Tuesday, May 31, 2016

சிலப்பதிகாரம் கூறும் மறவர்கள்

இலக்கியவாதிகளும் சரி வரலாற்று ஆசிரியர்களும் சரி நடுநிலைமை என்றால் என்ன விலை என்றே கேட்பார்கள் போல. சிலப்பதிகாரத்துக்கு ஆளுக்கு ஆள் உறை எழுதி தள்ளுபவர்கள் இதில் மறவர்கள் எந்த பகுதியில் குறிப்பிடபடுகிறார்கள் என்றால் வேட்டுவ வரியாம். அந்த வேட்டுவ வரியில் விளிம்பு நிலை மக்களாக மறவர்களும் எயினர்களும் குறிப்பிடபடுகிரார்களாம். விளிம்பு நிலை மக்கள் கொலை,கொள்ளையில் ஈடுபடுகின்றனராம். அப்போது வேறு எந்த இடத்திலும் மறவர்களை பற்றி குறிப்பிடபடவில்லை அப்படித்தானே.

சேர மறவர்
---------------
பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்?
சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)
மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல்
கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு
சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு
புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்


இதன் பின்பு வலைதள இலக்கியவாதிகளும் ஒருவர் எடுத்த வா... யை போலவே மற்றவர்களும் கொட்டதொடங்கி வேட்டுவரி என  எழுதினர். இதைப்பார்த்து ஆர்வம் முற்றிய எலிவேட்டை புலையனும் தன்னை தான் குறிப்பிடுகின்றது என எழுதி கொண்டு திரிகின்றனர் வலை தலம் தோறும்.திரிகின்றனர். அந்த மக்களை பற்றி வேறு இடத்தில் குறிப்பிடுவதையும் இங்கு சுட்டப்போகின்றோம்.


உண்மையில் சிலப்பதிகாரம் கூறும் மறவர்கள் யார் அவர்கள் வேட்டுவ வரியில் மட்டும் தான் குறிப்பிடுகின்றனரா அல்லது மூவேந்தருடன் தொடர்பு படுத்தி குறிப்பிடுகின்றதா என பார்ப்போம் சிலப்பதிகாரமும் விளக்கங்களுடன்.

சிலப்பதிகாரத்தில் கரந்தை மறவர் வெட்சி மறவர் என இருவரை குறிப்பிடுகின்றனர். அதில் கரந்தை மறவர்கள் சேர,சோழ,பாண்டியர் படையில் இருப்பதாகவும் ஒரு சில வெட்சி மறவர்கள் காணகத்தில் இருப்பதாகவும். அக்காணகமும் புகாரிலிருந்து மதுரை செல்லும் பாதையில் இருப்பதாகவும். அது இன்றைய புதுக்கோட்டை பகுதியாகும். இன்றும் மறவர்கள் கொற்றவைக்கு எருமைபலி கொடுப்பதாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

மறவர் என்றால் வீரரா இல்லை இனமா?

வீரர் என்னும் வார்த்தை சங்க இலக்கியத்தில் இல்லை அதற்க்கு பதிலாக மறவர் என குறிப்பிடுகின்றனர் என கூறும் அறிவிலிகள் மறவர் என்பது வீரர் என்பது மட்டுமல்ல அது ஒரு இனக்குழு. மறவர் அல்லாத வீரர்களும் பல இடத்தி ஏன் சிலப்பதிகாரத்திலே வருகின்றன அதை கோடிட்டு காட்டி வீரர்கள் பலவகை
ஆணால் மறவர்கள் என்போர் போரை மட்டுமே குலத்தொழிலாக கொண்ட அடலேறுகள் என தெரியவரும்


(எ-டு):1

கடலோடு காதையில் விஞ்சை வீரன் என்பவன் குறிப்பிடபடுகின்றான் இவனை விஞ்சை மறவன் என குறிப்பிட படவில்லை விஞ்சை வீரன் என குறிப்பிடபடுகின்றான்.

கடலாடு காதை
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன் 
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்
5
(எ-டு):2
கடலோடு காதையில் 170 இல் வீரான் ஆகலின் விழுமம் என ஒரு வீரனை பற்றி கவுந்தி அடிகள் குறிப்பிடுகிறார்.

சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்: 170

(எ-டு):3

அதே கால்கோட்டு காதையில் வீரரை பற்றியும் வாள் மறவரையும் பற்றி குறிப்பிடுகின்றனர். எனவே வீரன் வேறும் வாள்வரி மறவன் வேறு.
 கால்கோட் காதை
யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கித்
தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும்

12. அழற்படு காதை

ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுரா பதியென்.

வீரம் கொண்ட பத்தினியால் மதுராபதியை எரிக்க தோன்றினால்.

மேலே குறிப்பிட்ட மூன்று ஆதாரத்திலும் றவர் வேறு வீரர் வேறு என நிருபணம் ஆகின்றது. எனவே மறவர் என்பது இனக்குழுவே அன்றி பன்பு பெயர் கிடையாது. இனி எந்த முட்டாளும்  பேசுவதற்கு அருகதை யில்லை.

சிலப்பதிகாரம் முழுவதும் வரும் கரந்தை மறவர்கள்.

சிலப்பதிகாரத்தில் மறவர்களை வேட்டுவரியை காட்டிலும் வேந்தர் சூழ் படைகளிலே அதிகமாக விளக்கியுள்ளனர்.

மறவர்களை பற்றி புகார் நகரில் கரிகால் வளவனுடன் இந்திரவிழா தொடங்கி கொற்றவை பலியில் கடந்து மதுரை பாண்டியன் இறந்து மதுரை காவலை விட்டு மறவர்கள் நீங்கியது வரை அதன் பின்பு சேரன் செங்குட்டுவனுடன் சென்று ஆரியவேந்தரை வென்று  கண்ணகிக்கு சிலை எடுத்து இமயத்தில் வில் பொறித்தது வரை மறவரின் குறிப்புகளை வெளியிடுகின்றோம்.

கல்வெட்டுகளிலும் பிற்கால சரித்திர குறிப்புகளிலும் மறவர்கள் வேட்டையை குலதொழிலாக செய்ததில்லை.

வளரி என்னும் ஆயுதம் மறவர்,கள்ளர் மட்டுமே பயன்படுத்தும் ஆயுதம் .இது வேட்டைக்கும் போருக்கும் பயன்பட்டதே தவிர மறவர்கள் போரையும் காவலையும் தவிர வேறு தொழில் செய்ததில்லை 


கரந்தை மறவர் பற்றிய குறிப்புகள்:

கரிகால் சோழனுடன் இந்திரவிழா கொண்டாடிய மறவர்:

5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை

பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்

ருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக் 80



யானைவீரரும்  தேர்வீரரும் மறவரும் சூழ்ந்தனர் பட்டின விழாவான இந்திரவிழாவுக்கு.


25. காட்சிக் காதை

தரும வினைஞருந் தந்திர வினைஞரும்
மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப்
பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின்
மறமிகு வாளும் மாலைவெண் குடையும்
புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப்

வாள் ஏந்திய மறவர்கள் காக்கும் பாண்டியன் அரண்மனை.

ஆடியல் யானையும் தேரும் மாவும்
பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பிற்
பாடி யிருக்கைப் பகல்வெய் யோன்றன்
இருநில மடந்தைக்குத் திருவடி யளித்தாங்கு
அருந்திறல் மாக்கள் அடியீ டேத்தப் 90

யன்னைபடையும் பீடுகெழு மறவர்களும் ஒன்று சேர்ந்தனர்.

கச்சை யானைக் காவலர் நடுங்கக்
கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக
ஆளழி வாங்கி அதரி திரித்த
வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தித்
தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி

       கச்சை யானைக் காவலர் நடுங்க - கழுத்திடு கயிற் றினையணிந்த யானைகளையுடைய அரசர்கள் நடுங்குமாறு, கோட்டுமாப் பூட்டி-கோட்டினையுடைய களிறுகளை எருதாகப் பூட்டி, வாள் கோலாக - வாளே கோலாக, ஆள் அழி வாங்கி அதரி திரித்த - ஆளாகிய போரை இரங்கவிட்டுக் கடாவிட்ட, வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி - வாளாகிய ஏரினை யுடைய உழவனாகிய செங்குட்டுவனது போர்க்களத்தை வாழ்த்தி, தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி - வீர வளை யணிந்த பெரிய கைகளை அசையுமாறு தூக்கி, முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்தி - முடியணிந்த கரிய தலையை முற்பட ஏந்திக்கொண்டு, கடல்வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் இலங்கையில் எழுந்த சமரமும் கடல்வணன் தேர்ஊர் செருவும் பாடி - கடல் போலும் நீல நிறமுடைய கண்ணன் கடலின் வயிற்றைக் கலக்கிய போரும் கடலை அகழியாகவுடைய இலங்கையிற் புரிந்த போரும் பாண்டவர்பொருட்டுத் தேரூர்ந்த போரும் ஆகிய மூன்றையும் பாடி, பேரிசை முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி - பெரும் புகழுடைய முதல்வனை முன்றேர்க் குரவையிலே பாடி வாழ்த்தி, பின்தேர்க் குரவை பேய் ஆடு பறந்தலை - பின்றேர்க் குரவையிலே பேய் ஆடுகின்ற மறக்களத்தில்;




தரும வினைஞருந் தந்திர வினைஞரும்
மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப்
பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின்
மறமிகு வாளும் மாலைவெண் குடையும்
புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப்

றஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாக் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
மறையோ ரேந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
கடக்களி யானைப் பிடர்த்தலை யேரினன்

யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கித்
தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும் 80



அழற்படு காதை
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்

தீமுகங் கண்டு தாமிடை கொள்ள

       காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - பரிக்கோலினராய யானைப்பாகரும் குதிரைப்பாகரும் விரையுந் தேர்ப்பாகரும் வினை வாய்த்த வாள் வீரரும் தம்முட் கலந்து மிக்கு,கோ மகன் கோயில் கொற்ற வாயில் - மன்னனது அரண்மனையின் வெற்றியினையுடைய வாயிலின்கண், தீ முகம் கண்டு தாம் மிடைகொள்ள - எரியின் திறத்தினை நோக்கி வந்து நெருங்க ;

மதுரை எரியும் போது மதுரையை விட்டு நீங்கி மறவர்கள்.


இமயத்தில் வெற்றிகொடி நாட்டின சேரன் செங்குட்டுவனும் மறவரும்:

சேரனே மறவர் மன்னன் தான் மறவர்களே சேரனோடு இமயத்தில் கன்னகிக்கு கல்லெடுத்து. மறவரோடு வஞ்சியை நீங்கி சென்றான் வானவன்.


 நீர்ப்படைக் காதை

           [இமயத்தினின்றும் கொண்ட பத்தினிக் கல்லைக் கனக விசயரு டைய முடியின் மீதேற்றிச் சென்று கங்கையாற்றில் முறைப்படி நீர்ப்படை செய்து அதன் தென்கரை சேர்ந்து, ஆரிய மன்னர்களால் ஆங்கண் அழகுற அமைக்கப்பெற்ற பாடியின்கண் செங்குட்டுவன் சேனையுடன் தங்கி, போரிலே வீரங்காட்டித் துறக்கமுற்றோரின் மைந்தர்களுக்கும், பகைஞர்களை வென்ற வீரர்களுக்கும் பொன்னாற் செய்த வாகைப் பூவினை யளித்துச் சிறப்பித்திருந்தனன். இருந்தவன் , கங்கையாடி அங்குப் போந்த மாடலனால் கோவலன் வரலாற்றையும், அவன் கொலையுண்டமை கேட்டுப் புகார் நகரிலிருந்த அவன் தந்தை யும் கண்ணகி தந்தையும் துறவுபூண்டதும், இருவர் தாயரும் உயிர் துறந்ததும் முதலியவற்றையும் நெடுஞ்செழியன் துஞ்சிய பின் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் பாண்டி நாட்டை ஆட்சி செய்து வருவதனையும் சோழனது செங்கோல் திரிபின்றி விளங்குவதனையும் கேள்வியுற்று, அவனுக்குச் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன் தானஞ்செய்து. தன்னாற் பற்றுக்கோட் பட்ட கனக விசயரைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய கஞ்சுக மாக்களை யேவித் தானையுடன் புறப்பட்டுச் சென்று , தன்னைப் பிரிந்து துயிலின்றி வருந்தியிருக்கும் கோப் பெருந் தேவியின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியாற் செறியும்படி வெண் கொற்றக் குடை நிழற்ற யானைமீ திவர்ந்து வஞ்சி நகரத்திற் புகுந்தனன்]


அழற்படு காதை
அரைச பூதத்து அருந்திறற் கடவுளும்
செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்
 மடிந்தோர் மைந்தரும் அணிந்தோரும் பொலிந்த மைந்தரும் கலங்கொண்டோரும் வாண் மறவரும் வருகவென அழைத்துக் கொடுத்தென்க. வாகைப் பொலந்தோடு அளித்தல் வீரர்களின் வீரச் செய்கையைப் பாராட்டியதற்கு அடையாளமாக அளிக்கும் சிறப்பாகும். கொடுக்குநாளைப் பெருநாளென்றார். அமயம் பிறக்கிட-பொழுது போதாதாம்படி. இனி, பிறந்த நாள்வயிற் கொடுக்கும் பொழுது பின்னாகும்படி யென்றுரைத்தலுமாம்.
செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன் - சிவந்த நிறமுடைய ஒட்டற்ற பொன்னையொத்த மேனியையுடையோ னாய், மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசு முடி ஒழிய அமைந்த பூணினன் - நிலை பெற்ற சிறப்பினையும் மறம் பொருந்திய வேலினையுமுடைய அரசர்க்குரிய தலைமை அமைந்த முடி தவிரப் பூண்ட கலன்களையுடையனாய், வாணிக மரபின் நீள் நிலம்

மறவேல் மன்னவன்(செங்குட்டுவன்) மறவரோடு போரிட்டு மாய்ந்த  மன்னர்கள் பலரை கடந்து இமயம் சென்றனர்.


நீர்ப்படைக் காதை

நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர்வாண் மறவர்

        நிறம் சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து - உருச் சிதைந்த கவசத்தோடே மார்பின்கண் புண் மிகப்பெற்று, புறம் பெற வந்த போர் வாண் மறவர் - பகைவர் புறத்தைக் கண்ட வளவிலே மீண்ட போரிற் சிறந்த வாள் வீரரும்.நிறம் இரண்டனுள் முன்னது வடிவு ; பின்னது மார்பு.


நீர்ப்படைக் காதை
நாள்விலைக் கிளையுள் நல்லம ரழுவத்து

வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்
   நாள் விலைக் கிளையுள் - தம் வாழ்நாளை விலையாகத் தரும் மறவருள், நல்அமர் அழுவத்து - நல்ல பொரு களப் பரப்பிலே, வாள் வினைமுடித்து மறத்தொடு முடிந்தோர் - வாளாற் செய்யும் வினையனைத்தையும் செய்து முடித்து வீரத்தோடு பட்டோரும் ;

       நாள்விலைக் கிளை - அரசனளித்த செஞ்சோற்றுக்கும் சிறப்புக்கும் விலையாகத் தம் வாழ்நாளைத் தரும் மறவர். கிளையுள் எனபதனை இடைநிலை விளக்காகக் கொண்டு முன்னும் பின்னுங் கூட்டுக.
கிளைகள் மறவரில் மட்டுமே கானப்படும் என்பது இங்கு நோக்குக

 நீர்ப்படைக் காதை
10
செறிகழல் வேந்தன் றென்றமி ழாற்றல்(தமிழ் ஆற்றல்)

அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை யுண்ட வொன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்

ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபக லெல்லை யுயிர்த்தொகை யுண்ட
செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு

       செறிகழல் வேந்தன் - செறிந்த வீரக் கழலையுடைய சேரவேந்தன், தென்றமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரை - தமிழன் ஆற்றலை அறியாது பொருத ஆரியவர சரை, செயிர்த் தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்ட - கொல்லுந் தொழிலையுடைய கூற்றுவனது தொழில் மிகுமாறு உயிர்க்கூட்டத்தை யுண்ட போர்கள், ஒன்பதிற்று இரட்டியென்று யாண்டும் மதியும் நாளும் கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள - பதினெட்டாகிய யாண்டிலும் திங்களிலும் நாளிலும் நாழிகையிலும் முடிந்தன வென்று கடல்சூழ்ந்த உலகத்தோர் கூட்டியெண்ண, வருபெருந்தானை மறக்கள மருங்கின் - பெரிய சேனைகளோ டெதிர்ந்த போர்க்களத்திலே, ஒரு பகல் எல்லை உயிர்த்தொகை உண்ட செங்குட்டுவன் - ஒரு பகற் பொழுதினுள்ளே உயிருண்ட செங் குட்டுவன் ;

வேந்தனாகிய செங்குட்டுவன் எனக் கூட்டுக. தமிழாற்றல் - தமிழ் வேந்தரின் ஆற்றல், தமிழ் மறவரின் ஆற்றல், தமிழ்நாட்டினரின் ஆற்றல். செயிர் செற்றம் ; துன்பமுமாம். செயிர்த்தொழில் - செயிரை விளக்குந் தொழில். உண்ட - உண்டனவாகிய போர்கள் ; வினைப்பெயர். ஞாலம் ஆண்டு முதலியவற்றுடன் ஒன்பதிற்றிரட்டியைக் கூட்டிப் போர்கள் அவற்றில் முடிந்தனவென் றெண்ண ; தேவாசுர யுத்தம் பதினெட்டாண்டிலும், இராம ராவண யுத்தம் பதினெட்டு மாதத்திலும், பாண்டவ துரியோதன யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனகவிசயரும் செய்த யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தனவென் றெண்ண வென்க

அழற்படு காதை

மறவெங் களிறு மடப்பிடி நிரைகளும்
விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன

       மற வெங்களிறும் மடப்பிடி நிரைகளும் - வலி மிக்க கொடிய ஆண்யானைகளும் இளம் பெண்யானை வரிசைகளும், வினைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன - விரையும் செல வினையுடைய குதிரைகளும் மதிற்புறத்தே சென்றன ;

கால்கோள் காதை5

முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித்
தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச்
சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத்து

அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென
மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன

       முடித்தலை அடுப்பில் பிடர்த்தலைத் தாழி-முடி சூடிய தலையாகிய அடுப்பில் யானையின் தலையாகிய தாழியில் தொடித்தோள் துடுப்பில் துழைஇய ஊன்சோறு - தொடி யணிந்த தோளாகிய துடுப்பினால் துழாவி அடப்பட்ட ஊனாகிய சோற்றை, மறப்பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட-மறம் பொருந்திய பேய் மடையன் பதமறிந்து உண்பிக்க, சிறப்பூண் கடியினம் செங்கோற் கொற்றத்து அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க என-சிறந்த உணவினையுண்ட பேயினங்கள் முறை வழுவா வென்றியினாலே அறக்களஞ் செய்தோன் ஊழிதோறும் வாழ்க என வாழ்த்த. மறக்களம் முடித்த வாய்வாட் குட்டுவன்- போர்க்களச் செய்கையை முடித்த தப்பாத வாளினையுடைய செங்குட்டுவன்;

கால்கோள் காதை

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்

சேரனாகி மறவாள் வேந்தன் போரை முடித்து கணக விஜயரை வென்ற செய்தி.

       தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து - பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தன் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற - போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு ஓவர்கள் தோன்ற

கால்கோள் காதை

75 மாகதப் புலவரும் வைதா ளிகரும்
சூதரும் நல்வலந் தோன்ற வாழ்த்த

யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாண் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கித

 மாகதப் புலவரும் வைதாளிகரும் சூதரும் நல்வலம் தோன்ற வாழ்த்த - சூதரும் மாகதரும் வேதாளிகரும் நல்ல வெற்றி விளங்குமாறு வாழ்த்த, யானை வீரரும் இவுளித் தலை வரும் வாய்வாள் மறவரும் வாள் வலன் ஏத்த - யானை மறவரும் குதிரை வீரரும் கூரிய வாட் படையினையுடைய போர் வீரரும் வாளின் வென்றியை வாழ்த்த, தானவர் தம்மேல் தம்பதி நீங் கும் வானவன் போல வஞ்சி நீங்கி - அவுணர்மீது தம் பதியின் நீங்கிச் செல்லும் இந்திரனைப்போல வஞ்சிப் பதியினின்றும் நீங்கி;

3,கால்கோள் காதை

200
சிலைத்தோ ளாடவர் செருவேற் றடக்கையர்
கறைத்தோன் மறவர் கடுந்தே ரூருநர்
வெண்கோட் டியானையர் விரைபரிக் குதிரையர்
மண்கண் கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள்

 சிலைத்தோள் ஆடவர் செருவேல் தடக்கையர் - வில்லினைத் தோளிற்கொண்ட வீரர் போர்புரியும் வேலினைக் கையிற்கொண்ட வீரர், கறைத்தோல் மறவர்-கரிய கிடுகினைத் தாங்கிய வீரர், கடுந்தேர் ஊருநர் - கடிய செலவினையுடைய தேரினைச் செலுத்துவோர், வெண்கோட்டு யானையர் விரைபரிக் குதிரையர் - வெள்ளிய கொம்புகளையுடைய யானையைக் கடாவு வோர் விரைந்த செலவினையுடைய குதிரையைத் தூண்டுவோர்.

3,கால்கோள் காதை

205 தோளுந் தலையுந் துணிந்துவே றாகிய

சிலைத்தோண் மறவர் உடற்பொறை யடுக்கத்து
எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம்
பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப்
208

       தோளும் தலையும் துணிந்து வேறாகிய - தோள்களும் தலையும் துணிபட்டு வெவ்வேறாகிய, சிலைத்தோள் மறவர் உடற் பொறை அடுக்கத்து - வில்லைத் தோளிற் கொண்ட வீரர்களின் உடற்பாரமாகிய குன்றுகளில், எறி பிணம் இடறிய குறை உடற் கவந்தம் - வெட்டுண்ட பிணத்தால் இடறப்பட்ட தலை யற்ற உடலினையுடைய கவந்தங்கள், பறைக்கண் பேய் மகள் பாணிக்கு ஆட - பறைபோன்ற பெரிய கண்களையுடைய பேய் மகளின் தாளத்திற்கிசைய ஆட

12. அழற்படு காதை
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள

       காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து - பரிக்கோலினராய யானைப்பாகரும் குதிரைப்பாகரும் விரையுந் தேர்ப்பாகரும் வினை வாய்த்த வாள் வீரரும் தம்முட் கலந்து மிக்கு,கோ மகன் கோயில் கொற்ற வாயில் - மன்னனது அரண்மனையின் வெற்றியினையுடைய வாயிலின்கண், தீ முகம் கண்டு தாம் மிடைகொள்ள - எரியின் திறத்தினை நோக்கி வந்து நெருங்க



காணகத்தில் கொற்றவைக்கு  பலியிட்ட வெட்சி மறவர்:

இந்த வேட்டுவ வரியில் குறிப்பிடும் இடம் புகார் பகுதியிலிருந்து மதுரை பகுதி செல்லும் இடம்  புதுக்கோட்டை மாவட்டம் என இந்நாளில்  கூறுகின்றனர். இன்று மறவர்கள் படைக்கும் கொற்றவை  விழா இன்னும் நடக்கிறது இதற்கான ஆதாரம் ஆவணம் இதழே தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புதுக்கோட்டை விராய்சிலையில் மதுஎடுப்பு திருவிழாவும் எருமைபலியும் நடக்கும் கொற்றவை திருவிழா.



வேட்டுவரியில் குறிப்பிடுவது வெட்சி மறவரை,

எயினர் என்போர் யார் என தெரியவில்லை 
எயினருடன் மறவரும் சேர்ந்து கொற்றவையை வணங்கியுள்ளனர். எயினர் சிலர் சில சமூகங்கள் கோறுகின்றனர் இன்னும் யார் என தெரியவில்லை.

இதில் வேட்டுவ மறவர் என பெயர் வரவில்லை எனவே கொங்க வேட்டை புலையனுக்கு இதில் சம்பந்தமில்லை.

வேட்டுவ வரி

10
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்
நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்

       தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கை யெடுத்து ஓச்சிக் கானவர் வியப்ப - மறவர் வியக்கும் வண்ணம் தெய்வத் தன்மையை அடைந்து மெய்ம்மயிர் சிலிர்த்துக் கைகளை எடுத்து உயர்த்தி, இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் நடுவூர் மன்றத்து அடிபெயர்த்து ஆடி - முள்வேலி இடப் பெற்ற மறவர் கூடி ஒருங்கு உண்ணுதலையுடைய ஊர் நடுவில் உள்ள மன்றத்திலே கால்களைப் பெயர்த்து ஆடி

வேட்டுவ வரி
கொற்றவை மதி(நிலவை) சூடியவள். வில்லை ஏந்தியவள் எப்படி இருப்பாள் என்றால்.

மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
        மதியின் வெண்தோடு சூடும் சென்னி - பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியினையும், நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து - நெற்றியினைத் திறந்து விழித்த இமையாத கண்ணினையுமுடைய ;


பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
  பவள வாய்ச்சி - பவளம் போன்ற வாயினையுடையாள், தவள வாள் நகைச்சி - வெள்ளிய ஒளி பொருந்திய நகையினையுடையாள், நஞ்சு உண்டு கறுத்த கண்டி - நஞ்சினை உண்டதனாற் கறுத்த கண்டத்தினையுடையாள் ;

துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி

துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி - நஞ்சு பொருந்தும் துளையுள்ள எயிற்றினையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினையுடையாள்

கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய அரியின் உரிவை மேகலை யாட்டி - யானையின் தோலைப் போர்த்துப் வருத்துந் தன்மையுடைய சிங்கத்தின் தோலை மேகலையாக உடுத்தவள்
அணங்கு - வருத்தம்.

சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
        சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி இடப் பக்கத்துச்- சிலம்பும் வலப் பக்கத்து வீரக் கழலும் ஒலிக்கும் சிறிய அடிகளையும், வலம்படு கொற்றத்து வாய் வாட் கொற்றவை - மேலான வெற்றியையும் வினை வாய்க்கப் பெறும் வாளினையுமுடைய கொற்றவை .        இடப்பாகம் கொற்றவையும் வலப்பாகம் சிவபெருமானும் ஆய உருவமாகலான் 'சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி' என்றார். வலம்-மேன்மை.

வேட்டுவ வரி
மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கின ரெயினரும்

       மறக் குடித் தாயத்து வழி வளஞ் சுரவாது அறக்குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் - மறக்குடியிற் பிறந்த உரிமையை உடைய மறவரும் வழிக்கண் பறிக்கும் வளம் சுரக்கப் பெறாது அறவர் குடிப் பிறந்தோர் போலச் சினங் குறைந்து செருக்கு அடங்கி விட்டனர் ;

வேட்டுவ வரி

             [மூவரும் ஐயை கோட்டத்தின் ஒருபுடை இளைப்பாறி இருந்தனராக, இப்பால், வேட்டுவக் குடியில் தெய்வத்திற்கு வழிபாடு செய்யும் உரிமையுடைய சாலினி யென்பாள் தெய்வ மேறப்பெற்று, 'எயினர் மன்றுகள் பாழ்பட்டன ; கடன் உண்ணின் அல்லது கொற்றவை வெற்றி கொடாள் ; ஆகலின் நீர் செலுத்தற்குரிய கடனைச் செலுத்துவீராக' என்றாள். என்றலும், எயினரனைவரும் கூடித் தங்கள் தொல்குடிப் பிறந்த குமரியைக் கொற்றவையாக ஒப்பனை செய்து பரவிக் கை தொழுது ஏத்தினர். அப்பொழுது சாலினி தெய்வமுற்றுக் கோயிலின் ஒரு சிறை கணவனோடிருந்த கண்ணகியை நோக்கி, 'இவள், கொங்கச் செல்வி குடமலை யாட்டி, தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து, .... ' என்று பின் நிகழ்வதறிந்து கூறக், கண்ணகி ' மூதறிவாட்டி பேதுறவு மொழிந்தனள்' என்று புன் முறுவலுடன் கணவன் புறத்தொடுங்கி நின்றனள். குமரிக் கோலத்துக் குமரியும் வரிக்கோலம் நன்கு வாய்த்ததென்று கண்டார் சொல்ல அருளினள். வேட்டுவர்கள் கொற்றவையின் பல புகழையும் கூறிப் பரவி, 'விறல் வெய்யோன் வெட்சி சூடுக' எனத் தம் அரசனை வாழ்த்தினர். (இதன்கண் வேட்டுவர் கொற்றவையை ஏத்துவனவாகவுள்ள பாட்டுக்கள் மிக்க சிறப்புடையன.)]

வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
7       வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்து - அம்பினை வழங்கும் வில்லை யேந்திய பெரிய கையையுடைய மறவர் குடியிற் பிறந்த உரிமையை உடைய, பழங்கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி - முன்பு நேர்ந்த கடனைக் கொடுத்துப் போந்த ஒலிக்கும் வாயினையுடைய தேவராட்டி ;

மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பற் றாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீஇப் பரிவொடு

       மறங் கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற - தறு கண்மையை உடைய வலிய புலியினை வாயைப் பிளந்து கொண்ட, மாலை வெண்பல் தாலி நிரை பூட்டி - ஒழுங்காகக் கோத்த வெள்ளிய பல்லினாலாகிய தாலியை வரிசைப்படக் கட்டி, வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து உரிவை மேகலை உடீஇ - கோடுகளும் புள்ளிகளும் கலக்கப் பெற்ற தூய புறத்தினையுடைய தோலினை மேகலையாக உடுத்து ;


வெட்சி மறவர்கள் கொண்டாடிய கொற்றவை திருவிழா. இது இன்னும் புதுக்கோட்டை பகுதியில் நடந்து வருகின்றது.



மறையோன்(பார்ப்பான்) என்பவன் தானம் பெரும் யாசகன்(பிச்சை பெறுபவன்) இவன் கோத்திரத்துக்கு அடித்து கொள்ளும் மூத்திர கும்பளுக்கு ரொம்ப பெருமை தான்.

மறையோன் உற்ற வான்துயர் நீங்க
உறைகவுள் வேழக் கையகம் புக்கு
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி தன்மேற் காதல ராதலின்
மேனிலை யுலகத் தவருடன் போகும்

மறையோன் உற்ற வான் துயர் நீங்க - தன்னிடத்துத் தானங்கொள்ள வந்த பார்ப்பனன் அடைந்த கொடிய துன்பம் ஒழிய, உறைகவுள் வேழக் கையகம் புக்கு வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலிதன்மேல் காதலராதலின் - மதஞ்சொரியுங் கவுளினையுடைய யானையின் கையகத்தே நுழைந்து விண்ணோரது வடிவம் பெற்றோனாகிய கோவலன் கொண்ட கண்ணகியின்மீது அன்புடையா ராகலானும், மேல் நிலை உலகத்து அவருடன் போகும் தாவா நல் அறம் செய்திலர் அதனால் - துறக்கவுலகத்து அவருடன் சென்றடையும் கெடுதலற்ற நல்ல அறத்தினைச் செய்திலராதலானும்





ஆரியரை வென்ற  தமிழ் மறவேந்தன் சேரன் செங்குட்டுவன்:

சில மூதேவிகள் மூவேந்தர்களை வேளிர் என கதையழந்து வருகின்றனர். ஆதாவது

"வடபால் முனிவன் தடவி தோன்றிய" என எழுதுகின்றனர். அதாவது துவாரகா அழிந்தபோது ஓடிவந்த பேடிக்கூட்டம் என வேளிரை வர்னிக்கின்றனர். ஆணால் வேளிர்களை பற்றி இராகவ அய்யங்கார் இவர்களுக்கு முன்னாளில் முடி தரிக்கும் உரிமை இல்லை. இவர்கள் சொல்லி பெருமை பட்டு கொள்ளும் அளவுக்கு இவர்களது வரலாறு இல்லை என கூறுகிறார். நந்தகோபன் என்னும் வைஸ்யனுக்கும் வசுதேவன் என்னும் மன்னனுக்கு மகனாக தோன்றினான் பரமாத்மன் என கீழ் குலமென வர்ணிக்கிறார்.
அது என்ன லெட்சனமோ. இது வேளிர் பற்றி புனையபட்ட பிற்கால புராணம். ஆனால் வேளிர் என்போர் தமிழ் மன்னர்கள். இவர்கள் நாகர் குலத்தே சேர்ந்தவர்கள் என அனேக ஆதாரமுள்ளது. இது பொய்கதையே.


ஆணால் தமிழ் மூவேந்தர்கள் இந்த ஆரியவர்க்கம் அல்ல ஆரியர்களை வென்ற தமிழ் மன்னர்கள் சேர சோழ பாண்டியர் எனவே வந்தேரிய  கீழ்குலங்கள் இனி மூவேந்தரை ஆரியரோடு ஒப்புமை செய்வதை விட்டு தங்கள் முன்னொரோரான வடுக மன்னர்களை கூறி கொண்டு திரியுங்கள்.

மூவேந்தர்கள் தமிழர்களே. ஆரியனை வென்ற எம் முன்னோன் சேரன்செங்குட்டுவன். அதற்கான ஆதாரங்களை பார்ப்போம்.

முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்
குடதிசை யாளுங் கொற்றங் குன்றா
ஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்பிமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத் தவருறை நாட்டுக்
குடியின் செல்வமுங் கூழின் பெருக்கமும்
வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்
புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய
மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு
பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டமுற் றிற்று.

       முடியுடை வேந்தர் மூவருள்ளும் - முடியுடைய மன்னராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவருள்ளும், குடதிசை ஆளும் கொற்றம் குன்றா ஆர மார்பிற் சேரர்குலத்து உதித்தோர் - மேற்றிசைக்கண்ணதாகிய மலைநாட்டினை யாளும் குன்றாத வென்றியையும் ஆரமணிந்த மார்பினையுமுடைய சேரர் குலத்துப் பிறந்தோருடைய, அறனும் மறனும் ஆற்றலும் - அறமும் ஆண்மையும் திறலும், அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம்படுதலும் - அவரது பழைய பெருமையையுடைய தொன்னகராகிய வஞ்சியின் இயல்பு மேம்பட்டு விளங்குதலும், விழவுமலி சிறப்பும் - அந்நகரின்கண் விழாக்கள் நிறைந்த சிறப்பும், விண்ணவர் வரவும் - வானோர் வருகையும், ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக் குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் - கெடாத இன்பத்தையுடைய அவரது நாட்டில் உறையும் குடிமகளின் செல்வமும் உணவின் பெருக்கமும், வரியும் குரவையும் விரவிய கொள்கையின் - தம்மிற் கலந்த தன்மையையுடைய வரியும் குரவையுமாகிய பாட்டும் கூத்தும், புறத்துறை மருங்கின் - புறத்திணைக்குரிய துறைகளிலே, அறத்தொடு பொருந்திய மறத்துறை முடித்த - அறத்துடன் கூடிய போர்த்துறைகளைச் செய்து முடித்த, வாய்வாள் தானையொடு பொங்கு இரும் பரப்பின் கடல்பிறக்கு ஓட்டி - தப்பாத வாளினையுடைய சேனையுடன் சென்று மிக்க பெரிய பரப்பினையுடைய கடலின் கண் வாழும் பகைஞரைப் பிறக்கிடுமாறு துரந்து, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய - கங்கையாகிய பெரிய யாற்றின் கரைக்கண் மேற்சென்ற, செங்குட்டுவனோடு - செங்குட்டுவன் என்னும் சீர்த்தி மிக்க வேந்தனோடு, ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக்காண்டம் முற்றிற்று - ஒருவாறு நோக்கும்படி அமைந்த வஞ்சிக் காண்டமென்னும் இத் தொடர்நிலைச் செய்யுளின் முன்றாம் பகுதி முற்றிற்று என்க.

       சேரர் குலத்தோரின் அறன் முதலாக ஈண்டுத் தொகுத்துரைத்தவற்றை இக்காண்டத்தில் ஆண்டாண்டுக் கண்டுணர்க. மறத்துறை முடித்த குட்டுவன், தானையொடு கடல்பிறக் கோட்டிக் கரைபோகிய குட்டுவன் எனத் தனித்தனி முடிக்க. கடல்பிறக் கோட்டியதும் கரைபோகியதும் 1முன்னர்ப் போந்தமை காண்க. அறன்முதலாகக் குரவையீறாகக் கூறியன் பலவும் செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக் காண்ட மென்க.


ருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்


       அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்-அப்பொழுது நீங்குதற்கரிய சிறைக் கோட்டத்தினின்றும் நீங்கிப்போந்த ஆரிய நாட்டரசரும், பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் - பெரிய காவற்கூடத்தை நீங்கிய மற்றைய வேந்தரும், குடகக் கொங்கரும் - குடக நாட்டுக் கொங்கரும், மாளுவ வேந்தரும் - மாளுவ தேயத்து மன்னரும், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் - கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாய கயவாகுவும், எம்நாட்டு ஆங்கண் இமயவரம்பனின் நல்நாட் செய்த நாள் அணி வேள்வியில் வந்தீகென்றே வணங்கினர் வேண்ட - எமது நாட்டிடத்தே இமயவரம்பனது வெள்ளணி நாளில் யாம் செய்யும் அழகிய நாள் வேள்வியில் வந்தருள் புரிவாயாகவெனப் பணிந்து வேண்டிய அளவிலே, தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் - அங்ஙனமே வரந் தந்தேன் என வானிடத்து ஓர் குரல் தோன்றிற்று ;



குறவனையும் வேட்டுவனையும் குறிப்பிடும் வஞ்சி காண்டம்

குருவிபிடிச்சவனும் எலிபிடிச்சவனும் வரும் இடம் சேரன் செங்குட்டுவனுக்கு மாண்கறிபடைத்த குறவரும் வேட்டுவரும். குறிஞ்சி தலைவன் வேட்டுவன் இல்லை குறவன் தான் எனவே கொங்க புலையன் வரும் சிலப்பதிகார குறிப்பு இது தான்.


வஞ்சிக் காண்டம்

1. குன்றக் குரவை

[இவ்வாறு கண்ணகி கணவனுடன் விமானமேறிச் செல்லக் கண்ட மலைவாணராகிய வேட்டுவரும் வேட்டுவித்தியரும் மிகுந்த வியப்புற்றுக் கண்ணகியைத் தம் குலதெய்வமாகக் கருதி அவள் பொருட்டுக் குரவைக்கூத்து நிகழ்த்தினர். (இதன்கண் குன்றவர் தெய்வ வழிபாட்டு முறைமையும், அகப்பொருட் சுவையமைந்தனவும் செவ்வேளின் துதியாவனவுமாகிய குரவைப் பாட்டுக்களும் காணக்கிடக்கின்றன.)]

குன்றக் குரவை

15
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே

       சிறு குடியீரே சிறு குடியீரே தெய்வம் கொள்ளுமின் சிறு குடியீரே - சிறு குடியிலுள்ளீர் இவளைத் தெய்வமாகக் கொள்ளுமின், நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை - வெள்ளிய நிறம் விளங்குகின்ற அருவியினையுடைய நெடுவேள் குன்றமாகிய பறம்பினுடைய தாழ்வரையிடத்து, நறுஞ்சினை வேங்கை நல் நிழற்கீழ் ஓர் தெய்வங் கொள்ளுமின் சிறு குடியீரே-மணம் பொருந்தும் கிளைகளையுடைய வேங்கை மரத்து நல்ல நிழலின் கண்ணே ஒப்பற்ற தெய்வமாகப் பண்ணிக் கொள்ளுமின் ;சிறுகுடி - வேட்டுவரூர். சிறுகுடியீரே எனப் பலகாற் கூறியது உவகையும் விரையும் பற்றி. பறம்பு - மலையென்னும் பொருட்டு தெய்வமாகவென விரிக்க.

மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
பலரறி மணமவர் படுகுவ ரெனவே ;       (16)

       மலை மகள் மகனை - மலையரசன் மகளாகிய உமையின் புதல்வனே, நின் மதிநுதல் மடவரல் குலமலை உறைதரு குறவர்தம் மகளார் - நின்னுடைய மதி போன்ற நெற்றியினையும் இளமையையும் உடைய சிறந்த மலையின்கண் வாழும் குறவர் மகளாருடைய, நிலை உயர் கடவுள் - யாவரினும் மேலாந் தன்மையையுடைய முருகனே, நின் இணையடி தொழுதேம் - நின்னுடைய இரண்டு திருவடிகளையும் வணங்கினேம், பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே - பலரும் அறியத்தக்க மணத்தினை அத்தலைவர் உடன்படுவாராகவென்று ;


குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி
அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்முன்
மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
       குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் - மலைக்கண் சென்று தங்கிக் குருவிகளை ஓட்டியும் கிளிகளைத் துரந்தும் அருவியின்கண் நீராடியும் சுனையில் மூழ்கியும் இவ்வாறு சுழன்று வரும் எம் முன்னர், மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என - குன்றத்து வேங்கையின் நல்ல நீழற்கண்ணே எம் முள்ளம் நடுங்கும் வண்ணம் ஒரு முலையினை இழந்து வந்து நின்றீர் வள்ளியினை ஒப்பீர் நீவிர் யாவிர் என்று யாம் வினவ ; (1)


இமயத்தில் கல் எடுத்த சேரன் செங்குட்டுவனோடு சென்ற மறப்படை கொண்டையங்கோட்டை மறவர்களாகவே இருக்க கூடும் ஏனெனில் ஆப்ப நாட்டு முளைப்பாரி பாடலில் 
"சேரர் சீமையிலே கிளுவை நாட்டிலே நாங்கள் திக்கு விசயமாய் வாழையிலே 
......
அரிய நாச்சி அழைத்து வர இங்கு வந்தோம்"
என தொடங்குகிறது. ரவி கொண்டா என சேர மன்னன் ஒருவன் வருவது குறிப்பிடதக்கது.கொண்டியங் கோட்டை மறவர் தங்களை "ரவி குல" கொண்டையங்கோட்டை என கோருகிறார்கள்.


கொண்டையன்கோட்டை  மறவரில் மிளகு கொத்து  கமுகு கொத்து தமிழக பயிர்கள் இல்லை அது கேரள பயிர்களாகும். எனவே பிற்கால திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் கொண்டையன்கோட்டை மறவர் படையை சார்ந்த பொன் பாண்டித் தேவர் தலைமையிலே டச்சு படையை முறியடித்து திருவிதாங்கூரை காத்தது என்பது குறிப்பிட தக்கது.

இது சிலப்பத்கார கரந்தையர்கள் மட்டுமே இன்னும் ஒவ்வொரு இலக்கியத்திலும் இருப்பது எண்ணிலடங்காதவை

Monday, May 16, 2016

வித்துவான் இராகவ அய்யங்கார் குறிப்புகளில் சேதுபதிகள் வரலாறு


சேதுபதியின் கல்வெட்டுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_26.html

செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2014/07/blog-post_23.html

சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி

https://thevar-mukkulator.blogspot.com/2017/09/blog-post.html

சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்

https://thevar-mukkulator.blogspot.com/2015/02/blog-post.html

இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை

மகாவித்துவான் தமிழறிஞர் இராகவ அய்யங்கார் தமிழக குறுநில மன்னர்கள் என்னும் தலைப்பில் வேளிர்வரலாறு,கோசர்,பல்லவர் வரலாறு,சேதுநாடு என்னும் தலைப்புகளில் சேதுபதிகள் என்னும் தலைப்பில் மறவர்கள் என்ற இனம் தொன்றுதொட்டே தமக்கியல்பாயுள்ள வீரச் செயலாலும் வில்-வாள் முதலாய படைத்தொழில் வலியாலும் தம் உயிர் வாழ்தலிற் சிறந்த தமிழ்நாட்டு மறவர் குடியினராவர் . அகம் வில்லுழுவர்,வாளுழவர்,மழவர்,வீரர் முதலிய பெயர்களில் இவர்களை கூறுவர் முன்னோர். இவர் திரைகவர்ந்ததால் வெட்சி மறவர் எனும் பெயர் பட்டனர்.

சோழன் தமிழனே :

சில பொறம்போங்க்குகள் பாண்டியனை தவிர சோழன் தமிழன் அல்ல என கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவர்கள் திராவிட மக்களும் சோழனால் ஆந்திராவில் இருந்து பிடித்துவரப்பட்ட  மக்களாகிய இவர்கள் கூறி வருகின்றனர். பாண்டியனுக்கு செந்தமிழோன் தமிழ் பாண்டியன் என்னும் பெயர் உண்டு ஆனால் சோழனுக்கு உண்டா சோழனின் தெலுங்கு சோழன் உண்டு என சப்பை கட்டு காட்டுகின்றனர். அந்நிய நிறுவனங்கள் வால்மார்ட்,கிசான் போன்ற நிறுவனங்கள் தமிழில் பெயர் வைத்தால் அது தமிழர் ஆயிடுமா. தெலுங்கு சோழன் என்பவர்கள் அப்படி சோழரின் பெயரில் ஆந்திராவை ஆண்ட  அந்த மாநில வேலைக்காரர்களே  ஒழிய அவர்கள் சோழர் கிடையாது சோழரின் கல்வெட்டுகளில் பெரும்பான்மை தமிழில் உள்ளது.

அதிலும் ஒரு கல்வெட்டு செந்தமிழ் பீடு இரட்டைபாடி கொண்ட சோழன் என சோழனை தமிழன் என பாடுகிறது சோழனை கோரும் வேறு மொழி பேசும்  மக்கள் இனி தெலுங்கு என்னும் வார்த்தை அடைமொழியாய் கொண்ட சோழனை காட்டினாள் உண்டு.

தெலுங்கர் குல காலன்  சோழனான தமிழனின்  வரி  இதோ:

"முடி கொண்ட சுந்தர சோழன் என்னும் செந்தமிழ் பீடிகை இரட்டை பாடி கொண்ட சோழனை தொல்புவியுடைய"

நிரைகளை மீட்கும் மறவரை கரந்தை என கூறுவர்.

வெட்சி மறவர்க்கு ஆறலைப்பார்,கள்வர் முதலிய பெயர்களும் கரந்தை மறவர்க்கு வயவர்,மீளியர் முதலிய பெயர்களும் நன்று பொருந்தனுவாகும்.


இரண்டு வகை மறவரில் சேதுபதிகள் கரந்தை மறவராவர்.

இம்மறவர் வாழ்ந்த பழையவூரை கரந்தை என்றும் சேதுபதிகளை கரந்தையர் கோன் எனவும் "மல்லார் கரந்தை ரகுநாதன் தேவை வரையில் "கரந்தையர்கோன் ரகுநாதன்"(ஒருதுறைக்கோவை-68). இவர்களே மூவேந்தருக்கும் படையும் படைத்தலைவவருமாய் விளங்கினர்.

சேதுபதிகளை பற்றிய கல்வெட்டுகள் செப்பேடுகளும் சூரிய குலத்தை சேர்ந்தவர் என கூறும் ஆதாரங்கள்
http://thevar-mukkulator.blogspot.com/2014/07/blog-post_23.html
http://thevar-mukkulator.blogspot.in/2014/05/blog-post_26.html

10:1
"இரும்பாழி மறவன் அரசன் தேவனான அநபாய நாடாழ்வான்"

No.667
(A.R.No 106 of 1895)
"பழுவேட்டரையர் கண்டன் மறவநார் பெருந்திறத்து அரையன் சுந்தர சோழன்"


அடிகள் என்ற மரியாதைக்குரிய கல்வெட்டு : சில கல்வெட்டுகளில் தமிழ் மன்னர்களும் மக்களும் தன வயதை பொறுத்து அடிகளார்,சிறுவன்,பெரியார் போன்று கல்வெட்டு பொறித்துள்ளனர். அம்பாசமுத்திரம் சுந்தர சோழ பாண்டியன் கல்வெட்டுகளில் "பராந்தகன் மறவநடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மாராயன் " என ஒரு கல்வெட்டு வந்துள்ளது. இதே போல் "மாதவன் மறவடிகள் மதுராந்தகனான சோழ பாண்டிய மகாராயர்" என ஒரு கல்வெட்டும் வந்துள்ளது. அதே ஊரில் வேறொரு இடத்த்தில் கிடைத்த கல்வெட்டுகளில் "வீதி விடங்க வெள்ளாளன் அடிகள் தேவன் இத்தயவர்க்கு" என ஒரு கல்வெட்டு வந்துள்ளது பழுவூர் கல்வெட்டு "அடிகள் பழுவேட்டரையன் கண்டான் மறவனார் பெருந்தேவியார்" என அடிகள் என பழு வேட்டரையன் கல்வெட்டும் வந்துள்ளது பரிசை கிழான் செம்பியன் ஆற்காட்டு வேளாண் மறவன்



எனவே அடிகள்,சிறுவன்,பெரியார்,கிழவன் என்பது வயது முந்திரிச்சியும் அறிவையும் உணர்த்தும் கல்வெட்டுகளாகும் .



இவர்களே சேரன் மறவர்,சோழன் மறவர்,பாண்டியன் மறவர் என வழங்க பட்டனர்.

நன்னன்,ஏறை,அத்தி,கங்கன் கட்டி முதலியோர்கள் சேரன் மறவர்(அகநானூறு:44).

கோடைபொருநன் பண்ணி,நாலைகிழவன் நாகன் பாண்டியன் மறவர்(அகம்:44,326,புறம்:183) 

பழையன்,பண்ணன் முதலியோர் சோழன் மறவர்களாவர்.


இச்சேதுபதிகள் சோழன் மறவராவர்.இவரை செம்பிநாட்டு மறவர் என வழங்குவர்.பாண்டியநாடு பாண்டி நாடு என கூறுவர். செம்பியன் நாடு செம்பிநாடு என ஆனது. ஒருதுறைக்கோவையிலும் ரகுநாத சேதுபதையை செம்பிநாடன்(60,82) செம்பியர் கோன்(203) செம்பி நாட்டிறை(208) செம்பியர் தோன்றல்(218) என வழங்குதல் காண்க.


இச்சேதுபதிகளை இரவிகுலத்தவரெனகூறுதலும் அச் சேதுபதி சாசனங்களில் உள்ள விருதாவளிகளில் முதற்கட் "சோழ மண்டல பிரதிஸ்டாபகன்" 'அகளங்கன்' எனவரும் விருதுகளும் இவர் சோழர்மறவராகியவர்கள் சோழநாட்டை விட்டு சேது தீரத்திற் குடியேறிகாலம் இது திரிபுவனதேவன் எனும் பெயர் கொண்டது காரணமாகிறது.

இவர்களின் பழைய சாசணங்களிற் பெரும்பாலும் "குலோத்துங்க சோழ நல்லூர்கீழ்பால் விரையாதகண்டனிலிருக்கும் வங்கிசாதிபர்" என சோணாடு ஈண்டுபோந்துகண்ட தலை நகர் குலோத்துங்கசோழநல்லூர் என்பது இங்கு உற்றுனோக்குவதாக.


சோழர்கால கல்வெட்டுகளில் சிலர் மறவரின் கல்வெட்டுகள் இதை உறுதிபடுத்துகிறது.


விரையாதகண்டன் எனும் பெயரில் கண்டன் என்பது குலோத்துங்க சோழன் பெயரில் ஒரு பெயராகும்.இக்காலத்து சேதுபதிகள் தலைநகராகிய முகவைக்கு ஒரு காத தூரத்தில் வைகைக்கரையிலே கங்கைகொண்டான் என்னும் பெயரில் ஒரு ஊர் உள்ளது.

 இச்சேதுநாட்டு வீரபாண்டி,விக்கிரமபாண்டி,வீரசோழன்,சோழபுரம் என்னும் பெயர்கள் இருப்பது நோக்கதக்கது.

இச்சேதுபதிகள் சாசணத்தில் அகளங்கன் எனவும். அமிர்தகவிராயர்   அபயரகுநாதசேதுபதி,செம்பியன்,அநபாயன் ரகுந்தாதன்(242) புணர்செம்பியன்,சென்னிக்கும்  சென்னி ரகுநாதன் என கான்க. இரவிகுலமென்பதுபற்றி சோழரின் குலமாகிலும் இரவி குலத்தில் தோன்றிய சீராமமூர்த்திபெயரே இவர்களுக்குபெயராக வைத்து ரகுநாதசேதுபதியெனச்சிறப்பித்து வழங்கினர் போலும் இச்சேதுபதிகளில் இராஜசூரியசேதுபதி எனவும் சூரியன் புன்னாடட் சோழன் பெயரே. சோழன்மறவனாகிய பண்ணன் பெயர்வழக்கம் இராசசிங்கமங்கலம் ஊரின் அருகே உள்ள பண்ணக்கோட்டை எனவும். சிறுகுடியெனவும் வழங்கும் ஊர்கள் இரண்டும் உள்ளன.


தொண்டி சோழரின் துரைமுகங்களில் ஒன்று. சேதுபதிகளின் விருதுவாளிகளின் தொண்டியன் துறைகாவலன் என்னும் பெயர் சேதுபதிகளுக்கு உண்டு.


இம்மறவர் சோழரின் மரக்கலப்படையுடையுடையராயினாரென்பது நன்கறியப்படும். இம்மறவர்களுக்கு ஆற்றுப்பாய்ச்சி,கடற்பாய்ச்சி எனும் பட்டங்கள் உள்ளனர். இம்மரக்கலப்படைவலியாற் சென்று ஈழமும்,கொங்கும்,யாழ்பாணராயன் பட்டணமும் கஜவேட்டைகொண்டருளினர்.

இம்மறவரில் "மரக்காயர்கிளை" எனும் கிளையினர் இம்மரகலத்தலைவராயிருந்தோர் என கருதலாம். இம்மறவருள் தொண்டைமான் கிளை என சிலரை வழங்குவதும் சோழற்கும் இவர்க்குமுள்ள தொடர்பில் நாகபட்டினத்திருந்த சோழன் ஒருவன் நாக இளவரசியை மணந்தான். நாககன்னிகைக்கு மகன் ஒருவன் தோன்றினான் அவனே திரையன் என பெயர் பெற்றான்,தொண்டைமான் சோழர்வழிதோன்றலென்பதும் சோழராலே தொண்டைமான் நாடாட்சி அளிக்கப்பட்டனரென்பதும் தெளிவாகும்.


சோழனுக்கும் நாக பெண்ணுக்கும் பிறந்தவனே தொண்டைமானாகும்.

இவர்களே மறவரில் தொண்டைமான் கிளையினராகௌம். இம்மறவரை தேவரென சிறப்பு பெயர் புனைவதாலும் குலோத்துங்க சோழதேவன்,திரிபுவந தேவன்,இராஜ இராஜ தேவன் என தேவருருவாய் நின்று உலகங்காத்தலின் அரசனைத்தேவன் என்பர் உனர்க.



இனி இம்மறவர் புனைகின்ற முல்லை மாலை சோழர்க்குரியதாகும். முல்லையத்தார் செம்பியன்(பாடான் படலாம்-24). என ஐயனாரிதனார் கூறினர்.

இச்சேதுபதி "முல்லைவீர தொடை புனைவோன் ரகுநாதன்"(6). இச்சேதுபதிகள் சோழன் மறவர் வழிதோன்றலே என நன்குணரலாம்.

இச்செம்பிநாட்டு மறவருக்குள்ளே ஒர் கிளையினர் "பிச்ச்கிளை" என்னும் ப்யரான் வழங்கபடுகின்றனர்.பிச்சம்-குடை சேத்பதிகள் குடை "செங்காவிகுடையாகும்" 'கார்செம்பி நாடனுயர் செங்காவிகுடையான் ரகுநாதன்"
என்பது ஒருதுரைக்கோவையாகும்.

'திருவுடை மன்னரெல்லாம் திருமால் கூறாவர் ரகுநாதன்' எனப்பேர் பெற்றது ஸ்ரீ ராம தோன்றிய சூரியகுலத்தவதரித்த விஜயரகுநாதன் என்பதை பேராக கொண்டனர் எனலாம்.

குலோத்துங்க சேதுபதியின் புத்திரராகிய சமரகோலாகல சேதுபதி சோழமன்னரிடத்தில் குடாக்கடலில் முத்துகுளீக்கும் உரிமையை பெற்ரனராதலால் தமது கடல்வளமுடைமை பெயர்களே "முத்து" என பெயர் பட்டனர்.


இச்சேதுபதிகள் பயன்படுத்திய அரிய வளரிபயிற்ச்சியும்,வீரக்கழல் அனிந்தமை
சிற்றம்பல கவிராயர் பாடிய தளசிங்கமாலையில்,
"கீர்த்தியுஞ் செந்தமிழ் நிலையாகு......விசய ரகுநாத சேது தளசிங்கமே".


சோழரால் நாடாட்சி பிரித்தளிக்கப்பட்ட திரையர் எல்லாம் தொண்டைமான்கள் என பெயர் கொண்டார்போல், இச்சேதுபதிகளால் நாடாட்சி பெற்றவர் புதுக்கோட்டை தொண்டைமானாகும்.

"சூரியன் போற்றுமிராமேசர் நாளினைக் கன்புவைத்தை சூரியன் வீரையர்கோன் ரகுநாதன்" என சேதுபதிகளை குறிக்கிறது.

இச்சேதுபதிகள் இராமநாதபுரமாகிய முகவையை தமக்குரிய தலைநகராகக் கொள்ளுதற்கு முன்னே சேது நாட்டிற் பல ஊர்களை தலைநகராக கொண்டு ஆண்டுள்ளனர் அவை
1)குலோத்துங்க சோழ நல்லூர்
2)விரையாதகண்டன்
3)செம்பினேந்தல்
4)கரந்தை
5)வீரையம்
6)தேவை(இராமேஸ்வரம்)
7)மணவை
8)மழவை
9)புகலூர்(போகலூர்)


சேதுபதிகளை பற்றிய குறிப்புகள்:

சேதுநாட்டை சங்கர சோழனுலாவில்,,


"மாது மணக்கு மணவாளன் சேதுக்குந்
தஞ்சைக்குங் கோழிக்குந் தாமா புகாருக்கும்
வஞ்சிக்கும்............

பல நாடுகள்க்கும் முற்புடவைத்துஸ் சேதுநாட்டை குறித்ததாகும்

சேதுவுக்கு பாண்டியரே பேரரசாகுதல் பற்றி
"வென்வேகவுரியர் தொன்முதுகோடி முழங்கிரும்"

கவுரியராகிய பாண்டியர் சிவகங்கை மன்னவர் ஆவார்.

தஞ்சை ஆண்ட நாயகர்குலத்து திருமலம்பா என்னும் பெண்மனியால் மிகவும் செய்யப்பட்ட வரதாப்யுதம் என்னும் வடமொழி காவியத்தில் சேதுபதி அரசரை
"ரக்ஷித்வா சேதுனாதம்
சரணமுபகதம்
பாண்டியயராஜா    பதகம்தம்"


சேதுநாதம் என்றும் பாண்டிய வரசர்க்கு நன்பர்
என்ரு கூறபட்டுள்ளது.

சேதுநாட்டை செம்பிநாடென்றும் சேதுவை படைச்ச ஸ்ரீராமமூர்த்தியை சேது நாட்டன் என்று துணிந்து அவனையே செம்பிநாட்டன் என வழங்குதல் ,,

"காட்டானை குறுதுயரக் காட்டனை திருமருவிக்களிக்குஞ் செம்பினாட்டானை"


சேதுநாட்டான் என்று துனிந்து அவையே செம்பிநாட்டன் என கூறுகிறது.

சேதுபதிகளை வைனவரெல்லாம் "திருவுடை மன்னரை காணிற் திருமாலை கண்டேன்" என ஸ்ரீ ராமமூர்த்தியாகவும் சைவரெல்லாம் ஸ்ரீராமநாதமூர்த்தியாகவும் மரியாதை செய்வதாகும் என அரியலாம்.

ஒருதுரைகோவையில் - அமிர்தகவிராயர்


"கோரத்தை யூர்த்த வளவர் குலசேர் குலமறவர்
பாரிர் புரிந்த பெரும்பாக்கியத்தின்"


சோழர் குலத்தை சார்ந்த மறவர் தென்னாட்டை  பின்னாளில் சேந்தனர்.

"காளியை போற்றி செருக்களம் செல்தறுகண்மறவர்"

கொற்றவையை வணங்கி போருக்கு சென்ற மறவர்கள்.


"பல்லவர்  போர்வென்ற சோழர் துனைவலியாக சென்ற செம்பிநாட்டு மறவர்"

பல்லவரை வென்ற சோழர் துனைவராக சென்ற செம்பிநாட்டை சேர்ந்த மறவர்.















சேர சோழபாண்டியர்க்கு பின் சுத்த தமிழ் அரசர்கள் சேதுபதிகள் மட்டுமே.

இவ்வொருத்துறைக்கோவை திருமலை சேதுபதியின் பெயரால பாடப்பட்டது. இதைபாடியது அமுதகவிராயர். இச்சேதுபதிகளால் நல்லுதவி பெற்று சிறந்த செந்தமிழ்புலவர் பலராவார் அவர்கள்.

புலவர்                                           பாடியது
அகோரதேவர்                     திருக்கானப்பேர்ப்புரானம்
திருச்சிற்றமல தேசிகர்   திருவாடனை புராணம்
காட்டார்ந்தகுடி
கண்ட தேவர்                        மருதூரந்தாதி
சிற்றம்ப்லகவிராயர்          தளசிங்கமாலை
அமிர்த கவிராயர்               ஒருதுறைக்கோவை










உவேசுவாமிநாத ஐய்யர்களுக்கும் சேதுபதிகளின் நட்பும்:


வித்துவான் இராகவ அய்யங்கார் அவர்களுக்கு சேதுபதி மகராஜ எழுதி கொடுத்த உரிமை பத்திரத்தில்.

1901 இல் நவன்ம்பர் 4 மதுரை ஜில்லா இராமநாதபுரம் சமஸ்தானம் லேட் ராஜா முத்துராமைலிங்க சேதுபதி மகாராஜா அவர்கள் புத்திரர் மறவ ஜாதி சிவமதம் ராஜா அந்தஸ்துள்ள ஸ்ரீமான் ஹிரன்யகர்ப்பயாஜி ரவிகுல முத்து விஜய ரகுநாத ரஜாயம் பாஸ்கர சேதுபதி மகராஜா அவர்கள் இராமநாதபுரத்தில் இருக்கும் லேட் ராமானுஜ அய்யங்கார் புத்திரர் பிராமன் ஜாதி வைஷ்னவமதம்............

சேரசோழபாண்டியர்கட்குப் பின் சுத்த தமிழ் அரசர்களான சேதுபதிகளே தமிழ் பாஷாவிருத்தி தமிழ் வித்துவான்களுக்கு ..................


என சேதுபதிகளின் குலத்தை பற்றிய பல ஆதாரங்களை இராகவ அய்யங்கார்  வெளியிட்டுள்ளார்

நன்றி:
இராகவ அய்யங்கார்
தமிழக குறுநிலை மன்னர்கள்
சேதுநாடும் தமிழும்
ஒரு துறை கோவை-அமிர்த கவிராயர்