Thursday, October 15, 2015

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள்

https://thevar-mukkulator.blogspot.com/2023/02/blog-post_23.html

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1

https://thevar-mukkulator.blogspot.com/2021/08/blog-post.html

அரிய மறவர் கல்வெட்டுகள் சில....

https://thevar-mukkulator.blogspot.com/2019/04/blog-post.html

மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்)

https://thevar-mukkulator.blogspot.com/2016/04/blog-post.html

மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில்

https://thevar-mukkulator.blogspot.com/2015/10/blog-post.html

புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன்

https://thevar-mukkulator.blogspot.com/2014/05/blog-post_4546.html

https://thevar-mukkulator.blogspot.com/2013/08/blog-post_13.html

https://thevar-mukkulator.blogspot.com/2016/03/blog-post_19.html


மறவர்களுக்கு ஆதி நாள் முதலே பாண்டிய நாட்டின் ஆளுமையும் சுவடுகள் உள்ள ஆதாரங்களை நாம் பதிவிட்டுள்ளோம். இதற்க்கு மேலே ஒரு சாண்று இதோ குலசேகர பாண்டியன் காலத்தில் விருதுநகர் மாவட்டம் "திருத்தங்கலில்" மறவர் பாடி காவல் உள்ள கல்வெட்டு சான்று. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக 2004 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுக்கும் பனியில் சந்திரவாணன்,சொ.சாந்தலிங்கம்,பொ.இராஜேந்திரன் யாவரும் திருத்தங்கல்,சோழபுரம்,இராசபாளையம் பகுதிகளில் கல்வெட்டுகளை சேகரித்துள்ளனர். தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆவணங்கள் இவைகள்.



கல்வெட்டு தொடர் என்.545/1992 ஆண்டு:கி.பி.1190-1217 வட்டம்:சிவகாசி ஊர்:திருத்தங்கல்
அரசு:பாண்டியர் மன்னன்:குலசேகரன் இடம்:நின்ற நாராயன பெருமாள் கோவில்

குறிப்பு: பிராமணர்களுக்கு தேவதானம் வழங்கிய செய்தி

கல்வெட்டு:

...........அவனிமுழுதுடையாளோடு வீற்றிருந்த கோச்சடை வர்மரான ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் குலசேகர பாண்டிய தேவர்களூக்கு பதிமூன்றாவது திரை ஆண்டு............. ..................

20.. கற்பூர விலையும் மறப்பாடிகாவல் எங்கள் வினியோகங்கள் தடிப்பதற்க்கு மற்றுள்ள சில்வரி.........

செய்திகள்:

கோயில்களில் கற்பூர விலையும் மற்றும் மறவர்களின் பாடிகாவல் நீங்களான வரிகளனைத்தினுள்ளும் உண்டாக என மறவரின் பாடிகாவல் திசைகாவல்கள் உரிமை 11- ஆம் நூற்றாண்டிலே இருந்துள்ளது என மற்றுமோர் கல்வெட்டு.
13-ஆம் நூற்றாண்டு மறவர் பாடிக்காவல் பற்றிய கல்வெட்டு

இடம் : செங்குன்றாபுரம் ,விருதுநகர் மாவட்டம்

அரசு : பாண்டியர்

செய்தி :  கொற்றனேரியும் சேந்தநேரியும் மறவர் பாடிகாவலுக்காக அனுபவித்து வந்ததை குறிப்பிடுகின்றது.

கல்வெட்டு:

மீனசிங்காசனத்தில் வீற்றிருப்ப......வெந்திகிரி .........காணவேங்கையும் சிலையும் கெட............
கற்பக நிழற்களை வளம் பெருகிட...................செங்குடி நாட்டு செங்குடி நகரான அபிமான மேருபுறத்து
ஸ்ரீ கைலாஸாரி தேவ கன்மிகளுக்கு ம்   மகா கொற்றனேரிக்கும் சேந்தனேரிக்கும் மறவர் பாடிகாலுக்கு அனுபவித்து வந்தமையால் .இத் தேவர் பழதேவதானம் நீக்கி .......அவர்களை(மறவர்) தவிர்த்து  ................


மேற்படி கல்வெட்டும் சேந்தனேரி காவலும் கொண்ட மறவர்கள்  பழையனூர் மறவர்கள் யாவரும்
ஓடாத்தூர் செண்பகமூர்த்தி அய்யனார் கோவிலில் முதல் மரியாதை பெரும் குழுவினர் என்றும்.
இக்கோவில் பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட கோவில் என்றும் அக்கோவிலில் இரட்டை கயல் மீன்  சின்னம் காணப்படுகிறது என்பதும் குறிப்பிட படுகிறது.

நன்றி: கார்த்திக் தேவர்
விருதுநகர் மாவட்ட கல்வெட்டுகள்

இதற்க்கு வலு சேர்க்கும் வகையில் திருத்தங்களில் மேலும் ஒரு கல்வெட்டு:

கல்வெட்டு தொடர் என்.545/1992 ஆண்டு:கி.பி.1070-1210 வட்டம்:சிவகாசி ஊர்:திருத்தங்கல்
அரசு:பாண்டியர் மன்னன்:கோனேரின்மை கொண்டான் இடம்:நின்ற நாராயன பெருமாள் கோவில்

குறிப்பு: இறைவனின் நித்தியபூசைக்கு கொடுக்கப்பட்ட தானம்

கல்வெட்டு:

...........ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான் திருத்தங்கல் மூல பருஷை............. .................. நாடு பிடித்த அமரிலாதேவனுக்கு ஒற்றி வைக்கலே

5. முத்தூர் கூற்றத்து கப்பலூருடையான் வீர சோழதேவனுள்ளிட்டோர் இம் மறவர் பக்கலே விலைகொண்ட.........

செய்திகள்:

நாடுபிடித்த் அமரிலா தேவன் என்னும் மறவனின் நிலத்தை பின்னாலில் முத்துர் கூற்றத்து கப்பலூருடையான் வீர சோழ தேவனுக்கு விலைக்கு கொடுத்தனர்

நாடுபிடித்த மறவன் என்னும் கல்வெட்டு அழகர் கோயிலில் உள்ள கல்வெட்டுகளும் இதற்க்கு துனை நிற்கின்றது.

கல்வெட்டு தொடர் என்.230/2003 ஆண்டு:கி.பி.1215-1239 வட்டம்:மேலூர் ஊர்:அழகர் கோவில்
அரசு:பாண்டியர் மன்னன்:மாறவர்மன் சுந்தரபாண்டியன்
இடம்:அழகர் கோவில்

குறிப்பு: இக்கோயில் வைனவர்களுக்கு தானம் வழங்கிய செய்தி

கல்வெட்டு:

........... ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் குலசேகர கொனேரின்மைகொண்டான் கீழ் இரனியமுட்டத்து திருமாலிஞ்சோலை................ ..................

15. இரண்டாவது முதல் தேவதான இறையிலி நிலம் இறுப்பதற்க்கு இடம்பெறவேண்டுமென்று நாடு பிடித்தவர்களும் மறவரும் வன்பற்றாய் பற்றின நிலங்கள்.........

செய்திகள்:

மாறவர்மன் சுந்தரபாண்டியன் வைனவர்களுக்கு வழங்கிய செய்திகளில் நாடுபிடித்தவர்களும் மறவரும் கைகொண்ட நிலங்கள் வன்பற்று என வழங்குவதாக என குறிப்பு உள்ளது.
இந்த கோனேரின்மை கொண்டான் என்னும் பாண்டியரின் கல்வெட்டுகளில் மறவர் பற்றிய செய்திகள் அதிகம் வருகிறது ஏற்கனவே காரண மறவரின் பெயரும் குண்டையங்கோட்டை மறவரின் பெயரும் அதிகமாக வந்துள்ளது. கோனேரின்மை கொண்டானின் கல்வெட்டான திருநெல்வேலி பால்வன்னநாதர் கோவில் கல்வெட்டில்.
இது ராபர்ட் ஸ்வெல்ஸ் மற்றும் மக்கென்சி பிரபுவால் எடுக்கப்பட்ட திருநெல்வேலி பால்வன்ன நாதஸ்வாமி கோவிலில் உள்ள கல்வெட்டு வழக்கமாக மாறவர்மன் என்றால் மாறபெருமாள் என கல்வெட்டை எளிதாக கூறிவிடுவார்கள் ஆனால் "பெருமாள்" என்னும் பெயர் முன்னாடியே வந்துவிட்டது.
கல்வெட்டு வாசகம்:
க.என்:
268/1908 வருடம்:1574 மன்னன்:கோனேரி இன்மை



கொண்டான் பராக்கிறம பாண்டியன்

செய்தி:  "திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்ட பெருமாள் சீவல மறவர்  குனராமனான பாண்டிய குலசேகர தீட்சிதர்" திருக்காலுடைய தம்பிரான் தீட்சிதருக்கு நிலங்களை அளித்தார் என வாசகம் கூறுகின்றது.

இதுபோக அழகர்கோவில் கல்வெட்டுகளில் 301/2003 கோனரின்மை கொண்டான் கல்வெட்டுகளில்........
ACHYUTARAYABHYUDAYAM lOQ

குண்டையத்தேவர் தம்பி ஒய்சாள தேவர்.....திருமாலிஞ்சோலை நின்ற பெருமாளுக்கும் வைஷ்னவர்களும்ம் வழங்கிய செய்திகள் வருகிறது. அழகர்கோவிலில் ஒருகாலத்தில் முதல் மரியாதை இருந்ததாக முதுகளத்தூர் கொண்டையங்கோட்டை மறவர்கள் கூறுகிறார்கள். கல்வெட்டில் குண்டையங்கோட்டை மறவர் என பதிவாகியுள்ளது பாண்டிய மன்னன் வெட்டும் பெருமாள் கல்வெட்டில்,







இதேபோல்......திருத்தங்கல் பகுதிகளில்.ஒரு அரையன் பற்றிய கல்வெட்டு மறவர் பக்கல் என வருகிறது. இது குண்டையன் கோட்டை என்னும் பெயரோடு சம்பந்தம் உள்ளதுபோல் தெரிகின்றது..

கோனேரின்மை கொண்டான் 497/1999 இராஜபாளையம் பகுதிகயில் கொண்டையன் ஏரி என ஒரு கல்வெட்டு வந்துள்ளது ஆராயதக்கது.

561/1992 கோனெரின்மை கொண்டான் பாண்டியன் கல்வெட்டில் .......குண்டின கோத்திரத்து புருஷோத்தமன் காலிங்கராயன் மலைமேல்.......... 546/1922 சடையவர்மன் பாண்டியன் கல்வெட்டில் ......திருவரங்க தேவன்........

இவைகள் ஆராயதக்கதே.

கமுது கோர்ட்டு தீர்ப்பு என எழுதிய பிரவாகன் என்னும் மூடன் மறவர்களுக்கு 15ஆம் நூற்றாண்டுக்கு முன் பாடிகாவல் உரிமை இருந்ததா என கேட்டுள்ளர் உரிமை மட்டுமல்ல பாண்டியரின் முழு அடையாளமும் மறவர்களைத்தான் சார்ந்தது என இங்கு குறிப்பிடுகின்றோம்.

நன்றி:
தமிழ்நாடு தொல்லியல் துறை
சொக்கலிங்கம்,
சந்திரவாணன் 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.