பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)
Vadakarai aathikkam a story of chokkampatti zamin
அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)
திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்
வடகரை ஆதிக்கம் - சொக்கம்பட்டி ஜமீன்
மதுரை கோச்சடை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வில்லாயுதமுடைய அய்யனார் , முத்தையா சுவாமி திருக்கோயில்.
இருளாண்டி தேவர் மகன் கட்டமுத்துத்தேவர் சிலை
சக்கரவர்த்தி ஜாதி என்று அம்பனேரி மறவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் .
கோச்சடை முத்தையா கோயில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில் கோயில் 10 தேவர் வகையறா குலதெய்வம் கோயில் .
மனுடவியல் ஆய்வாளர் #LouisDumont (French Anthropologist) தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மறவர்களை ஆராய்ந்து அவர்களது வாழ்வியல் மற்றும் பழமை பற்றி பல ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்
அம்பொன்நாடு(அம்பநாடு) என்பது பண்டைய காலத்தில் வைகை ஆற்றங்கரை ஒட்டி (கோச்சடை) மதுரையை தலைமையாக கொண்டு இயங்கிய நாடு அங்கு ஆதிக்கம் செலுத்தி வாழ்ந்த மறக்குடிகளே அம்பனேரி (அம்பொன்நாட்டு) மறவர்கள் இவர்கள் உப்புகோட்டை என்ற கோட்டை முறையை சார்ந்தவர்கள் என்றும்
இவர்களும் #பாண்டியர்கள்_மரபு வழித்தோன்றலாவே ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர்கள் கொத்து மற்றும் கிளை வழி 8 கொத்தும் 8 முதல் 16கிளைகள் இருந்துள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது அவை யாதெனில்
(1)சென்னல் கொத்து-(சுத்தமான நீரில் வாழ கூட மீன் )
(2)வட்டி கொத்து
(3)காடை கொத்து
(4)கருணண் கொத்து
(5)மண்ணாதி கொத்து
(6)உசுபு கொத்து
(7)வன்னி கொத்து
(8)பொது கொத்து
மேலும் கி.பி 13 நூற்றாண்டு இறுதியில் பாண்டியர்கள் தென்காசிக்கு நகர்ந்த போது அதை தொடர்ந்து அம்பனேரி மறவர்களும் அங்கு நகர்ந்ததாகவும்,
பண்டைய ஊத்துமலை பகுதிகள் மற்றும் பல பகுதிகள் இவர்கள் ஆதிகத்திலும் ஆட்சியிலும் பல நூற்றாண்டு இருந்துள்ளதாகவும்
பிற்காலத்தில் அவைகளிள் கொண்டையன்கோட்டை மறவர்கள் ஆதிக்கம் செலுத்தியதாக ஆய்வாளர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சில தகவல்களுடன் அடுத்த பதிவில் காண்போம்
Anthropology On The March
சங்க கால மறவர்
மறவர் கதைப்பாடல்
நன்றி:
திரு.தெற்குமாசிவீதி குணா
**அன்புடன்** விக்னேஸ் தேவன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.