Wednesday, January 7, 2026

தலைவன் கோட்டை செப்பேடு


தென்காசிப்பாண்டியனான சீவலமாறனால் திருவண்ணாத தேவராகிய இந்திரத்தலைவனுக்கு இந்த செப்பேடு தரப்பட்டது. {திரு.வாணாத தேவர் என்பதே திருவண்ணாததேவராகும். வாணாதிராயர் மறத்திரு. வாணாதிராயர் என்றும் அழைக்கப்பட்டனர், இனி சேற்றூர் ஜமீன்தாருள்ளும் திருவணாததுரை எனக்குறிப்பிடப்பட்டோரும் உள்ளனரென்பதும் குறிப்பிடத்தக்கது } இந்த செப்பேட்டில் உள்ள செய்தியால் இவர் வீரிருப்பு எனும் ஊரிலுள்ள மலைக்காடுகளில் வாழ்ந்து வந்த வெள்ளையான கொம்புகளை உடைய பலம் வாய்ந்த ஒரு மிருகம் சந்திரன் எனும் பெயரோடு இருந்து வந்ததையும், அது அங்கே தன்னை அடக்க வந்த பல்வேறு மன்னர்களையும் கொன்று போட்டது என்றும், {அந்த மிருகம் காட்டுப்பன்றி அல்லது யானையாகவும் இருக்கலாம் } அதைக்கொல்வார் யாரும் இல்லாமல் இறுதியாக திருவண்ணாததேவராகிய இந்திரத்தலைவனால் அது வெட்டிக்கொல்லப்பட்டது என்றும், அவர் "கிழுவைநாடு" எனும் ராமநாதபுரம் சீர்மையிலுள்ள கீழக்கரைப்பகுதியாகிய கிழக்கு கடற்கரை பிரதேசத்திலிருந்து வந்தவர் என்றும், திருவணாததேவராகிய அவர் பாண்டியனால் இந்திரத்தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டார் என்றும், அவருக்கு ..

1.தண்டிகைப்பல்லக்கு - தண்டி பல்லக்கு பொன்னாலான சிவிகையும்,
2. இரட்டை தீவட்டி- இரவில் செல்லும்போது ஒளிதரும் தீப்பந்தங்களும்,
3.இரட்டை குடை- மற்றும் மகரக்குடை - இரட்டைக்குடைகளுடன்,மகர உருவம் பொறிக்கப்பட்ட குடை(- மகரம் ஒரு வகை நீர்வாழ் விலங்கு)
5.கரங்கு டாலு - கருடக்கொடி (குரங்கு கொடி - அனுமன் கொடி மற்றும் கருடன் பறக்கும் கொடி)
6. உபைய சாமரம் - (இராசசின்னமாகக் கொள்ளப்படும் கவரிமானின் மயிர்க்கற்றையினால் செய்யப்பட்ட விசிறிகளும்,)
7.தவளச்சங்கு - (மன்னர் வருகையின் போது ஒருவித விஷேச ஒலியெழுப்பும் சங்கு.)
8.நடனாடக சங்கீதம் - (கர்நாடக சங்கீதத்துடன் கூடிய நாட்டிய நாடகம்)
- என மன்னர்க்குரிய அஷ்ட மங்களங்களாகிய இவ்விருதுகளையும் தந்து,
பாண்டியன் வழங்கிய அந்த வீரிருப்பு மலைக்காட்டுப்பகுதிக்கு நாகபுரம் -இந்திரபுரம், எனப் பெயர்சூட்டி, தேங்காய் தொட்டுக்கொடுத்தபின் அங்கே அவனாலேயே ஒரு கோட்டையும் கட்டித்தரப்பட்டது என்றும் அதுவே தலைவன்கோட்டையாகும் என்றும் தாருகாபுரம் செப்பேடு தெரிவிக்கிறது. மேலும் தலைவன்கோட்டைக்கு அடங்கிய பகுதிகளாக இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களும் அதன் எல்லைகளும் வகுக்கப்பட்டது தெரிகிறது. அவைகள் கீழ்வருமாறு. .
1. வேட்டைக்காரன்பட்டி,
2. திருவேட்டநல்லூர்,
3. பாண்டியக்கோனார் குளம்,
4. ராமலிங்க புரம்,
5. புன்னைக்குளம்,
6. புளியங்குடி,
7. வாசுதேவநல்லூர்,
8. தாருகாபுரம்,
9. மலையடிக்குறிச்சி,
10. பட்டக்குறிச்சி,
11.அரியூர் ,
12. பரியூர் , ( இன்று பெரியூர் என வழக்கு)
13.புதூர் , ( இன்று வடக்குப்புதூர்- தெற்குப்புதூர் என இரண்டு புதூர்களாக உள்ளது )
14.இருமன்குளம் ,
15.வீரிருப்பு ,
16.வேப்பங்குளம் ,
17. நயினார் குளம்,
18. இந்திரபுரம்,
19.நாகபுரம்,
20. வடமலைபுரம், (வடமலாபுரம்)
21.முள்ளிக்குளம்,
- எனவும், இந்த சிற்றரசின் எல்லைகளாக சங்கரநயினார்கோயிலின் மேற்குரதவீதியின் நடுவிலிருந்து, அதன் மேற்கு சாலையிலிருந்து வடக்காகவும், கிழக்கில் கருமலை வரையிலும், வாசுதேவநல்லூர் கூனி ஆற்றின் தெற்குவரையிலும் வகுக்கப்பட்டிருந்தாக செப்பேடு குறிப்பிடுகிறது.
மேலும் சிறப்புரிமைகளாக சங்கரநயினார்கோயிலில் தீர்த்தம், திருநீறு, சந்தனம், திருமாலை, பாக்கு, வெற்றிலை, முதன்மையாக கொடுத்து, அதாவது முதல்மரியாதை கொடுக்கவேண்டும் என்றும்,
தேர் வடம் தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைக்கும் முதலுரிமையையும், சீவலமாறபாண்டியனால் தரப்பட்டது எனவும் செப்பேடு குறிப்பிடுகிறது. {1910 வரையிலும் இந்த நடைமுறை இருந்துள்ளது }
இதற்கு சாட்சிகளாக பொக்கிஷம் சூரசங்கு நாயக்கனும், கடம்பூரை ஆண்ட மறக்குலத்து "தடியத் தலைவனும்" , வடகரை எனும் சொக்கம்பட்டி பாளையக்காரரான மறக்குலத்தினனாகிய "முடிபொறுத்த செம்புலித்தேவனும்" இருந்ததாக பட்டயம் சொல்கிறது.
இந்த பட்டையத்தை எழுதியவனாக சங்கரநயினார்கோயிலில் இருந்த சங்கரலிங்கம்பிள்ளையின் மகனாகிய மீனாக்ஷிநாதன் குறிப்பிடப்படுகிறான்.
செப்பேட்டின் இறுதியில் உம்பளச்சறுவ மானியமாக தரப்பட்ட இந்த பூமிக்கு எந்த அரசராலும், குடியேற்றக்காரர்களாலும், எவ்வித ஊறுகளும், கேடுகளும் ஏற்படக்கூடாதென்றும், அப்படி செய்வோர்களுக்கு கங்கைக்கரையில் காராம்பசுவினைக்கொன்ற தோஷமும், பிராமணர்களை கொன்றதால் வருகிற தொஷமும் பீடிக்குமென்றும் சொல்லி முடிவடைகிறது.

~☆ ☆ ☆~












☆"தலைவனார்" எனும் பெயர் சிறப்புகள்☆
தலைவனார் எனும் பெயரானது ஈசனின்று வந்த பெயராக சான்றுகள் விளக்குகின்றன..
தலைவன் தானிணை சார்வோம்:
:சூலம் தாங்கிய தேவர் தலைவர்.”,'
தலைவதின் தாள்நிழற் கீழ் நீங்கி நில்லார் இடர் களையாய். தாழ்தடை இளமதி: தாங்கிய தலைவன்.', 'சிராப்பள்ளித் தலைவரை.’, கவிக்காழித் தலைவா.', 'அவன்எம் தலைமையனே.”, நாகேச்சர நகருள் தலைவா.", "சாய்க்காட்டெம் தலை வன். , அரக்கன்தோள் சாய்த்த தலைமகன். :, நோய் கள் தள்ளிப்போக அருளும் தலைவன்.', 'விடையூர்வார் தலைவர்.', 'தாயுறு தன்மையாய தலைவன்.' , ' வலஞ் சுழி இடமாக இருந்த நாயகன்.”, “அருள்செய்த தலைவ னர். நீள்சடையாய் தலைவா.', ' விடையானும் எங்கள் தலைவன்.”, 'தாதணி குழலும்தலைவர்., தாருடைக் கொன்றையந் தலைவர்.', 'தக்க்நல் வானவர் தலைவர்.', 'பிறைதாணலங்கல் உகந்த தலைவ னார்.','தண்ணலங்கள் உகந்த தலைவனார்.', போர் விடையன் தலைவன்.' தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.', 'தலைவனர் கோல்தன் மாலை சூடும் தலைவர்.', 'இமையோர்கள். தங்களை யாரிடர்திர நின்ற தலைவர்.”, மலையின் தலைவன்.' பூசு பொடித் தலைவர்.', 'அண்ட நாயகனே.', தாயினும் நல்ல தலைவர்.’’ என்று திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும், "தலையாலே பலிதேரும் தலைவனை.”, 'தானவர் தலை வர் போலும்.”, தாழ்வராம் தலைவன் பாலே. கருவுள் நாயகன். யூத நாயகன்.', 'ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்,வேதநாயகன் வேதியர் நாயகன், பூத நாயகன்.', "தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை." சலங்கொள் சடை முடியுடைய தலைவா. தில்லை நடம்ப்யிலும் தலைவன்.', 'சாம்பர் மெய் பூசும் தலைவா', சங்கை தனைத் தடுத்தாண்ட தலைவன்.'; சமையமவை. ஆறினுக்கும் தலைவன்.”, தலைகலனாகப் பலியேற்ற தலைவன்.'- என்று திருநாவுக்கரசு நாயனாரும் பரம்பொருளாகிய ஈசனை விளிப்பதை அறியலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.