சேதுபதியின் கல்வெட்டுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_26.html
செம்பி வளநாடன் ரவிகுலசேகர ரகுநாத சேதுபதிகள் செப்பேடுகள்
https://thevar-mukkulator.blogspot.com/2014/07/blog-post_23.html
சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி
https://thevar-mukkulator.blogspot.com/2017/09/blog-post.html
சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்
https://thevar-mukkulator.blogspot.com/2015/02/blog-post.html
இரகுநாதசேதுபதி ஒருதுறைக்கோவை
சேதுபதிகளின் நாணயங்களில் சிலவற்றை பார்ப்போம்
பிற்கால சேதுபதிகளின் நாணயங்களில்
தளவாய் சேதுபதி காசுகள்:(1635-1646)
காசில் முதல் பக்கத்தில் இடது நோக்கிய நிற்கும் மயில் உள்ளது. பின் பக்கத்தில் "ரரதளவாய்" என்று மன்னனின் பெயர் தமிழில் எழுதபட்டுள்ளது. ராசராச என்று எழுதுவதற்கு "ரர" என சுருக்கமாக எழுதுவது வழக்கம். சேதுபதி நாணயங்களில் முதலில் கிடைத்த நாணயம் இதுவே ஆகும்.ஒன்று பரமக்குடி இன்னொன்று மதுரையில் கிடைத்துள்ளது.
இந்த நாணயம் காலத்துக்கு மிகவும் முன்வந்ததாக இருக்கவேண்டும். அதாவது முதலாம் இராஜ இராஜ சோழ தேவரின் தளபதியாக இருந்த உடையணன் என்ற சேதுபதி ஈழத்தையும் கேரளத்தையும் வென்றார். இந்த உடைய தேவரையே ஐயப்பன் கதைகளில் வரும் சோழ மறவர் தளபதியாக இருக்கலாம்.
உடைய தேவர் சேதுபதி:(1711-1725)
இவரும் கேரளத்தை வென்ற உடைய தேவரின் வம்சமாக இருக்கலாம்.கரூரில் இவரது நாணயம் கிடைத்துள்ளது.. நாணயத்தில் சூரியன் சந்திரன் நந்தி சிவன் பொரிக்கபட்டுள்ளது. இவரின் நாணயங்கள் பெரும்பாலும் நந்தி பொரிக்கபட்டுள்ளது. இவரின் நாணயங்களில் "ஸ்ரீ உடைய தெவ" என பொரிக்கபட்டுள்ளது. இவரது நாணயங்கள் மதுரை,கரூர்,கும்பகோணம்,பரமக்குடியில் கிடைத்துள்ளது.
சேதுபதியின் பிற நாணயங்களில் சிவன்,காளை,மயில் சின்னங்கள் வந்துள்ளது.
ஆறுதலை முருகனை நாணயங்களில் முதன் முதலில் தமிழகத்தில் நாணயங்களாக வெளியட்டவர்கள் சேதுபதி மன்னர்களே.
மயில் சின்னம் பொரித்த சேது மன்னவர்கள்.
சேதுபதிகளின் குல தெய்வமான இராஜ இராஜேஸ்வரி அம்மனை நானயங்களில் வெளியிட்ட சேதுபதிகள்.
சேதுபதி,கோனேரிராயன் மற்றும் யாழ்பாண அரசனின் நாணயங்கள் ஒற்றுமை:
சேதுபதிகளின் நாணயங்களில் நந்தி மயில் சின்னங்களே அதிகமாக வந்துள்ளன.இதேபோல் யாழ்பாண அரசனின் நானயங்களிலும்
நந்தி மயில் சின்னங்களே அதிகமாக வந்துள்ளது. இடைக்காலத்தில் சோழநாட்டை ஆண்டை கோனேரிராயன் என்ற வைத்தியலிங்க
காலிங்கராயனின் நாணயங்களிலும் நந்தி,சூரியன்,வாள் சின்னங்கள் வந்துள்ளது குறிப்பிடதக்கது.
கொனெரிராயன் காலம் 14 ஆம் நூற்றாண்டு .யாழ்பாண அரசனின் நாணயம் 15 ஆம் நூற்றாண்டு. சேதுபதியின் காலம் 17 ஆம் நூற்றாண்டு.
இந்து மூன்று அரசர்களின் நாணயங்களிலும் வந்துள்ளது.
சேதுபதி நானயங்களில் கடல் திரவியமான "முத்து" அதிகமாக இடம்பெற்ரதுடன். தென் கடல் முழுவதும் "முத்து சல்லாபம்" சேதுபதியிடம் இருந்ததால் முத்து என்ற பெயரை தன் பெயரோடு சேர்த்து கொண்டனர். மேலும் முத்து நாணயங்களிலும் இடம் பெற்றது
நன்றி:
தமிழக தொல்லியல் துறை
ஆறுமுக சீத்தாராமன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.