தமிழ் வளர்த்த ஸ்ரீ ராமன்
~~~~~~~~~~~~~~~~~~~
மூவேந்தரும் இல்லாமல் தோற்றுவித்த தமிழ் சங்கமும் போய், 21 தலைமுறைக்கு தமிழ் வளர்க்கும் கோ வேந்தர் எவருமின்றி, எந்த மன்னரும் கொடையளிக்காத காலத்தில், பாட்டியற்றும் பாவேந்தர்கள் வாழ்க்கை நலிவுற்றும், ஆதரிப்பார் இன்றியும் பாழ்பட்டு கிடந்தது.
அவர்கள் காற்றடிக்கும் இடமெல்லாம் இலவம் பஞ்சு பறப்பதைப்போல, ஆதரிப்பாரின்றி அன்னார் ஆலாய்ப் பறந்து திரியும் போது, கேட்டதெல்லாம் தரும் தேவேந்திரத் தாருவான கற்பக விருட்சம் போல இருந்து, தமிழையும் தமிழ் புலவர்களின் வாழ்வினையும் வளமாக்கியவன் மன்னன் ஜெயதுங்கன் -.என்று சேதுபதிகளைப் பற்றிப் பாடுகிறது.
ஜெயதுங்கன் என்பது சோழரின் ஒரு பட்டம்.
மேலும்,
இந்த மண்டலங் காக்கும் அதிபதிகள் வம்சத்து பதி. மன்னர்களுக்கு நீதிபதியாக விளங்குபவன், எதிரிகளும் தலைவனாக ஏற்கும் தலைவன், சமஸ்தானங்களின் பதியாக இருப்பவன், படைசெலுத்திய நிலமெல்லாம் வெற்றிபெற்று , வெற்றிமகளை துணையாகக் கொண்டவன், காலாட்படை, தேர்ப்படை, யானைப்படை, கொண்டு விளங்குபவனாகிய தேனைப் போல இனிமையான சேதுபதியைத் தரிசிப்பது, ராமேஸ்வரத்தில் வாழும் ராமலிங்க நாதரைத் தரிசனம் செய்வது போன்றதாகும்
-என்று ராமநாதரைத் தரிசித்து சேதுபதி தரிசனம் செய்யும் ஐதீகம் விளக்கப்படுகிறது.
தவிர,
சேதுபதி என்ற பெயருடன் மனித அவதாரம் கொண்டாய், இந்த பெரும் பூமியில் நீயே ரகுராமன் ஆவாய், - என்று சேதுபதியே ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாகப் பாடப்படுகிறார். See less