Thursday, April 13, 2017

தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம்

(சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு)

பொன் விழையும் தஞ்சை சீமை அதில் புகழ் விளங்கிய வரலாறுகள் பல உள. அதில் உண்டான பேரரசுகளும் சிற்றரசுகளும் காவிரித் தமிழன்னைக்கு அழகு சேர்த்த செல்வங்களாக உள்ளன. அதில் சோழப் பேரரசர்களின் புகழ் வீழ்ந்த பின் பல அந்நியர்களின் கையில் வீழ்ந்த தஞ்சை மன்னில் தமிழ் வளர்த்த தொல்குடி சிற்றரசர்களின் புகழ்கள் காலத்தில் மறந்திரா வண்ணம் அறந்தாங்கிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் உள்ள கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடி போன்ற பகுதிகளில் தமிழ் வளர்த்து பேராண்மையுடன் வாழ்ந்த தமிழ் சிற்றரசர்களான வழுவாட்டி தேவர்களின் சரித்தரத்தை பார்ப்போம். இந்நூல் அந்த வழுவாத தேவர்கள் சரித்திரத்தை அவர்களின் சந்ததியினர் வெளியிட்ட நூலின் மூலத்துடன் அவர்களின் ஒப்புதலாலும் ஊக்குவித்தலால் இக்கட்டுரையை சமர்பிக்கிரோம்.

தாணான்மை நாடும் வழுவாத தேவர்களும்:

தாணான்மை என்ற சொல்லிலே எவருக்கும் அடிபணியா "தாளான்மை" என்ற சிறப்புடன் தன்னகத்தே கொண்ட தன்னரசு நாடு என்பது விளங்கும். எனவே இச்சிற்றரசர்கள் சுயகவுரத்திற்கும் வீரத்திற்கும் பேர் போன வீர மக்களாகும். அதனாலே தங்கள் நாட்டுக்கு தாணான்மை நாடு என பெயர் வைத்துள்ளனர்.இதற்க்கு குலமங்கலம்,கீரமங்கலம்,நகரம்,சேந்தன்குடி இன்னும் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தாணான்மை நாட்டுக்கு "சேந்தங்குடி" தலைநகரமாகும். இன்று அது சிற்றூராகினும் முன்னாளில் அது சிறப்புர விளங்கியுள்ளது. இதனாலே நகரம் என்னும் சிற்றூரும் அருகே உள்ளது.


வழுவாடி தேவர்கள்:

இந்த சிற்றரசர்களின் பட்டம் வழுவாட்டி தேவர்கள். வழுவாடி என்னும் பெயர் பாண்டிய மண்ணன் வழுதி என்னும் பெயருடனும் மற்றும் வீரத்தை குறிக்கும் பெயராக இருப்பினும். இவர்களின் முழுப்பட்டமான "வணங்காமுடி வழுவாட்டி தேவர்" என்னும் பெயரிலே அதற்க்கு விளக்கம் உள்ளது. அதாவது "வணங்காத முடி புணைந்து தன் தரித்த முடியை எக்காலகட்டத்திலும் வழுவாத பண்பை கொண்டவர்கள்". எனவே நீதி,செங்கோல் இவைகள் தன்னை விட்டு வழுவாமல் ஆட்சிபுரிந்தவர்கள் ஆதலில் இவர்கள் "வணங்காமுடி வழுவாத தேவர்கள்" என்ற பெயரே காலபோக்கில் "வணங்காமுடி வழுவாட்டி தேவர்கள்" என்ற பெயரானது.அத்தகை வீர மைந்தர்களின் பூர்வ வரலாறை பார்ப்போமாக.


பூர்வீகம்:

இவர்களின் வரலாறு சில ஒலை சுவடிகள் மூலமாகவும் செவி வழிகதைகளினாலும் மேலும் 1951-ல் புள்ளான்விடுதி மதுரகவி நடேசகோனார் அவர்கள் எழுதிய "விஜயாந்தகளிப்பு" என்ற நூலையும், சேந்தங்குடி செந்தமிழ் புலவர் து.அ.சுப்புராம் அவர்களால் எழுதப்பெற்று 1983-இல் வெளிவந்த "சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு" என்ற நூலையும் இன்னும் சிலரின் வரலாற்று  குறிப்புகளையும் ஆய்வு செய்து இன்நூலை எழுதியுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.


இவர்கள் பாண்டிய நாட்டை பூர்வீகமாக கொண்ட குடிமக்களாகும். அவர்கள் தொடக்கத்தில் மதுரைப்பக்கத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்தவர்கள். அவர்கள் அவ்வாறு வந்தவர்கள் என்பதை பாளையத்தாரோடு நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்த ஒரு குறிப்பில்

"ஆதியில் வீரத்தேவன்,ஆவாத்தேவன்,
ஆண்டித்தேவன்,கூத்தா தேவன், என்ற நான்கு
சகோதரர்கள் மதுரைக்கு மேற்கே உள்ள சிவகிரி வடமலையிலிருந்து பலவான்
குடிக்கு கீழ்புறமாய் உள்ள வன்னியன்
சூரைக்குடி" யிலும் கோனாப்பட்டுக்கு சமீபமாய்
உள்ள குருந்தம்பாரையிலும்
வந்து சிற்சில காலம் தங்கி கடைசியாக
இந்த குளமங்கலம் வந்து குடியேறினர்"
என்று அரண்மனை வழுவாட்டி வாசகத்திலிருந்து
படித்து இருக்கிரேன், ஆவாத்தேவன் வழி வந்தோர் என் மூதாதையர்"
என்றும் எழுதியுள்ளார்" -- புலவர் :தா.ச. இராமசாமி.


அந்த நால்வரும் ,குருந்தன்பாறையில் தங்கி இருந்த போது அங்கிருந்து இடம்பெயர்ந்த காரணத்திற்கு பல சமூகத்திலும் புழங்கும் "மகட்கொடை மறுப்பு கதையை" கூறுகின்றனர். "மகட்கொடை மறுப்பு கதை" ஒரு பகுதியிலிருந்து இன்னோரு பகுதிக்கு செல்லும் மக்கள் நாங்கள் பஞ்சம் பிழைக்க வந்தோம் என கூறுவது மரியாதை தராது என்பதற்காக "மன்னன் பெண் கேட்டு அதை ம்றுத்து" வந்தோம் என கூறுவது அவர்கள் கவுரவத்தை  உயர்வாக எண்ண தோன்றும் ஆதலில் அந்த வழக்கத்தை தொன்று தொட்டு பல்வேறு சமூகமும் கூறும் காரண கதையாகும்.

இப்படி வந்தவர்கள் தங்கிய இடம் "அரசர்குளம்" .அங்கு அரன்மனையில் தஞ்சம் அடைந்தனர். இவர்களின் வீர வரலாற்றை கேட்ட அரசர்குளம் அரசன். அவர்களுக்கு அடைக்கலம் தந்து அரண்மனையில் பாதுகாவலராக பணியில் அமர்த்தினான்.


இப்படி வந்த வீரத்தேவன் என்பவரும் அவரின் மனைவியும் கர்ப்பவதியான பொன்ன்மாள் அரசர்குளத்தில் தங்கி ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தாள் அக்குழந்தைக்கு "விஜயன்" என பெயர் வைத்தனர். உரிய  பிராயத்தில் விஜயன் வளர்ந்து கல்வி,போர் பயிற்ச்சிகளில் சிறந்தவனாக வளர்ந்து அவ்வரண்மனையில் படைதளபதியானான்.

செவி வழி கதையை ஆராய்ந்து நிஜவரலாறை சிந்திப்போம்:

மேலே சொன்னது செவி வழிக்கதையாய் இருப்பினும் அதில் சில உண்மைகளும் இருக்கிறது. இதில் சொன்ன "அரசர்குளம்" என்பது இன்றைய பாலையவநத்தம் ஜமீன். அதன் அரசன் வணங்காமுடி பண்டாற தொண்டைமான். அதைபோல் சேந்தங்குடி ஜமீன் மூதாதையர்கள் பாண்டிய நாடு சிவகிரி,வடமலை பகுதிகளில் இருந்த பாண்டிய நாட்டு மறவர் குலத்தோர்கள். இவர்கள் பாண்டிய சேனையில் தளபதிகளாகவும் சிற்றரசர்களாகவும் திகழ்ந்துள்ளனர். பிற்கால பாண்டிய பேரரசர்களின் ஆட்சி டில்லி சுல்தாண்களால் சிதைந்த பின் குருந்தன்பிறை சூரைக்குடியிலிருந்து கிளம்பி சென்றுள்ளனர். சூரைக்குடி பகுதியை ஆண்டவன் விஜயாலயதேவன் என்பது அதைப்போல் சேந்தங்குடி ஜமீந்தார்களின் பெயர்கள் விஜயதேவர்கள் என்பது ஒற்றுமை ஆய்வுக்குரியது. இதைப்போல் சூரைக்குடி அரசர்களுக்கு தொண்டைமான் என பெயர் இருப்பது போல அறந்தாங்கி தொண்டைமான் அவர்களின் வழித்தோன்றல்கள் பிற்காலத்தில் பாலவநத்தம் பகுதிக்கு குடியேறியதாக நம்ப படுகிறது. பாலவனத்தம் ஜமீனும் சேந்தங்குடி ஜமீனும் சம்பந்திமார்கள். இருவருக்கும் இடையில் 500 வருடமாக திருமண சம்பந்தங்கள் உள்ளது. என்வே அறந்தாங்கி தொண்டைமானும் சூரைக்குடி விஜ்யாலயத்தேவன் சந்நிதியும் பாலவனத்தம்,சேந்தங்குடி அரசர்களின் மூதாதயர்களாக கருதலாம்.















எனவே அரசர்குளம் என்பது பாலவநத்தம் ஜமீன். அரசன் ஒருமுறை வேட்டை ஆடுவதற்காக பாலைவனம் சுனையக்காட்டு பகுதிக்கு சென்றிருந்தார் அப்போது பட்டுக்கோட்டைப் பகுதியயை ஆண்ட பட்டு மழவராயன் வீராச்சாமி மழவராயன் ஆவுடையார் கோவில் தேர்த்திருவிழா காண சென்றபோது அரசன் வேட்டைக்கு சென்றுள்ளான் என்பதை அறிந்து கெட்ட எண்ணங்கலைக் கொண்டு அரசர்குளம் அரண்மனையை பிடிக்க முயன்றான். அப்போது விஜயனும் அரசர்மகனும் எதிர்த்து போரிட்டு விரட்டினார்கள்.

"
"ஆங்கரசர் வேட்டைக்கு போன பின்னர்
அம்புக்கோவில் முதலாய் அரசு செய்வோன்
பாங்கான கள்ளர் குல மழ்வராயன்
பண்டு பட்டுக்கோட்டை தனில் அரசு செய்தோன்
நதீங்காக மாதர்கள் மானபங்கம்
செய்ததனால்....
அவன் பெயர் வீராச்சாமி மழவராயன்

அவன் மறுத்து கொடுமை கூறி
கூளிபோல் பொங்கியவன் சிறைபிடிப்பேன் குலமாதர்
தம்மை கொதித்தான் மன்னோ"


அரசர்க்குளம் அரசர் வீட்டில் இல்லை என்றாலும் பட்டுக்கோட்டை பட்டு மழவராயன் வீராச்சாமி அரசர்குளம் அரண்மனை அரசியையும் மற்றவர்கலையும் சிறைப் பிடிக்க முயன்றபோது விசயனும் இளவரசனும் பட்டு மழவராயன் படை மீது பாய்ந்து போர் தொடுத்தார்கள்

"வாள் விசயன் மெய்மறந்தான் சிறைபிடிப்பேன்
மாதர்கள் தம்மை யென்ர வார்த்தையாலே

தலை விசயம் கொண்டான் விஜயத்தேவன்
நண்ணார் மேல் பாய்ந்திடான் புலியே போல்
கேட்ட கேட்ட மக்களெல்லாம் ஓடிவந்தார்
கிடைத்தாரை சாடினர் மறவர் மக்கள்
ஓட்ட ஓட்டமாய் ஓடும் மழ்வராயர் உயிர்பிழைக்க!"

-அ.சுப்புராம செல்வமுத்துதுரைத்தேவர்

மாவீரன் விஜயத்தேவனை  பற்றி புள்ளான் விடுதி நடேசகோனார் அவர்கள் 1951 எழுதிவெளிவந்த சேந்தங்குடி ஜெமீன் விஜயானந்தக்களிப்பு நூலில் விஜயன் பட்டுக்கோட்டை பட்டு மழவராயனுடன் போரிட்ட வரலாறை விமர்சியாக பாடியுள்ளார்.


"அன்பே பைந்தங்கமே விஜயா -ஆர்க்கும்
அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள் வெற்றி விஜயா"

"வாகொத்த பனங்குளம் கிராமம் மறவர் வந்து
குடியான குளமங்கலம் கிராமம்
கொற்றமங்கலம் கிராமம்
கீரமங்கலம் க்ராமம்
நகரம் சேந்தங்குடி கிராமம்
மாட்சிமை துலங்க வர ஆட்சி செய்யுமாறு
மகுடம் சூட்டி அரசர் ஜமீன் தர"


அரசர்குளம் ஆட்சிபகுதிகளில் அமைந்திருந்த அம்புலி ஆற்றிருக்கும் வில்லுனி ஆற்றுக்கும் இடைப்பட்ட சேந்தங்குடி,குளமங்கலம்,கொத்தமங்கலம்,கீரமங்கலம்,நகரம், பகுதிகலை உள்ளடக்கிய சேந்தங்குடி கிராமத்தை தலைமையிடமாக கொண்டு சேந்தங்குடிப்பாளையம் உருவாக்கி கி.பி.1486(கொல்லம் ஆண்டு 661) மாவீரன் விஜயத்தேவனை சேந்தங்குடி பாலையக்காரணக முடி சூட்டினார்கள். அதுமுதல் பதினைந்து பாளையக்காரர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளார்கள்.


சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஆட்சி தொடரும்போது அறந்தாங்கி தொண்டைமாண்கள் ஆண்டுவந்துள்ளனர். அம்புகோவில் பட்டுகோட்டை பகுதியில் பட்டு மழ்வராயர்கள் என்ற கள்ளர் குலத்தவர்கள் ஆண்டு வந்துள்ளனர். எனவே சிதம்பரம்,சீர்காழி சென்ற் ஆவாத்தேவன் கூத்தாடித்தேவன் குத்தாலம் சென்ற சிரம்பிராண்டி இவர்கள் அனைவரும் சேந்தங்குடி திரும்பி வந்தனர். இவர்கள் விஜயனின் சிற்றப்பன்மார்கள்.


மேற்கண்ட மூவரும் முதலில் குளமங்கலம் வந்து தங்கி இருந்தபோது இவர்கள் மறவர் இனத்து  தேவர் மரபினர்களாக இருந்ததால் இப்பகுதியில் கள்ளர்கள் குலபெண் எடுப்பதற்காக மாவீரன் விஜயத்தேவன் பெண் தேடி ஆலங்காடு சூரன்விடுதி,கீழாத்தூர்,தொண்டைமான் குலப்பெண்களை திருமணம் செய்து வைத்தார்கள்.


"திரை புகழும் விஜயன் வழுவாட்டித் தேவன் சிற்றப்பா மூவர் ஆவர் மேவிய ஆவாத்தேவன்"....

"முறையே ஆலங்காட்டு முத்து தொண்டைமான் அருந்தவப் புதல்வி மீனம்பாளையும் கீழாத்தூர் அருனாசல்த் தொண்டைமான் கொழுந்தான புதல்வி குலக்கொடி சூரன்விடுதி அருணாசலத் தொண்டைமான் புதல்வி பார்வதியும் திருமனம் செய்து வைத்தனர்".

பாளையக்காரன் மாவீரன் விஜயத்தேவன் மறவர் இனத்தேவனுக்கு பனங்குளம் பட்டுக்கோட்டை
 பூச்சு நாயக்கர் குல பெண்ணையும் இந்திர குள கள்ளர் மழவராயர் பெண்னையும் திருமனம் செய்து வைத்தார்கள்.

மாவீரன் விஜய்த்தேவன் மேற்கண்ட பனங்குளம் பெண்களைத் திருமனம் செய்து கொண்டு நாயக்கர் குலப்பெண் வேலரசுத்தேவன் என்ர மகனையும், மழவராயர் மகள் ரெகுநாதன் என்ற மகனையும் பெற்றனர். இதில் விஜ்யத் தேவன் 1526-ம் ஆண்டு இயற்கை எய்தினான். இதில் ரெகுநாத தேவன் சேந்தங்குடி பாளயக்காரனாக மூடிசூட்டப்ப பட்டாண்.

விஜய் ரெகுநாத தேவன் கி.பி.1526 ல் சேந்தங்குடி பாளையக்காரணானார். விஜய நகர பேரரசின் கீழ் தமிழ்நாடு இனைந்து இருந்த் விஜயநகர நாயக்கர் அரசின் மேலாண்மையை ஏற்று சேந்தங்குடியை ஆண்டு வந்தனர்.



சேந்தங்குடி ஜமீன் கி.பி.1553ல் ஆறுமுகத்தேவன் ஆட்சிக்கு வந்தார்
இவரின் பங்காளிகள் அவர்கள் முறையே
1.மொத்தி வீட்டார்
2.தோப்பு  வீட்டார்
3.செம்பன் வீட்டார்
4.பொட்டிரான் கொல்லையார்
5.உப்புக்கார வீட்டார்
6.காங்கேயன் வீட்டார்

இவர்கள் நகரம்,குளமங்கலம்,வலப்பிரமங்காடு,சித்துகாடு பகுதியில் வாழ்கிறார்கள்.


கி.பி.1553-86ல் முருகப்பதேவர் ஆட்சிக்கு வந்தார் இக்காலத்தில் மதுரை பகுதியில் குருந்தம்பாறையில் இருந்து 3-குடும்பங்கள் வந்தன இவர்களோடு பல தொழிலாளிகளையும் தச்சர்கள்,வண்ணார்கள் முதலிய பலரையும் அழைத்து வந்தனர்,

இவர்கள் வகையில் சின்னுத்தேவன் மக்களாகிய சவுக்குபுஞ்சை வகையிரா,ஏழுவீட்டார் வகையறா,நம்பன் புஞ்சை என்ற பிரிவுகளில் வாழ்ந்து வந்தனர்,

இக்காலக்கட்டத்தில் சேந்தங்குடி பாளையத்தில் கீரமங்கலம் சிவன் கோவில்,பனங்குளம் பெருமாள் கோவில் தேர் திருவிழாக்கள் நடைபெற்று வந்துள்ளதாக ஜமீன் தலைமையில் நடந்தது என தெரிகின்றது.


கி.பி.1586 இல் முள்ளிபுஞ்சை மன்னகுட்டி வாரிசுகளாக சேந்தங்குடியில் பட்டமெய்தினர்.


சேதுபதி மன்னர்களும் சேந்தகுடி பாளையக்காரர்கள் பற்றிய குறிப்புகள்:

இராமநாதபுரம் சேதுபதி மன்னன்,சேந்தங்குடி பாளையக்காரனிடம் வரி வசூலிக்க முகமதிய தூதுவனை சந்தங்குடிக்கு அனுப்பினான்.ஆண்டு தோறும் ஐந்நூறு  பொன் திறை என்றே வேண்டி யாங்கு செலுத்திவர மேலிரண்டு வருடங்கள் பூண்ட கப்பம் செலுத்தாமல் போகச் சேது மன்னன் தூண்டுத் தூதுவன் ஏவிச் செல்லும் கப்பம் கொணர்கள் என்றார்கள்.

வந்த தூதுவன் பலாப்பலம் சாப்பிட ஆசைப்பட்டான்

பலாப்பலம் சாப்பிட்ட தூதுவன் மீசையில் பிசிர் ஒட்டிக் கொண்டது . அதற்க்கு சாம்பலை தேய்த்தால் அது நீங்கிவிடும் என கூறி சாம்பலை தடவ பிசிர் போகாத நிலையில் வேறு வழியில்லாமல் தூதுவனின் மீசையும் கிருதாவையும் வெட்டி அனுப்பினர். ஊரே கேலி செய்தது தூதுவன் நிலை கண்டு. தன் தூதுவன் அடைந்த அவமானம் கண்டு சேதுபதி படையெடுத்து வந்து சேந்தங்குடி பாளையக் கிராமங்களை தீயிட்டு கொழுத்தினர்.

இதன் பின் சேதுவின் படைகளை முறியடிக்க சேந்தங்குடி மறவர் படைகளை தயார் செய்து விஜயத்தேவர் போரிட்டார். இதன் பின் சேதுபதியும் வழுவாடியும் சமாதனம் பேசப்பட்டு இருவரும் நன்பராணார்கள்

"தோழர் பலரும் தொடர்ந்து பின் வர
ஆழி சூழ் சேதுவின் அணிநரரெய்திக்
கோபதி விஜய ரகுனாத சேதுபதி புகுந்து
வணங்கி..

..மன்னவன் வழுவாட்டிக்கு அவரின் வீரத்தை பாராட்டினார், இது போக சேதுபதி மன்னரிடம் பேய்குதிரையும் அடக்கி ஆத்திக்கோட்டை ஆயிரம் வேலியும் முன்பாலை கிராமத்தையும் பெற்றார் வழுவாடித்தேவர்.

இராமநாதபுரம் சேதுபதி வழுவாட்டி தேவருக்கு சிற்ப்பான ஒரு விருதாக "வனங்காமுடி  வழுவாட்டி தேவர்" என்ற பட்டத்தையும் வழங்கினார். நாயக்கர் ஆட்சிக்குபின் சேதுமன்னர்கள் ஆட்சிக்கு கீழ்  சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.1625ல் மன்னன் வழுவாட்டியும் மெய்காவலன் மங்கங்காலடியும் பட்டுக்கோட்டை அருகே சூரியபுரம்,அலிவலம் பகுதியில் வெட்டி கொன்றனர். ப்ன்னாளில் அக்கோவில் முன் இருவரும் உருவச்சிலை அமைத்து வீரவணக்கம் நடைபெற்று வருகிறது.

தஞ்சை நாயக்கர் ஆட்சிக்கு பின் இராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சிக்குக்கு கீழ் 
1.சேந்தங்குடி
2.பாளையவனம்
3.சிங்கவனம்
4.புனல்வாசல்
5.நெடுவாசல்
6.பாதரங்கோட்டை
7.கல்லாகோட்டை
8.கந்தர்வகோட்டை
9.சில்லத்தூர்
10.கோனூர்
11.மதுக்கூர்
12.அத்திவெட்டி
13.பாப்பாநாடு
 போன்ற பாளையபட்டுகள் இருந்து வந்தது.



இதில் கோனூர்,அத்திவெட்டி,சிங்கவனம் அஞ்சுகொத்து மறவர்கள். சேந்தங்குடி வனங்காமுடி கோப்பி குல மறவர்கள்,நேம நாட்டுமறவர்கள்,அணில் ஏறாக்கோட்டை மறவர் அதலை மறவர் என இப்பிரிவுகள் எதிலாவது வரலாம்.
மொத்தத்தில் மறவரே எனினும்  இன்னும் உட்பிரிவு கண்டறியப்படவில்லை.


1676ல் இராமநாதபுரம் கிழவன் சேதுபதி மன்னர் கறம்பக்குடி,பிலாவிடுதி பச்சைதொண்டைமான் தன் படைத்தலைவனாக்கி ஆண்டுவந்தான். இவன் சகோதரி காத்தாயியை சேதுபதி திருமனம் செய்து கொண்டு புதுக்கோட்டை பல்லவராயனை கொன்று அவனது பகுதிகளுக்கு பச்சை தொண்டைமானை இரகுநாதராய தொண்டைமானை என பெயர்  சூட்டி புதுக்கோட்டைக்கு அரசனாக்கினார்.
பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் ஆளுகைக்கு வந்தது சேந்தங்குடி வந்தது. அப்போது ஒரு சிறு புலிக்குட்டியை குடுத்து பரிசளித்தார். இதனால் தஞ்சை மன்னர்களால் பாராட்டப்பட்டார்.


சேந்தங்குடி வழுவாடித்தேவர்கள் பாண்டியர் வழித்தோன்றல்?

சேந்தங்குடி பாளைய்க்காரர்களின் குல தெய்வம் பெருங்கரைமிண்ட அய்யனார் கோவில் கல்தூன்களில் மீன் சின்னங்கள் மதுரையை ஆண்ட பாண்டியர்களை நினைவுபடுத்துகின்றது.மேலும் "சேந்தன்" என்னும் பெயர் மதுரை பாண்டியர்களில் கானப்படுகின்றது. வழுவாடித்தேவர் என்னும் பெயர் கூட வழுதி என்னும் பாண்டியரின் பெயரை குறிக்கின்றது. மேலும் சேந்தங்குடி ஜமிந்தார்கள் மதுரை பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பதில் இவர்கள் பாண்டியர்களின் ஒரு பிரிவினராக கருதலாம்.

ஒருமுறை மராட்டிய மன்னர் அழைப்பை ஏற்று தஞ்சை அரண்மனை மேல் மாடியில்  மன்னருடன் பேசிகொண்டிருந்தார் அப்போது ஒரு நாரை தலைக்குமேல் பறந்தது. அப்போது  பறந்த நாரையை வில்லம்பால் வீழ்த்தினார் வழுவாடியார் இதனால் வியந்த மராட்டியமன்னர் அதம்பை,காயாவூரி கிராமங்களை வழங்கினார்.

கி.பி.1728ல் ரகுநாத வழுவாடித்தேவர் பட்டத்துக்கு வந்தார்.
இவரின் வழி வந்தவர்கள் ஆறுபிரிவினர்கள்
1.மொத்திவீட்டார்
2.முள்ளிபுஞ்சையார்
3.வடக்குவீட்டார்
4.முண்டன் கரை
5.தெற்குவாடியார்
6.நாட்டாம் புஞ்சையர்.என கூறுகின்றனர்.


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபு அவர்கள் 25-1-1871 ஓர் ஆனையின் மூலம்  நேப்பியர் பிரபு அவர்கள் 25-1-1871 ஓர் ஆனையின் மூலம்,தமிழகத்தில் உள்ள பாளையக்காரர்களுக்கு வரையறை செய்து ஆனையிட்டுள்ளார்.  தஞ்சை மாவட்டத்தில் இருந்த சேந்தங்குடி பாளையக்காரர்கள் மற்றும் 12 பாளையக்காரர்கள்,ஜெமீந்தார்களுக்கு இந்த ஆனையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விபரம்,தஞ்சை.ந.மு.வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரத்தில்
சேந்தங்குடி பாளையக்காரர்கள்,கள்ளர் மரபினர்கள் என்று எழுதியுள்ளார்.

ஆனால் சேந்தங்குடி பாளையக்காரர்களின் முன்னோர் மதுரைப்பகுதியில் இருந்து வந்த மறவர்கள். மறவர் இனத்தின் பொதுவாண தேவர் பட்டம் கொண்ட மறவர்கள். இவர்களில் சேந்தங்குடி முதல் பாளையக்காரன்,மாவீரன் விஜயத்தேவன்(கி.பி.1486) இவரைப்பற்றி புள்ளான்விடுதி நடேசகோணார் 1951ல் எழுதி வெளிவந்த "விஜயானந்த களிப்பு" என்னும் நூலின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர். சேந்தங்குடி பாளையக்காரர்களின் வழிதோன்றிய அனைவரும் மறவர் இனத்து தேவர் குல மக்களே.

கள்ளர் பெண்களை அதிகமாக மணந்த சேந்தங்குடி ஜமிந்தார்கள்:

சேந்தங்குடி ஜெமீன் வழி வந்தவர்கள் கள்ளர் இனப்பெண்களையே ஆதியில் ஆலங்காடு,சூரண்விடுதி,கீழாத்தூர் பனங்குளம் மழவராயன் பெண்களை எடுத்து வந்துள்ளார்கள்.பிண்ணாளில் சேதுபதி சேர்வைக்காரர் வழி வந்த மாப்பிள்ளை துரை பெண்களை மனந்தார்.

"தானான்மை நாட்டில் வெகு பெண்களிருக்க
நத்தமாலே பழநி சென்றார் இரண்டு
நாரியரும் வன்னியர்குமாரிகளே கொண்டார்
வித்தாரமாச் சிலது நாளே துரைகள்
விந்தையோடு வாழ்ந்தார்"
- நடேசக்கோணார்

பழனி சென்று வன்னிய குல கள்ளர் மரபினரான பழநி கருப்பண்ண தேவரின் இருமகள்களாகிய முத்துலெட்சுமி ஆயியாரை 13-வது ஜமிந்தாருக்கும் அவர் தம்பி ராசுத்துரை தங்கம்மாள் ஆயியாரையும் திருமணம் செய்து கொண்டணர்.

பிண்ணாளில் பாலையவனம் ஜெமிந்தார் விஜயரகுநாத வணங்காமுடி பண்டாரத்தார் இரு புதல்விகளாகிய சின்ன ராசாமணி ஆயியார்,பெரிய ராமசாமி ஆயியார் இருவரையும் திருமணம் செய்து கொண்டார்கள் ஜமீன் தம்பி ராசுத்துரைத்தேவர்.

சேந்தங்குடி மன்னர்களின் ஜாதி பற்றிய முரணான செய்திகள்:

சேந்தங்குடி ஜமீன் பற்றி முதல் தவரான் குறிப்பை புதுக்கோட்டை மேனுவலில் வெங்கட் ராம அய்யர்
வெளியிட்ட குறிப்பில் புதுக்கோட்டை திவான் ஸ்ரீனிவாச அய்யர் தந்த குறிப்பில் நகரம் ஜமிந்தார்கள் வலையர் வகுப்பார் என தவராக எழுதியுள்ளார் தஞ்சை மாவட்டத்தில் இருந்த அன்றைய சேந்தங்குடிஜமீன் பற்றி தெரியாமல் ஏதோ மராட்டிய மன்னர் சரபோஜி தந்த நிலத்தில் மன்னரானார் வழுவாடி என
தவராக எழுதியுள்ளார். இது ஒரு குறிப்புகளில் முற்றிலும் அரைவேக்காடான செவி வழிசெய்தியை பதிவு செய்துள்ளனர்.

நாயக்கர் காலத்துக்கு முன்னே அறந்தாங்கி தொண்டைமான் காலத்தே ஏற்பட்ட ஜமீன் சேந்தங்குடி.

இதன் பின் சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபுவின் 25-01-1871 நிர்வாக ஆனையில் அது தஞ்சை பகுதி 
கள்ளர் ஜமீன் என குறிக்கபடுகின்றது. அதுவும் அறியா தகவலே.
கள்ளர் சரித்திரம் எழுதிய வேங்கடசாமி நாட்டாரும் சேந்தங்குடி ஜமீன் என குறித்துள்ளார்.

சேந்தங்குடி ஜமீன் பெரும்பாலும் பெண் எடுப்பது பாலையவனம் கள்ளர் ஜமீனில் தான். ஒரு வலையர் சமூகம் அதுவும் கள்ளர் ஜமீனில் பெண் எடுப்பது இயலாத காரியம். மேலும் வழுவாடித்தேவர் பங்காளிகள்,
சம்பந்தகாரர்கள் மழவராயர்,கச்சிராயர்,தொண்டைமான்,பல்லவராயர்,வாயாடியர் என அனைவரும் கள்ளர் என சான்றிதழ்கள் வைத்துள்ளனர். அவர்கள் கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடியிலும் அதிகமாக உள்ளனர்.
மேலும் வழுவாடித்தேவர்கள் சிலருக்கும் கள்ளர் என சான்றிதழ்கள் உள்ளன.

மேலும் தஞ்சை சீமையிலே உள்ள அத்திவெட்டி,கோனூர் போன்ற அஞ்சுகொத்து மறவர்கள் என பலரும் அறிந்ததே அவர்களுடனும் வழுவாடித்தேவர் சம்பந்தமுள்ளது.

1949-இல் குமாரசாமி வழுவாடியார் தம் பத்திரத்தில் தனக்கு கடைசியாக இருந்த சேர்வை என்ற பட்டத்தை
வைத்து அவர் அறியாமல் "அகமுடையார்" என சான்றிதழ் வாங்கியுள்ளார். வழுவாடி சேர்வைக்கார்
இரண்டு பத்திரங்களிலும் "அகமுடையார்" என்றே பதியபட்டுள்ளது.

இது பிற்பாடு "அகமுடையார்" என்ற சாதி சான்றிதலை எம்.பி.சி சலுகைக்காக தங்களுக்கு இருந்த அம்பலம்,சேர்வை என்ற பட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த "அம்பலக்காரர்" என மாற்றியுள்ளனர்.
இதுவே சேந்தங்குடி ஜமீந்தாரை  முத்திரையர் சமூகம் என கருத காரணமானது. இது சான்றிதல் குறைபாடுதான் ஒழிய வேறு சம்பந்தமில்லை.

ஆனால் அவர்கள் சம்பந்தம் பூராம் கள்ள்ருடனே தான் ஒழிய முத்திரையர் சமூகத்துடன் அல்ல.

தஞ்சை கள்ளர் சீமையிலே தேவர் பட்டம் பெற்றவர்கள் வழுவாடித்தேவர்களே எனவே தாங்கள் மறவர் இனத்தவர்தான் என பூரணமாக அறிந்திருந்தனர்.

எனவே கடந்த 60 வருடகாலத்துக்கு மேலாக தங்களை மறவர் இனம் மறவர் ஜாதி என கிட்டதட்ட 10 புத்தகங்களுக்கு மேலாக எழுதியுள்ளனர்.

தங்களை அம்பலக்காரர் சமூகம் என காட்டபட்டாலும் தங்களுக்குள்ளே சம்பந்தம் செய்து கொண்டு முத்திரையர் மக்களுக்கும் ஆதரவாக இருந்து தொண்டாற்றி வந்துள்ளனர்.

இவர்கள் தென்பகுதிமக்களே. இந்த கட்டுரையை கண்மூடி தனமாக மட்டும் எழுதவில்லை கோனூர்,அத்திவெட்டி,சிங்கவனம் ஜமீன்கள் மறவர் சமூகத்தவர் என்பதும் அஞ்சுகொத்து திருவாடனை மறவர்கள். அவர்கள் உறவினர்களான செந்தங்குடி மற்றும்  பாலையவன்ம் ஜமிந்தாரின் சம்பந்திகள் எந்த சமூகமாக இருக்க முடியும்.சேந்தங்குடி மறவர் ஜமீனே என்பது தின்னம்.

இவர்கள் வணங்காமுடி கோப்பிகுல மறவர் அல்லது வன்னிய மறவராகவோ அல்லது அனிலேறாக்கோட்டை மறவராகவோ இருக்க கூடும்.  இது சேந்தங்குடி பாளையக்காரர்களே தங்களே மறவர் சமூகம் என ஆனித்தரமாக எழுதிய பல புத்தகங்களையும் அதற்க்கு ஆதரமாக காட்டிய நூல்களும் சான்று.

மேற்கண்ட சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாற்றை தொகுத்து
புள்ளான்விடுதி அமிர்தகவி சு.வெ.நடேசக்கோனார் அவர்கள் எழுதிய "விஜ்யானந்த களிப்பு" என்ற கவிதை நூலை 1951 ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை நூலில் முதல் பாளையக்காரன் பற்றியும் அவர்கள் ஊரில்,அவர்கள் இனம்(ஜாதி) பற்றியும் அவனை அரசர்குளம் அரசர் பாராட்டுவத்ம். அவ்னது சிறியதந்தைகள்

"சொந்தவர் வடமலை முன்னே மறவர் சூழ்ந்துவள வூரதனில் வாழ்ந்தவர்கள் பின்னே வந்தவூர் மாகுருந்த்பிறை அதனில் வாழுமியல் கூறுகிறேன்.

அரசர்குளம் அரசர் மாவீரன் விஜயத்தேவனை பாராட்டுதல்

"அன்பேபைன் தங்கமே விஜயா ஆர்க்கும் அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள்வெற்றி விஜயா போர்க்கு வந்தவரை
வென்று புகழ் வந்தவனே விஜயா"

என சேந்தங்குடி ஜமீனின் தோற்றத்தை கூறுகிறது.



இத்னை யாருடை கவுரவத்திற்கு குறைவாது என கணிவோடு கூறுகிறோம்.


சேந்தங்குடி பதினான்காவது அரசி ஸ்ரீ ராணி மாது தங்கம்மாள் ஆயியார் கி.பி.1925-1943

சிவகங்கை எப்படி ஒரு வேலுநாச்சியார் ஆண்டாரோ அதே போல் ராமநாதபுரத்தை ஆண்ட் முத்து திருவாயிநாச்சியார் ஆண்டாரோ அதே போல் சேந்தங்குடி ஜமீனை தங்கம்மாள் ஆயியார் என்னும் வீர நாச்சியார் ஆண்டுவந்தார். இவர் காலத்தில் நாட்டாங்கொல்லை ரகுபதி வழுவாடியார் ஜெமீன் மனியக்காரராகவும் இருந்து பின் ஜமிந்தார் தங்கம்மாள் ஆயியார் சிறிய தந்தை பெரியசாமி வன்னியனார் சேந்தங்குடி மனியக்காரராக மாறினார். தங்கம்மாள் ஆயியார் தந்தை பெயர் பெரியசாமி வன்னியனார்.

வழுவாடித்தேவர்கள் மதுரை பகுதியிலிருந்து வந்தவர்கள். மதுரை,ராமநாதபுரம்,சிவகங்கை,திருநெல்வேலி பகுதியில் கள்ளர்,மறவர்,அகம்படியார் வீடுகளில் இறந்தால் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ஆண்கள் மேனியில் துண்டு,சட்டை அனியாமல் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு துக்கம் அனுசரிப்பது வழக்கம் அதுபோலே இன்றும் வ்ழுவாடித்தேவர்கள் அனுசரித்து வந்திருக்கிறார்கள்.

சேந்தங்குடி 15-வது ஜமீந்தார் சேதுபதி சேர்வைக்காரர்:

சேந்தங்குடி ஜமிந்தார்களுக்கு சேதுபதி என்னும் பெயர் கொண்ட வழுவாடித்தேவர்களும் உள்ளனர்.
சேதுபதிகளின் உறவினர்களும் வழுவாடித்தேவர்களுடன் சம்பந்தம் செய்துள்ளனர்.

சேந்தங்குடி பாளையக்கார்களின் நகரம் பாலசுப்பிரமணியர் கோவில்
சேந்தங்குடி ஜமிந்தார்கள் பழநி முருகன். ஆண்டுதோறும் ஊர்கூடி காவடிகளும் மாலை அணிந்து பழநி செல்வது வழக்கம். பழனி முருகண் கோவில் போல் செயற்கை குன்று அமைத்து ஒரு முருகன் கோவில் கட்டவேண்டும் என்ற ஆவல் கொண்ட் வழுவாடித் தேவர் 1878-79ல் புதுக்கோட்டை திவான் சேசுவா சாஸ்திரி உதவியுடன் நகரம் முருகன் கோவிலை அமைத்தார்.
இந்த கோவிலுக்கு சேதுபதி மன்னர்,தஞ்சை சரபோஜி மன்னர்களும் நிலக்கொடை வழங்கியுள்ளனர்.
மிக பிரசித்தி பெற்ற கோவில் இது.

மேற்கண்ட சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாற்றை தொகுத்து
புள்ளான்விடுதி அமிர்தகவி சு.வெ.நடேசக்கோனார் அவர்கள் எழுதிய "விஜ்யானந்த களிப்பு" என்ற கவிதை நூலை 1951 ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை நூலில் முதல் பாளையக்காரன் பற்றியும் அவர்கள் ஊரி,அவர்கள் இனம்(ஜாதி) பற்றியும் அவனை அரசர்குளம் அரசர் பாராட்டுவத்ம். அவ்னது சிறியதந்தைகள்

"சொந்தவர் வடமலை முன்னே மறவர் சூழ்ந்துவள வூரதனில் வாழ்ந்தவர்கள் பின்னேவந்தவூர் மாகுருந்த்பிறை அதனில் வாழுமியல் கூறுகிறேன்.
அரசர்குளம் அரசர் மாவீரன் விஜயத்தேவனை பாராட்டுதல்

"அன்பேபைன் தங்கமே விஜயா ஆர்க்கும் அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள்வெற்றி விஜயா போர்க்கு வந்தவரை
வென்று புகழ் வந்தவனே விஜயா

பாருக்கு சீரிட்ட  மறவர் கால பாசமே வந்தாலும் பயம்ற்ற மறவர்
போருக்கே பேர்பெற்ற மறவர் உடலை
போட்டாலும் போரில் வென்காட்டாத மறவர்
வீரமேயுருவான மறவர் அமரில் வீராதி வீரரை வீழ்த்கிற மறவர்
ஆருமே நிகரற்ற மறவர் ஆர்க்கும் அஞ்சாத வேந்தரையும்
கெஞ்சாத மறவர்"
-புள்ளான் விடுதி நடேசக்கோனார்("விஜயன் களிப்பு")

மேற்கண்ட கவிதை நூலின் வாயிலாகவும்,மதுரைபகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் இவர்கள் மறவர் இனத்து தேவர் பட்டம் பெற்றவர்கள் என்பதும் தெளிவாக்கபட்டுள்ளது.

சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஏறக்குறைய பதினைந்து பாளையக்காரர்கள் ஆட்சியில் அவர்கள் கட்டிய சேந்தங்குடி கருப்பண்ண சுவாமி கற்கோவில் முகப்பில் மீன் சின்னம் காணப்படுகின்றது. அவர்கள் கட்டிய நகரம்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் முகப்பில் மீன் சின்னம் காண்ப்படுகிறது. அதன் அருகில் உள்ள இடும்பர் கோவில் முகப்பின் மீன் சின்னம் காணப்படுகின்றது இவைகலைக்கொண்டு பார்க்கும் போது இவர்கள் மதுரைபகுதியில் இருந்து வந்த பாண்டிய மன்னர்களின் ஒரு பிரிவினர் என உறுதியாகின்றது.

சேந்தங்குடி பாளையக்காரர்கள் கி.பி 1486 முதல் கி.பி1948 ஆண்டுகள் ஆட்சியில் தொண்டைமான்,விஜயநர மன்னர்,தஞ்சை மராட்டியர்,இராமநாதபுரம் சேதுபதி இறுதியில்
ஆங்கிலேயர் மன்னர்கள் போன்ற பலர் ஆளுகையில் இருந்தாலும் தன்னரசு ஆட்சி நடத்தினர்.

இவர்களிடம் அவ்வப்போது ஆட்சி மாற்றங்கள் வாரிசு உரிமைப்போர்கள் நடைபெற்றுள்ளன.

பெண்களும் வாரிசு உரிமை போர்கள் ஏற்பட்ட போது ஆட்சிக்கட்டில் ஏறி உள்ளனர்.

அவ்வகையில் சேந்தங்குடி ஜெமிந்தார் ராணி தங்கம்மாள் ஆயியார் வாரிசு தன் மகனுக்காக பசுமகரானியாக இருந்து மகன் இறப்புக்கு பின் இப்பகுதியில் பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளனர். சேந்தங்குடி ராணி தங்கம்மாள்  வாரிசு இல்லாமல் 21-03-1943ல் இறந்து போனார். அதனால் ஏற்பட்ட வாரிசு உரிமைப்போர்களில் நீதி மன்றங்கள் ஏறியுள்ளனர்.

இந்தியா விடுதலை பெற்ற சூழலிலும் ஜெமின் வாரிசு உரிமைபோர் நடைபெற்று அதற்க்கு தீர்வு காண இங்கிலாந்து பிரிகௌன்சில் மற்றும் இந்திய உச்ச் நீதிமன்றம் வரை சென்று தீர்வு கண்டுள்ளார்கள்.

சேந்தங்குடி ஜமீன் பரம்பரையினர் நகரம்,கீரமங்கலம்,குளமங்கலம்,கொத்தமங்கலம் கோயில் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள்.

சேந்தங்குடி ஜெமீன் பரம்பரையினர் இப்பகுதியில் தமிழகம் பூராவும் பரவி பெருமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் மேலும்,முதல் பாளையக்காரர் வழி வந்த சிறிய தந்தை ஆவாத்தேவன் வழிவந்த குளமங்கலம் கோப்பியர் முதுகாடு குழு செல்லையா பழைய சட்டமண்ற உறுப்பினர் மற்றும் கீரமங்கலம் சு.சண்முகனாதன்  பழைய சட்டமண்ற உறுப்பினரும் மறவர் இனத்து தேவர்களே.

மேலும் அரசியல் பலம் பெற்ற இம்மக்கள் 1952-2013 வரை புதுக்கோட்டை ஆலங்குடி தொகுதி பேராவூரனி தொகுதி சட்டமண்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்தனர்.
இதுபோக பேராவூரனி ஒன்றியம்,திருவரங்குளம் ஒன்றியம்,அறந்தாங்கி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் என்னற்ற ஊராட்சி தலைவர்களாகவும் பதவி வகித்து வந்துள்ளனர்..

சின்னவன்னியனார் எனும் சேந்தன்குடி மறவர்.

வன்னி -வன்னியன் – வன்னியனார் எனும் பெயர்ச்சொல், சாசனங்கள் – இலக்கியங்கள் – பத்திரங்கள் ஆகியவற்றில் பயின்று வந்துவிட்டாலே சிற்றறிவு உள்ள மூடர்களில் இருந்து கற்றறிந்த சில பேரறிஞர் வரை சட்டென்று உடனடியாக தற்கால வன்னியர் சாதியைக் குறித்துதான் அது என்று கையைக் காட்டுகின்றனர். எதையும் சரியாக ஆராயாமல் முடிவெடுக்கும் இவர்களால்தான் சரியான சமூக வரலாறு மக்களுக்கு கிடைப்பதில் பெருந் தடை ஏற்படுகிறது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மறவரின் அடிமடியிலேயே கை வைக்கும் போக்குகள்தான் தற்காலத்தில் இணையதள வரலாறு பேசும் முட்டாள்களின் கை வண்ணமாக திகழ்ந்து வருகிறது.

•சேந்தன்குடி சின்ன வன்னியனார்•

“சின்ன வன்னியனார் பணவிடு தூது” என்று ஒரு சிற்றிலக்கியம். இது தூது நூல்கள் வரிசையில், பணத்தைத் தூதாக விடும் பணவிடு தூது எனும் வகையைச் சேர்ந்தது. இந்த வகை தூது இலக்கியங்கள் பல கடவுள்கள், சிற்றரசுகள், செல்வந்தர்கள் மீது பாடப்பட்டவை. அந்த வகையில் மேற்கண்ட தூது நூலில் சேந்தன்குடி வழுவாட்டித் தேவரவர்கள் வம்சாவளியைச் சேர்ந்த பெத்த பெருமாள் எனும் கலங்காப் புலியின் வழியில் வந்த சிவந்த பெருமாள் மீது பாடப்பட்டதுதான் சின்ன வன்னியனார் பணவிடு தூது.

இந்த செய்தியை தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்கள் தொகுத்த சுவடியில் உள்ள சின்ன வன்னியனார் பணவிடு தூது எனும் தலைப்பில் அமைந்த பனையோலைச் சுவடியின் முன் பக்கத்தில் உள்ள ஏட்டிலேயே இச் சுவடி, வழுவாட்டி ஜமீன், புதுக்கோட்டை, மிதிலைப்பட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைக் கூட இந்த மூடர்கள் சரியாகப் பார்க்கவில்லை. இதன் மூலம் அறியும் செய்தி என்னவென்றால்… இந்த சுவடி, வழுவாட்டித்தேவரவர்களின் சேந்தன்குடி பாளையத்துக்குரியது, இது புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த மிதிலைப்பட்டி சூரிய நாராயண கவி என்பவரால் பாடப்பட்டது என்பதாகும். மூன்று பணவிடு தூது எனும் நூலில் மேற்கண்ட நூலைத் தவிர, மற்ற இரு நூல்களில் ஒன்று, முத்துவிஜய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாத கவிராயரால் பாடப்பட்ட பணவிடு தூது, மற்றொரு நூல், புல்லைக் குமரேசர் பணவிடு தூது எனும் புல்வயல் ஊரில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் மீது பாடப்பட்டதாகும்.

இவை எதையும் அறியாமல் வன்னியனார் என்று வந்துவிட்டது ஆகவே அது எங்கள் வன்னியர் சாதி என்று குதூகலம் அடைவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சொல்ல வேண்டியதில்லை!

• பெத்த பெருமாள் வழி•

இந்த சின்ன வன்னியனார் பணவிடு தூது நூலில், பாட்டுத் தலைவனின் முன்னோனாக ” பெத்த பெருமாள்” என்பவன் கூறப்படுகிறான். இந்த பெத்த பெருமாள் யார் என்றால், சேந்தன்குடி வழுவாட்டித் தேவர்களின் முன்னோரில் ஒருவன். இவனைப் பற்றி சுவடியின் 44 வது கண்ணியில் வரும் … ” நீர்முடிமேல் வைத்த பெருமாள் வரத்தினால் அம் மரபில் பெத்த பெருமாள் பிறந்திடினும்” எனும் வரியால் அறியலாம்.

•வன்னியர் யார் •

நாம் பல காலங்களாக கூறுவது.. வன்னியர் என்பது பள்ளி வன்னியர் மட்டுமல்ல… மறவர், கள்ளர், அகம்படியர் எனும் தேவமார்களுக்கும், வேட்டுவர், வலையர், இருளர், காடர், பளியர் எனும் பழங்குடிகளுக்கும் பயின்று வந்த பெயராகும். அதிலும் குறிப்பாக வன்னியனார் – வன்னியன் என்பது ஆதி நாளில் மறவரின் மற்றொரு பெயர் என்பதைத் தக்க தரவுகளுடன் அடிக்கடி நிரூபித்தும் வந்திருக்கிறோம்.

மறக்குலத்து சூரைக்குடி விசையாலயத்தேவனே “வன்னியனார்” என்று முதலில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டவன், இவன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன், அடுத்ததாக ” இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிய மிண்டன்”- எனும் கல்வெட்டும் புதுக்கோட்டை மாநில கல்வெட்டுகளில் ஒன்றாகும். ஏறத்தாழ தங்களது எல்லாச் செப்பேடுகளிலும், வன்னியன், சொரி வன்னியன், சொரி வன்னிய சூரியன், என்று ராமநாதபுரம் சேதுபதிகளும், சிவகங்கை கௌரி வல்லபர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். தவிர, மறவர் பாளையக்காரர்களான, சிவகிரி, அழகாபுரி, ஏழாயிரம் பண்ணை, தலைவன் கோட்டை, கடம்பூர், ஊத்துமலை, வடகரை ஆகியோருக்கும் வன்னியர் என்று மாற்றுப் பெயர் உள்ளதையும் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்.

சரி அதெல்லாம் போகட்டும்… இப்போது இந்த வழுவாட்டித்தேவர்கள் யார் என்பதைப் பார்ப்போம், ஏற்கனவே நாம் வழுவாட்டித் தேவர் வரலாறு எனும் தலைப்பில் நமது பக்கங்களில் அந்த ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களே எழுதிய நூலின் விவரங்களையும், அதிலுள்ள செய்திகளையும் பதிந்திருக்கிறோம். இருப்பினும் மீண்டும் ஒரு முறை இதைப் பதிவு செய்கிறோம்.

•வழுவாட்டித் தேவர் மரபும் சாதியும் •

“சேந்தன்குடி வழுவாட்டி பாளையக்காரர் வரலாறு” எனும் தலைப்பில் ‘சேந்தன்குடி ஜமீன். திரு. செந்தமிழ் புலவர், அ.சுப்புராம செல்வ முத்துத் துரைத் தேவர் அவர்களால்’ எழுதப்பட்டு, அரங்க. பொன்னுசாமி MA., M, Lit.,Dip, மானிடவியல்,( அருங்காட்சியக காப்பாளர், தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) அவர்களால் வெளியிடப்பட்ட நூலில், இந்த ஜமீன்தார்கள் மறவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் தென் மாவட்டத்தின் வடமலை, சிவகிரி, குற்றாலம்,‌பகுநிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இச் செய்திகளை கருவூர்சாமி என்பவர் எழுதி வைத்திருந்த பனையோலை மற்றும் அவரின் முன்னோரான சின்னண்ணத் தேவர் எழுதிய பனையோலை ஆகியவற்றின் மூலமாக அறிந்து கொண்டதையும் கூறி, தங்களின் முன்னோர்கள் முருகப்பத்தேவன், பழனிவேல்தேவன் முதலாக, கடைசி ஜமீன்தார் வரையிலும் தெள்ளத் தெளிவாக வம்சாவளி பட்டியலுடன் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த சுவடியில் வன்னியன், வன்னிய குலம் என்று மட்டுமல்ல!…

“மறவர் குல திலகன் “- என்றும் வருகிறது. ( கண்ணி: 15)

இந்த சுவடி நூலின் படி,

1. முருகப்பதேவன், ( மைசூரின் கீழ் அரசெய்தியவன்)

2. பழனிவேல் தேவன் (அரசு துறந்து சென்றவன்)

3. கந்தசாமித் தேவன் (தாய்மாமன் மகளை மணந்தவன்)

4. அருணாசலத் தேவன் ( கேரள மன்னன் மகள் சிவகாமியை காதல் மணம் புரிந்தவன்)

5. வேலரசுத் தேவன்

6. தங்கவேல் தேவன்‌( கேரள இளவரசிக்குப் பிறந்தவன்)

7. குமாரவேல்தேவன் ( வேலரசுத் தேவன் மகன்)

8. சுப்பையாத் தேவன் (குமாரவேல் தேவன் மகன்)

9. முத்துத்துரைத் தேவன் ( சுப்பையாத் தேவன் மகன்)

10. குழந்தைத்தேவன் ( முத்துத் துரைத் தேவர் மகன், )

11. சாமித்தேவன் ( அருணாசலத் தொண்டைமான் மகளை மணந்தவன்)

12. வீராத்தேவன் ( முன்னோர் பூமி குற்றாலம் சென்றவன், சூரன்விடுதி கண்ணுச்சாமி தொண்டைமான் மகளை மணந்தவன்)

13. அப்புத்தேவன் ( சிதம்பரம் சென்று வாழ்ந்தவன், முத்துத் தொண்டைமான் மகளை மணந்தவன்)

14. விசயத்தேவன் ( சேந்தமங்கலம் எனும் ஊரைச் சேந்தன்குடி என்று மாற்றியவன், பூச்சைய நாயக்கர் மகள் பொட்டம்மையையும், இந்திர குலக் கள்ளர் மழவராயர் மகள் ராஜம்மாளையும் மணந்தவர், சேதுபதி மேலாண்மையின் கீழ் ஆண்டவன்)

15.வாசு தேவன் எனும் வேலரசுத் தேவன் ( விசயத்தேவனுக்கு பூச்சைய நாயக்கர் மகள் மூலம் பிறந்த மகன்)

16. ரெகுநாதத் தேவன் ( விசையத் தேவனுக்கு பட்டு மழவராயர் மகள் மூலம் பிறந்த மகன்)

17. முருகப்ப தேவன்

18. வீராத்தேவன்

19. மன்னன் வழுவாட்டித் தேவன் ( சேதுபதியுடன் முரண்பட்டவன், பின்னர் அவரிடம் வணங்காமுடி பட்டம் பெற்று, அவரின் சேர்வைக்காரர் ஆனவன், தஞ்சை மன்னரிடம் பரிசு பெற்றவன்)

20. ரகுநாதத் தேவன்

21. ராமசாமித்தேவன்

22. பெத்த பெருமாள் ( ரகுநாத தேவர் மகன்)

23. ரகுநாத தேவன் ( தஞ்சை மன்னன் துளசா ஜி யிடம் சேர்வை பட்டம் பெற்றார்)

24. சிவந்த பெருமாள் ( பெத்த பெருமாள் மகன்)

25. பெரிய நயினான்

26. வீரப் பெருமாள் தேவன்

27. சின்னச்சாமி தேவன்

28. ரெகுநாதத் தேவன்

29. அருணாசலத் தேவன்

30. கூத்தைய வழுவாட்டித் தேவன்

31. அருணாசலத் தேவன்

32. சின்னச்சாமி தேவன்

33. விஜயரெகுநாதத் தேவன்

34. துரைச்சாமித் தேவன்

35. அருணாசல வணங்காமுடி வழுவாட்டித் தேவன் ( சேர்வைக்காரர் மாப்பிள்ளைத் துரையின் சகோதரி அலர்மேலுவை மணந்தவன்)

36. கருப்பண்ணத் தேவன்

37. மேகவர்ணத்தேவன்

38. முத்துத்துரைத்தேவன்

39. சுப்பிரமணிய வணங்காமுடி வழுவாட்டித் தேவன்

40. சத்துரு சங்கார வேல்சாமித் தேவன்

41. முத்துக்குமார வணங்காமுடி வழுவாட்டித் தேவன்

42. சுப்புராமச் சந்திரத் துரை தேவன்

43. தங்கம்மாள் ஆயியார்

44. முத்துக்குமார வணங்காமுடி வழுவாட்டித் தேவன்

45. சிவகாமி ஆயியார்

46. குமாரசாமி சேர்வைக்காரர்

47. சிங்கமுத்து வழுவாட்டித் தேவர்

– என நீண்ட பட்டியல் உள்ளது.

இவர்களில் சிலர் சேர்வை எனும் பட்டம் பெற்ற காரணமாக அகம்படியர் என்று சாதிச் சான்றிதழ் வைத்திருப்பதாகவும், கள்ளர் குலத்தில் பெண் கொண்டதால் கள்ளர் எனவும் சிலர் சாதிச் சான்றிதழ் வைத்திருப்பதாகவும் அவர்கள் நூலிலேயே குறிப்பிட்டுள்ளனர். மேலும் வலையர் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் தங்கள் ராஜ்யத்தை அமைத்து வாழ்ந்ததால் தங்களை பொதுப்பெயரான முத்தரையர் என்ற வகையில் அடக்க முயற்சிகள் நடந்ததையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளனர். இவர்களில் குழந்தைத் தேவன் எவ்விதம் தந்திரமாகச் செயல்பட்டு அரசோச்சினான் என்பதை,..

” தானாண்மை நாட்டாரை தந்திரத்தால் தாமடக்கி யாறிலொரு கடமை வாங்கி” – எனும் வரிகள் விவரிக்கும்.

சின்ன வன்னியனார் பணவிடு தூதில், அவனைச் “சின்ன வேந்திரன்” – என்றும் ( 317 வது கண்ணி)

“காவலரில் போசன் நளராசன் ” – என்றும் ( 21-22 கண்ணிகள்)

” பானுநிகர் உக்கிர பிரதாப நளன் “- என்றும் ( 26 வது கண்ணி)

” பொதிய மலை தான் பெற்றோன் ” – என்றும் ( கண்ணி – 13)

என வரும் வரிகள் மறக்குலத்து சொக்கம்பட்டி மன்னருக்கு வரும்” நளச் சக்கரவர்த்தி வம்ச பாரம்பரை” பொதியமலையுடயவன், – என்பவனற்றோடு பொருந்திச் செல்கிறது. மேற்கண்ட மறக்குல மன்னர் திரிவுனச் சக்கரவர்த்தி வழியில் வந்த பாண்டிய வழித் தோன்றல் என சின்னனேந்திரன் செப்பேடு கூறுவதைப் போலவே இங்கும் சின்ன வன்னியனாரை ” தென்னர் குல தீபா” சந்த்ர குல திலகன் – பாண்ட்ய குல சந்ததியான் என்கிறது. இந்த சந்திர குல திலகன் என்று சிவகங்கை மன்னர்களும் செப்பேடுகளிலும், சிற்றிலக்கியங்களிலும் பயின்று வருகிறார்கள். மேலும் முத்தாய்ப்பாக…. ” அஞ்சுநாடாளும் அனபாயன்” (கண்ணி- 15) என்று சின்ன வன்னியனார் குறிப்பிடப்படுகிறார். இது மறவர் குலத்து அஞ்சுகோட்டை நாடாழ்வார்களையும், சிங்கம்புணரி ஐந்துநிலை நாட்டு மறவர்களையும் எண்ணும் விதமாக அமைந்துள்ளது.

கூடுதலாக… பழனியிலிருந்து வன்னியர் பெண்களை மணம்புரிந்து வந்ததாக வழுவாட்டித்தேவர் குடும்ப வரலாறு கூறுகிறது. பழனியில் வசிக்கும் திரு. சந்தனத்துரை எனும் மறவரிடம் ” வணங்காமுடி வன்னிய மறவர்” எனும் சாதிப் பெயரில் பொ.யு 1891 லிருந்து பத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட முத்திரைத்தாள் பத்திரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வணங்காமுடி எனும் பெயரில் சேந்தன்குடி வழுவாட்டித் தேவர் வம்சமும் தொடர்ந்து அழைக்கப்பட்டதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

ஆக… இங்கு ‘எனது சம்பந்தி உறவுகளான’ பள்ளி வன்னியர் சமூகத்திற்கும் இங்கு குறிப்பிட்ட சின்ன வன்னியனார் எனும் மறவர் சமூகத்திற்கும் (என் போன்ற சிலரைத் தவிர) எந்த வகையிலும் சிறிதும் சம்பந்தமே இல்லை என்று தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன் நன்றி! வணக்கம் 🙏.

Our special Thanks to, திரு . உத்திராடம் அவர்கள்.




























உ.வே.சா. நூலகம், சென்னை.

துணை நூல்கள்.

1. மூன்று பணவிடு தூது.

2. தானாண்மை நாட்டு வரலாறு

3. சேந்தன்குடி பாளையக்காரர் வழுவாட்டித் தேவர் வரலாறு

4. சேந்தன்குடி மாவீரன் வில்லன் சேர்வைக்காரர் பாடல்.

5. பழனி வணங்காமுடி வன்னிய மறவர் பத்திரங்கள். ( சேகரிப்பு)

6. சூரைக்குடி அரசு ( ஆய்வு பதிவுகள்)

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.


மேற்கோள் நூல்கள்:

14-05-1891 நகரம் பாலசுப்பிரமனி கோவில் குடமுழுக்கு விழா இதழ்
1863 கிராம மக்கள் நிலங்கள் தானம்
சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபுவின் 25-01-1871 நிர்வாக ஆனை
கள்ளர் சரித்திரம் நமு.வெங்கடசாமி நாட்டார் 1928
சேந்தங்குடி கிரயசாசன்ம் 1943
சேந்தங்குடி ஜமீன் விடுதலை பத்திரம் 27-7-1944
புள்ளான் விடுதி நடேசக்கோனார்
தஞ்சை மாவட்ட நீதி மன்ற தீர்ப்புகள் 1947,50,56...
விஜயானந்த களிப்பு உறை செந்தமிழ் புலவர் செல்வமுத்துதுரை தேவர்
"தாணான்மை நாட்டு வரலாறு"-செந்தமிழ் புலவர் செல்வமுத்துதுரை தேவர்
1993- "தானான்மை தங்கம்மாள்"

சேந்தங்குடி ஜமீன் வழுவாடியார் தீக்கதீர்,தனமலர்,மற்றும் இதழ்கள்.
"பாலசுப்பிரமனிய கோவில் ஆண்டு இதழ்"
என ஆவணங்கள் பல.

-
நன்றிகள்:
"தமிழக வரலாற்றில் சேந்தன்குடி பாளையக்காரர்கள் வரலாறு"
இந்த கட்டுரைக்கு ஆதரவான நூல் எழுதிய
நூல் ஆசிரியர்:
சே.சி கந்தசாமி தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு)
(அ) கந்தசாமி வழுவாடித்தேவர்
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்
தானான்மை நாட்டு முக்குலத்தோர் பேரவை தலைவர்
சேந்தன்குடி

அன்பு சகோதரர் தமிழியக்கன் சேர்வை



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.