படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை
http://thevar-mukkulator.blogspot.com/2015/06/virachillaipadai-patru-pandiyan.html
க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது
புதுக்கோட்டை கல்வெட்டுகளில் கானப்படும் கல்வெட்டுகளில் படைப்பற்றுகளை பாண்டிய நாட்டு எல்லைக்கு உட்பட்ட படைப்பற்று என்றும் சோழ நாட்டு படைப்பற்று என்றும் இருவகை படுத்த்லாம்
பாண்டிய எல்லை படைப்பற்று:
1.குருந்தன் பிறை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
2.விரையாச்சிலை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
3.கோட்டூர் இலம்பலக்குடி கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
4. தெக்காடூர்(ஐந்தூர் படை பற்று) கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
5.அமாந்தூர் கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
சோழர் எல்லை படைப்பற்று:
1.சிங்கமங்கலம் கவி நாடு சோழராட்சிப்பகுதி
2.சீரனூர் வட சிறுவாயில் நாடு சோழராட்சிப்பகுதி
3.மேலப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
4.கீழப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
புதுக்கோட்டை மறவர்கள் சேதுபதி மறவர் என்ற வாள்கோட்டை மறவர் என்று திருச்சி மானுவேல் hemmingway கூறுகிறார் ஆக செம்பி நாட்டு மறவர்கள்
ஏழு கிளைகளில் பிச்சா மரக்கால் கிளை மட்டும் உண்டாம்
மூவாயிர பேரரையன்
ஜூன்-29
பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர் தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்
அப்போது அய்யனார் சிலையடியில்
"இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"
என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக
கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
"கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"
Inscriptions of Varaguna Maharaja a pandya king
"கோவரகுணமாராயர்க்கு யாண்டு ....நந்தா விளக்கு எரிய முத்தூர் கூற்றத்து
பெருமாத்தூர் மறவன் அணுக்க பேரரையன் கடம்ப வேளாண்
வைத்த பழங்காசு பதினைந்து
மறவனான வேளான் அனுக்க பேரரையன்:
சோழகோன்,நரசிங்கதேவர்,பல்லவராயர்,கோனாட்டு பேரரையர்,ஆவுடையார்,பஞ்சவராயர்
I.P.S.21.புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மகாமண்டபத்தில் கீழை படிக்கட்டில் தெற்கில் உள்ல கல்வெட்டு "பனையூர் மறவரில் வளத்து வாழ்வித்தான் ஆன தெள்ளியர் உள்ளிட்டாரும்,நரசிங்கத்தேவர்,பஞ்சவராயர்,பல்லவராயர் உள்ளிட்டாரும் வத்தாயரானை திருமேனியர் அடைக்கலங்காத்தன் உள்ளிட்டாரும் ஆக இந்ததாலுவகை பேரரையரயர் மேற்படியூர் மறவரில் சோழகோன் ஆன கோனாட்டு பேரரையர் உள்ளிடாரும் ஆவுடையான் ஆன வகைப்பேரும் உள்ளிட்டாரு மோம் நம்மில் இசைந்த பிரமானம் பன்னிக் கொண்டபடி செம்மயிர் விரோதம் இரண்டு வகையில் அழிவில்....உண்டான........"
கோனாட்டு நாட்டார் செம்மநாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன்:
அரசுமகன்-குலதெய்வம் -கோவனூர்.
கோனாட்டு செம்ம நாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன். இதுவே கல்வெட்டுகளில் வரும் அரசுமக்கள் என்னும் அரையர்களாகும். அரசமகன் என்பதுவே வட மொழியில் "ராஜ்புட்" என்பதாகும்.
எனவே இங்கு வாழும் அரையர்,பேரரையர்,நாடாழ்வார்,நாட்டார் இவர் யாவரும் அரச மக்களின் வழி வந்தோரின் வம்சாவளிகளே ஆகும். இது இன்னும் கல்வெட்டுகளில் உறுதிப்படுத்தப்படுகின்றது.
காலம் :15 ஆம் நூற்றாண்டு
இடம்:பனையூர் -காணாடு
செய்தி :
பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால்
கல்வெட்டு:
இத்திரு நிலைக்கால் இரண்டுமே கீழ் படியும் உட்பட இவ்வூர் மறவரில் நயினான் எழுந்திர வென்றான் போரில் வென்ற தேவன் தன்மம்
நரசிங்கத்தேவன் இந்த பகுதியில் உள்ள ஒரு குறுநிலை மன்னன் கட்டலூர் பகுதியை ஆண்ட மறவர் குலத்தை சார்ந்தவன் என விராலிமலை கல்வெட்டு கூறுகின்றது."அடைக்கலம் காத்தனான நரசிங்கதேவன்" என நாயக்கர் காலம் வரை ஆண்டுள்ளார்.
மேற்படியூர் மேற்படி கோவில் மேற்படி மண்டபத்தில் கிழக்கு வரிசை உத்திரத்திலுள்ள கி.பி. நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு "இந்த உத்திரம் இவ்வூரில் மறவரில் காத்தரான தெள்ளியர் உள்ளிட்டாரும் திருமேனியரான நரசிங்க தேவன் உள்ளிட்டாரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைய திருமேனியரான ஆவுடையார் தன்மம்" என்று கூறுகின்றது. மேற்படி கோவிலில் அர்த்த மண்டபத்தில் நுழைவு
கிழவன்
I.P.S(53) மேற்படி கிராமம் சிகாநாத சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரம் தென்சுவரில் சாசன்ம் ஸ்வஸ்தி ஒல்லையூர் கூற்றத்து நெருஞ்சிக்குடி கோப்பரகேசரி பன்மருக்கு யாண்டு 10வது இவ்வூர்களுக்கு என்னை திருநலக்குன்றத்து மகாதேவர் பண்டாரத்துக்கு இரு பொன் கழஞ்சு மேற்படியூர் கலந்துது ................ பொன் கழஞ்சும் மேற்படியூர் கிழவன் மறவன் இரு நாழி நெய் ஆட்டங்கொண்ட........
வையன் சொக்கனார்
காலம்:முதலாம் இரசராசன்(கி.பி.10 ஆம்நூற்றாண்டு) 5.வது ஆண்டு
I.P.S.(93) திருமையம் தாலுகா சித்தூர் திருப்பூமிஸ்வரர் கோவிலில் தென்புரம் சுவரில் உள்ள சாசனம் செல்வியும் காந்தளூர் சாலை காலமறுத்தருளி...............ராஜராஜ கேசரி கேரளாந்தக வளநாட்டு......சிற்றையூர் இருக்கும் பனையூர் மறவன் சொக்கனார்.......................
பனையூர் சிவன் கோவில் கல்வெட்டு
சாமந்தர்
"போரில் வென்று மாலையிட்டானான சாமந்தர் கருத்தாண்டானான மறவனான.........
பாண்டியனின் மறவர் படையை வென்ற குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி:
I.P.S.(163) திருமையம் சேரலூர் வம்சோத்தூரர் கோவில் கல்வெட்டு
)ஸ்வஸ்தி ஸ்ரீ புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சக்கரம்.......... வென்னிலக்கொடி படைவீரர் புன்னரில் புக்கிழந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகமழிய மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு காஞ்சி தரித் தென்மதுரை புறம் நினைத்தரு நெடும்படை....
குடுமியான்மலை சிகாநாதர் சுவாமி கோவிலில் உள்ள இரண்டாம் பிராகரத்து சுவரில் I.P.S(166)ஸ்வஸ்தி ஸ்ரீ புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சக்கரம்............ வென்னிலக்கொடி படைவீரர் புன்னரில் புக்கிழந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகமழிய மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு
சத்ருகேசரி
காலம்:இரண்டாம் குலோத்துங்கன் 10-வது ஆண்டு I.P.S.(218) திருமையம் தாலுகா பேரையூர் நாகநாத சுவாமி கோவிலில் முன்பாக பாறையிலுள்ள சாசனம்: ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜகேசரி...சோழத்தேவர்க்கு யாண்டு 15ஆம்..............ஸ்வரமுடைய மகாதேவருக்கு மறவரில் பெற்றான் குவான் சத்ருகேசரி பேரரையனை இரா.............
ஒல்லையூர் மதுரை மறவர்கள்
காலம்:12 ஆம் நூற்றாண்டு. I.P.S.(309)திருமையம் தாலுகா இடையாத்தூர் சுயம் பிரகாசமூர்த்தி கோவிலில் சுவாமி கோவிலில் வடபுரம் ஸ்வஸ்தி கோமாற பன்மறான திரிபுபுவன சக்கரவர்த்தி சோனாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து விஜாபிசேகம் பன்னியருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு .................... ............திசகண்ட தேவர்க்கு இக்கூற்றத்து ஒல்லையூர் மதுரை மறவரோம். ஊராயிசைந்த நாங்கள் விலைபிரமானம்...................................
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266) I.P.S.(346)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்
நம்பி ஐநூற்றுவ பெரியான்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்......................குடுத்த பரிசாவது..... முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்............... இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்..............................
மாத்தன் மக்கள்,உய்யவந்த தேவர்
I.P.S.(421)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்......................இப்படிக்கு இவ்வூர் மறவன் நாராயன உய்யவந்த தேவர் தற்குறியும் இவ்வூர் மறவன் மாத்தன் மக்கனாயன் தற்குறியும்....இப்படிக்கு ஐநூற்றுவ பேரரையன் தற்குரியும்....
பொன்னம்பலம் கட்டிய நயினான்
I.P.S.(501) திருமையம் தாலுகா சித்தூர் திருப்பூமிஸ்வரர் கோவிலில் வடபுறம் சுவரில் உள்ள சாசனம் ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியத்தேவர்க்கு யாண்டு 3வது...........இந்நாயனார் கோவில் கெற்பகிரகம் இசைபித்தன் இவ்வூர் மறவரில் கோவனூர் கூட்டத்து பொன்னம்பல கட்டிய கங்கன் தன்மம்..........
I.P.S.(644)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்தி ஸ்ரீ சீவல்லவ தேவருக்கு யாண்டு 13ஆவது ஆண்டு .............விரையாச்சிலை மறவரில் நயினான் பொன்னம்பலங் கட்டிய கங்கனுக்கு மேற்ப்டியூரில் அரசு மக்களில் இராசராச........
நாடாள்வான் விஜயாலயத்தேவன்
ஆதளையூர் நாடாள்வான் பொன்னனான விஜாயலயத்தேவர் கி.பி(1219)
I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு.......திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவன் அவையன் சாத்தன் நாட்டானான அதளையூர் நாட்டுப்பேரரையன்............................
I.P.S(527) செம்பாடூர் திருவாருடையார் திருக்கோவில் கீழ்புரம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்..........................உப்பமுதும் மிளகமுதும்.......மறவன் வயக்காலும்.... .......மறவன் வயக்கால் கினற்றின் பாதியும்.....................
பெருங்குடி மறவராயர்கள்:(கி.பி.1270)
I.P.S.(554) ஆலங்குள தாலுகா திருவரங்குள உறதிஸ்வரர் கோவிலில் சுவாமி கோவிலில் சுவாமி முன் மண்டபத்து தென்புரம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலசேகரத் தேவருக்கு யாண்டு இரண்டாவது கானாட்டு பெருன் கரைக்குடியான திருவரங்குள நல்லூர் ஊராயிசைந்த ஊரோம் நாங்கள் பெருங்குடி மறவரையர்கள் பக்கல் விலையும் ஒற்றியுங்கொண்டுடைய............
நாட்டரசு கொண்ட (அரையர், பேரையர்,நாட்டார்)
நாடாள்வார்கள்(அரசு உயர் அதிகாரியான மறவர்கள்)
I.P.S.(395)
படைப்பற்று குடியிருப்பின் அரையர்களே ஊரவையராக செயல்பட்டனர்.கீழக்குருந்தன்பிறை,மேலக்குருந்தன்பிறை ஆகிய ஊர்களில் மறவர்களே குடியிருப்புகளில் அரையர்களே மாறன் சுந்தர பாண்டியனின் ஆதனூர் கல்வெட்டில் குறிப்பிடபடுகின்றனர்.அரையர்களின் பெரியானான அரசு மிகா நாடாள்வான்,கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன்,பெருமாள் அரசனான வென்றுமுடிகொண்ட நாடாள்வான் ஆகியோரும்,மேலக்குருந்தன் பிறை ஊரசைந்த சோண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான்,அரசன் கண்ணிறைந்தனான இராசசிங்க நாடாள்வான்,காளையக்காள நாடாள்வான் தேவன் வில்லியான நாடாள்வான் இவர்கள் அனைவரும் படைப்பற்றின் அரையர்களாக ஆதனூர் சிவன் கோயிலில் காரான் கிழமைக்கு நிலம் வழங்கியதாக கொடை விளங்குகிறது. மறவர்கள் இப்பகுதியில் படைபற்று அம்பலம்,ஊரவையர்,நாடாள்வார்,அரையர்,பேரரையர்,நாட்டரசு கட்டியவர்களாக கல்வெட்டுகளில் கானப்படுகின்றனர்.
I.P.S.(565) குளத்தூர் தாலுகா குடுமியான் மலை மேலிருக்கும் பாலசுப்பிரமனிசுவாமி கோவில் தென்புறம் கல்வெட்டு
இடையள நாட்டு இஞ்சல் கிழவன் குழியன் ஆச்சனான அரிகுலாந்தக வாரணப் பேரரையன் ஆகியோர் ஆளுக்கு ஏழரைக் கழஞ்சுத் துளைப்பொன்னளித்து இக்கோயில் வளாகத்தில் நந்தாவிளக்குகள் ஒளிர உதவினர்.68 அவந்தியகோவப் பல்லவரையர் அளித்த பொன்னுக்கு ஊராரிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கப்பட்டது.69
ஸ்வஸ்திக் ஸ்ரீ எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் ஸ்ரீ குலசேகரத்தேவருக்கு கடலைஅடையா இலங்கை கொண்ட சோழவளநாட்டு இரண்டு கரைனாட்டு நாட்டவரோம் இன்னாட்டு கடலூர் நாட்டு பனையூர் குளமங்கள அரையர்களுக்கு தரம் பன்னிக்கொடுத்து பரிசாவது இவர்களுக்கு நாட்டரசுகட்டி இவர்...............ஐங்கல வெல்லும் சிலந்திவனப்பெருமாள் பாதம்...
I.P.S.(639) குளத்தூர் திருவேங்கை வாசல் வியாபுரீஸ்வரர் கோவில் மேலச்சுவரில்
மக்கள் நாயன்
ஸ்ரீ கோச்சடை பன்மறான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவல்ல தேவர்க்கு யாண்டு 34வது ஆண்டு.......... இன்நாட்டு மடமையிலாப்பூர் மறவரில் மக்கள் நாயனுக்கு பிரமானம் பன்னி குடுத்த பரிசாவது......................
I.P.S.(640) குளத்தூர் திருவேங்கை வாசல் வியாபுரீஸ்வரர் கோவில் மேற்படி சுவரில் ஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவல்ல தேவர்க்கு யாண்டு 31வது ஆண்டு............. ......வேங்கைவாசல் உடைய நாயினார் கோயிலுக்கு...............................சிகாரி........இன்நாட்டு மக்கள் நாயன் மறவனா................
I.P.S.(644)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்தி ஸ்ரீ சீவல்லவ தேவருக்கு யாண்டு 13ஆவது ஆண்டு .............விரையாச்சிலை மறவரில் நயினான் பொன்னம்பலங் கட்டியங்கானுக்கு மேற்ப்டியூரில் அரசு மக்களில் இராசராச........
I.P.S.(821)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
உடையான் பாண்டவதூதன்,சேரபாண்டிய தேவர்,வாண்டாயத் தேவர்
சுபஸ்மஸ்த சகாத்தம் 1405 இதல் மேல் செல்லா நின்ற கல்வாசல் நாட்டு நெல்வாசல் ஊராக அமைந்த ஊரவரோம் பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவரில் உடையான் எப்போதும் மதியானான பாண்டவர் தூதனுக்கும் நல்லூர் உடையார் ஆன வேனாவுடையார் உலகனுக்கும் அழகன் உள்ளிட்டாருக்கும் சாத்தார் காத்தார் சேர பாண்டிய தேவர் உள்ளிட்டாருக்கும் அகத்தி ஆண்டார் காத்தாரான வாண்டாயத் தேவனுள்ளிட்டாருக்கும் இவ்வனைவருக்கும் பாடிகாவல் விலைப் பிறமானம் பன்னிக்கொடுத்தார் விசயாலத்தேவர் காலமாய்.........................
I.P.S.888) குளத்தூர் தாலுகா பெருமாநாடு கிராமத்துக்கு அருகாமையில் ரஸ்தாவில் பக்கமாக நடப்பட்ட கல்லில்
பகரவாளெடுத்த வெற்றிமாலையிட்டான்,வெத்திவாளெடுத்த வெற்றிமாலையிட்டான்
வெற்றிமாலையிட்டன் கதை புறநாநூறில் வரும் தந்தையும்,கனவனையும்,மகனையும் இழந்த மறக்குடி மாதரின் பாடலான ஒக்கூர் மாசாத்தியார் பாடலை ஒத்தது.
சாலிவாகன கன சார்த்தம் 17 74 கலியுக ஸ்காத்தம் 4993..................... வயல கானாடு புல்வயலில் யிருக்கும் மறவரில் மொதலாவது பகரவாளெடுத்த மாலையிட்டான் அம்பலக்காரன் வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் பெரிய வெள்ளைதேவன் அம்பலக்காரன் தெண்காசிப் பாளையத்தில் பட்டவன் பூசை மாலையிட்டான் அம்பலக்காரன் போறத்துக் கோட்டையில் பட்டவன் மேல்படி மகன் உலகப்ப மாலையிட்டான் கீழாநெல்லி பாளையத்தின் பட்டவன் மகன் பழனின்றி மாலையிட்டான் மகன் துரைச்சாமி மாலையிட்டன் பன்னி வச்ச விநாயக.................
மாராயன்-உசிதன் அரச கம்பீர மாராயன் புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா நெருஞ்சிக்குடி உதய மார்தாண்டர் கோவில் கருவரையில் மேற்கு வெளிப்புற சுவரில் வடக்கு பகுதியிலுள்ள கல்வெட்டு
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு சோழவள நாட்டு ஒல்லையூர் கூற்றத்தில் நெருஞ்சிக்குடி ஊரவரோம் புறமலை நாட்டு பொன்னமராவதி மறவன் உசிதன் இராச இராசனான அரசகம்பீர மாராயன் இவ்வூர் வயலில் நிலம் அரைமாவும் இல் வயக்கல் விலை கொண்டு இவ்வூர் மகாதேவர் உதயமார்த்தாண்ட ஈஸ்வரமுடையார்க்கு தேவதனமாக குடுத்தோம் அரசகெம்பீரன் ..................
ஐநூற்றுவ பேரரையன்
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா விரையாச்சிலை தேவவயல் தென்னி வயலுக்கு பொதுவான ஆலமரத்து தெற்கு வரப்பிற்கு பகுதியிலுள்ள கல்வெட்டு
ஸ்ரீ குலசேகர தேவர்க்கு ஸ்வஸ்தி ஸ்ரீ கல்வாயில் நாட்டு சுந்தர பாண்டிய புரத்து அரவத்துடைய பிள்ளை திருமாலிஞ்சோலை தாதர் சோதியர் மூவர்க்கு விரையாச்சிலை மறவன் நம்பி ஐநூற்றுவ பேரரையர் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்ட தேவர் குளமும்...............
ஆசிரியம் தீத்தார் வெள்ளந்தாங்கிய காடவராயன் சித்திரகுப்பத் தேவன்
வெள்ளந்தாங்கினான்:
இடம்:குளத்தூர்,புல்வயல்
ஆண்டு:13ஆம் நூற்றாண்டு
அரசு:சோழர்
செய்தி:
ஸ்வஸ்தி ஸ்ரீ காந்தூர் வெள்ளந்தாங்கினான் ..........வயல் பாதியும் புல்வயல் மறவன் காடவராயன் மகன் சுந்தரபாண்டியனுக்கு ஆசிரியம்.
துவாரபதி பேரரையன்
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா வாழைக்குறிச்சி பழைய சிவன் கோவிலில் தெற்கு சுவரில் வாசற்படிக்கு அருகில் உள்ள கல்வெட்டு
ஸ்வஸ்தி ஸ்ரீ கூடலூர் நாட்டு பனையூர் மறவரில் பரமன் உய்யவந்த தேவனான துவராவதிப் பேரரையன் தன்மம்.........
ஆவுடையார் குஞ்சரத்தன்
திருமையம் தாலுகா கோனாட்டு நாயகி அம்மன் பழைய கோவிலில் இருந்த பிரித்து எடுக்கப்பட்ட தற்போதைய கோவிலுக்கும் போட்டுள்ள பலகை கல்லில்:
இந்த பக்கல் இவ்வூர் மறவரில் ஆவுடையார் குஞ்சரத்தன் தன்...................
எதிர்முனை சினப்பேரரையன்
மேலப்பனையூர் சிவன் கோவிலில் சுவாமி அர்த்தமண்டபத்தில் வடக்கு சுவர் ஓரமுள்ள தின்னைக்கு மேலுள்ள கரை கல்வெட்டு:
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சந்தன பிரம்மனான எதிர்முனை சினப்பேரரையன் தன்மம்...................
எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன்
மேறபடி கோவிலில் மண்டபத்தில் உள்ள நடுத்தூனில் உள்ள கல்வெட்டு
இந்த தூன் இவ்வூர் மறவரில் எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன் தன்மம்
துக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் ,அகிலாண்டேஸ்வரி கோவில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படி உள்ள கல்வெட்டுகள்.
காலம்: பாண்டியராட்சி 13 ஆம் நூற்றாண்டு
செய்தி:
இம்மண்டபத்தில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படிகள் செய்து கொடுத்தவர்களின் விபரம் கிழே:
1.குன்றாண்டார்.
2.தேசி மாதாக்கள்
மாதன் மக்கள்:
கல்வெட்டு என்: 33:2
"இப்பாக்கல் பனையூர் மறவரில் மாதன் மக்கள் தன்மம்"
"மாதன் மக்கள் என்பது மாத்தாண்டன்(சூரியன்) மக்கள் அல்லது கொற்றவை மாதாவின்(அகிலாண்டேஸ்வரி) மக்கள் என்ற கூட்டம் கொண்ட மறவர்கள் பாற்கல் செய்து கொத்துள்ளனர்.
சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12
""இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்"
பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.
கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13
""இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்"
பனையூர் மறவரில் கோனாட்டு பேரரையன் சோழகோன் ஒருவன் கொடுத்த நிலைக் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.
சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
"இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்"
பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.
சாமந்தார்:
கல்வெட்டு என்: 33:27
""இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டானான ஒற்றையில் வெட்டி தன்மம்"
சாமந்தார் என்பது தளபதி என்னும் பதவி. கருத்தாண்டான் என்னும் சாமந்தார் செய்த பாக்கல்லு செய்து கொடுத்தமை.
வாள்வீசிகாட்டினான்:
கல்வெட்டு என்: 33:32
""இந்த உத்திரம் மேற்படி கலத்து மறவரில் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் தன்மம்"
குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் குடுத்த தன்மம்..
சோழசிங்கபேரரையன்,மழவராயன்,மாளுவசக்கரவர்த்தி:
கல்வெட்டு என்: 33:34
"இந்த உத்திரம் மேற்படி குலமங்கலத்து மறவரில் அவையன் சோழசிங்க பேரரையன் உள்ளிட்டாரும் இரங்கல்மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதிமேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்"
குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அவையன் சோழ சிங்க பேரரையனும் இரங்கல்மீட்ட மழவராயனும் மேற்படி பாதியை கட்டி கொடுத்தவன் வளத்தான் மாளுவசக்கரவர்த்தி என்னும் மறவனும் குடுத்த தன்மம்.
இந்த கல்வெட்டுகள் யாவும் ஆவணம் 19 என்னும் கல்வெட்டு இதழில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்தவை ஆகும்.
இந்த கல்வெட்டுகள் யாவும் A.R.E இல் பதிவு செய்யபட்டும் புதுக்கோட்டை கல்வெட்டுகளின்(P.I) பதிவு செய்யபட்ட என்கள் கொண்டவை. இது இன்றும் பனையூர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளது.
நன்றி:
திரு.கார்த்திக் தேவர் அவர்கள்.
ஆவணம் 19,2008 இதழ்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்
பரியேறு தேவன்
மேற்படி கோவிலில் மண்டபத்தில் மேற்கு சுவர் இனைந்துள்ள கரை கல்வெட்டு
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் பரியேறு சேவுக தேவன் தன்மம்...........
மேற்படி கோவிலில் அர்த்த மண்டபத்தில் திருநிலைகாலில் உள்ள கல்வெட்டு
ஆதனமான சோழகோன்
இந்த திருநிலைக் கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்...............
ஷை.. சுவாமி கோயிலில் மகாமண்டபத்தில் வாயிர்படிக்கு அருகிலுள்ள தூனின் மீது உள்ள பொதிகையில் உள்ள கல்வெட்டு:
வல்ல கண்ட பேரரையன்
இப் போதிகை இவ்வூர் மறவரில் வல்லா கண்டன் பேரைரையன் தன்மம்.........
மேற்படி கோவிலில் உள்ள தெற்கு வெளியில் உள்ள கரை கல்வெட்டு
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டன் ஒற்றையில் வெட்டி தன்மம்...........
மேற்படி கோவிலில் உள்ள மண்டபம் தெற்கு படிக்கட்டுக்கு பக்கத்தில் உத்திர கல்வெட்டு
இந்த உத்திரம் மேற்படி குளமங்கலத்து மறவரில் அடைக்கலம் காத்தாரான வாள்வீசி காட்டியான் தன்மம்...........
மேற்படி கோவிலில் உள்ள மண்டபத்தில் நடுவரிசையில் கிழக்குத்தூன் மீது போடப்பட்டுள்ள உத்திரத்தில் உள்ள கல்வெட்டு இந்த உத்திரம் மேற்படி குளமங்கலத்து மறவரில் அவையன் சோழ சிங்கப் பெரியான் உள்ளிட்டாரும் இரங்கல் மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதி மேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்...........
மேற்படி கோவிலில் உள்ள மண்டபத்தில் கிழக்கு வரிசைதூன் மீதுள்ள கஜலெட்சுமி சிலைக்கு இரு பக்கமும் உத்திரக் கல்வெட்டு
தெள்ளியர்,ஆவுடையார் வென்றார்,நரசிங்கதேவன்
இந்த உத்திரம் இவ்வூர் மறவரில் காத்தனான தெள்ளியர் உள்ளிட்டாரும் திருமேனியரான நரசிங்க தேவன் உள்ளிட்டரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைதிருமேனியர் ஆவுடையார் உள்ளிட்டரும் இளைய திருமேனியர் ஆவுடையார் வென்றாரும் தன்மம்.......
குளமங்களம் சிவன் கோயிலில் மகாமண்டபத்தில் கரையில் உள்ள கல்வெட்டுக்கல் சில:
திருவாண்டான்
பனையூர் குளமங்கலத்திலிருக்கும் மறவரில் வீரமுடி திருவாண்டான் சதா சேர்வை............
குளமங்களம் சிவன் கோயிலில் மகாமண்டபத்தில் மற்றோர் கல்வெட்டு:
மழவராய சின்னதிருமேனியர்
பனையூர் குளமங்கலத்திலிருக்கும் மறவரில் மழவராய சின்னதிருமேனியர் சதா சேர்வை............
மழவராயர் என்னும் பட்டம் தனக்கு மட்டுமே உள்ளது என்று புலம்பும் நபர்களுக்கு. இங்கு கானாடு,கோனாடு பகுதியில் 4க்கும் மேற்பட்ட கல்வெட்ட்டில் மழவராயர் மறவர் என கூறப்பட்டுள்ளது.
மேற்படி மண்டபத்தில் மேற்கு சுவரில் வாசற்படிக்கு மேற்கிலுள்ள கல்வெட்டு: இந்த முதல் காற்படை ஒரு படையுட திருநிலை காவலுக்கு தெற்கு கொடிக்கு வடக்கு இவ்வூர் மறவரில் பரியேறு சேவுகன் தன்மம்...........................
மேற்படி தாலுகா மேலப்பனையூர் அகிலாண்டேஸ்வரி கோவில் முன்புள்ள கலங்காத கண்ட விநாயகர் கோவில் தூன் கால்:பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில்
அரசு:
ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி :
ஸ்வஸ்திஸ்ரீ பனைந்தலை மறவன் சோழைஉடையான் முப்பேருடையான் தன்மம்........
அரசு:
ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி :
ஸ்வஸ்திஸ்ரீ பூபாலகுடி மறவன் பெரியநாசி சதிராண்டி தன்மம்........
அரசு:
ஆண்டு:15-ஆம் நூற்றாண்டு
செய்தி :
இந்த முகவனையும் திருநிலைகாலும் கொவனூர் மறவரில் சூரியதேவர் பூவாலைகுடி ஆண்டார் முற்பாடு கொடாதார் தன்மம்........
இத திருநிலைக் கால் பனையூர் மறவரில் கண்டு போகா சித்திரகுப்பன் சாத்தன் சாத்தமகா தன்மம்.............
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் பொன்னமராவதி ராஜேந்திரசோழீஸ்வரர் கோவில் முகமண்டபத்தில் கல்வெட்டு:
மீனாட்சி கோத்திரம் கொண்ட மறவர்கள்
சாலி வாகன சகாத்தம் 18 12க்கு மேல் செல்லா நின்ற விரோதி வருடம் மறமன்னறாகிய சேதுகாவலர் மீனாட்சிக் கோத்திரத்து பழனியப்ப அம்பலக்காரனுக்கு பொன்ன்மராவதி நகரத்தார்...........................
இவை அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் அரசு கல்வெட்டு ஐ.பி.எஸ். என்று அங்கீரிக்கபட்டது. இந்த கல்வெட்டுகளை பல ஆண்டுகளாக சேர்த்தவர் திரு இரசேந்திரன் அவர்கள் மேலைபனையூரில் ஆசிரியராக பனியாற்றி ஒய்வு பெற்றவர்.
புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள்
பட்டப்பெயர் --------------------------------------- ஊர்ப்பெயர்
------------------------------------------------------------------------------
1. சீவலவன் ----------------------- பொன்னமராவதி
2. கிழவன் --------------------------- நெரிஞ்சிக்குடி
3. பெற்றான் குவாவன் சத்ரு கேசரி --------------------- கோட்டியூர்
4. அதளையூர் நாட்டுப்பேரரையன் ----------------------- மாங்குடி
5. மதுரை மறவர் ------------------------ ஒல்லையூர்
6. ஐநூற்றுவ நம்பி பேரரையன் ------------------------ விரச்சிலை
7. கண்டுபோகாப் பேரரையன் --------------------------- விரச்சிலை
8. காண்டீபன் சோலைமலை அழகாமுரியர் ---------------------------- விரச்சிலை
9. அம்புராய பேரரையன் --------------------------- விராச்சிலை
10. பெரிய கண்டன் --------------------------- விரச்சிலை
11. சின்னக்கண்ணுண்டான் --------------------------- விராச்சிலை
12. ராமிண்டான் --------------------------- விராச்சிலை
13. வழிக்கால் நாட்டி விராச்சிலை
14. வணங்காமுடி சாந்தி மதுவன் --------------------------- விராச்சிலை
15. நகரி அம்பலம் --------------------------- விராச்சிலை
16. பொதிகையன் --------------------------- விராச்சிலை
17. பஞ்சவராயன் --------------------------- விரச்சிலை
18. மணிகட்டி பல்லவராயன் --------------------------- விராச்சிலை
19. தாலிக்கு வேலியான் --------------------------- விராச்சிலை
20. செருத் தேவன் --------------------------- விராச்சிலை
21. காசான் --------------------------- விரராச்சிலை
22. கொம்பையன் --------------------------- விராச்சிலை
23. வடலி காத்தான் --------------------------- விராச்சிலை
24. ஆனைவெட்டி மாலைசூடும்
வலஞ்சுவெட்டி தேவன் --------------------------- விரராச்சிலை
25. பொன்னம்பலம் கட்டிய நயினான் --------------------------- விரராச்சிலை
26. .மாலையிட்டான் --------------------------- விரராச்சிலை
27. மாளுவராய பேரரையர் --------------------------- விராயச்சிலை
28. மாடாயன் --------------------------- விராச்சிலை
29. மக்கனாயன் --------------------------- விராச்சிலை
30. குப்பச்சி தேவன் --------------------------- விராச்சிலை
31. மாத்தான் நாட்டான் பொன்னம்பலம் கட்டினான் --------------------------- விரராச்சிலை
32. நாலாயிரப் பெரியான் கானாடு காத்தான் --------------------------- விரராச்சிலை
33. அதிரப்புலி --------------------------- கோட்டூர்
34. வீரப்புலி --------------------------- விரசை
35. மொத்தியப்புலி --------------------------- விரசை
36. செண்டுப்புலி --------------------------- செவலூர்
37. சோரப்புலி வாச்சார்வெட்டி --------------------------- லெம்பலக்குடி
38. அரசு முடிகாத்தான் --------------------------- செவலூர்
39. கரிசல் வெட்டி தேவன் --------------------------- கோட்டூர்
40. ஆறாயிரப்பன்னை பெருநாளிப்பேரரையன் --------------------------- கோட்டூர்
41. கரிசல் வெட்டி தேவன் --------------------------- கோட்டூர்
42. கருக்குவெட்டி தேவன் --------------------------- கோட்டூர்
43. கொப்பாண்டான் --------------------------- கோட்டூர்
44. வலங்கியாண்டான் --------------------------- செவலூர்
45. தூங்கான் --------------------------- கோட்டூர்
46. மூக்குபரித்த தேவன் --------------------------- லெம்பலக்குடி
47. கொடுக்கி மீண்டான் --------------------------- பனையூர்
48. கலங்காப்புலி --------------------------- பனையூர்
49. மக்கள் நாயன் --------------------------- மடமயிலாப்பூர்
50. எதிர்முனை சினப்பேயன் --------------------------- பனையூர்
51. கலங்காத கண்டன் வையிரமதிச்சான் --------------------------- பனையூர்
52. மாத்தான் மக்கள் --------------------------- பனையூர்
53. கர்த்தரான தெள்ளியர் --------------------------- பனையூர்
54. மறமன்னர் --------------------------- பனையூர்
55. வாள்கோட்டை ராயன் --------------------------- பனையூர்
56. உய்யவந்த தேவனான துவராபதி பேரரையன் --------------------------- பனையூர்
57. காடவராயர் சித்திரகுப்பத்தேவன் --------------------------- பனையூர்
58. சேதுராய பாண்டியப் பேரரையர் --------------------------- பனையூர்
59. மாணிக்கப் பேரரையர் --------------------------- பனையூர்
60. சாத்த குட்டியார் --------------------------- பனையூர்
61. ஆசிரியம் தீத்தார் --------------------------- பனையூர்
62. வாச்சாவெட்டி --------------------------- பனையூர்
63. பாண்டியான் வீடு --------------------------- பனையூர்
64. ஆதியான் --------------------------- பனையூர்
65. அடையார் மடக்குஞ்சரத்தான் --------------------------- பனையூர்
66. எட்டி பொன்னன் சுந்தரபாண்டியன் --------------------------- பனையூர்
67. பரியேறு தேவன் --------------------------- பனையூர்
68. ஆதன் அழகிய சோழக்கோன் கோனாட்டு பேரரையன் --------------------------- பனையூர்
69. மாத்தன் மக்கள் --------------------------- பனையூர்
70. சாமந்தர் --------------------------- பனையூர்
71. வல்ல கண்டன் பேரரையன் --------------------------- பனையூர்
72. திருமேனியன் நரசிங்கதேவர் --------------------------- பனையூர்
73. மூவர் ஆவுடையார் --------------------------- பனையூர்
74. ஆவுடையார் வென்றான் --------------------------- பனையூர்
75. இளையதிருமேனியன் --------------------------- பனையூர்
76. கண்டுபோகாப் சித்திரகுப்ப பேரரையன் --------------------------- பனையூர்
77. வன்னிமிண்டன் சூட்ட தேவன் --------------------------- பனையூர்
78. பிச்சான் --------------------------- பனையூர்
79. அவையன் சோழ சிங்கன் --------------------------- குளமங்கலம்
80. பரியேறு தேவன் கோடாளிப் பேரரையன் --------------------------- குளமங்கலம்
81. வாள்வாசி மதயானை சிலம்பாத்தேவன் --------------------------- குளமங்கலம்
82. மதமடக்கிய விஜய தேவர் --------------------------- குளமங்கலம்
83. வலம்புரி பேரரையர் --------------------------- குளமங்கலம்
84. காலிங்கராயன் ஆவாரத்தேவர் --------------------------- குளமங்கலம்
85. நாலாயிரம் பெரியான் சோழயான் --------------------------- குளமங்கலம்
86. பாண்டியர் மானங்காத்தான் --------------------------- குளமங்கலம்
87. வயிரமதிச்ச போர் வென்று காத்தான் --------------------------- குளமங்கலம்
88. வன்னிப் பேரரையன் சோலைமலையான் --------------------------- குளமங்கலம்
89. போர்வெண்ண வலங்கொண்டான் --------------------------- குளமங்கலம்
90. சோரப்புலி ஆசிரியம் காத்தான் --------------------------- குளமங்கலம்
91. மதியானை மிதிச்சான் --------------------------- குளமங்கலம்
92. ராச சடையக்கத் தேவன் --------------------------- குளமங்கலம்
93. மூளுவிராயன் வீரமுடி --------------------------- குளமங்கலம்
94. வலங்கை பேரரையன் --------------------------- குளமங்கலம்
95..இரங்கல் மீட்ட மழவராயன் --------------------------- குளமங்கலம்
96.மாளுவசக்கரவர்த்தி --------------------------- குளமங்கலம்
97.வாள்வாசி அடைக்கலம் கர்த்தான் --------------------------- குளமங்கலம்
98.பரியேறு சேவுகத் தேவன் --------------------------- குளமங்கலம்
99. வீரமுடி திருவாண்டான் --------------------------- குளமங்கலம்
100..பெருங்குடி மறவரையர்கள் --------------------------- குளமங்கலம்
101.வாரண(யாணை) சதிரன் பேரரையன் --------------------------- குளமங்கலம்
102..வெள்ளந்தாங்கிய காடவராயன் --------------------------- குளமங்கலம்
103.சேதுக்காவலன் --------------------------- குளமங்கலம்
104.உடையான் எப்போதும் மதியானான பாண்டவர் தூதன் --------------------------- வேலங்குடி
105.அகத்தி ஆண்டார் வாண்டாயத் தேவர் --------------------------- அகத்தூர்
106.சாத்தார் காத்தர் சேர பாண்டியத்தேவர் --------------------------- புல்வயல்
107. பகரவாளெடுத்த வெற்றிமாலையிட்டான் --------------------------- புல்வயல்
108.வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் --------------------------- புல்வயல்
109.உசிதன் அரசகம்பீர மாராயன் --------------------------- நெருஞ்சிக்குடி
110.மழவராயர் சினனதிருமேனியர் --------------------------- குளமங்கலம்
111.ஒல்லையூர் பிரமன் மீனராயன் --------------------------- ஒல்லையூர்
112.கல்வாயில் நாடாள்வான் --------------------------- கல்வாயில்
113.பெரியான் அரசனான ஏழக மிகா நாடாள்வான் --------------------------- கீழக்குருந்தன்பிறை
114.கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன் --------------------------- கீழக்குருந்தன்பிறை
114.சோனாண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான் --------------------------- மேலக்குருந்தன்பிறை
115.தேவன் கண்டனான காளையக்கால் நாடாள்வான் --------------------------- மேலக்குருந்தன்பிறை
116.கன்னிறைந்தனான இராசசிங்க நாடாள்வான் --------------------------- மேலக்குருந்தன்பிறை
117.அரசு மிக பேரரையன் --------------------------- விராச்சிலை
118.நகளங்க பேரரையன் --------------------------- விராச்சிலை
119.பொற்கலனெருக்கி பேரரையன் --------------------------- விராச்சிலை
120.வைகை சொக்கனார் --------------------------- விராச்சிலை
நற்றான் பெரியான் என்னும் வீரமழகிய பல்லவராயன் குலோத்துங்க சோழ கடம்பராயன் என்னும் தானவ பெருமாளின் அகம்படிய மறமுதலியாக வேலை பார்த்துள்ளான். அகம்படிய மறமுதலி என்பது மறவர் தலைவர் ஒருவர் அகம்படித்தொழில் செய்தமையாகும்
உயர் திரு.அமரர் மாணிக்கம் அவர்கள்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.