ எதையும் மதிக்கவில்லை. அனைத்து பாளையக்காரருக்கும் செய்தி அனுப்பப்படுகிறது. சேதுபதியை உயிருடனோ பினமாகவோ பிடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு ஒரு பெரும்படை தளபதி ராமப்பையன் மற்றும் கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்ன நாயக்கர் தலைமையில் அனுப்பப்படுகிறது.(5)



ராமப்பய்யன்:

===============

திருமலை நாய்க்கரின் தலைமை படைத்தளபதி ராமப்பய்யன் ஐயர் என்ற தெலுங்கு பிராமணர். இவர் மதுரையில் இருக்கும் கூத்தியர் குண்டு என்ற ஊரில் பிறந்தவர்.(6) 

(பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி தான் ராமப்பையரின் நேரடி வாரிசு என அவரே தெரிவித்துள்ளார்)

திருமலை நாயக்கர் ஆட்சி வலுவடைய இவரே காரணமானவர் என்றால் மிகையாகாது. 1625 ஆம் ஆண்டு திண்டுக்கல் வரை வந்த மைசூர் அரசரின் படையை அடக்கியது ரமப்பையரே.(7)Sath

வேணாட்டு அரசர் வீர ரவி வர்ம குலசேகர பெருமாளின் தளபதி எராவி குட்டி பிள்ளை என்பவரை வென்று அவர் தலையை வெட்டி திருமலை நாயக்கர் முன் கொண்டு வந்து வைத்து வேணாட்டை திருமலை நாயக்கருக்கு கீழ் கொண்டு வந்தவர் ராமப்பையர்.(8)

வீர சைவ பாண்டாரங்கன் வசம் இருந்த பழனி கோவிலை பிராமணர்களிடம் ஒப்படைத்தார் இவரே என்ற ஒரு செய்தியும் உண்டு( இது பற்றி கூடுதல் தகவல் தேவை).

ராமப்பையர், சிவராமையர், நரசப்பையர், வெங்கடபையர் என பல தெலுங்கு பிராமணர்கள் மதுரை நாயக்கர்களின் படைத்தலைவராய் இருந்து உள்ளதை பல்வேறு ஆவணங்கள் தெரிவிக்கிறது.

(போரை பற்றி ராமய்யன் அம்மானை என்னும் இலக்கிய நூலும் ஐரோப்பியரின் ஆவணங்களும் விவரிக்கிறது)(ரா.அ- ராமய்யன் அம்மானை)

முதலில் ராமப்பையர் திருமலை நாயக்கரிடம் சேதுபதியை வென்று வர அனுமதி கேட்ககிறார். நாயக்கர் மறுக்க ராமப்பையர் தான் வென்று வருவதாக உறுதிபட சொல்லி அனுமதி வாங்குகிறார்.


"வணங்கமல் தானிருக்கும் வண்ட மறவனையும் வளைத்து பிடித்து வந்து வணங்க வைப்பேன்"- ராமைப்பையர்(ரா.அ)

" சேது கரைதனிலே சென்றவர் மீண்டதில்லை வாளுக்கு கிரையிட மறவன் வலுக்காரன்"

"மறவனுக்கு தன்னரசு நாடு தனிக்கோட்டையாளுவனம் மதுரைப்படையென்றால் மதியான் மறவனுந்தான் மறவர்கள் சற்று மதியார் வடுகரென்றால்"- திருமலை நாயக்கர் (ரா.அ)

"பெற்றர் பிறந்தார் பெயர் போன நங்குலத்தார் உற்றருறன் முறையாருள்ள வடுகரெல்லாம் பாளையக்காரர் படைத்தலைவரெல்லோரும் வேளையதில் வென்று வரும் வீரப்பரிவாரங்களும் தொட்டியர் கம்பளத்தார் தோறத சேவகருன் சூரப்பையனை வெட்டி சூரையிட்டான் கண்டாயோ?.

ஆங்காரியஞ் சொல்லும் அருணத்திரிதவனையும் பண்டு வடுகர் படைத்தலைவரத்தனையும் சதுரேறி வெட்டிச் சதிமானஞ் செய்தவன்"-திருமலை நாயக்கர் (ரா.அ).

தம்பியுடன் வந்த வடுகர் படையில் நாயக்கர் , தொட்டியர் கம்பளத்தார் ஆகியோரும் படைத்தலைவர்களாய் சூரப்பையாவும், அருணத்திரிதவரும் இருந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் மறவர்களால் வெட்டி கொலை செய்யப்பாட்டு உள்ளனர்.

"அரக்கர் குலத்தை அனுமா ரறுத்தாப்போல் மறக்குலத்தை நானும் மாய்த்துக் கருவறுப்பேன்"-ராமைப்பையர்(ரா.அ)


அரக்கர் குலத்தை அனுமன் அழித்தது போல் மறவர் குலத்தை அழிப்பேன் என ராமப்பய்யர் சூளுரைக்கிறார்.திருமலை நாயக்கர் எச்சரித்து விடை தருகிறார்.

அரசரிடம் விடை பெற்ற ராமப்பையர், தன் தமையனிடம் விடை பெற்று பெரும்படையுடன் மதுரை வீதியில் உலா வந்த பின் வண்டியூர் கோட்டையில் கூடாரம் அடித்து முகாமிட்டார்.பின் அந்தனர்களிடம் வாழ்த்து பெற்று திருப்புவனம் தாண்டி மானாமதுரை அருகில் வந்தடைகிறார்.- (ரா.அ)

படைவந்ததை கண்ட சேதுபதி சடையக்க தேவரின் தூதுவன் அச்சத்துடன் செய்தியை சேதுபதியிடம் சென்று தெரிவிக்கிறான்.

"முன்னல் நம்மாலே முண்டு வந்த மன்னரெலாம் பரம்பக்குடி கோட்டையிலே பட்டந் தரிப்பாரோ துப்பாக்கி தன்னலே சூரையிட்டேன் கண்டாயே அறிந்திருந்தும் பார்ப்பான் அவன் படை தான் வந்ததென்றால் இதற்குப்பயந்து வந்தாயே யென்னடா தூதுவனே சூரப்பைய்யாவைத் துரத்தி சூறையிட்டேன் கண்டாயே அருனாத்திரிதவனையும் அவன் படைகளையும் குழல்வாய்க் கிரையாக கொள்ளை கொண்டதறியாயோ"

"யென்னாமல் வந்து யிறங்கு மந்த பார்ப்பான் கண்ணைப்பிடுங்கி காட்டிலே யோட்டிடாமல்"

"பின்குடுமி தன்ன பேருலகு தான்றிய தேங்காயைக்கட்டி சிதறடிக்காவிட்டால் என்பேர் சடையக்கனே எடுத்துவுமாயுதமோ"- சடையக்கன் சேதுபதி(ரா.அ)


முன்னே சொல்லப்பட்ட சூரப்பையாவ, அருணத்திரிதவர் ஆகிய திருமலை நாயக்கரின் தளபதிகளை வென்றதை சொல்கிறார் சடையக்கன். முன்பு வந்த படைகள் துப்பாக்கி மற்றும் சுழல்வாய்(பீரங்கி) ஆகியவற்றால் அழிக்கப்பட்டதையும் சொல்கிறார்.மந்த பார்பான்(ராமப்பையர்) கண்ணை பிடுங்கி காட்டில் ஓட்டிடுவேன். பின் குடுமியில் தேங்காயைகட்டி சிதரடிப்பேன் என சூளுரைக்கிறார்.


ராமநாதஸ்வாமிக்கு பூஜை செய்யும் பண்டாரம் வாள்கோட்டை ராயன் (சேதுபதி) முன்வந்து நாயக்கரிடம் சரணடைந்து விடுமாறு கூறுகிறார்.

"பார்ப்பான் தனக்கு பயந்து மெள்ள நானுமினி கப்பமுங் கட்டி கைகட்டி நிற்பேனே இளித்து மன்னவர்கள் என்னை நிந்திப்பார்கள் மண்டலத்தில் உள்ள மன்னர் நகைப்பார்கள்"- சடையக்கன் சேதுபதி(ரா.அ)


வன்னியர் (எ) வன்னியத்தேவர்:

=================================

வன்னியர் சடையக்கன் சேதுபதியின் மருமகன்.இந்தப்போரில் மறவர் படையை வழிநடத்தி சென்று ராமப்பையன் மற்றும் மொத்த பாளையக்காரர்கள் படையை எதிர்கொண்டவர் இவரே.இப்போதும் இவர் வாரிசுதாரர்கள் ராமநாதபுரத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இப்போதைய வாரிசுதாரர் ரவிச்சந்திர ராமவன்னி. காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மாவட்டத்தலைவராக இருந்து வருகிறார்.



வடுகர் படையை எதிர்கொள்ள சேதுபதி தன் தளபதிகளை அழைக்கிறார்:

"என் மருக! வன்னியரே யிப்புதுமை கேட்கலையோ மதியானவர்களை வாவென்று தானழைத்து

மக்கத்திலானை யெனும் மதப்புலையை தானழைத்து சின்னாண்டி பெரியாண்டி சென்று சமர்வென்றவனே

வெண்ணிமலைக்குமரா வாரா நீ வாவென்று

சேதுக்கு வாய்த்த சேவகனே வாவென்றே

வாதுக்கொப்படி வரும் மதுரை வழிகண்டவனே

கொண்டையன் கோட்டை குறும்படிக்கு மன்னவனே

செம்பி நாட்டிலுள்ள சேர்ந்த பசை மன்னவரே

மங்கல நாட்டு வணங்காத மன்னவரும் கன்னன் கலியாணி காவலனே வாவெனவே ரவுத்தமாரே நயமுடனே வாருமேன்று

வீசுகொடை தேவா வீமனெனவானெனவே

வாது சொல்லி வெட்டி வாரும் வணங்காமுடி வேந்து மெத்தை யுடையான் யோர் வேந்தன் வேருமென்று

பாளையக்காரர் பரிவார மாத்தனையும் வாவென்று தானழைத்து வரிசை மிகக்கொடுத்தான்

மாப்பிள்ளை வன்னியரே வாவென்று கிட்டவைத்து வேங்கை புலியாரே வீரப்பரிவாரங்களே முன்னாளில் வந்த வினைமுடிய வெட்டி வென்றீரே ஆன்னளி லென்னை அரசியலை யிட்டீரே இந்நாளில் வந்த வினை யியம்புகிறேன் கேளுமினி கூத்தன் மகன் சேதுபதி வார்த்தை குறியாக இராமப்பைய னென் றொருவன் எம்பதியை நோக்கி மான மதுரையிலே வந்தே யிறங்கினனம்"-சடையக்கன் சேதுபதி(ரா.அ)

வன்னியத்தேவன், மதியாறழகன்,மருகன், வீசுகொண்டைத்தேவன், அழகன், குமாராழகன், மதத்தேவன்,ராவுத்தக்கர்த்தன்,கருத்த உடையான் ஆகிய மறவர் படைத்தலைவர்களையும் மற்ற மறவர்களையுன் அழைத்து பேசுகிறார்.







தன் மருமகன் வன்னியரை அருகே அமரவைத்து ராமப்பய்யன் என்றொருவன் படையெடுத்து வருகிறான் என விளக்குகிறார்.

(மதியாரழகத்தேவர் பின்னாளில் சிவகங்கை சிவகங்கை சீமையை உருவாக்கிய நாலுகோட்டை சசிவர்ண தேவரின் முன்னோர் ஆவார்.)


"பார்ப்பான் படை எடுத்தால் பறமென்று சொன்னீரே

வந்த வடுகரெல்லாம் மடிந்தார்களன்னளில்

இந்தவிசை வாரான் யிவன் பிழைத்தும்போவானே வாரா படையத்தனையு மடியவே போரிடுவோம்

சூறையிட்டு சுத்தித் துனிபிடுங்கி வாரோமய்யா" - சடையக்கனிடம் மறவர் படைத்தலைவர்கள் சொன்ன பதில் (ரா.அ)



"கெட்டானே பார்பான் கீழ்த்திசை நோக்கிவந்து

பஞ்சாங்கஞ் சொல்ல வேறு பாரிலிடமில்லையோ

பூசை பண்ணித்தான் பிழைக்க பிள்ளையார் தானில்லையோ

ஆசைகொண்டு வந்தானே அறியாமல் பார்ப்பானும்"

முன்வந்து தெரிபட்ட முதலிமார் சொல்லலையோ

வடுகர் பட்ட பாடெல்லாம் மறந்தார்கள் மன்னவர்கள்

பார்ப்பானு மிதுதேசம் படையெடுத்து வந்தானே

இங்கே படையெடுக்க யினிவெட்கந் தானில்லையோ

சாய்வாக வந்த தளத்தை முறியவெட்டி பார்ப்பான் குடுமியிலே பாங்குடனே தேங்காயை கட்டியடிப்பே"

மார்பிலிடும் பூணூல் பறித்து மாட்டுவடம் போட்டிடுவேன்"

"வேண்டா மறவர் விசாரமினி வேண்டாங்கன்"

- வன்னியத்தேவன் சூளுரை (ரா.அ)















பார்ப்பான் குடுமியிலே தேங்காயை கட்டியடிப்பேன், மார்பிலிடும் பூணூல் பறித்து மாட்டுவடம் போட்டிடுவேன் என வன்னியத்தேவர் சூளுரைக்கிறார்



யானைப்படை, குதிரைபடை உள்ள சேனை தாளத்துடனே யானை மேல் ஏறி வீதிவுலா வருகிறார் வன்னியர். போருக்கு செல்லும் வன்னியத்தேவர் கடுக்கமுத்தூர் கடந்து, காரடர்ந்தகுடியைத்தாண்டி ,காவனூர் வழி நடக்கையிலே மேற்கு திசையில் சூரியன் மறைந்தார்.- (ரா.அ)



"மற்றைநாள் தானும் மன்னன் புலி வன்னித்துரை மதியாற்றழகனையு மன்னன் குமாரனையும் சின்ன யாளி யுவுக்குச் சேர்ந்த படைதனையும் அரியாணிபுறக் கோட்டைக்கு அதி சீக்கிரத்தில் போகச்சொன்னர்"

"புயத்தௌ யுடையவன் போர்வேந்தன் தன்படையும் வீசுகொண்ட தேவன் வீமன் பெரும்படையும்

புதுக்குடி கோட்டைக்கு தாமுரைத்தார்

மதுரை வழிகடை மந்தத்தேவன் தன்படையும்

கருத்த உடையான் கன்னன் பெரும்படையும்

றவுத்த காத்தன் நல்ல படைக்காவாளும்

போகலூர் கோட்டைக்கு போமென்று தமுரைத்தார்

வட்டாணந் தொண்டியிலே வையிந்தன் தானியத்தை

இளையாங்குடி கோட்டை யெச்சரிக்கை யென் றுரைத்தார்"- (ரா.அ)



மறுநாள் வன்னியதேவர் மறவர் படைத்தலைவர்களை நான்கு பிரிவாக பார்க்கிறார்.

மதியாறழகனையும் குமாரனையும் அரியானிபுரக்கோட்டைக்கும்,

பொந்தையுடையானையும் வீசு கொண்டை தேவனையும் புதுக்குடிகோட்டைக்கும்,

மந்தத்தேவனையும் கறுத்தவுடையானையும் போகலூர் கோட்டைக்கும் போகச்சொல்லிவிட்டு வாட்டாணம்,தொண்டி, இளையான்குடி ஆகியவைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார்.



"மற்ற நாள் தான் தானும் மன்னன் புலி வன்னியவன் அதி சீக்கிரம் போயிறங்கி

கோட்டைபுகுந்து கொத்தளத்து மேலேறி

யெதிரி படையை யெறிட்டு தான் பார்த்து

'எங்கே யிருந்தடா யிந்த பெரும்படைதான்

கோடாங்கி வெள்ளமென கொண்டு வந்துவிட்டானே '

வீரியங்கள் பேசி வன்னி விதமுடனே ஆர்ப்பரித்து

பார்ப்பான் பெரும்படையை பாரமுறிய வெட்டவென்று

இருந்த படைத்தலைவலோரையும் அழைத்து

அஞ்சாமல் பார்ப்பான் நெஞ்செதிரே வந்தேனே

இறங்கிய பாளையத்தை இளப்ப மென்று தான் துணிந்து

கோட்டை திறந்து புறப்பட்டார் மன்னவர்கள்."- (ரா.அ)



மறுநாள் காலையில் அரியாண்டிபுரம் கோட்டைக்கு சென்று கொத்தளத்தின் மேலேறி எதிரையின் பெரும்படையை கண்டு மலைத்து போகிறார் வன்னியதேவர்.

ஆனால் அவ்வுணர்ச்சி நெடிப்பொழுதில் மறைந்து நெஞ்சு வீரத்தால் விம்மியது. வீரியங்கள் பேசி ஆர்பரித்து கோட்டை கதவு திறந்து பார்ப்பானின் வடுகர் படையின் மேல் பாய்ந்தார்கள் மறவர்கள்.



முதல் நாள் போர்..... தொடரும்....



அடிக்குறிப்புகள்:

===============

1,2,3,7-History of the Nayaks of Madura - R.Sathyanatha Aiyar
3-நிலக்கோட்டை கூளப்ப நாயக்கர் வம்ச வரலாறு - பேரா. எஸ். ஆர். விவேகானந்தம்
4,5- The Madura Country: A Manual-James Henry Nelson
5 - Mackenzie Manuscripts
6-Namma Madurai: From Vedas to military strategies - The Hindu 2-may- 2012

https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/namma-madurai-from-vedas-to-military-strategies/article3376882.ece

8-An unsung hero-The Hindu 20-july2012)

https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/an-unsung-hero/article3659943.ece

நன்றி:
கட்டுரை வழங்கியவர்,
கார்த்திக் தேவர்

Monday, August 27, 2018

திரையன் தேவர்கள்-who are thirayyars?


திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின்
வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை
நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர்
பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி
அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங்
கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.



     இன்னும், தொண்டை நாட்டில் திரையர் குலத்தைச் சேர்ந்த ஒருவன்
பெயரால் திரையனேரி என்னும் ஊர் உண்டாயிற்று. அதுவே இப்பொழுது
செங்கற்பட்டு நாட்டில் தென்னேரியாக விளங்குகின்றது. திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் அலைகடலில் நெடுந்தொலைவு ஆழ்கடலில் பயணம் செய்ததால் திரையர் எனப்பட்டனர்.
Tamil chamuthaya Varalaaru -page 43-44.

We cannot deny that but from “Amizhnthore” tamil evoluation is not possible.

He also says tamils were called ‘Thirai vazhi vanthavan”(a man from sea) ,Thirayan (sea man),Thirayar kudi (sea people), A child who was born for the parents of Chola Prince and naga princess was called “Thirai tharu marabin uravone Umbal” (Perumpanatruppadai) should have some meaning and this must be the cause of tamil name formation. How ?

Dr. Sothi Prakasam :

Quoting the above he says , “Thirai kadal Odiyum Thiraviyam Thedu”(at any cost make money by sea trade) was the slogan prevailed among tamils. They were top in sea trade and ruled the world before 3000 years only through sea trade. “Yathum Urae ,Yavarum Kelir”(All world people are our brethren, All world is ours) came into being only by this trading affinity.

And so world people especially meditarenian countries people called tamils as “Thirayar”and their language “Thirayer Mozhi”which turned “Thrimili” there and thramili in India turned Thramidi –dravidi- Dravida in north India and tamil in south India.

The people who migrated from meditaranien countries to Turky called themselves as “Thrimili” –Refer Dravidian India – T.N.Sesha Iyengar quoting eminent historian Sunil Kumar Chatterji.

In Greece the people called “Thriyar” lived. They were called “Throzer” in Turky.

Hence “Thirayar Mozhi” turned tamil is the correct interpretation.

Whenever we analyse tamil roots we have to travel Tamilnadu to Sumeria, Anattrolia, Persia and then Sanskrit for comparative analysis. Then we will get wonders.


தொண்டைமான் இளந்திரையன் சங்ககால அரசர்களில் ஒருவன். இவனது தலைநகர் காஞ்சி. பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன். கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் இவனிடம் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

கடியலூரிலிருந்து காஞ்சிக்குச் செல்லும்போது நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தைக் கடந்து செல்லவேண்டும்.
இளந்திரையனின் அரண்மனை வாயில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் எப்போதும் திறந்தே இருக்கும்.
மள்ளருக்கு மள்ளன் (உழவருக்கெல்லாம் உழவன்), மறவருக்கு மறவன் (வீரருக்கெல்லாம் வீரன்), செல்வருக்குச் செல்வன் (வணிகருக்கெல்லாம் வணிகன்), போரில் மேம்பட்டவன் என்றல்லாம் இவன் போற்றப்பட்டுள்ளான்.
பரிசலர்க்குப் புத்தாடை தந்து, தானே உணவு படைப்பான்.
சிறந்த பாணனுக்குப் பொன்னால் செய்த தாமரை விருது சூட்டிப் பெருமைப்படுத்துவான்.
விறலியர்க்குப் பொன்னால் செய்த மாலையை அணிவிப்பான்.
காண்க
தொண்டையர் வாழ்ந்த நாடு தொண்டைநாடு. தொண்டை நாட்டு அரசன் தொண்டைமான்.
திரையன் என்பவனின் தம்பி இளந்திரையன்.
திரையில் (கடலலையில்) வந்தவன் திரையன் எனப்பட்டான் என்னும் கருத்து உண்டு.

"மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் பல்வேல் திரையன்" - பெரும்பாணாற்றுப்படை 37

அதர்மத்தை ஒழித்து தர்மத்தைச் செய்வதற்குத் துணைபுரிகின்றவன்; கூர்மையான வேற்படையை உடைய இளந்திரையன்.நீதிமுறையை வேண்டி வந்தோர்க்கும், தங்கள் குறை தீர்த்தலை வேண்டி வந்தோர்க்கும் அவர்கள் வேண்டுகின்றவைகளை, வேண்டுகின்றபடியே கொடுப்பவன். நடுநிலையிலிருந்து உண்மையை உணரும் உயர்ந்த அறிவுடையவன். இல்லோர்க்கும் புலவர்க்கும் எப்பொழுதும் கொடையளி செய்பவன். சோர்வற்ற உள்ளமுடையவன். கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள்-அறிஞர்கள்-நண்பர்கள்-உறவினர்கள்-ஆகிய சுற்றத்தார்களை உடையவன்". இத்தகைய பண்புள்ளவன் இளந்திரையன்.



சிறுவல்லி பாளையத்தின் தலைவன் திரைய தேவர்

சிறுவல்லி பாளையம் என்பது இன்றைய தேவகோட்டை அருகே இருக்கும் சிற்றூர் ஒருகாலத்தில் இங்கு திரையன் தேவர் என்னும்
குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவர் பண்டைய திரையன் என்னும் சோழன் பெயர் தாங்கி வந்த பட்டமுடையர்.
இவரது ஆட்சி பரப்பு சேதுபதிகளின் ஆட்சிக்குள்ளது. திரையத்தேவரும் சேதுபதி பதவிகளுக்குள் ஒரு பங்காளியாக சேது அரியாசனத்துக்கு போட்டியுடையவர்.

இவரது தலைநகர் உறையூர் . இது தற்காலத்தில் ஓரியூர் என அழைக்கபடுகின்றது. அங்கு பாழடைந்த கோட்டை ஒன்று உள்ளது.

தடியத்தேவன் என தவறாக எழுதப்பட்ட திரைய தேவன்:

திரைய(தடிய) தேவன் என்றொரு பாளையக்காரன். இவன் கிழவன் சேதுபதிக்கும் உறவினன்கூட. அவனுக்கு இந்த பாதிரியார் பால் அன்பு ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதோவொரு வினோதமான வியாதி அவனைப் பீடித்தது. பல மருத்துவர்கள் மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. அப்போது செய்தியறிந்து அருளானந்த அடிகளான பாதிரியார் பிரிட்டோ திரைய(தடிய)த் தேவனைப் பார்க்க வந்தார். அவர் வந்த வேளை அந்த பாளையக்காரனின் வியாதி தீர்ந்து குணமடைந்தான். அவன் பாதிரியாரை மிகவும் மதித்து அவர் ஆலோசனைப்படி ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு மதமாற்றம் பெற்றான்.


அவன் மதம் மாறியதில் ஓர் சிக்கல் ஏற்பட்டது. அவனுக்கு ஐந்து மனைவியர். அவன் சார்ந்த புதிய மதக் கோட்பாடுகளின்படி அவனுடைய முதல் மனைவி மட்டும்தான் மனைவியாக இருக்க முடியும். மற்ற நால்வரும் அவனுக்குச் சகோதரிகளாகி விடுகின்றனர். இந்த செய்தி அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. முதல் மனைவி நீங்கலாக மற்றவர்கள் என்ன கெஞ்சியும் அவன் அவர்களை மனைவியராக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான் பாதிரியாரின் அறிவுரைப்படி. அவர்கள் நால்வரும் கூடிப்பேசி, நால்வரில் இளையவளான காதலி நாச்சியார் என்பவளை அழைத்து, அவளுக்குப் பெரியப்பன் உறவான கிழவன் சேதுபதியிடம் சென்று முறையிடும்படி கேட்டுக் கொண்டனர்.

அதன்படி காதலி நாச்சியார் சென்று கிழவனிடம் முறையிட்டாள். அவனும் யோசித்தான். தன் உறவினனான தாதியாத் தேவன் மதம் மாறிவிட்டான். தன் தம்பி மகள் கணவன் உறவை இழந்து அழுகிறாள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்த பாதிரியார் மறவர் இனமக்கள் அனைவரையும் மதம் மாற்றிவிடுவார் என்று நினைத்தார். இந்த திரைய(தடிய)த் தேவன் முன்னர் கிழவன் சேதுபதியோடு அரியணைக்குப் போட்டியிட்டவன். கிழவனுக்குப் பிறகு அரசனாக ஆகக்கூட வாய்ப்புகள் இருந்தன. மற்றவர்களை மதம் மாற்றியதைப் போல சகட்டு மேனிக்கு இந்த மறவர் பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை.

அரச குடும்பத்தில் ஒருவன் மதம் மாறினால் மக்களும் அல்லவா மதம் மாறிவிடுவார்கள்!  அப்படி மக்கள் மதம் மாறத் துணிந்தால் இந்த திரைய(தடிய)த் தேவனைத் தனக்கெதிராக ஆட்சியைப் பறிக்க போர்த்துகீசியர் தூண்டக் கூடுமல்லவா என்றெல்லாம் யோசித்தான் கிழவன் சேதுபதி. இது வெறும் மதமாற்றம் மட்டுமல்ல; போர்த்துகீசிய ஆதிக்கத்தை கடற்கரையையும் தாண்டி உள்நாட்டில் ஏற்படுத்தும் நோக்கமும் இதில் இருக்கிறது என்று சிந்தித்தார் அவர். இது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இது ஏதோ கற்பனையான பயம் என்று எண்ணுவதற்கில்லை. வரலாற்று அடிப்படையில் அவ்வாறு சேதுபதி பயந்ததற்குக் காரணங்கள் இருந்தன. 1532 – 1582 காலகட்டத்திலேயே கத்தோலிக்க மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட மீனவர்களுடன் தூத்துக்குடியில் வாழ்ந்தவர்களும் போர்த்துகீசிய குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். இதனை ஒரு கிறிஸ்தவ பாதிரியாரே எழுதியிருக்கிறார். ஆம்! பிஷப் கால்டுவெல் கூறும் செய்தி இது.






ஐரோப்பாவிலிருந்து நாடுபிடிக்கவும், கீழை நாடுகளில் மக்களை மதமாற்றம் செய்வதற்காகவும் பல நாட்டினர் இங்கு வந்தனர். அவர்களில் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர் என பலரும் அடங்குவர். என்றாலும் இங்கு எவரும் மதமாற்றம் செய்வதை கிழவன் அனுமதிக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார்  அந்த சிறைவாசத்திலேயே இறந்து போனார். பண்பிலும், அரசாட்சியிலும் சிறந்து விளங்கிய கிழவன் சேதுபதி மற்ற வகைகளில், கடற்கரையில் முத்து எடுப்பது முதல், வியாபாரம் வரை அந்நியர்களை அனுமதித்தாலும் இதுபோன்ற மதமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

இது குறித்து பல்வேறுபட்ட சர்ச்சைகள்  உள்ளன.  ஆனால் சில வரலாற்று உண்மைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. பாதிரியார்கள் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர் என்பது அவர்கள் மீது கிழவன் சேதுபதி காழ்ப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதைக்காட்டுகிறது.   பாதிரியார்கள் முக்கியமான பிரபல புள்ளிகளை மதமாற்றம் செய்வதில் குறியாக இருந்தார்கள்; தாங்கள் செய்யும் ”தியாகங்களை” எல்லாம் கூறி மக்களின் அனுதாபத்தைப் பெற்று மதமாற்றம் செய்தார்கள் என்பதும் தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்து மதத்தின் அழிவில்தான் கிறிஸ்தவம் வளரமுடியும் என்று அவர்கள் கருதினார்கள் என்பதும் ஐயமின்றி விளங்குகிறது.



Letters of John De britto

 வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை - காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் பாடல் அகம் 85-9
 செல்லா நல்லிசை பொலம்பூண் திரையன் பவத்திரி அன்ன நலம் - நக்கீரர் பாடல் அகம் 340-6

அணிமை கழிந்த மெல்லிய நடை வாய்ந்த இளைய பிடியினதம் அதன் கன்றினதும் பசியைப் போக்கற்கு, பைங்கண் யானை - பசிய கண்ணினையுடைய களிறு, முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் - மூங்கிலின் முற்றா முளையினைக் கொணர்ந்து உண்பிக்கும், வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை-வெற்றி பொருந்திய வேலினையுடைய திரையனத வேங்கடமெனும் நீண்ட மலை.

For fourteen years he toiled, preaching, converting, baptizing multitudes, at the cost of privations, hardships, and persecutions. In 1683, John de Britto had to leave India but returned in 1691.
https://indiancatholicmatters.org/st-john-de-britto-the-portuguese-st-francis-xavier/
He advised Teriadeven, a Maravese to dismiss the many wives he had and keep only one. However, one of Teriadeven’s wives was the niece of the king. Due to this, John de Britto began to be persecuted. In 1693, he was taken to the capital Ramnad and from there led to Oriyur a small village in Tamil Nadu, where he was tortured and put to death by beheading.
He had wrought many conversions during his life, established many stations, and was famous for his miracles before and after his death.
There is a shrine to Britto in Oriyur, where he is a significant figure revered by the Kallar, Maravar and Agamudayar castes who together are often referred to as the Thevars.



திரைய தேவன் பரம்பரை கிருத்துவர்களாக மாறி வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டனர் என கூறுகின்றனர்.
இன்னும் சில இடத்தில் இருக்கின்றனர் என நம்புகின்றனர்.

Thanks:
Madurai Country Manuel-J.H.Nelson
Letters from Joe De Britto(SJ)-Latin
Catholics in south india

கொல்லங்கொண்டான் ஜமீன்தார்


-முத்தாலங்குறிச்சி காமராசு

ஜமீன் கோயில்கள்
 

கொல்லங் கொண்டான், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அமைந்திருந்த ஜமீன்.  இயற்கை வனப்புடன், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சிற்றூர். தற்போதும் காணப்படும் பிரமாண்டமான அரண்மனை, சிறந்து விளங்கிய ஜமீனுக்குச் சான்றாக நிற்கிறது. மேற்குகடற்கரைப் பகுதியில் பிரசித்திபெற்ற நகரம் கொல்லம். இவ்விடத்தினை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவன் கேரள சிற்றரசன் மாறவர்மன். இவன் போர்புரிந்து பல பகுதிகளில் தன் ஆட்சியை விஸ்தரித்தான். 

இவனால் பாதிக்கப்பட்டவர்கள், ராஜபாளையத்தின் அடுத்தப் பகுதியை ஆண்ட வாண்டையத்தேவன் என்ற சிற்றரசனிடம் வந்து முறையிட்டார்கள். வாண்ைடயத்தேவன் பெரும்  படை திரட்டி கொல்லத்துக்கு சென்று போரிட்டு வென்றான்; இதனால் ‘கொல்லங்கொண்டான்’ என்றழைக்கப்பட்டான். கொல்லத்து அரசனிடமிருந்து மீட்ட நிலங்களை, அந்தந்த சிற்றரசர்களிடமே ஒப்படைத்தான்.

நாயக்கர் மன்னர் காலத்தில் பாளையக்காரர்களாக இருந்த கொல்லங்கொண்டான் ஜமீன்தாராக விளங்கிய வாண்டையத்தேவன் திருமலை நாயக்கருக்கு எதிராகப் போரிடவேண்டிய சூழல் வந்தது. தனக்குப் பாளையக்காரராக பணிபுரிந்துகொண்டு தன்னையே எதிர்ப்பதைக் கண்டு கொதித்த திருமலை நாயக்கர் தேவனின் அரண்மனையை இடித்து நாசமாக்கினார். அப்போது வாண்டையத்தேவன் வீரமாகப் போராடினார். அவருடைய வீரத்தை மெச்சிய நாயக்கர், பாளையத்தை அவரிடமே ஒப்படைத்து விட்டுத் திரும்பினார். 

அதன்பின் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நல்லெண்ணத்தின் விளைவாக தங்களுடைய வாரிசுகளின் பெயருக்குப் பின்னால் திருமலை என்ற பெயரையும் சூட்டினார் வாண்டையத்தேவன். சங்கரபாண்டி திருமலை வாண்டையத் தேவர், பொன்னையா திருமலை வாண்டையத் தேவர், ஹரிஹரபுத்ர திருமலை வாண்ைடயத் தேவர் என்ற அவரது வாரிசுகளின் பெயர்கள் சில உதாரணங்கள்.

திருமலைநாயக்கரால் தரைமட்டமான அரண்மனையை அப்படியே  விட்டுவிட்டு புதிதாக அரண்மனை கட்ட ஆரம்பித்தனர். அதற்கான வேலையில் இறங்கியபோதெல்லாம் பிரச்னை ஏற்பட்டது. சங்கரபாண்டிய திருமலை வாண்டையத் தேவர், தனது அரண்மனை ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டார். ‘முதலில் ஒரு பிள்ளையார் கோயிலை கட்டி வணங்குங்கள்; அதன்பிறகு அரண்மனை வேலை தானாகவே நடைபெறும்’ என்றார் அவர். அதன்படி கோயிலைக் கட்டி, ‘ஆதி விநாயகர்’ என்று பெயரிட்டனர். 

அந்த விநாயகர் கோயில் தற்போதும் அரண்மனை முகப்பில் காணப்படுகிறார். ஆதி விநாயகர் கோயில் கட்டி முடித்தவுடன் அரண்மனை வேலை தங்கு தடையின்றி நடந்தது. அரண்மனை முன்பு பிரமாண்டமான நுழைவாயில்  கட்டப்பட்டது.  தற்போதைய ஜமீன்தார் வாரிசு லிங்க சுந்தரராஜ் தினமும் பிள்ளையாருக்கு பூஜை செய்தபின்பே தினசரிப் பணிகளை மேற்கொள்கிறார். அரண்மனை மட்டுமல்ல, ஊரில் திருமணம் முதலான எந்த சுபவிசேஷம் என்றாலும் இவருக்குதான் முதல் அழைப்பு! 

இவர்களது குலதெய்வம் ராஜபாளையம் நீர் காத்த அய்யனார். ராஜபாளையத்துக்கே குடிதண்ணீர் தரும் நீர்தேக்கத்தினை காத்தருளும் தெய்வமாக, நீர் காத்த அய்யனார் அருளாட்சி புரிகிறார்.  ராஜபாளையம் பஸ் நிலையத்தில் இறங்கி, அய்யனார் கோயில் என்று கேட்டால் யாரும் வழிகாட்டுவர். பங்குனி உத்திரம், சித்திரை விஷு இங்கு சிறப்பாக நடைபெறும். பல்லாயிரம் பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். புதன்கிழமையும், சனிக்கிழமையும் இவருக்கு உகந்த நாட்களாதலால், அந்நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

இந்த ஆலயத்தில் கொல்லங்கொண்டான் ஜமீன்தாரின் முன்னோர்களான பெரியபூமி ஆண்டவர், சின்னபூமி ஆண்டவர் ஆகியோருக்கு தனிச் சந்நதி காணப்படுகிறது. சிலசமயம் அய்யனார் ஆற்றில் திடீரென்று வெள்ளம் வந்துவிடும். நடுக்காட்டில் உள்ள இந்த அய்யனார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றை தாண்டுவது கடினம். அவர்களுக்குரிய பாதுகாப்பு கொடுத்து காத்தனர் இவ்விருவரும். 

ஒரு காலகட்டத்தில் இவர்கள் இருவரையுமே வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. ஆனாலும் அவர்கள் தெய்வமாக நிலைபெற்று மக்களைக் காத்துவருகிறார்கள் என்பது ஐதீகம். ஜமீன் வாரிசுகள் இந்தத் தம் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்து தொழுது வருகிறார்கள். தம் குடும்பத்து காது குத்துதல் உள்பட பல விழாக்களை அவர்கள் இங்குதான் நடத்துகிறார்கள். 

சித்திரை விஷு திருவிழாவில் இந்த வாரிசுகள், வித்தியாசமான பானம் தயாரித்து, அய்யனாருக்குப் படைத்துவிட்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவார்கள்.  புளி, கருப்பட்டி கலந்த இந்த பானத்துக்கு ‘பானக்காரம்’ என்று பெயர். திருவிழாவின்போது அய்யனாரை வணங்க வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஜமீனுக்குச் சொந்தமான தோட்டத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

50 வருடங்களுக்கு முன்புவரை நீர்காத்த அய்யனாரை தினமும் ராஜபாளையம் சென்று வணங்குவதை வழக்கமாக  வைத்திருந்திருந்தனர் ஜமீன்தார்கள். நாளாவட்டத்தில் அவ்வாறு செய்ய இயலாததால், ஹரிஹரி வாண்டையத் தேவர் காலத்தில் அய்யனார் கோயில் பிடிமண் எடுத்துவந்து கொல்லங்கொண்டான் அரண்மனைக்கு அருகில் பிரதிஷ்டை செய்து அய்யனாருக்கு கோயில் கட்டினார். தினமும் அய்யனாருக்கு பூஜை நடைபெற ஏற்பாடு செய்தார். தான் பணிக்குச் செல்லும்போதெல்லாம் அய்யனாரை வணங்கிவிட்டே சென்றார். 

தற்போதும்கூட அவரது வாரிசுகள் அய்யனார் கோயிலை மிகச்சிறப்பாகப் பராமரித்து வருகிறார்கள். ஒருசமயம் கான்சாகிப்புக்கும் பூலித்தேவன் தலைமையான மறவர் பாளையத்துக்கும் சண்டை ஏற்பட்டது. அதில் வடக்கு அரணாக இருந்து பூலித்தேவனை பாதுகாத்தது கொல்லங்கொண்டான் ஜமீன்தார்தான். முதல் சண்டையில் கான்சாகிபை புறமுதுகிட்டு ஓடும்படி விரட்டினார்  ஜமீன்தார்.  இரண்டாவது சண்டையில் ஜமீன்தார் இறந்து விட்டார். அவரது இளம் கர்ப்பிணி மனைவி தப்பி ஓடினார். 

அவரையும் அவரது வயிற்றில் வளரும் வாரிசையும் அழித்துவிடும் நோக்கத்தில் கான்சாகிப் படை விரட்டியது. ராணி பஞ்சம்பட்டி என்னும் கிராமத்திற்கு வந்தார். அங்கு ஒரு வீட்டு மாட்டு தொழுவத்தில் மறைந்து கொண்டார். அந்த ஊர் மக்கள் அவரைக் காவல் காத்தனர். பல இடங்களில் ராணியைத் தேடிய கான்சாகிப் வீரர்கள் பஞ்சம்பட்டிக்கும் வந்து மக்களை மிரட்டினர். ஆனால், அவர்கள் ராணியைக் காட்டிக் கொடுக்காமல் பாதுகாத்தனர். காலங்கள் கடந்தன. 

ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி பெரியவனாக்கி அவனுக்கு போர்ப் பயிற்சி கொடுத்து போர்படை தளபதியாக்கினர். பின் அவர் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு மீண்டும் கொல்லங்கொண்டான் அரண்மனையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கொல்லங்கொண்டான் ஜமீன்தாரின் சிறப்பைக் கருதி, அவருக்கு ஒரு சிறப்பான மண்டகப்படி சேத்தூர் ஜமீன்தார் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ஆலயத்தில் வழங்கப்படுகிறது. 

தேவதானம் அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் சேத்தூர் ஜமீன்தார்தான் இக்கோயிலின் பரம்பரை அறங்காவலர். இங்கு வைகாசி விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். 5வது நாள் திருவிழாவில் கொல்லங்கொண்டான் ஜமீன்தாருக்கு இரவு மண்டகப்படி வழங்கப்படுகிறது. இதை வருடந்தோறும், அழைப்பிதழிலேயே தெரிவித்து கொல்லங்கொண்டான் ஜமீன்தாரை பெருமைபடுத்துகிறார்கள். 

அன்றைய தினம் பகலில் சுவாமி-அம்பாள் ஒருசேர வெள்ளி ரிஷப வாகனத்திலும், இரவு இந்திர வாகனத்திலும் காட்சி தருவார்கள். தற்போது வாரிசுகள் லிங்க சுந்தர்ராஜ் மற்றும் அவரது சகோதர்கள் இந்த மண்டகப்படியில் கலந்துகொண்டு மரியாதை பெறுகிறார்கள். ஒருகாலத்தில் மனநோயாளிகளை குணமாக்கும் இயற்கை இலவச மருத்துவமனையை அரண்மனை வளாகத்திலேயே நடத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல், ராஜபாளையம் சேர்மனாக இருந்த ஜமீன்தார், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறார். இதற்காக இவ்வூரை சேர்ந்த பெரிய தனக்காரரிடம் இடத்தினையும் இலவசமாக பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
ஜமீண்கள்
=======
நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்
முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்
திரையன் தேவர்கள்
ஊர்க்காடு ஜமீன்
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
தென்னாட்டு புலி சிங்கம்பட்டி ஜமீன்
ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் புலித்தேவன்
குருக்கள்பட்டியின் மறைந்த ஜமீன்
சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை
கொல்லங் கொண்டான் ஜமீன் 
ஊத்துமலை ஜமீன்
சிவகிரி ஜமீன்-மறவர்கள்
சேத்துர் ஜமீன்
கடம்பூர் ஜமீன்
மணியாச்சி ஜமீன்

ஊத்துமலை ஜமீன்

தங்கக் கொடிமரம் நிறுவிமங்காத புகழ் பெற்றவர்

சிங்கம்பட்டி - நெல்லை மாவட்டம்

ஊத்துமலை ஜமீன்தார்கள் கோயில்களை பராமரிப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக திகழ்ந்தனர். தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய அவர்கள்  தாங்கள் வழிபடும் ஆலயத்தில் தங்கக் கொடிமரத்தை நிறுவி வணங்கி வருகின்றனர். கோயில்களை புனரமைப்பதிலும் திருவிழா  நடத்துவதிலும் முன்னணியில் நிற்பர். கோமதி அம்மனை தங்களது வீட்டில் பிறந்த மகளாக எண்ணி அவரது திருமணத்தை தங்கள் இல்லத்  திருமணம்போல் விமர்சையாக நடத்தி வருகின்றனர். 

ஜமீன்தார்கள் தென்பகுதிகளில் ஒரு குறுநில மன்னர்கள்போல ஆண்டு வந்தனர். அவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.  ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மறவர் பாளையமும், கிழக்குப் பகுதியில் நாயக்கர் பாளையமும் சிறப்புற்று  விளங்கின. 
 
திருநெல்வேலி சீமையில் ஆட்சி செய்த மறவர் இனத்தைச் சேர்ந்த பாளையக்காரர்கள் அனைவரும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள “கிலுவை”  நாட்டிலிருந்து வந்தவர்கள். மறவர் இனத்தில் கொண்டயங்கோட்டைப் பிரிவை சேர்ந்தவர்கள்தான் ஊத்துமலை ஜமீன்தார்கள். மதுரை மன்னன்  விஸ்வநாத நாயக்கர் காலத்தில் பிரிக்கப்பட்ட 72 பாளையங்களில், ஊத்துமலை மிகப்பெரிதாக திகழ்ந்துள்ளது.  இதன் ஆளுகைக்குள் 148 கிராமங்கள் இருந்தன.  

ஒரு காலக் கட்டத்தில் சுரண்டை ஜமீனையும் ஊத்துமலை ஜமீன்தார் ஏலம் எடுத்து தனது ஆளுகைக்கு கொண்டுவந்தார். ஊத்துமலை  ஜமீன்தாருக்கு விஜயகுணராம பாண்டியன் என்ற பட்டம் உண்டு. இவர் உபய சாமரம், புலிக்கொடி, மகரக்கொடி, இந்திரனின் கொடியான  வலரிக் கொடி ஆகியவற்றைப் பெற்றவர். பாண்டிய மன்னன் பல்வேறு காலகட்டங்களில் இவரது செயல்திறனுக்கு ஏற்ப இவற்றை  வழங்கியுள்ளார்.

ஊத்துமலை பாளையம் எப்படி உருவாயிற்று?

பாண்டிய மன்னன் மதுரையிலிருந்து தெற்கே திருநெல்வேலிச் சீமையிலுள்ள உக்கிரன்கோட்டைவரை ஆட்சி புரிந்து வந்தான். உக்கிரன்  கோட்டையைச் சுற்றி வாழ்ந்த குறும்பர்கள் பாண்டிய மன்னனுக்கு பல தொல்லைகளைக் கொடுத்தனர். இவர்களை அடக்கி ஒடுக்க  வேண்டும் என்று  மன்னன் முயற்சி செய்தான். அப்போது ஊத்துமலை ஜமீன்தார்களின் முன்னோர்கள் பெரும் படையெடுத்து வந்து  குறும்பர்களின் தொல்லைகளை அடக்கினர். இதனால் ஊத்துமலைப் பாளையம்  அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அந்தச் சமயத்தில் ஊத்துமலை பெருங்காடாக இருந்தது. ஜமீன்தார் தங்களது உறவுக் கூட்டத்தை அழைத்து வந்து காடுகளை அழித்து சீரமைத்து  ஊரை உருவாக்கினார். அதன் பின் கோட்டை கட்டி வாழ்ந்து வந்தார்.ஊத்துமலை ஜமீன்தார் சேரநாட்டிலிருந்து வந்ததாகவும் இதனாலேயே  இவர் வம்சா வழியினர் வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.வல்லப மகாராஜா (1534-1543) தென்காசியை  தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர்  நடத்திய நவராத்திரி விழாவிற்கு ஊத்துமலை மன்னர் வந்து சிறப்பு செய்தார். (தென்காசி  காசிவிஸ்வநாதர் கோயில் தெப்பத்திருவிழாவை ஊத்துமலை  ஜமீன்தார் வாரிசுகள் இப்போது நடத்தி வருகின்றனர்.) பாண்டியன் அரண்மனையில் தசரா விழா நடந்து கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வீரதீர செயல்கள் நடைபெறும். இதன் பொருட்டு சண்டையிடுவதற்காக  இரண்டு யானைகள் கூட்டி வரப்பட்டன. அதில் ஒரு யானை தப்பிச் சென்று  வீதியில் தென்படும் மக்களை எல்லாம் தூக்கி வீசி காலால்  மிதித்துக் கொல்ல முயன்றது. 

அந்த சமயத்தில்  ஊத்துமலை மன்னர் அங்கு வந்து தைரியமாக யானையை அடக்கினார். இதை அறிந்த பாண்டிய மன்னன் அந்த யானையின்  மீது  ஜமீன்தாரை ஏற்றி மேளதாளத்துடன் வீதிஉலா வரச் செய்தார். அவருக்கு ஏராளமான பரிசுகளையும் வழங்கி வழியனுப்பி வைத்தார்.தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியனுக்கும் ஊத்துமலை  பாளையக்காரர்கள் உதவியுள்ளனர். மதுரையில் நாயக்கர் ஆட்சியை ஒழித்து விட்டு பாண்டியர் ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த மாவீரன்  பூலித்தேவன் தலைமையில் ஐந்து கோட்டைகள் அமைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமானது ஊத்துமலை கோட்டை. ஊத்துமலையில்  கட்டப்பட்ட கோட்டைக்கு பஞ்ச பாண்டியர்களில் ஒருவரான மாறவர்மன் பெயர் சூட்டப்பட்டது. ‘ஊற்று’ உள்ள மலை ‘ஊற்றுமலை’  என்றழைக்கப்பட்டு நாளடைவில் ஊத்துமலை என்று வழங்கலாயிற்று. ஊத்துமலை ஜமீன்தார்கள் ஆட்சி துவங்கிய காலம் அறியப் போதிய  ஆதாரம் இல்லை.
 
ஊத்துமலை ஜமீன்தார்கள் காட்டுக்குள் “டானா” என்ற இடத்தின் வடக்குப் பகுதியில் முதல் கோட்டையையும், ஊத்துமலை நகருக்கு வடக்கே  உள்ள “வையம் தொழுவான்பாறை” என்ற இடத்தில் இரண்டாவது கோட்டையையும் அமைத்துள்ளனர். நாளடைவில் ஆட்சிப்பரப்பு  விரிந்ததால் அரண்மனையை இடம் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மூன்றாவதாக ஊத்து மலையில் தற்போது ஆர்.சி.  பள்ளி இருந்த இடத்துக்கு அரண்மனையை மாற்றினார்கள். இங்குதான் தமிழ்ச் சங்கம் நடத்தப்பட்டது.

அரசவைக்கு பல கவிஞர்களை வரச்செய்து ஜமீன்தார்கள் தமிழ் வளர்த்தனர். இருதாலய மருதப்பதேவர் தனது காதல் மனைவிக்காக  வீரகேரளம்புதூரை தலைநகராக மாற்றி அரண்மனையைக் கட்டினார். ராணி மீனாட்சி சுந்தர நாச்சியார் அருகிலுள்ள குருந்தன்மொழி  கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஊத்துமலையில் அரண்மனை இருந்தபோது இருதாலய மருதப்பதேவர்  பரிவாரங்களுடன் தனது குதிரையில் குருந்தன்மொழி சென்றார். அந்த சமயத்தில் மீனாட்சிசுந்தர நாச்சியாரை பார்த்து அவரது அழகில்  மயங்கினார். தனது உடைவாளை அனுப்பி அவரிடம் மணம் முடிக்க சம்மதம் கேட்டார்.

‘‘ஜமீன்தாரை மணக்க நான் சம்மதிக்கிறேன். ஆனால், வானம் பார்த்த பூமியான ஊத்துமலைக்கு நான் வாழ்க்கைப் படமாட்டேன்.  குளிர்ச்சியான இடத்தில் ஒரு அரண்மனை கட்டினால் நான் அவரோடு வாழ்கிறேன்” என்றார் மீனாட்சி சுந்தர நாச்சியார்.உடனே ஜமீன்தார்  சிற்றாற்றின் குறுக்கே “தாயார் தோப்பு” என்னும் இடத்தில் தடுப்பணை கட்டினார். அந்த அணையிலிருந்து வீராணம் கால்வாய் வெட்டினார்.  வீரகேரளம்புதூர் என்ற இடத்தில் கால்வாயின் இருபுறங்களிலும் அரண்மனையைக் கட்டினார். அந்தக் காலத்திலேயே நீர்வழிப்பாதையை  கட்டுப்படுத்தி மதிநுட்பத்துடன் தடுப்பணையை அவர் கட்டினார். ஆற்றில் வெள்ளம் வந்தால் அரண்மனை அழிந்து விடக்கூடாது  என்பதற்காக ஒரு பர்லாங் தூரத்தில் ஒரு வடிகாலையும் அமைத்தார். அருகிலேயே நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலை கட்டினார். தொடர்ந்து  அரண்மனையை வீரகேரளம் புதூருக்கு மாற்றினார். 

25.5.1864 அன்று இருதாலய மருத்தப்பதேவருக்கும் மீனாட்சி சுந்தர நாச்சியாருக்கும் திருமணம் நடந்தது. அரண்மனையின் ஒருபுறம்   இருவரும் வாழ்ந்தனர். மறுபுறம் ராஜதர்பார்நடந்தது. அதில், புலவர்களை அழைத்து வந்து தமிழ் வளர்க்கும் பணியும் தொய்வில்லாமல்  நடந்தது. இரவு பகலாக ஓலைச் சுவடியில் புலவர் பெருமக்கள் கவிதைகளை வடித்தனர்.காதல் மனைவிக்காக ஊத்துமலைஜமீன்தார் கட்டிய  அரண்மனை வீரகேரளம்புதூரில் இப்போதும் சிறப்புடன்  காணப்படுகிறது. ஊத்துமலையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன்  வீரகேரளகுலவர்மன் (1021-1028) பெயரால் இந்த ஊர் உருவாகியிருக்கலாம். 

வீரகேரளம்புதூர் நகரை நிர்மாணித்த பிறகு திறப்பு விழாவிற்கு அப்போதைய சேர மன்னனை அழைத்து சிறப்பித்துள்ளனர். விழாவுக்கு வந்த  சேரமன்னன் இங்குள்ள மக்கள் வீரமாக இருப்பதையும் இப்பகுதி கேரளம்போல் செழிப்புடன் இருப்பதையும் பார்த்து இதற்கு  “வீரகேரளம்புதூர்” என்று பெயர் சூட்டியதாகவும் கூறப்படுகிறது. விழா, முடிந்து சேர மன்னன் தனது நாட்டிற்கு திரும்பும் வேளையில்  ஊத்துமலை ஜமீன்தார் அவருக்கு ஒரு விநாயகர் சிலையை பரிசாக கொடுத்தார். அந்த சிலையை செங்கோட்டையில் பிரதிஷ்டை செய்தனர்.  அந்த கோயில் அமைந்துள்ள தெருவுக்கு “வீரகேரள விநாயகர் தெரு” என்று பெயரிட்டனர். 

தற்போதும் இந்த பெயர் விளங்கி வருகிறது.  கேரளம் என்னும் பெயருக்கு ஏற்ப இந்த ஊர் கேரள நாட்டின் சாயலைக் கொண்டுள்ளது.  தென்னை, மா, பலா, வாழை ஆகிய மரங்கள் செழிப்பாக காணப்படுகின்றன. இவ்வூர் தெப்பத்தில் உள்ள மண்டபம் கேரள கட்டிடக்  கலையை ஒத்துள்ளது. மன்னர் மருதப்பபூபதி காலத்தில் வீரகேரளம்புதூர் “மருதபூபதி” என்னும் பெயருடன் விளங்கியதாக  குறிப்பு உள்ளது. ஊத்துமலை ஜமீன்தார்கள் ரங்கம் ரங்கநாதர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்,  திருக்குற்றாலம் குற்றால நாதர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களின் நித்திய பூஜைக்கு நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர்.  மன்னார்கோயிலில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் கொடிமரம் நிறுவினார்கள். நாங்குநேரி வானமாமலை ஜீயர்  மடத்துக்கும்  ஊத்துமலை மன்னருக்கும் மிக நெருங்கிய  தொடர்பு  இருந்துள்ளது.
 
ஊத்துமலை ஜமீன்தார்களின் குலதெய்வம் நவநீதகிருஷ்ணசாமி. வைணவ மதத்தைச் சேர்ந்தவர்களாக அவர்கள் விளங்கியதால் அங்கு  நடைபெறும் முக்கிய விழாக்களில் ஜீயர் சுவாமிகள் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நவநீதகிருஷ்ண சுவாமிக்கு மன்னர் தேரோட்டத் திருவிழா  நடத்தினர். இறைவனுக்கு ஏராளமான அணிகலன்களையும் நிலங்களையும் வழங்கினர். வீரகேரளம்புதூரில் அரண்மனையின் தென்புறத்தில்   நவநீதகிருஷ்ணசாமி கோயில் உள்ளது. அங்கே நித்திய நைவேத்தியங்கள் சிறப்பாக நடைபெறுகிறது. அதற்குரிய நித்திய படித்தரம் பத்து  வராகன், லாடு, லட்டு, ஜிலேபி, தேன்குழல் முதலியவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும். ஒரு லாடு  என்பது உரித்த தேங்காய்  அளவுக்கு இருக்கும். தேன்குழல் பெரிய சந்தனக்கல் அளவுக்கு காணப்படும்.
 
தினந்தோறும் காலையில் விஸ்வரூபம்,திருமஞ்சனம், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை , அர்த்தஜாமம் ஆகிய நான்குகால பூஜைகள் இங்கு  சிறப்பாக நடக்கின்றன.இந்தக் கோயிலில் முன்பு ரதவீதியில் தேர் உள்ளது. தேரைக் கடந்து உள்ளே நுழைந்தால் பிரமாண்ட வளைவு  வரவேற்கிறது.   “1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதியாகிய இன்றைய தினம் டெல்லி மாநகரில் நடக்கும் மாட்சிமை தாங்கிய இந்திய  சக்கரவர்த்தி 5வது ஜார்ஜ், சக்கரவர்த்தினி மேரி இவர்களுடைய மகுடாபிஷேக மகோத்சவம் குறிப்பாக திருநெல்வேலி ஜில்லா, ஊத்துமலை  ஜமீன் ராஜா பத்தியுள்ள பிரஜைகளால்இயற்றப்பட்டது” என்று அதில் தமிழில்கல்வெட்டு காணப்படுகிறது. எதிரே ஆங்கிலத்திலும் இதே  தகவல் கல்வெட்டில் உள்ளது.

இருபுறமும் உள்ள வீடுகள். தொடர்ந்து நடந்தால் தொன்மையான சிறப்புமிக்க நவநீதகிருஷ்ண சுவாமி கோயிலை அடையலாம். கோயிலின்  முன்பக்கம் இரும்பாலான தீபஸ்தம்பம் உள்ளது. அந்தக் காலத்தில்  இரவு முழுவதும் அணையாமல் தீபம் எரிய காவலர்கள் எண்ணெய்  ஊற்றிக்கொண்டே இருப்பார்கள்.  கோயிலின் முன்புள்ள கல் மண்டபத்தில் உபரியான தேர்ச் சக்கரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.  கோயில் கதவு அருகே மியூரல்வகை ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன. நெடிய கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் வலதுபுறம் திருவிழாக்  காலங்களில் அரண்மனைப் பெண்கள் அமர்ந்து பூஜை செய்யும் காட்சி மண்டபம் உள்ளது. இங்கு தங்கக் கொடிமரம் கம்பீரமாக நிற்கிறது. 

இந்தக் கொடிமரத்தைச் சுற்றிவந்து வழிபடுகிறவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், திருமணம் கைகூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஊத்துமலை ஜமீன்தாரின் 43வது வாரிசான  எஸ்.எம். பாண்டியன், மருதப்பதேவரைப் போல் தலைசிறந்த வேட்டைக்காரராகவும் திகழ்ந்து   வந்தார். குறிதவறாமல் சுடும் ஆற்றல் படைத்தவர். தெய்வீகத்திலும், தேசியத்திலும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர். ஒரு சமயம்,  புதிய வைர கடுக்கன்களை மன்னருக்கு ராணி அணிவித்தார். அப்போது நவநீத கிருஷ்ணசுவாமி பாலகன் உருவில் அவரிடம் வந்து,  “அதேபோன்ற வைரக்கடுக்கன் தனக்கும் வேண்டும்” என கேட்டுள்ளார். உடனே மன்னர் வைரக் கடுக்கன்களை கழற்றி தாம்பாளத்தில் வைத்து  கோயிலுக்கு கொடுத்தனுப்பினாராம்.  திருநெல்வேலியில் தான் புதிதாக கட்டவுள்ள மாடி கட்டிடத்தை எப்படி கட்டலாம் என்று  ஆலோசித்துக் கொண்டிருந்தார். அந்தவேளையில் நவநீத கிருஷ்ண சுவாமி அவரது சிந்தையில் தோன்றி “எனக்கு மேலே மொட்டையாக  இருக்கிறது, நீ வேறு எதையோ பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாயே” என்று கேட்டுள்ளார். உடனே, ஜமீன்தார் கோயிலுக்கு வந்து தனது  சொந்த பணத்தில் புதிதாக கோபுரகலசம் பொருத்தியதுடன்  கொடிமரத்தின் மீது தங்கத் தகடுகளையும் பதித்தார். இதர திருப்பணிகளும்  இனிதே முடிவுற்று   25.10.1996 அன்று கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.

இப்படியாக ஊத்துமலை ஜமீன்தாரும், அவரது வழித்தோன்றல்களும் திறம்பட மேற்கொண்ட ஆன்மிகத் தொண்டுகளால் நவநீத கிருஷ்ண  சுவாமியின் அருள் இப்பகுதி மக்களுக்கு பூரணமாக கிடைக்கப்பெற்று நலமுடன் வாழ்கின்றனர்.
(தொடரும்) 
ஒரு பொம்மையாக அரசாட்சி நடத்திய ஆன்மிக ஜமீன்தார்!

முத்தாலங்குறிச்சி காமராசு

நவநீத கிருஷ்ணன் கோயில் கொடிமரத்தைக் கடந்ததும், ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்ப தேவரின் சிலை கம்பீரமாக  காட்சியளிக்கிறது. தமிழையும், ஆன்மிகத்தையும் இரண்டு கண்களாக போற்றி பாதுகாத்த இவரது தோற்றம் பார்ப்பவர்களை வணங்கத்  தூண்டுகிறது. இவரது தமிழ் பற்றுக்கு உதாரணமாக கோயில் வளாகத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள் தற்போதும் காணப்படுகின்றன. எழுதி  முடித்தும் முடிக்காமலும், பதம் செய்யப்பட்டும் நேர்த்தி செய்யப்படாமலும் உள்ள அந்த ஓலைச்சுவடிகள் உள்ளன. இங்குதான் இருதாலய  மருதப்ப தேவர் தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஓலைச்சுவடிகளை எழுதியுள்ளார். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் நூற்றுக்கணக்கானோர்  அமர்ந்து பணி மேற்கொண்டிருந்திருக்கின்றனர். அந்தச் சுவடிகள்தாம் இவை.

மருதப்பரின் உறவினர்கள் சிலரும் பெருங்கவிஞர்களாக, இறையருள் பெற்ற புலவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இருதாலய மருதப்பத்தேவர் கல்வி ஞானம் மிகுந்தவர். தமிழறிஞர்களிடம் அவர் மிகுந்த நேசம் கொண்டிருந்தார்; அவர்களை அரவணைத்து உதவுவார். டாக்டர் உ.வே.  சாமிநாத அய்யர் எழுதிய “நான் கண்டதும், கேட்டதும்” என்னும் நூலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஓலைச் சுவடிகளை, புத்தகங்களாகப் பதிப்பித்த அண்ணல் அவர். அவர் பணி சிறக்க, இரண்டு வில் வண்டிகள் நிறைய ஓலைச் சுவடிகளை இருதாலய மருதப்பதேவர்  வழங்கியுள்ளார். “ஊத்துமலை ஜமீன்தார்கள் கலைகளை மட்டுமன்றி, தமிழ் அறிஞர்களையும் போற்றி வந்தனர்.

இவர்களது அரண்மனையில் அதிகமான ஓலைச்சுவடிகள் உள்ளன. நான் முதல் முதலில் இருதாலய மருதப்ப தேவரை அரண்மனையில் சந்தித்தபோது அவர் வேட்டைக்காரர் கோலத்தில் இருந்தார்’’ என்றும் “மன்னர் மருதப்பர், தினமும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடிப்பார். பாலை பருகி 6 மணிக்கெல்லாம் பரிவாரங்களுடன் நகர் உலா செல்வார். யானை, குதிரை, காளை  கட்டுமிடங்களை நேரடியாக பார்வையிடுவார். அவரால் அமைக்கப்பட்ட இருபுறமும் மரங்கள் சூழ்ந்த சாலையைப் பார்வையிட்டுக்  கொண்டே உலாவுவார். காலை 8 மணி முதல் 10 மணி வரை தமிழ்ப் புலவர்களுடன் கலந்துரையாடுவார். காலை 10 மணிக்கு மேல் அரண்மனை கச்சேரிக்கு சென்று சமஸ்தான பணிகளை கவனிப்பார். மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 2 மணிக்கு தமிழ் நூல்களைப் படிக்க உட்காருவார். தொடர்ந்து மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை சமஸ்தான வேலைகளில் ஈடுபடுவார். பின்னர் தன்னை பார்க்க வந்தவர்களை உபசரித்து பேசுவார். ஓலைகளில் எழுதியுள்ளதை அவர்கள் நீட்டுவார்கள். அவற்றை படித்து பார்த்து  மறுநாள் தனது கருத்தை  சொல்வார். மாலையில் நல்ல பாடல்களை இசைக்கச் செய்து ஆலய வழிபாடு மேற்கொள்வார். வெளியூரில் இருந்து வந்த விருந்தினர்களை அவரே கோயிலுக்கு அழைத்து சென்று  மரியாதை செய்து பிரசாதம் வழங்கி கவுரவிப்பார்” என்றும் தனது நூலில் உ.வே.சா.  குறிப்பிட்டுள்ளார்.

கோயில்களில் கவி பாடவும், ஓலைச்சுவடிகளை எழுதவும் கவிராயர்களை இருதாலய மருதப்பர்  பணியமர்த்தினார். சங்கர நமச்சிவாயர் என்னும் புலவரை நன்னூலுக்கு உரை எழுதச்செய்தார். மாதம் ஒன்றுக்கு நான்கு கோட்டை நெல்லும், தினந்தோறும் ஒருபடி பாலும் அவருக்கு சன்மானமாக வழங்கப்பட்டது. இவரைக்கொண்டே தொல்காப்பியத்துக்கும்  ஊத்துமலை ஜமீன்தார் உரை எழுதவைத்தார். அந்த உரை திருவனந்தபுரம் அரசு காப்பகத்தில் தற்போதும் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. சைவத்தையும் வைணவத்தையும் ஒருங்கே கருதிய மருதப்பர், அகரம் என்ற நகரில் மனக்காவல் ஈஸ்வரர், சிவகாமியம்மைக்கு பெருங்கோயிலை கட்டியுள்ளார் என்கிறார்  டாக்டர் ராஜையா.

ஊத்துமலை ஜமீன் வருவாய் தரக்கூடிய 52 கிராமங்களை உள்ளடக்கியது. அதில் கீழப்பாவூர், மேலப்பாவூர் கிராமங்களில் 272 ஏக்கர் நிலம் ஜமீன்தாருக்கு சொந்தமாக இருந்தது. இந்த இடங்களை வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணசாமி கோயிலுக்கு எழுதி வைத்தார். அப்போதைய  நிலவரப்படி ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், வெள்ளிப் பொருட்களையும் கோயிலுக்கு அளித்தார். இவரைப் போற்றி 344 பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியுள்ளார். ஒரு சமயம் மருதப்பத்தேவர் கழுகுமலை முருகனை தரிசிக்க நடந்து சென்றார். அப்போது பயணம்  எளிமையாக அமைய காவடிச்சிந்து பாடல்களை அண்ணாமலை ரெட்டியார் பாடியவாறு கூடவே சென்றார். இப்பாடல்களை புலமை  படைத்த ஊத்துமலை மன்னரே இயற்றியதாக ஒரு கருத்து உள்ளது என்கிறார் எழுத்தாளரும், தென்காசி அரசு வக்கீலுமான மருது பாண்டியர்.  இப்பாடல்களை நூலாக வெளியிட்டார் மருதப்ப மன்னர். இந்த காவடிசிந்து ஐ.நா சபையில் இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலெட்சுமியால் பாடி கூடுதல் பெருமை பெற்றது. இந்நூலில் அரண்மனையின் அலங்காரத்தைப் பற்றியும், மருதப்பரின் செல்வச் செழிப்பான வாழ்க்கை  மற்றும் இறைபக்தி பற்றியும் வர்ணித்து எழுதப்பட்டுள்ளது.

ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியை அடுத்து கோயிலைச் சுற்றி வரும்போது சுவாமி வாகனங்களைக் காணலாம். பொதுவாக கோயில்களில் காணப்படும் மரத்தால் செய்யப்பட்ட வாகனங்கள்போல் இல்லாமல், இங்கு செப்பு உலோகத்தால் செய்யப்பட்ட தேர், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. இவை ஜமீன்தார்கள் கோயிலுக்கு தானமாக அளித்தவை. கோயில் வெளிபிராகாரத்தில் தற்போது ஆஞ்சநேயர், நவகிரக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.12.09.1891 அன்று மருதப்பர் இப்பூவுலகை நீத்தார். மனம் கலங்கிய ராணியார் செய்வதறியாமல் தவித்தார். கணவரின் நோக்கத்தை ஈடேற்றவேண்டும் என்று உறுதி பூண்டார். நவநீத கிருஷ்ண சுவாமியின் அருளோடு அவர் ஆட்சி பொறுப்பை ஏற்க முன்வந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் கணவனை இழந்தவர் அரசாட்சி செய்ய முடியாது என்று ஒரு சட்டம் இருந்தது. மகாராணி, கணவர் இருதாலய  மருதப்ப தேவர் போல மாவு பொம்மை ஒன்றைத் தயார் செய்தார். அவர் உயிரோடு இருந்தபோது மேற்கொண்டிருந்த அலங்காரங்களை  தினமும் அந்தச் சிலைக்குச் செய்தார். ராஜதர்பாரில் அந்த  பொம்மையை ராஜாவாக நிறுவி அதன் காலை தொட்டு வணங்கிய பின்னரே தனது அன்றாட செயல்களைத் தொடங்கினார். மருதப்பர் விட்டுச்சென்ற பணிகளை எல்லாம் சிரமேற்கொண்டு செய்தார். கோயிலுக்கு அருகே பொதுமக்களுக்காக கிணறு ஒன்றை வெட்டினார். அன்ன சத்திரம் அமைத்தார். கோயில் வளர்ச்சிக்காக, வீரகேரளம்புதூர், கலிங்கம்பட்டி, வடக்கு கிருஷ்ணபேரி (ம) ராமனூர், ராஜகோபாலபேரி, அச்சங்குன்றம், மேலகிருஷ்ணபேரி, முத்துகிருஷ்ணபேரி ஆகிய ஏழு  கிராமங்களை இணைத்தார். (இதுகுறித்த கல்வெட்டு கோயில் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.)

மருதப்பர் உயிரோடு இருப்பதாகவே பாவித்து அந்த மாவு பொம்மையுடன் அரசாட்சி செய்தார் ராணி. தற்போது 150 வருடங்களை தாண்டியும் அந்த மாவு பொம்மை ஜமீன்தாரின் வாரிசான பாபுராஜ் என்ற மருதுபாண்டியரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்படி,  இருதாலய மருதப்ப தேவர் இன்றும் தம்முடன் வாழ்வதாகவே ஜமீன் வாரிசுகள் நம்புகின்றனர்.

நவநீத கிருஷ்ணன் கோயில் ஜமீன் நிர்வாகத்தின் கீழ் இருந்தாலும் அனைத்து சமுதாயத்துக்கும் மண்டகப்படி உண்டு. கோயிலில் பங்குனி உத்திர திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். முதல்நாள் திருவிழாவை பிராமண சமூகத்தினரும், இரண்டாம் நாள் யாதவர் சமூகத்தினரும், 3வது நாள் பிள்ளைமாரும், 4வது நாள் கர்ணம் வகையாறாக்களும், 5வது நாள் நாச்சியார் என்னும் அரண்மனை பெண்களும், 6வது நாள்  வீராணம் தேவர் இனத்தவர்களும், 7வது நாள் சின்ன புலியப்ப தேவர் வகையறாக்களும், 8வது நாள் ஜமீன் உறவினர்களும், 9வது நாள்  தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும், 10வது நாள் சேனை தலைவர் சமுதாயத்தினரும் நடத்தி வருகின்றனர். தேர்த்திருவிழா மிக விமர்சையாக  நடக்கும். முதலில் ஜமீன்தார் வடம் பிடித்து இழுத்த பின்னரே தேரோட்டம் நடக்கும். வானில் கருடன் வட்டமிட்ட பிறகே தேரை வடம் பிடித்துக்கொடுப்பார் ஜமீன்தார். தேரடி முக்கில் ஒரு காவல் தெய்வம் உள்ளது. இந்த தெய்வத்துக்கு அசைவப் படையலும் உண்டு. மழை பொய்த்தால் ஜமீன்தார் தலைமையில் இந்த தெய்வத்துக்கு பூஜை நடக்கும். உடனடியாக மழைபொழியும் அதிசயமும் நடந்துள்ளது.

நவநீத கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெறும். அதுசமயம் ஆலயத்தில் வேலை செய்யும் அனைவரும் கோயில் நிர்வாக அதிகாரி தலைமையில் அரண்மனைக்கு சென்று மேளதாளத்துடன் ஜமீன்தாரை அழைத்து வருவர். சரியாக நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணர் அவதரித்த நேரத்தில் முதல் தரிசனம் ஜமீன்தாருக்குத்தான். அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து, சீடை,  அப்பம், வெண்ணெய், அவல், பொரி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். அதன் பிறகே மற்றவர்கள் தரிசனம் செய்வர். அன்றைய தினம்,  குருவாயூரில் இருப்பது போலவே சிறப்பு அலங்காரத்தில் குழந்தையாக நவநீத கிருஷ்ணன் காட்சியளிப்பார். இங்குள்ள உற்சவர் ராஜகோபாலன், ருக்மணி, சத்யபாமா சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டவை.  சரஸ்வதி பூஜையின்போது வீரகேரளம்புதூரில் உள்ள  முப்பிடாதி அம்மன், உஜ்ஜயினி மாகாளி அம்மன், கருமேனி அம்மன் கோயில்களில் கொலு வைப்பார்கள். மூன்று அம்மன்களும் சப்பரத்தில்  பவனி வருவர். அன்று ராஜகோபால சுவாமி பரிவேட்டைக்கு சப்பரத்தில் புறப்படுவார். அன்றும் ஜமீன்தார் வந்து துவக்கி வைத்த பின்னரே  சப்பரம் புறப்படும்.

இருதாலய மருதப்ப தேவரையும், அவருக்கு பிறகு அரியணை ஏறிய ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரையும் ஜமீன் சுப்பையா தேவர்  கடவுளாகவே கருதினார். சிற்றாற்றின் கரையில்  இருதாலய ஈஸ்வரர் என்ற பெயரில் ஒரு சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு இருதாலய மருதப்பர் என்றே  பெயர்! கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள சிவபெருமான் மருதப்ப தேவராகவே வணங்கப்பட்டு வருகிறார். தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் சந்நதி கருவறையில் ராணி மீனாட்சி சுந்தர நாச்சியாரின் சிலை உள்ளது.  இருவரையும் வணங்குவது போல எதிரே  உள்ள தூணில் சுப்பையா தேவர் சிலை காணப்படுகிறது.

இந்தச் சிறிய கோயிலில் நவகன்னிகள், நந்தியம்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் உள்ளன. இக்கோயிலில் பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.ஜமீன்களின் சீரிய ஆன்மிகப் பணியைப் பறைசாற்றும் வகையில் கோமதி அம்மனை ஜமீன்தார் தனது மகளாக பாவித்து வழிபடும் திருவிழா நடைபெறுகிறது. பொதுவாக ஒரு பெண் தெய்வத்தை அன்னையாக பாவிப்பது வழக்கம்; ஆனால், மகளாக பாவித்து நடத்தப்படும் இந்த அதிசய வழிபாடு நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கர நாராயண சுவாமி கோயிலில் நடக்கிறது.
அந்த விவரம் அடுத்த இதழில்.
ஊத்துமலை

சங்கடங்கள் தீர்ப்பார் சங்கரநாராயணர்

ஊத்து மலை ஜமீன்தாரின் ஆன்மிக திருப்பணிக்கு மற்றொரு சான்று, சங்கரன் கோயில் ஆடிதபசு திருவிழா. ஜமீன்தார்கள் இந்த திருவிழாவின்போது கோமதி அம்மனை தங்கள் வீட்டில் பிறந்த மகள் போலவே எண்ணி,  சீதனபொருட்களுடன் மாப்பிள்ளை சிவனை நோக்கி காத்து இருப்பார்கள். பரம்பரை பரம்பரையாக ஊத்துமலை ஜமீன்தார் இதற்கான மண்டகப்படி நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில்  தென்காசி காசி விஸ்வநாதர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு இணையான  பெரிய கோயில்
களில்  சங்கரன் நயினார் கோயிலும் ஒன்றாகும். இந்த தலத்துக்கு பூகைலாயம், புன்னைவனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், கூழைநகர் என்ற பெயர்களும் உண்டு.



சங்கரன் கோயில் ஐம்பூதத் தலங்களில் ஒன்றான மண்தலம் ஆகும். இந்தக் கோயில் தலபுராணம் சீவல மாறபாண்டிய மன்னரால் எழுதப்பட்டது. முதல் ஆறு சருக்கங்கள் ஊத்து மலைச் சமஸ்தான வித்துவான் புளியங்குடி முத்துவீரப்பக் கவிராயரால் 1913ம் ஆண்டு இயற்றப்பட்டது. இப்புராண சுருக்கத்தினை சேத்தூர் மு.ரா.அருணாசலக் கவிராயர் எழுதியுள்ளார். “முத்து வீரப்பக்கவிராயர் பிள்ளைத்தமிழ்” இத்தலத்திற்காக இயற்றப்பட்ட அற்புதமான நூலாகும். இவர் ஊத்துமலை சமஸ்தான வித்துவானாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கரனார் கோயில் முகப்பில் 124 உயரமுள்ள ஒன்பது நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தின் உச்சி தெற்கு வடக்காக 56 அடி நீளம். கீழ்மேல் அகலம் 15 அடி. உச்சியிலுள்ள கலசம்  ஏழடி நான்கு அங்குலம். நகரில் எங்கிருந்து பார்த்தாலும் இந்த கோபுரம் தெரியும். சங்கர லிங்கப் பெருமானுக்கு வன்மீக நாதர், சங்கரமூர்த்தி, வாராசைநாதன், வைத்தியநாதன், சீராசைநாதன், புன்னைவனநாதன், கூழையாண்டி என்று பல திருநாமங்கள். கோமதியம்மன், ஆவுடையம்மாள் என்றழைக்கப்படுகிறாள். ஆ என்றால் பசு. உலக ஜீவராசிகளை பசுக்கள் என்று சொல்வார்கள். அந்த ஜீவன்கள் அனைத்தையும் அரவணைத்துக் காக்கும் அன்னை இவர். இந்த அம்மனைக் கொண்டாடும் ஆடித்தபசு திருநாளில் கோமதியம்மாளின் தாய் வீட்டு சீதனத்தினை கொண்டு வரும் பெரும் பாக்கியத்தினை ஊத்துமலை ஜமீன் குடும்பத்தார் பெற்றுள்ளார்கள். இதற்காக ராஜ அலங்காரத்தில் வீரகேரளம் புதூர் நவநீத கிருஷ்ணன் கோயிலிலிருந்து கிளம்புவார்கள். நவநீத கிருஷ்ணன் யார்?

கோமதியம்மாளின் தமயன்தானே! இந்த ஆடித்தபசு திருவிழா எப்படி உருவானது? ஒரு காலத்தில் சங்கரன்கோயிலில் புதர்கள் மண்டியிருந்தன.  காடுகளாக இருந்தது. இப்பகுதியில் வாழ்ந்துவந்த காவற் பறையன், கோயிலில் மண் தோண்டியபோது புற்று ஒன்றில் மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டது. அப்போதைய தென்பாண்டி சீமையின் அரசன் உக்கிர பாண்டியன், தன் ஆட்சி எல்கைக்குள் இருந்த புன்னைவனக் காட்டில் ரகசிய சுரங்கப்பாதை  அமைத்து, அதன்வழியாக மதுரை சென்று சிவனை வணங்கி வந்தார். ஒருநாள் அவரது கனவில் சிவன் தோன்றி, “இனி நீ என்னைத் தேடி மதுரை வரவேண்டாம். புன்னை வனத்திலுள்ள புற்றுகளை அகற்றி விட்டு அங்கு ஆலயம் அமைத்து வணங்கு,” என்று அறிவுறுத்தினார். மறுநாள் காவற் பறையன் அரசனிடம் புற்றில் இருந்து ரத்தம் பீறிட்ட சம்பவத்தினைக் கூறினான். தன் கனவுக்கு ஏதோ சங்கேத அறிகுறி அமைவது கண்டு, ரத்தம் பீறிட்ட இடத்துக்கு வந்தார். அங்கிருந்த பாம்புப் புற்றுகளை அகற்றி மண்ணைத் தோண்டச் செய்தார். அப்போது பூமிக்குள்ளிருந்து இரு நாகங்கள் (சங்கன், பதுமன்) குடைபிடிக்க அங்கே சங்கரலிங்கம் பிரசன்னமானார். ஆண்டவன் கட்டளைப்படி அங்கே மன்னன் எழுப்பிய ஆலயம்தான் சங்கரநாராயணன் ஆலயம்.

நாகங்களில் ஒருவரான சங்கன் சிவபக்தர்; பதுமன் விஷ்ணு பக்தர். இருவருக்குமிடையே சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்று எப்போதும்  விவாதம் நடக்கும். சிவபெருமான் அவர்களின் சந்தேகம் தீர்க்க இருவரையும் பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார். இதே சந்தேகம் உமையாளுக்கும் ஏற்படவே, அவளையும் பூலேகத்தில் அவதரிக்கச் செய்தார். பூமியில் கோமதியாகப் பிறந்த அம்பிகை,  சிவனை எண்ணிப் பல ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அம்மையின் தவத்திற்கு இரங்கி சிவபெருமான் ஆடித்திங்கள், பௌர்ணமி, உத்திராட நட்சத்திரமும் கூடிய நன்னாளில் நாராயணமூர்த்தியுடன் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சி தந்தார். இந்நாளே ஆடித்தபசு திருநாள். “சிவனும் நானே, விஷ்ணுவும் நானே” என்று ஈஸ்வரன் உரைத்த நாள். சங்கன், பதுமன்  இருவரும் சமரசமாகி முக்தியடைந்தனர்.      
இந்த தபசுத் திருநாளில் லட்சக்கணக்கான மக்கள் பக்திப் பரவசத்துடன் கூடுகிறார்கள். விவசாயிகள் தங்கள் விளைச்சல் பெருக வேண்டி, விளைபொருட்களை சப்பரம் மீது தூவி வேண்டிக்கொள்கின்றனர். அன்றைய தினம்     கோமதி அம்மைக்கும், சங்கரனாருக்கும் திருமணம் நடைபெறுவது காண்கொள்ளா காட்சியாகும்.



பரிவாரங்களுடன் சங்கரன் கோயிலுக்கு  வரும் ஜமீன்தார் அம்பாளை வணங்கி நிற்பார்கள். அதன்பின் அம்பாளை தங்க சப்பரத்தில் அழைத்து வருவார்கள். அப்போது அவருக்கு பிறந்த வீட்டு சீதனமாய் அழைப்புச்சுருள் வைக்கப்படும். அலங்கார சாமான்களுடன் ஜவ்வாது, சந்தனம், விபூதி பைகள், எலுமிச்சை பழமாலை, பட்டு பரிவட்டம், சவுரிமுடி, புஷ்பவகை மற்றும் இதர பொருள்களுடன் கோயிலுக்குள் ஜமீன்தார் பரிவாரங்கள் புடைசூழ செல்வார். பிறகு அம்மனுக்கு தபசு அலங்காரம் செய்து, ஜமீன்தார் முன்செல்ல கோமதியம்மன் வீதிஉலா வருவார். “ஊத்துமலை ஜமீன் தபசு மண்டபத்தில் தங்க சப்பரத்தில் ஆவுடையம்மை, உமையம்மையாக தவம் இயற்றுவார். மாலையில் அம்பாள் தங்கச்சப்பரத்தில் சுவாமியை வலம் வந்து தவப்பயன் அடைவார். அதன்பின் மாலை மாற்றுதல், பரிவட்டம் கட்டுதல், திருக்கண் அலங்கரித்தல் போன்றன நடைபெறும். இவற்றை ஊத்துமலை ஜமீன் வாரிசுகள் முன்னின்று  நடத்துகிறார்கள். தபசு காட்சியின்போது பரிவட்டம் கட்டி ராஜதோரணையில் ஊத்துமலை ஜமீன்தார் நிற்க ஒருபுறம் அம்பாள் சப்பரமும், மறுபுறம் சுவாமியின் சப்பரமும் நிற்கும். ஜமீன்தார் பரிவட்டம் கட்டிக்கொண்டு கோமதியம்மாளின் தாய் வீட்டு சீதனத்தோடு அந்த இடத்தில் எளிமையாகக் காத்திருக்கிறார். தற்போது ஜமீன்வாரிசு பாபுராஜ் என்ற மருதுபாண்டியர் இந்த மண்டகப்படியை முன்நின்று நடத்துகிறார்.

மறுநாள் கோமதி அம்பாள் சப்பரத்தில் பட்டிணப் பிரவேசம் செல்வார். இதற்குத் தேவையான புஷ்ப அலங்காரம் செய்து வீதி உலா வந்து அம்பாளை கோயிலில் கொண்டு சேர்க்கிறார் ஜமீன்தார். மூன்று நாட்களும் எண்ணெய்க் காப்பு நிகழ்ச்சிக்குப்பின் பள்ளியறைச் சிறப்பு மண்டகப்படியையும் இவரே செய்கிறார். இதற்காக நிறைக்குடமாக பசும்பால், தேங்காய் பருமன் உள்ள லட்டு, தோசைக்கல் அளவு தேன்குழல், அதிரசம் மற்றும் கனி வர்க்கங்கள், புஷ்பங்கள் வைத்து பூஜிப்பார்கள். அம்பாள் தவப்பயன் அடைந்து தபசு மண்டபத்துக்கு வந்ததும் ஊத்துமலை ஜமீன்தார் அனைவருக்கும் பாகுபாடு இன்றி சுருள் பிரசாதம் வழங்குவார். மதியம் அன்னதானம்  நடைபெறும். கோயிலில் சங்கரநயினார், கோமதியம்மாள், சங்கரநாராயணர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். பிரசாதமாக வழங்கப்படும் புற்றுமண் தேள், பாம்பு போன்ற விஷக்கடிகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சிரங்கு போன்ற சரும நோய்களுக்கு புற்றுமண்ணை நீரில் கரைத்துத் தடவுகிறார்கள். உடனே நோய் தீருகிறது. வயிற்றுவலி, சீதபேதி போன்ற நோய்களுக்குப் புற்றுமண் கரைத்த நீரை அருந்தி குணமடைகிறார்கள். உடலில் கட்டி உபாதை கொண்டவர்கள் மாவிளக்கு எடுத்து கோமதியம்மாளை வணங்கி நோய் நீங்கிச் செல்கிறார்கள்.



இக்கோயில் நாகதோஷம் நீக்கும் தலமுமாகும். இங்குள்ள திருக்குளம் “நாகசுனை” என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் நீர் எப்போதுமே பச்சை நிறமாகக் காணப்படுகிறது. இதில் நாக பாஷாணம் கலந்துள்ளதால்தான் இந்த நிறம் என்கிறார்கள். விஷக்கடிக்கு ஆளானவர்கள் இக்குளத்தில் நீராடி தோஷம் நீங்கி நலம் பெறுகிறார்கள். இத்திருக்குளத்தை எத்தனை முறை தூர்வாரிச் சுத்தப்படுத்தினாலும் நீரின் நிறம்  மட்டும் மாறுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது, தவம் மேற்கொண்ட அம்பிகையின் வண்ணமே என்றும் கருதுகிறார்கள்.

மார்ச், செப்டம்பர் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் அதிகாலை 6 மணிக்கு சூரிய ஒளி லிங்கத்தின் மீது பாய்கிறது. இந்த கோயிலில் பிரதான வாசல் வழியாக நேரடியாக லிங்கத்தின் மீது இவ்வாறு ஒளி படர்வது சூரியனே சிவனை வழிபடுவதுபோல அமைகிறது. கோயிலின் உள்ளே புலித்தேவன் குகை உள்ளது. இந்த புலித்தேவனுக்கும் ஊத்துமலை ஜமீனுக்கும் நிறைய தொடர்பு உண்டு. புலித்தேவன் நெல்கட்டும் செவல் ஜமீன்தார். இவர் தமிழகத்தில் வெள்ளையர் ஆதிக்கத்துக்கு  எதிராக  தென்தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தவர். கடும்போரில் இவரை வென்ற வெள்ளையர்கள் இக்கோயில் வழியாக இவரை அழைத்துவந்தனர். அப்போது கடைசி ஆசையாக ஆலய தரிசனம் செய்ய விரும்பியதாகப் புலித்தேவன் கூறினாராம். இதையொட்டி கோயிலுக்குள் சென்ற பூலித்தேவன் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டாராம். இங்குள்ள ரகசிய குகை வழியாக அவர் தப்பித்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த இடம் தற்போது பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப்போருக்கு முதல் வித்தை ஊன்றிய மாவீரன் புலித்தேவன் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர் ஊத்துமலை ஜமீன்தார் எஸ்.எம். பாண்டியன். மாவீரனின் மறைந்த வரலாற்றை வெளியே கொண்டுவர பல முயற்சி செய்தவர். மன்னன் புலித்தேவன் பற்றி ஏராளமானோர் புத்தகம் எழுதியுள்ளனர். ஆனாலும் நெல்கட்டும் செவலில் கோட்டையும், சிலையும் உருவாக மூலகாரணமாக செயல்பட்டவர் இவர்தான்.