Saturday, May 18, 2013

வடகரை ஜமீன்

வடகரை ஆதிக்கம் - சொக்கம்பட்டி ஜமீன்


பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)

Vadakarai aathikkam a story of chokkampatti zamin

அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

வடகரை ஆதிக்கம் - சொக்கம்பட்டி ஜமீன்

இந்நாளில் சொக்கம்பட்டி ஜமீன் என்று அழைக்கபட்டது அன்றைய வடகரை பாளையம் ஆகும்.இது நெல்லை சீமையில்ல் அமைந்துள்ள பாளையமாகும்.


இவர்கள் மூதாதயர்கள் பெரிய குலசேகர பாண்டிய மன்னன் தெண்காசி நகரத்தினை ஆண்டு வரும்போது செம்பி(சோழ)நாட்டை துறந்து வந்தவர்கள். இவர்கள் பாண்டிய அரசனைக் கண்டு தன் வீரத்தால் மகிழச் செய்து 'செம்புலி' என்ற பட்டமும் பெற்று செம்புலி சின்னனைஞ்சாத்தேவர் (அ) சின்னனைஞ்சா தலைவனார் என்று அழைக்கபட்டார்.முதல் பட்டம்(கி.பி.1391-1431) முதல் வடகரை பாளையம் அமைத்து தொடர்ந்து பலர் பட்டத்துக்கு வந்தனர்.பின் குமார சின்னனைஞ்சா தேவர்(கி.பி. 1750-1760) வடகரை பாளயக்காரரானார் இவர்கள் மறவர் இனத்தில் உப்புக்கோட்டை மறவர் இனமாக திருநெல்வேலி சீமையில் அறியப்படுகின்றனர்.(சேற்றூர் ஜமீன் வித்துவாண்கள் மு.ரா.கந்தசாமிக்கவிராயர்,பி.சி.சி.பாண்டியன் எழுதிய'திருநெல்வேலி ஜில்லாவின் வடகரையாதிக்கத்தின் சரித்திரம்' வால்யும் 2,1916,பக்.29 & எம்.செந்தூர் பாண்டியன்,வடகரை மறவர்கள்,ஆவண அமுதம்,சென்னை, அக்-டிஸ்.1992,பக்.13).



கேரள நாட்டுடன் எல்லை போர்கள்:

இவர்களது பாளையம் இன்றைய கேரள எல்லைகளுக்கு அருகில் இருந்ததால் கேரள நாட்டினருக்கும் இப்பகுதி பாளையத்தாருக்கும் இடையில் போர்கள் பல மூண்டுள்ளது.இவர் ஆய்நாட்டின் மீது படையெடுத்து அதனை வெண்றுள்ளார்.வேணாடு என்று அழக்கப்படும் திருவேனாட்டின் மீது படையெடுத்து அதனை வென்று "திருவொன்நாட்டை கொள்ளை கொண்ட மகராஜா திருவொன்னாத தேவர்" என சிறப்பு பட்டம் சூடியுள்ளார். திருவிதாங்கூர் மீதும் பல முறை படையெடுத்து அதனை பல முறை சூறையாடி திரிந்த இம்மக்களை கண்டு "பாண்டிப்படா" என்று கேரள மக்கள் அச்சத்தோடு அழைப்பது வழக்கம்.1759 திருவிதாங்கூர் வடகரை பாளயக்காரர்களால் சூரையாடப்பட்டது.

திருவிதாங்கூர் மன்னரின் கோபம்:

நெற்கெட்டான் செவ்வல் பாளயக்காரர் பூலித்தேவருக்கு மிகவும் உறுதுணையாகயிருந்து வரும் வடகரைப் பாளையக்காரரின் பகுதிகளுக்கு பதினைந்து மைல் தொலைவில் திருவிதாங்கூரின் மன்னரின் பகுதிகள் இருந்தன.வடகரைப் பாளயக்காரர் திருவிதாங்கூர் பகுதிக்குள் செங்கோட்டை கணவாய் வழியாக அடிக்கடி சென்று தாக்குத்லைத்தொடுத்து,பொருட்களைக் கவர்ந்து,மக்களுக்கு இன்னலும் விளைவித்து வந்தார். கேரளத்து ஆண் மக்கள் வீரத்திலே தொய்வு என்பதாலும், எல்லை தாண்டி பாண்டி மக்கள் உடல் பலமிக்கவர்கள் என்பதால் எதிர்த்துப் போரிட முடியாது என உனர்ந்தார். எனவே,வடகரைப் பாளையத்தை ஒடுக்க திருவிதாங்கூர் அரசர் காலத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தார்.


எதிரிக்கு எதிரி நன்பன்:

சின்னனைஞ்சா தேவர் வெள்ளையருக்கு எதிராக போராடி வரும் பூலித்தேவருடன் நெருக்கமாக இருந்தார். பூலித்தேவருடன் சேர்ந்துகொண்டு கும்பெனி பகுதியிலும் வடககரைப் பாளையக்காரர் கும்பெனிக்கு எதிராக செயல்பட்டு வருவதால் வெள்ளையர் ஏஜெண்ட் கம்மந்தான் கான்சாகிப் அதனை அடக்க முடிவு செய்தார்.எனவே கான்சாகிப் திருவிதாங்கூர் மன்னரை சந்தித்து பேசி இருவரும் பூலித்தேவருக்கும் வடகரைப்பாளையக்காரருக்கும் எதிராக செயல்பட தீர்மானித்தார்கள். எனவே இருவரும் கூடி ஒரு செயல் திட்டம் வகுத்தனர்.

செங்கோட்டையில் கூடிய பெரும் படை:

1759- அக்-6.ல் 1400 குதிரைப்படையுடனும் 18 பவுன்ட் சக்திவாய்ந்த 4 பீரங்கிகளுடனும், திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவுடன் படைநடத்தி வடகரை கோட்டையை கான்சாகிப் தாக்கினார். அக். 10ம் தேதி வடகரையை தோற்கடித்து வடகரை பாளையத்தைக் கைப்பற்றினான். இதில் சின்னனைஞ்சா தேவர் தோற்கடிக்கப்பட்டு நெற்கட்டாஞ்செவ்வலுக்கு சென்று தஞ்சமானார்.அடுத்து பூலித்தேவன் கோட்டையைப் பிடிப்பது யூசுப்கானின் வீரத்திற்கும் ஆங்கிலேயர்களின் வருவாய்க்கும் அவசியமாகியது. எனவேஆட்களும்.ஆயுதங்களும் திரட்டப்பட்டன. இதன் மூலம் வடகரைப்பாளையக்காரரின் பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு கான்சாகிப் மூலம் கிடைது.
Victories over the Anglo-Nawabi forces helped the revolt spread to other polygars. [3] See also: Polygar [edit] Decline and end of vadakkarai Zamin After 1760, General yousuf khan began a systematic campaign, taking the forts of the major confederates one by one.

சொக்கம்பட்டி ஜமீனின் கோயில் திருப்பனிகள்:























சேதுபதி என்றால் சேதுவின் அதிபதி.

தீர்த்தபதி என்றால் தாமிரபரணிக்கு மூலமான புனிதமான பான தீர்த்தத்துக்கு அதிபதி.

அதே போல் திருகூடபதி என்றால் திரிகூடம் என்னும் திருக்குற்றாலத்தின் அதிபதி.

இந்த அரசர்கள் உப்பரங்கோட்டை என்னும் உப்புக்கோட்டை மறவர்குல பிரிவை சேர்ந்தவர்கள்.

அதியில் செம்பி நாட்டை பூர்வீகமாகக்கொண்டவர்கள் பின் பாண்டியர் மெய்காவல் படையில் இருந்து பராக்கிரம பாண்டியனின் ஆணைக்கு இணங்க ஒரு கொள்ளக்கூட்டத்தை ஒழித்து அக்கூட்டத்தின் தலைவன் தலையை மன்னன் முன் வைக்க செம்புலிதேவன் என்ற பட்டத்துடன் வடகரை அரசாட்சி பாண்டியனால் (கி.பி 1391ல்) வழங்கப்படுகிறது.(1)

குற்றாலநாதர் கோவில் திருப்பணிகள்:
=======================================
இவர்கள் இக்கோவிலில் பாண்டியர் காலம் முதல் பிரிட்டிஷ் அரசாங்க ஆட்சி காலம் வரை திருப்பணி செய்து உள்ளனர்.

1)முதலாவது அரசர் (செம்புலி சிவனணைஞ்சாத் தேவர் 1391-1434 (2).)
குற்றாலிங்கம் குழல்வாய்மொழியம்மன் பொது மண்டபம், குற்றால அன்னசத்திரத்தை கட்டிமுடித்தார் . இவரின் ஸ்தானாபதி (மந்திரி (அ) அமைச்சர். பொதுவாக காராள வேளாளர் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்) வயித்தியப்ப பிள்ளை வயித்திய விசால மண்டபம் கட்டி முடித்தார்.(3)

2) இரண்டாவது அரசர் (வீரபாண்டியன் காலத்தவரான முத்தனைஞ்சா தேவர் 1434-1461 (4)) குற்றாலிங்கம் குழல்வாய்மொழி உட்சுற்று பிரகாரம் செய்து முடித்தார்.(5)

3)மூன்றாவது அரசர் (காளத்தியப்ப தேவர் (1462-1490)(6).) சுவாமி தேர், அம்மன் தேர், விநாயகர் கோவில், சுப்பிரமணியர் தேர் ஆகியவற்றை செய்து முடித்தார்.(7)

4)ஆறாவது அரசர் (குலசேகர ராஜா (பாண்டியம்) காலத்தவர். திரிகூட ராஜகோபாலத்தேவர் 1536-1595)(8).
குற்றாலநாதர் கோவில் தட்டொட்டியும், பசுப்பிரையும் கட்டிமுடித்தார்.(9)

5)ஏழாவது அரசர் (பெரியன் சின்னணைஞ்சாத் தேவர் 1596-1629).(10)
தீர்த்த மண்டபம், சுற்றுபிரகாரம், நடைகாற்பாவல் முதலியவைகளை கட்டி முடித்தார்.(11)

6)எட்டாவது அரசர் (சிவனடியாத்தேவர் 1630-1659) துவஜஸ்தம்பம் அஷ்டாபந்தன கும்பாபிஷேகம் செய்து முடித்தார்.(12)

7)ஒன்பதாவது அரசரும்,சின்ன பட்டமும்(பெரியசாமி செம்புலி சின்னணைஞ்சாத்தேவர், சின்னப்பட்டம் ராஜகோபாலத்தேவர் 1660-1721) பாண்டியன் செய்த சித்திர சபைக்கு செப்பேடு வேய்ந்தார்கள், மேல்ச்சபை, கீழ்ச்சபை கல் வரிசை தளவரிசை திருப்பணி நடத்தினர்,ஸ்படிக லிங்கம் அமைத்தனர்,சித்திரங்கள் எழுதி வைத்தனர்,சபை சுற்று சிகரம், முன் மண்டபம், தெப்பக்குளம், நடுமண்டபம், கோபுரம் ஆகியவற்றை கட்டி முடித்தனர்.(13)

சித்திர சபைக்கு செப்பேடு வேய்ந்த அரிய சேவையை பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ வேளாளர் குலத்தவரான திரிகூடராசப்ப கவிராயர்(வடகரை அரசவை புலவர்) இயற்றிய குற்றாலக்குறவஞ்சி என்ற சிற்றிலக்கியம் புகழ்கிறது.(14)

(திருக்குற்றாலக் குறவஞ்சி)
"பன்னக மாமுனி போற்றத் தமிழ்ப்
பாண்டியனார்முதல் சிற்றொடு வேய்ந்த
தென்னாருஞ் சித்ர சபையை எங்கள்
சின்னணஞ் சாத்தேவன் செப்போடு வேய்ந்த
முன்னாளி லேகுறி சொல்லிப் பெற்ற"(15)

கொலு மண்டபம், திரிகூட மண்டபம், தேர் மண்டபம், பரமானந்தத் தேப்பு, குறிஞ்சிப்படித்துறை ஆகியவை அகப்பட்டன.(16)

தெய்வப் பணியில் பேரார்வம் கொண்ட இந்த இரு சகோதரர்களும் இன்றும் குற்றாலநாதர் சன்னிதியில் கொடிமரத்தின் தென்பக்கம் வடக்கு நோக்கி கற்சிலையாக இன்றும் குற்றாலநாதரை வழிபட்டு கொண்டு இருக்கிறார்கள்.(17)

பின் 1891 ஆம் ஆண்டு பெய்த பெருமழையால் அருவியின் வெள்ளத்தில் காசிலிங்க சுவாமி கோவில், தெற்கு வீதி செண்பக வினாயகர் கோவில் அகியவை அடித்து செல்லப்பட்டது.
வைத்தியவிலாச மண்டபம், அருவிக்கரை பாலம், கோவிலின் சில பகுதிகள் சேதம் அடிந்தன. அதிக பொருள் செலவில் அத்தனையும் இம்மரபினரால் சரி செய்யப்பட்டது.(18)

(முழு விபரங்களும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் ஆவணமான திருக்குற்றாலம் என்ற நூலில் உள்ளது. நூலில் செய்தி படங்கள் இணைப்பில்)

பதினான்காம் நூற்றாண்டு முதல் நெல்லை பகுதியில் பெரும் ஆதிக்கம் செலுத்திவர்கள் இம்மரபினர். முழு திருவிதாங்கூரையும் நடுங்க வைத்தவர் என்று சொன்னால் மிகை அல்ல. திருவிதாங்கூரையும் வேனாட்டையும் கொள்ளை கொண்ட மகாராசா திருவேனாத்தேவர் என மொத்த கேரளத்தையும் ஆட்டிபடைத்த இவர்கள் முழு வரலாற்றை மற்றொரு பதிவில் விரிவாக காண்போம்.

அடிக்குறிப்புகள்:
=================
1-Mackenzie Manuscripts
2,4,6,8,10-வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம்
3,5,7,9,11,12,13,14,16,17,18-திருக்குற்றாலம்
15-திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சி


பிற்காலத்தில் சொக்கம்பட்டி:

இவ்வாறு நீண்ட பாரம்பரியம் கொண்ட சொக்கம்பட்டி பல கவிஞர்களையும் தமிழ் புலவர்களையும் ஆதரித்துள்ளது. பிற்பாடு இது ஊற்றுமலை ஜமீனுட்ன் இனைக்கபட்டது.
ஜமீண்கள்
=======
நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்
முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்
திரையன் தேவர்கள்
ஊர்க்காடு ஜமீன்
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
தென்னாட்டு புலி சிங்கம்பட்டி ஜமீன்
ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் புலித்தேவன்
குருக்கள்பட்டியின் மறைந்த ஜமீன்
சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை
கொல்லங் கொண்டான் ஜமீன் 
ஊத்துமலை ஜமீன்
சிவகிரி ஜமீன்-மறவர்கள்
சேத்துர் ஜமீன்
கடம்பூர் ஜமீன்
மணியாச்சி ஜமீன்
https://thevar-mukkulator.blogspot.com/2018/08/2.html 
செய்தி விபரம்:
சேற்றூர் ஜமீன் வித்துவாண்கள் மு.ரா.கந்தசாமிக்கவிராயர்,பி.சி.சி.பாண்டியன் எழுதிய'திருநெல்வேலி ஜில்லாவின் வடகரையாதிக்கத்தின் சரித்திரம்' வால்யும்2,1916,ப்க்.29 & எம்.செந்தூர் பாண்டியன்,வடகரை மறவர்கள்,ஆவண் அமுதம்,சின்னை, அக்-டிஸ்.1992,பக்.13
ராபர்ட் ஓர்ம் முற்கூரிய நூல்,பாகம் 2,............
மருதநாயகம் என்ற கான்சாகிப் நூல்-திவான்...............

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.