படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில்
மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது

அரசமக்களும் மறமுதலிகளும் அரசமக்கள்: மறவர்களில் அரையர்,பேரரையர்,நாடாள்வார் போன்றவர் இருந்தனர். இவர்களே அரசமக்கள். அரையர் பற்றிய கல்வெட்டுகள்
புதுக்கோட்டை மறவர்கள் சேதுபதி மறவர் என்ற வாள்கோட்டை மறவர் என்று திருச்சி மானுவேல் hemmingway கூறுகிறார் ஆக செம்பி நாட்டு மறவர்கள்
ஏழு கிளைகளில் பிச்சா மரக்கால் கிளை மட்டும் உண்டாம்
மறமுதலிகள் என்போர் அரையர் அல்லத மறக்குல தலைவர்கள் மறமுதலிகள் என இருந்தனர். இவர்களிலும் அரையர் நாட்டார் அந்தஸ்தில் அரசுகளில் அலுவளர்களாகவும் இருந்தனர். படைப்பற்று குடியிருப்புகள்

அரசமக்கள்: அரையர்களே அரசமக்கள் ஆவார்கள். அரையர்களும் மறமுதலிகளும் அரசமக்களும் மறமுதலிகளும் எனவரும் கல்வெட்டுகளில்
அரசமக்கள் என்போர் யார்?
விருதராஜ பயங்கரவளநாடு இந்நாட்டு ஆளும் அரையர் என்போர் மறவரில் அரசுரிமை பெற்றவரையே குறிக்கும். அப்படி தகுதி உள்ளவர்கள் இந்த அந்தஸ்தில் உள்ளவர்களாக கருதப்படுவோர்.
1)அரையர்
2)பேரரையர்(பெரியான்)
3)நாட்டார்
4)நாட்டரையர்
5)நாடாழ்வான்
6)ஊரவையர்
7)சக்கரவர்த்தி
நாமே மேலே சொன்ன பட்டங்களிலே கல்வெட்டுகளில் காணப்படுவோரே அரசமக்கள் ஆகும்.
அரையர்:
அரசர் என்னும் பெயரின் விகுதி கொண்டோரே இந்த அரையர் ஆகும். சங்க இலக்கியத்திலே சிறுகுடி பெருங்குடி என இருவகைப்படும். அவர்களில் அந்தனரும்,அரசரும் பெருங்குடி மற்றவர்கள் எல்லாம் சிறுகுடியாம்.
இதில் விராச்சிலை,பொன்னமராவதி,பணங்குடி,குலமங்கலம்,பனையூர்,புல்வயல்,விருதராஜபயங்கர மங்கலம்,குருந்தன்பிறை,ஆதலையூர் இங்கு கானப்படும் அரையர்கள் மறவர் சமூகத்தவரே.
பெருங்குடி மறவராயர்கள்:(கி.பி.1270)
I.P.S.(554) ஆலங்குள தாலுகா திருவரங்குள உறதிஸ்வரர் கோவிலில் சுவாமி கோவிலில் சுவாமி முன் மண்டபத்து தென்புரம் சுவரில் ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலசேகரத் தேவருக்கு யாண்டு இரண்டாவது கானாட்டு பெருன் கரைக்குடியான திருவரங்குள நல்லூர் ஊராயிசைந்த ஊரோம் நாங்கள் பெருங்குடி மறவரையர்கள் பக்கல் விலையும் ஒற்றியுங்கொண்டுடைய............
இது ஒன்றே "பெருங்குடி மறவரையர்களே" அரசமக்கள் என்பதற்க்கு ஆதாரம் போது மானது.
பேரரையர்:
அரையருக்கு மேலே பேரரையர்கள் ஆதாவது. பெரிய அரையன் என்றும் பெரியான் என்றும் கல்வெட்டுகளிலே வரும். ஒற்றைகொம்பு மறைந்து வரும்.
"பெரையர்"=பெரிய+அரையர் எனவரும் சில இடத்தில் ஒற்றைகொம்பு தவறியும் வரும் விழுப்பரையர் விழுப்பெரையர் என்பது போல இதற்க்கு பெருமாள் என்னும் பட்டத்திற்கு நிகரானது.
NO.15.AR.NO.137 of 1908 Tirupattur,Ramanathapuram district
Inscriptions of Varaguna Maharaja a pandya king
"கோவரகுணமாராயர்க்கு யாண்டு ....நந்தா விளக்கு எரிய முத்தூர் கூற்றத்து
பெருமாத்தூர் மறவன் அணுக்க பேரரையன் கடம்ப வேளாண்
வைத்த பழங்காசு பதினைந்து
சத்ரு கேசரி பேரரையன் 
திருமையம் பேரையூர் நாகநாதஸ்வாமி கோவில் கல்வெட்டு
"இந்நாட்டு
கொட்டையூர் மறவன் பெற்றான் குவான் சத்ருகேசரி பெரையன்(பேரரையன்)
மறவன் அனுக்கபேரரையன் கடம்ப வேளான்:
கச்சிவனம் என்றால் காஞ்சி கடம்பவனம் என்றால் மதுரை. பாண்டியர்களின் வேளானாக இருந்த ஒரு பேரரயன் திருப்பத்தூர் கல்வெட்டுகளில் கூறப்பெருகின்றான்.
திருப்பத்தூர்
கோவனூர் கூட்டம் மறவர் சமூகத்தினுடையது
"கொவனூர் கூட்டத்து அரசு நாராயன பெரியான்,விஜயநாராயன பெரியான்.
ஐநூற்றுவ பெரியான்:
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266) I.P.S.(346)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்
நம்பி ஐநூற்றுவ பெரியான்

ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்......................குடுத்த பரிசாவது..... முன்னால் குலசேகர தேவருக்கு
இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்............... இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்..............................
மறமாணிக்கர்(மறச்சக்கரவர்த்தி) என்போர் மறவர் மட்டுமே இதுவும் அரசாங்க ஆவணம்
மறமானிக்க பெரையன்(பேரரையன்):

பூவாலைக்குடி கல்வேட்டில் மறமாணிக்கர்கள் எல்லோரும் நிறுவிய சந்நிதியில்
"மறமாணிக்க பெரையன்(பேரரையன்) குடிகாட்டுக்கும் பகைச்சவன் குல காலன்(சத்ருகேசர்) குடிகாட்டுக்கும்"
துக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் ,அகிலாண்டேஸ்வரி கோவில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படி உள்ள கல்வெட்டுகள்.
காலம்: பாண்டியராட்சி 13 ஆம் நூற்றாண்டு
செய்தி:
இம்மண்டபத்தில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படிகள் செய்து கொடுத்தவர்களின் விபரம் கிழே:
1.குன்றாண்டார்.
2.தேசி மாதாக்கள்
மாதன் மக்கள்:
கல்வெட்டு என்: 33:2
"இப்பாக்கல் பனையூர் மறவரில் மாதன் மக்கள் தன்மம்"
"மாதன் மக்கள் என்பது மாத்தாண்டன்(சூரியன்) மக்கள் அல்லது கொற்றவை மாதாவின்(அகிலாண்டேஸ்வரி) மக்கள் என்ற கூட்டம் கொண்ட மறவர்கள் பாற்கல் செய்து கொத்துள்ளனர்.
சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12
""இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்"
பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.
கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13
""இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்"
பனையூர் மறவரில் கோனாட்டு பேரரையன் சோழகோன் ஒருவன் கொடுத்த நிலைக் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.
சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
"இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்"
பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.
சாமந்தார்:
கல்வெட்டு என்: 33:27
""இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டானான ஒற்றையில் வெட்டி தன்மம்"
சாமந்தார் என்பது தளபதி என்னும் பதவி. கருத்தாண்டான் என்னும் சாமந்தார் செய்த பாக்கல்லு செய்து கொடுத்தமை.
வாள்வீசிகாட்டினான்:
கல்வெட்டு என்: 33:32
""இந்த உத்திரம் மேற்படி கலத்து மறவரில் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் தன்மம்"
குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் குடுத்த தன்மம்..
சோழசிங்கபேரரையன்,மழவராயன்,மாளுவசக்கரவர்த்தி:
கல்வெட்டு என்: 33:34
"இந்த உத்திரம் மேற்படி குலமங்கலத்து மறவரில் அவையன் சோழசிங்க பேரரையன் உள்ளிட்டாரும் இரங்கல்மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதிமேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்"
குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அவையன் சோழ சிங்க பேரரையனும் இரங்கல்மீட்ட மழவராயனும் மேற்படி பாதியை கட்டி கொடுத்தவன் வளத்தான் மாளுவசக்கரவர்த்தி என்னும் மறவனும் குடுத்த தன்மம்.
இந்த கல்வெட்டுகள் யாவும் ஆவணம் 19 என்னும் கல்வெட்டு இதழில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்தவை ஆகும்.
இந்த கல்வெட்டுகள் யாவும் A.R.E இல் பதிவு செய்யபட்டும் புதுக்கோட்டை கல்வெட்டுகளின்(P.I) பதிவு செய்யபட்ட என்கள் கொண்டவை. இது இன்றும் பனையூர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளது.
நன்றி:
திரு.கார்த்திக் தேவர் அவர்கள்.
ஆவணம் 19,2008 இதழ்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்
மூவாயிர பேரரையன்:
கோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை கண்டுபிடிப்பு --தினத்தந்தி செய்தி
ஜூன்-29
பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்பதாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர் தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்
அப்போது அய்யனார் சிலையடியில்
"இச் சிலை கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"
என பொறிக்கப்பட்டிருந்தது சோழர் கால கலைவடிவில் இது 900 ஆண்டு பழைமையான ஒன்றாக
கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
ஐநூற்றுவ பேரரையன்
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா விரையாச்சிலை தேவவயல் தென்னி வயலுக்கு பொதுவான ஆலமரத்து தெற்கு வரப்பிற்கு பகுதியிலுள்ள கல்வெட்டு
ஸ்ரீ குலசேகர தேவர்க்கு ஸ்வஸ்தி ஸ்ரீ கல்வாயில் நாட்டு சுந்தர பாண்டிய புரத்து அரவத்துடைய பிள்ளை திருமாலிஞ்சோலை தாதர் சோதியர் மூவர்க்கு
விரையாச்சிலை மறவன் நம்பி ஐநூற்றுவ பேரரையர் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்ட தேவர் குளமும்............
கொனாட்டு பெரையர்(கோனாட்டு பேரரையர்):
சிகாநாத ஸ்வாமி கோவில் திருக்கால் எடுத்ததில்
இவ்வூர் மறவரில் கொனாட்டு பேரையர் சோழகோன் தன்மம்.
வாரண பேரையன்(பேரரையன்):
சேவலூர் மறவன் சதிரனான வாரணப்பேரரையன்
திருமையம் சிவன் கோவில் கல்வெட்டு:
துவாரபதி பெரையன்(பேரரையன்)

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா வாழைக்குறிச்சி பழைய சிவன் கோவிலில் தெற்கு சுவரில் வாசற்படிக்கு அருகில் உள்ள கல்வெட்டு
ஸ்வஸ்தி ஸ்ரீ கூடலூர் நாட்டு பனையூர்
மறவரில் பரமன் உய்யவந்த தேவனான துவராவதிப் பெரையன் தன்மம்.........
எதிர்முனை சினப்பேரரையன்
மேலப்பனையூர் சிவன் கோவிலில் சுவாமி அர்த்தமண்டபத்தில் வடக்கு சுவர் ஓரமுள்ள தின்னைக்கு மேலுள்ள கரை கல்வெ
ட்டு:
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சந்தன பிரம்மனான எதிர்முனை சினப்பேரரையன் தன்மம்...................
எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன்
மேறபடி கோவிலில் மண்டபத்தில் உள்ள நடுத்தூனில் உள்ள கல்வெட்டு
இந்த தூன் இவ்வூர் மறவரில் எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன் தன்மம்
பிள்ளான் பெரையன்(பேரரையன்)

இப்பாக்கலில் உள்ள இவ்வூர்
மறவன் தேவனான பிள்ளான் பெரையன்(பேரரையன்) தன்மம்
வெள்ளந்தாங்கினான்:
இடம்:குளத்தூர்,புல்வயல்
ஆண்டு:13ஆம் நூற்றாண்டு
அரசு:சோழர்
செய்தி:
ஸ்வஸ்தி ஸ்ரீ காந்தூர்
வெள்ளந்தாங்கினான் ..........வயல் பாதியும் புல்வயல் மறவன் காடவராயன் மகன் சுந்தரபாண்டியனுக்கு ஆசிரியம்.
நாட்டார்:
ஊரவரே நாட்டாராக கல்வெட்டுகளில் காணப்படுகின்றனர். நாட்டர் நாடுசெய்பவராக நாட்டரசு செலுத்துபவராக காணப்படுகின்றனர்.

மாத்தன் நாட்டான்( மார்த்தாண்ட நாட்டான்):
பாண்டியர் கால்த்தில் செவலூர் கோபுரம் கெற்பகிருகம் செய்த "இவ்வூர்
மறவரில் கொவனூர் கூட்டத்து மாத்தன் நாட்டானாகிய பொன்னம்பலம் காட்டிய கங்கன்" எனும் நாட்டார் கல்வெட்டுகளில் கானப்படுகின்றான்.
நாட்டரையர்( நாட்டுபேரையர்):
நாட்டு பேரரசன் நாட்டரசன் என்னும் பெயர் இதற்க்கு அர்த்தம் இது நாடாழ்வான் என்னும் பதவியை காட்டிலும் பெரிது. அரையரே நாடாழ்வார் என்னும் தகுதி பெற்றிருந்தனர்.

இடம்:குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்
ஆண்டு:12-ஆம் நூற்றாண்டு எண்:I.P.S.(505)
மன்னன்:முதலாம் மாறவர்மர் பண்டியன்
கல்வெட்டு:
ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு.......
ஆவது திருவகீஸ்வர்முடைய நாயனார் நாச்சியாரையும் எழுத்தருவித்தல்..
மாங்குடி மறவன் அவையன் சாத்தன் ஆதலையூர் நாட்டு பெரையன்.....
செய்தி:
திவகீஸ்வரமுடைய சிவன் கோவிலில் நாயகரையும்,நாச்சியாரயும் செய்து
கோவில் கட்டியவன் மாங்குடி மறவன் அவையன் சாத்தன் ஆதலையூர் நாட்டு பேரரையன். இவண் தான்
சூரக்குடி ஆண்ட விசயாலயத்தேவன்....
மற(த்தி)வய்க்காலும் மறவன் வயக்காலும்:
இந்த கல்வெட்டு திருத்தம் பெற வேண்டும்.


மக்கள் நாயன்:
இன் நாட்டு மறவரில் மக்கள் நாயனான
நாடாழ்வார்:
"இரும்பாழி மறவன் அரசன் தேவரான அநபாய நாடாழ்வான்" இராஜ இராஜ கலிங்கு செய்வித்தான் என குலோத்துங்கன் கல்வெட்டில் வருகிறான்.
"மறவன் பன்மனான தென்னன் நிலமை அழகிய நாடாழ்வான்" எனும் மறவன் மறக்குல விநாயக பிள்ளை சிலையை சாற்றியதை சுந்தரபாண்டியன் கல்வெட்டு கூறுகின்றது.
அநபாயன் என்னும் சோழன் பெயரும் தென்னன் அழகியன் என்னும் பாண்டியன் பெயரிலும் நாடாழ்வார்கள் இருந்துள்ளனர்.
சக்கரவர்த்தி:
இது மிகப்பெரிய கவுரவம். தஞ்சையும் உறந்தையும் கொழுத்திய மறமானிக்கரை புகழ்ந்து பாடிய புலவன் ஒருவனுக்கு
மறசக்கரவர்த்தி பிள்ளை என பெயர் தந்து நிலமும் தந்தது சுந்தரபாண்டியன் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
கோனாட்டு நாட்டார் செம்மநாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன்:
அரசுமகன்-குலதெய்வம் -கோவனூர்.
கோனாட்டு செம்ம நாட்டு மறவர்களின் குலதெய்வங்களில் ஒன்றே அரசுமகன். இதுவே கல்வெட்டுகளில் வரும் அரசுமக்கள் என்னும் அரையர்களாகும். அரசமகன் என்பதுவே வட மொழியில் "ராஜ்புட்" என்பதாகும்.
எனவே இங்கு வாழும் அரையர்,பேரரையர்,நாடாழ்வார்,நாட்டார் இவர் யாவரும் அரச மக்களின் வழி வந்தோரின் வம்சாவளிகளே ஆகும். இது இன்னும் கல்வெட்டுகளில் உறுதிப்படுத்தப்படுகின்றது.
ஊரவையர்:
ஊரவையர் என்னும் பெயரே ஊரின் அனைத்து முடிவுகளும் எடுக்க கூடியவர்கள். ஊரவையரே அரையர்,பேரரையர்,நாட்டார்,நாடாழ்வார் எனும் அனைத்து பதிவிகளும் வகிக்க கூடியவர்கள். நாமே மேல குறிப்பிட்டது மட்டுமல்லாமல் என்னற்ற அரையர்,பேரரயர்,நாடாழ்வார்கள் இதில் அடக்கமாகும்.
ஒல்லையூர்,குருந்தன்பிறை,விராச்சிலை,அதலையூர்,கொட்டியூர்,புல்வயல்,பொன்னமராவதி,திருமையம்,விருதராஜபயங்கர நாடு போன்ற பகுதிகளில் மறவர்களே ஊரவையராகும். இதிற்க்கு ஒல்லையூர் ஊராய் இசைந்த ஊரோம் ஒல்லையூர் மதுரை மறவரோம் என ஒ
ல்லையூரில் ஊரவரான மதுரையை சேர்ந்த மறவர்கள் இருந்துள்ளனர். இவர்களில், விஜயநாராயன பெரியான்,அரசுநாராயன் பெரியான்,சோழ்கொன்,விழுப்பரையர்,இராசசிங்க தேவன்,காளையக்கால நாடாழ்வான்,அங்கராயன்,ஐநூற்றுவ பேரரையன்,அரசர் மிகா பெரையன்,கானாட்டு பேரரையன்,கோனாட்டு பேரரயன்,பொறகல்னொரிக்கி பேரையன்,இராச இராச நாடாழ்வான்,மாலயிட்டன்,மக்கள் நாயன்,அஞ்சாதான்,உத்தமசோழ நாடாழ்வான்,ஐநூற்றுவதேவன்,ஐநூற்றுவ பெரையன்,வீரபாண்டிய பெரையன் இவர்களும் மறவர் தான்.
மறமுதலிகள்:
மறவர்கள் என்றால் எல்லோரும் அரையரல்ல நாட்டுல இருக்குறவன்லாம் இராசா இல்லை.
அரையர் அந்தஸ்து இல்லாத மறவர்கள் தங்களை மறமுதலிகளாகவும் சில மறமுதலிகளும் அரையர் அந்தஸ்திலும் இருந்துள்ளனர். மறமுதலிகளின் கல்வெட்டு அனைத்திலும் படைப்பற்று மறமுதலி என்னும் பெயர் வந்துள்ளது. இவர்கள் அனைவரும் அரையர்களின் படைத்தலவர்களாகவும் பாண்டியர் சோழர் போன்ற சக்கரவர்த்திகளின் தளபதிகளாகவும் இருந்துள்ளனர்.

பெருஞ்சுனை கிராமத்தில்
"ஸ்ரீ குலசேகர தெவர்க்கு யாண்டு
இவ்வூர் ஊராய் இசைந்த ஊரில் மதுராந்தக நிலையில் உள்ள மறமுதலிகளில்"...... மதுராந்தகம் எனும் வரி நீக்கிய நிலங்களை பெற்றிருந்த மறமுதலிகள்.

விராச்சிலை பில்லவனெஸ்வரர் கொவில்
"விருதராஜ வளநாட்டு விராச்சிலை அரசமக்களும் மறமுதலிகளும்"
"
அரசமக்கலும் மறமுதலியும் பிரமாணம் பன்னிய" என மறவரையர்களும் மறமுதலிகளும் பிரமானம் செய்தது பல கல்வெட்டுகளில் வந்துள்ளது.

பேரையூர் நாகநாத சுவாமி கோவில் கல்வெட்டுகளில்
"மலையாளங்குடி அரையர்களனைவரும் மறமுதலிகளனைவரும்"
விராச்சிலை போல் மலையாளங்குடியிலும் மறவரையர்கலும் மறமுதலிகளும் ஒன்றாக இருதுள்ளனர். இவர்களுக்கு பொதுவான நிலங்கள் இருதுள்ளது.

இநநாட்டு படைப்பற்று மலையாளங்குடி அரசமக்கலும் மறமுதலியும்..........இக்கோவில் தாந்த்தவரான அரசமக்களும் மறமுதலிகளும்" இவர்கள் இருவரும் வேறுவேறு அல்ல அரையர் அந்தஸ்தும் முதலி அந்தஸ்தும் உள்ளவர்கள் எல்லா அரசுகள் சோழ,பல்லவ,பாண்டியர் என அரசர்க்கு அடுத்து இப்படி முதலிகளே இருப்பர்.

ஒரு
மறவன் நற்றான் பெரியன் பல்வராயன் என்பவன் புல்வயல் அரசுக்கு அகம்படிய முதலியாக பணியாற்றிவரும் இருந்துள்ளான். அனுக்கபேரரையன் மதுரை அரசுக்கு வேளானகவும் இருந்துள்ளான். மறமுதலி என்பது மறவரையர்களுக்கு அடுத்து ஸ்தானமே.
காலம் :15 ஆம் நூற்றாண்டு
இடம்:பனையூர் -காணாடு
செய்தி :
பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால்
கல்வெட்டு:
இத்திரு நிலைக்கால் இரண்டுமே கீழ் படியும் உட்பட இவ்வூர் மறவரில் நயினான் எழுந்திர வென்றான் போரில் வென்ற தேவன் தன்மம்
பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில்
அரசு:
ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி :
ஸ்வஸ்திஸ்ரீ பனைந்தலை மறவன் சோழைஉடையான் முப்பேருடையான் தன்மம்........
அரசு:
ஆண்டு:14-ஆம் நூற்றாண்டு
செய்தி :
ஸ்வஸ்திஸ்ரீ பூபாலகுடி மறவன் பெரியநாசி சதிராண்டி தன்மம்........
அரசு:
ஆண்டு:15-ஆம் நூற்றாண்டு
செய்தி :
இந்த முகவனையும் திருநிலைகாலும் கொவனூர் மறவரில் சூரியதேவர் பூவாலைகுடி ஆண்டார் முற்பாடு கொடாதார் தன்மம்........
சார்-அரையர்கள்(மறமுதலிகள்):

மறமுதலிகள் அரையர்களை சார்ந்த சார்பு அரையர்களாக இருந்துள்ளனர்.
சோழகோன்,நரசிங்கதேவர்,பல்லவராயர்,கோனாட்டு பேரரையர்,ஆவுடையார்,பஞ்சவராயர்
I.P.S.21.புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மகாமண்டபத்தில் கீழை படிக்கட்டில் தெற்கில் உள்ல கல்வெட்டு "பனையூர் மறவரில் வளத்து வாழ்வித்தான் ஆன தெள்ளியர் உள்ளிட்டாரும்,நரசிங்கத்தேவர்,பஞ்சவராயர்,பல்லவராயர் உள்ளிட்டாரும் வத்தாயரானை திருமேனியர் அடைக்கலங்காத்தன் உள்ளிட்டாரும் ஆக இந்ததாலுவகை பேரரையரயர் மேற்படியூர் மறவரில் சோழகோன் ஆன கோனாட்டு பேரரையர் உள்ளிடாரும் ஆவுடையான் ஆன வகைப்பேரும் உள்ளிட்டாரு மோம் நம்மில் இசைந்த பிரமானம் பன்னிக் கொண்டபடி செம்மயிர் விரோதம் இரண்டு வகையில் அழிவில்....உண்டான........"
படைப்பற்றில் மறவர் சமூகத்தவரே வாழ்ந்துள்ளனர். இது குலோத்துங்க சோழன் கல்வெடும் "மறப்படையுடன் ஏழக் படை சிறைபட்டு" என வருகின்றது.
திருமையம் தாலுகா அகஸ்தீஸ்வரர் கோவில் கல்வெட்டுகளில்:

விசயாலத்தேவர் பாடிகாவல் வழங்கிய செய்திகளில்
3.பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவரில்
உடையான் எப்போதும் மதியானான பாண்டவ தூதுவர் (பே)ரையன்[பேரரையன்[ நல்லூர் உடையான் வேனாவுடையன் சேரபாண்டிய தேவன் அகத்தி ஆண்டார் வாண்டாய தேவன் ............................. என்ற 4 மறவர்கலுக்கு பாடிகாவல் வழங்கினார்........................
15............. இடையர் வலையர்.....................பள்ளுபறையர்................. இவர்கள் பெரும் சுகந்திரம்.
பாடிகாவல் வழங்கிய செய்தியும் வந்துள்ளது.
ஒரே கல்வெட்டுகளில் பள்ளுபறையர் என்ற வார்த்தை தனியாக பேரரையன் என்னும் வார்த்தை தனியாக வேறு வந்துள்ளது.
பாண்டியர் கல்வெடுகளிலே வந்த
மறவர் மதுரை: பாண்டியரின் கல்வெட்டுகளிலே மறவர் மதுரை என்னும் பெயர் வந்துள்ளது. மறவர் மதுரை என்னும் ஊரில் கானப்பட்ட ஊரவை பற்றிய குறிப்பு. மதுரை மறவரோம் போன்று. மறவர்கலுக்கு காலம் காலமாக சொந்தமாக இருந்த ஊரே மறவர் மதுரை.
சூரைக்குடி அரசு விசயாலத்தேவர்:
" மாங்குடி மறவன் அவையன் சாத்தன் அதலையூர் நாட்டு பெரைய்நு(பேரரையன்" என குறித்துள்ளான் அதலையூர் நாடாள்வான்(நாட்டுபேரரயன்).
மறமானிக்க தட்டன்,கோன்(இடையன்),கொல்லன்,மாராயன்:
பாண்டிய மண்டலத்தை சேர்ந்த வண்ணார்,அம்பட்டையர்,கம்மாளர்,சாணார் போன்றவர்கல் பாண்டிய வன்னான்,பாண்டிய அம்பட்டையர், பாண்டிய கம்மாளர்,பாண்டிய சானார் போன்ற பெயர் இருப்பது போல் சோழிய வன்னார்,சோழி அம்பட்டர்,கொங்கு வன்னான் இருப்பது போல்.

விராச்சிலை ஊரவர்
இடையர் ஒருவருக்கு வழங்கிய மனை ஒன்றின் விபரத்தில் அவனுக்க் "மறமாணிக்க கோன்" என பெயர் குடுத்து ஊரில் வாழ்வைத்த கல்வெட்டு ஒன்று உள்ளது. இடையர்,கொல்லர்,கைக்கோளர், முதலியோர் மறவர் மக்களை அண்டி வாழ்ந்ததை இக்கல்வெட்டு சொல்கிறது.
பறையர் என்ற பெயரும் பரையர்(பேரரையர்) என்ற பெயரும் ஒன்றா?
.
இதில் சிலர் புதுக்கோட்டையில் வரும் பரையர் என்ற கல்வெட்டை பறையரு

டைய கல்வெட்டு என ஏவி வருகின்றனர்.
நாம் இப்போது பறையர் என்ற வேர்சொல் வந்த தமிழ் அகராதி
பறை
https://ta.wiktionary.org/s/2ht8
பறைகளை இசைக்கும் இளைஞர்
பறையின் மறுபக்கம்
பொருள்
பறை(பெ)& (வி) - 1) சொல்; பேசு; அறிவி, 2) தமிழக இசைக்கருவிகளில் ஒன்று.
கோல் கொண்டு ஒலியெழுப்பும் தோற் கருவி

மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் - 1) say ;speak; announce, 2)a musical instrument.
{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
சொல் வளப்பகுதி
(ஆறெறிப் பறை) - (சாக்காட்டுப் பறை) - (அரிப்பறை)
அடுத்து
பறையன்-பறைகளை இசைக்கும் இளைஞர்
பரை என்ற சொல்லின் தமிழ் அகராதி
பரையன் என்ற பெயர் கொண்ட அரையர்
விழுப்பரையர்,சோழியபரையர்,பல்லவபரையர்,
பறையர் என்ற பறையன் என்று வந்த சில தமிழக கல்வெட்டுகள்:
""பறையர் பள்ளர் பெர் ஒன்றுக்கு பணம் அரைக்காலும்"
"குடிகவி பறையன் கண்டபடி"
"பறையரும் பறைமுதலிகளும் செக்கிலியரும்"
"பற அடிமை விலைபிரமானம்"
"புல்லிடும் பறையனுக்கு பெண்டாடியை"
"புறஞ்சேரி பறையர்"
இப்படி பறை என்ற பெயரில் வரும் "ற" மே இவர்களுக்கு தீண்டாமல் போய்விட்டதாம்.
அதனால் பரை என்ற "ர" வைத்து அரையருக்கு வரும் பரையரை கோரப்போகிறார்களாம்.
இவர்கள் பெயரே இவர்களுக்கு தீண்டாமல் போனால் தீண்டாமையை எப்படி ஒழிப்பது.
அப்போது அவர்கள் மூதாதயர்கள் இவர்களுக்கு வேண்டாமா?.
ஓரே கல்வெட்டில் வரும் அரையர் மற்றும் பறையர்:
12 ஆம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் கல்வெட்டில்,
"கம்மாளர் பேறும் கனக்கர் பேறும் பறையர் பேறும்"
என தெளிவாக பறையரை குறிப்பிட்டு இதற்க்கு ஒப்பமிட்ட அரையரை
கிழே தெளிவாக
சேவகனான கானாட்டு பரையன்(பேரரையன்),அரசர்மிகாபரையன்(பேரரையன்),நம்பி ஐநூற்றுவபெரரயன்(பேரரயன்)
என தெளிவாக போட்டிருந்தும் பேரரையரை பரையர் என வந்ததை பார்த்து அது
பறையர் என போலியாக கூறிக்கொண்டு கோறுவது நியாயமா?
உங்கள் மூதாதயர் பறையர் என்ற பெயரையே உங்களால் ஏற்க முடியவில்லை என்றால் எதை ஏற்க போகிறீர்கள்
வாயை வைத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம் பிராமனன்,வன்னியன்,சௌராஸ்டிரர்,செட்டியார்,தேவர்,பிள்ளை
முதலி எல்லாம் பறையன் என்று சொன்னால் அது அகந்தை என்பதை விட அங்கு அறிவுக்கு இடமில்லை
தவராக எதையும் கூறாதீர்கள்.
பெரையர்(பேரரையர்) சில இடங்கலில் பரையர் என வந்துள்ளது.
விழுப்பெரையர் விழுப்பரையர் என வந்த்ள்ளதில் "ரை" என வந்துள்ளது அரையரை குறிக்கும்.
அநூற்றுவ பெரையர்(அநூற்றுவ பேரரையர்) வேறு கல்வெட்டில் அநூற்றுவபரையர்(அநூற்றுவ பேரையர்) என வந்துள்ளது.
அதுவே "றை" என்று"பறை" வந்தால் அது பறை முழக்கும் பறையரை குறிக்கும்
.ஒற்றை கொம்பு "பெ" வராமல் "ப" என நாடாழ்வான் அரையருடன் வரும் "பரையர் " என்னும் வார்த்தை அரையர் பெருமக்கள் என்ற பேரரையருக்கு வரும் "ரை" வேறு.
உதாரனமாக குளித்தலை தாலுகா வேமபனூர் திருமாலிஸ்வர் கோவில் பாண்டியன் குலசேகரரன் 14 ஆம் ஆண்டு கல்வெட்டில்.
வன்னிய மைண்ட பரையர் என வந்துள்ளது ஆனால் அது வன்னிய மைண்ட பேரையர்(A.R.E. 352 1922)
என்பதன் விளக்கமாகும்
shodhganga.inflibnet.ac.in/jspui/bitstream/10603/139551/7/07_chapter%201.pdf
இதைப்போல் பள்ளி விழுப்பரையர் என வருவது பள்ளி விழுப்பேரையர் ஆகும்.(P.I 46 1957)
பள்ளுபறையருக்கு வரும் "றை" வேறு விவசாயிகளான பள்ளு பறையர்கள் சேர்ந்தே குறிக்கப்படுகிறார்கள்
திருவரங்குளம்:
பூவரசர்குழி அரசர்மக்களில்
சூரியதொண்டைமானும் மக்கள் மருமக்களில் சோழிய மாணிக்கபரையனும்(பேரரையன்).......ஈழத்தரையன் வாழ்வானாக மாணிக்க பரையனும்(பேரரயனும்)

விராச்சிலை வில்லவனேஸ்வரர் கொவிலில் உள்ள கல்வெட்டுகளில் ...........
விராச்சிலையில் உள்ள
கம்மாளர்,இடையர்,கொல்லர்,பறையர் என நிலம் வழங்கிய (பேறு ) ஊதியத்தில்.
விருதராஜ பயங்கர மங்கலத்தில் படைப்பற்றான விராச்சிலை ஊரவரஓம்............ ..............கம்மாளர் பேறு கன்னகன் பேறு பறயர் பேறு என ................ வந்துள்ளது. அதே கல்வெட்டில்...........
அனூற்றுவ பெரையன் எனவும் அரசர்மிகா பரையன் எனவும் வந்துள்ளது. இதிலிருந்து.
ஒரே கல்வெட்டில் "பறயர்" பேறு
பறையர் எனவும் .
19 ஊரவர்
அரையர்கள் பற்றிய கல்வெட்டு புத்தகம் "புதுக்கோட்டை மாவட்ட வரலாறு" இதில் தெளிவாக காட்டியுள்ளனர்.
மருதாந்த பரையன்(மருதாந்த பேரரயன்),ஐநூற்றுவபரையன்(ஐநூற்றுவபேரரையன்),கிடாரங்கொண்ட பரையன்(கடாரம் கொண்ட பேரரையன்)
போன்று தெளிவாக விளக்கம் தந்து இவர்கள் ஆளும் அரையர்கள் என சொல்லபடுகின்றனர்.
அதுவே
"பரையன்" என்றால் அது பேரரையனை குறிக்கும் என தெரிகின்றது.
நெடுங்குடி கோவில் பாண்டியர் கல்வெட்டுகளில். சாணார் வருகின்றனர்.
"ஆயர் சாணார் இடயர் போன்ற சமுதாய்த்தவரும்"...........
பள்ளர் பறையர்:
பள்ளர் பறையர் சேர்த்தே கல்வெட்டுகளில் வருகின்றனர்.
புறஞ்சேரி பள்ளர் புறஞ்சேரி பறையர் என தனித்தனியாகவும் வருகின்றனர்.
கண்டதேவி கல்வெட்டு ஒவ்வொரு சதியரையும் தெளிவாக காட்டியுள்ளது.
ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921
மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி 1290 களில் துவங்குகிறது.(சுந்தர பாண்டிய தேவர்) சுல்தான்கள் மதுரையை தாக்கி பாமினி ஆட்சியை நிறுவுகிறார்கள்.பாண்டிய மன்னர்கள் தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ய துவங்கிறார்கள். ஆனாலும் காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை பகுதி காரணவர்களில் சிலர் , ஆங்காங்கே சுல்தான்களின் படையை தாக்கியும்,சூறையாடியும் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கோபம் கொண்ட சுல்தான் மறவர் படைகள் வாழ்ந்த கண்டதேவியை ஆண்ட சூரைக்குடி என்னும் விஜயாலயத்தேவரின் வன்னிய சூரைக்குடியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கத்தி முனையில் இனிமேல் சுல்தான் ஆட்சியை எதிர்த்து தாக்குதல்,சூறையாடல் நடத்த மாட்டோம் என்று கள்ளர், கருமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கல்வெட்டாக பெறப்படுகிறது.அப்படி ஒப்பந்தத்தை மீறினால் கீழ்காணும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம் என்பது தான் கல்வெட்டு. 1) எங்கள் மீசையை மற்றும் தாடியை மழித்து கொள்கிறோம். 2) எங்கள் மனைவியை ஒப்படைக்கிறோம். 3) புலையர்,பள்ளர் உள்ளிட்ட
கீழ்சாதியினர் எங்களை பெண் ஓவியமாக வரைந்து அவர்களின் குழந்தைகளின் காலில் கட்டி சுத்தட்டும். என கல்வெட்டு முடிகிறது.
இதில் கள்ளர் கருமார் புறத்தார் மற்றும் பொன்னமராவதி ஊராவர்களுக்கும் சுல்த்தானுக்குமான உடன்படிக்கையில் காரணவர்கள் உடன்படிக்கை செய்து கொள்கின்றனர்.
இதில் சுல்த்தானுக்கு எதிரிகளான மறவர்களுடன் நாங்கள் தொடர்பு வைக்க மாட்டோம் என கூறுகின்றனர்.
என கல்வெட்டு முடிகின்றது.
“கள்ளர் கருமர் புறத்தார் பட்டர்கள் வித்துவான்கள் பாடகர்கள்
எங்களுக்கு சத்ருக்கலான அறந்தாங்கியார்”
இதிலிருந்து மதுரை சுல்த்தான்காளின் எதிரிகள் அறந்தாங்கி மறவர்கள். இவர்கள் அஞ்சுக்குடி அரையர் என்னும் அஞ்சுகொத்து மறவரின் உட்பிரிவினர் இவர்களே அஞ்சுகோட்டை நாடாள்வானாக இலங்காபுரத தண்ட நாயன்கனிடம் போரிட்டவர்கள்.



நற்றான் பெரியான் என்னும் வீரமழகிய பல்லவராயன் குலோத்துங்க சோழ கடம்பராயன் என்னும் தானவ பெருமாளின் அகம்படிய மறமுதலியாக வேலை பார்த்துள்ளான். அகம்படிய மறமுதலி என்பது மறவர் தலைவர் ஒருவர் அகம்படித்தொழில் செய்தமையாகும்
நன்றி: புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்
தமிழக அரசு தொல்லியல் துறை