Thursday, November 23, 2023

Pearl rights and fishery of bay of bengal under sethupathi

 





நன்றி திரு முத்துராஜா அவர்கள் 🌹🙏🙏🙏🙏🙏



Vadakarai aathikkam a story of chokkampatti zamin

 பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)


Vadakarai aathikkam a story of chokkampatti zamin

அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

வடகரை ஆதிக்கம் - சொக்கம்பட்டி ஜமீன்




 





நன்றி :திரு முத்துராஜா அவர்கள் 🙏🙏🙏

Thursday, November 2, 2023

அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)

பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)

Vadakarai aathikkam a story of chokkampatti zamin

அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

வடகரை ஆதிக்கம் - சொக்கம்பட்டி ஜமீன்

 #அம்பொன்நாட்டு_தேவர்கள்


மதுரை கோச்சடை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வில்லாயுதமுடைய அய்யனார் , முத்தையா சுவாமி திருக்கோயில்.
இருளாண்டி தேவர் மகன் கட்டமுத்துத்தேவர் சிலை
சக்கரவர்த்தி ஜாதி என்று அம்பனேரி மறவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் .
கோச்சடை முத்தையா கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் கோயில் 10 தேவர் வகையறா குலதெய்வம் கோயில் .
1 :- கருப்பையாத் தேவர் வகையறா 2 :- கட்டமுத்துத் தேவர் வகையறா
3 :- இருளாண்டித் தேவர் வகையறா
4 :- மாயாண்டித் தேவர் வகையறா
5 :- காசித் தேவர் வகையறா
6:- சுப்பையாத் தேவர் வகையறா
7 :- துரைசாமித் தேவர் வகையறா
8 :- குருநாதத் தேவர் வகையறா
9 :- சாமிநாதத் தேவர் வகையறா 10 :- முத்துத் தேவர் வகையறா ..








மனுடவியல் ஆய்வாளர் #LouisDumont (French Anthropologist) தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மறவர்களை ஆராய்ந்து அவர்களது வாழ்வியல் மற்றும் பழமை பற்றி பல ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்
தென்காசி மற்றும் நெல்லை பகுதிகளிள் சில அக்காலத்தில் கிளுவை நாடு என்றே அழைக்கப்பட்டதாக வரலாற்றில் குறிப்பிடபட்டுள்ளது.அக் கிளுவை நாட்டில் உள்ள மறவர்கள் வரலாறு மற்றும் பிரிவுகளை அவர் ஆய்வாக தொகுத்துள்ளார் அப்பிரிவுகள் யாதெனில்
1-அம்பனேரி மறவர்
2-கொண்டையன் கோட்டை மறவர்
3-செம்பநாட்டார் மறவர்
4-அனில்கோட்டை மறவர்
5-கொத்தாலி மறவர்












இதில் குறிப்பாக நாம் அம்பநாடு அம்பனேரி மறவர்கள் பற்றியும் அவர்களது வாழ்வியல் மற்றும் வரலாற்றை பற்றியும் காண்போம் ஏனெனில் இவர்களை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்பில்லை !!.

அம்பொன்நாடு(அம்பநாடு) என்பது பண்டைய காலத்தில் வைகை ஆற்றங்கரை ஒட்டி (கோச்சடை) மதுரையை தலைமையாக கொண்டு இயங்கிய நாடு அங்கு ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த மறக்குடிகளே அம்பனேரி (அம்பொன்நாட்டு) மறவர்கள் இவர்கள் உப்புகோட்டை என்ற கோட்டை முறையை சார்ந்தவர்கள் என்றும்
இவர்களும் #பாண்டியர்கள்_மரபு வழித்தோன்றலாவே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்கள் கொத்து மற்றும் கிளை வழி 8 கொத்தும் 8 முதல் 16கிளைகள் இருந்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது அவை யாதெனில்
(1)சென்னல் கொத்து-(சுத்தமான நீரில் வாழ கூட மீன் )
(2)வட்டி கொத்து
(3)காடை கொத்து
(4)கருணண் கொத்து
(5)மண்ணாதி கொத்து
(6)உசுபு கொத்து
(7)வன்னி கொத்து
(8)பொது கொத்து
மேலும் கி.பி 13 நூற்றாண்டு இறுதியில் பாண்டியர்கள் தென்காசிக்கு நகர்ந்த போது அதை தொடர்ந்து அம்பனேரி மறவர்களும் அங்கு நகர்ந்ததாகவும்,
பண்டைய ஊத்துமலை பகுதிகள் மற்றும் பல பகுதிகள் இவர்கள் ஆதிகத்திலும் ஆட்சியிலும் பல நூற்றாண்டு இருந்துள்ளதாகவும்
பிற்காலத்தில் அவைகளிள் கொண்டையன்கோட்டை மறவர்கள் ஆதிக்கம் செலுத்தியதாக ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சில தகவல்களுடன் அடுத்த பதிவில் காண்போம்
Anthropology On The March
சங்க கால மறவர்
மறவர் கதைப்பாடல்

நன்றி: திரு.தெற்குமாசிவீதி குணா
**அன்புடன்** விக்னேஸ் தேவன்

கல் தேர் ஓட்டிய காரண மறவர்

மறவர் இனத்தில் பல பிரிவுகள் உள்ளன அவற்றில் ஒன்று காரணமறவர். காரணர் என்றால் தலைவன் என அர்த்தம். இவர்களை படைகாரணவர்கள் என்றும் காரண ஆபத்துதவிகள் என்றும் கூறுவர். இவர்கள் பற்றி சில குறிப்புகளில் இராமநாதபுரம் உத்திரகோசமங்கையை அரசியல் காரணமாக காலி செய்து தூத்துகுடி பகுதியில் குடியேறி யுள்ளனர். இவர்களை பற்றிய புத்தகம் அதில் புராண கதைகள் உள்ளது. அதை பதிவேற்றியுள்ளோம். 


 மதுரை கோச்சடையில் வாழ்வது அம்பொனேரி மறவர் காரண மறவர் அல்ல. காரணமறவர் தூத்துகுடி பகுதியுள் வாழ்கின்றனர். கார்குறிச்சி மறவர் என்பவரும் காரண மறவரே என தோன்றுகின்றது.
உத்திரகோசமங்கையில் கல் தேர் ஒட்டிய காரண மறத்தி என்னும் "பொன்னாச்சி அம்மன்" பற்றி கதையும் ஆதாரபூர்வமான சுவடியும் இருக்கும் அது காரண மறவர்களை குறிக்கின்றது. இவர்களை சக்கரவர்த்தி மறவர் எனவும் கூறுவர். மதுரை பூர்வீகமான மறவர்களில் இவர்களும் ஒருவர். இதேப்போல் கொற்க்கை என்னும் தூத்துக்குடி பகுதியிலும் பரதவர் அருகே வாழும் இவர்கள் "பொன்னாச்சி அம்மன்" வழிபாடு உள்ளவர்கள். மதுரை பகுதிகளிலே "பொய்சொல்லா பாண்டியன்" மற்றும் "முத்தையா கருப்பையா" என்னும் இரட்டை தெய்வத்தை வழிபடுகின்றனர். இவர்களில் பலருக்கு கிளைகள் அறியாது சிலருக்கும் மட்டுமே கிளை முறைகள் அறிந்தவர்கள் அது.....

காரன[சக்கரவர்த்தி] மறவர்.

1.தேவன்
2.ராயர்
3.பண்டையோன்
4.பருவச்சான்
5.முருகதினி
6.வளத்தான்














இவர்களை பற்றிய விரிவான வரலாறு விரைவில் பதிவேற்றப்படும். இவர்கள் "படை காரணவர்" களாக மறவர் பாண்டிய படைபற்றில் பனியாற்றிய கல்வெட்டு இரண்டை இங்கு சுட்டுகிறோம்.

க.என் 2/213 ஆண்டு:13-ஆம் நூற்றாண்டு
அரசு:பாண்டியர் அரசன்:கோனேரின்மை கொண்டான்
கோயில்:திருமறைநாதர்
இடம்:திருவாதவூர் மாவட்டம்:மதுரை

செய்தி: இலுப்பை குடி படைப்பற்றில் "படைகாரணவருக்கு" மானியமாக இலுப்பை குடி ஊரை பாண்டியன் வழங்கியுள்ளான்.

கல்வெட்டு:

ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் களவழி நாட்டு இலுப்பை குடி காரணவர்க்கு திருவாதவூர் உடையார் திருமறைநாயனார் கோயில் செய்ய பெருமாள் ஆரணதொழு நின்றான இராசகோபால அமுதுபடி சாத்துபடி நின்றருளிபடி...........

படைகாரணவர் என்பது படைதொழில் செய்யும் படைமறவர்கள் காரணவர் என்றால் தலைவன் என அர்த்தம். படைகாரணவர் படைதொழில் பாண்டியர் வேண்டும் பொழுது படை தொழில் செய்பவர்கள் இவர்களுக்கு மானியமாக வழங்கபட்டுள்ளது.


இதேப்போல்
க.என் 10/2013 ஆண்டு:13-ஆம் நூற்றாண்டு
அரசு:பாண்டியர் அரசன்:கோனேரின்மை கொண்டான்
கோயில்:திருமறைநாதர்
இடம்:திருவாதவூர் மாவட்டம்:மதுரை:
செய்தி: படைப்பற்றில் "படைகாரணவருக்கு" மானியமாக பள்ளிகுறிச்சி என்னும் சமணர்படுகை உள்ள ஊரை பாண்டியன் வழங்கினான்.

கல்வெட்டு:
ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் பள்ளிக்குறிச்சி படைகாரணவர்க்கு தங்களூர் ஆடிமாதம்..............

இவ்வாறு பாண்டிபடைப்பற்றில் பொன்னமராவதி விராச்சிலை மறவரகளை பார்த்தோம். இப்போது காரணமறவர் பற்றி பார்க்க போகின்றோம்.
காரண மறவர்களே பாண்டியனின் ஆபத்துதவிகள்(வேளைக்காரர்):
ஆபத்துதவிகளே பாண்டிய மன்னனின் உயிரையும் குடும்பத்தையும் காக்கும் தற்காப்பு படையினர். இவர்கள்
பாண்டியன் உதிர உறவினர்களே இவ்வேலைகளுக்கு அமர்த்துவர்.

கண்டதேவி சுல்த்தான் கல்வெட்டில்:

தம்பிரான் பெருமாள் மீதாகண்ட வேலக்காரரான காரணவரும்.......

...கள்ளர் கருமர் புறத்தார் எங்கள் சத்துருக்கலான அறந்தாங்கி மறவரும்.....

என வரும் கல்வெட்டில் தென்னவன் ஆபத்துதவிகல் காரண மறவர்கள் என அறியப்படுகின்றனர். இவர்கள்
பாண்டியமன்னனின் மெய்காவலர்கள் ஆவர்.


இரு கல்வெடுகளில் "மதுரைக்கு காரணவரான பராக்கிரம பாண்டிய தேவர்" கொற்கை கொற்றவன் காரண சக்கரவர்த்தி என வந்துள்ளது.