Monday, August 17, 2026

மேலபரச்சேரி மறத்தி பரசு கல் எழுத்துகள் விளக்கம்

ஏற்கனவே ஒரு புலைகூட்டம் மருதநிலம் மள்ளர் உழவுஅரசுஎன பாண்டியாட்டம் ஆடும் '' வரிசை கூட்டம் போல் அதேஇன்னோரு  '' வரிசை கூட்டமும்  ஆய்வுகள் என கிளம்பியுள்ளது.அதுகளுக்கு .கா.பெருமாள் என்ற பிள்ளை ஆவணப்படுத்திய "அடிமை ஆவணங்கள்"என்ற புத்தகத்திலிருந்து அந்த '' கூட்டத்தை மொத்தமாக அடிமை ஆவணமாகமாற்றிய ஆவணங்களி ஒரு பக்கத்தில் வந்த கல் எழுத்தை எடுத்து கொண்டுமுகநூலில் இப்படி பதிந்துள்ளது.

 பி..எண்.4

பறையர் நாட்டின் சுமைதாங்கி

 


தாழைக்குடி தாழைக்கண்டன் சாத்தன் கோவிலுக்கு செல்லும் வழியில் ஆற்றுபடியில் ஒரு கல்வெட்டு சிதைந்துள்ளது. இந்த பாதையில் ஒரு சுமைதாங்கி இருந்தது. இதில் உள்ள கல்வெட்டை பத்மநாபபிள்ளை 1930ல் படி எடுத்திருக்கிறார்.

'1034 ஆண்டு கார்திகை மாதப் 12 மேலபறச்சேரி மறத்தி பரசு மறதொடி மாடன் தீற்பிச்சு குடுத்தான்'.

கி.பி 1859ஆக் ஆண்டு மேலப்பறைச்சேரியினை சேர்ந்த மாடன் கட்டிய சுமைதாங்கிஆர்.பத்மநாபபிள்ளை நூல் "தாழைக்குடி சரிதமும்,சயந்தீசர் அழகம்மாள்கோயிலும்'91944) .151

 


இதில் சிரிப்புதான் வருகிறது. ஆதாவது 1859 இது கல்வெட்டே கிடையாது. ஆற்றுப்படியில்

உள்ள சுமைதாங்கி அல்ல பரசு. ஆதாவது கோவில் படிகட்டுகள் அருகே உள்ள குத்துகல்

ஒன்று இருந்தது இப்போது இல்லை. பரசு என்றால் தென் மாவட்டத்தில் கோவில் அருகே

உள்ள பக்தர்கள் ஓய்வெடுக்கும் குத்துகல்.

 

"பரசு கட்டியவன் பரலோகம் போவான்" என பழமொழி உள்ளது. இதை கட்டியவன்

மறதொடி மாடன் இது மறதொடி மாடன் அல்ல மரத்தடி மாடன்.

சுடலை மாடன் என்னும் நாட்டார் கடவுள்களில்,

 

தளவாய் மாடன்

பலவேசக்காரன்

நல்ல மாடன்

அக்கினி மாடன்

ஆல மரத்தடி மாடன்

வாழை மரத்தடி மாடன்

புல மாடன்

களு மாடன்

தேரடி மாடன்

சங்கிலி மாடன்

பன்றி மாடன்

குதிரை மாடன்

 

மரத்தடி மாடன் என்ற பெயரை கல் எழுத்தை 'மறத்தொடி' மாடன் என 'மரம்' என்ற

வார்தையே 'மறத்' என எழுதியுள்ளனர். ஆக இந்த பரசை எடுத்தவன் மரத்தடி மாடன்.

 

அதேபோல் இந்த இடம் இருந்தது தாழைக்குடி சாஸ்தா கோவில் அருகே உள்ள

பரசு எனில், இந்த ஊர் தாழைக்குடியில் உள்ள மேலபறச்சேரி என்றால் மேலபறச்சேரியில்

அல்லது கீழபறச்சேரி என அர்த்தமில்லை. தாலைக்குடியே சிற்றூர் தான்.

 

இது மேலபறச்சேரி தனி ஊர் என பலருக்கு தெரியாது அது மேலபறச்சேரி அல்ல

தாழைக்குடி 15 கி.மி தொலைவில் உள்ள மேலபரச்சேரி இன்றும் உள்ளது.இதில் மேலபரச்சேரி

என தான் அழைக்கபடுகிறது 'மேலபறைச்சேரி" அல்ல.

 


 

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF

 

விக்கிபீடியா

 

மேற்கு பரசேரி () பரசேரி மேற்கு எனும் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் தாலுகாவில் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூராகும். நுள்ளிவிளை, பரசேரி, கொன்னகுழிவிளை, மூலச்சன்விளை ஆகியவை இதன் அருகாமை கிராமங்களாகும். சுமார் 70 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. சுடலைமாடசாமி கோவில் பரசேரி சந்திப்பில் அமைந்துள்ளது. நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து 10 கி.மீ, வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து 9.3 கி.மீ., நாகர்கோவில் தொடருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திங்கள்சந்தை செல்லும் வழியில் தோட்டியோடை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.பரசேரியில் அமைந்துள்ள குளத்தின் பெயர் பரவன் குளம். இங்கு பரவர்கள் வாழ்ந்ததாக பல ஆதாரங்கள் உள்ளது. இவர்களுடைய இனப்பெயர் அடிப்படையிலேயே 'பரசேரி' என்று ஊரின் பெயர் உருவானது. இத்தகவல் கன்னியாகுமரி ஊர்களின் பெயர்கள் ஆய்வறிக்கை மற்றும் பரவர் வரலாறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பரசேரி கிராமம் நெல்விவசாயம் மிகுந்த ஒரு சிற்றூர். இங்கு வாழ்ந்த பரவர் இன மக்கள் தங்களுக்கான தனி ஊரை, பரசேரி ஊரின் மேற்கு பகுதியில் அமைத்தார்கள். பரசேரிக்கு மேற்கு பகுதியில் அமைந்தமையால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. மேலும், இது மேல பரசேரி, மேட்டு குடியிருப்பு எனவும் அழைக்கப்படுகிறது. 

பரசேரியில் அமைந்துள்ள குளத்தின் பெயர் பரவன் குளம். இங்கு பரவர்கள் வாழ்ந்ததாக பல ஆதாரங்கள் உள்ளன. இவர்களுடைய இனப்பெயர் அடிப்படையிலேயே பரசேரி என்று கிராமத்தின் பெயர் உருவானது. இத்தகவல் கன்னியாகுமரி ஊர்களின் பெயர்கள் ஆய்வறிக்கை மற்றும் பரவர் வரலாறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆயினும், தற்பொழுது இக்கிராமம் கிருஷ்ண வகை சமுதாய மக்கள் அதிகம் வாழும் கிராமம் ஆகும். 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரசேரி&oldid=4524467"

 இலிருந்து மீள்விக்கப்பட்டது

பகுப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்

 

 

ஆக மேலபரச்சேரியில் உள்ள மரத்தடிமாடன் என்ற நபரால் எடுக்கபட்ட குத்துகல்லை

மறத்தி  பரசு என்ற எடுப்பிச்சுள்ளான் அது இறந்த மறத்திக்கு எடுக்கபட்ட

கல் சாஸ்தா கோவில் ஆற்றுபடிக்கட்டுகளில் இருந்து அழிஞ்சுபோச்சாம்.

 

உடனே பறையரோ அல்லது பள்ளரோ அல்லது பள்ளிகளோ எதோ ஒரு கூட்டம்

"பறைச்சேரியில் வாழ்ந்த மறவர் மறத்தி" என தலைப்பு விட்டாங்க.

 

இது போல வடசேரி,தாழைசேரி,பரசேரி,வண்டான்சேரி என பல ஊர் கண்ணீயாகுமரி மாவட்டத்தில் இருக்கிறது. இது 1859ல் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த காலத்தில்

எல்லா சமூதாயத்தவரும் எல்லா இடத்திலும் வாழ்கின்றனர் அதுபோலத்தான்.

 

என் தாத்தா 1930ல் பிறந்தவர் அவர் தாத்தா 1860ல் பிறந்தவர் அவரின் புகைப்படமே எங்களிடம் உள்ளது. இப்படி 1855 களில் புகைப்படம்,இரயில் இவையெல்லாம் அறிமுகமான இந்தியாவில்


"மேலப்பறைச்சேரியில் வாழ்ந்த" ' என்றால் இதே காலக்கட்டத்தில் "பள்ளபட்டி" 'பள்ளசேரி(பச்சேரி)",பள்ளிபாளையம்,சக்கிலியங்குன்று என ஆங்கிலேயர்காலத்தில்

இருந்து இன்று வரை எல்லா சமுதாயமும் வாழ்ந்து வருகின்றனர். 

இந்த் கல் எழுத்து 1859ல் எழுதபட்டதே கல்வெட்டு என சொல்வதே சிரிப்பு தான் வருகிறது 1804ல் பெயிண்ட்ல் எழுதிய எழுத்தே இன்னும் இருக்கிறது. 

இதுவே இந்த "மேலைபறைச்சேரி" என நாயக்கர் காலம்,பாண்டிய,சேர,சோழ காலம்என்றால் கூட வலுவாக இருந்துருக்கும்.

 

இது பறையர் முகநூலில் ஆய்வு என வெளியிட்டுள்ளனர்.

 

எப்படி பள்ளர் தாங்கள் பள்ளரே அல்லர் எண வெள்ளாளர் என மாறிவருகின்றனரோ அதை போல

 

பறையர் இப்போது தங்களை பரையர் என அழைத்து வருகின்றனர்.

 

பறை என்ற வாத்தியத்தை

 

தமிழில்           பறை  -   பறையன்

மலையாளத்தில்  பறமேளா  -  பறமேளக்காரன்

கன்னடம்        பறி()துடி   -பறிசனா அல்லது துடிவாடி

தெலுங்கு        பற டொப்பு () தொமறு   - பற டொப்பவாரு

சிங்களம்         பெறா      - பெறவா

 

இப்படி தமிழ்,மலையாளம்,துளு,கன்னடம்,தெலுங்கு,சிங்களம் என அனைத்து மொழியிலும் பறை என்றல் அது ட்ரம் அல்லது கொட்டு என பொருள் அதை வாசிப்பவன் பறையன் என்பதற்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை

 

பள்ளருக்கும் சாணாருக்கும் ஆதாரங்கள் கம்மி என கருதி ஆண்ட சாதியர் என ஆய்வு செய்கிறார்கள் என்றால் பறையரை பற்றி டஜன் டஜனா பல்லவர் காலத்திலிருந்து ஆதாரமிருக்கு பறையர் பரையர் என ஆய்வு

நகைப்பில்லையா?

 முதலில் பறையர்கள் பிராமனருடன் தங்கள் ஒரினம் என கதைவிட்டனர்.

https://sivamaalaa.blogspot.in/2015/03/blog-post_73.html

http://parlimenfb.blogspot.in/2011/10/paraiyar-and-brahmin-connection.html

Paraiyar and Brahmin connection Tun Maharezza II Last edited about 8 months ago · Edit Doc · Delete All the Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians. This Haplogroup G2a3b1 is also found in 10% of Iyer and 13% o...f Iyengar Brahmins.[13][14] The Aryan Brahmins have Haplogroup R1a & Haplogroup R2.[13][14] In a note on the Paraiyans of the Trichinopoly district, Mr. F. R. Hemingway writes as follows.[15 All the Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians.

a note on the Paraiyans of the Trichinopoly district, Mr. F. R. Hemingway writes as follows.[16] They have a very exalted account of their lineage, saying that they are descended from the Brahman priest SalaSambavan, who was employed in a Siva temple to worship the god with offerings of beef, but who incurred the anger of the god by one day concealing a portion of the meat, to give it to his pregnant wife, and was therefore turned into a Paraiyan.The god appointed his brother to do duty instead of him, and the Paraiyans say that Brahman priests are their cousins.

 

இதன் பின் ஆங்கிலேயருடன் பறையர்களும் ரத்த சம்பந்தம் இருப்பதாக

தங்களை ஆங்கில விசுவாசிகளாக காட்டினர்.

 


ஆங்கிலேயரும் பறையரை "விசுவாசமிக்க பறையர்"(Licenteus Pariah) என கூறியுள்ளனர்

 

ஜெயமோகன் எழுதிய வெள்ளையானையில்,

 

ஆங்கிலேயர் பறையர் உறவில். 

"உங்களின் உடைகளை தந்தீர்கள்"

"உங்கள் உணவுகளை தந்தீர்கள்'

"உங்கள் உறைவிடங்களில் எங்களுக்கு இடம் தந்தீர்கள்"

"உங்களது நோய்களையும் எங்களுக்கு தந்தனர்"

 

என ஆங்கிலேயர்களுக்கு வரும் நோய்களும் பறையர்களுக்கு உள்ளதாக

கூறுகின்றனர்.இதற்கு மரபனு ஆய்வுகளில்,

 

Paraiyars have Y-chromosome haplogroup, Haplogroup G, specifically Haplogroup G2a3b1 (Y-DNA). This shows the Paraiyar males are Caucasians.

 

என பறையர்களை கொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடு என வெள்ளையர் வாழ்விடங்களில் பூராம் குடியேற்ற காரனம் இருவருக்கும் ஏற்பட்ட இரத்த கலப்பாகும். 

இப்படி  பிராமனர்,வெள்ளையர் அடுத்து வேறவேற சாதியை குறித்து இப்படி கதைவிடுகின்றனர்

 

தாழைக்குடி மறத்தி பரசு கல்வெட்டே கிடையாது கல்வெட்டு

என்றால் எப்படி இருக்கும் கல்வெட்டில் காட்டும் அடிமை எப்படி இருக்கும்

என நாமும் காண்பிப்போமா 


அடிமைகள் பற்றிய கல்வெட்டுகள் ஆவணங்கள்

================================================

 

சமுதாயத்தில் ஒடுக்கப்ட்ட அடித்தள மக்கள் வாழ்வியல் தொடர்பான பல ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவை கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகளிலும் சில காகிதங்களிலும் எழுதப்பட்டுள்ளன.

 

வறுமை காரணமாகப் பெற்ற குழந்தைகளை விற்றுள்ளனர். திருமணத்திற்குக் கடன் வாங்கி மணமக்கள் பெற்றோருடன் அடிமையாகி உள்ளனர். பலர் தங்களுக்குச் சொந்தமான அடிமைகளைப் பிறருக்கு விற்றுள்ளனர். அடிமை விற்பனையில் பெண்களும் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் பொது இடத்துக்கு வந்து "எங்களை விலை கொள்வார் உண்டோஎன்று விலைகூறி விற்றுக் கொண்டுள்ளனர். கோவில் மடங்கட்குச் சிலர் அடிமைகளைத் தானம் செய்துள்ளனர். விலைக்கு விற்றுள்ளனர். சிலர் வாழ வழியின்றி தாங்களாகவே கோவிலில் அடிமையாகியுள்ளனர். செல்வந்தர்கள் தம் வாரிசுகட்குச் சொத்துகளைக் கொடுக்கும்போது சில அடிமைகளையும் கொடுத்துள்ளனர். இதைவிடக் கொடுமை சிலர் "தீண்டா அடிமைகள்" என்று கூறப்படுவதுதான். ஆவணங்களில் பலர் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளனர். எழுதியவர் பெயரும் உள்ளது.

 

வகைக்கு ஓரிரு ஆவணங்கள் காட்டப்பட்டுள்ளது. ஆவணம் மிக நீண்ட வடிவில் இருப்பதால் அவற்றின் மையக் கருத்துள்ள பகுதி மட்டும் தரப்பட்டுள்ளது. டாக்டர் .சிவசுப்ரமணியம், .கா.பெருமாள் போன்றவர்கள் சில ஆவணங்களைத் தொகுத்துள்ளனர். இக்கட்டுரையாளரின் 51 ஆவணத்தொகுப்புடன்தமிழ் நாட்டில் அடிமை முறையும் ஆள் விற்பனையும்" என்னும் நூல் விரைவில் வர உள்ளது.

 

தாது வருடப் பஞ்சக் கும்மிகளில் "கணவனைப் பறிக்கொடுத்துக் கை குழந்தை விற்ற பஞ்சம்", "பெண்டு பிள்ளைகளை விற்பாரும்" என்ற தொடர்கள் உள்ளன. அவற்றை ஆவணம் மெய்பிக்கிறது.

 

தந்தை மகனுக்குக் கொடுத்த காணியாட்சி அடிமைகள்

 

ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடையபன்மரான திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ பராக்கிரமபாண்டிய தேவற்கு ஆண்டு 5 ஆவதின் எதிர் 7 ஆவது கும்ப நாயற்று அபரபக்ஷத்து துவாதெசியும் நாயிற்றுக் கிழமையும் பெற்ற உத்திராடத்து நாள் கானனாடான விருதராச பயங்கர வளநாட்டு மேலூர் சீராளதேவன் முனையதரையன் மக்கணாயநேன் என்மகன் சீராள தேவர்க்கு நான் குடுத்த காணியாட்சி மனையும் அடிமையும்இவைபடி இம்மரியாதி அனுபவித்து நாம் எழுதிக்குடுத்த அடிமையரான தேவியும், இவள் மகள் சீராளும், இவள் தம்பி மக்கணாயனும் இவளுடைய சிறிய தாய் ஆவுடையாளும், இவள் தம்பி சீராள தேவனும், இவன் மருமகள் சீராளும், பெரியனாச்சி மகன் திருமெய்யமவையாளனும் சிவத்த மக்கணாயனும் ஆகப் பேர் எட்டும் பள்ளடியாரில் வளத்தி மகள் மன்றியும், இவள் மகள் பொன்னியும், கொள்

ளி மகள் தொழுதியும் உடப்பி மகன் பொன்னனும் விளத்தி மகன் வில்லியும் ஆக இவ்வகைப்படி உள்ள அடிமையும் காணியாட்சியும் மனையும் மற்றும் எப்பேர்ப்பட்ட சமுத்தப்ராத்விகளும் தானவிக்கிரங்களுக்குரித்தாவதாக சந்திராதித்தவற் செல்ல அனுபவிக்கு

ம் படி கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுத்தேன் சீராள தேவர்க்கு முனையதனரயன் மக்கணயாகரேன்.

 



 

விஜயநகர கம்பன்ன உடையார் காலத்தில் விடப்பட்ட

புலையடியார் ஆன பள்ளர் அடிமைகள்.

 

கடன் வாங்கிக் கல்யாணம் மனைவி, தாயாருடன் அடிமை

 

விசைய வருஷம் சித்திரை மாதம் 30 (1833) நீலப்பாடியிலிருக்கும் அழகப்ப பிள்ளைக்கு நென்மேனியிலிருந்து நீலப்பாடியில் வந்திருக்கும்

னாகன் சாம்பான் ஒத்திச்சீட்டு குடுத்தப்படி யென்னமெண்டால் யிந்த னாள் கையில் யென் கல்லியாணத்துக்கு னான் நீலப்பாடி ஆற்றி மகன் மொட்டையன் பாருவையாக னான் ரொக்கம் பத்திக் கொண்டது ரெண்டு பண வெள்ளி ரூபாய் 12 பணம் யிந்த பணிரெண்டு பொன்னும்

ஒரு பணமும் னான் ரொக்கம் பத்திக் கொண்டபடியினாலே மேல் எழுதிய பணத்துக்கு னானும் னான் கலியாணம் பண்ணுகிற பெண்டாட்டி பொட்டாளும் யென் தாயார் பரிமணத்தியும் யாங்கள் மூணு பேரும் தங்களிடத்தில் நின்னு பண்ணைவேலை செய்து தங்கள் பண்ணை ஆள் ஒப்பந்தம் கட்டு களவடி கூலி ஆள் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்து வருவேனாகவும்

 

கடன் வாங்கிக் கல்யாணம், கடனுக்காக அடிமை

 

1.பிங்கல வருடம் ஆவனி மாதம் 6 தேதி மாகரலில் யிருக்கும் சேது முதலியார் குமாரன் முத்தண்ணா முதலியாருக்கு மேற்படி யூரில் யிருக்கும்

2.கிஷ்ணாச்சி சீனுவாச முதலியார் குமாரன் யேகாம்பர முதலியார் யெழுதிக் கொடுத்த ஆள் வொத்திச் சீட்டு யென்ன வென்

3. றால் யென் அடுமையாகிய பறபொன்னந் மகன் கிஷ்ணன் பரியதுக்காக முன்னாள் வருடம் புரட்டாசி மாதம் முதல் தேதியில்

4.வாங்கின றூ&4 நாளது தேதியில் மேற்படியான் கல்யாணத்துக்காக வாங்கின றூ&10 ஆக றூ&14யிந்த றூபாயி பதி

5.னாலுக்கும் வட்டி யீடாக மேற்படி கிஷ்ணன் யென்பவனை உங்கள் பயிர் வேலைக்காக வைச்சுக் கொண்டு

6.படியும் சிறபணமும் கொடுத்து வேலை வாங்கி கொள்ளுகுறது

 

மகனை முப்பது பணத்திற்கு விற்ற தீண்டா அடிமை

 

பிரபவ வருசத்துக்கு செல்லாநின்ற ஸ்ரீமுக வருசம் ஆவணி மாதம் 23ந் தேதி அதளையூரிலிருக்கும் காவல்காற மணியன் சேருவைக்காறன் மகன் குமாரயிருளப்ப சேறுவைக்காரன் மேற்படி குமாரன் முத்திருளாண்டி சேருவைகாறன் மேற்படி குமாரன் சோணை சேருவைகாரன் மேற்படி குமாரன் வீரணன் சேருவைகாரன் மகன் சுப்பிரமணியன் சேருவைகாறனுக்கு ஷயூரிலிருக்கும் தீண்டாதாரில் பறைவயிரன் மகன் வியறன் மேற்படி மகன் கட்டையனேன் அடிமை விலைக் கிரைய சாதனமெழுதிக் குடுத்தபடி அடிமை சிறைக் கிரைய சாதனமாவது சாம்பான் வலைவீசி அடைச்சான் வியான்முன்பாக கரைஏற்றி நிற்செயித்து அன்னாடகம் விளங்கும் கலியுக ராமன் புதுமின்னல் பணம் 30 ஊசி கிரந்தம் பணம் ஒண்ணு ஆக பணம் முப்பத்தொரு பணமும் காட்டி ஏற்றி கயிலறப் பற்றிக் கொண்ட படியினாலே விலை தீர்த்து விலை பிரமாணம் செய்து கொடுத்தேன். கட்டையன் மகன் பெரியகறுப்பனை

 


 

தீண்டா அடிமையுடன் கோயிலுக்கு ஊர் கொடை

 


சகாப்தம் 1355ன் மேல் ஸ்ரீகோ மாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு யாண்டு வது எதிர் 12வதுமீனநாயற்று பூர்வபட்சத்து சப்தமியும் புதன் கிழமையும் பெற்ற  அத்தத்து நாள் முத்தூற்கூற்றத்து பிரமதேயம் மருங்கூரான பண்டித சோழச்              சதுர்வேத   மங்கலத்து கோதரத்து ஆஸ்வலாயன சூத்திரத்து நாராயண பட்டன்           வீரபாண்டிய தேவனுக்கும் தனக்கும் (நன்றாக) நம்முடைய பேர்க்கூலி செம்பு

நாட்டில் நம்முடைய உழவுப் பற்றான பற்குளம் உட்பட்டபற்றும் இவ்வூரில் புறஞ்சேரியில் தீண்டாஅடிமை உள்ளதும் உதகபூர்வ தானமாக நாம் தருகையில் மனைத்திடல் ஊருணி உடைப்புகுளம் குளப்பரப்பு நன்செய்மேனோக்கிய மரம் கீணோக்கிய கிணறு தீண்டா அடிமை மற்றும் எப்பேர்பட்ட சமஸ்த பிதாப்பதிகளும் குடுத்தோம்.

 

தீண்டா அடிமை ஆபரணம் எதுவும் அணியக்கூடாது, செருப்பு அணியக்கூடாது, வீட்டில் உலோகப் பாத்திரம் இருக்கக் கூடாது, வீட்டுக்குக் காறை பூச்சுகூடாது, மண் பாத்திரம் மட்டும் இருக்க வேண்டும். நன்மை தீமைக்கு வாத்தியம் வாசிக்க்கூடாது, பெண்கள் மார்பை மறைக்க தாவணி ரவிக்கை போடக்கூடாது, ஆண்கள் இடுப்பிற்கு மேலும் முழங்காலுக்குக் கீழும் ஆடை அணியக்கூடாது. குடை பிடிக்கக் கூடாது.

 



பறையர் குடும்ப விலை 80 பொன்

 

நள வருடம் தை மாதம் 24 தேதி குருவாரமும் பூறுவது பஷ்சமும் ரேபதி நஷ்செத்திரமும் சஷ்ட்டியும் கூடின சுபதினத்தில் சீகாழிச் சீமை குண்ணமருதூர் மாகாணம் கஞ்சா நகரம்

வடபாதியிலிருக்கும் அப்பாச்சி முதலியார் அவர்களுக்கு தீவிச் சீமை அட்டாங்கிசத்திலிருக்கும் சுப்பா படையாட்சி பறையன் பேரில் அடுமை சாதனம் பண்ணிக் குடுத்தபடி யென்னுதான் பறையன் மகன் ராமன் அவன் பெண்டாட்டி முக்கட்டை அவன் பிள்ளை இவாளை அடங்கலும் கொள்வார் உளரோ கொள்வார் உளரோ என்று நான் முற்கூற

கொள்வோம் கொள்வோம் யென்று பிற்கூறி மத்திஷத்தாள் கூடி நிஷ்சயம் பண்ணினது கோபால சக்கிரம் சுழி பொன் 80 இந்த யென்பது பொன்னும் அங்கடிப் பார்வையாக

ஒரு கிழிப்பிட வடபாதி உதையப் பையன் ரெங்கய்யனவர்கள் முகாந்திரம் னான் பத்திக்கொண்ட படியினாலே புத்திர பவுத்திர பாரம்பர்யம் சந்திராதித்தாள் உள்ளவரை

கல்லும் காவேரியும் பில்லும் பூமியும் உள்ள வரைக்கும் ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு யெப்பேற்ப்பட்ட தொழிலும் செய்விச்சுக் கொண்டு சுகத்திலே ஆண்டு அனுபவிச்சுக் கொ(ள்)




வீராகவும்

 

இறுதி சடங்கிற்காக 5 1/2 ரூபாய் வாங்கி அடிமை

5 வயது பெண்குழந்தை விலை 2 புதுச்சேரி ரூபாய்

 

1781 ஆம் ஆண்டு நவம்பர் 25க்கு செல்லும் பிலபவ வருஷம் கார்த்திகை 12 புதுவை மாநகரம் ஊர் சவுத்ரி நயினார் அவர்கள் முன்பாக மரியம்மாளுக்கு கூனிமேடு பள்ளி பொன்னன் பெண்ஜாதி தயிலம்மை கிரைய சாதனமுறி குடுத்தபடி என் பெண் பேர் கவுதித்தாள் வயது 5 ஜாதி பள்ளச்சி சேர்ந்தவள் இவளை கொள்வாருளரோ கொள்வாருளரோ வென்று கூறுகையில் மரியம்மாள் நானே கொள்வேன் என்று பின் கூறுகையில் யிம்பி நான் இசைந்து தம்மால் பொருந்தி எதிர் மொழி மொழிந்ததினாலும் மத்திஸ்தர் முன்பாக நிச்ச­யித்த றாசி புதுசேரி ரூ. 2 இந்த ரூபாய் இரண்டுக்கு விலையறி­வித்துப் பொருள்பத்திக் கொண்டேன்.

 




கிரயம் செய்யப்பட்ட பள்ளர் குடும்பம்

 

பள்ளுப் புரியல் சீட்டு (30.4.1852)

 

ஸ்ரீராமஜயம்

 

பரிதாபி வருஷம் சித்திரை மாதம் 20 தேதி கொண்டயம் பேட்டையில் இறுக்கும் பாபுராயர் பேறன் இராமசந்திர ராயறுக்கு ஆங்கரையில் இறுக்கும் கோதண்டறாம புத்ரன் யெக்கறாமயன் பள்ளு சுத்த கிரய சாசனம் மண்ணிக் குடுத்ததர்க்கு பள்ளு புரியல் சீட்டு மாந்துறை (வுள்ளன்) பனையடியான் பள்ளு, சன்னாசி பள்ளு, மறுதாயி பள்ளு, பஞ்சன்பள்ளு, அநந்தன் பள்ளு, ஆக பள்ளு 5 யிந்த யிந்தபள்ளு அஞ்சும் அதை சேர்ந்த ஆண் அடுமை பெண் அடுமை குடும்ப சகிதம் (நமக்கு) சுத்த கிரய சாசனம் பண்ணிக்குடுத்தபடியினாலே மேற்படி பள்ளுக்கு புரியல் சீட்டு எழுதிக் குடுத்தோம் யெக்கறாமயன் சம்மதி சாட்சியள் அய்யாவய்யன் அறிவேன் ஆங்கரை முத்துறாமய்யன் குமாறன் றாமயன் அறிவேன்

 














 பறை அடிமைகள் விலை 14 பொன்

 

  விளம்பி வருடம் ஆனி மாதம் 27 தேதி சனிக்கிழமை கொள்ளடத்துக்குத் தெற்குக் காவேரிக்கு வடக்கு உபைய காவேரி மத்தியில் திருப்பனைந்தாள்ச் சீமை சோழம் பேட்டை மாகாணம் ரெட்டி கடலங்ககுடியிலிருக்கும் காவெட்டி வெங்குள சீமை குண்ணமருதூர் மாகாணம் மங்கைநல்லூரிலிருக்கும் சுப்ரமணிய முதலியார் அவர்களுக்கு அடுமை சாதன முறி கொடுத்தபடி யென்னுதான பறையன். சாம்பான் வெளிச்சான் முத்தான் யிந்த மூணு ஆணும் வெளிச்சான் பெண்சாதி பார்வதியும் யிந்த னாலு செனத்தையும் மங்கை நல்லூரில் ஆவணக் களரி யேத்தி கொள்வாருளரோ கொள்வாருளரோ (வென்று)...பிற்கூறி கொள்வோ மென்று யெம்மிலுமிசைந்து யெதிர் மொழி மொழிந்து னாலு மத்திஸ்தாள் முன்பாக விலை நிற்ணயம் பண்ணினது கோபால சக்கரம் குளிகை

 




கன்னியாகுமரி மாவட்டத்தில் 1459 ஆண்டு, பஞ்சமோ பஞ்சம். பெருங்குடலைச் சிறுங்குடல் மென்னு விழுங்கிய பஞ்சம் நிலமுள்ள வசதியுள்ள விவசாயிகளையே திணறடித்த பஞ்சம். காய்த்து வடுவேறிய உடலையும் உடல் உழைப்பையும் தவிர வேறு ஏதுமற்ற, அப்படி ஒடுக்கப் பட்டிருந்த பறையர்களை அந்தப் பஞ்சம் என்னபாடு படுத்தியிருக்கும்.

 


முன்னி நாட்டு சேரவ


ன்மாதேவிப்
புறஞ்சேரியில் கிடந்த பறையர்களில் ஒருவரான அவையன் சோம கேரளச் சாம்பனின் மகன் அவையன் என்பவர் தன்னையும் தன் தங்கை நல்லியையும் ங்கைமகன் தடியனையும், நற்பள்ளியைச் சேர்ந்த இராமன் ஐயப்பன் என்ற நயினாருக்கு அடிமைக் கிரையம் செய்து கொடுத்திருக்கிறார் அந்தக் கிரைய ஆவணத்தில்....

 

"பஞ்சத்தில் கஞ்சிக்கு அலைந்தலைந்து காலும் கண் கெண்டையும் வீங்கிவிட்டது! எங்கள் நாயன் எங்களை கைவிட்டதால் நயினாருக்கு எங்கனை நாங்களே அடிமை விலைப் பிரமாணம் செய்து குடுத்தோம்!......"

 




பண்ணையாரிடம் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கமுடியாத நிலையில், தன் மகளை பண்ணையாரிடம் ஒத்தி வைத்திருக்கிறார் ஒருவர். அந்த மகளுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டுவிட்டது! வேலை செய்ய முடியவில்லை! அதனால் ஒத்தி வைத்தவரின் ஆடுமாடுகளை ஜப்தி செய்து கொண்டார் பண்ணையார்! இது சட்டப்படி நடந்துள்ளது.

 

தாழக்குடி பூதப்பாண்டி ஆகிய ஊர்களில் கிடைத்த ஆவணங்களின் வாயிலாக மந்தைகளில் அடிமைகள் எப்படி வாங்கப்பட்டார்கள், எப்படி விற்கப்பட்டார்கள் என்பதற்கான, தெளிவான விபரம் இருக்கிறது!

 

"ஆரைவாய்மொழி  மன்றத்தில் (பொது இடத்தில்) நடுவர்கள் முன்னிலையில், பாலபொய்கை புறஞ்சேரியில் கிடந்த தீண்டாதாரில் பறையர் சாதி 1 இசக்கி புலமாடத்தி, 2 மேற்படியார் மகள் உண்ணி 3 பறை அரவுக்காணி 4 இளையமகன் சின்னக்காணி ஆகிய நால்வரையும் நிறுத்தினோம்!

 

"இவர்களை விலை கொடுத்து வாங்குவார் இருக்கிறீர்களா? "என்று நாங்கள் கேட்டோம். "ஆமாம்! நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்! "என்று இவர் சொன்னார். விலை சொன்னோம். நாங்கள் சொல்ல இவர் கேட்க கடைசியில் நால்வரையும், நெல்மேனி கலியுக ராமன் பணம் நூற்றம்பதுக்கு நடுவர் மூலமாக விலை திகைந்து பொருளை விற்று பணம் பெற்றோம்! என்று இந்தப் பிரமாணம் செய்து குடுத்தோம்! "இது தான் அந்த ஆவணச் சுருக்கம்.

 

தரங்கம்பாடி ஒலைகளில் பள்ளர் பறையர் அடிமைகள்

 




கிபி.1114ல் திருநெல்வேலி மாவட்டம் இராச இராசேஸ்வரமுடையார் கோவிலுக்கு விடபட்ட பறை உவச்சன் அடிமை

 

மதுரை மாவட்டம் அதலை கிராமம் சேர்வைக்காரன் தீண்டா

அடிமை பள்ளர் பறையர் விலைக்கு வாங்கியது

 

 



பள்ளர்களும் பறையர்களும் நிலத்தோடு அடிமையாக்கப்பட்டார்கள் என்பதற்கான செப்பேடுகள்

 

1)ஆனாந்தூர்ச் செப்பேடு. காலம்: 16-5-1667,

2)சென்னீலக்குடி செப்பேடு: காலம் 18-3-1668,

3)கொத்தங்குளம் செப்பேடு: காலம் 19-1-1671,

4)நல்லுக்குறிச்சி செப்பேடு: காலம் 13-7-1691,

5)மேலச்சீத்தை செப்பேடு: காலம் 15-1-1694,

6)கோட்டக்குடிச் செப்பேடு: காலம் 16-11-1711,

7)அத்தியூத்துச் செப்பேடு: காலம் 11-6-1713,

8)பால்குளம் செப்பேடு: காலம் 15-4-1722,

9)பனையங்கால் செப்பேடு: காலம் 9-6-1729,

10)ஈசா பள்ளிவாசல் செப்பேடு: காலம் 30-12-1734

 

இன்னும் நிறைய செப்பேடுகளிலே கிழக்கிலிருந்து மேற்காக, தெற்கிலிருந்து வடக்காக இந்த இடைப்பட்ட நிலப்பரப்பில் உள்ள நஞ்சை, புஞ்சை, வயல்-வரப்பு, குளம் குட்டை, ஆறு ஏரி கிணறு இதோடு அந்நிலத்தில் வாழும் பள்ளர்களும் பறையர்களும் சேர்த்தே பட்டயமாக எழுதும் அடிமை முறையும், எந்த அளவிற்கு சமூக உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வந்தார்கள் என்பதை பல செப்பேடுகள் மூலமாக அறிய முடிகிறது.

 

மேலும் நிலத்தோடு அடிமையாக வாழ்ந்த பள்ளர்களும் பறையர்களும்  தப்ப முயன்றால் கொடுந் தண்டனைகளும் உண்டு.

 

'தென்னிந்திய மானிட இன இயல்' என்ற நூலில் எட்கர் தர்ஸ்டன் அன்றைய அடிமைகள் பற்றி எழுதுகிறார்," 1871 இல் சென்னை மாநில மக்கள் கணக்கெடுப்பு  கமிசனர் அடிமைத்தனம் பற்றிய தனது குறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கும் முன் பறையர்கள் அனைவரும் மேல்சாதியினரின் அடிமைகளாயிருந்தனர். அவர்கள் மட்டுமின்றி உழவுத் தொழிலில் வயலில் இறங்கி உழைக்கும் கீழ்ச்சாதியினர் அனைவரும் அடிமைகளாகவே இருந்தனர். பள்ளர்கள் பண்ணை வேலை மட்டுமே பார்ப்பவர்கள். இவர்கள் குடியிருப்புக்காக எங்கும் தனியிடம் ஒதுக்கப்பட்டுப் பள்ளிச்சேரி என வழங்கப்படுகிறது. பள்ளர் சாதிப் பெண்கள் இடுப்புக்கு மேல் உடலை மறைப்பதில்லை என்றிருந்த அடிமைக் காலத்தின் வழக்கம் இன்று வழக்கொழிந்தாகி விட்டது."  என்ற பல செய்திகளை எட்கர் தர்ஸ்டன் பதிவு செய்கிறார். தஞ்சை மாவட்டத்தில் பள்ளர் இனப் பெண்கள் மேலாடை அணியும் உரிமை இல்லை என்பதையும் தர்ஸ்டன் பதிவு செய்கிறார்.

 

தமிழக ஆய்வரண்  பெங்களூர் குணா  தனது இந்திய தேசியமும் திராவிட தேசியமும் என்ற நூலில் எழுதுகிறார்,

 

" 1843 ஆம் ஆண்டில் வெள்ளையராட்சி பண்ணையடிமை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனால் பள்ளரும் பறையரும் 'பண்ணையடிமைகள்' என்றழைக்கப்படுவது போய் பண்ணையாட்கள் என்று பெயர் சூட்டப்பெற்றனர். வேலையும் கூலியும் முன் போலத்தான் இருந்தன.  ஆனால் முந்திய பண்ணையடிமை முறையில் கீழிருந்த வேலைப் பாதுகாப்பு இல்லாமல் போனது. அடிமைக்கும் படியாளுக்கும் எல்சோறிட்டுப் பேண வேண்டும் என்ற கட்டுபாடு பண்ணையாருக்கு இனி இல்லை என்றாகியது. பண்ணையடிமை ஒழிப்புச் சட்டத்தால் விடுதலை பெற்ற அடிமை, சோற்றுக்காக கடன்பட்டு பண்ணையாரிடமே கொத்தடிமையாகி ஒரு வழியாக ஒரு 'புது வாழ்க்கை'யைத் தேடிக் கொண்டான். தஞ்சை மாவட்டம்  கும்பாப்பேட்டையில் இருந்த நான்கு கால்வழிப் பார்ப்பனர் குடும்பங்களுக்குப் பணி புரிந்து வந்த பள்ளர்கள் 1860 ஆம் ஆண்டில் கூலி உயர்வு கேட்டனர். அதற்கு எதிராக பண்ணையார்கள் அந்தப் பள்ளர் அனைவரையும் வேலையை விட்டு துரத்தி விட்டு,' தெற்கத்தியப் பள்ளர்' என்னும் கிளைச் சாதியினரைக் குடந்தையிலிருந்து  கொண்டு வந்து ஊர் நெடுந்தெருவில்  அமர்த்தினர். சோற்றுக்கு வழியற்ற பழைய பள்ளர்கள் மன்னிப்பு  கேட்க, மீண்டும் வேலை கிடைத்தது." அதுமட்டுமல்ல தோழர்களே  அடிமையாக இவர்கள் பட்ட பாடுகள் ஏராளமாக இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் பதியப் பெற்றுள்ளன.

 

"தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும்" என்ற நூலில் அடிமை விவசாயக் கூலிகள்" (Agrestic Servidute) பற்றி  .கே. காளிமுத்து சுட்டுகிறார், "பொதுவாக தமிழகச் சாதியக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதியினரான பள்ளா், பறையா்கள் அடிமை விவசாயக் கூலிகளாக இருந்தனா். இவ்வடிமைகள் 'பண்ணையாட்கள்' அல்லது 'படியாட்கள்' என்றழைகப்பட்டனா். கிராமங்களில் உள்ள நிலங்கள் 'மிராசி' என்ற நிலப்பிரப்புக்களின் கூட்டுக்குழுவிற்குச் சொந்தமாக இருந்தமையால் அந்நிலங்களில் பயிா் செய்யும் பள்ளா் பறையா் என்ற அடிமைச் சாதியினா் அக்குழுவிற்கே சொந்தமாவா்.

 

1819 ஆம் ஆண்டு  அறிக்கை.

 

தஞ்சை மாவட்ட ஆட்சியா் அவரது மாவட்டத்தில் அடிமைகள் நிலப்பிரப்புக்களால் கடுமையாக நடத்தப்படவில்லை என்கிறாா்.

 

நெல்லை மாவட்டத்தில் நிலப்பிரபுக்களின் கட்டுப்பாடுகள் அடிமைகள் மீது இருந்தாலும் அவா்களுடைய வாழ்வாதாரங்களை நன்றாக கவனிப்பதாக அம்மாவட்ட ஆட்சியா் அறிக்கை கூறுகிறது.

 

தென்னாற்காடு மாவட்டத்தில் 'பள்ளிகள்' தான் அடிமைகளாக உள்ளனா் என்றும் மொத்த மக்கள் தொகையில் 17000 போ் என்றும் அம்மாவட்ட ஆட்சியா் அறிக்கை தருகிறாா்.

 

திருச்சி மாவட்ட ஆட்சியா் மற்றைய மாவட்டங்களில் 'பள்ளா்கள்' கடுமையாக நடத்தப்படுவதைப்போல் தனது மாவட்டத்தில் இல்லையென்றும் மொத்த மக்கள் தொகையில் 10000 போ் உள்ளனா் என்றும் கூறுகிறாா். ஆனால் 1830 ல் மொத்த மக்களில் அடிமைச் சாதியினா் 20.8 சதவீதம் உள்ளனா்   என்று கூறுகிறது.

 

1841 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையில் 16% மாகவும்

 

நெல்லை மாவட்டத்தில் 16.2% அடிமைகளும்

 

சேலத்தில் 12.8% அடிமைகளும் இருந்தனா்.

 

வடஆற்காடு மாவட்டத்தில் 699 அடிமைகள் என்று மாவட்ட ஆட்சியா் கூறினாலும் புக்கானன் அம்மாவட்டத்தில் நிலப்பிரபுக்கள் ஒவ்வொருவரும் ஏராளமான அடிமைகளை வைத்திருந்ததாகக் கூறுகிறாா்.

 

1832 ஆம் ஆண்டு செலக்ட் கமிட்டி அறிக்கை," தமிழகத்தில் அடிமைச் சாதியினா்  சமூகப் பொருளாதார ரீதியாக மிகக்

கேவலமாக நடத்தப்படுகின்றனா் என்றும் மற்றைய சாதியினரைவிட ஊருக்குள் அப்பால் சோிகளில் வாழ்கின்றனா். நிலப்பிரபுவின் வீட்டில் உள்ள கடினமான வேலைகளையும் செய்ய வேண்டும். கோயில் திருவிழாக்களில் தோ் இழுக்கவும் இவா்கள் பயன்படுத்தப்பட்டனா். தஞ்சை மாவட்டத்தில் பெண் அடிமைகள் மேலாடை இல்லாமல் உடம்பு வெளியே தொியும்படி வேலைசெய்ய வேண்டும்.

 

வேளாண் துறையில் உற்பத்தியில் ஈடுபடும் அடித்தள விவசாயிகளில் அடிமை விவசாயக் கூலிகள் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்னடைந்தவா்களாவா்.

 

1819ம் ஆண்டு கோயமுத்தூா் மாவட்டத்தில் ஒரு அடிமை 50 ரூபாய்க்கு விற்கப்பட்டாா் என்றும் திருச்சி மாவட்டத்தில் அடிமைகள் நிலத்தோடும் நிலத்தை விட்டுத் தனியாகவும் விற்கப்படுகின்றனா் என்றும் அங்கு ஒரு பள்ளாின் விலை 5 பகோடா முதல் 100 பகோடா வரை உள்ளது என்று கூறுகிறது. இதனைப் போன்று மதுரை திண்டுக்கல் நெல்லை மாவட்டங்களில் அடிமைகள் தனித்தும் நிலத்தோடும் சோ்க்கப்பட்டும விற்கப்படுகின்றனா் என்று அரசு ஆவணம் ஒன்று கூறுகிறது."

 

திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மைக்குப் பயன்படும் நீா்நிலைகளைப் பராமாிக்கும் பணியில் பண்ணையடிமைகள் நிலவுடைமையாளா்களால் ஈடுபடுத்தப்பட்டனா். இது குறித்து அம்மாவட்டத்தின் ஆட்சித்தலைவா் 1830 ஆம் ஆண்டில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளாா்,

 

மிராசுதாரா்களின் அடிமைகளாகிய பள்ளா்களே பெரும்பாலும் இந்த வேலைக்கு அமா்த்தப்பட்டனா்".

 

திருநெல்வேலியில் 1835-36ல் நிலவுடையாளருக்கு 500 அடிமைகள் இருந்தாா்கள்.

 

பண்ணையடிமைகள் தங்களை விடுவித்துக் கொள்ள விரும்பினால் அப்போதைய நிலவரப்படி உள்ள அடிமையின் விலையைவிட இரண்டு மடங்கு கொடுக்க வேண்டும்.

 

1800 ல் தஞ்சை மாவட்ட கலெக்டா் பள்ளா்,பறையா் குல அடிமைகள் அம்மாவட்டத்திலிருந்து வெளியேறி வேறு நிலவுடைமையாளா்களிடம் பணிபுாிவதைத் தடுத்து உத்தரவிட்டுள்ளனா்.

 

1828 ல் பிராமண நிலவுடைமையாளாிடம் பணிபுாிந்த சில பள்ளா்குல அடிமைகள் திருச்சி மாவட்டத்திலிருந்து கோவை மாவட்டத்திற்கு வந்துவிட்டனா். அவா்கள் அப்பிராமண நிலக்கிழாாிடம் திருப்பி வருவதற்கு கட்டுப்பட்டவா்கள் என திருச்சி கலெக்டா் கோவை கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

 

1830 திருச்சி மாவட்ட கலெக்டா் தன் மாவட்டத்தில் இருந்து ஓடிப்போன பத்து அடிமைகளை பிடித்தனுப்பும்படி சேலம் கலெக்டருக்கு கடிதம் எழுதுகிறாா்.

 

 

1818 இல் எப்.டபிள்யூ.எல்லீஸ் என்னும் பிரித் தானிய அதிகாரியால் உருவாக்கப்பட்ட "மிராசு - உரிமை"குறித்த17கேள்விகளுக்கான பதில்களும் அவை தொடர்பான இரண்டு இணைப்புகளும் என்னும் ஆவணம். 1860 - 70களில் மேற்குறித்த "பதினேழு கேள்வி களுக்கான பதிலாக" அமையும் மிராசு உரிமை என்னும் ஆவணத்திற்கு மறுப்பாகவும், செங்கற் பட்டு மாவட்ட வன்னியர்களின் நிலப்பறிப்புக்கு எதிராகவும் 'மிராசு பாத்தியதை" எனும் பெயரில் அத்திப்பாக்கம் .வெங்கடாசல நாயகர், ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கிய ஆவணம். "பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்" என்பது அதன் பெயர்.

 

இப்பகுதி மூலம் மிராசு என்பது அனாதிகாலமாக நடைமுறையில் இருந்து வருவதாகப் பதிவாகியுள்ளது. அரசர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் "பிரம்ம தேயம்" எனும் பெயரில் நிலங்களைத் தானமாகப் பெற்றார்கள். இதன்மூலம் குறிப்பிட்ட ஊர் அவர்களின் உரிமை யாக்கப்பட்டது. மேலும் வெள்ளாளர்கள் நிலத்துக்கு உரிமை உடையவர்களாக இருந்தனர்.

 

பாயக் காரி, உட்குடி, புறக்குடி என்னும் சொற்கள் நிலத்தோடு உறவுடையவர்களைக் குறிப்பதாகும். பாய்க்காரி என்பதை பாயக்காரி என்றும், அது இந்துஸ்தானி சொல்லாகவும் வின்சுலோ அகராதி குறிப்பிடுகிறது. நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்பவர் என்பது வின்சுலோவின் விளக்கம் ஆகும். பிற இடங்களிலிருந்து வந்து குடியேறுபவர் என்றும் குறிப்பு உள்ளது. உட்குடி என்பது குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பவர்; புறக்குடி என்பவர் அக்கிராமத்திற்கு  வந்து குடியேறியவர் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. இச்சொற்கள் அனைத்தும் மிராசு பாக்கியதை இல்லாதவர் களைக் குறிப்பதாகும். இவர்கள் நிலத்தில் உழைத்து உற்பத்தி செய்பவர்கள். ஆனால், அந்த நிலம் அவர் களுக்கு உரிமை உடையது இல்லை. வெறும் குத்தகைக் காரர்களே. மிராசுதார் நினைத்த மாத்திரத்தில் அவர்களை வெளியேற்றலாம்.

 

உழைப்பவருக்கு உரிமை இல்லை என்பதே ஆவணத்தின் சாரம். இந்த ஆவணத்தை நடைமுறைப்படுத்த எல்லீஸ் முயன்றார். இந்த ஆவணத்தில் வெள்ளாளருக்கு அடிமையாகச் சில குடிகள் இருந்தது குறித்த பதிவும் இடம்பெற்றுள்ளது. எத்தனை உழுகிற குடிகளுண்டு? என்ற ஒன்பதாவது கேள்விக்குப் பதிலாகப் பின்வரும் பகுதி அமைந்துள்ளது.

 

"....... அந்த கிராமங்கள் வேளாளருடையதாயும் அகமுடையருடைய தாயுமிருந்தால் அவர்களுக்கு அடிமைகளிருக்கிறதுண்டு. அந்த அடிமைகளுக்கு உழுகிற ஏர் - ஒன்றுக்கு - ஒரு ஆள் விழுக்காடு வைத்துக் கொண்டு சாகுபடி செய்துகொண்டு வருவார்கள். அடிமைகள் குறைச்சலாயிருந்தாற் படியாளை வைத்துக் கொள்ளுவார்கள். பிராமணாளிருக்கிற அக்கிராரங்களாயிருந்தாற் படியாள்கள் விசேஷமாயும் அடிமைகள் கொஞ்ச மாயுஞ் சில கிராமங்களிலேயேயில்லாமலு மிப்படியிருக்கும்" (குறிப்பு: புள்ளி இட்டு எழுதப்பட்டுள்ளது. மூலத்தில் புள்ளி இருக்காது)

 

 

பாயக்காரிகளின் நிலவுரிமைக்கான ஆவணமாக வெங்கடாசலனார் ஆவணம் அமைந்துள்ளது.

 

தமது பந்துக்களாக வன்னியர்களைக் கருதி, அவர்களில் பள்ளிகள் எனப்படும் வன்னியர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாகச் செயல்பட்டார்கள் என்ற கூற்றையும் மறுக்கின்றார்.

 

"பள்ளிகள் பிராமணாளுடைய ஊழியக்காரர்களாயிருந்தாகளென்று கலெக்டர் பிளேசுதுரை சொல்லுகிறார். இதற்கு மிகுந்த பெரிய பொய் கிடையாது.... (பத்தி. 17)

 


ஆனால் வெள்ளாளர் பெருமை பேசும் வருண சிந்தாமணி நூல், பார்ப்பனர்களுக்குப் பள்ளிகள் அடிமை களாயிருந்தது தொடர்பான பின்வரும் செய்தியைப் பதிவுசெய்திருப்பதைக் காண்கிறோம்.

 

"............. 1668 வரைக்கு மேற்செல்லா நின்ற பிரபவ... ஆனி மீ 14 சனிவார நாள் துதிகை திருவோண நட்சத்திரமுங் கூடின சுபதினத்தில் தொண்டமண்டலத்தைச் சேர்ந் செஞ்சி ராஜ்யம் வழுதிலம்பட்டுக் காவடிக்கு வடக்கு வக்கரைக்குத் தெற்கு..... நோட்டப்பட்டிலிருக்கும் பாரிவாக்கம் மாரியப்ப முதலியாரவர்களுக்கு கருக்களாம் பாக்கத்திலிருக்கும் பள்ளிகளில், சின்னப்பயல் என்பெண்சாதி சேவி நாங்களிருவருந் நிறைய சாசன முறிகொடுத்தபடி......... இந்த வராகன் ஒன்றும், நாங்கள் பற்றிக்கொண்டு எங்கள் மகள் குழந்தையைக் கிறையமாகக் கொடுத்த படியினாலே... அநுபவித்துக் கொள்ளக் கடவீராகவும்....... சாசனமுறி கொடுத்தோம். (வருணசிந்தாமணி:453)

 

இவ்வகையில் பறையரின மக்களைப் போலவே பள்ளி இன மக்களும் அடிமைகளாக விற்கப்பட்டிருப் பதைக் காண்கிறோம். இதனை வெங்கடாசலனார் மறுத்து எழுதுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக இவரது குரல் இருப்பதைக் காண்கிறோம். அதன் வெளிப்பாடே இந்த ஆவணம். மிராசுதார்களுக்கு எதிரான அவரது குரல் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

 

மேல்காட்டப்பட்ட ஆவணங்கள் மூலம் தமிழ்நாட்டில் அடிமை முறை இருந்தது தெரிகிறது. எல்லாச் சமூகத்திலும் அடிமை முறை இருந்தாலும் பறையர் பள்ளர் சமூகத்தினரே அதிகம் அடிமை ஆகியுள்ளனர்.

 

இதையெல்லாம் கண்டும் கானாம ஆய்வில் ஈடுபடுவது நகைப்பிற்குரியது

 

Keywords:பறையர்கள்,பள்ளர்கள்,அடிமைகள்,படியாள்,ஆள்

 




நன்றி:

அடிமை ஆவணங்கள்- ..பெருமாள்

அடிமைகள் ஆவனம்- .தியாகராசன்

கல்வெட்டுகளில் அடிமைகள் -செ.இராசு

கீற்று வலை தளம்

 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.