Tuesday, August 13, 2013

படைப்பற்று அரையர்களான விரயாச்சிலை மறவர்கள்

புதுகை மாவட்டத்தின் தெற்கு,தென்மேற்கு பகுதியில் குறிப்பாக வெள்ளாற்றின் தெற்கே கோட்டூர்,லம்பக்குடி வரையிலும் மறவர்குடியிருப்புகள் செரிவாக காணப்பட்டன.சிலம்பு கூறும் கோவலன் கண்ணகி பயணத்தில்,கொடும்பாளூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் இம்மக்கள் வாழ்ந்த குறிப்புகள் காணப்படுகின்றன.
புதுக்கோட்டை மறவர்கள் சேதுபதி மறவர் என்ற வாள்கோட்டை மறவர் என்று திருச்சி மானுவேல் hemmingway கூறுகிறார் ஆக செம்பி நாட்டு மறவர்கள்
ஏழு கிளைகளில் பிச்சா மரக்கால் கிளை மட்டும் உண்டாம்






புறப்பொருள் வெண்பாமாலையில் "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி" என்பது மறவரை குறிக்கும் தொடராகும்.கொற்றவை வழிபாட்டினை பின்பற்றுபவராக இன்றளவும் புதுக்கோட்டை மறவரின் சடங்குகள் காணப்படுகின்றன.


சோழ,பாண்டியர் கல்வெட்டில் மறவர்கள் 




தமிழ் வேந்தர்கள் அனைவரும் மறவர் படைகளை கொண்டிருந்தனர். இதில் குலோத்துங்க சோழனின் குடுமியான்மலை கல்வெட்டுகளில்"பாண்டியரது மறவர் படையையும் ஏழகப்படையையும் வென்றதாக" க.என்.(163,166) கூறுகிறது.இரண்டாம் இராஜேந்திரனின் சிவகங்கை சோழபுரம் பகுதி கல்வெட்டில்"பாண்டிய மறமடக்கிய இராஜேந்திர சோழ மங்கலம்" என பெயரிட்டதாக கல்வெட்டு கூறுகிறது.பாண்டிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டிய தேவன் கல்வெட்டில்,"புக்கிலந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகம்ழிய மறப் படையுடன் எழுக படை" என குடுமியான் மலை கல்வெட்டு கூறுகிறது. பாண்டிய மன்னன் சீவல்லவ தேவர் விராயச்சிலை கல்வெட்டுகளில் "முன்னள் குல சேகர தேவருக்கு இவ்வூர் மறவர் நம்பியான் ஐந்நூற்றுவ பெரியான் " என்று க்ல்வெட்டு கூறுகிறது.இராஜராஜ சோழனின் கல்வெட்டும் மட மயிலாபூரில் உள்ள மறவரை பற்றி கூறுகிறது.குலோத்துங்கனின் குடுமியான் மலைக் கல்வெட்டும்,திருவேங்கை வாசல் சிவன் கோயில் கல்வெட்டும் அவ்வூரில் உள்ள மறவரை பற்றி குறிக்கிறது.மாறவர்மன் குலசேகரபாண்டியனின் கல்வெட்டில்(393)கான விராயச்சிலை கல்வெட்டில் மறவர்களான அரசமக்களும் ஊரவையர்களும் ஐந்நூற்றுவ தேவன், ஐந்நூற்றுவ பேரரையன் என்பார் சுட்டபட்ட செய்தி அரசமக்களுக்கும் வணிககுழுவினருக்கும் உண்டான தொடர்பை விளக்குகின்றன.ஏழூர் நாட்டார் செம்மநாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன்:

அரசுமகன்-குலதெய்வம் -கோவனூர்.


ஏழூர் செம்ம நாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன். இதுவே கல்வெட்டுகளில் வரும் அரசுமக்கள் என்னும் அரையர்களாகும். அரசமகன் என்பதுவே வட மொழியில் "ராஜ்புட்" என்பதாகும்.
எனவே இங்கு வாழும் அரையர்,பேரரையர்,நாடாழ்வார்,நாட்டார் இவர் யாவரும் அரச மக்களின் வழி வந்தோரின் வம்சாவளிகளே ஆகும். இது இன்னும் கல்வெட்டுகளில் உறுதிப்படுத்தப்படுகின்றது.
காலம் :15 ஆம் நூற்றாண்டு 
இடம்:பனையூர் -காணாடு 

செய்தி :
பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால் 

கல்வெட்டு:

இத்திரு நிலைக்கால் இரண்டுமே கீழ் படியும் உட்பட இவ்வூர் மறவரில் நயினான் எழுந்திர வென்றான் போரில் வென்ற தேவன் தன்மம் 


14639720_1694163197568063_6184877443620908800_n



துக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் ,அகிலாண்டேஸ்வரி கோவில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படி உள்ள கல்வெட்டுகள்.

காலம்: பாண்டியராட்சி 13 ஆம் நூற்றாண்டு

செய்தி:
இம்மண்டபத்தில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படிகள் செய்து கொடுத்தவர்களின் விபரம் கிழே:


1.குன்றாண்டார்.
2.தேசி மாதாக்கள்

மாதன் மக்கள்:

கல்வெட்டு என்: 33:2
"இப்பாக்கல் பனையூர் மறவரில் மாதன் மக்கள் தன்மம்"

"மாதன் மக்கள் என்பது  மாத்தாண்டன்(சூரியன்) மக்கள் அல்லது கொற்றவை மாதாவின்(அகிலாண்டேஸ்வரி) மக்கள் என்ற கூட்டம் கொண்ட மறவர்கள்  பாற்கல் செய்து கொத்துள்ளனர்.


சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12
""இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்"

பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.

கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13
""இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்"

பனையூர் மறவரில் கோனாட்டு பேரரையன் சோழகோன் ஒருவன் கொடுத்த நிலைக் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.


சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
"இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்"

பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.

சாமந்தார்:
கல்வெட்டு என்: 33:27
""இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டானான ஒற்றையில் வெட்டி தன்மம்"

சாமந்தார் என்பது தளபதி என்னும் பதவி. கருத்தாண்டான் என்னும் சாமந்தார் செய்த பாக்கல்லு செய்து கொடுத்தமை.


வாள்வீசிகாட்டினான்:
கல்வெட்டு என்: 33:32
""இந்த உத்திரம் மேற்படி கலத்து மறவரில் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் தன்மம்"

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் குடுத்த தன்மம்..


சோழசிங்கபேரரையன்,மழவராயன்,மாளுவசக்கரவர்த்தி:

கல்வெட்டு என்: 33:34
"இந்த உத்திரம் மேற்படி குலமங்கலத்து மறவரில் அவையன் சோழசிங்க பேரரையன் உள்ளிட்டாரும் இரங்கல்மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதிமேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்"

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அவையன் சோழ சிங்க பேரரையனும் இரங்கல்மீட்ட மழவராயனும் மேற்படி பாதியை கட்டி கொடுத்தவன் வளத்தான் மாளுவசக்கரவர்த்தி என்னும் மறவனும் குடுத்த தன்மம்.

இந்த கல்வெட்டுகள் யாவும் ஆவணம் 19 என்னும் கல்வெட்டு இதழில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்தவை ஆகும்.
இந்த கல்வெட்டுகள் யாவும் A.R.E இல் பதிவு செய்யபட்டும் புதுக்கோட்டை கல்வெட்டுகளின்(P.I) பதிவு செய்யபட்ட என்கள் கொண்டவை. இது இன்றும் பனையூர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளது.

நன்றி:
திரு.கார்த்திக் தேவர் அவர்கள்.
ஆவணம் 19,2008 இதழ்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்


"கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"

சோழர் கால மறவர் நிறுவிய அய்யனார் சிலை கண்டுபிடிப்பு

கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை  கண்டுபிடிப்பு --தினத்தந்தி செய்தி

ஜூன்-29

பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர்  தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்

அப்போது அய்யனார் சிலையடியில்
"இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"

 என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக
கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.


நன்றி: தினதந்தி

படைபற்றுகள்

படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).







படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர். க.எண்(393).இதை இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிறது.


விராயச்சிலை மறவர்கள் அரையர்களாகவும்,ஊரவைராகவும் நாடாள்பவராகவும்

மறவர்கள் அனைவரும் தேவர் எனும் பட்டம்.இருப்பினும்.இவர்களே அரையர்களாகவும்,ஊரவையர்களாகவும்,நாடாள்பவராகவும் திகழ்ந்துள்ளனர். அரையர் எனும் சொல்லை அரசர் எனும் சொல்லிற்கு மாற்றாக கருதலாம்.அரையர்களை ஊர் அரையர்,பேரரையர்,நாட்டார்,நாட்டரையர்(அ)நாடாள்வான் என வரிசைப்படுத்தலாம்.ஒல்லையூர் மங்கலத்து ஊராயிசைந்த ஊரவராக மதுரை மறவரோம் என மாறவர்மன் சுந்தரபாண்டிய தேவன் இடையாத்தூர் கல்வெட்டில்(க.எண்309) மறவர்குழுக்களின் பேரரையர் 6 பேரும் நாடாள்வார்(மறவர்) இருவரும் இடம் பெற்றுள்ளனர்.இங்கு சுட்டப்படும் அரையர்களும் நாடாள்வாரும் மறவர்களே.இவர்களின் பெயர்களும் கல்வெட்டு என்னும் பின்வரும் தலைப்புகளில் கூறப்படும்.




சிற்றரசர்கள்

இதைப்போல் வ.சூரக்குடி என்ற சிற்றரசு மறவர் இனத்தவரான பொன்னரசு கண்ட பராக்கிரம விஜயாலத்தேவர் என்பவர் ஆண்டது.இவர்கள் மறவர் இனத்தின் உட்பிரிவான வன்னிய மறவர் என்ற இனத்தை சார்ந்தவர்கள். இது 12-16ஆம் நூற்றாண்டு காலத்தில் புதுக்கோட்டைக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசமான கானாடு,ஒளிநாடு,இராஜேந்திரமங்கலம்,ஒளிநாடுக்கு தலைநகராக இருந்துள்ளது.இது கானாடு,கோனாடு மறவர் அரையர்களையும் வெள்ளாளர்களையும் குடிமக்களாய் கொண்டது.இவரை பற்றி 40-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் திருமயம்,விராச்சிலை பகுதியில் உள்ளதாக 40-கல்வெட்டையும் ஆராய்ந்த சுப்புராயுலு மற்றும் "புதுக்கோட்டை வரலாறு எழுதிய வீ.மானிக்கம். தம் நூலில் கூறுகிறார். கி. பி. 1399ம் ஆண்டுக் கல்வெட்டு28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுவதால், அக்கால கட்டத்தில் நின்றருளியதேவரின் திருமுன் படிக்கட்டின் புறச்சுவராக இருந்த பெருந்தேவிக் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.







க/எண்:ஐ.பி.எஸ் 681

இடம்:திருவேங்கைவாசல்,குளத்தூர் தாலுகா,புதுக்கோட்டை

வயக்ஹ்ரபுரிஸ்வரர் கோவில்

அரசர்:விஜயநகர கம்பன்ன உடையார்

காலம்:கிபி.1374

கல்வெட்டு:

ஸ்ரீ மது கம்பண உடையார்க்கு....திருவேங்கைவயல் தானத்தாரும் ஊரவரும்  பாடிகாவல் சுவந்திரம்...............பெருஞ்சுனையூர் வயல் மறவன் காலி வயல் வட மயிலாப்பூர்..........

செய்தி:

பாடிகாவலுக்கு வழங்கிய நிலங்களில் மறவன் காலி வயல் செய்தி




க/எண்:ஐ.பி.எஸ் 639

இடம்:திருவேங்கைவாசல்,குளத்தூர் தாலுகா,புதுக்கோட்டை

வயக்ஹ்ரபுரிஸ்வரர் கோவில்

அரசர்:சடையவர்மன் சீவல்லப பாண்டிய தேவர்

காலம்:கிபி.14 ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு:

ஸ்ரீ கோச்சடைபன்மரான திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவலதேவர்க்கு யாண்டு...ஆடி... பெருவாநாட்டு மடமயிலாப்பூர் மறவரில் திருவேங்கை வாசல் உடையார் வேங்கை வந்த பெருமாள் கோயில் தேவதான..

கணக்கு... சீகார்யம் செய்வோர்களும் இந்நாட்டு மடமயிலாபூர் மறவரில் மகள் நாயநான...தாய்க்கு பிரமானம்...

செய்தி:

திருவேங்கை வாசல் கோவிலுக்கு மடமயிலாப்பூர் மறவன் திருவேங்கை வாசல் உடையான்

அதே ஊரில் இருக்கும் மறவரான மக்கள்நாயனின் நிலங்களை தேவதானமாக தந்துள்ளார்......



க/எண்:ஐ.பி.எஸ் 504

இடம்:திருவரங்குளம் ஆலங்குடி தாலுகா,புதுக்கோட்டை

ஹரதீஸ்வரர் கோவில்

அரசர்:குலசேகர பாண்டிய தேவர்

காலம்:கிபி.12 ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ குலைசேகரதேவர்க்கு யாண்டு...இரண்டாவது கானநாட்டு பெருங்கரைக்குடியான திருவரங்குள நல்லூர் ஊராயிசைந்த ஊரோம் நாங்கள் பெருங்குடி மறவரையர்கள் பக்கல் விலையும் ஒற்றியும் கொண்டுடைய வயல்...

செய்தி:

திருவரங்குளம் கோவிலுக்கு தேவதானமாக மறவர்குல பெருங்குடி அரையர்கள் நிலத்தை கொடுத்த

செய்தி.பெருங்குடி என்ற பெயரே மறவர்கள் ஆளும் வர்க்கம் என அடையாளபடுத்துகிறது.



க/எண்:ஐ.பி.எஸ் 527

இடம்:செம்பாடு ஆலங்குடி தாலுகா,புதுக்கோட்டை

திருவையாருடைய நாயனார் கோவில்

அரசர்: சுந்தர பாண்டிய தேவர்

காலம்:கிபி.13 ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு....ஜயசிங்க குலகால வளநாட்டு..........உட்பட மறவாகலும் மறவன் வயக்கல் கினற்றின்

செய்தி:

மறவன் வாகல் மற்றும் மறவன் வயக்கல் வந்த செய்தி


ஆண்டு:கி.பி 1317

அரசர்:முதலாம் மாறவர்மர்

குலசேகரபாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ கோமாறபன்மரான...

குலசேகரதேவர்க்கு யாண்டு..

...புறமலைநாட்டு திருக்கோளக்குடி றமுதலிகளில் கன்னிமலை நாடாழ்வான் உள்ளிட்டோரோம் 

எங்களூர்க்கு பொது கானிஇராசேந்திர சோழன் குடிகாடும் செழியன் ஏம்பலும்..ஆக இக்குடிக்காடு......

செய்தி:

திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலைநாடழ்வான் ஊர் பொதுக்கானியான இராசேந்திரசோழன் குடிக்காடு

செழியன் ஏம்பல் ஆகியவற்றை இறைவனுக்குஇறையலி. சோழன்,செழியன் பெயரில் குடிக்காடு உள்ள

கன்னிமலை நாடாழ்வான் திருக்கோளக்குடி மறவன்.





க/எண்: ஐ.பி.எஸ் 181

ஆண்டு:கி.பி 1146-74

அரசர்:இரண்டாம் இராஜ

இராஜ சோழர்

கல்வெட்டு:

தன்னன் எதிரிலி பெருமாள் அகம்படிய மறமுதலிகளில் நற்றான் பெரியன் வீரமழகிய பல்லவராயன்.

செய்தி:

புல்வயல் அரசன் கடம்பராயனிடம் அகம்படியராக பனியாற்றிய வீரமழகிய பல்லவராயன்.

Note:

Ahambadiya Mara mudhali- A Maravan worked as Ahambadiya sect for the pulvayal



க/எண்: ஏ.அர்.ஈ 81/1916

ஆண்டு:கி.பி 1290

அரசர்:முதலாம் மாறவர்மர்

குலசேகர பாண்டியர்

கல்வெட்டு:

ஸ்வஸ்திஸ்ரீ...குலசேகர தேவர்க்கு யாண்டு...... விரையாச்சிலை..... ....அரைசமக்களும் மறமுதலிகளும் ஊராக 

இசைஞ்ச ஊரோம்.... விரையாச்சிலை அரைசமக்களும் மறமுதலிகளும் இசைந்த ஊரோம்.......

செய்தி:

திருக்கோளக்குடி இறைவனுக்கு விரையாச்சிலை அரசமக்களும்

மறமுதலிகளும் விற்றுதந்த நில ஆவணம்.விரையாச்சிலை படைபற்றில் உள்ள அரசமக்களும் மறமுதலிகளும் 

மறவர்களே இதில் அரையர் காமபோதராயர் உள்ளிட்ட சிலர் வாங்கியது..........





க/எண்: ஏ.ஆர்.ஈ 86-1916

ஆண்டு:கி.பி 1283

அரசர்:முதலாம் மாறவர்மர்

குலசேகரபாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ கோமாறபன்மரான... குலசேகரதேவர்க்கு யாண்டு.. விருதராஜபயங்கர வளநாட்டு அரைசமக்களும் மறமுதலிகளும் எங்களூர் அரசுமக்களில் நாட்டான்..போதராயர்


செய்தி:

வீரையாச்சிலை அரசர் மக்கள்

மறமுதலிகளும் இறைவனுக்கு வழங்கிய இறையிலி....





விரையாச்சிலை அரையர்கள் பற்றிய செய்தி.




பாண்டியர் ஏழகப்படையும் மறவர் படையும் இருந்த ஆதாரம்


ஆண்டு:கி.பி பதிமூன்றாம் நூற்றாண்டு

அரசர்:முதலாம் சுந்தர பாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி கோனேரி கொண்டான்...பொன்னமராவதி......

கோயில் தானத்தார்க்கு இவ்வூர் மறவரும்,இடையரும்,வலையரும் உட்பட்ட குடியர்களும் இவ்வூர்



செய்தி:

திருக்கோளக்குடி வாழ் மறவர்,இடையர்,வலையர் உட்பட்ட குடிகள் ஆகியவற்றிற்குத் தந்த அரசுசார் வரியினங்கள்...



ஆண்டு:கி.பி 1249

அரசர்:முதலாம் மாறவர்மர்

சுந்தர பாண்டியன்

கல்வெட்டு:

ஸ்ரீ கோமாறபன்மரான...

சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு.....




...பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் பக்கல்...


செய்தி:

பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவர் இறையிலி செய்தி..














அரையர்கள்(அரசமக்கள்)

விரையாச்சிலை படைப்பற்றில் மறவர்களே ஊரவையர்களாகவும்,அரையர்களாகவும் ஆளும் வர்க்கத்தினராக செயல்பட்டுள்ளனர்.இதன் கல்வெட்டுகளில் குறிக்கும் அரசமக்களாகவும் நாடாள்பவர்களாகவும் கூறும் கல்வெட்டுகளில்.மாறவர்மன் குலசேகரபாண்டியதேவன்(க.என்.395,565) மற்றும் விரையாச்சிலை மாறவர்மன் குலசேகரபாண்டிய தேவன் கல்வெட்டுகளான க.எண்(346,421,455,534) குறிக்கிறது.





பேரரையர்கள்

கானாடு கோனாடு இருபெரும் பகுதிகளில் மறவர்களே அரையர்களாகவும் பேரரையர்களாகவும் இருந்துள்ளனர்.இவர்களது பெயர்கள் சடையன் சுந்தரபாண்டிய்ன் கல்வெட்டு(346)லில் குருந்தன் பிறை மீனவராயன்,இராசிங்க தேவன்,நாட்டான் உய்யவந்த தேவன் என தெரிகிறது. மற்றும் ஊரவராக நாட்டன் சோண்டன்,வீரசிங்க பேரரையன்,அத்திமாலையிட்டான்,பெரியநாட்டுப் பேரரையன்,கானாட்டு பேரரையன்,வையன் சொக்கனார்,நகளங்க பேரரையன்,நம்பு செய்வான்,செருத்திவனப்பெருமாள்,குன்றந்தேவனான தென்னவதரையன்,பொற்காரி சூரியதேவன்,விழிங்கைதரையன்,அண்ணல்வாயில் சேரபாண்டியதேவன்,அரியான் உடையான்,வளவதரையன்,தேவதரையன்,வளவன் பல்லவதரையன்,குலோத்துங்க பல்லவதரையன்,செம்பிய பேரரையன்,பில்லமங்கல கல்வெட்டில்(409),ஆதனூர் பூபாலராயன்,திருப்புவனமுடியான்,செழியதரையன் முதலிய மறவ அரையர்கள் கையொப்பமிட்ட செய்தி காணப்படுகின்றது.


நாடாள்வார்கள்(நாட்டரையர்கள்)

கானாடு கோனாடு இருபகுதிகளிலும் மறவர்களே நாடாள்வார் அல்லது நாட்டரையர்களாக இருந்துள்ளனர்.இதில் புதுக்கோட்டை விசுங்கிநாடு,தெங்கவி நாடு வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கள்ளர் இனத்தவர்களே எண்ணற்ற அரையர்களாகவும் நாடாள்பவர்களாகவும் இருந்துள்ளனர்.மறவர்,கள்ளர் இனத்தவரே அரையர்களாகவும்,நாடாள்பவர்களாகவும்,பாடிகாப்போனாக வல்லாண்மை பெற்ற இனக்குழுக்களாக கல்வெட்டு செய்திகளில் இடம்பெற்றுள்ளனர்.இதில் மறவ நாடாள்பவர்களாக இராஜசிங்க நாடாள்வான்(இந்நாளில் அர்.எஸ்.மங்கலம்(இராம்நாடு)),அழகியநாடாள்வான்,சோதியாள்வான்,க.என்(512,693) கல்வாயில் நாடாள்வான்,அதளையூர் நாடாள்வான் என்பவர்கள் அரச பிரதிநிதிகளாக பனியாற்றியுள்ளனர்.இவர்களுடன் கீழக்குருந்தன்பிறை பெரியான் அரசனான ஏழகமிகாம நாடாள்வான்,கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன்,பெருமாள் அரச நாடாள்வான்,தில்லை சோண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான்,தேவன் காளயகால் நாடாள்வான் இவர்கள் யாவரும் மறவ அரசு நாடாள்பவராக விரயாச்சிலை குடுமியான் மலை கல்வெட்டுகளில் கையொப்பமிட்டுள்ளனர்.
வெள்ளந்தாங்கினான்:

இடம்:குளத்தூர்,புல்வயல்
ஆண்டு:13ஆம் நூற்றாண்டு
அரசு:சோழர்

செய்தி:
ஸ்வஸ்தி ஸ்ரீ காந்தூர் வெள்ளந்தாங்கினான் ..........வயல் பாதியும் புல்வயல் மறவன் காடவராயன் மகன் சுந்தரபாண்டியனுக்கு ஆசிரியம்.


விரையாச்சிலை மறவரின் இதர பொதுப்பணிகள்: 

செவலூர் கல்வெட்டில் மறவரில் கோவனூர் கூட்டத்து மாத்தன் நாட்டானான பொன்னம்பலங் காட்டிய கங்கன் எனும் குறிப்பு தென்படுகின்றது.13-ஆம் நூற்றாண்டு திருப்பூவாலக்குடி உடைய நாயனார் கோயிலில் தங்கள் பெயரால் மறமாணிக்கன் சந்நிதி ஏற்படுத்தி நிலக்கொடை வழங்கினர்(க.என்.444).கானாடு கோனாடு இரு பகுதி கரைமார்களாலும் மறவர்களுக்கு நாட்டரசுகட்டி,கோவனூர் கூட்டத்து விஜய அரசு நாராயண பெருமாள் எனும் குறிப்பு(566,565,268) வழங்குகிறது.மாறன் சுந்தர பாண்டியன் பேரையூர் கல்வெட்டில் மலையாளங்குடி மறவ அரசுமக்களான இராசராச நாடாள்வான்,உத்தமசோழ நாடாள்வான்,அஞ்சாதான் அரங்குளப்பெருமாள் தேவன் ஆகியோர் பூசலில் குழுக்களாக மோதிக்கொண்ட செய்தி வருகிறது. மறமானிக்கம் என்பது மறவர்குலத்தின் சிறப்பு பெயராகவும் அலயங்களில் சன்னதியும் ஏற்படுத்த பட்டது.இவர்களை அண்டி வாழ்ந்த பிறமக்களான ஆயர்,மறமாணிக்ககோன்,மறமாணிக்க மாராயன் எனவும்,கம்மாளர்கள்..மறமாணிக்க தட்டான்,கைக்கோளன் எனும் சிறப்பை பெற்றனர்(க.என்.278).புலவன் ஒருவனுக்கு மறச்சக்கரவர்த்தி பிள்ளை என பட்டம் கொடுத்துள்ளனர்.


































நற்றான் பெரியான் என்னும் வீரமழகிய பல்லவராயன் குலோத்துங்க சோழ கடம்பராயன் என்னும் தானவ பெருமாளின் அகம்படிய மறமுதலியாக வேலை பார்த்துள்ளான். அகம்படிய மறமுதலி என்பது மறவர் தலைவர் ஒருவர் அகம்படித்தொழில் செய்தமையாகும்









































































உயர் திரு.அமரர் மாணிக்கம் அவர்கள்
மாங்குடி மறவன் அவையன் சாத்தனான அதளையூர் நாட்டு பேரைரையன் ஆலயப்பணி செய்ததாக ஆரியூர் கல்வெட்டில்(505)கூறப்படுகிறது.தேக்காட்டூர் மறவனேரி மறவரால்(637) அமைக்கப்பட்டது .இராஜராஜன் கலிங்கு இரும்பாலி மறவனால் அமைக்கப்பட்டது.

நன்றி:
புதுக்கோட்டை வரலாறு.வீ.மாணிக்கம்.
புதுக்கோட்டை மற்றும் தென்-இந்திய கல்வெட்டு ஆராய்ச்சி-க.ரா.சீனிவாசன்,194,1946,
தென்பாண்டிய செப்புபட்டய வரலாறு.-சென்னை.
சுப்ரமனிய அய்யர் "பழங்கால இந்திய அரசாங்கத்தின் அடித்தலம்"
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு,சோழ அரசியல் ஆவணம்-சுப்புராயலு.
குறிப்புகள் 27. கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 103; பெரும்பிடுகுப் பெருந்தேவி, கோயிலைப் புதுப்பித்துக் கொடையளித்த செய்திகளைக் குறிப்பிடும் கல்வெட்டு, என்று எழுதும் ஜெ. ராஜாமுகமது, அக்கல்வெட்டின் அடிப்படையில், 'குகை இக்காலத்திற்கு முன்பே இருந்திருக்கவேண்டும்' என்றும் எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலிலேயே இருப்பதாகவும் பெருந்தேவியே குடைவரையைக் குடைந்து அமைத்ததாகவும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 186. 28. New Indian Eகpress, 30. 5. 2006. 29. IPS: 439; என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. தினமணி, 5. 8. 2003. 43. IPS: 764. 44. IPS: 800. 45. IPS: 893. 46. IPS: 923. 47. தினமணி, 5. 8. 2003. 48. The Hindu, 17. 8. 2003. 49. தினமணி, 5. 8. 2003. 50. மேற்படி. 51.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.