Tuesday, August 6, 2013

சூரக்குடி பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர்-ஆதளையூர் நாடாள்வான்

காரைக்குடி அருகே வ.சூரக்குடி என்ற ஊர் உள்ளது இது இன்று சிற்றூராக இருப்பினும் 13-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை காணாடு,சூரக்குடி,இராஜேந்திரமங்கலம்கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சோழர் மற்றும் பாண்டியருக்கு கீழ் சிற்றரசாக விளங்கியுள்ளது.இதை ஆண்டவர்.இதை மறவர் இனத்தை சார்ந்த பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர் என்பவர் ஆண்டு வந்துள்ளார்.

[திரு எஸ்.இராமச்சந்திர ஐயர்(நாடார் சரித்திர ஆய்வாளர்) அவர்கள் கவனத்திற்கு தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர்.சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது.இதைப்போல் அழகாபுரி ஜமீன் பள்ளி(வன்னியர்) இனத்தை சார்ந்தது என்று பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும். எஸ். இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600113

திரு இராமச்சந்திரன் அவர்களுக்கு தாங்கள் மறவர் இணத்தவர் சிற்றரசுகளான சூரைக்குடி,ஏழாயிரம் பன்னை முதலிய இனத்தவர்களை வன்னியர் கள்ளர் இனத்தவர்கள் என்றும்.அழகாபுரி ஜமீனை பள்ளி(வன்னியர்) என தங்கள் வலங்கைமாலை கட்டுரையில் கூறியிருந்தீர்கள்.மறவர் இனத்தவரை கள்ளர் என்று கூறுவதில் தவறில்லை ஏனெனில் கள்ளர்கள் சகோதர இனமே.மாற்றாரை பற்றி வரலாறு எழுதினால் முதலில் வரலாறை புரிந்து எழுத வேண்டும்.ஒரு வரலாறை பொய்யாக கூட கதை விடலாம் திரித்து கூறக்குடாது என்பதில் கவனம் தேவை. உதாரனமாக "புழுக்கை சானார்" எண்ற பிரிவினரை "புலி கை சான்றோர் வீரர்கள்" என்று எழுதிகிறீர்கள் அது கூட நியாம் தான் தங்கள் இனத்தை எப்படி வேண்டுமானாலும் புகழலாம்.ஆனால் மாற்றாரை பற்றி கூறும் போதும் தாங்கள் இப்படி செய்கிறீர்கள்.உதாரனமாக கள்ளர் சான்றார்,பள்ளி சான்றார்,பார்ப்பான சான்றார் என்று கூறுகிறீர்கள்.கள்ளர் இனத்தவருக்கு 2000-க்கு மேல் பட்டங்கள் இருப்பதாக தெரிகிறது.அவர்கள் ஏன் உங்களை தேடி வந்து இந்த சான்றார் பட்டத்தை சூடவேண்டும் என தெரியவில்லை.இதைப்போல் பிராமனர்கள் தான் ஜாதிய அடுக்கில் உயர்ந்தவர்கள் என கூறுகின்றார்கள்.அவர்கள் ஏன் இந்த சான்றார்பட்டத்தை சூட வேண்டும் மனநோயா?.பாண்டிய வன்னான்,பாண்டிய அம்பட்டர் போன்ற ஜாதியர்கள் உண்டு.பாண்டிய என்ற அடைமொழியை வைத்து அவர்கள் பாண்டியர்கள் என கூற முடியுமா.அதைப்போல் தான் கள்ளசான்றார்,பள்ளி சான்றார்,பார்ப்பானசான்றார் என்பது கள்ளர்,பள்ளி,பிராமனரிடம் பனிபுரிந்த சான்றார்கள் நன்றியின் பேரில் வைத்துகொண்ட முன்பட்டமே தவிர இவர்கள் கள்ளர்,பள்ளி,பிராமன இனத்தவர்கள் கிடையாது.அவர்கள் சான்றார் இனத்தவரே என்பது அவர்களிடம் உதவிக்கு பனியமர்ந்த சான்றார்களே தவிர அவர்கள் வேறு இனத்தவர்கள் கிடையாது சுத்தமான சான்றார் இனத்தவர்களே.சான்றார் என்ற பெருமைக்குரிய?பட்டம் உங்கள் இனத்தை தவிர யாருக்கும் இருக்காது.அதை வேறு இனத்தவருக்கு சூட்டி மகிழ வேண்டாம்.


எனவே மாற்று இனத்தவரை பற்றிய அரைவேக்காட்டு தனமான் ஆராய்ச்சி ஆபத்தை தரும் என எச்சரிக்கிறேன்."சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே (புறம்:312)" என புறநானூறு கூறுகிறது.ஆனால் "சானார்களை சான்றோர் ஆக்குவது எனது கடனே" எனக்கூறும் உங்களை உங்கள் கடமையை செவ்வனே செய்யுமாறு கூறிவிட்டு நமது வரலாறை கான்போம்.]

நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை
=========================================================


https://youtu.be/g5nqnU6-Iqk



நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த  பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும்  பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும்  குறிக்கும்.

தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும். 


எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.

அரைவேக்காட்டு தற்க்குறித்தனமான வரலாற்று ஆய்வாளர்களின் சுயநல ஆய்வுகள் கூறுவது போல் ஏழாயிரம் பன்னை,அழகாபுரி,வ.சூரக்குடி(காரைக்குடி அருகில்) ஜமீண்கள் வேறு இணத்தவர்கள் ஜமீனல்ல. அவர்கள் தூய மறவர் பரம்பரை சார்ந்த தொல்குடி மன்னர்கள்.இதற்க்கு பல ஆதாரங்கள் உள்ளன.

உதாரனமாக எழாயிரம்பன்னை,அழகாபுரி ஜமீனகள் வன்னியர் பட்டம் உள்ள மறவர் இனம் என நிக்கோலஸ் டிரிக்க்சும்,கால்டுவெல்லும் திருநெல்வேலி மானுவலில் கூறுகிறார்கள்.



இதைப்போல் வ.சூரக்குடி என்ற சிற்றரசு வன்னியர் பட்டம் கொண்ட மறவர் இனத்தவரான விஜயாலத்தேவர் என்பர் ஆண்டது.இவர்கள் மறவர் இனத்தின் உட்பிரிவான வன்னிய மறவர் என்ற இனத்தை சார்ந்தவர்கள். இது 12-16ஆம் நூற்றாண்டு காலத்தில் புதுக்கோட்டைக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசமான் கானாடு,ஒளிநாடு,இராஜேந்திரமங்கலம்,ஒளிநாடுக்கு தலைநகராக இருந்துள்ளது.இது கானாடு,கோனாடு மறவர் அரையர்களையும் வெள்ளாளர்களையும் குடிமக்களாய் கொண்டது.இவரை பற்றி 40-க்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள் திருமயம்,விராச்சிலை பகுதியில் உள்ளதாக 40-கல்வெட்டையும் ஆராய்ந்த சுப்புராயுலு மற்றும் "புதுக்கோட்டை வரலாறு எழுதிய வீ.மானிக்கம். தம் நூலில் கூறுகிறார்.



 கி.பி(1219)J

I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்

ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு.......திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால்
மாங்குடி மறவன் அவையன் சாத்தன்  (அதளையூர் நாட்டுப்) பேரரையன்............................ 




இது இன்றைய சிவகங்கை மாவட்டம் அருகில் உள்ளது. இவர் இன்னும் இவ்வூரிலே வாழ்கிறார் ஊரின் பெரியதனக்காரராகவும் (அம்பலம்) ஆக உள்ளார். இவரது முன்னோர்களில் ஒருவரான பொன்னன் விஜயாலத்தேவர் மதுரை மீனாட்சி அம்மன் மேல் பக்தி கொண்டவர் தினமும் மதுரைக்கு குதிரையில் சென்று வழிபடுவானாம். தன் வயதான காலத்தில் சென்று வழிபட இயலாததால் வ.சூரக்குடியிலும்,முறையூரிலும் மீனாட்சி அம்மன் கோயில் கட்டி வழிபட்டான். இன்றும் அந்த கோயிலும் முதல் மரியாதை பெறும் குடும்பமாக வாழ்கின்றனர்.இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகும்.

இவரை பற்றி கல்வெட்டு செய்திகளில் சில,
திருமையம் கல்வெட்டுகள்
சூரைக்குடி அரசு விசயாலத்தேவர்:











அதலையூர் நாட்டு சூரைக்குடி அரசு விஜயாலயத்தேவர்கள் அகஸ்தீஸ்வரர் கோவில் கல்வெட்டில்  இவன் ஆண்ட பிரதேசம் அதலையூர் நாடு சூரைக்குடி பின்னாளில் வன்னியன் சூரைக்குடி என பெயர் வந்தது. மேலும் இவரது இனத்தை பற்றிய குறிப்புகளில்:

" மாங்குடி மறவன் அவையன் சாத்தன் அதலையூர் நாட்டு பெரைய்நு(பேரரையன்" என குறித்துள்ளான் அதலையூர் நாடாள்வான்(நாட்டுபேரரயன்).

மேலும் அறந்தாங்கி தொண்டைமான்,அன்பில் அஞ்சுகுடி அரையர்,சூரைக்குடி அரையர் இம்மூவருமே தொண்டைமான் வம்சமே.

சொரி வன்னிய சூரியன்: விஜயாலயன் தன்னை கடம்பன் எட்டி(வியாபாரி) எனவும் சாத்தன் எனவும் குறிப்பிட்டு கொள்கிறான். மேலும் சொரி வன்னிய சூரியன் என பெயர் கொண்டுள்ளான். பதினெட்டு வன்னியரை புறம் கண்டான் எனவும் பட்டம் உள்ளது.

"சொரி வன்னிய சூரியன்" என்ற இதே பட்டம் "சொரி முத்து வன்னியன்" என்ற பட்டம் சேதுபதிகளுக்கும் உள்ளது. 
இதற்க்கு இராகவ அய்யங்கார் "சொரி முத்து வன்னியர்" என்றால் கடலில் தோன்றும் சூரியன் என திரையன் என அர்த்தம்.

இப்போது புதிதாக விஜயாலையனை கோறும் கூட்டத்தினர் வன்னியர் என்ற வார்த்தை வைத்து கோறுகின்றனர். அவர்களுக்கு ஒரே ஒரு ஆதாரம் மட்டும் கேட்கிறோம். "சொரி வன்னியன்" என்ற பெயர் அவர்களிடம் எந்த பட்டயத்திலாவது அல்லது கல்வெட்டுகளில் இருந்தால் நாங்கள் விஜயாலத்தேவரை கோரவே இல்லை. நெடு நாளைக்கு முன்னரே இந்த கருத்தை எதிர்பார்த்தோம் அப்போது வைத்தூர் பல்லவராயரை கோரி விஜயாலத்தேவனின் மீது பழியை போட்டு பல்லவராயரை கோரிய கூட்டம் இன்று சூரைக்குடி அரையனை கோறுவது வினோதம்.

சொரிமுத்து வன்னியர்,18 வன்னியர் கண்டன் என்னும் பெயர் சேதுபதிகள்,விஜயாலயத் தேவர்,அறந்தாங்கி தொண்டைமான் மூவருக்குமே இந்த பட்டம் உள்ளது. அறந்தாங்கி தொண்டைமானும் தங்களை செயதுங்கராயன் என குறிப்பிடுகிறார் ஆக சேதுபதி விஜயாலயத் தேவர் தொண்டைமான் மூவரும் மறவரே.

அறந்தாங்கி தொண்டைமான் பட்டயத்தில் 
"மழவரை வென்றோன் "
"சேமனை வென்ற செயதுங்கன்"

என செயதுங்க வம்சத்துவன் என கூறியுள்ளான்.

சேதுபதிகள் எல்லா பட்டயத்திலும் தன்னை ஜெயதுங்க ராய வந்கிசாதிபதி என குறிப்பிட்டுள்ளார்.

செய்துங்க வம்சம் என உள்ளவன் எவன் வேண்டுமானாலும் அறந்தாங்கி தொண்டைமானை கோரலாம்.

பொன் நயினார் பராக்கிரம பாண்டியன்:






விஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதினான்கு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத ஒரு கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22ன் இரண்டாம் பிரிவில் பதிவாகியுள்ளது. நான்கு கல்வெட்டுகள் திருமதி நா. வள்ளியால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதினொரு கல்வெட்டுகள் கள ஆய்வின்போது இக்கட்டுரையாசிரியர்களால் கண்டறியப்பட்டவை. சுப்புராயுலு 36 திருமையம் கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளார்.

இதே கோயில் வளாகத்திலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட வீரவிருப்பண்ண உடையாரின் கி. பி. 1399ம் ஆண்டுக் கல்வெட்டு28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுவதால், அக்கால கட்டத்தில் நின்றருளியதேவரின் திருமுன் படிக்கட்டின் புறச்சுவராக இருந்த பெருந்தேவிக் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
அதே சுவரிலிருந்து கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சொக்கநாராயண நல்லூர் எனும் பெயரிலமைந்த ஊரைச் சொக்க நாராயணரான விசையாலயதேவர் மெய்யத்து இறைவனுக்குத் தேவதானத் திருவிடையாட்டமாகத் தந்ததாகக் கூறுகிறது. பெருமளவிற்குச் சிதைந்தும் தொடர்பற்றும் காணப்படும் இக்கல்வெட்டின் காலத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.30

மண்டபத்தின் மேற்குச் சுவரில் வீரவிருப்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தே விபவ ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,34 கானநாட்டு நாட்டார், கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுத் தேனாற்றுப்போக்குச் சூரைக்குடியைச் சேர்ந்த திருமேனியழகியாரான விசையாலைய தேவரிடம் ஐந்தாயிரம் பணம் பெற்றுக்கொண்டு நிலம் விற்ற தகவலைத் தருகிறது. 'மாக்கல விலைப் பிரமாணம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் கையெழுத்தாளர்களின் ஊர்களாகக் கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கானநாட்டுப் படைப்பற்றுகளுள் ஒன்றாகச் செங்குன்றநாடு விளங்கியதையும் நாட்டு மரியாதி எனும் வரியினத்தையும் இவ்ஆவணம் வழி அறியமுடிகிறது.

அதே சுவரில் கி. பி. 1452ல் வெட்டப்பட்டுள்ள அரசர் பெயரற்ற கல்வெட்டினால்35 கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுச் சூரைக்குடிச் செண்பகப் பொன்னாயினாரான பராக்கிரம பாண்டிய விசையாலையதேவர், மெய்யத்து மலையாளரான விஷ்ணு பெருமானுக்குச் செண்பகப் பொன்னாயன் சந்தி அமைக்க வாய்ப்பாகப் புலிவலத்திருந்த தம் வயலான செண்பகப் பொன்னாயநல்லூரில், ஏற்கனவே தரப்பட்டிருந்த தேவதானத் திருவிடையாட்ட இறையிலி போக எஞ்சியிருந்த நிலப்பகுதியைக் கோயிலுக்குக் கொடையாகத் தந்த தகவலை அறியமுடிகிறது.

அதே சுவரில் கி. பி. 1669 தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ளஅரசர் பெயரற்ற மற்றொரு கல்வெட்டு,36 திருமலைச் சேதுபதி காத்த தளவாய் ரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக, அழகிய மெய்யருக்கு உதயகாலத்தில், 'ரகுநாத அவசரம்' என்னும் பெயரில் கட்டளையமைத்து, அதை நிறைவேற்ற வாய்ப்பாக ஊர் ஒன்றளித்த வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயர் பிள்ளையின் கொடையை எடுத்துரைக்கிறது.

கானநாட்டுக் கோட்டையூர்ப் புரவில் அநாதி தரிசாய்க் காடாக இருந்த புதுவயல், வலையன் வயல் உள்ளிட்ட நிலப்பகுதிகளை விலைக்குப் பெற்று அவற்றை வளமாக்கி, அந்தப் பகுதிக்கு ரகுநாதபுரமென்று பெயரிட்டுத் திருவாழிக்கல் நடுவித்துக் கோயிலுக்களித்த பிள்ளை, அறக்கட்டளையைக் காப்பாற்றும் பொறுப்பைக் கோட்டையூர் ஊரவரிடம் அளித்துள்ளார். சோதிடம், வைத்தியம் செய்வார்களுக்கு இந்நில வருவாயில் பங்கிருந்ததெனக் கருதுமாறு கல்வெட்டமைப்பிருந்த போதும், சிதைந்துள்ள வரிகள் தெளிவு காண இயலாது தடுக்கின்றன. குடிவாரம், மேல்வாரம், கடமை முதலிய வரியினங்களும் கல்வெட்டில் சுட்டப்பட்டுள்ளன.

மறவர் படைப்பற்று

•••••• •••••• ‌ ••••••• •••••• ‌ ••••••

படைவீரர்களுக்கு உரிமையுடைய நிலமானியங்களைக் கொண்ட ஊர்கள் ‘படைப்பற்று’ எனும் பெயரால் அழைக்கப்பட்டது. படைப்பற்று என்பது சாசனங்களில், பரிக்கிரகம்- வன்னியப்பற்று- என்றும் வழங்கப்பெறும். இவ்வூர்களில் இருந்த நிலங்கள் படைவீரர்கள் மற்றும் அவர்களது தலைவர்களின் அனுபோகத்திலும், நிர்வாகத்திலும் இருந்தன. இவ்விதப் படைப்பற்றுகளை நிருவகிக்கும் மறக்குடித் தலைவர்கள் மன்னரின் நெருங்கிய உறவினராகவும், முக்கியமான அரசியல் அலுவலராகவும் விளங்கியுள்ளனர். இவர்களுக்குத் துணையாக அகம்படி முதலிகள் என்றழைக்கப்பட்டோரும் இருந்துள்ளனர். படைப்பற்றுகள் பெரும்பாலும் நாடுகளின் எல்லைப் புறங்களில் பகைவர்களின் படையெடுப்பைத் தடுக்கும் வகையில் அமைந்திருந்தன.

படைப்பற்றின் தலைவர்கள் தங்கள் ஊரில் இருந்த பிற சமூகத்தினரின் ஊழியத்தையும் மதித்தனர். அதற்காகத் தங்களூர் இடையரில் ஒருவனுக்கு ‘மறமாணிக்கோன்’-என்றும், கம்மாளருக்கு ‘மறமாணிக்கத்தட்டான்’- என்றும், தம்மைப் பாடிப்புகழ்ந்த புலவருக்கு “மறச் சக்கரவர்த்தி பிள்ளை” – என்றும் பட்டமளித்து மரியாதை செய்தனர். படைப்பற்று நீங்கலாக தங்கள் பகுதியில் இருந்த பிற ஊர்களின் காவல் பொறுப்பையும் ஏற்று நடத்தினர்.

சூரைக்குடி விசயாலயத்தேவர்கள் உள்ளிட்ட புதுகையின் அரசுகள் தங்கு தடையின்றி தங்களது ஆட்சியினைத் தொடர்ந்ததற்கு, விரையாச்சிலை, குருந்தன்பிறை, பெருங்குடி, புலிவலம், கீரனூர்,ஆதனூர், பொன்னமராவதி, செவ்வலூர், கோவனூர், பனையூர்-குளமங்கலம், மலையாலங்குடி,இளஞ்சார், மதுராந்தகநிலை, எனும் கோனாட்டு – கான நாட்டு மறவர் படைப்பற்றுகளின் பங்களிப்பே மிகவும் அதிகமாக இருந்துள்ளது. இந்த மறவர் படைப்பற்றுகளில் விரையாச்சிலை படைப்பற்று மிகவும் பல்வேறு ஆய்வறிஞர்களின் கவனத்தை ஈர்த்திருப்பதற்குக் காரணமாக நாம் சில முக்கிய விஷயங்களை இங்கு குறிப்பிடலாம்.

படைப்பற்றுக் குடியிருப்பில் அதிகமான தன்னிச்சையான செயல்பாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்த அரசமக்கள்- மறமுதலிகள் – மறமாணிக்கர் முதலான மறவர் தலைவர்களின் கொடைகளால் நிரம்பிய படைப்பற்று என்பது இதன் சிறப்பில் ஒன்றாகும்.

பெருமாள் குலசேகரப் பாண்டியனின் குடுமியான் மலைக் கல்வெட்டில் {IPS: 565 } கோனாட்டு இரண்டுகரை நாட்டவரால் இன்னாட்டுப் பனையூர்- குளமங்கலத்து அரையர்களுக்கு நாட்டரசும் கட்டி (நாட்டரசு – நாட்டின் அரசாக முடி சூடப்பெறல்) காணிக்கையும் திருநலக்குன்றமுடைய நயினார் கோயிலில் முன்னொடுக்கும் ( முன்னொடுக்கு – முதல் மரியாதை) வழங்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. எனவே அரையர்களே மரியாதைக்குரிய நாட்டின் அரசாக அறிந்தேற்பைப் பெற்றுள்ளனர் என்பது இங்கு தெளிவாக விளங்கும். இத்தகு சிறந்த வாழ்வினை பெற்றவர்களாக விரையாச்சிலை மறவர்கள், உடையான்-ஊரவர்- வேளான் – அரையர்- பேரையர்- நாடாழ்வார் எனும் பல்வேறு சமூகத் தரங்களில் காணப்படுகின்றனர்.

சாசனங்களில் பயின்றுவரும் ‘ஊரவர்’ எனும் சொல்லிற்கு இன்றுள்ள ஊர்மக்கள் எனும் பொருளை எடுக்கக்கூடாது. இது ஊர்ச்சபைக் குழுவைக் குறிப்பதாகும். மாறவர்மன் சுந்தர பாண்டியனின் இடையாத்தூர் கல்வெட்டில் {IPS: 309} வேளான் – பேரரையர்- நாடாழ்வான் எனும் சமூகத்தரம் பெற்ற ஒரே சமூகக் குழுவைச் சேர்ந்த யாவரும் சாசனத்தின் மூன்றாவது வரிகளில்..

“ஒல்லையூரான மதுரை மறவரோம் ஊராயிசைஞ்த ஊரோம்”- எனும்படியாக,

ஒல்லையூர் மங்கலத்து ஊராயிசைந்த ஊரவராக மதுரை மறவர்கள், இங்கு

[ஊரவராக] செயல்பட்டதைச் சுட்டுகிறது. படைப்பற்றுக் குடியிருப்புகளில் அரையர்களே ஊரவராகச் செயல்பட்டுள்ளனர்{ ஊருக்கு சமைந்த அரையர்கள், IPS: 395}

கான நாட்டுப் படைப்பற்றான விரையாச்சிலையிலும் அரையர்களே ஊரவராகச் செயல்பட்டுள்ளனர். இக் கருத்தைப் புலப்படுத்தும் வகையில் நான்கு சாசனங்கள் உள்ளன.{ IPS: 346, 421, 455, 534} இவற்றில் “படைப்பற்று ஊரவர்” எனும் செய்தி பெறப்படுகிறது. {கான நாட்டுப் படைப்பற்று விரையாச்சிலை ஊராக இசைந்த ஊரோம்} விரையாச்சிலை படைப்பற்றில் மறவர் சமூக மக்களே வாழ்ந்தனர். அவர்களே அரையர்களாக – ஊரவர்களாக செயல்பட்டனர் எனவும் சாசனங்கள் விளக்கும். விரையாச்சிலை தேவ வயலின் நான்கு புறத்திலும் உள்ள மாறவர்மன் குலசேகரன்(ll) 5வது ஆட்சியாண்டு சாசனங்கள் ஐந்தில் மூன்றும், அதே ஊர் ஈஸ்வரன் கோயிலின் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் 3ம் ஆட்சியாண்டின் ஒரு கல்வெட்டும் விரையாச்சிலை மறவன் ஐநூற்றுவ நம்பி”- எனும் வழியினரைப் பற்றி பேசுகின்றன. {விரையாச்சிலை மறவன் நம்பியான ஐந்நூற்றுவப் பெரியன் உள்ளிட்டார் பக்கல் வயலும் அதற்குரிய கால்வாய்களையும் விலை கொண்டு தனது தர்மமாக விரையாச்சிலையில் இரண்டு ஊருணிகளை வெட்டுவிக்கிறான்}

“கான நாட்டுப் படைப்பற்று விரையாச்சிலை மறவரில் நயினான் கங்கனுக்கு மேற்படியூரில் அரசு மக்களில் பிள்ளான் யிராசபிள்ளையான யிராசிங்கதேவனேன்”{IPS:644} – எனும் சாசனமும் விரையாச்சிலை என்பது மறவரின் படைப்பற்று என்பதை உறுதி செய்யும்.

•விசயாலயத்தேவரின் வழிபாட்டுக்குரிய விராச்சிலைப் படைப்பற்றும் பிற செய்திகளும்•

— —-. —– —-. —-. —- ‌ ——. —-

கி.பி.1449 ல் வீரபாண்டியன் காலத்தில் விராச்சிலையிலுள்ள பில்லவனேஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் { IPS: 462} விரையாச்சிலைப் படைப்பற்று ஊரவர்கள் மற்றும் அதே நாட்டுப் பிரிவைச் சேர்ந்த கோட்டையூர் படைப்பற்று ஊரவர்கள் ஆகிய இருவரும் என்னையும்,நான் அவர்களையும் வழிபடுவதற்கு உரியவனாவேன் என விசயாலயத்தேவரே தெரிவிக்கிறார். அதாவது …

“கேரள சிங்க வளநாட்டு தேனாற்றுப் போக்கு நியமப்பற்று சூரைக்குடித் தேவரான சொக்கனாராயணர் ஆன விசையாலயத்தேவர்ரேன்

கானநாடான விருதராசபயங்கர வளநாட்டுக் கானநாட்டுப் படைப்பற்று விரையாச்சிலை உள்ளிட்ட ஊற்கும் கோட்டையூர் உள்ளிட்ட ஊர்க்கும் கல்வெட்டிக்குடுத்தபடி இந்த ஊரவர்கள் நமக்கு வழிபாடு தப்பாமல் விரகற நன்றாக நடந்து போதுகையாலும் நமக்கு விரோதியாய் நம்முடைய மேலே படைவந்த வழுத்தூற் பல்லவராயரையும் வெட்டி அந்த வினையிற் காரியமும் முற்ற முடித்துச் செய்கையாலும் “

– எனும் வரிகளில், மேற்கண்ட படைப்பற்று ஊரவர் தமக்குத் தரும் மரியாதைகள் எப்போதும் குறைவில்லாதபடி இருந்தது என்றும், இதுபோக வழுத்தூர் பல்லவராயரை வெட்டி வீழ்த்தி செயற்கரிய காரியம் செய்து முடித்தவர்கள், என்று பாராட்டியும்,

” இவர்கள் நின்றயம் பண்ணின நேர் தவறாமல் நினைத்த காரியத்தை நினைத்து விரகு அற நடக்கையாலே நமக்கு இவர்களே வழிபட்டவர்கள்”

– அதாவது,.. இவர்கள் நிர்ணயம் செய்தது போல நேர்மையாக , நான் நினைக்கும் ஒரு காரியத்தை இவர்கள் நினைத்து முடித்துக் கொடுப்பார்கள் அதனால் இவர்கள் எனது வழிபாட்டுக்கு உரியவர்களாவார்கள் -என்றும் தெரிவிக்கிறார்.

மேலும்,..

” இவர்கள் இதற்குமேலும் எனக்காகச் செய்ய ஒரு காரியமும் இல்லை, நம்மையும் அணைத்து, படைகளையும் இவர்களே காப்பாற்றட்டும்

,- எனவும், விரையாச்சிலை-கோட்டையூர் மறவர்களைப் போற்றிப் புகழும் சொக்கனான விசையாலயத் தேவரின் இந்த சாசனம் இவர்களின் அளப்பரிய பெருமையைப் பறைசாற்றும் விதமாக உள்ளது.

இக்கோயிலுக்கு கி.பி.1514ல் அடைக்கலம் காத்தாரான நாடுமதித்த விசையாலையத்தேவர் குடிநீங்காத் தேவதானம் கொடுத்து அதை விரையாச்சிலை படைப்பற்று நாட்டார்களின் அதிகாரத்தின் கீழிருக்கும்படியாகச் செய்து, “நாடு மதித்த விசையாலையன் நமக்கு படைப்பற்று நாட்டவர் விரகற (அன்பு மாறாது) நடந்து போதுவாராகவும்” (வருவார்களாகவும்) -என்கிறான்.

கி.பி.1497 ல் விரையாச்சிலை படைப்பற்று ஊரவர்க்கு ‘நாடற்ற மரியாதை’ { தாம் ஆளும் எல்லாப் பகுதிகளிலும் முதல் மரியாதை தருவது } வரிசைகளையும், நிலங்களையும் பள்ளிகொண்டபெருமாளான விசயாலயத்தேவர் அளிப்பதை { IPS: 464} காணமுடிகிறது.

விரையாச்சிலை படைப்பற்று ஊரவர்களும் ‘ வன்னியனார் பாதத்தின் மீது ஆணை'{IPS: 969} – என்றே விசுவாசமாக வாழ்ந்துள்ளனர்.

திருமயத்திலிருந்த துலையாநிலை ஊரவராக இருந்தோர் தங்களை ‘வன்னியமதித்த தேவன் கரை'{ IPS: 937} – என்றும், ‘வன்னியமிண்டன் கரை’ {IPS: 936} -என்றும், பெருமையுடன் கூறிக்கொண்டனர். மேற்கண்ட சாசனங்களில் வழங்கப்படும் கரைப்பிரிவு இன்றும் இப்பகுதி மறவர்களிடையே விளங்கி வருவதையும் அறியமுடிகிறது. துலையாநிலைப் படைத்தலைவர்களான

மீண்டாவான், உடப்பன் அரணித்தான் …… ஆண்டி, கன்னக்காறன் மகன் பிரவியம் அரசு பிள்ளான்,வாழ்வரசி ஆவுடையான், கலங்காதான் ஆவுடையான், சாமத்தமூர் படைத்தலைவன் தப்பாக்கலக்கி ஆவுடையான், கானிலை படைத்தலைவன் கண்டியத்தேவர் குருந்தன் ஆகிய அனைவருக்கும் விசயாலயத்தேவர், காராண்மையாகக் காணியாட்சி தருவதையும் அறியலாம் {IPS: 732}.

நெல்வாசல் படைத்தலைவனான மேனியான் ஆன விருதராயனுக்கு வயிரவ நயினார் விசயாலயத்தேவர் காணியாட்சியாக நக்கனேரி வயல் உள்ளிட்ட நிலங்களத் தருவதை திருமயம் அகஸ்தீஸ்வரர் கோயிலின் சாசனம் விளக்கும் {IPS: 742}.

உகிரையூர் படைத்தலைவர்களான, தப்பாக்கலக்கி பெரியாவிச்சி தெய்வத்தான், செல்லன், பிச்சன், குருந்தன், சிற்றாவிச்சி, பெரியன், ஆகிய ஏழுபேருக்கு கி.பி.1571 ல் அச்சுதப்ப விசயாலயத்தேவர் {IPS: 758}காணியாட்சி சுவந்திரம் அளிக்கும் ‌பொழுதில்,..

“நாம் கற்பித்த காரியமும் கேட்டுத் நாம் ஏறின மண்டலத்தில் {படைகொண்டு சென்ற மண்டலத்தில்} உலுப்பை ஊழியமும் {வெகுமதி} கொடுத்து சந்திராதித்த வரை அனுபவிக்க கடவாராகவும்”

– என்று கூறி இக் காணியாட்சியை அனுபவிக்கலாம் என்கிறார்.

குருந்தன்பிறை படைத்தலைவர்களான, தெரிஞ்சு வெட்டி, காத்தானான தலைவிரிச்சாதித்தான், எம்மண்டலமும் கொண்டான், ஆகிய மூவரும் வெங்களப்ப விசயாலயத்தேவரிடமிருந்து காணியாட்சி பெறும்போது,{IPS: 743} .

“நாம் ஏவின மண்டலமும் ஏறின மண்டலமும் ஏறிச் சேவித்து நாம் கற்பித்த காரியமும் கேட்டு இந்த நிலம் அனுபவிக்கவும்”

– என இவ் வகையில் அனுபவிக்குமாறு கூறப்படுகிறது.

விரையாச்சிலை அரசுமக்களும் , மறமுதலிகளும் மடாதிபதிக்கு { திருமடை விளாகத்துப் பெரிய திருக்கூட்டத்து தவணை முதலியார் மாணிக்க வாசகர் ஆனைநமதென்ற பெருமாளான கோயில் வாசகப் பிச்சமுதலியார்} காராண்கிழமை உரிமையுடன் ஐநூற்றுவ மங்கலத்தைக் கொடை வழங்கியுள்ள நிகழ்விற்கும் {IPS:393} இவ் விளக்கம் பொருந்தும். மட்டியூர் எனும் ஊரின் திருமடைவிளாகத்து மடத்தை இருப்பிடமாகக் கொண்ட இம் மடாதிபதியான முதலியாரானவர் விசையாலயத்தேவருக்கு குருவாக விளங்கிய பரம்பரையைச் சேர்ந்த கழனிவாசல் முதலியார் என்பதை பின்னாளைய சான்றுகளும் விளக்கும். இது விரையாச்சிலை அரையர்களான மறவர்கள் மற்றும் விசையாலயத்தேவர் இருவருக்கும் ஒரே குருப்பரம்பரையினரே இருந்ததையும் உறுதி செய்கிறது.

சூரைக்குடி சிற்றரசர்கள் காலம்

*. *. *. *. *. *. *. *. *. *. *. *. *. *

1. அவையன் பெரியனான தொண்டைமானாரான விசையலாயத் தேவர் ‌. 1373-80

2. திருமேனியழகியாரன

நயினார் விசையாலயத்தேவன் 1388

3. செண்பகராயனான

விசையாலயத்தேவன். 1421

4.பொன்னாயனான

விசையாலயத்தேவன். 1446

5. சொக்கநாயினாரான

விசையாலயத்தேவன். 1449

6. செண்பகப் பொன்னாயனான

பராக்கிரம பாண்டிய

விசையாலயத்தேவன் 1452

7. திருமேனியழகியாரான

வீரபாண்டிய

விசையாலயத்தேவன். 1458-62

8. அவையாண்டாரான

சுந்தரபாண்டிய

விசையாலயத்தேவன். 1462

9. பள்ளிகொண்டப் பெருமாளான

விசையாலயத்தேவர். 1497

10. அடைக்கலம் காத்தாரான

நாடுமதித்த

விசையாலயத்தேவர் 1511

11. வயிரவ நாயினாரான

விசையாலயத்தேவர். 1524- 32

12. ௵ரங்கநாதனான பெத்தப்ப

விசையாலயத்தேவர். 1550- 59

13. செவ்வப்ப

விசையாலயத்தேவர். 1577

14. அச்சுதப்ப

விசையாலயத்தேவர் 1577

15.வெங்களப்ப

விசையாலயத்தேவர். ?

16. காத்தாரான விசையாலயத்தேவர்

17. இராயப்ப

விசையாலயத்தேவன் 1591

18. அதிராப்புலி

விசையாலயத்தேவர். 1595

19 வயிரவ விசையாலயத்தேவர். 1608

-. என 19 ஆட்சியாளர்கள் வரிசைப்படுத்தப்படுகின்றனர்.

{Structure and Society in Early South India Essays in Honour of Noboru Karashima Edited by Kenneth R. Hall, Oxford University press.2001, Arasus of the Pudukkottai Region and the Nayaka system Y.Subbarayalu}

இதில் இன்னும் சில ஆட்சியாளர்களை நாம் கண்டுள்ள சான்றுகளின் அடிப்படையில் சேர்க்கலாம். அவர்களாவன,..

1. தீராதவினை தீர்த்த விசையாலயத்தேவர் {கி.பி. 1550, இவரது மகன்தான் ரங்கநாத பெத்தப்ப விசையாலயத்தேவர்}

2. இராச விசையாலயத்தேவர் 1797

3.விசையாலயத் தேவர். கி.பி 1863

சூரைக்குடியின் கடைசி விசையாலயத்தேவர் கி.பி.1863 வரை குறிப்புகளில் காணப்படுகின்றார். அதாவது 150 ஆண்டுகளுக்கு முன்னர் {சற்றேறக்குறைய நான்கு அல்லது ஐந்து தலைமுறைகளுக்கு முன்னர் வரை }அவர்கள் இருந்துள்ளதை கோவிலூர் சாசனம் ஒன்று தெரிவிக்கிறது

{The vicissitudes of Virayaccilai, ‘collected papers’.vol- 1, }

சூரைக்குடியின் ஏழாவது ஆட்சியாளரான திருமேனியழகியார்தாம் முதலில் “அரசு” என சாசனங்களில் குறிக்கப்படுகிறார்.

முதலாம் ஆட்சியாளரான, அவையன் பெரியநாயனாரான விசையாலையத்தேவரிலிருந்து {IPS:454} [இவரே தொண்டைமானார் எனவும் பெயர் பெற்றவராவார், செம்பியநாட்டு மறவர் கிளைகளில் தொண்டைமான் எனும் கிளையும் உள்ளது] {IPS: 452} 9ம் ஆட்சியாளனான, பள்ளிகொண்ட பெருமாள் விசையாலயத்தேவர் வரை, பாண்டியரின் மேலாண்மைக்குரியோராகவும், 12வது ஆட்சியாளராக, அறியப்படும் ‌௵ரங்கனாத பெத்தப்ப விசையாலயத்தேவர் விஜயநகரின் கீழும், அடுத்தடுத்த ஆட்சியாளர்களான, செவ்வப்ப, அச்சுதப்ப, வெங்கடப்ப விசையாலயத்தேவர்கள் தஞ்சை நாயக்கரின் கீழும் செயல்பட்டுள்ளனர் என ஏற்கலாம். இருப்பினும், இந்த அரசுத்தலைவர்கள் பெயரளவிற்கே அன்னார்களது மேலாண்மையின் கீழிருந்தனர் என்பதை இவர்களின் தன்னிச்சையான செயல்பாடுகளை விவரிக்கும் சாசனங்கள் மூலம் நன்றாக அறியலாம்.

இனமரபு

~~~~~~~~

சூரைக்குடி அரசின் தோற்றம் அதளையூர் நாடாழ்வான்களிலிருந்து தொடங்கியதாகும், இதை கீழ்கண்டவாறு சில கல்வெட்டுச் செய்திகளில் இருந்து நாம் தெளிவாக அறியலாம்,..

“மாங்குடி மறவன் அவையன் சாத்தனான அதளையூர் நாட்டுப் பேரரையன்” – என அறியப்பெறும் கல்வெட்டில், அதளையூர் நாடாழ்வார்கள் “மறவன்” எனும் இனப்பெயரைத் தாங்கி வருகிறார்கள். மேலும் “அவையன்” எனும் பட்டத்தினையும் பெற்றுள்ளனர். இது தொடர்ச்சியாக சூரைக்குடி விசையாலயத் தேவர்களின் பல கல்வெட்டுகளில் அவர்களுடன் இணைத்துக் குறிப்பிட்டுப் பயின்று வரும் வாக்கியமைதியாகும்,

அதளையூர் நாடாழ்வார்களில் இறுதியாக அறியப்பெறும் பேரரையருக்கு அடுத்ததாகக் காலநிரல்படி தொடரும் சாசனமானது,..

“தேனாற்றுப் போக்கு அதளையூர்னாட்டுச் சூரைக்குடி அவையன் பெரியானான தொண்டைமானாற்கு”..

-எனும் வாக்கியமைதிகளைக் கொண்டு விளங்குகிறது.

-இந்தக் கல்வெட்டு திருமயம் தாலுகா ,நெய்வாசலில் உள்ள அகத்தீஸ்வரர் கோயில் சுற்றுச்சுவரில் வடபுறம் அமைந்துள்ளது.

இதில் அதளையூர் நாடாழ்வார்களின் தொடர்ச்சியான பட்டமாகிய “அவையன்” மற்றும் இருப்பிடமான “தேனாற்றுப்போக்கு” இரண்டும் குறிப்பிடப்படுகின்றது.

அடுத்ததாக,..

” …..கேரள சிங்க வளநாட்டு அதளையூர் நாட்டு நியமப்பற்று சூரைக்குடி அவையாண்டாரான சுந்தரபாண்டிய விசையாலையத் தேவரேன்”…. {IPS: 800}

– என அதளையூர் நாட்டைச் சேர்ந்தவராக சூரைக்குடி அரசின் 8வது ஆட்சியாளர் இங்கு குறிக்கப்படுகிறார்{கி.பி.1462} இவரது பெயரில் உள்ள அவையாண்டார் என்பது அவையன் எனும் முந்தைய வடிவமாகும். இவரது இருப்பிடமாக ‘நியமப்பற்று’ {குன்றக்குடி அருகிலுள்ள இன்றைய நேமம்}குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நியமப்பற்றானது “நியமநாடு” எனவும் வழங்கப்பட்டதை,..

-குளத்தூர் தாலுகா, பரம்பூர் சோழேஸ்வரர் கோயிலின் தென்புறச் சுவர் சாசனமும் {IPS: 783} தெரிவிக்கிறது. அதாவது,..

” நியமநாட்டு சூரைக்குடியில் திருமேனியழகியாரான விசையாலையதேவர்”- என்கிறது.

நியமநாடு எனும் நேமநாடு மற்றொரு கல்வெட்டிலும் பயின்று வருகிறது.

“கேரளசிங்க வளநாட்டு தேனாற்றுப் போக்கு நியமநாட்டு சிறுவயல்” – எனும் நெய்வாசல் சாசனமும் { IPS: 786} நேமநாடு எனும் நாட்டுப்பகுதி இருந்ததை உறுதி செய்கிறது.

இந்த நேமநாட்டு மறவர்கள் “தளவான்கள்” என இன்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தங்களை விசையாலயத்தேவர் வழி வந்தோர் எனக் குறிப்பிடுகின்றனர்.

இவர்கள் சூரைக்குடி அரசின் பகுதிகளில் காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். மேற்கண்ட அரசின் முக்கிய ஆலயங்களில் இவர்கள் தேரோட்டம் மற்றும் முக்கிய விழாக்களில் பரிவட்டம்- வெள்ளைவீசுதல் முதலான சிறப்புரிமைகளைப் பெறுகின்றனர்.

சூரைக்குடி அரசு விசையாலயத் தேவர்களும், அவர்களின் முந்தைய மூதாதையர்களான அதளையூர் நாடாழ்வார்களும் தம்முடைய குடியிருப்பாக தமது சாசனங்களில்

“கேரள சிங்க வளநாட்டு அதளையூர் நாட்டு தேனாற்றுப்போக்கு நியமப்பற்று” – என இந்த நேமநாட்டைத்தான் குறிப்பிடுகிறார்கள்.

•குன்றக்குடி தல வரலாறு நூல் கூறும் உண்மைகள்•

இந்த “நியமப்பற்று” என்பது சரியாக, குன்றக்குடி முருகன் கோயில் அடிவாரப் பகுதியாகும். இக்கோயிலில், அதளையூர் நாடாழ்வார்களின் கல்வெட்டுகளும், சூரைக்குடி அரசு கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

இக்கோயிலின் சுந்தரேஸ்வரர் சந்நிதி முகமண்டபத்தின் இடப்புறச் சுவர்த் தூணிலுள்ள கி.பி.1110 ம் ஆண்டித்திய சாசனம் ஒன்றில்,

“அதளையூர் நாடாழ்வான் ஐநூற்றுவன் உய்ய வந்தான்” குறிப்பிடப்பெறுவதையும், அதே கோயில் சந்நிதியில், முன்மண்டப வலப்புறச் சுவரில், அதே ஆண்டில், நேமநாட்டார்கள் வாழும் ஒன்பது ஊர்களான இரவிகுல மாணிக்க நல்லூர், செங்கணி, பலவான்குடி, வெழுவூர், காஞ்சிரங்குடி, வேட்டக்குடி, ஆர்க்காடு, சிறுகுடி, சிறுவயல், தாவக்குடி ஆகியவற்றைச் சேர்ந்த ஊரவர்கள் இணைந்து தானமளித்த சாசனமும் இடம்பெற்றுள்ளது.

“குன்றக்குடி முருகன் கோயில் அடிவாரத்தில்தான் கேரள சிங்க வளநாட்டு தேனாற்றுப் போக்கு நியமப்பற்று” -எனக்குறிப்பிடும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ‘தேனாற்று நாதர்’ என சூரைக்குடி அரசால் பூசிக்கப்பட்ட இறைவன் எழுந்தருளியுள்ளார். நியமப்பற்று நாட்டவரான நேமநாட்டார்கள் இக் குன்றக்குடி கோயில் திருவிழாவாகிய தைப்பூச நன்னாளில், ஒன்பதாம் திருநாளாக விளங்கும் “தேரோட்டத் திருவிழா” அன்று, பரிவட்ட மரியாதையினைப் பெறுகின்றனர். இக்குன்றக்குடி இருப்பது நேமநாடாகையால், இக்கோயிலின் இறைவன் “நேமநாடுடைய வள்ளல்” எனும் பெயரைப் பெறுகிறார். நேமநாட்டார்கள் வழிவழியாக இப் பெருமானுக்குத் தொண்டு செய்து வரும் பெருமையுடையவர்கள் ஆவர் {பக்: 55} . இது தவிர, பங்குனி உத்திரம் அன்று இக்கோயிலின் முதல் மண்டகப்படியினை ஏற்று நடத்துவோரும், கோயில் கொடியேற்றம் நிகழ்த்துவோரும் முதல்நாளிரவு முருகனை வெள்ளிக் கேடகத்தில் எழுந்தருளச் செய்வோரும் நேமநாட்டவர்களே ஆவர். இதை,..

“பங்குனியிற் கார்த்திகையில் பற்றுக்கொடி ஏற்றமதில் நங்கை திரு வார் நேமநாட்டினார் மங்கலஞ் சேர் மண்டபத்தில் உற்று” – என சண்முகநாதருலா புகழும்.{கண்ணி: 214- 215} {பக்: 57-}.

சூரைமாநகர்ப் புராணம் சொல்லும் செய்தி•

சூரைக்குடி தலத்திற்கு சூரைமாநகர்ப்புராணம் எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள், “பொன்னான விசையாலயத்தேவன் நிருத்த தரிசனஞ் செய்த படலம்”- எனும் தலைப்பின்கீழ்,

“மறவாதடி போற்று{ம்} மறவாணர்களரசே

பிறவாநெறி பெறுவே..னுறவாவுனைத் தொழுவேன்” – என பொன்னான விசையாலயத்தேவன், அந்த இறைவனை ,’மறவாணர்கள் வணங்கும் அரசே’-என வணங்குவதாகப் பாடல் அடிகள் வருகிறது.

•செப்பேடுகள் காட்டும் வழி•

ஐயா, மேலப்பனையூர் கரு.ராசேந்திரனின் சேகரிப்பிலுள்ள, மறவர் செப்புப்பட்டயங்களில், ..

விசையாலயத்தேவர் வழியினரோ? என அம் மறவ அரையர்களை எண்ணத்தகும் வகையில், பல்வேறு தொடர் தகவல்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

1.பனையூர் வலஞ்சு வெட்டி கரைப் பட்டயத்தில், 25-26-27, வது வரிகளில்,.. ‘மறமன்னர் கலங்காத கண்டன் அவியராயப்புரையர் வயிர மதிச்சான்” எனும் பெயரில் ஒரு மறவர் குறிக்கப் பெறுகிறார். இதிலுள்ள ‘அவியராயப்புரையர்’ என்பது அவையராயப்பேரரையர் எனும் விளக்கம் பெறும். அவையன் -அவையாள்வான்-அவையராயர்- அவையாண்டார் முதலான சொற்கள் விசையாலயத்தேவருக்குரியதாகும். வயிர எனும் சொல் வயிரவநயினாரான விசையாலயத்தேவரையும்,மதிச்சான் எனும் சொல் நாடுமதித்த விசையாலயத்தேவரையும் மனதில் நிறுத்தும்.

2. வாவாசி விசையாத்தேவன் பட்டயம், மதமடக்கி விசையாத்தேவன் வலம்புரிப்புரையர் என மறவரைப் பேசுகின்றது.

3.கோடாளி சின்னாதி கரைப் பட்டயம், “மறமன்னர் பரியேறு தேவர்” என சொல்கிறதை, “பாண்டியன் படியமுக்கப் பரியேறும் பெருமாள்” – என விசையாலயத்தேவரின் கீர்த்தியினைக் கூறும் கல்வெட்டைக் கவனத்தில் நிறுத்தும்.

4. சொரித்தேவன் அசையாவீரன் மூன்று கரைப் பட்டயம், மறவரை”நாடுமதிச்சான்” -[வரிகள்-37-38]எனச் சுட்டுகிறது. நாடுமதித்த எனும் சிறப்புப் பெயர் விசையாலயத்தேவருக்கானதாகும். மேலும் ‘சொரிவன்னியன்{IPS:865}’ என்றும் இவர்கள் வழங்கப்பட்டனர். சொரிவன்னியன் எனும் பெயர் மறவருக்கு சேதுபதி காலம் தாண்டியும் தொடர்ந்துள்ளது.

5.மூலங்குடி செம்பூதி மறவர் பட்டயத்தில், மறவர்கள்…,

அ) விசாலையதேவன் [வரிகள்:23-24]

ஆ) வன்னிப்புரையர் தேவன் {வன்னியப்பேரரைய தேவன்}

இ) மொத்தியப்புலி விசையாத்தேவன் – என வழங்கப்பெறுகிறார்கள்.

6.மல்லாங்குடி மறவர் பட்டயத்தில்,

“விசயாலைய முதலி குண்டடி புரையர்” [வரிகள்:20-21]

7.புல்வயல் சுந்தரபட்டி பட்டயத்தில்,

“மறமன்னர் தாளிய விசைய உலகத்தேவன்” உள்ளிட்ட மறவர்கள் குறிப்பிடுப்படுகின்றனர்.

– இவ்வாறு பரவலாக பட்டயங்களில் விசையாலையத்தேவரின் சுவடுகளைத் தாங்கி மறவர்கள் பயின்று வருகிறார்கள்.

•கல்வெட்டுகள் காட்டும் வழி•

1.”மாங்குடி மறவன் அவையன் சாத்தனான அதளையூர் நாட்டுப் பேரரையன்”- எனும் சாசனம் அவையன் என்றும் அதளையூர்நாடாழ்வார் என்றும் விளங்கிய விசையாலையத்தேவர்களின் வழியைக் காட்டும். இந்த மாங்குடியின் அருகில் 1- 1/2 தொலைவிலுள்ள பனங்குடி ஊர் விசையாலையத்தேவரின் ஆசிரியமாக {பாதுகாவல் பகுதி} இருந்துள்ளது.{ க.எ: 33./பக்: 34 , புதுக்கோட்டை வட்டார கல்வெட்டுகள்} இந்த பனங்குடி பனைகுடி எனவும் அழைக்கப்பட்டுள்ளது. இதை “பனைகுடிப் பால் ‘அய்வன் வேந்தன்’ குடிகாடு ஆன திருஞானசம்பந்த நல்லூர்” { ஆவணம் 28/17,பக்: 95,96} என சாசனம் ஒன்று தெரிவிக்கிறது. அய்வன் வேந்தன் அவையன் வேந்தனாகலாம்.

2. சூரைக்குடி அரசு விசையாலையத்தேவரின் சிறப்புப்பெயர் வன்னியனார்{ IPS:865} என சாசனங்கள் குறிக்கும். அதே காலகட்டத்தில் வன்னியன் எனும் பட்டம் தாங்கிய மறவர் {இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிய மிண்டன்} மேலப்பனையூர் அகிலாண்டேஸ்வரி கோயில் கல்வெட்டில் {க.எ: 155-9, பு.கோ.வ.க, பக்: 168} காணப்படுகிறார். இதேபோல சேரலேரி ஊரவரான அரையன் வன்னியன் நம்பு செய்வார்,{க.எ:12} பரம்பூர் வன்னியன் நம்பு செய்வார்{க.எ:13} யாவரும் மறவர் வாழ்விடங்களில் இருந்தவர்களே ஆவர்.

3. பனையூர் கோயிலின் மகாமண்டப நடுவரிசைத் தூண் மீதுள்ள உத்திரத்தில் “அவையன் சோழசிங்கன்” -எனும் குளமங்கலத்தைச் சேர்ந்த மறவன் குறிக்கப்பெறுகிறான்.

4. விரையாச்சிலை கண்டீஸ்வரமுடையார் கோயிலின் விசையாலையத் தேவர் சாசனங்கள் பின் வருமாறு தொடர்கிறது..

அ) துலையாநிலை ஊரவர் ‘வன்னிய மதித்த தேவன் கரை’ {IPS: 937}

ஆ) துலையாநிலை ஊரவர் [வன்னிய] மிண்டன் கரை” – என சொல்கிறது. மேலுள்ள பத்திகளில் ஏற்கனவே மறவரில் வன்னிய மிண்டனைக் கண்டுள்ளோம். தவிர இந்த சாசனங்களில் சொல்லப்பட்டதைப் போல இன்றும் தங்களை ‘கரைப் பிரிவுகளாக’ புதுகைப்பகுதிகளில் மறவர்கள் தம்மை வகுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

5. “நியமனாட்டுச் சூரைக்குடியில் திருமேநிஅழகியரான விசையாலையத்தேவர்”{IPS: 783} மற்றும் “கேரள சிங்க வளநாட்டு தேனாற்றுப் போக்கு நியமப்பற்று சூரைக்குடி அரசு காத்தார் விசையாலைய தெவர் குமாரர் இராயப்பரென்” {IPS: 759} எனப் பல்வேறு சாசனங்கள் விசையாலையத் தேவர்களின் வாழ்விடமாக நியமநாடு எனும் பகுதியையே குறிப்பிடுகின்றன. இன்றும் இப்பகுதியில் ‘நேமநாட்டு மறவர்கள்’ சிறந்த மதிப்புடன் ஆலய முன்மரியாதைச் சிறப்புகளுடன் வன்னியன்-தளவான்- என வழங்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

6. திருமயம் /விரையாச்சிலை, பில்லவனேஸ்வரர் கோயில் சுவாமி சன்னதி வடபுறம் உள்ள சுவரிலிருக்கும் சாசனம் {IPS: 421} இதில் அரசு மக்களில், மறவன் மா. . டயான் மக்கனாயன், ‘அவையன்’ உலகுடையான் உள்ளிட்ட 11 மறவர்கள் வருகிறார்கள். இறுதியாக ‘தவப்பெருமாளான மறமாணிக்க நயினார்’ ஒப்பமிட்டுள்ளான். இவர் மறமாணிக்கர் எனும் மறவர் தலைவரில் ஒருவராவார்.

7. 14ம் நூற்றாண்டின் விரையாச்சிலை தூண் கல்வெட்டில் ” விரையாச்சிலைவூர் மறவன் நம்பி அஞ்ஞூற்றுவப்பேரயனும் ‘அவையன் சொக்கனாரும்’ வருகிறார்கள். {க.எ: 158, பு.கோ.வ.க. பக்: 175-176}

விரையாச்சிலை மறவர்கள் ‘ஐநூற்றுவன்’ – ‘நயினான்’ எனவும்; பனையூர் மறவர்கள் ‘எட்டி பொன்னன்’ ‘வென்றார்’ ‘வன்னிமிண்டன்’ ‘திருமேனியர்’ ‘காத்தார்’ ‘சாத்தன்’ எனவும்; விரையாச்சிலை-குளமங்கலம் மறவர்கள் ‘அவையன்’ ‘அடைக்கலங்காத்தான்’ ‘வென்றுமாலையிட்டான்’ ‘ எனவும்;

நாவலூர் மறவர்கள் ‘பெரியான்’ எனவும், சூரைக்குடித் தலைவர்களின் அனைத்து பெயர்களையும் பட்டங்களையும் மறவர்கள் தாங்கி நிற்கின்றனர்.

•மறவர் கரைப்பிரிவுகள்•

புதுக்கோட்டையின் 12 கரை மறவரில் மூன்று கரையினர் விசையாலையத் தேவர் தடயங்களைச் சுமந்து நிற்கின்றனர்.

1. வயிரத்தேவன் புறம்.

கலங்காத கண்டன் அவையராயப் பேரரையர் வயிரமதிச்சானை முன்னோனாகக் கொண்டது.

2.வாவாசிக் கூட்டம்.

அடைக்கலம் காத்தாரான வாள்வீசிக் காட்டினான் என்பவரை முன்னோனாகக் கொண்டது.

3. கோடாளிப்புறம்.

பரியேறு தேவர் கோடாளிப் பேரரையர் என்பவரை முன்னோனாகக் கொண்டது.

– இதைத் தவிர எந்தக் கரைப்பிரிவிலும் சேராத தூங்கன் வகையறாக்களுக்கு குலதெய்வமாக ‘அடைக்கலங்காத்தார்’ உள்ளது.

•அதிராப்புலி அம்பலம் வகையறா•

ஐயா. திரு.சுப்பராயலு வரிசைப்படுத்தியுள்ளோரில் “அதிராப்புலி விசையாலையத் தேவரும் {கி.பி.1595/ IPS:861 } ஒருவர். இச் சிறப்புப்பெயரில் இன்னும் கோட்டூர் எனும் ஊரில் இந்த அம்பலக்காரர் வகையறாக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

•அதிராப்புலி கரை•

லெம்பலக்குடியில் உள்ள மறவரின் தனிக்கரை இது.

•திருமேனி அம்பலக்காரர் வகையறா•

திருமேனி அழகியாரான விசையாலையத்தேவர் {கி.பி.1458/ IPS: 798, 712} முன்னொட்டு பெயரில் இன்றும் கோவனூரில் இருக்கும் அம்பலக்காரர்கள் இவர்கள்.

இவ்விதமாக பல்வேறு விதமான தரவுகள் மற்றும் தற்கால வாழ்வியல் காட்டும் கோணங்களில் எல்லாவிதமான ஒற்றுமைக் கூறுகளும் சூரைக்குடி அரசு விசையாலையத் தேவரை இவர்களுடன்தான் இணைக்கிறது.

இனி, சூரைக்குடி அரசின் அடித்தளமாக மறவர் படைப்பற்றான கானநாட்டு விரையாச்சிலைப் படைப்பற்றே விளங்கியுள்ளதை பல்வேறு ஆய்வுகள் படம்பிடித்துக் காட்டியுள்ளன. அவற்றை அடுத்த பதிவில் விரிவாகக் காண்போம்.

இன்னும் வளரும்….

நன்றி!

•ஆதார நூல்கள் மற்றும் தரவுகள்:

1. Inscriptions (texts) of the Pudukkottai state The arranged according to dynasties

IPS:454, 452, 800, 865, 783, 786, 937, 759, 421. 861, 798, 712,

2. புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள் (புதிய கண்டுபிடிப்பு) திரு. கரு.ராஜேந்திரன்.

க.எ: 33, பக்: 34, 155-9,பக்:168, 12, 13,158, பக்:175-176,

3. Structure and Society in Early South India Essays in Honour of Noboru Karashima Edited by Kenneth R. Hall, Oxford University press.2001, Arasus of the Pudukkottai Region and the Nayaka system Y.Subbarayalu

4. The vicissitudes of Virayaccilai, ‘collected p

முதலாம் மாறவர்மன் குலசேகரத் தேவர் காலத்தில்,மலையாளங்குடி அரசுமக்கள்- மறமுதலிகள் வரிசையில் “அரசு சொக்கனார்”{IPS: 403} – என்பவரும் வருகிறார். இவர் அரசு எனும் அடையாளம் பெறுவதால் விசையாலயத்தேவர்களது முன்னவர்களில் ஒருவராக இருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. 

புதுக்கோட்டை வரலாற்றைக் கூறுவதில் மிகவும் நல்ல ஆய்வு நூல் எனப் பல்வேறு முன்னணி ஆய்வறிஞர்கள் போற்றும் “புதுக்கோட்டை வரலாறு 1600வரை” நூலில் சூரைக்குடி அரசு பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் முனைவர்.வீ.மாணிக்கம் அவர்கள் மிகத் தெளிவாக விளக்குகிறார். அவற்றில் சூரைக்குடி அரசின் இனமரபினைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்..

” மறவர் சமூகத்தவரின் தலைவர்களுள் ஒருவரான விசையாலயத்தேவர்கள் குற்றரசாக சூரைக்குடியை மையமாகக் கொண்டு செயல்பட்டுள்ளனர்”.[ பக்:356]-என்றும்,

“மறவ அரையர்கள் 14ம் நூற்றாண்டில் ஆதிக்கம் பெற்று இறுதியில் தம் தலைவனான சூரைக்குடி அரசிடம் பாடிகாவலை ஒப்படைத்துள்ளனர்”[ பக்: 336] -என்றும்,

இந்த சிற்றரசின் அதிகாரத்திற்கு அடித்தளமாக படைப்பற்றுக் குடியிருப்புகளில் வசித்த மறவர் சமூகத்தவரே செயல்பட்டனர் -என்றும்,

“வன்னியனார் அடைக்கலம் காத்தாரான நாடுமதித்த விசையாலையத்தேவர்” [IPS: 720] -என குறிப்பிடப்படுவதால் இவர் மறவருள் ‘வன்னியமறவர்’ எனும் பிரிவினராகக் கருதலாம்,[பக்: 356-357] என்றும், கூறுகிறார்.

விசையாலயத்தேவரை வன்னியனார் எனக்கூறும் மேற்கண்ட கல்வெட்டு, கி.பி.1502 ம் ஆண்டிற்குரியதாகும்.[16ம் நூற்றாண்டு]. இக்கல்வெட்டு திருமயம் கண்டீஸ்வரமுடையார் கோயிலின் சுவாமி சன்னதியில் வடபுறச் சுவரில் உள்ளது. இதற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே இதே திருமயம் வட்டத்தில் மேலப்பனையூர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ..

1.இப் பாக்கல்லு 2. இவ்வூர் மறவரி 3.ல் சூட்டத்தேவர் வன்னிய மிண் 5.டன் தன்மம்” [க/என:155-9, பக்: 168, புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள்] – என மறவருக்கு வன்னியன் என கல்வெட்டு உள்ளது இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

புதுகைப் பகுதியில் வன்னியன் என மறவரைத் தவிர வேறு சமூகத்தவர் எவருக்கும் கல்வெட்டு இல்லை. அதே போன்று இப்பகுதிச் செப்பேடுகளிலும் மறவரே “வன்னியப் பேரரையத்தேவன்” [ மூலங்குடி செம்பூதி மறவர் பட்டயம்]- எனவும் குறிப்பிடப் பெற்றுள்ளனர்.

இது பொன்ற சான்றும் மற்ற எவருக்கும் இப்பகுதியில் இல்லை.

ஏற்கனவே 16ம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் இளவேலங்கால் கல்வெட்டில் மறவர் ஒருவரது பெயர் “லிங்கத்தேவ வன்னியன்” என உள்ளதையும், ராமநாதபுரத்துச் சேதுபதிகள் “சொரிவன்னியன்” எனச் சாசனங்களில் வழங்கப்பெறுவதையும், அச் சேதுபதிகளில் சடைக்கத்தேவனது மருமகன் ஒருவர் வன்னியத்தேவன் [ராமப்பையன் அம்மானை] எனப் புகழ்பெற்று விளங்கியதையும் இங்கு ஈண்டு கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே, பழைய புதுக்கோட்டை மாநிலமோ, சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி மண்டலங்களோ ஆகட்டும் எங்கும் மறவர்கள் வன்னியர் என அழைக்கப்பட்டுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாக நாம் விளங்கிக்கொள்ள வேண்டுவனவாகும்.

மேலும், இன்று சிலர் உள்நோக்கம் கொண்டு திரிக்கும் “மாங்குடி மறவன் அவையன் சாத்தனான அதளையூர் நாட்டுப் பேரரையன்” [IPS: 505] சாசன வாக்கியத்தையும் உள்ளது உள்ளபடியே தனது நூலில் எழுதியுள்ளார். [ பக்: 357].

மறமுதலிகள், மறமாணிக்கர் என வரும் சாசன வாக்கியங்களுக்கும் இவர் சிறப்பான விளக்கம் கொடுத்து அன்னார் மறவரில் முதன்மையானவர் மற்றும் மறவர் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் என்றும் உறுதி செய்துள்ளார். அவற்றை விரிவாகப் பிறகு காண்போம்.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில், குறிப்பாக வெள்ளாற்றிற்குத் தெற்கே கோட்டூர், லம்பலக்குடி வரையிலும் மறவர் குடியிருப்புகள் செறிவாகக் காணப்பட்டன. இதற்குத் தென்பகுதியில் சேதுச் சீமையும், சிவகங்கைச் சீமையும் அமைந்திருந்தன. கள்ளர் தலைவர்களான தொண்டைமான்கள் மேற்கூறப்பட்ட மறவர் ஆதிக்கம் பெற்ற பகுதிகளில் கள்ளர் குடியிருப்புகளை அமைத்து மறவரின் செல்வாக்கைக் குறைக்க முயற்சித்ததாக நிக்கோலஸ் டிர்க்ஸ் கூறுவார்.

அடுத்ததாக,.. தமிழகத் தொல்லியல் துறை வெளியிட்ட Collected papers studies in South Indian Epicraphy and history {R.Tirumalai .IAS.Rtd.} , “Virayaccilai” [ Virayaccilai , the Garrison of township] – எனும் தலைப்பில் தொல்லியல் அறிஞர் திருமலை ஐ.ஏ.எஸ் அவர்கள் குறிப்பிடும் பொழுது,..

விராச்சிலை என்பது திருமய்யம் தாலுகாவில் உள்ள ஒரு கிராமம்

இங்கு இடைக்காலப் பாண்டியர்களின் கீழிருந்த குறுந் தலைவர்கள் தங்களின் படைப்பற்று தளமாக வைத்திருந்தனர். இந்த படைப்பற்றில் அரசமக்கள் அல்லது மறமுதலிகள் எனும் மறவர் குலத்தின் தலைவர்கள் வசித்து வந்தனர்- என்றும்,

இந்த படைப்பற்றின் இரண்டு முக்கிய கூறுகளாக, விஜயாலயத்தேவரின் வாரிசுகளாகிய அரசமக்களான

சூரக்குடித் தலைவரின் குடும்பம், மற்றும் மறமுதலிகள், அதாவது

மறவர் தலைவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இருந்தனர் -என்றும்,

சக ஆண்டு 1371 ஆம் ஆண்டித்திய சாசனப் பதிவுகள் இந்தப் படைப்பற்றுக் குடியிருப்பை வெளியே கொண்டு வந்தன, இங்குள்ள ஆதி கண்டீஸ்வரமுடையார் கோயில் கி.பி 1449 இல் கேரள சிங்க வளநாடு தேனாற்றின் நீர்ப்பாசனப் பாதையில் நியமப்பற்றில் உள்ள சூரக்குடியைச் சேர்ந்த மறவர் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. -என்றும் , தெளிவாகக் கூறுகிறார்.

ஏறக்குறைய கி.பி. 1430 முதல் 1550 வரை. விராச்சிலையானது சூரைக்குடி முதல்வர்களின் கட்டுப்பாட்டின் கீழ், ஒரு நூற்றாண்டு காலமாக சந்தேகத்திற்கு இடமின்றி இருந்துள்ளது. இந்த மறவர் படைப்பற்றைச் சேர்ந்தவர்கள்

தங்கு தடையின்றி .

சூரைக்குடி முதல்வர்களுக்கு உறுதியான முறையில் தங்கள் விசுவாசமான ஆதரவைக் கொடுத்தனர், விசயாலயத்தேவருக்கு ஆதரவாக நின்று சூரைக்குடி பாதையில் படையெடுத்த எதிரிகளைக் கொல்ல உதவினார்கள். வழுத்தூர் பல்லவராயரை வென்றதும் இவர்களே ஆவர்.

இனி விரயாச்சிலை உள்ளிட்ட நான்கு மறவர் படைப்பற்றுகள் சூரக்குடி அரசுக்கு அளித்த பங்களிப்பு என்ன? என்பதைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாகக் காண்போம்..

நூற்சான்றுகள்:

1. புதுக்கோட்டை வரலாறு 1600 வரை,

{பக்கங்கள்,336, 356, 357,}

2. Collected papers studies in South Indian Epicraphy and history {R.Tirumalai .IAS.Rtd.} , “Virayaccilai” [ Virayaccilai , A Garrison (padaiprru) township] Tamilnadu Department of Archaeology .

3. புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள். {க.எண்:155-9, பக்கம்: 158}

4.மூலங்குடி செம்பூதி மறவர் பட்டயம்.

 
அதே சுவரில் அதே ஆண்டுத் தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டு,37 பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறது. விஷ்ணுகோயில் ஸ்ரீபண்டாரரும் நிருவாகமும் இணைந்து வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயருக்கு இக்கோயில் திருவிடையாட்டமான மலுக்கன் வயக்கலை, திருக்கோகர்ணம் மின்னல் என்று அழைக்கப்பட்ட பணம் முந்நூறுக்கு விற்றனர்.

இரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக அழகியமெய்யருக்கு உதயகாலத்தில் ரகுநாத அவசரக் கட்டளையைச் சோலையப்பப்பிள்ளை தொடர்ந்து நடத்திவர அநுமதிக்கும் இந்த ஆவணம், அவருடைய நிருவாகத்திற்குக் கட்டளையாகக் கோயிலில் மூன்று படிச் சோறு பெற்றுக்கொள்ள அநுமதித் திருப்பதுடன், மலையப்பெருமாள் வீட்டுக்குத் தெற்கிலும் வேங்கைக் குளக்கரைத் திருவீதிக்கு வடக்காகவும் உள்ள மனையைக் கொள்ளவும் வழியமைத்துள்ளது.

சூரைக்குடி அரையன் விஜயாலயத்தேவன் விஜயாலயன் என்னும் பெயர் சோழர்களை நினைவுபடுத்துவதால் சோழர் எனவே கருதுவோம். விஜயத்தேவன் என்பதும் விஜயராயர் என்பது வணிக குழுவை தலைமை தாங்குபவன் என பொருள் படும். மேலும் அவையன் சாத்தன் நாட்டான் என்பது சாத்து வணிகர் தலைவன் என்பதேயாகும். மேலும் விஜாயலத்தேவனை பற்றி மறைக்கப்பட்ட கல்வெட்டும் அவன் வம்சமும் இது தான்.
I.P.S.(452) திருமய்யம்,நெய்வாசல் அகஸ்தீஸ்வரமுடையார் கோவில் வீரபாண்டியத் தேவரின் கல்வெட்டு:
"தேனாற்று போக்கு ஆதளையூர் நாட்டு சூரைக்குடி அரையன் பெரியனான தொண்டைமானார்"

நன்றி:
அறந்தாங்கி தொண்டைமான் செப்பேடுகள்: புலவர் செ.இராசு
புதுக்கோட்டை வரலாறு: உயர்.திரு.ஐயா.வீ.மாணிக்கம் அவர்கள்
இதில் சூரைக்குடி அரையனான பெரியனான தொண்டைமானாருக்கு பாண்டியன் காவல் பொருப்புகளும் சில வரிகளையும் நிமித்தகளையும் வழங்குகிறார்.


அறந்தாங்கி தொண்டைமானும்,அன்பில் தொண்டைமானும் சூரைக்குடி தொண்டைமானும் மறவர்களே.

தொண்டைமானை புகழும் பெரும்பாணாற்றுபடை
"மறவர் மறவ தொண்டையோர் மருக".
திரையனாகிய சோழரின் இளவலான தொண்டை வேந்தன் மறவனே.
கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, 'ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்' என்னும் அகரத்தை அமைத்தார்.

பன்னிருவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வகரத்தின் உறுப்பினர்களுக்கு சர்வமான்ய தன்மதானமாகத் தர நிலம் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஏழு மா நிலமெனப் பன்னிருவருக்கு எண்பத்து நாலு மா நிலந்தர விரும்பிய விசையாலய தேவர், அதற்கான நிலத்தைத் தமக்கு விலைக்குத் தர வேண்டும் என்று கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவரையும் அந்நாட்டுப் படைப்பற்றான செங்குன்றூர் நாட்டவரையும் கேட்க, கானநாட்டு நாலூர் நிலப்பகுதி இறையிலிக் காராண்மையாக விற்கப்பட்டது

கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, 'ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்' என்னும் அகரத்தை அமைத்தார்.

பன்னிருவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வகரத்தின் உறுப்பினர்களுக்கு சர்வமான்ய தன்மதானமாகத் தர நிலம் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஏழு மா நிலமெனப் பன்னிருவருக்கு எண்பத்து நாலு மா நிலந்தர விரும்பிய விசையாலய தேவர், அதற்கான நிலத்தைத் தமக்கு விலைக்குத் தர வேண்டும் என்று கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவரையும் அந்நாட்டுப் படைப்பற்றான செங்குன்றூர் நாட்டவரையும் கேட்க, கானநாட்டு நாலூர் நிலப்பகுதி இறையிலிக் காராண்மையாக விற்கப்பட்டது

இவ்ஆவணத்தில் கோட்டையூர் உலகளந்த சோழக் கானநாட்டு வேளார், மேலூர் முனையதரையர், கண்ணனூர் காலிங்கராயர், தெற்காட்டூர் வாணாதராயர், முனியந்தை உலகேந்திய வேளான், ஆதனூர் உகனையூர் சேதியராயர், யானூர் உடையார், மருங்கூர் சுந்தரபாண்டியக் கானநாட்டு வேளார், மெய்யம் சுந்தரத்தோள் நம்பி, இளஞ்சாற்குச் சேதியராயர் ஆகிய நாட்டார்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இவர்களுடன் ஊர்க் கணக்குகளாக, விரையாச்சிலை ஊர்க் கணக்கு வைரக்கொழுந்து, செங்குன்றூர் நாட்டுக்குச் சமைந்த ஊர்க் கணக்குக் கானநாட்டுக் கணக்கு அழகியநாயன், மற்றோர் ஊர்க் கணக்கு அடைக்கலங்காத்தான் ஆகிய மூவர் கையெழுத்திட்டுள்ளனர். திருவரங்கம் கோயிலைச் சுற்றிப் பல அகரங்கள் உருவானமையைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். அது போல் மெய்யத்து வளாகத்தில் கி. பி. 1399ல் ஓங்காரநாதத்து வேத மங்கலம் என்ற அகரம் சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரால் பன்னிருவரைக் கொண்டு உருவாக்கப்பட்டமை வரலாற்றிற்குப் புதிய வரவு.

புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளைக் கண்ணுற்றபோது, வீரவிருப்பண்ண உடையாரின் கல்வெட்டுகள் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்படுவதை அறியமுடிந்தது. திருவிளாங்குடிக் கல்வெட்டில் அரியண உடையாரின் மகனாகக் குறிக்கப்படும் வீரவிருப்பண்ணரின் கி. பி. 1417ம் ஆண்டுக் கல்வெட்டு, மேலப்பனையூர் ஞானபுரீசுவரர் கோயிலில் உள்ளது.40 சூரைக்குடி விசையாலயதேவர் வீரவிருப்பண்ணரின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர் போலும்! மெய்யத்திலேயே அவரது வழித்தோன்றலான சொக்கநாராயண விசையாலயரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.41 அவற்றுள் ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டதாகும்

சுந்தரபாண்டியன் மண்டபத் தூணொன்றிலிருந்து படியெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு, பாடல் கல்வெட்டாக அமைந்துள்ளது. இறைவனை, 'மெய்யம் அமர்ந்த பெருமாள்' என்றும் 'மணஞ்சொல் செண்பக மெய்யர்' என்றும் கொண்டாடும் இக்கல்வெட்டின் முழுப் பொருளை அறியக்கூடவில்லை. மண்டபத்தின் கிழக்குப் படிக்கட்டுகளுக்கான தென்புறப் பிடிச்சுவரில் உள்ள கல்வெட்டு, 'இ ந்தப் படியும் சுருளும் வீரபாண்டியதரையர் தன்மம்' என்கிறது. எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டுகளைப் பதினான்காம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.42



கோயில் வளாகத்தின் கிழக்குச் சுற்றிலுள்ள சேனைமுதலியார் திருமுன்னில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, கேரளசிங்க வளநாட்டுச் சூரைக்குடிச் சொக்க நாராயணரான விசையாலயதேவரும் திருநெல்வேலிப் பெருமாளான சுந்தரபாண்டிய விசையாலயதேவரும் கானநாட்டுத் தேவதான பிரமதேயமான திருமெய்யத்தில் எழுந்தருளியிருக்கும் மெய்யத்து மலையாளரின் திருவிழாவிற்கு முதலாகப் 'பச்சை வினியோகம்' எனும் வரியினமாய் வந்த பணம் முந்நூற்று முப்பத்துமூன்றையும் வழங்கிய தகவலைத் தருகிறது.43

இவ்வாறு விஜயாலய்த்தேவரை பற்றி பல அரிய கல்வெட்டுகளும் அரசாண்ட வரலாறும் இங்கு நிறைய இருக்கின்றன.

அதே சுவரில் கி. பி. 1461ல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டொன்றால்,44 அதலையூர் நாட்டு நியமப்பற்றுச் சூரைக்குடி அவையாண்டாரான சுந்தரபாண்டிய விசையாலய தேவர், மெய்யத்து மலையாளருக்கு, தம்முடைய பெயரால், தம்முடைய பிறந்த நாளில், 'சுந்தரபாண்டிய விசையாலய தேவன் சந்தி' என ஒன்றமைத்து, அது போழ்து தளிகை படைக்கவும் திருமாலை, திருப்பரிவட்டம் முதலாயின சாத்தவும் வாய்ப்பாக, கானநாட்டுப் படைப்பற்றான இளஞ்சார்ப் புரவில், சுந்தரபாண்டிய நல்லூரைத் திருவிடையாட்டமாக்கிக் கோயிலுக்கு சர்வமானியமாக அளித்த செய்தியைப் பெறமுடிகிறது.

திருமுன்னின் முகமண்டப உட்சுவரில் காணப்படும் பராக்கிரம பாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அவருடைய மெய்க்கீர்த்தியைத் தருவதுடன், இக்கோயிலில் அவர் பெயரால் உருவாக்கப்பட்ட பராக்கிரம பாண்டியன் சந்தியை வெளிச்சப்படுத்துகிறது. 'திருமெய்ய மலையாளன்' என்றழைக்கப்பட்ட நின்றருளிய தேவருக்கான சிறப்புப் பூசையாக அமைக்கப்பட்ட இச்சந்தியை நிறைவேற்ற வாய்ப்பாக மஞ்சக்குடிப் பற்றிலிருந்த சாத்தனூர், கோயிலுக்குக் கொடையாகத் தரப்பட்டது

நன்றி.புதுக்கோட்டை மாவட்ட வரலாறு:வீ.மானிக்கம்.............புதுக்கோட்டை கல்வெட்டுகள்..சுப்புராயலு குறிப்புகள் 27. கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 103; பெரும்பிடுகுப் பெருந்தேவி, கோயிலைப் புதுப்பித்துக் கொடையளித்த செய்திகளைக் குறிப்பிடும் கல்வெட்டு, என்று எழுதும் ஜெ. ராஜாமுகமது, அக்கல்வெட்டின் அடிப்படையில், 'குகை இக்காலத்திற்கு முன்பே இருந்திருக்கவேண்டும்' என்றும் எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலிலேயே இருப்பதாகவும் பெருந்தேவியே குடைவரையைக் குடைந்து அமைத்ததாகவும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 186. 28. New Indian Eகpress, 30. 5. 2006. 29. IPS: 439; என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. தினமணி, 5. 8. 2003. 43. IPS: 764. 44. IPS: 800. 45. IPS: 893. 46. IPS: 923. 47. தினமணி, 5. 8. 2003. 48. The Hindu, 17. 8. 2003. 49. தினமணி, 5. 8. 2003. 50. மேற்படி. 51. இது திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிடும் ஜெ. ராஜாமுகமது, அடைப்புக்குறிகளுக்குள் பெரிய திருமொழி என்று வேறு எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமடலிலும் ஓரிடத்தில் இத்தலத்தைக் குறிப்பிடுவது இங்குக் கருதத்தக்கது. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி, ஆகியோர், 'இ ச்சிற்பக் காட்சி இக்குடைவரையைப் பெரிதும் அழகு செய்கின்றது. இதனைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இவ்விறைவனைத் 'திருமேய மலையாளன் எனக் குறிக்கிறார்' என்றெல்லாம் எழுதியுள்ளனர். மு. கு. நூல். ப. 240. 52. திருமங்கையாழ்வார் 1206, 1524, 1660, 1760, 1852, 2016, 2674 (126) நாலாயிர திவ்யப் பிரபந்தம், ப. 799.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.