Saturday, August 8, 2026

கருப்பனசாமி யார்? எனது ஆய்வுகள்

 


 "கருப்பு வடிவம் பூண்டவராம்

கிழக்கு முகம் பார்ப்பவராம்

முறுக்கு மீசை உள்ளவராம்'

 

என வர்ணிக்கும் கருப்புசாமி ஒரு காவல் தெய்வமாம்.

 


கிராமங்களில் காவலுக்கு முதன்மை தெய்வமாகமும். பல அய்யனார் கோவில்களிலும் ,பெண்தெய்வ கோவில்களிலும் அல்லாது தனியாக இருக்கும் இத்தெய்வத்தை கருப்பன்,கருப்புசாமி,கருப்புராயன் என அழைப்பது வழக்கம். முறுக்கு மீசை,தலைப்பாகை,சாட்டை,அரிவாள் ஏந்தி சந்தனம் பூசி திருமன் பூண்டு கம்பீரமாக காட்சி அளிப்பார்.

 


இவர் ஐயப்பனுக்கும் காவல் தெய்வம்,திருமாலிஞ்சோலை கள்ளழகருக்கும் காவல் தெய்வம் சதுரகிரி சுந்தரமகாலிங்கத்துக்கும் காவல் தெய்வம். இவரின் பிறப்பு பலவாறாக சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த கருப்பு எந்த தெய்வத்தின் வடிவம் என சங்க இலக்கியத்தில்

இந்த தெய்வத்தின் பெயர் என்ன?

 

கண்ணன் என்னும் கிருஷ்னன் என்பதற்கு கருப்பன் அல்லது கரியவன் என பொருள் வரும்ஆதலால் கிருஷ்னன் தான் கருப்பனா என்று பார்த்தால் கிருஷ்னன் வாசலில் காத்து நிற்கும் வழக்கமோ அல்லது நாட்டார் தெய்வமோ இல்லை பின் கருப்பன் யார். 

காவலுக்கு கெட்டிக்காரன் கருப்பன் என்பது நாட்டார் வழக்கு.உலகத்துக்குகே

காவலுக்கு பெயர் போன விலங்கு எது?

 


நாய் என்னும் வீட்டில் வளர்க்கும் விலங்கு தான் உலகத்தில் காவலுக்கு பெயர் போனது.இதை வடமொழியில் பைரவர் என கூறுவர். அதிலும் சிவனின் உதிரத்தில் தோன்றியபைரவன் அவருக்கு வாகணமாக இருந்துள்ளது.

 

கருப்பு நாய் என்பதற்க்கு வட மொழியில் "கால பைரவர்" பொருள்.

இன்றைக்கும் கருப்புசாமியின் சிலை அல்லது சன்னதியை சுற்றி நாய்கள் கூட்டமாக இருப்பது போல் சிலை அமைத்திருப்பார்கள். ஆக காளபைரவரே கருப்பனசாமி என தமிழில் வழங்க படுகிறார்.

 

பைரவர் வழிபாடு சங்க இலக்கியத்தில் "காரி" வழிபாடு என்று முல்லை நிலத்து காடுகளில்கொடிய வன விலங்குகளில் இருந்து மக்களையும் ஆடுகளை காக்கும் தெய்வமாகும்.

 


"காரி" என்னும் முல்லைநில தெய்வம்"

 

காரி என்றால் கருப்பு என்று அர்த்தம் இதை பற்றி ஆய்வுகளில் புதிய கற்காலக் குடியினரின் வழிபடு தெய்வமாக அல்லது வேட்டையின்போதும் போர்களின்போதும் வழிநடத்துகிற தளபதியாகச் சங்க காலக் கூற்றுத் தெய்வத்தை நாம் அடையாளம் காணமுடியும். கூற்று என்ற சொல் பொதுப்பாலில் அமைந்திருப்பினும் இத்தெய்வத்தைக் கொற்றவையின் ஆண் வடிவமாகவே அடையாளம் காணமுடிகிறது. இத்தெய்வம் விரும்பிச் சூடும் மலர் கொன்றை ஆகும். கூற்று என்ற இத்தெய்வம் புலித்தோலை ஆடையாக உடுத்த தெய்வம் என்று கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல் (“கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல் புரள”) கூறுகின்றது. சைவ சமயம் பல்வேறு சமூகங்களின் வழிபாட்டு அம்சங்களையும் பொருத்தமாக உள்ளடக்கிச் சிவனென்ற பெருந்தெய்வமாக வடிவமைத்தபோது கூற்று என்ற இத்தெய்வம் காரி என்ற பெயரிலும், பைரவர் என்ற பெயரிலும் போற்றப்படும் சிவமூர்த்தமாகச் சித்திரிக்கப்பட்டது. கன்னட வீரசைவ நெறியின் தலைமைத் தெய்வமாகிய வீரபத்திரர் பைரவக் கடவுளின் வடிவமே ஆவார். அடிப்படையில் இத்தெய்வம் முல்லை பாலை நில எயினர்களின் தெய்வமாகும்.கூற்று வழிபாடு என்பது பைரவ வடிவம், யமன் என்ற தென்புலக் காவல்காரன் வடிவம் ஆகியவற்றோடுதான் நெருக்கமுடையதாகும். யமன் என்பது இறந்து, மீண்டும் பிறக்கும் தன்மையின் உருவகமே.முல்லை நில வேட்டுவர்களின் தெய்வமாகிய வைரவர்

கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். காரி என்ற பெயர் சாத்தனுக்கும் உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான்,

 


காரி-சாத்தன் வழிபாடு:

 

அய்யனார் என்னும் அய்யனை சிவனின் மகனாக அப்பர் பெருமான்சாத்தனை மகனா வைத்தார்என  தேவாரத்தில் குறிப்பிடுகிறார். ஆதாவது அய்யன் என்பது தந்தையான சிவனை மட்டும் குறிக்காது அவரது மகனான அய்யனாரையும் குறிக்கிறது.அய்யுனாரை"கோழிக்கொடியோன் சாதவாகனன் பாசாண்ட சாத்தன்" என குறிக்கும் தெய்வமாகமும்

கோழிகொடியை உடைய முருகனையும்,அய்யனாரையும் சிவ மைந்தர்களாக வர்ணிக்கும்சங்க இலக்கியங்களில். அய்யனாரை பூதகணங்களை ஆளும் பூதநாதன் என வர்ணிக்கிறது ஆதாவது 21 பந்தி 64 சேனை பத்திரகாளி மூனிஸ்வரர் என அனைவருக்கும் தலைவர் அய்யனார். அவருக்கு முதன்மையான காவலர் இந்த காரி என்னும் கருப்பர்.அதனால் அய்யனார்-கருப்பரை  காரி-சாத்தன் வழிபாடு என சங்க இலக்கியம்முதல் அறியப்படுகின்றது.

 


காளபைரவரும் அய்யனாரும் நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் திவ்விய தெய்வங்களாகும்.சாத்தன் மற்றும் காரி இருவரும் சனி கிரகத்தின் அம்சமாகவும். காளா என்பதற்கு யமன் எனவும் சாத்தன் புதன் அம்சமாகவும் சொல்லபடுகிறது.

 

சனி,ராகு கிரகத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு காளபைரவரை விட சிறந்த பரிகார தெய்வம்இல்லை என கூறுகின்றனர்.

 

ஆக கருப்பனசாமி என்ற காரி தெய்வம் தமிழகத்தில் பல இடங்களில் காவலனாக இருப்பது போல். இதே காளா என்ற காளபைரவர் காசியை காவல் புரிகிறார்.

 

காளபைரவரை கருப்பசாமி என்பதற்கு அவரது காயத்திரியே ஆதாரமாகும்.

'ஒம் காலகாலாய வித்மகே

காலதீத்தாய தீமகி

தன்னோ பைரவ பிரசோதயாத்"

 

தமிழ் அர்த்தம்"

கரிய நிறமுடைய கருப்பரே

காலத்தை தீர்ப்பவன் நீயே

பைரவனே வனங்குகிறேன்.

 

வேட்டை நாய்களுடன் காவல் காக்கும் காளபைரவர கருப்பனசாமியாகும்.

 


கருப்பரின் மனைவி:

 

கருப்பர் என்பதர்க்கு காளா என்பது அர்த்தம் கருப்பரின் பெண் வடிவம் அல்லது  மனைவியாக

காளி எனும் பைரவி. மகாகாளனின் மனைவி மகாகாளி.

 

                                காரி              காரிகை

          

                             கருப்பன்            கருப்பி

 

                               காளன்            காளி




    












காசியை காவல் புரியும் காவலன் கருப்பனசாமி(காளபைரவர்)

 

காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது.

தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று  அழைக்கப்படுகிறார்.பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்தபோது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். இன்றும் காசி மாநகரம்  பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசிமாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை  பாதுகாக்கின்றனர்.

 


காசி அனுமன் காட்டில் உருபைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும்,ஸ்ரீதுர்க்கை கோவிலில் சண்ட பைரவர் மயில் வாகனத்தில்  தெற்கு மூலையிலும், விருத காலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசி தாங்க பைரவரும், லாட் பஜாரில் கபால பைரவர்  யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும், ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும்,  பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும், திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும், பூத பைரவரத்தில் சிங்க வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்ட பைரவரும் அஷ்ட திக்கிலும்  எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். அதேசமயம் காசியில் யாராவது இறந்தால் யமவர்த் தனை கிடையாது. பைரவ வாதணை நிச்சயம் உண்டு. காசி மாநகர  எல்லையை தொடும்போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம். அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி  சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு எமபயம் நீங்கி வாழ வைக்கின்றது.

 

கருப்பனசாமியை மிஞ்சிய காவல் தெய்வமே கிடையாது. இவருக்கி கீழேயே நவகிரகமும்

அடக்கம்.

 

தமிழகத்தில் அனைத்து கருப்பு தெய்வங்களுக்கும் "தாய் கோயில்" அழகர்மலை 18 ஆம் படிகருப்பனசாமியே ஆகும் எந்த கருப்பு கோவில் தெய்வ பூசாரிகளும் வருடத்துக்கு 2 முறையாவது குறைந்த பட்சம் இந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்பது பலர்சொல்லுவதுண்டு.

 


கருப்பர் அய்யனாருக்கும் முருகருக்கும் தானே காவல் தெய்வம் திருமாலுக்கு எப்படிகாவலர் ஆனார் என்றால் [அழகர் என்ற தெய்வம் முருகரா அல்லது திருமாலா .வேலுடன்வரும் கள்ளழகர் மாலவரா இல்லை வேலவரா என்பதை விதியிடமே விட்டு விடுகிறேன்]

 

கருப்பர் ஒரு கருணை தெய்வம் அவரிடம் அடைக்கலமடைந்தால் துன்பத்தை தாங்கும்தைரியம் வரும் கடிய நேரங்களை காக்கும் தெய்வத்தை வணங்குவோம்

  "கருப்பா காப்பாத்து"

 

-நன்றி

செம்பியன் அரசன்