கிளியூர் மலையமான்கள் என்போர் மலையமான்களில் கிளியூர் என்ற பகுதியை தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தவர்கள்.பார்க்கவ குலத்தில் உதித்த இவர்களை இவர்களால் ஆளப்பட்ட மக்களும் கூட அவர்கள் இனமாக உரிமை கோரும் அளவு வீரமும் ஈகையும் கொண்ட பெருமை உடையவர்கள்.
இவர்களில் முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்கவர்களாக
கிளியூர் மலையமான் பெரிய உடையானான ராசராச சேதிராயன்.
சதிரன் மலையனான ராஜேந்திர சோழ மலையமான்
சூரியன் சாவன சகாயனான மலைய குலராசன்
சூரியன் மறவனான மலையகுல ராசன்
சூரியன் பிரமன் சகாயனான மலையகுல ராசன்
ஆகியோர் இருந்துள்ளனர்.இவர்களில் சூரியன் எனத்தொடங்கும் மூவரும் உடன்பிறந்தோர்,ராஜேந்திர சோழ மலையமானுக்கு நெருங்கிய உறவு கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.இவர்கள் குலோத்துங்கனது ஆட்சிக்காலத்தில் முற்பகுதியில் ஆண்டு வந்தவர்கள்.
பிற்பகுதியில்
கிளியூர் மலையமான் நானூற்றுவன் அத்திமல்லனான ராஜேந்திர சோழ சேதிராயன் என்பவர் ஆண்டுள்ளார்,இவரே திருக்கோவில் சித்த லிங்க மடத்திலுள்ள சிவன் கோவிலுக்கு நிவந்தங்கள் அளித்தவர்.
சேதித் திருநாடர் சேவகன் என்பவன் மலையமான் மரபை சார்ந்த மன்னன்.
இவன் கிளியூர் திருக்கோவிலூர் ஆகிய நகரங்களை தலை நகரங்களாகக் கொண்டு ஆண்டு வந்தான்.இவனே கருநாடகரோடு போர் புரிந்து வெற்றி பெற்றவன் என்று விக்கிரம சோழனுலா நூல் கூறுகிறது.
விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் ராசேந்திர சோழ மலைய குலராஜன், விக்கிரம சோழ சேதிராயன் ஆகிய மலையமான் குல மன்னர்கள் ஆண்ட குறிப்பு தென்னாற்காடு மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டில் உள்ளது.
குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தியில்
பெருங்கற்பில் மலாடர் குலமணி விளக்கு முறுவல் தெரிவை முக்கோ கிளானடிகள் பற்றிய குறிப்பு வருகிறது.
அதே காலத்தில் திருக்கோவலூரை விக்கிரம சோழ கோவலராயன் என்ற மலாடர் குல மன்னன் ஒருவன் ஆண்டுள்ளான்.இவனது தாயார் வீரட்டானமுடையார் கோவிலில் மடைப்பள்ளி கட்டியதாக அவ்வூர் கல்வெட்டு கூறுகிறது.
கிளியூரான்
கிளியூர் நிலப்பரப்பை மற்றுமொரு மலையர் குல சிற்றரசன்
மலையமான் குலோத்துங்கச் சோழன் சேதிராயன் என்ற பெயரில் ஆண்டுள்ளான்.
மலையமான் பெரிய உடையான்
இரண்டாம் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில்
மலையமான் பெரிய உடையான் நீரேற்றான் என்றழைக்கப்பட்டரா
அரியபெருமாள் எனும் மற்றுமொரு மலையமான் இனத்து அரசன் திருக்கோவிலூரை தலைநகராக கொண்டும் ஆண்டுள்ளனர்.கி.பி.1058ல் திருமால் கோவில்கள் எடுப்பித்த பார்க்கவ குல மிலாடுடையான் நரசிங்கவர்மனுடைய பெயரன் தான் அரியபெருமாள்.
ஆகாரசூர மலையமான்(கி.பி.1163-1178)
இரண்டாம் ராசாதிராச சோழன் ஆட்சிக்காலத்தில் மலையமான் நாட்டை திருக்கோவிலூர்,கிளியூர்,ஆடையூ
ராசராச மலையராயன் ஆகிய அருளானப்பெருமான் ராசராச சேதிராயன்
ராசராச கோவலராயன்
கிளியூர் ராச கம்பீர சேதிநாடன்
நீறணிந்தாளாகிய சேதிராயன்
திருவரங்கமுடையான் ராசாதிராச மலையரையன்
ஆகாரசூர மலையமான் ஆகிய மன்னர்கள் ஆண்டு வந்தனர்.இவர்கள் கீழூர் ,திருக்கோவிலூர்,சித்தலிங்க மடம் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களுக்கு நிவந்தம் அளித்துள்ளனர்.
மலையமான் இறையூரான்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில்
கிளியூர் மலையமான் இறையூரன் ராசராச சேதிராயன் என்னும் மலையர் குல அரசன் சேதிநாட்டை ஆண்டுள்ளான்,இவனே மூன்றாம் குலோத்துங்கனுடைய படைத்தளபதி என்று கல்வெட்டு கூறுகிறது.
கி.பி 1200 ல் திரு அறையாய நல்லூர் கோவிலில் மூன்று நந்தா விளக்குகளை எரிக்க நிலங்களை இறையிலியாக வழங்கியுள்ளான்.
பெரியுடையான் ராசராச கோவலராயன் இவனது மகனாவார்.
மலையன் நரசிம்மவர்மன் ஆகிய கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான் என்ற நரசிம்மவர்மன் என்னும் மலாடர் குல அரசன் இரண்டாம் ராசராசன்,மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோரின் படைத் தலைவனாக இருந்துள்ளார்.
இலங்கையின் சரித்திரம் கூறும் மகாவம்சம் என்ற நூலில்திருச்சிற்றம்பலமுடையான் பெருமான் நம்பி என்னும் மலையர்குல அரசன் பல்லவராயனோடு பாண்டிநாடு சென்று அந்நாட்டு படையுடன் போர் செய்து வெற்றி வாகை சூடினான் என்று உள்ளது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.