Wednesday, March 20, 2013

மலையமான்கள் பார்க்கவ குலத்தார் எனக்கூறும் கல்வெட்டு

மலையமான்கள் பார்க்கவ குலத்தார் எனக்கூறும் கல்வெட்டு ஆதாரம்.

மலையமான்கள் தங்கள் இனம் என்று பல்வேறு இனத்தினரும் உரிமை கோரும் போது மலையமான் மன்னர்களே தங்களை பார்க்கவ குலத்தவர் எனக்கூறும் ஆதாரங்களில் முதன்மையானது...........
திருக்கோவிலூர் திருமால் கோவிலில் உள்ள கல்வெட்டு செய்தி:

"'மிலாடான
ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப்
பிரமதேயம் திருக்கோவலூரான ஸ்ரீ மதுராந்தகச்
சதுர்வேதி மங்கலத்து திரு விடைக் கழி ஆழ்வார்
ஸ்ரீ விமானம் முன்பு இட்டிகை படையாய்ப்
பலகை பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து
மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் கோயிலை இழிச்சி கற்கொண்டு ஸ்ரீ
விமானமும் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங்
கொடுத்து முன்பு கல்வெட்டுப் படியுள்ள நிபந்தங்கள்
எல்லாம் ஸ்ரீ விமானத்தே கல்லுவெட்டு
வித்தார் நரசிங்க வர்ம ரென்று அபிஷேகம் பண்ணி
முடிகவித்து மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்ட
மிலாடுடையார் நரசிங்க வர்மர்.
சந்திராதித்த வல் எரிக்க வைத்தா திரு நந்தா விளக்கு
இரண்டு இவைக்கு விளக்கெரிக்க கொடுத்த
சாவா மூவாயப் பெரும்பசு அறுபத்து நாலு."



திருக்கோவிலூரிலுள்ள திருமால் கோவிலில் திரு விடைக்கழி ஆழ்வார் சன்னதி ஸ்ரீ விமானம் பழுது பட்டதைக்கண்டு...
பார்க்கவ வம்சத்தைச் சேர்ந்த மிலாடுடையார் இரண கேசரி இராமரான நரசிங்க வர்மர் செங்கலால் கட்டப்பட்ட கோயிலை புதிப்பித்து கருங்கற்களால் ஸ்ரீ விமானமும் மண்டபமும் எடுப்பித்து,ஐந்து ஸ்தூபியும் எடுத்து,உட்பிரகாரத்தையும் ஒருமண்டபத்தையும் கட்டி,முத்துக்கள் பதித்த விதானத்தையும் கொடுத்து,சூரிய சந்திரர் உள்ளவரை விளக்கெரிக்க இரண்டு நந்தாவிளக்குகளும் கொடுத்து (விளக்கு நெய்க்காக)அறுபத்து நான்கு பெரிய பசுக்களும் கொடுத்து இத்தகவலை கல்வெட்டில் வெட்டுவிக்கவும் செய்துள்ளார்,
நரசிங்க வர்மர் என்ற பட்டாபிஷேக பெயர் கொண்ட மிலாடு இரண்டாயிரம் பூமியும் ஆண்டவரான பார்க்கவ வம்சத்தை சேர்ந்த மிலாடு உடையார் நரசிங்க வர்மர்.
கல்வெட்டு கூறும் உண்மைகள் என்ற நூலில் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் மேற்கண்ட கல்வெட்டைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்னொரு காலம் அறியப்படாத கல்வெட்டில் பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் நரசிங்க வர்மர் பொன்னாலான ஸ்தூபி ஒன்றைக் கொடுத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.
மலையமான் மன்னர்களில் ஒருவரான வாணகோவரையன் என்பவர் இந்த கோவிலில் நந்தா விளக்கெரிக்க வேண்டி நிலங்களை தானமளித்துள்ளார் என்று கோவில் வெளிச்சுற்று வடக்குபுறச் சுவரில் ராஜராஜ சோழன் கால கல்வெட்டு கூறுகிறது.
அதே பகுதியில் மலையமான் பெரிய உடையான் என்ற மன்னர் கிராம சபையிடமிருந்து வரி விலக்கு பெற்ற நிலத்தினை வாங்கி இறைவனுக்கு தினசரி பூஜை,நைவேத்தியம் செய்விக்க தேவதானமாக வழங்கியுள்ளார் என்றொரு செய்தியும் காணப்படுகிறது.
அதே கோவிலில் வேணு கோபாலசுவாமி சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் உடையார் பாளையத்தை ஆண்ட உடையார்கள் சில கட்டிடங்களை எழுப்பியதாக கல்வெட்டு செய்தி காணப்படுகிறது.

சேலம் கல்வெட்டு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூர் தான் தோன்றியவார் கோயில் முன் புதைந்து கிடந்த தூண் கல்வெட்டு ஒன்று கல்வெட்டு ஆய்வாளர் புலவர் துரைசாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது,அதில்
பார்க்கவ கோத்திரத்து மிலாடுடையார் செம்பியன் மிலாடுடையார் என்ற மன்னர் பற்றிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னார்க்காடு மாவட்டம் எலவானச்சூர் சிவன் கோவில் கல்வெட்டு,மற்றும் திருக்கோவில் வீரட்டானேஸ்வரர் கோவில் கல்வெட்டு.
முதலாம் ராஜேந்திர சோழரது ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மேற்கண்ட இடங்களில் உள்ள கல்வெட்டுகளில்
பார்க்கவ கோத்திரத்து ஆதவ வீமனை உத்தம சோழ மிலாடுடையான்.
என்ற மன்னன் இருந்ததான குறிப்புகள் காணப்படுகிறது.

நன்றி:சேரமான் மலையமான்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.