இலங்கையில் மறவர்குடியேற்றம் சோழ,பாண்டியர் காலத்தில்
சேது காவலர்களும் மட்டகளப்பு வன்னிபங்களும்
முற்குகர் என்னும் குகன் குல வரலாறு-சிவ.சன்முகம் போடியார்
ஈழத்தமிழ் வேந்தன் வெடியரசன்
ஆரிய சக்கரவர்த்தி யார்?
வன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர்(மறவர் குல நாச்சியார்) - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை
சோழகங்கதேவன்(கலிங்க மாகன் ) ஈழப் படையெடுப்புகள்
இலங்கையில் மறவர்குடியேற்றம் சோழ,பாண்டியர் காலத்தில்
நித்திலத்தீவென்று வித்தகரால் போற்றிப்புகழ்ந்த இலங்கை என்ற ஈழவள நாட்டிலே முத்தமிழ்காத்த முடி மன்னரின் கொடிபறக்கவும், குடை சிறக்கவும், கொற்றந்தழைக்கவும் வித்திட்ட பெருமை படைவீரர்களான மறவர்குலப் பெருங்குடிமக்களையே முதற்கண் சாரும்.வடஈழத்திலே, குறிப்பாகத் தீவகத்திலே குடிபதி களாக வாழ்ந்த மறவர்குலத்தவர்கள்.இவர்கள்“நெடுந்தீவு சஞ்சுவான் கோயில் கிறீஸ்தவர்கள் தமிழ் மன்னர் காலத்தில் போர் வீரர்களாக நெடுந் தீவில் இறக்கப்பட்டவர்களென்றும், இவர்கள் மறவர் குலத்தைச் சேர்ந்தவர்களென்றும்மற்றப்படி உள்ளபடியே இவர்கள் மேன்குல மக்களென்றும்” அறிய முடிகிண்றது.
பண்டைக்காலத் தமிழர் காலத்தில் மாதோட்டம் மிகச் சிறந்த செல்வ நாடாய்த் திகழ்ந்தது. ரோமர், கிரேக்கர் முதலானோர் தம்மரக்கல்களோடு இங்கு வந்து, தந்தம் முத்து, தோகை, இலவங்கம், முதலாம் விலையுயர்ந்த திரவியங்கள் ஏற்றிச் சென்றிருக்கின்றனர்.
சோழர் காலத்தில் மறவர் குடியேற்றம்:
மாதோட்டத்தை ஆண்ட சிற்றரசர்களோடு பலமுறை சோழரும், பாண்டியரும் போர் பொருதியுள்ளனர். சிலகாலம் சோழரும் பாண்டியரும் மாதோட்டத்தை வென்று இங்கு ஆணையுஞ் செலுத்தியுள்ளார் கள். 9.பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடபாகம் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாயிற்று. கி.பி.1012 இல் முழு இலங்கையும் சோழமண்டலத்துக்குச் சேர்ந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த சிங்கை நகர் (வல்லிபுரம்) அரசர்கள் சோழப் பிரதானிகளாயினர். சோழர்கள் எண்ணிறந்த சைவக் கோவில்களைப் புதிதாக அமைத்ததுடன், பழைய சைவாலயங்களையும் புதுப்பித்தனர். நூற்றிருபத்தாறு நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சோழராட்சி இலங்கையில் நிலவிய காலத்தில் நயினாதீவில் இருந்த பழம்பெருமை வாய்ந்த நயினார்கோவிலும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கலாம்.
பிற்கால சோழர்களில் பராந்தக சோழன் ,முதலாம் ராஜ ராஜன்,ராஜேந்திர சோழன் தொடங்கி பிற்க்கால சோழர்கள் பல முறை இலங்கை மீது படையெடுத்துள்ளனர்.இதன் மூலம் தான் மறவர்கள் இலங்கைக்கு படைவீரரய் வந்துள்ளனர் . இவர்களின் படையெழுச்சிக் காலத்தில் மறவர்களே சேனா வீரர்களாகக் கடமையாற்றினர். போர் முடிந்த பிற்பாடு ஒரு சில போர்வீரர்கள் தம் தாயகந் திரும்பாமல் மாதோட்டத்திலே தங்கினர்.இது 12-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கூறுகின்றது.அந்த காலக்கட்டத்தில் சோழ அதிகாரிகளின் பெயர்களிலே இவர்கள் பணியாற்றியமைக்காக கல்வெட்டு ஆவனங்கள் உறுதி செய்கின்றனர்.மறவர்களுடன் வெள்ளாள மக்களும் இங்கு குடியேற்றப்பட்டுள்ளனர்.இவர்கள் இங்கு காடுகளை அழித்து கழனியாக்கவும் நில அளவைகனக்கர்களாக பணியாற்றவும் தருவிக்கபட்டனர்.இது 12-ஆம் நூற்றாண்டு மாதோட்டத்தில் உள்ள சோழ கல்வெட்டு உறுதி செய்கிறது. 1848 - P. 73. ^ யாழ்ப்பாணச் சரித்திரம் பக். 3 (ஆ. முத்துத்தம்பி)
ஈழமும் பாண்டியரும்
“தென்னாடு முத்துடைத்து” என ஒளவையாரால் புகழ்ந்து பாடப் பெற்ற நாடே பாண்டி நாடாகும். பாண்டிய மன்னர்க்குரிய செல்வங்களுள் முத்தே பிரதானமானது. முத்தாரமார்பனாய் பாண்டிய மன்னன் விளங்கினானென்று சிலப்பதிகாரம் கூறுகிறது. பாண்டி நாட்டின் கடல்படுதிரவியமான முத்துச் சிறப்பு தெளிவாகிறது.
dதமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் பக். 9 (வண. ளு. ஞானப்பிரகாசர்) அலையும் கலையும் (டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை)
கி.மு ஆறாம் நூற்றாண்டில் சிங்கள மன்னனான விஜயன் பாண்டியன் புத்திரியை மனந்து இலங்கைக்கு வரும்போது, பாண்டி நாட்டிலிருந்து எழுநூறு மேன்குலச் சீடமாட்டிகளோடும், பதினெட்டுவரிசையான பரிவாரங்கனோடும், ஐந்து வரிசையான ஏவலர்களோடும் வந்துள்ளதாக மகாவம்சம் கூறுகிறது. uமதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் நூற்றுப்பதினாறு பேர்களாவர். இந்நூற் றுப்பதினாறு மன்னர்களும் மொத்தம் 1740 ஆண்டுகள் ஆணை செலுத்தியுள்ளார்கள். ^ஈழ நாட்டுடனும் பாண்டிய மன்னர்கள் பலமுறை போர் பொருதி வெற்றிவாகை சூடினர். ஆனால் இவர்களின் ஆளுகை வெகு காலம் நீடிக்கவில்லை. எனினும் முதலாம் புவனேகபாகு என்னும் சிங்கள அரசன் காலத்தில் பாண்டி இராச்சியத்தை ஆண்ட ஐவர் சகோதரரும், பெரும் வலிமைபடைத்த தமது மந்திரியை ஒரு பெருஞ்சேனையுடன் இலங்கைக்கனுப்பி நாடுநகர்களையும், கோட்டை கொத்தளங்களையும் பாழாக்கிப் புத்தருடைய தந்ததாதுவையும் மற்றும் செல்வங்களையும் கொள்ளையடித்துப் பாண்டி நாட்டுக்கு மீண்டு குலசேகர மன்னனுக்கு தந்ததாதுவை அளித்தனா.; (மகாவம்சம்) தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும் (வண. ளு. ஞானப்பிரகாசர்) ^யாழ்ப்பாண வைபவவிமர்சனம் (வண. ளு. ஞானப்பிரகாசர்) சடாவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் (1251-1280) இலங்கை அரசனிடம் யானைத் திறை பெற்றுள்ளதாகவும் சிதம்பரக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அக்கல்வெட்டுவருமாறு.
இச் சுந்தர பாண்டியன் ஈழத்து வேந்தனொருவன் திறை கொடுக்காதொழிந்த காரணத்தால் காலில் சங்கிலிபூட்டி வருத்தியதாகவும், சடவர்மன் இரண்டாம் வீரபாண்டியனும் இவ்வண்ணமே இலங்கையரசர்களிலிருவருள் ஒருவனைக் கொண்று அவனுடைய சேனை இரதம், சிங்காசனம், முடி முதலான சகல பொக்கிஷங்களையும் கைப்பற்றி, கோணமலையிலும், திரிகூடகிரி மலையிலும் பாண்டிய துவசங்களை நாட்டி, மற்ற அரசனிடம் யானைத்திறை கொண்டதாகவும் சாசனங்கள் கூறுகின்றன. (1254-1257) uயாழ்ப்பாண வைபவவிமர்சனம் (வண. ளு. ஞானப்பிரகாசர்).
பாண்டியன் காலத்தில் மறவர் குடியேற்றமும்
இவ்வண்ணம் பாண்டிய இராச்சியம், தலைசிறந்து விளங்கியதற்கும், பலபல போர்களிலே வெற்றி ஈட்டியமைக்கும், முத்துக்குளிப்புத்துறை சிறந்ததற்கும் மறவர்களின் போர்த்திறனே முக்கிய காரணம்.
<
மறவர்களே சகல பாண்டிய மன்னர்களுக்கும் நம்பிக்கையான படைவீரர்களுமாவர்.இந்த காலக்கட்டத்தில் இராமநாதபுரம் ஆண்ட சேதுபதியும்,யாழ்பானத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்தி என்ற குணவீராஆரியசிங்கணும் பாண்டியருக்கு குறுநிலை மன்னனாக பணியாற்றிமைக்கு சாண்றாக மாறவர்மன் குலசேகர பாண்டியன்(1268-1330) இராமநாதபுரம் கல்வெட்டுகளில் யாழ்பானத்தை ஆண்ட குணவீரசிங்கனின் பெயரும் சேதுபதிகளின் பெயரும் கானப்படுகின்றனர்.
நெடுந்தீவின் பழங்காலச் சிறப்பு
வீரஞ் செறிந்த மறக்குடி மக்கள் இலங்கையிலும் பூர்வகாலந் தொட்டு நிலத்தரசர்களாய், குடிபதிகளாய் வாழ்ந்துள்ளனர். இவர்கள் பாண்டிய மன்னர்களுக்குப் போர்ப்பணி புரிந்தவர்கள் மாத்திரமல்ல, இம்மன்னர்களின் முத்துக் குளிப்புத் துறைகளுக்கும் காவலாளிகளாகவும் கடமை செய்துள்ளார். பாண்டியர்களின் தொடர்பு விஜயன் காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைக்கேற்பட்டுள்ளதென முன் அத்தியாயத்தில் கூறியுள்ளோம். மாதோட்டத்தில் ஆணைசெலுத்திய தமிழ் சிற்றரசர்கள் பாண்டியருக்கும் சோழருக்கும் திறை செலுத்தியும் வந்துள்ளார்கள். சிலகாலம் சோழரும் பாண்டியரும் நேரடியாகவும் மாதோட்டத்தை ஆண்டுமுள்ளனர்.
விஜயன் இலங்கை அரசனான பிற்பாடும் பாண்டியரும் பலமுறை படையெடுத்து இலங்கையைக் கைப்பற்றினர். இவர்களின் படையெழுச்சிக் காலத்தில் மறவர்களே சேனா வீரர்களாகக் கடமையாற்றினர். போர் முடிந்த பிற்பாடு ஒரு சில போர்வீரர்கள் தம் தாயகந் திரும்பாமல் யாழ்ப்பாணத்திலே தங்குவதற்கு விருப்பங் கொண்டனர். வேறுசிலர் வெற்றியீட் டிய சந்தோஷத்திற்காக மன்னர்களிடம் சன்மானமாக நிலங்களைப் பெற்றுங் குடிபுகுந்தனர். இன்னும் சில மறவர்களை யாழ்ப்பாண மன்னர்கள் தமக்குச் சேவகம் புரிவதற்காக இந்தியாவிலிருந்து நேரடியாகத் தருவித்துமுள்ளனர்.
யாழ்ப்பாண குணவீரசிங்கையாரியச் சக்கரவர்த்தி மதுரையரசனுக்குப் படைத்துணை யனுப்பிய சந்தோஷத்திற்காகப் பெருந்தொகைத் திரவியமும் கன்னடர் சிலரையும், சிவிகையார் சிலரையும், வில்லியர் சிலரையும் வேடர் சிலரையும் இத்துடன் மறவர் சிலரையும் அனுப்பிவைத்தாகவும், மறவரை மறவழன்புலவிலிருத்தினரெனவும் யாழ்ப்பாணச் சரித்திரங் கூறுகிறது.
இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதுயும் யாழ்பானத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்தியும்
சோழ, பாண்டிய அரசர்களும், அவர்களுக்குப் பின்பு சேது நாட்டு (இராமநாதபுரம்) அரசர்களும், பின் யாழ்ப்பாண அரசர்களும் முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் போன்ற தொழில்களை ஊக்குவித்து வந்தனர்.
இதன் பின்பு பாண்டியர் வீழ்ச்சியுற்ற காலக்கட்டத்தில் சிங்கை ஆரியன் பாண்டியன் மீதும் சேதுபதிகளின் மீதும் படையெடுத்து இருவரையும் வீழ்த்தி மதுரை பிடித்து பின்பு சேதுபதியையும் வீழ்த்தி "சேதுக்காவலன்" என்ற சிறப்பு பட்டம் சூடினான்.இதன் பிண்புகுணவீரசிங்கை ஆரியன் காலத்தில் இராமேஸ்வரக் கற்பக்கிரகத்தைக் கட்டுவதற்கு திரிகோணமலையிலிருந்து கொண்டவரப்பட்ட கற்களும் நெடுந்தீவு மார்க்கமாகவே கொண்டு செல்லப்பட்டது.குணவீரசிங்கை ஆரியன் காலத்தில் இராமேஸ்வரக் கற்பக்கிரகத்தைக் கட்டுவதற்கு திரிகோணமலையிலிருந்து கொண்டவரப்பட்ட கற்களும் நெடுந்தீவு மார்க்கமாகவே கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்பு சேதுக்காவலன் என்ற பெயரில் நந்தி ருபமும் கொண்ட நானயங்களை வெளியிட்டாண்.இதன் பின்பு சேதுபதி காத்த தேவரை விடுவித்து நாட்டை திரும்ப ஒப்படைத்தான் இவரது சேதுக்காவலன் நானயத்தில் ஒரு நந்தி,சங்கு,லிங்கம் காணப்படும்.காலம் 14-ஆம் நூற்றாண்டு.
இதன் பின்பு சேதுபதிகளும் தன் காலக்கட்டத்தில் சேதுக்காவலன் என்று வெளியிட்ட நாணயங்கள் காணப்படுகின்றன அவை இளம்பிறை(வளரி),கயல்மீன்,புலி கொண்ட நாணய அமைப்பை காணலாம்.காலம் 14-ஆம் நூற்றாண்டு. இந்த நானயம் புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே கண்டு பிடிக்க பட்டுள்ளது.பிற்கால சேதுபதிகள் நானயத்தில் கருட,அனுமன்,வளரி அமைப்பில் காணப்படும்.சேதுபதிகளுக்கும் யாழ்பாண அரசனுக்கும் சேதுக்காவலன் என்ற பட்டம் உண்டு இருவரும் வர்த்தக ரீதியாகவும் முத்துகுளித்தல் தொழில்கள் இரு ராஜ்ஜியத்திற்கும் பொதுவாக நடைப்பெற்றன.இருவரும் பாண்டியர் காலத்தில் செல்வாக்கு மிகுந்த சிற்றரசுகளாக திகழ்ந்ததாக யாழ்பாண் சரித்திரமும் இலங்கை வரலாறும் கூறுகின்றது. சேதுபதிகளின் நாணயங்கள் தமிழ்நாட்டிலும் யாழ்பாண அரசன்னின் நானயங்கள் இலங்கையிலும் கண்டெடுக்கபட்டு இன்று தொல்லில்யல் துறையில் உள்ளது.
சங்கிலி அரசன் காலத்தில் இராமநாதபுரத்திலிருந்து வந்த மறவர்கள் ஆதியில் மறவன் புலத்தில் குடியேறி, பின்பு பன்றியந்தாழ்வில் போய் தங்கியிருந்ததாகவும் யாழ்ப்பாண வைபமாலை கூறுகிறது.
The Maravars are of the Mukkulathor warrior caste and the people of Veeramanickthevanthurai also trace their lineage as being Kshatriya.The Kailaya Malai and the Vaiya Padal, the earliest works on the colonization of Jaffna, appear to be such histories. But eleven of them have Kallar and Maravar caste titles. The Jaffna Maravar were able to resume their caste occupation under the Dutch, who met troop shortages through Jaffna’s feudal military system which the Portuguese had attempted to dismantle. The Dutch governor and director of Ceylon, Thomas van Rhee informed his successor Gerrit de Heere in 1697, that in the Jaffna peninsula "the Marruas are bound to serve the Company as Lascoryns (native soldiers) and pay t[w]o Fanams a year without anything more". But 93 years later, a Dutch census (1790) of all males between the ages 16-70 in Jaffna recorded that there were only 49 Maravar males in the peninsula, as against 1,570 Vellala males.
இன்னும் “1048ம் ஆண்டு நல்லூரை ஆண்ட கூழங்கைச் சிங்கை ஆரியனுக்கு மறவர்களே படைவீரர்களாக இருந்தனர். இவர்களும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டவர் களேயாவர் இவர்கள் மறவகுலச் சத்திரியராவர். போரில்லாக்காலங்களில் கமஞ்செய்வதே இவர்களின் பிரதான தொழில். இவர்களின் குலரப்பெயர்களை அடிப்படையாகக்கொண்டே மறவராட்சியென அழைக்கப்பட்டு, மராட்சியெனத்திரிந்து, பின் வடமராட்சி, தென்மராட்சியென வழங்கப்படுவதாயிற்று. இவர்கள் வழிபடும் தெய்வம் ஐயை அல்லது துர்க்கை. சண்டைக்குத் தலைமைபூண்ட இப்பெண்தெய்வத்தையே மறவர் மாத்திரமன்றி தமிழ் அரசர்களும் வணங்கி வந்தனர். இதன் காரணமாகவே நல்லூரரசன் வீரமாகாளியம்மை கோயிலைத் தன் இராசதானியில் கட்டுவித்து வணங்கி வந்தான். மறவர் குடியேறிய பாகங்களிலெல்லாம் துர்க்கை கோவில்கள் ஸ்தாபிதமாயின. பருத்தித் துறை சாமுண்டியம்மை, வல்வை முத்துமாரியம்மை, இடைக்காடு மாதகல், அராலி, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய இடங்களிலுள்ள அம்மன் கோயில்களெல்லாம் இந்நோக்கமாகவே உண்டாயின.”
மேலே கூறிய செய்தி 7-2-67ல் தினகரனில் வெளிவந்த கட்டுரைச் செய்தியாகும். இதனை இங்கு பிரசுரிக்கவேண்டிய பிரதான நோக்கம், கோயில்களைப் பற்றியல்ல மறவர் களின் குடியேற்றத்தைச் சுட்டிக்காட்டவேயாகும். the Karaiyar of Myliddy which states that three Marava chieftains who were brothers came with their caste-men from Tamilnadu, married among the karaiyar and founded the village. Its dominant clan, known as Thuraiyar – the others are known as Panivar – was connected by marriage to Ramnad, the home country of the Maravar, until recent times. The martial arts of Maravar were popular among the Thuraiyar of Myliddy, before their youth were introduced to modern methods of military training in the last decade [i.e., 1980s]. A narrative related to the founding of Valvettithurai, based on folk etymology states that the village arose on land given to a Marava chieftain, called Valliathevan, by the eponymous founder of the Tamil kingdom of Jaffna
இவ்வித ஏதுக்களைக்கொண்டு மறவர்கள் யாழ்ப்பாணத்தில் பலபாகங்களிலும் குடியேறியுள்ளது நிச்சயமென்பதை முடிவுகட்டலாம். இவர்கள் குடியேறிய ஒரு சிலஇடங்களில் தற்போது இக்குலத்தவர்கள் இல்லாவிடினும் இவர்களின் குலப்பெயர் களைக் கொண்ட கிரமங்களான மறவன்புலம், மறவன்காடு, மறவனோடை, மறவன்பிட்டி இன்றும் இருப்பதை நாம் அறியலாம்.
இவர்களின் குடியேற்றம் மாதோட்டத்திலுமுண்டு. மாதோட்டப் பகுதியில் மறவர்களின் நாமத்தோடு அநேகம் காணிகளும், கிராமங்களும் இருக்கின்றன. அடம்பனுக்கருகில் மறத்திகன்னாட்டி என்னும் ஓர் கிராமம் இருப்பதையும், அங்கு ஏராள மான மறவர்கள் இன்றும் நிலத்தரசர்களாயிருந்து வருவது இதற்கோர் எடுத்துக்காட்டாகும். பூநகரியிலும் இக்குலத்தவர்கள் சீவிக்கின்றார்கள்.
மறவர்கள் உயர்வான சத்திரியகுலத்தவர்களான படியால் மேன் குடிமக்கள் எவ்வித அச்ச ஆசவமின்றி சம்பந்தம் செய்ததினால் காலகதியில் இவர்களின் குலம் கருகிப் போயிருக்கலாமெனவும் யூகிக்க இடமுண்டு.
மாதோட்டத்திலும், யாழ்ப்பாணப் பகுதியிலும் மறவர்களின் நாமங்களைக் கொண்ட காணிகள், தோட்டங்கள், வயல்கள் விளங்குமாப்போன்று நெடுந்தீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, லைடன்தீவு முதலாந் தீவுகளிலும் பலபல இடங்கள் செறிந்து விளங்குவதினால் இங்கும் இவர்களின் குடியேற்றம் இருந்திருப்பது உண்மையேயாகும். அதிலும் விசேஷமாக நெடுந்தீவில் இவர்கள் நிச்சயம் குடிபுகுந்திருப்பதற்குப் பலபல காரணங்களுமுண்டு.
நெடுந்தீவு இந்தியாவுக்கு வெகு சமீபமாயிருப்பதாலும், அதிலும் பாண்டி நாட்டின் கிராமங்களான, இராமநாதபுரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், கோடிக்கரை, தனுஷ்கோடி, அக்காமடம், தங்கச்சிமடம், வல்லை முதலான கிராமங்கள் இருபது மைல் தூர வித்தியாசத்திலே அமைந்துள்ளதாலும், வல்வை ஓர் பிரசித்தம் வாய்ந்த கடற்றுறையாக விளங்கியதினாலும், வல்லையிலும் மேற்கூறிய கிராமங்களிலும் பெருந்தொகையான மறவர்கள் வாழ்ந்தமையாலும், மறவர்கள் வெகு இலகுவாக நெடுந்தீவில் வந்து தங்குவதற்கும், குடிபதியாய் வாழ்வதற்கும், வாய்ப்பிருக்கிறது. மேலே சுட்டிக்காட்டிய ஒரு சில சரித்திரக்குறிப்புக்களும், கட்டுரைகளும் நெடுந்தீவில் மறவர்கள் வாழ்ந்தனர் என்ற உண்மையையும் இந்தீவின் பண்டைக்காலப் பெருமையையும் தெளிவாக்கிறது.
But a strong tradition was prevalent among the Karaiyar of Valvettithurai that they had fought the Portuguese as the soldiers of the last king of Jaffna, Sankili. This tradition, as we shall see later, was greatly exploited by TULF propagandists to mobilise people in that part of Jaffna. The tradition seems to be related to the trade wars between the early colonial powers and the Maravar kings of Ramnad. The Portuguese, Dutch and the British tried to wrest control of the profitable rice and chank trade between Burma, Bengal and Ceylon which was in the hands of the Thevars (title of the Ramnad kings) and their Muslim and Tamil tradesmen, on either side of the Palk Strait, among whom were many Karaiyar schooner proprietors of Valvettithurai, Point Pedro and Thondamanaru. The British found that one Vaithianathan of Jaffna was among the few confidantes of the Thevar, who were looking after his chank trade in Calcutta. Karaiyar families carried on with the rice and chank trade in collaboration with Muslims, Chetties and military caste families on the south Indian coast from Ramnad to Tanjore, even after the British finally wrested control of it from the Maravar kings of Ramnad. A large number of Thandayals (traditional navigators – captains of ocean going craft) from Valvettithurai, Point Pedro were employed in the Thevar’s domain of sea trade. This became the basis of a vast ‘smuggling network’ between south India, Sri Lanka and southeast Asia, after independence in1948. The powerful Vandayar family (Maravar) of Tanjore maintained very close relations with a leading business house of Valvettithurai until 1983.
யாழ்பான சாதியரின் தொழில்களின் விவரம்:
தமிழ் நாட்டிலே தொழிலின் காரணமாகவே சாதிப்பிரிவுகளேற்பட்டதென்பது சகலரும் ஒரே வாய்ப்பட ஒப்புக்கொள்ளப்பட்டதொன்றாகும். பலபல தொழில்களைப் புரியும் சகல சாதியரும் நாட்டுக்குத் தேவைப்பட்டபடியால் எல்லாக் குலத்தவர்களும் ஈழநாட்டில் குடியேற்றப்பட்டனர். இன்னும் இராசபவனிக்கும், அரசாங்க சேவைக்கும் தேவைப்பட்ட சிவிகை காவுவோர், கோல் கொண்டொழுகுவோர், முரசடிப்போர், பறைசாற்றுவோர் முதலா னோர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
குடியேற்றப்பட்ட சாதியருள் ஒருசல சாதிமக்களுக்கு அரசாங்கம் சில பல ஒழுக்கங்களை வகுத்து, அதனைக் கட்டாயச் சட்டமுமாக்கி அதன் பயனாய் நாட்டுக்கு வருமானத்தையும் ஊழியத்தையும் தேடிக்கொண்டது. உதாரணமாக வேளாளர், செட்டிகள் முதலாம் சாதியருள் தாம் தாம் ஒழுதுண்டு வாழ்பவரைத் தவிர உழவர், பள்ளர் முதலாம் பண்ணையாட்களைக் கொண்டு கமஞ்செய்து உண்பவரெல்லாம் தமக்கு வேலைசெய்யும் அத்தனை வேலையாட்களையும் கொண்டு வருஷமொருமுறை பதினைந்து நாட்களுக்கு இராச ஊழியஞ்செய்ய அனுப்புதல் வேண்டும். விளைவில் ஆறிலொரு பங்கும் கொடுக்க வேண்டும். சிவியார் எனப்பட்டோர் அரசாங்க சிவிகையாட்களாகவும், சிவிகை முன் செல்லும் கூறியராகவும், அரன்மனை வாயிலாளராகவும், ஒவ்வொரு குழுவினராக மாதந் தோறும் முறைப்படி இராசசேவை செய்யவேண்டும். இத்தொண்டிற்காக அரசாங்கத்தால் நிலங்கள் அவர்களுக்கு உபகரிக்கப்பட்டன. ஆண்டிகளானோர் விடியற்காலம் ஐந்து மணிக்கு எழுந்து ஊர்கள் தோறும், கிராமங்கள் தோறும் சென்று சங்குகள் ஊதி மக்களைத் துயிலெழுப்ப வேண்டும். கோயில்களிலும் அரண்மனைகளிலும் செய்யும் சேவைகளை ஒழித்த மற்றக்காலங்களில் ஊர்தோறும் சென்று யாசகம் பண்ணுவதோடு மாரியம்மன் கோயில், பிடாரி கோயில்களுக்குப் பூசகராயும் வலைஞர் முதலிய சாதியாருக்கு குருக்கள் மாராகவும் பணியாற்றவேண்டும். முக்கியர், கரையார், பரவர், திமிலர் முதலானவர்களில் அரசாங்க கடற் சேவையிலிருப்பவரைத் தவிர, மற்றவர்கள் முத்துக்குளிப்புக் காலத்தில் வருடத்தில் பதினைந்து நாளைக்கு அரசாங்க கடமையாற்றக் கடமைப்பட்டவராவர். இவர்களுக்கு மீன் வரியில்லை. வலையர் அரசன் வேட்டைக்குச் செல்லும் போது உடன் செல்லவேண்டும். கடைஞர் சுண்ணம் நீற்றுக் கொடுத்தல் வேண்டும். கம்மாளர், கொல்லர், தச்சர் முதலான விஸ்வகர்ம குலத்தவர்கள் கிராம மக்களுக்கு தேவைப்பட்ட கலப்பை, கொழு, அரிவாள் முதலியவைகள் கூலியின்றிச் செய்து கொடுத்தும், வருடத்தில் எட்டு நாளைக்கு இராசகாரியமுஞ் செய்தல் வேண்டும். இவர்களுக்குக் கிராமங்கள் தோறும் வரியின்றி நிலங்கள் வழங்கப்பட்டன. ஈழத்திரும்பென நெடுங்காலம் பெயர்படைத்த இரும்பு யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட இரும்பேயாம். கன்னார், தட்டார், கற்சிற்பியர் இராச அரண்மனையிலும் கோயிலிலும் வருடத்தி;ல் பதினைந்து நாள் வேலைசெய்யுங் கடமைப்பட்டவராவர்.சிவியார் அரசாங்கத்துக்குச் சிவிகை ஆட்களாகவும், சிவிகை முன் செல்லுங் கூறியராகவும், அரன்மனை வாயில் காப்போராகவும், மாதங்கள் தோறும் முறைப்படி ஒவ்வொரு தொகையினராக மாறி மாறிக் கடமையாற்றல் வேண்டும். இவர்களுக்கு அரசாங்க நிலங்கள் மான்யமாய்விடப்பட்டன. உமணர் இரசாங்கத்துக்கு உப்பு அமைப்பவர்களாக இருந்தார்கள். ஆண்டிகள் விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து நகரங்கள், கிராமங்கள் தோறும் சென்று சங்கநாதஞ் செய்து மக்களைத் துயிலெழுப்பவேண்டும். கோயில்களிலும் அரண்மனைகளிலுமுள்ள முறைக்காலங்களைத்தவிர ஏனைய நாட்களில் ஊர்தோறுஞ் சென்று யாகஞ்செய்து பிழைக்க வேண்டும். முக்கியர், கரையார், பரவர், திமிலர் முதலானோர் முத்துக்குளிப்புக் காலங்களில் வருஷத்தில் பதினைந்து நாளைக்கு இராச ஊழியஞ் செய்யக் கடமைப்பட்ட வராவர். இவர்களுக்கு மீன் வரியில்லை. கொல்லர், தச்சர் முதலானோர் கிராமத்தாருக்கு வேண்டும் கல்பை, கொழு, அரிவாள் முதலியபயிர்த் தொழில் கருவிகளைக் கூலியின்றிச் செய்து கொடுக்கவேண்டும். வருஷத்தில் எட்டு நாளைக்கு இராச கருமமுஞ் செய்தல் வேண்டும். அரசாங்க நிலங்கள் மான்யமாய் விடப்பட்டன. நிலங்களுக்கு வரிகளும் நீக்கப்பட்டன. கைக்கோளர், சேணியர்களுக்குயாதொரு கட்டுப்பாடுமி;ல்லை. கன்னார், தட்டார், கற்சிப்பியர் முதலானோர்! இராச அரண்மனையிலும், கோயில்களிலும் வருஷத்தில் பதினைந்து நாட்கள் வேலை செய்யக் கடமைப்பட்டவராவர். வண்ணார் முறைமுறையாக அரசன் சென்று தங்குமிடங்களுக்கு வெள்ளை கட்டுங்கடனுடையார். பறையர் யுத்தகாலங்களில் முற்பறை கொட்டுங் கடனுடையர். இவ்வண்ணம் ஒவ்வொரு சாதியாரும் வருஷந்தோறும் சில சில தினங்களுக்கு இராசகாரியங்கள் செய்து வந்தனர். இவ்வழக்கம் பரங்கியர், ஒல்லாந்தர் காலங்களிலும் நீடித்து இருந்து பின் ஆங்கிலேயர் காலத்தில் 1810ம் வருடம் இவைகள் நீக்கப்பட்டன.
மறவரின் - யாழ்ப்பாண அரசாங்கத்தின் அலுவள்கள்:
மேலே கூறப்பட்ட சாதியரைப் போலவே மறவரும் பதினாறு முதல் இருபத்துநான்கு வயது வரையும் போர்ப்பயிற்சி கற்றுப் பின்பு கிராமக் காவலராகி படைத்தொழிலுக்கு வேண்டிய காலத்தில் தொண்டாற்றவும் கடமைப்பட்ட வராயினர். மற்றவர்கள் பதினாறு வயது முதல் இருபத்துநான்கு வயதுவரை யுத்தப்பயி ற்சிபயின்று கிராமக் காவலராக கடமையாற்றி, போர்ப்பறை முழங்கும்போது படையில் சேர்ந்தும் சேவைசெய்ய வேண்டும். இவர்களுக்கு அரசாங்க நிலங்கள் மான்யமாக வழங்கப்பட்டன. யுத்தமில்லாக் காலங்களில் கிராமக்காவல் செய்து வாழுதல் வேண்டும்.
இவர்களைப் போலவே அரசனையும் நாட்டையுங், காப்பதற்கும், பயமின்றி வாழ்வதற்கும், பகைவரை அழித்தொழிப்பதற்கும் தம் சொந்தக் குலத் தொழிலாய்க் கொண்ட மறவர்களையும் தம் நாற்படைகளிலும் பணிபுரிவதற்கும் வரவழைத்து அமர்;;த்திக் கொண்டனர்.
குடியேற்றப்பட்ட சாதியார்கள் அனைவரும் வேளாண் முதலிமார்களின் துணைகொண்டே, தருவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் மறவர்கள் படைவீரர்களா கவும் மன்னர்களின் மெய்க்காப்பாளர்களாகவும் இலங்கைக்கு வந்தார்களேயொழிய ஏனைய சாதியர்களைப் போல் வேளாண் பிரபுக்களால் குடியேற்றப்பட்டார்களென நம்ப இடமில்லை. இவ்விதிகளுக்கமையவே பண்டைக் காலத்தில் சகலசாதியரும் வருடத்தில் சில நாட்களுக்கு இராசபணிகள் செய்து வந்தனர். இவ்வழக்கம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலம் வரைக்கும் நீடித்திருந்து பின்பு 1810ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. (யாழ்ப்பாணச் சரித்திரம் ஆ. மு. பி.)
கைலாயமாலைப் பாடலிலும் யாழ்ப்பாண வைபவமாலையிலும் கூறப்பட்ட தனிநாயகமுதலியும் அவன் பரிவாரங்களும் நெடுந்தீவில் குடியேறுவதற்கு முன்னும், முஸ்லிம்கள் சங்கு குளிப்பதற்கு இங்கு வந்து தங்குவதற்கு முன்னும், படைவீரர்களே ஆதியில் நெடுந்தீவில் குடியேறினர் என்பதில் யாதொரு சந்தேகமுமில்லை.
நெடுந்தீவின் பூர்வகுடியினர் மறவரே
இவர்கள் தமிழ் நாடான பாண்டி நாட்டிலிருந்தே வந்தவர்களாவர். பாண்டிநாட்டில் போர்வீரர்கள் யாவரும் மறவர் குலத்தார் என்பது சங்க இலக்கியங்களாலும் மற்றும் இந்தியநாட்டுச் சரித்திரங்களாலும் சந்தேகமறத்தெளிந்த உண்மையாகும். இவ்வுண்மையின் படியும், முன் அத்தியாயங்களில் கூறிய சரித்திர ஆதாரங்களின் படியும் நெடுந்தீவின் பூர்வ குடிகள் மறவரே மறவரென்பது யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய தொன்றாகும். நெடுந்தீவில் இவர்கள் குடியேறிய காலத்தில் தாம் இந்தியாவில் வசித்த கிராமத்தின் பெயரான வல்லையை இங்குஞ் சூட்டியுள்ளார்கள். தற்போது வல்லையெனப்பட்ட பெயரால் வெல்லையாக மாறப்பட்டு வந்துள்ளது. யுத்தத்தில் பணிபுரியாத மறவர்கள் வெல்லையில் குடியேறியிருக்கலாம். போர்வீரர்கள் மாத்திரம் துறைமுகத்துக் கருகாமையில் பாடி அமைத்து வாழ்ந்து பின்பு குடும்பமாய் வாழ்வதற்கும் இவ்விடத்தையே வளமாக்கிக் கொண்டிருக்கலாம். காலகதியில் தமிழ் மன்னர்களின் செல்வாக்கும், யுத்தங்களும் குறைந்து குறைந்து போக, யுத்தத் தொழிலையே நம்பியிருந்த மறவர்கள் தம் சீவனத்திற்காக வௌ;வேறு தொழில்களைப் புரியவுந் தலைப்பட்டனர். வெல்லையில் குடியிருந்தோரும் மெல்ல மெல்லத் துறைமுகத்தை நாடிவரலாயினர். துறைமுகத்தில் போர் வீரராகக் கடமையாற்றியோரும், வெல்லையிலிருந்து மெல்ல மெல்ல வந்தோருமான இக்குலத்தவர்கள் தம் தாயகமான இந்தியாவை நாடாமல், நெடுந்தீவு நடுக்குறிஞ்சியையே தம் சொந்த நடாக்கிக் கொண்டு வாழலானார்கள். இவர்களின் குலப்பெயர்களைக் கொண்ட மறவன்புலம் என்னும் ஒரு பரந்த வெளியும், மறவனோடையும் நெடுந்தீவிலிருப்பது கண்கூடு.
மறவரின் பெயர்கொண்ட காணிகளும் குறிச்சிகளும்
இருபெரும் பகுதிகள். ஒன்று வடமராட்சி (வட + மறவர் + ஆட்சி) மற்றது தென்மராட்சி (தென் + மறவர் + ஆட்சி) இன்னும் மறவன்புலம் (சாவகச்சேரியிலுள்ளது) மறத்திகன்னாட்டி (அடம்பனுக்கும் நெடுங்கண்டலுக்கு மிடையிலிருக்கிறது) தற்போதும் மறவர்கள் இங்கு பெருந்தொகையாக வாழ்கிறார்கள். இன்னும் மறவன்பிட்டி, மறவன்திடல். மறவன்காடு, மறவன் ஓடை முதலாம் பெயர் கொண்ட இடங்களெல்லாம் இவர்களின் பூர்வதலங்களாம். நெடுந்தீவு, புங்குடுதீவு முதலிய தீவுகளிலும் மேற்கூறிய நாமங்கள் கொண்ட காணிகளும் குறிச்சிகளும் இருக்கின்றன. வேலணையில் பழைய பஸ்நிலையத்திற் கருகாமையிலிருக்கும் ஒருகாணியின் பெயர் வலதேவன் சீமாவென்று அழைக்கப்படுகிறது. இது மாத்திரமல்ல தமிழ்மன்னர்காலத்தில் மறவர்களுக்குக் காணிகள் குறிச்சிகள் கொடுத்தவிதமும் ஒரு நூதனமுறையாகும். அது எப்படியெனில். காணிகளோ, குறிச்சிகளோ விரும்புகின்ற மறவனைத் தமிழ் மன்னன் அழைத்து, மூச்சுப்பிடிக்கும்வரைக்கும் நீளத்துக்கும் அகலத்துக்கும் ஓடச்சொல்லி, ஓடுமட்டும் ஒடி எங்கே களைத்து நிற்கிறானோ அங்கிருந்து ஒடியதூரம் வரைக்கும் உள்ளநிலத்தைச் சதுரப்பட அளந்து மான்யமாகக் கொடுக்கப்பட்டதாம். கொடுக்கப்பட்ட குறிச்சிகளுக்கு அந்தந்த மறவர்களின் நாமமே வழங்கப்பட்டதாம். இவ்வண்ணம் மறவர்களுக்கு மான்மமாக வழங்கப்பட்ட குறிச்சிகள் பருத்தித்துறை சிவன்கோயிலுக்கருகாமையிலுள்ள சிங்கபாகுதேவன் குறிச்சி, வதிரியிலே வதிரிபாகுதேவன் குறிச்சி, உடு;ப்பிட்டிப்பகுதிகளிலே சமரபாகு தேவன்குறிச்சி, செயக்கொடி பாகுதேவன் குறிச்சி, குறுளிபாகுதேவன் குறிச்சி முதலியன இன்றைக்கும் உறுதிச்சாசனங்களில் எழுதப்பட்டு வருகின்றன. அன்றியும் மறவருள்ளே தலைசிறந்த அதிகாரிகளாக விளங்கிய வீரமாணிக்கத் தேவனும், நராங்குபாகுதேவனும் பலாலியிலும், நரசிங்க தேவனும், சி;ன்னநாட்டான் தேவனும் மயிலிட்டியிலும் சிற்றரசர்களைப் போன்றவலிமையோடு வாழ்ந்தார்கள்
மறவரின் பட்டங்களும் விருது பெயர்களூம்
இவர்களுக்கு வழங்கியுள்ள பழங்கால நாமங்களைக் கொண்டும் ருசுப்படுத்தலாம். வல்லைத் தேவன், வலங்கை மறான், புலிமாறன், விலங்குத் தேவன், கோரமாறன், கொம்புத்தேவன், நீலமாறன் முதலாம் பெயர்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. தேவன் மாறன் என்ற நாமங்கள் மறவருக்கு உரித்தான பெயர்களாகும். இன்னும் இவர்கள் கத்தோலிக்கரான பின் ஞானஸ்நானப் பெயரோடும் இவர்களின் குலப்பெயர்கள் இணைக்கப்பட்டிருப்பதை ஞானஸ்நானப் பதிவு நூலில் பரக்கக் காணலாம். விலங்குப் பாவுலு (இவர் விலங்குத் தேவன் சந்ததி) கொம்பன் அந்தோனி (இவர் கொம்புத் தேவன் சந்ததி) நீலன் குருசான் (இவர் நீலமாறன் சந்ததி) இவ்வண்ணம் எத்தனையோ பெயர்களுண்டு. இன்னும் இக் குலத்தவர்கள் வணங்கிய சூலியம்மாள் என்னும் தேவதையின் பெயரைக் கொண்டும் ஒரு பெண்மணிக்கு சூலாயி ஆனாள் என்ற பெயரும் ஞானஸ்நான டாப்பில் இருப்பதையும் அறியலாம்.
இன்னும் இக்குலத்தவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து விட்டால் அதிலும் ஆண் குழவி வந்தால் பிள்ளை பிறந்த முப்பத்தொராம் நாளை வெகு சிறப்பொடு கொண்டாடுவார்கள். உற்றார் உறவோர் நண்பர் முதலானோருக்குத் திருமுகம் போக்கி யாவரும் வரவழைக்கப்பட்டு அக் கொண்டாட்டம் நடைபெறும். இவ் வைபவத்தின் போது நடுவீட்டில் இதற்கென சாணத்தால் மெழுகிடப்பட்ட இடத்தில் மஞ்சள் மாவினால் ஒருசிங்க உருவம் கீறுப்பட்டிருக்கும். அதன்மேல் வயதுமுதிர்ந்த மூதாட்டி ஒருத்தி பிறந்த சிசுவை மடியில் வைத்துக்கொண்டு ஒரு பாடல் படிப்பாள். அப்பாட்டில் குறிப்பிடும் சாமான்களெல்லாம் பிள்ளைக்கு அன்பளிப்பாக இனசனங்கள் கொண்டுவந்து வைப்பார்கள். இவ்வுண்மையின் படியும், முன் அத்தியாயங்களில் கூறிய சரித்திர ஆதாரங்களின் படியும் நெடுந்தீவின் பூர்வ குடிகள் மறவரே மறவரென்பது யாவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய தொன்றாகும்.மேலே சுட்டிக்காட்டிய ஒரு சில சரித்திரக்குறிப்புக்களும், கட்டுரைகளும் நெடுந்தீவில் மறவர்கள் வாழ்ந்தனர் என்ற உண்மையையும் இந்தீவின் பண்டைக்காலப் பெருமையையும் தெளிவாக்கிறது.
செய்தி விபரம்: Part 4: Militarism and Caste in Jaffna
by D.P. Sivaram
[courtesy: Lanka Guardian, July 1, 1992, pp.9-10 and 14; prepared by Sachi Sri Kantha, for the electronic record]
THE SRILANAKAN READER-JOHN CLIFFORD HOLD
1. தேர்த் திருப்பணிச் சபை மலர்(1957)- முதலியார் குல.சபாநாதன்
2. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்(1928)- நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்
3. நயினாதீவு நாகம்மாள்(2003)- நாகேசு சிவராச சிங்கம்
4. குடமுழுக்குவிழா மலர்(2005)- கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில்
5. யாழ்ப்பாண சரித்திரம்(1933)- முதலியார் செ.இராசநாயகம்
6. Sketches of Ceylon History (1906)- Sir Pon Arunachalam
7. Ancient Jaffna (1926)- Mudaliyar C. Rasanayagam
8. ஈழநாடு, யாழ்ப்பாணம் - 05.03.1986 அன்று வெளியான இதழ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.