Monday, April 24, 2017

மறக்குல அரசமகளிர் தீப்பாய்தல்(ஜௌஹர்)


இராமநாதபுரத்து மறக்குல அரசியார் பின்பற்றிய தீப்பாய்தல்

Jauhar and Sati practice in Tamilnadu Kindom of Ramanathapuram Sethupathi.Maravar queens and princess perform Hindu custom of mass self-immolation by women in parts of the Ramanathapuram, to avoid capture,enslavement and rape by invaders, when facing certain defeat during a war.





"கற்பென்னும் திண்மையைக் குலதனமாக பெற்ற பழந்தமிழர்
மன்னர் வம்சத்து குல மாதரில் சில கணவனுடன் உடன்கட்டை
ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று
தீண்டியவரும் உண்டு எதிரிகளிடம் வீழ்ந்த பின் தங்கள் கற்புக்கு
ஆபத்து வரும் என கருதி வீர அரச மகளிர் அனைவரும்
குளிர் தென்றலென அக்கினியில் குளித்த கதையும் உண்டு"





வடக்கே ராஜஸ்தானில் பின்பற்றும் சதி(இறந்த கணவனுடன் தீப்பாய்தலும்)எதிரிகளிடம் வீழ்ந்த பின் அவர்களிடம் சிக்காமல் இருக்க ஜௌஹர்( மொத்த மகளிரும் தீப்பாய்தல்).உள்ள பழக்கவழக்கங்கள் தென் தமிழ் நாட்டில் மறவர்,கள்ளர் குல அரசியாரிடம் இடம்பெற்ற பழக்கவழக்கங்களை பார்ப்போம்.
Jauhar, sometimes spelled Johar or Juhar,[1][2] was the Hindu custom of mass self-immolation by women in parts of the Indian subcontinent, to avoid capture, enslavement and rape by invaders, when facing certain defeat during a war.[3][4][5] This practice was historically observed in northwest regions of India, with most famous Jauhars in recorded history occurring during wars between Hindu Rajput kingdoms in Rajasthan and the Muslim armies.[6][7][8] Jauhar is related to sati, and sometimes referred in scholarly literature as jauhar sati.[4]According to Veena Oldenburg, the roots of this practice "almost certainly" lie in the internecine warfare among different Rajput kingdoms.[9] In contrast, according to Kaushik Roy, the jauhar custom was observed only during Hindu-Muslim wars, but not during internecine Hindu-Hindu wars among the Rajputs.[10]

The term jauhar sometimes connotes both jauhar-immolation and saka ritual. During the Jauhar, Rajput women committed suicide with their children and valuables in massive fire, to avoid capture and abuse in the face of inescapable military defeat and capture.[4][11] Simultaneously or thereafter, the men would ritually march to the battlefield expecting certain death, which in the regional tradition is called saka.[1]

தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின் பெரும்பகுதி பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ராஜாக்கள் காலத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் இருந்திருக்கிறது.
அந்த செல்வம் வரலாற்று காலம் நெடுகவும் ராஜஸ்தான் ஏராளமான படையெடுப்புகளுக்கு ஆளாகவும் காரணமாக அமைந்திருக்கிறது. வீரம் பொருந்திய இராஜபுத்திர வீரர்களாலும், மார்வார் வீரர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட ராஜஸ்தானில் வாழ்ந்த மக்கள் எக்காரணம் கொண்டும் போரில் எதிரிகளின் கைகளில் சிக்கி மானமிழக்க கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருந்திருக்கின்றனர்.
இவ்வளவு வீரம் கொண்ட அந்த ஊர் மக்கள் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம். அப்படி 24000 பேரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள என்ன கொடுமை நடந்திருக்கிரது.
Jauhar-like suicide of Agalassoi: Alexander the Great
The mass self-immolation by Agalassoi tribe of northwest India is mentioned in Book 6 of the The Anabasis of Alexander, written in the 2nd century CE by Arrian, on the military history of Alexander the Great between 336 and 323 BCE. Arrian mentions Alexander's army conquering and enslaving people of northwest Indian subcontinent. During a war that killed many in the Macedonian and Agalossoi armies, the civilians despaired of defeat. Some 20,000 men, women and children of an Agalossoi town set fire to the town and cast themselves into it.[29][30]

Jauhar of Sindh: Muhammad bin Qasim[edit]
In 712, Muhammed bin Qasim with his army attacked kingdoms of western regions of the Indian subcontinent. He lay siege to the capital of Dahir, then the Hindu king in a part of Sind. After Dahir had been killed, the queen coordinated the defense of the capital over several months. As the food supplies ran out, she and the women of the capital refused to surrender, lit pyres and committed jauhar. The remaining men walked out to their deaths by the invading army.[31][32]

Jauhar of Jaisalmer: Alauddin Khilji[edit]

Sultan Alau'd Din put to Flight; Women of Ranthambhor commit Jauhar. Indian, Pahari style painting from c. 1825
Bhatnair, Tanot and Jaisalmer, capitals of Bhati Rajputs, witnessed the scene of Jauhar thrice, the last time men did not have enough time to build the pyre and hence slit the throats of women, and hence, it is considered half Jauhar.[33] In the time of Maharawal Jait Singh, Alauddin Khilji besieged the fort of Jaisalmer, and after seven months, 24,000[34] women committed Jauhar.[33]

அந்த இராஜஸ்தானத்தில் பல வகை இசுலாமிய மன்னர்கள் ஆப்கானிய துருக்கிய டில்லி சுல்தான் முதல் முகலாயர் காலம் வரை பலதரப்பட்ட படையெடுப்புகள் நிகழ்ந்திருக்கின்றன அந்த காலகட்டத்தில் இராஜபுத்திர அரண்மனையில் உணவு பற்றாக்குறை, அரசரின் இழப்பு ஆகிய காரணங்களினால் ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த கோட்டையினுள் இருந்த பட்டி வம்ச பெண்கள் 'ஜௌஹர்' என்ற சடங்கை மேற்கொள்ள துணிகின்றனர். போரில் தோல்வி உறுதியான பின்பு எதிரி படை வீரர்களின் கைகளில் சிக்கி தங்களின் மானத்தை இழக்காமல் இருக்க இராஜபுத்திர அரசியும், பெண்களும் தங்களை தாங்களே நெருப்பிட்டு உயிர் மாய்த்துக்கொள்ளும் சடங்கே ஜௌஹர் ஆகும்.

அதேபோல் கணவன் உயிரிழந்தால் அவருடன் சொர்க்கத்துக்கு செல்ல வேறு எவரையும் மணக்க விருப்பம் இல்லாத கற்புக்கரசிகள் தங்களை செந்தழல் தீண்டி கணவருடன் உயிர் துறக்கும் சடங்குக்கு சதி எனப்படும்.

இதேபோன்ற் நிகழ்ச்சிகளும் பழக்கவழக்கங்களும் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளன.அவை,

இராமநாதபுரம் சேது அரசகுல மாதர்கள் செய்த ஜௌஹர்:

Jauhar practise of Ramnad is Witness in
Military Country Correspondence,vol IX(10-2-1771)
St.George Fort Documents about Arcot Nawab wars.

இராமநாதபுரம் சேதுச்சீமை வீரத்திற்கும் பராக்கிரமத்திற்கும் மாணத்திற்கும் பேர் போன சீமை சேதுபதிகள் ஆரம்ப காலகட்டத்தில் நாயக்கர் பின்  மராத்தியர்களை தொடர்ந்து போர்களில் சந்தித்து வீழ்த்தி அவர்களே சேது வடவெல்லையை தாண்ட அனுமதித்ததில்லை. பின்னால் சிவகங்கை பிரிந்த
பின் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சிகளினால் சேதுச்சீமையை வளைக்க மராத்தியரும் ஆற்காடு நவாப்பும் கூட்டனி அமைத்து போரிட்டபோது அவ்வபோது வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்ததுண்டு.

அந்த காலகட்டத்தில் இராம்நாதபுரம் கோட்டைக்கும் முன் ஆறுமுக கோட்டை என்று ஒன்று உண்டு.
இந்த கோட்டை வீழ்ந்தால் அடுத்து இராமலிங்க விலாசம் எனும் அரண்மனை கோட்டை தான் என்பதால் அந்த கோட்டை வீழ்ந்தால் பகைவர்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள் என அரண்மனை மறக்குல மாதரசிகளுக்காக அரண்மனை மையபகுதிகளில் மொத்தமாக விறக்குகட்டைகள் அடுக்கி அதில் நெருப்பு வளர்த்து எரியவிடுவது வழக்கம். எதிரிகள் உள்ளே நுழைந்தால் வெடுமருந்துகளுடன் அரசிமாரும் இளவரசிகளும் நெருப்பில் பாய்வதென தயார் நிலையில் இருந்தன.

இதைப்பற்றி மிலிட்டரி கண்டரி கரஸ்பாண்டென்ஸ் என்ற ஜார்ஜ்கோட்டை ஆங்கிலேய ஆவனத்தில் ஆற்காடு நவாப் மராத்தியருக்கு வழங்கிய படைகான செலவுகள் பற்றிய ஆவணத்தில் காணப்படுகின்றது.

அப்போது  இராமநாதபுரம் சேதுகோட்டையை பற்றிய குறிப்புகள் (Military Country Correspondence,vol IX(10-2-1771)
பக்கம் 36-38ல்

"இந்த கோட்டை அரணில் நாற்பத்தி நான்கு அலங்கங்கள் இருக்கின்றன. அதனை சூழ்ந்து அகழியும் உள்ளது
ஆனால் தண்ணீர் இல்லை. மழைக்காலத்தில்தான் இங்கு நீர் மிகுந்து இருக்கும்.கோட்டையின் நாலாபுறத்திலும் பரந்த மைதானம்.கோட்டை மீது பெரிதும் சிறிதுமான பீரங்கிகள் ஏற்றி வைக்கபட்டுள்ளன. இவை தவிர்த்து நான்கு பெரிய பெங்காசிப் பீரங்கிகளும் உண்டு. அவை வெடிக்கின்ற குண்டுகளை சுமார் இரண்டு மைல் தொலைவு வரையில் எறிய முடியும் மற்றும்  இன்னும் ஐம்பது பீரங்கிகள்,கோட்டைகுள் உள்ளன. இந்த கோட்டைக்கு கிழக்கே ஒரு பேட்டையும் அதனையடுத்து ஒரு  கோவிலும் உளமும் உள்ளன.
வடக்கே ஏராளமான விளை நிலங்கள் இருந்தது........."

மராத்தியர் ஆற்காடு நவாப் உதவியில் படையெடுத்து ஆறுமுக கோட்டை முற்றுகையும் இராமலிங்க விலாசம் முற்றுகயில் ஈடுபட்ட போது (Military Country Correspondence,vol I9(09-3-1771)
பக்கம் 114ல்

"கீழக்கரையில் சேதுபதிகளின் ஆதரவில் பண்டகசாலைகள் ந்டத்தி வந்த டச்சுக்காரர்கள் பரங்கி அணி ஒன்று தயார் நிலையில் பிரதானி பிச்சை பிள்ளை அவர்களின் தலைமையில் தயார் நிலையில் இருந்தது.
இந்த இறுதி ஏற்பாடுகலையும் கடந்து இராமநாதபுரம் கோட்டை எதிரிகள் கையில் சிக்கிவிட்டால்......
மானம் இழந்தபின் வாழாமை இனிதல்லவா?.........அரசியரும் கோட்டையில் உள்ள மகளிரும் அக்கினி புகுவதற்க்கு ஆயத்தமாக வெடிமருந்துகளை பொதிகளில் கொண்டு அமைத்த மேடை ஒன்றில் தயாராக இருந்தன"

இது இராமநாதபுரம் கோட்டை முற்றுகையின் போது ஆங்கிலேயரால் குறிக்கபடுகின்றது(Military Country Correspondence,vol I9(09-3-1771).

இதுவே ஜௌகர் எனப்படும் அரசமகளிர் தீப்பாய்தலாகும். இந்த பழக்கவழக்கங்கள் சோழர்,பாண்டியர் கால்த்தில் இருந்தது. அரசமகளிர் கணவன் இறந்தவுடனோ இல்லை எதிரிகள் தங்கள் கோட்டையை கைப்பற்றியவுடன் அவர்கள் கைகளில் சிக்கி மானத்தை இழக்க மனமில்லாத மாதரசிகள் தம்மை தீக்குளித்து உயிர் நீத்த புகழை அடைவதாகும்.

இந்த பழக்கவழக்கங்கள் அப்படியே இராஜஸ்தான சத்திரிய ராஜபுத்திர பெண்களிடமும் காணப்படுகின்றது.

இதை கடைபிடித்தவர்கள் சேதுச்சீமை செம்பிநாட்டு மறத்தியரும் அரசிகளும் என ஆங்கிலேய ஆவணங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. இன்னும் ராஜபுத்திரர்கள் போல் தலைப்பாகை போர் நீதிகள் செம்பிநாட்டு மறவர்களிடம் மட்டுமே காணப்பட்டது.


There are seven major groups of Maravars the text noted four families were related to the king of ramnad.
The royal family as well as list of particular customs that were attached to this status(including,for example,the practice of sati).
This "ethnographic" text asserted.
Castes of Mind:Colonialism
and making of Modern India
By Nicholas B.Dirkes

இராமநாதபுரம் சம்ஸ்தானம் தென் இந்தியாவில் வலிமையான மறவர் சமஸ்தானம். இராமநாதபுரத்து அரசமகளிர் மிகவும் அரிதான தொன்மையான பழக்கவழக்கங்களை கடைபிடித்து வந்தனர் அதில் முக்கியமாக "உடன்கட்டை ஏறுதல்" அவர்களின் தொன்மையை விளக்கிறது.
(காலநிய ஆதிக்கத்தின் விளிம்பில் இந்தியா :நிக்கோலஸ் டிர்க்ஸ்)

Sembinaattu Maravar women engagein economic activities outside the house.
They also participate in religious ritualsand social activities like their men.
Women of the royal family use to commit sati inthe 18th centuary.

People of India, Volume 40,part 2
Kumar suresh sing,anthropological survey
of India,2001

செம்பிநாட்டு மறவர் குல பெண்கள் தங்கள் கணவன்மார்களை போலவே சமூக பங்களிப்பில் ஆர்வம் கொண்டிருந்தனர் முக்கியமாக ஆலய பணிகளில் மும்முரம் காட்டினர். அவர்களில் அரசகுலத்தவரிம் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல்
பழக்கம் இருந்தது.

இந்தியாவின் மக்கள் தொகுதி 40,2 குமார் சுரேஷ் சிங்,ஆந்திராபாலஜி சர்வே என் 2001.

கிழவன் சேதுபதியின் மரணத்தின் போது அவரது 47 மனைவிகளும் உடன்கட்டை ஏறினர் என்பது ஏசுசபை
என்னும் போர்துகேய கத்தோலிக்க திருச்சபை ஆவணங்கள் காட்டும் ஆதாரங்கள்.

கிழவன் சேதுபதி 47 மனைவியரும் தீப்பாய்ந்த காட்சியை பார்த்த பாதிரியார்:




மறவர் குல பெருமன்னர் தலைசிறந்த கிழவன் சேதுபதி இறந்த போது அதனை நேரில் பார்த்த ஏசு சபை பாதிரியார் மார்டின் "மதுரை மிஷன்" என்னும் நூலில்  இருந்து "மதுரா மானுவல்" எழுதிய ஜேம்ஸ் ஹென்ரி நெல்சன்  கூற்று.
According to Nelson whose account appears to be based on the jesuit
letters of Father martin of Madurai Mission:
The death of Kilavan sethupathi followed by one of those painful spectales in spirit of Hinduism his forty sevan wives burnt themselves.At city of Ramnad a land distance is ditch and arrange by the attendent brahmins for sati.The chief widow first wife "held up the sword to his son next hing and praise about husband and thorw herself with loudly upon calling the names of god".

The second wife a kalla women of the sister of pudhukkottai thondaiman
and jump in the fire pit loudly with "oh siva shiva " the name of first boldness.
This ceremoney is done by attendent brahmins after the raise a temple on the incident
of king and queens sati. And wash their ashes in Rameswaram seashore.

கிழவன் சேதுபதி மன்னர் இறந்துவுடன் அவரது கரும காரியங்கள் ஹிந்து முறைப்படி நடந்து கொண்டு இருந்தது. இதை பிராமணர்களே செய்தனர். அவரின் 47 மனைவியரும் தீப்பாய ஒரு இடத்தை இராமநாதபுரம் நகருக்கு வெளியே ஒரு மிகப்பெரிய பள்ளம் வெட்டப்பட்டது. அதில் கட்டைகளால் நிரப்பபட்டு.நிரப்பட்ட கட்டைகளை அடியில் பிராமணர்கள் தீ மூட்டினர். அப்போது சேதுபதி மன்னர் பிரேதத்திற்கு மாலைகளையும் அணிகளன்களையும் அலங்கரித்து தீ மூட்டப்பட்டது.

முதல் மனைவியும் பட்டத்து அரசியும் முதல் மனைவியான மறக்குல மாதரசி சேதுபதி மன்னர் பயன்படுத்திய அரச வாளான "ராமபானம்" என்னும் வாளை தாங்கி மார்போடு அனைத்து  அந்த வாளை அடுத்து வரும் மன்னனான இளவரசனை பார்த்து பேசத்தொடங்கினார். "இந்த வாள் எதிரிகளை வீழ்த்தி எப்போதும் வெற்றிகளை பெற்ற வாளான இந்த பொக்கிஷத்தை வேறு எதற்க்கும் பயன்படுத்த கூடாது.உன் குடிகளை இரத்தம் சிந்தி காப்பாற்றவே பயன்படுத்த வேண்டும்.
உணது குடிகளுக்கு நீ தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அவர்களை காத்து இந்த தேசத்தை நெடுநாள் ஆள வேண்டும்.

ஆனால் எனக்கு அவர் போன பின் இந்த மண்ணில் ஏதுமில்லை ஆதலால் அவரது தடத்தை  பற்றி அவருடன் செல்கிறேன். என இளவரசனான அந்த புதிய மன்னனிடம் கொடுத்துவிட்டு எந்த எண்ணமும் இல்லாமல் "சிவசிவசிவ" என கூறிக்கொன்டே எரிந்த குளியில் விழுந்தார்.

அடுத்து இரண்டாம் விதவையான கள்ளர் குல அரசியார் வந்தார். இவர் புதுக்கோட்டை தொண்டைமான் சகோதரி ஆவார். அவரின் அருகில் ஒரு சகோதரி அவரின் நகைகளை வாங்கிகொண்டார். அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.அருகில் நிறை பெண்கள் அவரை கட்டி பிடித்து அழுதுகொண்டு நின்றனர். அவரை தேற்ற முடியாமல் தடுமாறினார்கள். எல்லாவற்றையும் விளக்கிய பின்னர் அவரும் "சிவசிவசிவ" என கூறிக்கொண்டே தைரியத்துடன் தீப்பாய்ந்தார்.

இதனை கண்டு பாதிரியாரும் அவருடன் வந்த ஐரோப்பிய வீரர் ஒருவரும் பதறி நின்றனர். இப்படி அனைத்து மனைவியரும் தீப்பாய்ந்த உடன் அந்த சிதை முழுவதுமாக எரிந்தவுடன் பிரமணர்களால் அது ஒரு துனியில் பத்திரமாக எடுக்கபட்டு இராமேஸ்வரத்தில் கரைக்கபட்டது.


சிதை எரிந்த இடத்தில் சிறிது நாளில் சேதுபதி மன்னரும் இராணியரும் தீ சமாதி அடைந்த இடத்தில் ஒரு கோவில் சேதுபதி மன்னனை கவுரவ படுத்த கட்டபட்டது.

சுத்தமான சத்திரிய வர்க்கத்தின் சடங்கு இது. இது ஒன்றே சோழர்களுக்கு பின் தமிழர்களுக்குள் நடந்த ஆதாரப்பூர்வமான சடங்கு இதுவே ஆகும்.





உடன்கட்டை ஏறிய உத்தம மறத்திகள்:



ஆதிகாலத்தில் உடன்கட்டை ஏறுதல் எனும் "சதி" என்னும் வழக்கு இருந்தது. கேட்போரைக்கிலிகொள்ளச்செய்யும், இந்நிகழ்வுகள் பல வரலாற்றுத்தடங்களை நம்மிடையே விட்டுச்சென்றுள்ளது. அதைச்சிறிது காண்போம்!

தீப்பாய்ந்த நாச்சியார்கள்!

சங்ககால்த்தில் இருந்த சிதையேறும் மகளிர்:

சேரன் செங்குட்டுவன் கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைந்தபோது, குலவழக்கப்படி நெடுஞ்சேரலாதனின் மனைவியான "நற்சோணை" என்ற சோழ மகள் உடன்கட்டை ஏறினாள். செங்குட்டுவன் தன் தாயாரின் நினைவாக கோயில் எடுக்க எண்ணி, இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோயில் எடுத்தலே சிறப்பு எனக்கருதி இமயத்தின் மீது படையெடுத்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி நாடு மீண்டான். "நற்சோணையம்மன்" சேரர் குலதெய்வம் ஆனாள். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துாரில் 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த கல் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சேத்தூர் மாரியம்மன் கோயில் பின்புறம் காலியிடத்தில் குப்பை இடையில் ஒரு கல் சிற்பம், தனியார் ஆங்கிலப்பள்ளி எதிரே பள்ளத்தில் சாய்ந்த நிலையில் இரண்டு கல் சிற்பங்கள் கண்டுகொள்ளப்படாமல் இருந்தன. இது தொடர்பாக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது: இப்பகுதியில் பழங்காலத்தில் சமுதாயத்தின் உயர் நிலையில் உள்ள தலைவர், வீரன், குறுநில மன்னர் இறந்தால், அவரது மனைவியும் சேர்ந்து இறந்து விடுவது வழக்கத்தில் இருந்தது. கணவன் மீது வைத்திருந்த காதல் மிகுதியால் மனைவி உடன்கட்டை ஏறுவது சமூக மரபாக இருந்தது. சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் பற்றி பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.

சோழர்கள் தமிழகத்தை ஆண்ட காலத்திலும் பலதாரமணம் நடைமுறையில் இருந்தது. ஆனால், இதில் ஒருத்தியே பட்டத்து அரசியாக இருக்க தகுதிபெற்றவள் ஆவாள். பூதப்பாண்டியன் இறந்தபொழுது அவன் மனைவி பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறியதை வரலாறு காட்டும். கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றி சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்கும்முன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராஜராஜ பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள்.


இதைப்போல சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் திருமணத்திற்கு பின் நோய்வாய்ப்பட்டார் அவரது தந்தை பெரிய உடையணத்தேவர் மஹாராஜா அவர்கள்.பெரிய உடையணத்தேவரின் மரணம் சேது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய பலவீனம் ஆனது. இவரது இறுதி சடங்குகள் நாலுக்கோட்டை அருகில் உள்ள கந்தமாதனப் பொய்கையில் நடந்தது. சந்தனக் கட்டைகளால் அடுக்கப்பட்ட சிதையில் மறக்குல ராணியார் சிந்தாமணி நாச்சியார் எனும் உத்தமமறத்தி தன் கணவருடன் உடன்கட்டை ஏறினார். இருவரும் இறந்ததன் நினைவாக நிறுவப்படும் நினைவுக்கற்களே' சதிக்கல்' என அழைக்கப்படுகிறது. இத்தகைய சிற்பங்கள் வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. சொக்கர் - மீனாட்சியாக வழிபாடுமாரியம்மன் கோயில் பின்புறம் உள்ள சிற்பத்தை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சொக்கர் - மீனாட்சி என்ற பெயரில் வழிபட்டு வந்துள்ளனர். இச்சிற்பத்தில் ஆணும்,பெண்ணும் அமர்ந்த நிலையில் ஆண் தனது வலது காலை கீழே தொங்கவிட்டபடி, இடது காலை மடக்கி வைத்திருப்பது போன்றும், அருகில் ஓரு பெண் வலது காலை மடக்கியும் இடது காலை தொங்க விட்ட நிலையில், ஆண் தனது வலது கையில் அல்லிமலர் ஒன்றை வைத்திருப்பதும், இடது கையைத் தன் தொடை மீது வைத்துள்ள நிலையில், இதே போல பெண்ணும் வலது கையில் கண்ணாடியுடன், கொண்டையை பிடித்திருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் ஆணின் தலையலங்காரம் கிரீடம் போன்றும், ஆண், பெண் இருவரின் காதணிகளும் தோள்பட்டையை தொட்டவாறு சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. அதோடு சிற்பத்தின் கீழ்பகுதியில் ஒரு பெண் மட்டும் தன் இரண்டு கால்களை மடக்கி அமர்ந்துள்ள நிலையில், வலது கையில் அல்லி மலர் ஒன்றை ஏந்தியுள்ளது போன்று செதுக்கப்பட்டுஉள்ளது. மற்ற இரண்டு சிற்பங்களில் சற்று வித்தியாசங்களுடன் பூச்செண்டு, வாள் வைத்திருப்பது போன்று மிக அழகாக வடிவமைத்துள்ளனர்.

சேத்தூர் பாளையக்காரரின் மறைவால் பிரிவாற்றாமை தாங்காத அவரின் மனைவியான ராணியார் அவர்கள் கணவரோடு உடன்கட்டை ஏறியதலின் நிகழ்வாகவே அவ்விருவர் சிலைகளும் வடிவமைக்கப்பட்டு தற்போது சேத்தூர் ஜமீன் குடும்பத்தினரால் வழிபடப்பட்டு வருகிறது. சேத்தூர் ஜமீன்தார்கள் வணங்காமுடி பண்டார (பண்டாரம் -பொக்கிஷம் )மறவர் பிரிவைச்சேர்ந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக. கிழவன் சேதுபதி மன்னர் இறந்தபின் அவரின் 47 மனைவியரும் அவருடன் உடன்கட்டை ஏறியதாக வரலாறு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே கொக்க ரசன்கோட்டை என்ற ஊரில் பஸ் நிறுத்தம் அருகில் ஒரு மாலைக்காரியம்மன் கோயில் உள்ளது. 18-ம் நூற்றாண்டில் இவ்வூரில் வசதி வாய்ப்புடன் இருந்த குடும்பத்தைச் சேர்ந்த மறவர் ஒருவர், குதிரையில் வந்தபோது இடறி விழுந்து இறந்துவிட்டார். அவருடன் அவர் மனைவியும் உடன்கட்டை ஏறினார்.இதனால் அப்பெண்ணின் விருப்பப்படி அவருடைய வம்சாவளியினர் இக்கோயிலைக் கட்டி தற்போதும் வழிபாட்டில் உள்ளது.

இன்னுயிரை தீயில் மாய்த்த ஈழத்து மறத்திகள்!


ஈழத்தில் முற்குகர் வன்னி மறத்திகள் மட்டகளப்பு குடா நாடுகளில் தங்கள் கனவனை போல அரசு செய்துவந்தனர். இவர்களை வன்னி நாச்சிமார் என வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது.

யாழ்ப்பாண வன்னிநாட்டிற் கண்டெடுக்கப்பட்ட பழைய ஏட்டுப் பிரதியொன்றில் பின்வரும் வரலாறு காணப்படுகின்றது:- “அறுபது வன்னியமார்(மறவர்கள் )இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து ‘அரசு’ புரிந்துகொண்டிருந்தனர். அவர்கள் இங்கு வரும்போது தம்முடைய மனைவிமாரை மதுரையில் விட்டுவிட்டு வந்தனர். அக்காலத்திலே வட இலங்கையின் பல பாகங்களைப் பறங்கிக்காரர் கைப்பற்றத் தொடங்கினர். அப்பொழுது அந்த வன்னியமார் அறுபது பேரும் பறங்கிக்காரரோடு போர் புரிந்தனர். அவருள் 54 பேர் போரில் மாண்டனர்.” (மேல் வரும் பகுதி நேரடியாக ஏட்டுப் பிரதியிலிருந்து எடுக்கப்பட்டதாகும்). “ஆனால், அக்கூட்டத்தில் ஐவர் பறங்கிக்காரரோடு பெரும் போர் நிகழ்த்தி தாம் இருக்கும் வன்னி நாட்டைக் கைப்பற்ற விடாது அவரை முறியடித்து, முள்ளியவளை முனையாக அந்த நாடுகளையும் அரசு பண்ணினர். ஒருவன் கண்டி இராசனுக்குத் திசை (திசாவா) (2) யாகப் போய்விட்டான். அதன்பின்னர் எஞ்சிய ஐந்து வன்னியமார்கள் மதுராபுரிக்குப் போய்த் தமது மனைவிமாரை இட்டு வரும்படிஓடமேறிச் சென்றனர். அவர் போகும்போது அவர் போன ஓடம் கடலில் ஆழ்ந்துவிட்டது. அதனால், அவர் மாண்டனர்.” “இது இவ்வாறிருக்க அந்த வன்னியமார் அறுபது பேருடைய பெண்சாதிமார் மதுரையிலே இருக்கும்போது ஒரு நாள் அந்த நாட்டரசன் அவர்களிருக்கும் தெருவீதியிலே குதிரை மீதேறி, பெண்கள் இருக்கும் தெரு என்றும் கவனம் பாராது தன் குதிரையை ஓட்டி வந்தான். அவ்வாறு அவன் வந்தபடியினால் அவர், ‘இனிமேல் நாங்கள் இங்கிருந்தால் எங்களுடைய மானம் கெட்டுப் போகும். எங்கள் முதலாளிமார் இலங்கை நாட்டிற்குப் போய் இராசாக்களாக இருப்பதால் நாங்களும் அவ்விடம் போக வேண்டும்’ என எண்ணினர். தமது பயணத்திற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டு தங்கள் பணியாட்களுடன் ஓடமேறி வட இலங்கைக்கு வந்தார்கள். பின்னர் வன்னிய நாட்டுக்கு வரும்போது வன்னியமார் இறந்த சேதிகொண்டு தூதன் பின்வருமாறு சொல்லுவான்: “எங்கள் முதலாளிமார்கள் 60 பேரிலே 54 பேர் பறங்கிக்காரருடன் பொருதுபட்டுப் போனார்கள். ஒருவர் கண்டியில் இராசாவுக்குத் திசையாக நிற்கின்றார். மற்ற 5 பேரும் பறங்கிக்காரரையும் வென்று வன்னியை ஐந்து பற்றாகப் பிரித்து அரசு பண்ணினார்கள். அப்படி அரசு பண்ணிவிட்டு அந்தந்தப் பற்றுக்கு அந்தந்த வேளாளரை முதன்மையாக்கிப் போட்டு முள்ளியவளையிலே இளஞ்சிங்க மாப்பாணனை(இளஞ்சிங்க வீரன் என்னும் மறவன்) [சேதுபதி செப்பு பட்டயத்திலே அவரின் பட்டங்களாக இளஞ்சிங்கம்,தளசிங்கம்,சொரி முத்து வன்னியன் என அவரது விருதுகள் வருகின்றது] முதன்மையாக்கிப் போட்டு மதுரைக்கு வந்தார். அதன் பின்பு அவர் கதை யாதொன்றுந் தெரியாது” என்றனர். “இவ்வாறு தூதன் சொல்ல அது கேட்டு முன்னமே இறந்த 54 வன்னியமார்களுடைய பெண்சாதிமார்களும் தெல்லிச்சி வாய்க்காலிலே (3) தீயிலே வீழ்ந்து மரணமடைந்து போனார்கள். அப்போது அவர்களுக்கு நாச்சிமார் என்று பெயராயிற்று. அவர்களுக்குக் குதிரை விட்டுவந்த சேவகரும்(மறவர்களின் குதிரை சேவகரான பள்ளர்) அறுபது பேரும் வீரக் குடும்பன்(குதிரை சேவகர் தலைவர்) முதல் ஆரிய குடும்பன் முதலாகத் தீயில் விழுந்துவிட்டார்கள். அன்றுமுதல் அவர்களுக்கு (மறவர் பென்கள் குடும்ப மக்களை தன் அண்ணன் என அழைப்பது வழக்கம்) அண்ணமாரென்னும்பெயராயிற்று. ஒரு வன்னிச்சிமாரும் வன்னி ஐந்து பற்றிலுமிருந்து அரசு புரிந்தார்கள் அதன் காரணத்தால் பெண்களுக்கு வன்னிமை என்றும் ஆண் பிள்ளைகளுக்கு ‘ஐதாந்தி’ என்றும் பெயராயிற்று.” இவ்வன்னிநாட்டு வரலாறு ஒருபுறமிருக்க யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் வழிபாடிருக்கும் சில பகுதிகளில் வழங்கும் வரலாற்றை இங்கு தருவாம். அது பின்வருமாறு: ஆறு வன்னிமைப் பெண்கள் வன்னி நாட்டிலிருந்து ஆட்சி புரிந்து வந்தனர். பறங்கிக்காரர் வட இலங்கையின் ஒரு பகுதியை கைப்பற்றிய பின்னர் வன்னியையும் கைப்பற்ற முயன்றனர். ஒவ்வொரு முறையும் அவர் முயற்சி பலிக்காமல் போரில் தோல்வியுற்று வன்னிநாட்டினின்றும் திரும்பவேண்டியவரானார். ஏதோ ஒரு வகையாகத் தாம் வெற்றி பெறவேண்டுமெனப் பெரும் ஊக்கத்துடன் தமது படையை அணிவகுத்துப் பின்னரும் சென்றனர். அங்கு போய் வன்னிநாட்டுப் படைகளுடன் பெரும் போராற்றினர். இம்முறை வன்னிநாட்டவர் படை சிறிது தளர்வுற்றனர். அதைக் கண்ட அந்த நாட்டினை ஆளும் வன்னிமைப் பெண்கள் அறுவரும் அவரது பணிப்பெண் ஒருத்தியும் ஆண்களைப்போல், அம்பு, வில்லு, வாள், சதங்கை முதலிய படைதாங்கித் தமது சேனையை நடாத்திப் பறங்கியர் முன்னர் வந்தனர். இருபடையினர்க்கிடையிலும் இதுகாறும் நடந்த போர்களைக் காட்டிலும் பெரியதோர் போர் மூண்டது. இப்பெண்கள் பறங்கியர் படை எதிரில் நின்று மிகுந்த வீரத்தோடு போர் செய்தனர். அதனால், பறங்கியர் முதுகுகாட்டி ஓடவேண்டிய நிலையும் வந்தது. எனினும் ஏதோ சூழ்ச்சியால் பறங்கியர் தலைவன் போரை வென்றனன். அதனால், வன்னிப்படையினர் மனமுடைந்தனர். அப்பெண்கள் ஏழுபேரும் பறங்கியரின் கைகளில் அகப்பட்டால் மானபங்கம் அடைய நேரிடும் என உள்ளம் பதைத்தனர். மானமிழந்து வாழ்வதைக் காட்டிலும் உயிர் நீத்தலே சாலச்சிறப்புடைத்து என உறுதி கொண்டனர். உடனே அப்பெண்கள் எழுவரும் நஞ்சுண்டிறந்தனர். அதைக்கண்ட வன்னிநாட்டவர் அவரைத் தெய்வமாக்கினர். கற்பினிற் சிறந்து விளங்கிய கண்ணகியைக் கடவுளாக்கி வழிபடும் தமிழ் மக்களாகிய வன்னிநாட்டவரிடை வீரத்திற் சிறந்து திகழ்ந்த இவ்வெழுபெண்களையும் வழிபடும் வழக்கம் எளிதிற் பரவியது, நாளடைவில் இவ்வழிபாடு வன்னிநாட்டில் மட்டுமின்றி ஏனைய இடங்களுக்கும் பரவியது. யாழ்ப்பாணத்திலே வடமராட்சி(வட மறவர் ஆட்சி)கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நாகர்கோயில் என்னும் ஊரிலும் பருத்தித்துறை, சாளம்பை(4) வட்டாரத்திலும், காங்கேசன்துறை வன்னியனார் வளவிலும் அராலியிலும் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியிலும் இவ்வழிபாடு இன்றும் நடைபெறுகிறது.

மருது வணங்கிய தீப்பாய்ந்த அம்மன்!

கணவனும் மனைவியுமான இருவர் பிழைப்பு தேடி தங்கள் ஊரான கோசுகொண்டுவை விட்டு புறப்பட்டு வந்தவர்கள் வழியில் மருதுகளின் நரிக்குடி சத்திரத்தில் தங்கியிருந்தனர். நேரமோ நள்ளிரவு.அவர்களின் நாய் மட்டுமே அவர்களுக்கு துணை. அந்த நேரம் அங்கு வந்த கயவர் கூட்டம் நயவஞ்சகத் திட்டம் ஒன்றினை தீட்டியது. கணவரிடம் நயமாக பேகி பேச்சுக் கொடுத்து கொண்டே காட்டு பக்கம் கூட்டி சென்று நாடான் ஊருணி எனும் குளத்தருகில் கொன்று போட்டனர். சென்ற கணவன் திரும்பாதது கண்டு மனைவி துடித்தாள். நாய் வழி காட்டிட கடைசியில் அது நின்ற இடத்தில் கணவனின் பிணத்தை கண்டாள்.நரிக்குடி சத்திரத்திற்கு திரும்பி வந்து நடந்த துயரை சொல்லி புலம்பினாள். அங்கிருந்தவர்கள் மன்னரிடம் சென்று முறையிட சொன்னார்கள்.சிவகங்கை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள். கண்ணீரும் கம்பலையுமாக தம் முன் நிற்கும் பெண்ணை கண்ட மருதரசர்கள் ''உற்ற துன்பம் என்ன?'' என்று உசாவி முடிக்கும் முன்பே ''அரசே பிழைக்க வழி தேடி வந்தால் உயிருக்கே உலை வைத்து விட்டார்களே! இந்த நாட்டில் ஊருக்கு ஊர் கொலைக்களம் என்று தெரிந்திருந்தால் வேறெங்காவது போயிருப்போமே! இது தான் உங்கள் நாட்டில் நீதியா?'' என்று கண்ணகி போல் தன் ஆவேசத்தை கொட்டி தீர்த்தாள். கேட்ட பார்த்திபர்கள் அவளையும் உடன் அழைத்துக் கொண்டு கொலைபட்ட இடம் நோக்கி விரைந்தனர். அதற்குள் கயவர்கள் பிடிபட்டனர். உரிய விசாரணைக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டது. தாயினும் மேலாக பார்த்துக் கொள்வதாக  கூறியும் அப்பெண் மறுத்து தன் கணவனுடன் தீப் புகுந்தாள். தீப்புகும் முன் தன் சேலையும், கருகமணி, காதோலையும் கருகாதிருக்குமென்று உரைத்து விட்டுத் தீப்புகுந்தாள். உடல் கருகிய பின் கருகாதிருந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டு மருதிருவர் குடும்பத்தினரால் நரிக்குடி முக்குளத்தில் பாதுகாக்கப்பட்டன. அப்பெண்ணை தீப்பாய்ந்த அம்மனாக போற்றி அவர் சிதையிலிருந்து எரியாமலிருந்து எடுத்ததாக கூறப்படும் கீழ்க்கண்டவற்றை நார்ப்பெட்டியில் பரணில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும் விசேட நாட்களில் அதை எடுத்து வீட்டு பெண்கள் வழிபடுவர் என்றும் மருதரசர்களின் வாரிசுதாரர்கள் சொல்கின்றனர். பெரிய மருதுகள் வழியினரான முக்குளம் முன்னாள் கர்ணம் முத்துக்கருப்பன் சேர்வை இல்லத்தில் உள்ள அந்த நார்ப்பெட்டியில் வைத்துப் போற்றிக் காக்கப் படுபவை :- 1.பதினாறு முழ வெள்ளைப்புடவை. 2.கருகமணி. 3.காதோலை. 4.கணவர் அணிந்திருந்த வட்டுடை. 5.ஒரு நீளமான பை. 6.வெட்டப் பயன்படுத்திய அரிவாள். 7.இவற்றை கட்டிய கொச்சக்கயிறு ஆகியவை. அன்று மருதுகளின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் அமைதியைக் குலைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் கயவர்கள் செய்த கொடூரச் செயல்களினால் ஒரு பத்தினிப் பெண் பாதிக்கப்பட்டாள்.

பட்டுக்கோட்டையில் பத்தினித்தெய்வம்!

 பட்டுக்கோட்டையில் இருந்து கிழக்கே முத்துப்பேட்டை சாலையில் தாமரங்கோட்டை கிராமத்திற்கு அடுத்ததாக இருக்கும் பரக்கலக்கோட்டை கிராமத்தில்!.. இந்த தாமரங்கோட்டை கிராமத்தில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் - தன் கணவனின் சிதையோடு ஒன்றி உடனாகி தீக்குள் தீயாகி நின்ற திருவிளக்கு - நல்லம்மாள் எனும் மாதரசி!.. அந்த அம்மையார் தீக்குள் புகுந்த இடத்தில் முளைத்தெழுந்தது - ஒரு மாங்கன்று. சிலவருடங்களில் அதை அரவணைத்து ஆல் ஒன்றும் முளைத்தது. மாங்கன்று ஆலமரத்தினுள் ஐக்கியமாகி விட - இப்போது அங்கே விளங்குவது பிரம்மாண்டமான ஆலமரம் மட்டுமே. மாதரசி நல்லம்மாள் இன்னும் இந்த ஆலமரத்தில் உயிர்ப்புடன் உறைகின்றாள். அதனாலே - தீப்பாய்ந்த அம்மன் என்றும் தீப்பாய்ந்த நாச்சியார் என்றும் சித்திரை முதல் நாளில் பெரியதொரு விழா எடுத்து கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

 சதிகல்!



 கணவன் இறந்த பிறகு தீப்பாய்ந்த பெண்ணும் நடுகல் தெய்வமானாள். சங்ககால இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பரணர், நச்சினார்க்கினியர் ஆகியோர் நடுகற்கள் தொடர்பான செய்திகளைக் குறிப்பிடும்போது மேற்கோள் பாடல்களையும் குறிப்பிட்டுள்ளனர். இதில் தொல்காப்பியர் அகத்திணையை ஏழாக வகுத்துக் கொண்டது போல புறத்திணையையும் ஏழாக வகுத்துக்கொண்டார். இதே போல சங்க இலக்கியத்தில் உடன்கட்டை ஏறிய மனைவியரைப் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. புறநானூறு 250-ஆம் பாடல் உடன்கட்டை ஏறிய கற்புக்கரசியைப் போற்று இவ்வாறு பாடுகின்றது தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும் கேள்வரை எட்டி இறைஞ்சுவர். (பரிபாடல் 20-80-89) புறநானூறு கற்புக்கு அடையாளமாக அருந்ததியைக் குறிப்பிடுகிறது. (புறம் 22-8-9) சிலம்பும் அருந்ததியைப் போற்றுகிறது. பிற்கால நூல்களும் அருந்ததியைப் போற்றும் இருந்து தோன்று விசும்பின் உலகத்து குறும்பை மணிப்ப+ண் புதல்வன் தாயே என்று அகம் அருந்ததியைப் பாராட்டுகிறது.(அகநானூறு 42-3-5) கணவன் இறந்த பின் தீப்பாய்ந்து இறந்து போன பெண்ணிற்காக நடுகற்கள் எடுக்கப்பட்டன. 

கைம்மை நோற்கும் பெண்கள் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருந்ததும் கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டிருந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம். மற்றொரு புறம் கணவன் இல்லாத வாழ்வைப் பொறுத்துக்கொள்ளமுடியாது தீப்பாய்ந்து இறந்துபோன பெண்களைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடியதைக் கண்டு தீக்குளிப்பதை பெண்கள் விரும்பியிருக்கவேண்டும். இக்கோயில்கள் மாலையம்மன்கோயில், தீப்பாய்ந்த அம்மன்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. தீப்பாய்ந்து இறந்துபோன பெண்களின் உருவங்கள் கணவனோடு அமர்ந்து இருப்பது போன்றம் சேர்ந்து இருப்பது போன்றும், கணவனை வணங்கி நிற்பது போன்றும் சதிகற்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர கற்பின் பெயராலும், கணவன் இறந்தாலும் தம் எதிர்காலம் பாழ்பட்டுப்போய்விடும் என்ற அச்சத்தாலும் பண்பாடு, மரபு சிந்தனைகள் தாக்கத்தாலும் பெண்கள் கணவன் மரணமடைந்ததும் தாங்களும் தன் பலியாகச் சிதையில் விழுந்து இறந்த செய்திகள் கூடக் காணப்படுகின்றன.


தூத்துகுடி மாவட்டம் வேம்பார் என்ற ஊரில் சிவப்பெருங்குன்றம் என்ற மாலைக்கோவில் உள்ளது. இது வேட்டைக்கு போன வீரன் ஒருவன் பாம்பு கடித்து இறந்துவிட அவனின் மனைவி தீப்பாய்த ஞாபகமாக கட்டப்பட்ட கோவிலாகும். இதை மறவர் சமுதாயத்தினர் குலதெய்வமாக அவர்கள் வம்சாவளியினர் வழிபட்டு வருகின்றனர்.

நடவுப்பாடல்களில் "தீ" நாச்சியார்!

நடவுப்பாடல்:- நடவு நடும்போது பெண்கள் வயல்களில் பாடும் பாட்டு நயம் கலந்தவை. "தீப்பாய்ந்த நாச்சியாரே தேசம் போற்றும் ஆச்சியாரே மங்கை குறை சொல்லிவாரேன் அம்மா என் மனக்கவலை மாற்றவேவேணும் - அம்மா ஊரை விட்டுப் போனவரை காரிலேறி தேடப்போனேன் காடுவோட்டும் நடவர்தாண்டி அம்மா கண்ணடிச்சி பாக்குராண்டி அம்மா"....... ......இன்னும் வரும்!

எனவே தீப்பாய்தல் என்னும் சதி அரசுமகளிர் தற்கொலை ஜௌகர் என்னும் வழக்கம் இராஜபுத்திரர்கள் மட்டுமல்ல தமிழகத்து மறத்தியர்களிடமும் இருந்துள்ளது என முற்காலம் காட்டும் ஏடுகள் பல உள்ளன.


 வாழ்க! முக்குலத்து மறத்திகள் தியாகம்! ... வளர்க! ...தீ... நாச்சியார்கள் வழிபாடு! !!!!

நன்றி:
உயர் திரு ஐயா அமரர் எஸ்.எம் கமால்


ஆவணங்கள்:
Jauhar practise of Ramnad is Witness in
Military Country Correspondence,vol IX(10-2-1771)
St.George Fort Documents about Arcot Nawab wars.

Castes of Mind:Colonialism
and making of Modern India
By Nicholas B.Dirkes

People of India, Volume 40,part 2
Kumar suresh sing,anthropological survey
of India,2001

 .

Thursday, April 13, 2017

தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம்

(சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு)

பொன் விழையும் தஞ்சை சீமை அதில் புகழ் விளங்கிய வரலாறுகள் பல உள. அதில் உண்டான பேரரசுகளும் சிற்றரசுகளும் காவிரித் தமிழன்னைக்கு அழகு சேர்த்த செல்வங்களாக உள்ளன. அதில் சோழப் பேரரசர்களின் புகழ் வீழ்ந்த பின் பல அந்நியர்களின் கையில் வீழ்ந்த தஞ்சை மன்னில் தமிழ் வளர்த்த தொல்குடி சிற்றரசர்களின் புகழ்கள் காலத்தில் மறந்திரா வண்ணம் அறந்தாங்கிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் உள்ள கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடி போன்ற பகுதிகளில் தமிழ் வளர்த்து பேராண்மையுடன் வாழ்ந்த தமிழ் சிற்றரசர்களான வழுவாட்டி தேவர்களின் சரித்தரத்தை பார்ப்போம். இந்நூல் அந்த வழுவாத தேவர்கள் சரித்திரத்தை அவர்களின் சந்ததியினர் வெளியிட்ட நூலின் மூலத்துடன் அவர்களின் ஒப்புதலாலும் ஊக்குவித்தலால் இக்கட்டுரையை சமர்பிக்கிரோம்.

தாணான்மை நாடும் வழுவாத தேவர்களும்:

தாணான்மை என்ற சொல்லிலே எவருக்கும் அடிபணியா "தாளான்மை" என்ற சிறப்புடன் தன்னகத்தே கொண்ட தன்னரசு நாடு என்பது விளங்கும். எனவே இச்சிற்றரசர்கள் சுயகவுரத்திற்கும் வீரத்திற்கும் பேர் போன வீர மக்களாகும். அதனாலே தங்கள் நாட்டுக்கு தாணான்மை நாடு என பெயர் வைத்துள்ளனர்.இதற்க்கு குலமங்கலம்,கீரமங்கலம்,நகரம்,சேந்தன்குடி இன்னும் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தாணான்மை நாட்டுக்கு "சேந்தங்குடி" தலைநகரமாகும். இன்று அது சிற்றூராகினும் முன்னாளில் அது சிறப்புர விளங்கியுள்ளது. இதனாலே நகரம் என்னும் சிற்றூரும் அருகே உள்ளது.


வழுவாடி தேவர்கள்:

இந்த சிற்றரசர்களின் பட்டம் வழுவாட்டி தேவர்கள். வழுவாடி என்னும் பெயர் பாண்டிய மண்ணன் வழுதி என்னும் பெயருடனும் மற்றும் வீரத்தை குறிக்கும் பெயராக இருப்பினும். இவர்களின் முழுப்பட்டமான "வணங்காமுடி வழுவாட்டி தேவர்" என்னும் பெயரிலே அதற்க்கு விளக்கம் உள்ளது. அதாவது "வணங்காத முடி புணைந்து தன் தரித்த முடியை எக்காலகட்டத்திலும் வழுவாத பண்பை கொண்டவர்கள்". எனவே நீதி,செங்கோல் இவைகள் தன்னை விட்டு வழுவாமல் ஆட்சிபுரிந்தவர்கள் ஆதலில் இவர்கள் "வணங்காமுடி வழுவாத தேவர்கள்" என்ற பெயரே காலபோக்கில் "வணங்காமுடி வழுவாட்டி தேவர்கள்" என்ற பெயரானது.அத்தகை வீர மைந்தர்களின் பூர்வ வரலாறை பார்ப்போமாக.


பூர்வீகம்:

இவர்களின் வரலாறு சில ஒலை சுவடிகள் மூலமாகவும் செவி வழிகதைகளினாலும் மேலும் 1951-ல் புள்ளான்விடுதி மதுரகவி நடேசகோனார் அவர்கள் எழுதிய "விஜயாந்தகளிப்பு" என்ற நூலையும், சேந்தங்குடி செந்தமிழ் புலவர் து.அ.சுப்புராம் அவர்களால் எழுதப்பெற்று 1983-இல் வெளிவந்த "சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு" என்ற நூலையும் இன்னும் சிலரின் வரலாற்று  குறிப்புகளையும் ஆய்வு செய்து இன்நூலை எழுதியுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.


இவர்கள் பாண்டிய நாட்டை பூர்வீகமாக கொண்ட குடிமக்களாகும். அவர்கள் தொடக்கத்தில் மதுரைப்பக்கத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்தவர்கள். அவர்கள் அவ்வாறு வந்தவர்கள் என்பதை பாளையத்தாரோடு நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்த ஒரு குறிப்பில்

"ஆதியில் வீரத்தேவன்,ஆவாத்தேவன்,
ஆண்டித்தேவன்,கூத்தா தேவன், என்ற நான்கு
சகோதரர்கள் மதுரைக்கு மேற்கே உள்ள சிவகிரி வடமலையிலிருந்து பலவான்
குடிக்கு கீழ்புறமாய் உள்ள வன்னியன்
சூரைக்குடி" யிலும் கோனாப்பட்டுக்கு சமீபமாய்
உள்ள குருந்தம்பாரையிலும்
வந்து சிற்சில காலம் தங்கி கடைசியாக
இந்த குளமங்கலம் வந்து குடியேறினர்"
என்று அரண்மனை வழுவாட்டி வாசகத்திலிருந்து
படித்து இருக்கிரேன், ஆவாத்தேவன் வழி வந்தோர் என் மூதாதையர்"
என்றும் எழுதியுள்ளார்" -- புலவர் :தா.ச. இராமசாமி.


அந்த நால்வரும் ,குருந்தன்பாறையில் தங்கி இருந்த போது அங்கிருந்து இடம்பெயர்ந்த காரணத்திற்கு பல சமூகத்திலும் புழங்கும் "மகட்கொடை மறுப்பு கதையை" கூறுகின்றனர். "மகட்கொடை மறுப்பு கதை" ஒரு பகுதியிலிருந்து இன்னோரு பகுதிக்கு செல்லும் மக்கள் நாங்கள் பஞ்சம் பிழைக்க வந்தோம் என கூறுவது மரியாதை தராது என்பதற்காக "மன்னன் பெண் கேட்டு அதை ம்றுத்து" வந்தோம் என கூறுவது அவர்கள் கவுரவத்தை  உயர்வாக எண்ண தோன்றும் ஆதலில் அந்த வழக்கத்தை தொன்று தொட்டு பல்வேறு சமூகமும் கூறும் காரண கதையாகும்.

இப்படி வந்தவர்கள் தங்கிய இடம் "அரசர்குளம்" .அங்கு அரன்மனையில் தஞ்சம் அடைந்தனர். இவர்களின் வீர வரலாற்றை கேட்ட அரசர்குளம் அரசன். அவர்களுக்கு அடைக்கலம் தந்து அரண்மனையில் பாதுகாவலராக பணியில் அமர்த்தினான்.


இப்படி வந்த வீரத்தேவன் என்பவரும் அவரின் மனைவியும் கர்ப்பவதியான பொன்ன்மாள் அரசர்குளத்தில் தங்கி ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தாள் அக்குழந்தைக்கு "விஜயன்" என பெயர் வைத்தனர். உரிய  பிராயத்தில் விஜயன் வளர்ந்து கல்வி,போர் பயிற்ச்சிகளில் சிறந்தவனாக வளர்ந்து அவ்வரண்மனையில் படைதளபதியானான்.

செவி வழி கதையை ஆராய்ந்து நிஜவரலாறை சிந்திப்போம்:

மேலே சொன்னது செவி வழிக்கதையாய் இருப்பினும் அதில் சில உண்மைகளும் இருக்கிறது. இதில் சொன்ன "அரசர்குளம்" என்பது இன்றைய பாலையவநத்தம் ஜமீன். அதன் அரசன் வணங்காமுடி பண்டாற தொண்டைமான். அதைபோல் சேந்தங்குடி ஜமீன் மூதாதையர்கள் பாண்டிய நாடு சிவகிரி,வடமலை பகுதிகளில் இருந்த பாண்டிய நாட்டு மறவர் குலத்தோர்கள். இவர்கள் பாண்டிய சேனையில் தளபதிகளாகவும் சிற்றரசர்களாகவும் திகழ்ந்துள்ளனர். பிற்கால பாண்டிய பேரரசர்களின் ஆட்சி டில்லி சுல்தாண்களால் சிதைந்த பின் குருந்தன்பிறை சூரைக்குடியிலிருந்து கிளம்பி சென்றுள்ளனர். சூரைக்குடி பகுதியை ஆண்டவன் விஜயாலயதேவன் என்பது அதைப்போல் சேந்தங்குடி ஜமீந்தார்களின் பெயர்கள் விஜயதேவர்கள் என்பது ஒற்றுமை ஆய்வுக்குரியது. இதைப்போல் சூரைக்குடி அரசர்களுக்கு தொண்டைமான் என பெயர் இருப்பது போல அறந்தாங்கி தொண்டைமான் அவர்களின் வழித்தோன்றல்கள் பிற்காலத்தில் பாலவநத்தம் பகுதிக்கு குடியேறியதாக நம்ப படுகிறது. பாலவனத்தம் ஜமீனும் சேந்தங்குடி ஜமீனும் சம்பந்திமார்கள். இருவருக்கும் இடையில் 500 வருடமாக திருமண சம்பந்தங்கள் உள்ளது. என்வே அறந்தாங்கி தொண்டைமானும் சூரைக்குடி விஜ்யாலயத்தேவன் சந்நிதியும் பாலவனத்தம்,சேந்தங்குடி அரசர்களின் மூதாதயர்களாக கருதலாம்.















எனவே அரசர்குளம் என்பது பாலவநத்தம் ஜமீன். அரசன் ஒருமுறை வேட்டை ஆடுவதற்காக பாலைவனம் சுனையக்காட்டு பகுதிக்கு சென்றிருந்தார் அப்போது பட்டுக்கோட்டைப் பகுதியயை ஆண்ட பட்டு மழவராயன் வீராச்சாமி மழவராயன் ஆவுடையார் கோவில் தேர்த்திருவிழா காண சென்றபோது அரசன் வேட்டைக்கு சென்றுள்ளான் என்பதை அறிந்து கெட்ட எண்ணங்கலைக் கொண்டு அரசர்குளம் அரண்மனையை பிடிக்க முயன்றான். அப்போது விஜயனும் அரசர்மகனும் எதிர்த்து போரிட்டு விரட்டினார்கள்.

"
"ஆங்கரசர் வேட்டைக்கு போன பின்னர்
அம்புக்கோவில் முதலாய் அரசு செய்வோன்
பாங்கான கள்ளர் குல மழ்வராயன்
பண்டு பட்டுக்கோட்டை தனில் அரசு செய்தோன்
நதீங்காக மாதர்கள் மானபங்கம்
செய்ததனால்....
அவன் பெயர் வீராச்சாமி மழவராயன்

அவன் மறுத்து கொடுமை கூறி
கூளிபோல் பொங்கியவன் சிறைபிடிப்பேன் குலமாதர்
தம்மை கொதித்தான் மன்னோ"


அரசர்க்குளம் அரசர் வீட்டில் இல்லை என்றாலும் பட்டுக்கோட்டை பட்டு மழவராயன் வீராச்சாமி அரசர்குளம் அரண்மனை அரசியையும் மற்றவர்கலையும் சிறைப் பிடிக்க முயன்றபோது விசயனும் இளவரசனும் பட்டு மழவராயன் படை மீது பாய்ந்து போர் தொடுத்தார்கள்

"வாள் விசயன் மெய்மறந்தான் சிறைபிடிப்பேன்
மாதர்கள் தம்மை யென்ர வார்த்தையாலே

தலை விசயம் கொண்டான் விஜயத்தேவன்
நண்ணார் மேல் பாய்ந்திடான் புலியே போல்
கேட்ட கேட்ட மக்களெல்லாம் ஓடிவந்தார்
கிடைத்தாரை சாடினர் மறவர் மக்கள்
ஓட்ட ஓட்டமாய் ஓடும் மழ்வராயர் உயிர்பிழைக்க!"

-அ.சுப்புராம செல்வமுத்துதுரைத்தேவர்

மாவீரன் விஜயத்தேவனை  பற்றி புள்ளான் விடுதி நடேசகோனார் அவர்கள் 1951 எழுதிவெளிவந்த சேந்தங்குடி ஜெமீன் விஜயானந்தக்களிப்பு நூலில் விஜயன் பட்டுக்கோட்டை பட்டு மழவராயனுடன் போரிட்ட வரலாறை விமர்சியாக பாடியுள்ளார்.


"அன்பே பைந்தங்கமே விஜயா -ஆர்க்கும்
அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள் வெற்றி விஜயா"

"வாகொத்த பனங்குளம் கிராமம் மறவர் வந்து
குடியான குளமங்கலம் கிராமம்
கொற்றமங்கலம் கிராமம்
கீரமங்கலம் க்ராமம்
நகரம் சேந்தங்குடி கிராமம்
மாட்சிமை துலங்க வர ஆட்சி செய்யுமாறு
மகுடம் சூட்டி அரசர் ஜமீன் தர"


அரசர்குளம் ஆட்சிபகுதிகளில் அமைந்திருந்த அம்புலி ஆற்றிருக்கும் வில்லுனி ஆற்றுக்கும் இடைப்பட்ட சேந்தங்குடி,குளமங்கலம்,கொத்தமங்கலம்,கீரமங்கலம்,நகரம், பகுதிகலை உள்ளடக்கிய சேந்தங்குடி கிராமத்தை தலைமையிடமாக கொண்டு சேந்தங்குடிப்பாளையம் உருவாக்கி கி.பி.1486(கொல்லம் ஆண்டு 661) மாவீரன் விஜயத்தேவனை சேந்தங்குடி பாலையக்காரணக முடி சூட்டினார்கள். அதுமுதல் பதினைந்து பாளையக்காரர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளார்கள்.


சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஆட்சி தொடரும்போது அறந்தாங்கி தொண்டைமாண்கள் ஆண்டுவந்துள்ளனர். அம்புகோவில் பட்டுகோட்டை பகுதியில் பட்டு மழ்வராயர்கள் என்ற கள்ளர் குலத்தவர்கள் ஆண்டு வந்துள்ளனர். எனவே சிதம்பரம்,சீர்காழி சென்ற் ஆவாத்தேவன் கூத்தாடித்தேவன் குத்தாலம் சென்ற சிரம்பிராண்டி இவர்கள் அனைவரும் சேந்தங்குடி திரும்பி வந்தனர். இவர்கள் விஜயனின் சிற்றப்பன்மார்கள்.


மேற்கண்ட மூவரும் முதலில் குளமங்கலம் வந்து தங்கி இருந்தபோது இவர்கள் மறவர் இனத்து  தேவர் மரபினர்களாக இருந்ததால் இப்பகுதியில் கள்ளர்கள் குலபெண் எடுப்பதற்காக மாவீரன் விஜயத்தேவன் பெண் தேடி ஆலங்காடு சூரன்விடுதி,கீழாத்தூர்,தொண்டைமான் குலப்பெண்களை திருமணம் செய்து வைத்தார்கள்.


"திரை புகழும் விஜயன் வழுவாட்டித் தேவன் சிற்றப்பா மூவர் ஆவர் மேவிய ஆவாத்தேவன்"....

"முறையே ஆலங்காட்டு முத்து தொண்டைமான் அருந்தவப் புதல்வி மீனம்பாளையும் கீழாத்தூர் அருனாசல்த் தொண்டைமான் கொழுந்தான புதல்வி குலக்கொடி சூரன்விடுதி அருணாசலத் தொண்டைமான் புதல்வி பார்வதியும் திருமனம் செய்து வைத்தனர்".

பாளையக்காரன் மாவீரன் விஜயத்தேவன் மறவர் இனத்தேவனுக்கு பனங்குளம் பட்டுக்கோட்டை
 பூச்சு நாயக்கர் குல பெண்ணையும் இந்திர குள கள்ளர் மழவராயர் பெண்னையும் திருமனம் செய்து வைத்தார்கள்.

மாவீரன் விஜய்த்தேவன் மேற்கண்ட பனங்குளம் பெண்களைத் திருமனம் செய்து கொண்டு நாயக்கர் குலப்பெண் வேலரசுத்தேவன் என்ர மகனையும், மழவராயர் மகள் ரெகுநாதன் என்ற மகனையும் பெற்றனர். இதில் விஜ்யத் தேவன் 1526-ம் ஆண்டு இயற்கை எய்தினான். இதில் ரெகுநாத தேவன் சேந்தங்குடி பாளயக்காரனாக மூடிசூட்டப்ப பட்டாண்.

விஜய் ரெகுநாத தேவன் கி.பி.1526 ல் சேந்தங்குடி பாளையக்காரணானார். விஜய நகர பேரரசின் கீழ் தமிழ்நாடு இனைந்து இருந்த் விஜயநகர நாயக்கர் அரசின் மேலாண்மையை ஏற்று சேந்தங்குடியை ஆண்டு வந்தனர்.



சேந்தங்குடி ஜமீன் கி.பி.1553ல் ஆறுமுகத்தேவன் ஆட்சிக்கு வந்தார்
இவரின் பங்காளிகள் அவர்கள் முறையே
1.மொத்தி வீட்டார்
2.தோப்பு  வீட்டார்
3.செம்பன் வீட்டார்
4.பொட்டிரான் கொல்லையார்
5.உப்புக்கார வீட்டார்
6.காங்கேயன் வீட்டார்

இவர்கள் நகரம்,குளமங்கலம்,வலப்பிரமங்காடு,சித்துகாடு பகுதியில் வாழ்கிறார்கள்.


கி.பி.1553-86ல் முருகப்பதேவர் ஆட்சிக்கு வந்தார் இக்காலத்தில் மதுரை பகுதியில் குருந்தம்பாறையில் இருந்து 3-குடும்பங்கள் வந்தன இவர்களோடு பல தொழிலாளிகளையும் தச்சர்கள்,வண்ணார்கள் முதலிய பலரையும் அழைத்து வந்தனர்,

இவர்கள் வகையில் சின்னுத்தேவன் மக்களாகிய சவுக்குபுஞ்சை வகையிரா,ஏழுவீட்டார் வகையறா,நம்பன் புஞ்சை என்ற பிரிவுகளில் வாழ்ந்து வந்தனர்,

இக்காலக்கட்டத்தில் சேந்தங்குடி பாளையத்தில் கீரமங்கலம் சிவன் கோவில்,பனங்குளம் பெருமாள் கோவில் தேர் திருவிழாக்கள் நடைபெற்று வந்துள்ளதாக ஜமீன் தலைமையில் நடந்தது என தெரிகின்றது.


கி.பி.1586 இல் முள்ளிபுஞ்சை மன்னகுட்டி வாரிசுகளாக சேந்தங்குடியில் பட்டமெய்தினர்.


சேதுபதி மன்னர்களும் சேந்தகுடி பாளையக்காரர்கள் பற்றிய குறிப்புகள்:

இராமநாதபுரம் சேதுபதி மன்னன்,சேந்தங்குடி பாளையக்காரனிடம் வரி வசூலிக்க முகமதிய தூதுவனை சந்தங்குடிக்கு அனுப்பினான்.ஆண்டு தோறும் ஐந்நூறு  பொன் திறை என்றே வேண்டி யாங்கு செலுத்திவர மேலிரண்டு வருடங்கள் பூண்ட கப்பம் செலுத்தாமல் போகச் சேது மன்னன் தூண்டுத் தூதுவன் ஏவிச் செல்லும் கப்பம் கொணர்கள் என்றார்கள்.

வந்த தூதுவன் பலாப்பலம் சாப்பிட ஆசைப்பட்டான்

பலாப்பலம் சாப்பிட்ட தூதுவன் மீசையில் பிசிர் ஒட்டிக் கொண்டது . அதற்க்கு சாம்பலை தேய்த்தால் அது நீங்கிவிடும் என கூறி சாம்பலை தடவ பிசிர் போகாத நிலையில் வேறு வழியில்லாமல் தூதுவனின் மீசையும் கிருதாவையும் வெட்டி அனுப்பினர். ஊரே கேலி செய்தது தூதுவன் நிலை கண்டு. தன் தூதுவன் அடைந்த அவமானம் கண்டு சேதுபதி படையெடுத்து வந்து சேந்தங்குடி பாளையக் கிராமங்களை தீயிட்டு கொழுத்தினர்.

இதன் பின் சேதுவின் படைகளை முறியடிக்க சேந்தங்குடி மறவர் படைகளை தயார் செய்து விஜயத்தேவர் போரிட்டார். இதன் பின் சேதுபதியும் வழுவாடியும் சமாதனம் பேசப்பட்டு இருவரும் நன்பராணார்கள்

"தோழர் பலரும் தொடர்ந்து பின் வர
ஆழி சூழ் சேதுவின் அணிநரரெய்திக்
கோபதி விஜய ரகுனாத சேதுபதி புகுந்து
வணங்கி..

..மன்னவன் வழுவாட்டிக்கு அவரின் வீரத்தை பாராட்டினார், இது போக சேதுபதி மன்னரிடம் பேய்குதிரையும் அடக்கி ஆத்திக்கோட்டை ஆயிரம் வேலியும் முன்பாலை கிராமத்தையும் பெற்றார் வழுவாடித்தேவர்.

இராமநாதபுரம் சேதுபதி வழுவாட்டி தேவருக்கு சிற்ப்பான ஒரு விருதாக "வனங்காமுடி  வழுவாட்டி தேவர்" என்ற பட்டத்தையும் வழங்கினார். நாயக்கர் ஆட்சிக்குபின் சேதுமன்னர்கள் ஆட்சிக்கு கீழ்  சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.1625ல் மன்னன் வழுவாட்டியும் மெய்காவலன் மங்கங்காலடியும் பட்டுக்கோட்டை அருகே சூரியபுரம்,அலிவலம் பகுதியில் வெட்டி கொன்றனர். ப்ன்னாளில் அக்கோவில் முன் இருவரும் உருவச்சிலை அமைத்து வீரவணக்கம் நடைபெற்று வருகிறது.

தஞ்சை நாயக்கர் ஆட்சிக்கு பின் இராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சிக்குக்கு கீழ் 
1.சேந்தங்குடி
2.பாளையவனம்
3.சிங்கவனம்
4.புனல்வாசல்
5.நெடுவாசல்
6.பாதரங்கோட்டை
7.கல்லாகோட்டை
8.கந்தர்வகோட்டை
9.சில்லத்தூர்
10.கோனூர்
11.மதுக்கூர்
12.அத்திவெட்டி
13.பாப்பாநாடு
 போன்ற பாளையபட்டுகள் இருந்து வந்தது.



இதில் கோனூர்,அத்திவெட்டி,சிங்கவனம் அஞ்சுகொத்து மறவர்கள். சேந்தங்குடி வனங்காமுடி கோப்பி குல மறவர்கள்,நேம நாட்டுமறவர்கள்,அணில் ஏறாக்கோட்டை மறவர் அதலை மறவர் என இப்பிரிவுகள் எதிலாவது வரலாம்.
மொத்தத்தில் மறவரே எனினும்  இன்னும் உட்பிரிவு கண்டறியப்படவில்லை.


1676ல் இராமநாதபுரம் கிழவன் சேதுபதி மன்னர் கறம்பக்குடி,பிலாவிடுதி பச்சைதொண்டைமான் தன் படைத்தலைவனாக்கி ஆண்டுவந்தான். இவன் சகோதரி காத்தாயியை சேதுபதி திருமனம் செய்து கொண்டு புதுக்கோட்டை பல்லவராயனை கொன்று அவனது பகுதிகளுக்கு பச்சை தொண்டைமானை இரகுநாதராய தொண்டைமானை என பெயர்  சூட்டி புதுக்கோட்டைக்கு அரசனாக்கினார்.
பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் ஆளுகைக்கு வந்தது சேந்தங்குடி வந்தது. அப்போது ஒரு சிறு புலிக்குட்டியை குடுத்து பரிசளித்தார். இதனால் தஞ்சை மன்னர்களால் பாராட்டப்பட்டார்.


சேந்தங்குடி வழுவாடித்தேவர்கள் பாண்டியர் வழித்தோன்றல்?

சேந்தங்குடி பாளைய்க்காரர்களின் குல தெய்வம் பெருங்கரைமிண்ட அய்யனார் கோவில் கல்தூன்களில் மீன் சின்னங்கள் மதுரையை ஆண்ட பாண்டியர்களை நினைவுபடுத்துகின்றது.மேலும் "சேந்தன்" என்னும் பெயர் மதுரை பாண்டியர்களில் கானப்படுகின்றது. வழுவாடித்தேவர் என்னும் பெயர் கூட வழுதி என்னும் பாண்டியரின் பெயரை குறிக்கின்றது. மேலும் சேந்தங்குடி ஜமிந்தார்கள் மதுரை பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பதில் இவர்கள் பாண்டியர்களின் ஒரு பிரிவினராக கருதலாம்.

ஒருமுறை மராட்டிய மன்னர் அழைப்பை ஏற்று தஞ்சை அரண்மனை மேல் மாடியில்  மன்னருடன் பேசிகொண்டிருந்தார் அப்போது ஒரு நாரை தலைக்குமேல் பறந்தது. அப்போது  பறந்த நாரையை வில்லம்பால் வீழ்த்தினார் வழுவாடியார் இதனால் வியந்த மராட்டியமன்னர் அதம்பை,காயாவூரி கிராமங்களை வழங்கினார்.

கி.பி.1728ல் ரகுநாத வழுவாடித்தேவர் பட்டத்துக்கு வந்தார்.
இவரின் வழி வந்தவர்கள் ஆறுபிரிவினர்கள்
1.மொத்திவீட்டார்
2.முள்ளிபுஞ்சையார்
3.வடக்குவீட்டார்
4.முண்டன் கரை
5.தெற்குவாடியார்
6.நாட்டாம் புஞ்சையர்.என கூறுகின்றனர்.


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபு அவர்கள் 25-1-1871 ஓர் ஆனையின் மூலம்  நேப்பியர் பிரபு அவர்கள் 25-1-1871 ஓர் ஆனையின் மூலம்,தமிழகத்தில் உள்ள பாளையக்காரர்களுக்கு வரையறை செய்து ஆனையிட்டுள்ளார்.  தஞ்சை மாவட்டத்தில் இருந்த சேந்தங்குடி பாளையக்காரர்கள் மற்றும் 12 பாளையக்காரர்கள்,ஜெமீந்தார்களுக்கு இந்த ஆனையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விபரம்,தஞ்சை.ந.மு.வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரத்தில்
சேந்தங்குடி பாளையக்காரர்கள்,கள்ளர் மரபினர்கள் என்று எழுதியுள்ளார்.

ஆனால் சேந்தங்குடி பாளையக்காரர்களின் முன்னோர் மதுரைப்பகுதியில் இருந்து வந்த மறவர்கள். மறவர் இனத்தின் பொதுவாண தேவர் பட்டம் கொண்ட மறவர்கள். இவர்களில் சேந்தங்குடி முதல் பாளையக்காரன்,மாவீரன் விஜயத்தேவன்(கி.பி.1486) இவரைப்பற்றி புள்ளான்விடுதி நடேசகோணார் 1951ல் எழுதி வெளிவந்த "விஜயானந்த களிப்பு" என்னும் நூலின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர். சேந்தங்குடி பாளையக்காரர்களின் வழிதோன்றிய அனைவரும் மறவர் இனத்து தேவர் குல மக்களே.

கள்ளர் பெண்களை அதிகமாக மணந்த சேந்தங்குடி ஜமிந்தார்கள்:

சேந்தங்குடி ஜெமீன் வழி வந்தவர்கள் கள்ளர் இனப்பெண்களையே ஆதியில் ஆலங்காடு,சூரண்விடுதி,கீழாத்தூர் பனங்குளம் மழவராயன் பெண்களை எடுத்து வந்துள்ளார்கள்.பிண்ணாளில் சேதுபதி சேர்வைக்காரர் வழி வந்த மாப்பிள்ளை துரை பெண்களை மனந்தார்.

"தானான்மை நாட்டில் வெகு பெண்களிருக்க
நத்தமாலே பழநி சென்றார் இரண்டு
நாரியரும் வன்னியர்குமாரிகளே கொண்டார்
வித்தாரமாச் சிலது நாளே துரைகள்
விந்தையோடு வாழ்ந்தார்"
- நடேசக்கோணார்

பழனி சென்று வன்னிய குல கள்ளர் மரபினரான பழநி கருப்பண்ண தேவரின் இருமகள்களாகிய முத்துலெட்சுமி ஆயியாரை 13-வது ஜமிந்தாருக்கும் அவர் தம்பி ராசுத்துரை தங்கம்மாள் ஆயியாரையும் திருமணம் செய்து கொண்டணர்.

பிண்ணாளில் பாலையவனம் ஜெமிந்தார் விஜயரகுநாத வணங்காமுடி பண்டாரத்தார் இரு புதல்விகளாகிய சின்ன ராசாமணி ஆயியார்,பெரிய ராமசாமி ஆயியார் இருவரையும் திருமணம் செய்து கொண்டார்கள் ஜமீன் தம்பி ராசுத்துரைத்தேவர்.

சேந்தங்குடி மன்னர்களின் ஜாதி பற்றிய முரணான செய்திகள்:

சேந்தங்குடி ஜமீன் பற்றி முதல் தவரான் குறிப்பை புதுக்கோட்டை மேனுவலில் வெங்கட் ராம அய்யர்
வெளியிட்ட குறிப்பில் புதுக்கோட்டை திவான் ஸ்ரீனிவாச அய்யர் தந்த குறிப்பில் நகரம் ஜமிந்தார்கள் வலையர் வகுப்பார் என தவராக எழுதியுள்ளார் தஞ்சை மாவட்டத்தில் இருந்த அன்றைய சேந்தங்குடிஜமீன் பற்றி தெரியாமல் ஏதோ மராட்டிய மன்னர் சரபோஜி தந்த நிலத்தில் மன்னரானார் வழுவாடி என
தவராக எழுதியுள்ளார். இது ஒரு குறிப்புகளில் முற்றிலும் அரைவேக்காடான செவி வழிசெய்தியை பதிவு செய்துள்ளனர்.

நாயக்கர் காலத்துக்கு முன்னே அறந்தாங்கி தொண்டைமான் காலத்தே ஏற்பட்ட ஜமீன் சேந்தங்குடி.

இதன் பின் சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபுவின் 25-01-1871 நிர்வாக ஆனையில் அது தஞ்சை பகுதி 
கள்ளர் ஜமீன் என குறிக்கபடுகின்றது. அதுவும் அறியா தகவலே.
கள்ளர் சரித்திரம் எழுதிய வேங்கடசாமி நாட்டாரும் சேந்தங்குடி ஜமீன் என குறித்துள்ளார்.

சேந்தங்குடி ஜமீன் பெரும்பாலும் பெண் எடுப்பது பாலையவனம் கள்ளர் ஜமீனில் தான். ஒரு வலையர் சமூகம் அதுவும் கள்ளர் ஜமீனில் பெண் எடுப்பது இயலாத காரியம். மேலும் வழுவாடித்தேவர் பங்காளிகள்,
சம்பந்தகாரர்கள் மழவராயர்,கச்சிராயர்,தொண்டைமான்,பல்லவராயர்,வாயாடியர் என அனைவரும் கள்ளர் என சான்றிதழ்கள் வைத்துள்ளனர். அவர்கள் கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடியிலும் அதிகமாக உள்ளனர்.
மேலும் வழுவாடித்தேவர்கள் சிலருக்கும் கள்ளர் என சான்றிதழ்கள் உள்ளன.

மேலும் தஞ்சை சீமையிலே உள்ள அத்திவெட்டி,கோனூர் போன்ற அஞ்சுகொத்து மறவர்கள் என பலரும் அறிந்ததே அவர்களுடனும் வழுவாடித்தேவர் சம்பந்தமுள்ளது.

1949-இல் குமாரசாமி வழுவாடியார் தம் பத்திரத்தில் தனக்கு கடைசியாக இருந்த சேர்வை என்ற பட்டத்தை
வைத்து அவர் அறியாமல் "அகமுடையார்" என சான்றிதழ் வாங்கியுள்ளார். வழுவாடி சேர்வைக்கார்
இரண்டு பத்திரங்களிலும் "அகமுடையார்" என்றே பதியபட்டுள்ளது.

இது பிற்பாடு "அகமுடையார்" என்ற சாதி சான்றிதலை எம்.பி.சி சலுகைக்காக தங்களுக்கு இருந்த அம்பலம்,சேர்வை என்ற பட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த "அம்பலக்காரர்" என மாற்றியுள்ளனர்.
இதுவே சேந்தங்குடி ஜமீந்தாரை  முத்திரையர் சமூகம் என கருத காரணமானது. இது சான்றிதல் குறைபாடுதான் ஒழிய வேறு சம்பந்தமில்லை.

ஆனால் அவர்கள் சம்பந்தம் பூராம் கள்ள்ருடனே தான் ஒழிய முத்திரையர் சமூகத்துடன் அல்ல.

தஞ்சை கள்ளர் சீமையிலே தேவர் பட்டம் பெற்றவர்கள் வழுவாடித்தேவர்களே எனவே தாங்கள் மறவர் இனத்தவர்தான் என பூரணமாக அறிந்திருந்தனர்.

எனவே கடந்த 60 வருடகாலத்துக்கு மேலாக தங்களை மறவர் இனம் மறவர் ஜாதி என கிட்டதட்ட 10 புத்தகங்களுக்கு மேலாக எழுதியுள்ளனர்.

தங்களை அம்பலக்காரர் சமூகம் என காட்டபட்டாலும் தங்களுக்குள்ளே சம்பந்தம் செய்து கொண்டு முத்திரையர் மக்களுக்கும் ஆதரவாக இருந்து தொண்டாற்றி வந்துள்ளனர்.

இவர்கள் தென்பகுதிமக்களே. இந்த கட்டுரையை கண்மூடி தனமாக மட்டும் எழுதவில்லை கோனூர்,அத்திவெட்டி,சிங்கவனம் ஜமீன்கள் மறவர் சமூகத்தவர் என்பதும் அஞ்சுகொத்து திருவாடனை மறவர்கள். அவர்கள் உறவினர்களான செந்தங்குடி மற்றும்  பாலையவன்ம் ஜமிந்தாரின் சம்பந்திகள் எந்த சமூகமாக இருக்க முடியும்.சேந்தங்குடி மறவர் ஜமீனே என்பது தின்னம்.

இவர்கள் வணங்காமுடி கோப்பிகுல மறவர் அல்லது வன்னிய மறவராகவோ அல்லது அனிலேறாக்கோட்டை மறவராகவோ இருக்க கூடும்.  இது சேந்தங்குடி பாளையக்காரர்களே தங்களே மறவர் சமூகம் என ஆனித்தரமாக எழுதிய பல புத்தகங்களையும் அதற்க்கு ஆதரமாக காட்டிய நூல்களும் சான்று.

மேற்கண்ட சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாற்றை தொகுத்து
புள்ளான்விடுதி அமிர்தகவி சு.வெ.நடேசக்கோனார் அவர்கள் எழுதிய "விஜ்யானந்த களிப்பு" என்ற கவிதை நூலை 1951 ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை நூலில் முதல் பாளையக்காரன் பற்றியும் அவர்கள் ஊரில்,அவர்கள் இனம்(ஜாதி) பற்றியும் அவனை அரசர்குளம் அரசர் பாராட்டுவத்ம். அவ்னது சிறியதந்தைகள்

"சொந்தவர் வடமலை முன்னே மறவர் சூழ்ந்துவள வூரதனில் வாழ்ந்தவர்கள் பின்னே வந்தவூர் மாகுருந்த்பிறை அதனில் வாழுமியல் கூறுகிறேன்.

அரசர்குளம் அரசர் மாவீரன் விஜயத்தேவனை பாராட்டுதல்

"அன்பேபைன் தங்கமே விஜயா ஆர்க்கும் அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள்வெற்றி விஜயா போர்க்கு வந்தவரை
வென்று புகழ் வந்தவனே விஜயா"

என சேந்தங்குடி ஜமீனின் தோற்றத்தை கூறுகிறது.



இத்னை யாருடை கவுரவத்திற்கு குறைவாது என கணிவோடு கூறுகிறோம்.


சேந்தங்குடி பதினான்காவது அரசி ஸ்ரீ ராணி மாது தங்கம்மாள் ஆயியார் கி.பி.1925-1943

சிவகங்கை எப்படி ஒரு வேலுநாச்சியார் ஆண்டாரோ அதே போல் ராமநாதபுரத்தை ஆண்ட் முத்து திருவாயிநாச்சியார் ஆண்டாரோ அதே போல் சேந்தங்குடி ஜமீனை தங்கம்மாள் ஆயியார் என்னும் வீர நாச்சியார் ஆண்டுவந்தார். இவர் காலத்தில் நாட்டாங்கொல்லை ரகுபதி வழுவாடியார் ஜெமீன் மனியக்காரராகவும் இருந்து பின் ஜமிந்தார் தங்கம்மாள் ஆயியார் சிறிய தந்தை பெரியசாமி வன்னியனார் சேந்தங்குடி மனியக்காரராக மாறினார். தங்கம்மாள் ஆயியார் தந்தை பெயர் பெரியசாமி வன்னியனார்.

வழுவாடித்தேவர்கள் மதுரை பகுதியிலிருந்து வந்தவர்கள். மதுரை,ராமநாதபுரம்,சிவகங்கை,திருநெல்வேலி பகுதியில் கள்ளர்,மறவர்,அகம்படியார் வீடுகளில் இறந்தால் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ஆண்கள் மேனியில் துண்டு,சட்டை அனியாமல் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு துக்கம் அனுசரிப்பது வழக்கம் அதுபோலே இன்றும் வ்ழுவாடித்தேவர்கள் அனுசரித்து வந்திருக்கிறார்கள்.

சேந்தங்குடி 15-வது ஜமீந்தார் சேதுபதி சேர்வைக்காரர்:

சேந்தங்குடி ஜமிந்தார்களுக்கு சேதுபதி என்னும் பெயர் கொண்ட வழுவாடித்தேவர்களும் உள்ளனர்.
சேதுபதிகளின் உறவினர்களும் வழுவாடித்தேவர்களுடன் சம்பந்தம் செய்துள்ளனர்.

சேந்தங்குடி பாளையக்கார்களின் நகரம் பாலசுப்பிரமணியர் கோவில்
சேந்தங்குடி ஜமிந்தார்கள் பழநி முருகன். ஆண்டுதோறும் ஊர்கூடி காவடிகளும் மாலை அணிந்து பழநி செல்வது வழக்கம். பழனி முருகண் கோவில் போல் செயற்கை குன்று அமைத்து ஒரு முருகன் கோவில் கட்டவேண்டும் என்ற ஆவல் கொண்ட் வழுவாடித் தேவர் 1878-79ல் புதுக்கோட்டை திவான் சேசுவா சாஸ்திரி உதவியுடன் நகரம் முருகன் கோவிலை அமைத்தார்.
இந்த கோவிலுக்கு சேதுபதி மன்னர்,தஞ்சை சரபோஜி மன்னர்களும் நிலக்கொடை வழங்கியுள்ளனர்.
மிக பிரசித்தி பெற்ற கோவில் இது.

மேற்கண்ட சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாற்றை தொகுத்து
புள்ளான்விடுதி அமிர்தகவி சு.வெ.நடேசக்கோனார் அவர்கள் எழுதிய "விஜ்யானந்த களிப்பு" என்ற கவிதை நூலை 1951 ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை நூலில் முதல் பாளையக்காரன் பற்றியும் அவர்கள் ஊரி,அவர்கள் இனம்(ஜாதி) பற்றியும் அவனை அரசர்குளம் அரசர் பாராட்டுவத்ம். அவ்னது சிறியதந்தைகள்

"சொந்தவர் வடமலை முன்னே மறவர் சூழ்ந்துவள வூரதனில் வாழ்ந்தவர்கள் பின்னேவந்தவூர் மாகுருந்த்பிறை அதனில் வாழுமியல் கூறுகிறேன்.
அரசர்குளம் அரசர் மாவீரன் விஜயத்தேவனை பாராட்டுதல்

"அன்பேபைன் தங்கமே விஜயா ஆர்க்கும் அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள்வெற்றி விஜயா போர்க்கு வந்தவரை
வென்று புகழ் வந்தவனே விஜயா

பாருக்கு சீரிட்ட  மறவர் கால பாசமே வந்தாலும் பயம்ற்ற மறவர்
போருக்கே பேர்பெற்ற மறவர் உடலை
போட்டாலும் போரில் வென்காட்டாத மறவர்
வீரமேயுருவான மறவர் அமரில் வீராதி வீரரை வீழ்த்கிற மறவர்
ஆருமே நிகரற்ற மறவர் ஆர்க்கும் அஞ்சாத வேந்தரையும்
கெஞ்சாத மறவர்"
-புள்ளான் விடுதி நடேசக்கோனார்("விஜயன் களிப்பு")

மேற்கண்ட கவிதை நூலின் வாயிலாகவும்,மதுரைபகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் இவர்கள் மறவர் இனத்து தேவர் பட்டம் பெற்றவர்கள் என்பதும் தெளிவாக்கபட்டுள்ளது.

சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஏறக்குறைய பதினைந்து பாளையக்காரர்கள் ஆட்சியில் அவர்கள் கட்டிய சேந்தங்குடி கருப்பண்ண சுவாமி கற்கோவில் முகப்பில் மீன் சின்னம் காணப்படுகின்றது. அவர்கள் கட்டிய நகரம்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் முகப்பில் மீன் சின்னம் காண்ப்படுகிறது. அதன் அருகில் உள்ள இடும்பர் கோவில் முகப்பின் மீன் சின்னம் காணப்படுகின்றது இவைகலைக்கொண்டு பார்க்கும் போது இவர்கள் மதுரைபகுதியில் இருந்து வந்த பாண்டிய மன்னர்களின் ஒரு பிரிவினர் என உறுதியாகின்றது.

சேந்தங்குடி பாளையக்காரர்கள் கி.பி 1486 முதல் கி.பி1948 ஆண்டுகள் ஆட்சியில் தொண்டைமான்,விஜயநர மன்னர்,தஞ்சை மராட்டியர்,இராமநாதபுரம் சேதுபதி இறுதியில்
ஆங்கிலேயர் மன்னர்கள் போன்ற பலர் ஆளுகையில் இருந்தாலும் தன்னரசு ஆட்சி நடத்தினர்.

இவர்களிடம் அவ்வப்போது ஆட்சி மாற்றங்கள் வாரிசு உரிமைப்போர்கள் நடைபெற்றுள்ளன.

பெண்களும் வாரிசு உரிமை போர்கள் ஏற்பட்ட போது ஆட்சிக்கட்டில் ஏறி உள்ளனர்.

அவ்வகையில் சேந்தங்குடி ஜெமிந்தார் ராணி தங்கம்மாள் ஆயியார் வாரிசு தன் மகனுக்காக பசுமகரானியாக இருந்து மகன் இறப்புக்கு பின் இப்பகுதியில் பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளனர். சேந்தங்குடி ராணி தங்கம்மாள்  வாரிசு இல்லாமல் 21-03-1943ல் இறந்து போனார். அதனால் ஏற்பட்ட வாரிசு உரிமைப்போர்களில் நீதி மன்றங்கள் ஏறியுள்ளனர்.

இந்தியா விடுதலை பெற்ற சூழலிலும் ஜெமின் வாரிசு உரிமைபோர் நடைபெற்று அதற்க்கு தீர்வு காண இங்கிலாந்து பிரிகௌன்சில் மற்றும் இந்திய உச்ச் நீதிமன்றம் வரை சென்று தீர்வு கண்டுள்ளார்கள்.

சேந்தங்குடி ஜமீன் பரம்பரையினர் நகரம்,கீரமங்கலம்,குளமங்கலம்,கொத்தமங்கலம் கோயில் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள்.

சேந்தங்குடி ஜெமீன் பரம்பரையினர் இப்பகுதியில் தமிழகம் பூராவும் பரவி பெருமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் மேலும்,முதல் பாளையக்காரர் வழி வந்த சிறிய தந்தை ஆவாத்தேவன் வழிவந்த குளமங்கலம் கோப்பியர் முதுகாடு குழு செல்லையா பழைய சட்டமண்ற உறுப்பினர் மற்றும் கீரமங்கலம் சு.சண்முகனாதன்  பழைய சட்டமண்ற உறுப்பினரும் மறவர் இனத்து தேவர்களே.

மேலும் அரசியல் பலம் பெற்ற இம்மக்கள் 1952-2013 வரை புதுக்கோட்டை ஆலங்குடி தொகுதி பேராவூரனி தொகுதி சட்டமண்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்தனர்.
இதுபோக பேராவூரனி ஒன்றியம்,திருவரங்குளம் ஒன்றியம்,அறந்தாங்கி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் என்னற்ற ஊராட்சி தலைவர்களாகவும் பதவி வகித்து வந்துள்ளனர்..

சின்னவன்னியனார் எனும் சேந்தன்குடி மறவர்.

வன்னி -வன்னியன் – வன்னியனார் எனும் பெயர்ச்சொல், சாசனங்கள் – இலக்கியங்கள் – பத்திரங்கள் ஆகியவற்றில் பயின்று வந்துவிட்டாலே சிற்றறிவு உள்ள மூடர்களில் இருந்து கற்றறிந்த சில பேரறிஞர் வரை சட்டென்று உடனடியாக தற்கால வன்னியர் சாதியைக் குறித்துதான் அது என்று கையைக் காட்டுகின்றனர். எதையும் சரியாக ஆராயாமல் முடிவெடுக்கும் இவர்களால்தான் சரியான சமூக வரலாறு மக்களுக்கு கிடைப்பதில் பெருந் தடை ஏற்படுகிறது.

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மறவரின் அடிமடியிலேயே கை வைக்கும் போக்குகள்தான் தற்காலத்தில் இணையதள வரலாறு பேசும் முட்டாள்களின் கை வண்ணமாக திகழ்ந்து வருகிறது.

•சேந்தன்குடி சின்ன வன்னியனார்•

“சின்ன வன்னியனார் பணவிடு தூது” என்று ஒரு சிற்றிலக்கியம். இது தூது நூல்கள் வரிசையில், பணத்தைத் தூதாக விடும் பணவிடு தூது எனும் வகையைச் சேர்ந்தது. இந்த வகை தூது இலக்கியங்கள் பல கடவுள்கள், சிற்றரசுகள், செல்வந்தர்கள் மீது பாடப்பட்டவை. அந்த வகையில் மேற்கண்ட தூது நூலில் சேந்தன்குடி வழுவாட்டித் தேவரவர்கள் வம்சாவளியைச் சேர்ந்த பெத்த பெருமாள் எனும் கலங்காப் புலியின் வழியில் வந்த சிவந்த பெருமாள் மீது பாடப்பட்டதுதான் சின்ன வன்னியனார் பணவிடு தூது.

இந்த செய்தியை தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்கள் தொகுத்த சுவடியில் உள்ள சின்ன வன்னியனார் பணவிடு தூது எனும் தலைப்பில் அமைந்த பனையோலைச் சுவடியின் முன் பக்கத்தில் உள்ள ஏட்டிலேயே இச் சுவடி, வழுவாட்டி ஜமீன், புதுக்கோட்டை, மிதிலைப்பட்டி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைக் கூட இந்த மூடர்கள் சரியாகப் பார்க்கவில்லை. இதன் மூலம் அறியும் செய்தி என்னவென்றால்… இந்த சுவடி, வழுவாட்டித்தேவரவர்களின் சேந்தன்குடி பாளையத்துக்குரியது, இது புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சேர்ந்த மிதிலைப்பட்டி சூரிய நாராயண கவி என்பவரால் பாடப்பட்டது என்பதாகும். மூன்று பணவிடு தூது எனும் நூலில் மேற்கண்ட நூலைத் தவிர, மற்ற இரு நூல்களில் ஒன்று, முத்துவிஜய ரகுநாத சேதுபதி மீது சொக்கநாத கவிராயரால் பாடப்பட்ட பணவிடு தூது, மற்றொரு நூல், புல்லைக் குமரேசர் பணவிடு தூது எனும் புல்வயல் ஊரில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் மீது பாடப்பட்டதாகும்.

இவை எதையும் அறியாமல் வன்னியனார் என்று வந்துவிட்டது ஆகவே அது எங்கள் வன்னியர் சாதி என்று குதூகலம் அடைவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை சொல்ல வேண்டியதில்லை!

• பெத்த பெருமாள் வழி•

இந்த சின்ன வன்னியனார் பணவிடு தூது நூலில், பாட்டுத் தலைவனின் முன்னோனாக ” பெத்த பெருமாள்” என்பவன் கூறப்படுகிறான். இந்த பெத்த பெருமாள் யார் என்றால், சேந்தன்குடி வழுவாட்டித் தேவர்களின் முன்னோரில் ஒருவன். இவனைப் பற்றி சுவடியின் 44 வது கண்ணியில் வரும் … ” நீர்முடிமேல் வைத்த பெருமாள் வரத்தினால் அம் மரபில் பெத்த பெருமாள் பிறந்திடினும்” எனும் வரியால் அறியலாம்.

•வன்னியர் யார் •

நாம் பல காலங்களாக கூறுவது.. வன்னியர் என்பது பள்ளி வன்னியர் மட்டுமல்ல… மறவர், கள்ளர், அகம்படியர் எனும் தேவமார்களுக்கும், வேட்டுவர், வலையர், இருளர், காடர், பளியர் எனும் பழங்குடிகளுக்கும் பயின்று வந்த பெயராகும். அதிலும் குறிப்பாக வன்னியனார் – வன்னியன் என்பது ஆதி நாளில் மறவரின் மற்றொரு பெயர் என்பதைத் தக்க தரவுகளுடன் அடிக்கடி நிரூபித்தும் வந்திருக்கிறோம்.

மறக்குலத்து சூரைக்குடி விசையாலயத்தேவனே “வன்னியனார்” என்று முதலில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டவன், இவன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவன், அடுத்ததாக ” இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிய மிண்டன்”- எனும் கல்வெட்டும் புதுக்கோட்டை மாநில கல்வெட்டுகளில் ஒன்றாகும். ஏறத்தாழ தங்களது எல்லாச் செப்பேடுகளிலும், வன்னியன், சொரி வன்னியன், சொரி வன்னிய சூரியன், என்று ராமநாதபுரம் சேதுபதிகளும், சிவகங்கை கௌரி வல்லபர்களும் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். தவிர, மறவர் பாளையக்காரர்களான, சிவகிரி, அழகாபுரி, ஏழாயிரம் பண்ணை, தலைவன் கோட்டை, கடம்பூர், ஊத்துமலை, வடகரை ஆகியோருக்கும் வன்னியர் என்று மாற்றுப் பெயர் உள்ளதையும் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறோம்.

சரி அதெல்லாம் போகட்டும்… இப்போது இந்த வழுவாட்டித்தேவர்கள் யார் என்பதைப் பார்ப்போம், ஏற்கனவே நாம் வழுவாட்டித் தேவர் வரலாறு எனும் தலைப்பில் நமது பக்கங்களில் அந்த ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களே எழுதிய நூலின் விவரங்களையும், அதிலுள்ள செய்திகளையும் பதிந்திருக்கிறோம். இருப்பினும் மீண்டும் ஒரு முறை இதைப் பதிவு செய்கிறோம்.

•வழுவாட்டித் தேவர் மரபும் சாதியும் •

“சேந்தன்குடி வழுவாட்டி பாளையக்காரர் வரலாறு” எனும் தலைப்பில் ‘சேந்தன்குடி ஜமீன். திரு. செந்தமிழ் புலவர், அ.சுப்புராம செல்வ முத்துத் துரைத் தேவர் அவர்களால்’ எழுதப்பட்டு, அரங்க. பொன்னுசாமி MA., M, Lit.,Dip, மானிடவியல்,( அருங்காட்சியக காப்பாளர், தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) அவர்களால் வெளியிடப்பட்ட நூலில், இந்த ஜமீன்தார்கள் மறவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் தென் மாவட்டத்தின் வடமலை, சிவகிரி, குற்றாலம்,‌பகுநிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இச் செய்திகளை கருவூர்சாமி என்பவர் எழுதி வைத்திருந்த பனையோலை மற்றும் அவரின் முன்னோரான சின்னண்ணத் தேவர் எழுதிய பனையோலை ஆகியவற்றின் மூலமாக அறிந்து கொண்டதையும் கூறி, தங்களின் முன்னோர்கள் முருகப்பத்தேவன், பழனிவேல்தேவன் முதலாக, கடைசி ஜமீன்தார் வரையிலும் தெள்ளத் தெளிவாக வம்சாவளி பட்டியலுடன் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த சுவடியில் வன்னியன், வன்னிய குலம் என்று மட்டுமல்ல!…

“மறவர் குல திலகன் “- என்றும் வருகிறது. ( கண்ணி: 15)

இந்த சுவடி நூலின் படி,

1. முருகப்பதேவன், ( மைசூரின் கீழ் அரசெய்தியவன்)

2. பழனிவேல் தேவன் (அரசு துறந்து சென்றவன்)

3. கந்தசாமித் தேவன் (தாய்மாமன் மகளை மணந்தவன்)

4. அருணாசலத் தேவன் ( கேரள மன்னன் மகள் சிவகாமியை காதல் மணம் புரிந்தவன்)

5. வேலரசுத் தேவன்

6. தங்கவேல் தேவன்‌( கேரள இளவரசிக்குப் பிறந்தவன்)

7. குமாரவேல்தேவன் ( வேலரசுத் தேவன் மகன்)

8. சுப்பையாத் தேவன் (குமாரவேல் தேவன் மகன்)

9. முத்துத்துரைத் தேவன் ( சுப்பையாத் தேவன் மகன்)

10. குழந்தைத்தேவன் ( முத்துத் துரைத் தேவர் மகன், )

11. சாமித்தேவன் ( அருணாசலத் தொண்டைமான் மகளை மணந்தவன்)

12. வீராத்தேவன் ( முன்னோர் பூமி குற்றாலம் சென்றவன், சூரன்விடுதி கண்ணுச்சாமி தொண்டைமான் மகளை மணந்தவன்)

13. அப்புத்தேவன் ( சிதம்பரம் சென்று வாழ்ந்தவன், முத்துத் தொண்டைமான் மகளை மணந்தவன்)

14. விசயத்தேவன் ( சேந்தமங்கலம் எனும் ஊரைச் சேந்தன்குடி என்று மாற்றியவன், பூச்சைய நாயக்கர் மகள் பொட்டம்மையையும், இந்திர குலக் கள்ளர் மழவராயர் மகள் ராஜம்மாளையும் மணந்தவர், சேதுபதி மேலாண்மையின் கீழ் ஆண்டவன்)

15.வாசு தேவன் எனும் வேலரசுத் தேவன் ( விசயத்தேவனுக்கு பூச்சைய நாயக்கர் மகள் மூலம் பிறந்த மகன்)

16. ரெகுநாதத் தேவன் ( விசையத் தேவனுக்கு பட்டு மழவராயர் மகள் மூலம் பிறந்த மகன்)

17. முருகப்ப தேவன்

18. வீராத்தேவன்

19. மன்னன் வழுவாட்டித் தேவன் ( சேதுபதியுடன் முரண்பட்டவன், பின்னர் அவரிடம் வணங்காமுடி பட்டம் பெற்று, அவரின் சேர்வைக்காரர் ஆனவன், தஞ்சை மன்னரிடம் பரிசு பெற்றவன்)

20. ரகுநாதத் தேவன்

21. ராமசாமித்தேவன்

22. பெத்த பெருமாள் ( ரகுநாத தேவர் மகன்)

23. ரகுநாத தேவன் ( தஞ்சை மன்னன் துளசா ஜி யிடம் சேர்வை பட்டம் பெற்றார்)

24. சிவந்த பெருமாள் ( பெத்த பெருமாள் மகன்)

25. பெரிய நயினான்

26. வீரப் பெருமாள் தேவன்

27. சின்னச்சாமி தேவன்

28. ரெகுநாதத் தேவன்

29. அருணாசலத் தேவன்

30. கூத்தைய வழுவாட்டித் தேவன்

31. அருணாசலத் தேவன்

32. சின்னச்சாமி தேவன்

33. விஜயரெகுநாதத் தேவன்

34. துரைச்சாமித் தேவன்

35. அருணாசல வணங்காமுடி வழுவாட்டித் தேவன் ( சேர்வைக்காரர் மாப்பிள்ளைத் துரையின் சகோதரி அலர்மேலுவை மணந்தவன்)

36. கருப்பண்ணத் தேவன்

37. மேகவர்ணத்தேவன்

38. முத்துத்துரைத்தேவன்

39. சுப்பிரமணிய வணங்காமுடி வழுவாட்டித் தேவன்

40. சத்துரு சங்கார வேல்சாமித் தேவன்

41. முத்துக்குமார வணங்காமுடி வழுவாட்டித் தேவன்

42. சுப்புராமச் சந்திரத் துரை தேவன்

43. தங்கம்மாள் ஆயியார்

44. முத்துக்குமார வணங்காமுடி வழுவாட்டித் தேவன்

45. சிவகாமி ஆயியார்

46. குமாரசாமி சேர்வைக்காரர்

47. சிங்கமுத்து வழுவாட்டித் தேவர்

– என நீண்ட பட்டியல் உள்ளது.

இவர்களில் சிலர் சேர்வை எனும் பட்டம் பெற்ற காரணமாக அகம்படியர் என்று சாதிச் சான்றிதழ் வைத்திருப்பதாகவும், கள்ளர் குலத்தில் பெண் கொண்டதால் கள்ளர் எனவும் சிலர் சாதிச் சான்றிதழ் வைத்திருப்பதாகவும் அவர்கள் நூலிலேயே குறிப்பிட்டுள்ளனர். மேலும் வலையர் மக்கள் அதிகம் வாழும் பகுதியில் தங்கள் ராஜ்யத்தை அமைத்து வாழ்ந்ததால் தங்களை பொதுப்பெயரான முத்தரையர் என்ற வகையில் அடக்க முயற்சிகள் நடந்ததையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளனர். இவர்களில் குழந்தைத் தேவன் எவ்விதம் தந்திரமாகச் செயல்பட்டு அரசோச்சினான் என்பதை,..

” தானாண்மை நாட்டாரை தந்திரத்தால் தாமடக்கி யாறிலொரு கடமை வாங்கி” – எனும் வரிகள் விவரிக்கும்.

சின்ன வன்னியனார் பணவிடு தூதில், அவனைச் “சின்ன வேந்திரன்” – என்றும் ( 317 வது கண்ணி)

“காவலரில் போசன் நளராசன் ” – என்றும் ( 21-22 கண்ணிகள்)

” பானுநிகர் உக்கிர பிரதாப நளன் “- என்றும் ( 26 வது கண்ணி)

” பொதிய மலை தான் பெற்றோன் ” – என்றும் ( கண்ணி – 13)

என வரும் வரிகள் மறக்குலத்து சொக்கம்பட்டி மன்னருக்கு வரும்” நளச் சக்கரவர்த்தி வம்ச பாரம்பரை” பொதியமலையுடயவன், – என்பவனற்றோடு பொருந்திச் செல்கிறது. மேற்கண்ட மறக்குல மன்னர் திரிவுனச் சக்கரவர்த்தி வழியில் வந்த பாண்டிய வழித் தோன்றல் என சின்னனேந்திரன் செப்பேடு கூறுவதைப் போலவே இங்கும் சின்ன வன்னியனாரை ” தென்னர் குல தீபா” சந்த்ர குல திலகன் – பாண்ட்ய குல சந்ததியான் என்கிறது. இந்த சந்திர குல திலகன் என்று சிவகங்கை மன்னர்களும் செப்பேடுகளிலும், சிற்றிலக்கியங்களிலும் பயின்று வருகிறார்கள். மேலும் முத்தாய்ப்பாக…. ” அஞ்சுநாடாளும் அனபாயன்” (கண்ணி- 15) என்று சின்ன வன்னியனார் குறிப்பிடப்படுகிறார். இது மறவர் குலத்து அஞ்சுகோட்டை நாடாழ்வார்களையும், சிங்கம்புணரி ஐந்துநிலை நாட்டு மறவர்களையும் எண்ணும் விதமாக அமைந்துள்ளது.

கூடுதலாக… பழனியிலிருந்து வன்னியர் பெண்களை மணம்புரிந்து வந்ததாக வழுவாட்டித்தேவர் குடும்ப வரலாறு கூறுகிறது. பழனியில் வசிக்கும் திரு. சந்தனத்துரை எனும் மறவரிடம் ” வணங்காமுடி வன்னிய மறவர்” எனும் சாதிப் பெயரில் பொ.யு 1891 லிருந்து பத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட முத்திரைத்தாள் பத்திரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வணங்காமுடி எனும் பெயரில் சேந்தன்குடி வழுவாட்டித் தேவர் வம்சமும் தொடர்ந்து அழைக்கப்பட்டதும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

ஆக… இங்கு ‘எனது சம்பந்தி உறவுகளான’ பள்ளி வன்னியர் சமூகத்திற்கும் இங்கு குறிப்பிட்ட சின்ன வன்னியனார் எனும் மறவர் சமூகத்திற்கும் (என் போன்ற சிலரைத் தவிர) எந்த வகையிலும் சிறிதும் சம்பந்தமே இல்லை என்று தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன் நன்றி! வணக்கம் 🙏.

Our special Thanks to, திரு . உத்திராடம் அவர்கள்.




























உ.வே.சா. நூலகம், சென்னை.

துணை நூல்கள்.

1. மூன்று பணவிடு தூது.

2. தானாண்மை நாட்டு வரலாறு

3. சேந்தன்குடி பாளையக்காரர் வழுவாட்டித் தேவர் வரலாறு

4. சேந்தன்குடி மாவீரன் வில்லன் சேர்வைக்காரர் பாடல்.

5. பழனி வணங்காமுடி வன்னிய மறவர் பத்திரங்கள். ( சேகரிப்பு)

6. சூரைக்குடி அரசு ( ஆய்வு பதிவுகள்)

கி.ச.முனிராஜ் வாணாதிராயன்.


மேற்கோள் நூல்கள்:

14-05-1891 நகரம் பாலசுப்பிரமனி கோவில் குடமுழுக்கு விழா இதழ்
1863 கிராம மக்கள் நிலங்கள் தானம்
சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபுவின் 25-01-1871 நிர்வாக ஆனை
கள்ளர் சரித்திரம் நமு.வெங்கடசாமி நாட்டார் 1928
சேந்தங்குடி கிரயசாசன்ம் 1943
சேந்தங்குடி ஜமீன் விடுதலை பத்திரம் 27-7-1944
புள்ளான் விடுதி நடேசக்கோனார்
தஞ்சை மாவட்ட நீதி மன்ற தீர்ப்புகள் 1947,50,56...
விஜயானந்த களிப்பு உறை செந்தமிழ் புலவர் செல்வமுத்துதுரை தேவர்
"தாணான்மை நாட்டு வரலாறு"-செந்தமிழ் புலவர் செல்வமுத்துதுரை தேவர்
1993- "தானான்மை தங்கம்மாள்"

சேந்தங்குடி ஜமீன் வழுவாடியார் தீக்கதீர்,தனமலர்,மற்றும் இதழ்கள்.
"பாலசுப்பிரமனிய கோவில் ஆண்டு இதழ்"
என ஆவணங்கள் பல.

-
நன்றிகள்:
"தமிழக வரலாற்றில் சேந்தன்குடி பாளையக்காரர்கள் வரலாறு"
இந்த கட்டுரைக்கு ஆதரவான நூல் எழுதிய
நூல் ஆசிரியர்:
சே.சி கந்தசாமி தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு)
(அ) கந்தசாமி வழுவாடித்தேவர்
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்
தானான்மை நாட்டு முக்குலத்தோர் பேரவை தலைவர்
சேந்தன்குடி

அன்பு சகோதரர் தமிழியக்கன் சேர்வை