Tuesday, September 29, 2015

காரண மறவர்


கல்தேர் ஓட்டிய காரண மறவர்

உத்திரகோசமங்கையில் கல் தேர் ஒட்டிய காரண மறத்தி என்னும் "பொன்னாச்சி அம்மன்" பற்றி கதையும் ஆதாரபூர்வமான சுவடியும் இருக்கும் அது காரண மறவர்களை குறிக்கின்றது. இவர்களை சக்கரவர்த்தி மறவர் எனவும் கூறுவர். மதுரை பூர்வீகமான மறவர்களில் இவர்களும் ஒருவர். இதேப்போல் கொற்க்கை என்னும் தூத்துக்குடி பகுதியிலும் பரதவர் அருகே வாழும் இவர்கள் "பொன்னாச்சி அம்மன்" வழிபாடு உள்ளவர்கள். மதுரை பகுதிகளிலே "பொய்சொல்லா பாண்டியன்" மற்றும் "முத்தையா கருப்பையா" என்னும் இரட்டை தெய்வத்தை வழிபடுகின்றனர். இவர்களில் பலருக்கு கிளைகள் அறியாது சிலருக்கும் மட்டுமே கிளை முறைகள் அறிந்தவர்கள் அது.....

காரன[சக்கரவர்த்தி] மறவர்.

1.தேவன்
2.ராயர்
3.பண்டையோன்
4.பருவச்சான்
5.முருகதினி
6.வளத்தான்















இவர்களை பற்றிய விரிவான வரலாறு விரைவில் பதிவேற்றப்படும். இவர்கள் "படை காரணவர்" களாக மறவர் பாண்டிய படைபற்றில் பனியாற்றிய கல்வெட்டு இரண்டை இங்கு சுட்டுகிறோம்.

க.என் 2/213 ஆண்டு:13-ஆம் நூற்றாண்டு
அரசு:பாண்டியர் அரசன்:கோனேரின்மை கொண்டான்
கோயில்:திருமறைநாதர்
இடம்:திருவாதவூர் மாவட்டம்:மதுரை

செய்தி: இலுப்பை குடி படைப்பற்றில் "படைகாரணவருக்கு" மானியமாக இலுப்பை குடி ஊரை பாண்டியன் வழங்கியுள்ளான்.

கல்வெட்டு:

ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் களவழி நாட்டு இலுப்பை குடி காரணவர்க்கு திருவாதவூர் உடையார் திருமறைநாயனார் கோயில் செய்ய பெருமாள் ஆரணதொழு நின்றான இராசகோபால அமுதுபடி சாத்துபடி நின்றருளிபடி...........

படைகாரணவர் என்பது படைதொழில் செய்யும் படைமறவர்கள் காரணவர் என்றால் தலைவன் என அர்த்தம். படைகாரணவர் படைதொழில் பாண்டியர் வேண்டும் பொழுது படை தொழில் செய்பவர்கள் இவர்களுக்கு மானியமாக வழங்கபட்டுள்ளது.


இதேப்போல்
க.என் 10/2013 ஆண்டு:13-ஆம் நூற்றாண்டு
அரசு:பாண்டியர் அரசன்:கோனேரின்மை கொண்டான்
கோயில்:திருமறைநாதர்
இடம்:திருவாதவூர் மாவட்டம்:மதுரை:
செய்தி: படைப்பற்றில் "படைகாரணவருக்கு" மானியமாக பள்ளிகுறிச்சி என்னும் சமணர்படுகை உள்ள ஊரை பாண்டியன் வழங்கினான்.

கல்வெட்டு:
ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் பள்ளிக்குறிச்சி படைகாரணவர்க்கு தங்களூர் ஆடிமாதம்..............

இவ்வாறு பாண்டிபடைப்பற்றில் பொன்னமராவதி விராச்சிலை மறவரகளை பார்த்தோம். இப்போது காரணமறவர் பற்றி பார்க்க போகின்றோம்.
காரண மறவர்களே பாண்டியனின் ஆபத்துதவிகள்(வேளைக்காரர்):
ஆபத்துதவிகளே பாண்டிய மன்னனின் உயிரையும் குடும்பத்தையும் காக்கும் தற்காப்பு படையினர். இவர்கள்
பாண்டியன் உதிர உறவினர்களே இவ்வேலைகளுக்கு அமர்த்துவர்.

கண்டதேவி சுல்த்தான் கல்வெட்டில்:

தம்பிரான் பெருமாள் மீதாகண்ட வேலக்காரரான காரணவரும்.......

...கள்ளர் கருமர் புறத்தார் எங்கள் சத்துருக்கலான அறந்தாங்கி மறவரும்.....

என வரும் கல்வெட்டில் தென்னவன் ஆபத்துதவிகல் காரண மறவர்கள் என அறியப்படுகின்றனர். இவர்கள்
பாண்டியமன்னனின் மெய்காவலர்கள் ஆவர்.


இரு கல்வெடுகளில் "மதுரைக்கு காரணவரான பராக்கிரம பாண்டிய தேவர்" கொற்கை கொற்றவன் காரண சக்கரவர்த்தி என வந்துள்ளது. பாண்டியர்களின் மதுரை கொற்கை வழியினரான இவர்களை பற்றிய நெடிய பதிவை விரைவில் பதிவேற்றுவோம்..................

மறவர் இனத்தில் பல பிரிவுகள் உள்ளன அவற்றில் ஒன்று காரணமறவர். காரணர் என்றால் தலைவன் என அர்த்தம். இவர்களை படைகாரணவர்கள் என்றும் காரண ஆபத்துதவிகள் என்றும் கூறுவர். இவர்கள் பற்றி சில குறிப்புகளில் இராமநாதபுரம் உத்திரகோசமங்கையை அரசியல் காரணமாக காலி செய்து தூத்துகுடி பகுதியில் குடியேறி யுள்ளனர். இவர்களை பற்றிய புத்தகம் அதில் புராண கதைகள் உள்ளது. அதை பதிவேற்றியுள்ளோம். 


 மதுரை கோச்சடையில் வாழ்வது அம்பொனேரி மறவர் காரண மறவர் அல்ல. காரணமறவர் தூத்துகுடி பகுதியுள் வாழ்கின்றனர். கார்குறிச்சி மறவர் என்பவரும் காரண மறவரே என தோன்றுகின்றது.j



















திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

உ திரிகூடபதி துனை
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்)

Vadakarai aathikkam a story of chokkampatti zamin

அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்)

திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்

வடகரை ஆதிக்கம் - சொக்கம்பட்டி ஜமீன்
திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள
வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம்


பலவித்துவான்கள் இயற்றிய பதினான்கு பிரபதங்கள்
இவை சேத்தூர் சமஸ்தான வித்துவான்கள் மு.ரா.அருணாசலகவிராயர்களாலும் முரா.கந்தசாமிகவிராயர்களாலும் பரிசோதிக்கபட்டு
டிப்ட்டிக் கலெக்டர் ஸ்ரீமான் திரிகூடராஜகோபால செம்புலி சின்னைஞ்சாத் தேவர்கள் என்ற பி.சி.சின்னனைஞ்சா பாண்டியரவர்களாலும்.
தாசில்தார்  பி.வி சின்னனைஞ்சா பாண்டியரவர்களவர்களாலும் அச்சியற்றபட்டன.
[ப்ரபந்தங்கள் 14-ஆம் மதுரை விவேகபானு பிரஸ்சில் மற்றவை மதுரை தமிழ்சங்கம் பவர்பிரஸ்சில்
பதிப்பிட்டவை] தமிழ்சங்கம் பவர்பிரஸ்,மதுரை 1916 (Copyrights rgistered.)

முன்னுரை:

குற்றால மலை கோவிலிலே செப்பு கூறை வேய்ந்து ஐந்து திருத்தேர்கள் செய்து  ஒரு லட்சத்தி எழுபத்தேழாயிரம் பொன் தானம் செய்த வடகரை ராஜகோபால சின்னஞ்சா தேவர்கள் மற்றும் வலங்கை  புலி கருனாலய தேவர்கள் என்ற இரு மன்னர்கள் சிலை இருக்கும். தெற்கத்தி நெல்லை பாளையபட்டுகளிலிலே இதுவே கலசம் என கூறலாம். இவர்களுக்கு மேல் நெல்லை பாளையபட்டுகளில் எவரும் இவ்வளவு கோலோச்சியதில்லை. இருக்கும் பாளையபட்டுகளிலே இதுவே மிக பெரிது என திருநெல்வேலி சரித்திரம் புத்தகத்தில் கால்டுவெல் கூறுகிறார். கேரள திருவிதாங்கூர் சம்ஸ்தானம் என்னும் முழு கேரளாவே இந்த ஒரு பாளையபட்டை கண்டு நடுங்கி இருந்துள்ளது. திருவிதாங்கூரையும் வேனாட்டையும் கொள்ளை கொண்ட மகராசா திருவேணாததேவர் என முழு கேரளத்தையும் ஆட்டி படைத்த பாளையபட்டு என்னும் புகழ் மன்னுக்கு பெருமை சேர்க்கும் வார்த்தைகளும் என்னிலடங்காதவை.

இவர்கள் பூர்வீகத்தில் உப்பரங்கோட்டை என்னும் உப்புக்கோட்டை பிரிவை சார்ந்த மறவர்கள் பாண்டியரை சார்ந்த தளகர்தர்களாக இருந்து  செம்பிநாட்டில் குடியேறி பின் பாண்டியன் நெல்லைக்கு சென்றபோது அவனுடன். நெல்லைக்கு திரும்பிய கரந்தையர்கள். இந்த உப்பரங்கோட்டை என்பது எதுவென்று நோக்கும் போது அது உக்கிரன்கோட்டை என்னும் சொல்லின் திரிபு என ஐயா. ந.சஞ்சீவி அவர்கள் ஐவர்ராசாக்கள் கதை,முத்துபட்டன் கதை என்னும் கதைகளிலே கூறப்படும் உன்மை இங்கு புலனாகும். இந்த ஆதாரத்தையும் பதிவிடுகின்றேன். இவர்கள் உக்கிரபாண்டியன் கோட்டையின் மறவர்கள் ஆதலில் பாண்டியக்கரந்தை மறவர்கள். அழகம்பெருமாள் கதைகளுக்கு முன்னே வரும்  பாண்டியன் மருமகன் சின்னனைஞ்சான்(சிவனனைந்தான்) தேவன் இவர்களே பாண்டியன் உறவினர்கள் ஆதலின் இவர்கள் பாண்டிய மன்னர்களை சார்ந்த தளகர்தர்களாக இருந்து பின் வீரத்தால் "செம்புலி" என பட்டம் பெற்று. பாண்டியன் திருநாமமான "சிவனனைந்தான்" என்ற பெயரினை பெற்ற "கருனாலயன் வலங்கை புலி சிவனைனைந்த தேவர்" என பெயர் பெற்றவர்கள். திருக்குற்றால குறவஞ்சியிலே குறத்தி புகழும் எங்கள் திரிகூட மன்னன் சின்னனைஞ்சான் செய்த செப்புக்கூறையின் கீழ் அருளும் குற்றால நாதா என புகழும் மன்னவர் இவர்.குற்றாலமலை சிவன்கோவிலுக்கும் என்னற்ற சிவன்கோவிலுக்கும் திருப்பனி செய்து குற்றாலம் கோவிலில் செப்பு கூறை வேய்ந்து தம் மூதாதயர்கள் சிலை அமைத்து திருநெல்வேலியில் கட்டிய குளங்கள்,ஏரிகள்,பாலங்கள்,கோவில்கள் எத்தனை எத்தனையோ. சேதுவை காத்தவன் சேதுபதி  மதுரையை காத்தவன் மதுரைப்பதி தீர்த்தம் காத்தவன் தீர்த்தபதி அதேபோல் திரிகூடம் என்னும் குற்றாலத்தை காத்தவன் இந்த திரிகூடபதி கருனாலய வலங்கை புலி பாண்டியன் சரித்திரம் கூறுகிறோம் சற்றும் 13-ஆம் நூற்றாண்டுக்கு செல்வோம்.



திரிகூட சகாயம்

புன்னிய இப்பரதக்கண்டத்திலே எந்நாட்டிலும் நன்நாடாய் பாண்டியர்நாட்டை ஆண்டு மூன்று சங்கங்கள் கண்டு தமிழ் தெய்வத்தை கங்கனம் கட்டி பாண்டிய மஹாராஜாக்கள் சந்ததியில் வந்தவரும் பொதிகைமலையை சார்ந்த தென்காசி நகரத்தினை அரசு செலுத்தியவரான குலசேகரபாண்டியன் காலத்தில் தமிழ் இலக்கியத்தை அகத்தியருக்கு செவியறிவுறித்திய முருகக்கடவுளை பெற்றத் தந்தையான சிவபெருமானை ஆராதிக்கும் செம்பி நாட்டில் தோன்றிய மறவர் குலத்தினர்; கன்னப்பநாயனார் சிவபெருமானை ஆராதித்து பெறும் பெயர் பெற்றது போல் அப்பெயர் பெறவென்னி

"தில்லையிலும் சேதுவிலுஞ் காசியிலும்
வாசிபெற்றா திருக்குற்றால.......
......சிந்தையில் நினைத்தார்க்கு
அழியாத கதி கொடுக்கும் திருக்குற்றாலம்"



சிந்தனை செய்து செம்பிநாட்டை துறந்து மேற்கூறிய குலசேகர பாண்டியனை அடைந்து தங்கள் வல்லமையாலும் வீரத்தாலும்
மகிழச்செய்து அவ்வழுதியால் "செம்புலி" என்னும் என்னும் நாமம் பெற்று அவன் அன்பிற்கு பாத்திரமானார்கள். அவன் இவர்களிடத்தே வடகரை முதலிய மூன்று நகரங்களை அரசுபுரிய செய்தான். அந்நகரில் அரசு புரிந்த இவர்களின் முன்னோர்களாக முத்தனைஞ்சு,பூவனஞ்சு,நல்லனஞ்சு,பெரியஞ்சு,சின்னனஞ்சு என்று பஞ்ச பாண்டியர்கள் போல் அரசுபுரிந்த இவர்கள் வம்சாவளிகளின் விபரம் கிழே:

ஒவ்வொறு முறையும் தேவர்கள் அரசு பட்டம் சூடும்போது பிள்ளைமார்கள் ஸ்தானாதிபதி பட்டம் எனும் மந்திரி பட்டமும் சூடுவார்கள்.

1. முதல் பட்டம்(கி.பி 1391-1434):- செம்புலி சின்னைஞ்சாத்தேவர் பட்டமும் ஸ்தானாதிபதி வைத்தியபிள்ளை.

சாலிவாகன சகாப்தம் கொல்லம் ஆண்டு பிரஜோத்பதியம் ஆனி வியாழக்கிழமை அபாரபட்சத்து உத்திர யோகத்தில் அன்ன சத்திரம் செய்து சித்திரை வரை பொன் செலவு செய்த ஸ்தானாதிபதி வைத்தியபிள்ளை.சுபதினத்தில் சுவாமி குற்றாலலிங்கம் குழல்வாய் அம்மன் முகப்பு மண்டபம் கட்டிய பொன் செலவு மற்றும் திருப்பணி செலவு.


2. இரண்டாம் பட்டம்(கி.பி 1434-1461):- தம்பி முத்தனைஞ்சாத்தேவர்: ஸ்தானாதிபதி சவரிப்பெருமாள் பிள்ளை

ஸ்ரீ ராஜர்மகன் வீரபாண்டியராஜர் காலத்தில் புதன்கிழமை அபா படஸ்த்து ஷஷ்டி ஆனைகரணமும்,பூசநட்சத்திரமுடங்கூடின சுப தினத்தில் நாட்செய்து ஆண்டு சுவாமி குற்றாலலிங்கம் குழல்வாய் அம்மன் உட்பிரகாரம் செய்த செலவு பொன் செலவு மற்றும் ஸ்தானாபதி வைத்தியபிள்ளை சகோதரர் சவரிப்பெருமாள் பிள்ளை திருப்பணி செலவு..

3. மூன்றாம் பட்டம்(கி.பி 1462-1490):-முத்தனைஞ்சாத்தேவர் மகன் காளத்தியப்ப தேவர்
ஸ்தானாதிபதி குற்றாலநாத பிள்ளை:

சருவதாரி படஸ்த்து உத்திர நட்சத்திரமுடங்கூடின சுப தினத்தில் நாட்செய்து ஆண்டு சுவாமி குற்றாலலிங்கம் குழல்வாய் அம்மன் சுவாமிதேர்,அம்மந்தேர்,விநாயகர்தேர்,சுப்பிரம்னியர்தேர் ஆகிய நான்கிற்குச் செலவு பொன் சருவதாரி வைகாசி ஞாயிற்றுக்கிழமை பூர்வபட்சத்து தசமியும் கெஜகரணமும் உரோகணி நடசத்திரமும் கூடின சுபதினத்தில் நாட்செய்து 668 ஆண்டு வைகாசி வரை தொடர்ந்த திருப்பணிக்காக குமரகோவில் முன் திருப்பணிக்குச் சுற்றுபிரகாரம் செங்கோட்டை வழிப்பாலம் அடங்கல் திருப்பணிச்செலவு பொன் ஆக மூன்றாவது பட்டத்தில் திருப்பணிச்செலவு பொன் அப்பொழுது வீரசிகாமனி பொன்னுவீரபாண்டியன் இராஜாகவிருந்தார்.




.4.நான்காம் பட்டம்(கி.பி 1490-1515):-
காளத்தியப்ப தேவர் மகன் அதிவீரராமத் தேவர்,தம்பி பெரியசாமிதேவர்
ஸ்தானாதிபதி குற்றாலநாத பிள்ளை: மகன் குற்றாலநாத பிள்ளை

சருவதாரி படஸத்து தசமி திதி கூடிய சுப தினத்தில் நாட்செய்து ஆண்டு ஈசுரன் கோவிலுக்கும்
கன்னிமூலைக்கும் கோட்டைக்கும் நாட் செய்த பொன் பணம்.

.5.ஐந்தாவது பட்டம்(கி.பி -1515-1535):-
பிரதானர் மகன் வல்லராயத்தேவர்
ஸ்தானாதிபதி குற்றாலநாத பிள்ளை: இறந்து போக மகன் திரிகூடநாத பிள்ளை சிறுவனாதலால் உரன்பிறந்தாள் நல்லமங்கை பாகன் சென்பககுற்றாலபிள்ளை ஸ்தானாதிபதியாக பொறுப்பேற்றார்.

வல்லராயத்தேவர் ஜமீந்தாராய் ஆண்டு வருகையில் பொன்னுவீரபாண்டியன் இறந்துபோக பட்டஸ்திரி புத்திரன் குலசேகரராஜாவிடத்தில் தாயாதி அழக்பெருமாள் இராஜ இனமுறைப் பட்டமாகச் சீமைவிட்டு கொடுக்கும்படி சொல்லி சல்லியஞ் செய்த கலகத்தில் ஐந்தாவது பட்டம் பிரதானர் குப்பகுரிச்சியிற்போய் முதலிருந்து  இறந்து போனார்.

6.ஆறாவது பட்டம்(கி.பி 1536-1595):-
குலசேகரராஜா சம்மதத்தின் பேரில் புதன்கிழமையும் அபரபட்ச சதுர்த்தசியும்,மூலாட்சத்திரமும்,சிங்காணமுங்கூடிய சுபதினத்தில் வல்லராயத்தேவர் மகன் திரிகூட ராஜகோபாலத்தேவர் பட்டமும் தம்பி பெரியசாமி தேவர் விசாரிப்பு பட்டமும். இருளனைஞ்சாதேவர் சேனைத்தலைமையும் குற்றாலநாதபிள்ளை மகன் திரிகூடநாத பிள்ளை ஸ்தானதிபதியுமாக ஆண்டுவருங்காலத்தில் குற்றாலநாத சுவாமி கோவில் குறைவேலை தட்டொட்டியும்,பசுப்பிறையும் கலங்காத கண்டிக்கோட்டையும் மேலைச் சொக்கம்பட்டி கோட்டையும் ஆண்டு திருப்பணிச்செலவு .

இக்காலத்தில் குலசேகர மகாராஜா தம்பி வீரபாண்டிய ராஜவும்,இராஜகுலதேவராகிய மந்திரியும்கூடி அழகம்பெருமாள் இராஜா சீவலமாறன் இராஜா,கிரியப்பெருமாள் இராஜா ஆகிய இவர்கள் சண்டையில் வஞ்சித்து கொன்றதாகக் கயத்தாற்றிலிருந்த மாவலி வெட்டும் பெருமாள் இராஜ பாளையத்துடன் போர்க்கு வந்தபோது குலசேகரமகராஜா குழந்தைகளுடனும்,மந்திரிகலுடனும் தற்கொலை செய்து மாண்டுபோயினர் பின்னர் அம் மாவலி வெட்டும் பெருமாள் இராஜாவே தென்காசியைப் பட்டமெய்தி ஆண்டு வந்தனர்.

இக்காலத்துக்குள்,மதுரை மாநகரை ஆண்டுவந்த கர்த்தக்காள் நால்வராவர்.இந்நால்வர் காலத்திலும் சேரனும்,சோழனும் படையெடுத்து வந்து அடிக்கடி துன்பம் செய்துவந்தனர். இவர்கள் செய்துவந்த துன்பம் சகிக்முடியாமல் இவர்களோடு போர்புரிவதற்கு தெட்சன பாளையக்காரரை வரும்படி கர்த்தாக்கள் விரும்பினார்கள். அவ்வோண்டுகோளின்படி ஆறாவதுபட்டம் பிரதானர் தம்பி பெரியசுவாமி சின்னனைஞ்சா பெரியசாமி சின்னனைஞ்சா தேவர்,தளகர்த்தர் இருளனைஞ்சாத்தேவர்,தாயாதி பெரியனைஞ்சாத்தேவர் ஆகிய மூவருந்தளத்துடன் மதுரைக்கு சென்று ஆண்டு முதல் ஆண்டு சோபகிருது வரை வ்ரை எட்டுவருடகாலம் பெரும்போர் நடாத்தி சேரர்,சோழர்களை முறி அடித்து பிராதனர் தம்பி பெரியசாமி சின்னைஞ்சாத்தேவர்,தளகர்த்தர் இருளனைஞ்சாத்தேவர் ஆகிய இருவரும் அப்போரிலிறக்கத் தாயதி பெரியனஞ்சாத் தேவர் மாத்திரம் திரும்பி வதார்.

இதன்முன் தென்காசியிலுங்க் கயத்தாற்றிலுமிருந்த அரசர்கள்,போர்க்குச்சென்றோர் வருடம் எட்டாகியும் திரும்பிவராத காரணத்தால் போரில் இறந்தனரென நினைந்து தத்தம் நாட்டைவிட்டு கொச்சிக்கு போயிருந்தனர்.ஸ்தானாதிபதி திரிகூடநாத பிள்ளையும் காலஞ்சென்றனர்.

7. எழாவது பட்டம்: (கி.பி1602-1629)
குமாரன் குமாரமுத்து பெரியனைஞ்சாத் தேவர் பெரிபட்டமும்,திரிகூட நாதபிள்ளை வயித்தியப்பபிள்ளைக்கு ஸ்தானாதிபத்தியமுங்க் கொடுத்தனர்.
அக்காலத்து கர்த்தாக்கலின்  உத்தரவின் பேரில் குற்றலநாதர் தீர்த்தமண்டபம்,சுற்றுபிரகாரம்,நடைகற்பாவல் அடங்கல் திருப்பணிச்செலவு பொன் பணம் . பங்குனி 31 ல் குமாரமுத்து பெரியனஞ்சாத்தேவர் சிவபதமடைந்தர்.

8.எட்டாவது பட்டம்: (கி.பி1680-1659)
சிவனடியாத்தேவர்பட்டமும் வைத்தியபிள்ளை மகன் பெரியபிச்சைப் பிள்ளை ஸ்தானாதிபதியாக்கிப் பட்டமெய்தி அரசாண்டனர். அன்று முதல் வருடம் திருப்பனிசெலவு சுவாமி குற்றாலலிங்கம் குழல்வாய்மொழியம்மன் துவஜஸ்தம்ப அஸ்டபந்தன கும்பாபிசேகம் மன போஜனம் தானம் அடங்கல் பொன் செலவு.
9.ஒன்பதாவது பட்டம்:(கி.பி.1660-1721)
எட்டாவது பிரதானர் மகன் பெரியசாமிதேவருக்கு பட்டமும் பிச்சைபிள்ளைக்கு ஸ்தானாதிபதி பட்டமும் கொடுத்தார்கள்.
கர்த்தர் திருமலை நாயக்கர் தளபதி இராமய்யனும் குற்றாலம் கோவிலுக்கு  ஆபரண முதலியவற்றை அன்புடனளித்து அச்சபையில் இவர்களைக் கௌரவப்படுத்தினர். இவர்கட்கு முன்பட்டயப்படி ஊர் குளம் திசைகாவலர் பட்டமுங்குடுத்தார்கள் பின்னர் நாயக்கர்,இராமய்யன் மற்றைய பாளைக்காரர்கள் ஆகிய இவர்களோடு காசிப்பராக்கிரம்பாண்டியன் செய்த சித்திரசபைக்குச் செப்பேடுவார்த்து சேர்க்க கும்பகோணம் சிற்பி தில்லைநாயகம் ஆசாரியையும் குறிச்சி ஆசாரியும் வேளைசெய்தனர். செலவு  பொன் ஆகுக.


வடகரை சீமையின் ஆதிக்கத்தின் தொடக்கம்:

முன்னர்த் தென்மலையார் என்று பெயர்பெற்று இக்காலத்து சிவகிரியென்னும் நகரை ஆள்பவரால் சேற்றூர் மிக்க துன்பமடைந்தனர் அடிக்கடி சேத்தூரை தாக்கினார்கள். அக்காலத்து சேற்றூரரை ஆண்ட சிவப்பிரகாசத் திருவொனாத துரையவர்கள்  அத்துன்பத்தை நீக்கி கொள்ள வடகரையாண்ட பெரியசாமித்துரைவர்களின் உதவிபெற வடகரைக்கு வந்த துரைகளை கண்டு உதவி கோரினர். இதனை ஆராய்ந்த வடகரைதேவர் உதவிக்கு சேனை அனுப்புகிரோம் என்று வாக்களித்தார்கள்.

உடனே வடகரை துரையவர்கள் பொன்னம்பலம் பிள்ளையை நோக்கி நமது சேனையை செலுத்தி தென்மலையாரை செயித்து வருகவென்று கட்டளையிட்டார். அக்கட்டளையின்படி பிள்ளையவர்கள் சேனையைச் செலுத்தி தென்மலை கோட்டையை அழித்து அவர்களைப் பணியச்செய்தார். பின்பு தமது படையோடு சேற்றூரை அடைந்து ஜமிந்தாரவர்களை சந்தித்தவுடன் பின்னர் ஒருகாலத்து சேற்றூருக்கு பொன்னம்பலம் பிள்ளை சென்று அரமனைவாயில் காப்போரை நோக்கி வடகரை ஸ்தானாதிபதி பொன்னம்பலம்பிள்ளை  வ்ந்துள்ளார் என கூற வாயில் காப்போன் பொன்னம்பலம் பிள்ளை வந்ததாக சேற்றூராரிடம் சொல்ல அவர் நீர் அருந்திய குவளையுடன் வந்து சேர்ந்தார். இவ்விதம் தென்மலையாரை அடக்கியும் அவர்கள் அடங்காமல் சேற்றூருக்கு துன்பம் செய்தனர். இதனை வடகரை ஸ்தானாதிபதி பொன்னம்பலம் பிள்ளையவர்கள் கர்த்தாக்கள் மந்திரியாய் திருநெல்வேலியிலிருந்து ஆறைஅழக்கப முதலியாரிடம் சென்று சேற்றூராருக்கு துன்பம் செய்யும் தென்மலையாரை அடக்கவேண்டுமென படையுதவி கேட்டனர்.  அதனை பெற்று தென்மலையாரை செயித்து சேற்றூர் துன்பம் நீக்கினார். இதன் பின் தென்மலை மூன்று முறை வடகரையால் அழிக்கப்பட்டது

ஊற்றுமலை இராஜ்யம் அருளியது வடகரை தேவர்:
இங்கனம் சேற்றூராருக்கு உதவி செய்த ஊற்றுமலைச் சமிந்தாரை வஞ்சமாக கொன்று அவர் மனைவி பூஜைதாயரையும் மருதப்பதேவர் சீவலவதேவர் என்னும் இரு குழந்தையும் அழைத்துகொண்டு தெங்காசியை  அடைந்து அங்கு வசித்துவந்தனர் இங்கனம் அவர்கள் துன்பத்தில் தவித்தனர்.
ஒருநாள் குழந்தைகளான சீவலத்தேவர் மற்றும் மருதப்பதேவர் ஏக்கத்தோடு நமது பூர்வீக ராஜாங்கம் எப்போதம்மா கிடைக்கும் என ஏக்கத்தோடு கேட்டனர். அதற்க்கு பூசைதாயர் வடகரை ஸ்தானாதிபதியார் பொன்னம்பலம் பிள்ளை மனசுவைத்தால் முடியும் என கூற  உடனே சீவலதேவர் வடகரை அடைந்து சீவலவதேவர் தென்காசியிலிருந்து புறப்பட்டுச் சொக்கம்பட்டிக்கு வந்து பொன்னம்பலம் பிள்ளையின் வீட்டை விசாரித்துக் கொண்டு சென்று அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்தார். நடுப்பகலாதலின் உள்ளே பொன்னம்பலம் பிள்ளை நீராடிப் பூஜை பண்ணி விட்டு ஆகாரம் செய்து கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் அரண்மனையிலிருந்து, “மகாராஜா உடனே வரச் சொன்னார்” என்று ஒரு சேவகன் வந்து அழைக்கவே விரைவாக ஆகாரம் அருந்தி எழுந்தார். கரசுத்தி செய்துகொண்டவுடன் அரண்மனைக்குச் செல்லும்பொருட்டு வெளியே வருகையில் அங்கே திண்ணையில் உட்கார்ந்திருந்த இளைஞராகிய சீவலவ தேவர்மேல் அவர் பார்வை சென்றது.அவருடைய அழகிய முகத்தின் வசீகர சக்தி பிள்ளையின் உள்ளத்திற் பதிந்தது.

“நீ யாரப்பா?” என்று ஸ்தானாதிபதி வினவினார்.

சீவலவ தேவர் தாம் இன்னாரென்பதை அறிவித்தார். ஊற்றுமலை ஜமீன்தாரிணி நன்றாகப் படித்தவரென்பதை முன்னரே பொன்னம்பலம் பிள்ளை அறிந்திருந்தார். அவ்வம்மையாருக்கு இரண்டு இளங்குழந்தைகள் இருப்பதையும் கேள்வியுற்றிருந்தார்.

ஆதலின் சீவலவதேவர் இன்னரென்று தெரிந்தவுடன் அவருக்குத் திடுக்கிட்டது. அவர், “இங்கே யாரேனும் உம்மை இன்னாரென்று தெரிந்து கொண்டால் உம்முடைய தலை தப்பாதே!” என்று அஞ்சினார்.

“ஆண்டவன் திருவருளின்படியே எல்லாம் நடைபெறும்” என்றார் இளைஞர்.

அவ்விளைஞர் காட்டிய பணிவு பொன்னம்பலம் பிள்ளைக்கு மனக்கசிவை உண்டாக்கியது. அப்பொழுதே, “இவர்களைப் பழைய நிலையில் வைத்துப் பார்க்கவேண்டும்,” என்ற சங்கற்பத்தைச் செய்து கொண்டார். பிறகு மிக்க களைப்புடன் இருந்த சீவலவதேவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்று உணவு செய்யச் சொல்லிவிட்டு, “இங்கே படுத்து இளைப்பாறிக்கொண்டிரு; நான் அரசரிடம் சென்று வருகிறேன். ஒருவரிடமும் தாம் இன்னாரென்று தெரிவிக்கவேண்டாம்” என்று சொல்லி அரண்மனைக்குச் சென்றார்.

பொன்னம்பலம் பிள்ளை தம்முடைய தலைவராகிய சின்னணைஞ்சாத்தேவரிடம் அவர் அழைத்த விஷயமாகப் பேசிக்கொண்டிருக்கையில், “நம்மால் அழிக்கப்பட்ட ஊற்றுமலையார் வேறு சிலருடைய உதவியை நாடிக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இப்போது அந்த ஜமீன் பரம்பரையில் இரண்டு இளைஞர்களே இருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் நேரே பகைமையில்லை.

சமூகத்துக்குப் பரம்பரையாக அவர்கள் உறவினர்களல்லவா? சேற்றூராருக்கும் தென்மலையாருக்குமே பகை. சேற்றூராருக்கு நாம் உதவி செய்தோம்; தென்மலையாருக்கு அவர்கள் உதவி செய்தார்கள். அங்ஙனம் உதவி செய்த ஜமீன்தாரும் இப்போது இல்லை.

ஊற்றுமலை ஜமீன் தமிழ்ப்புலவர்களை ஆதரித்துக் காப்பாற்றும் புகழையுடையது. அதன் அழிவுக்கு நாமே காரணமாக இருந்தோம். இப்போது மீட்டும் அந்த ஜமீனை நாமே நிலை நிறுத்தினால் நமக்கு அளவற்ற புகழ் உண்டாகும்; அநாவசியமான பகையுணர்ச்சியும் இல்லாமற்போம்! என்றார்.

‘நீர் எப்படி செய்தாலும் நமக்குச் சம்மதமே! என்று கூறினார் ஸமஸ்தானாதிபதி.

பொன்னம்பலம் பிள்ளை உடனே தென்காசிக்குப் பல்லக்கு அனுப்பிப் பூசைத்தாரையும் மருதப்பத் தேவரையும் வருவித்தார். அவர் பூசைத்தாயாரைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருந்தார். தமிழ்ப்புலமையையுடைய அவரைச் சந்தித்தபோது பொன்னம்பலம் பிள்ளைக்கு அளவற்ற வருத்தம் உண்டாயிற்று; “இவ்வளவு சிறந்த அறிவுடைய இவரை இந்நிலைக்கு உள்ளாக்கியதற்கு நாமல்லவோ காரணம்!’ என்று இரங்கினார்.

அப்பால் பூசைத்தாயாருக்கும் அவர் குமாரர்களுக்கும் தக்க வசதி அமைக்கப் பட்டது.

பொன்னம்பலம்பிள்ளை ஏவலாளர்களுடன் ஊற்றுமலை சென்று அங்கே பழுதுபட்டிருந்த கோட்டை, அரண்மனை முதலியவற்றைச் செப்பஞ் செய்வித்தார். பிறகு நல்ல லக்கினத்தில் கிருகப்பிரவேசம் நடத்த ஏற்பாடு செய்து, வடகரையிலிருந்து பல்லக்கில் ஊற்றுமலை ஜமீன்தாரிணியையும் இரண்டு குமாரர்களையும் வருவித்தார். கிரகப்பிரவேசம் மிகவும் விமரிசையாக நடந்தது. நல்லவேளையில் தமக்குரிய நிலையைப் பெற்று அவர்கள் மகிழ்ந்தார்கள்.

ஊற்றுமலையில் மீட்டும் வாழ்வோமென்று நம்பிக்கையை முழுதும் இழந்திருந்த பூசைத்தாயாருக்கு அந்நிகழ்ச்சி அளவிறந்த விம்மிதத்தை உண்டாக்கியது. பொன்னம்பலம்  அதற்குக் காரணமென்பதை அவர் அறிந்தார். தம்முடைய நன்றியறிவை அவர் ஒரு பாடலால் தெரிவித்துக் கொண்டார். அது வருமாறு:

“கூட்டினான் மிகுந்த பா ளையக்காரர் சேகரத்தைக் குறைவ ராமல்
சூட்டினான் மணிமகுடந் துரைபெரிய சாமிசெய்யுஞ் சுகிர்தத்தாலே
*தீட்டினா னம்பலம்பொன் னம்பலத்தான் றிரிகூடவரையிற் கீர்த்தி
நாட்டினா னூற்றுமலை நாட்டரசு தழைக்கநி லை நாட்டினானே.”

பூசைத்தாயாரின் பொறுமையும் புலமையும் அவர்களுடைய நன்மைக்குக் காரணமாயின; தம்முடைய அரசை நிலைநாட்டித் தழைக்கவைத்த அமைச்சர் பிரானாகிய பொன்னம்பலம் பிள்ளையை போற்றிவந்தனர்.

சின்னனைஞ்சாத்தேவர்கள் ஒருமுறை தென்மலையை அழித்து திரும்பிவந்தனர். இவர்தம்பி சிவராமய்யா வைசூரி நோயால் இறந்து போனார். இவர் மகள் பூவாத்தாளை வீரப்பதேவர்மகன் பெரியசாமிதேவர் அவர்களுக்கு மனமுடித்தனர். சின்னப்பட்டமும் பெரியபட்டமும் மெய்தியிருந்த பெரியசாமி செம்புலி சின்னனைஞ்சாத்தேவர்களையும் இராஜகோபாலதேவர்களையும் சிலையாக வைத்து அச் அசிலைகளைக் குற்றாலநாதசுவாமி துவஜஸ்தம்பத்துக்கு தெற்க்கு பக்கம் வடக்கு நோக்கிய தூணில் விட்டிருத்தலை இன்றும் காணலாம்
இவர் இறந்த காலத்து பொன்னம்பலம் பிள்ளையவர்கள்,

வாணடாடரனைப் போல் மதப்புலி தானாபதி தனையும் தானழைத்து போகாதோ சேனாதிபதிராஜன் சின்னனைஞ்சான் போன வழி போனாலொழியமனப் புண்பாடு தீராதே.

எனும் பாடலை பாடினார்.

கிபி.1722-கிபி.1728....

செம்பியன் போல் வாழுஞ் செம்புலி தேவமன்னன்

பெரியபட்டமாக சிவராம சின்னைனைஞ்சாத் தேவர் அவர்களும் ஸ்தானதிபதியாக பிச்சைபிள்ளை மகன் பெரியநாயகம் பிள்ளையும் பொன்னம்பலம் பிள்ளையும் ஸ்தானாதிபதியாகவும் நியமித்தார்கள்.
அதற்கு இவர்கள் சிவராம சின்னனைஞ்சாத் தேவர் இடங்கொடாமென்று கோபித்துக்கோண்டே பொழுது பொன்னம்பிள்ளை
"குன்றமே கோபங்க்குறியாதே- மன்றுதனில் செம்பியன் போல் வாழுஞ் சிவராம தேவமன்னன் அம்புவி மேற் செம்புலி பட்டம்" என்னும் கவியை பாடினர்.

அதன்பின்னர் தம் மனம்போல் உத்தரவுகோடாமையால் அவ்விடத்தின்றி புறப்பட்டு சென்றார்.

சிலகாலம் சேதுபதி மன்னர்களுக்கும் சின்னனஞ்சாத் தேவருக்கும் மன்ஸ்தாபம் உண்டானது. சேது மன்னர் இவரை மதியாமல் அனுப்பிய ஓலையை சினம்கொண்டு பதில் உறைக்க
"பொன்மலைய்க்கும் சேதுவுக்கும் புகழ்பெற்றே எதிர்வந்து பொருதார் தம்மை வின் மலைக்க விஜயங்கோண்டு தென்மலைக்கு திருமலைக்கும் ஆஸ்தி கொடுத்தேன். சிவராம சின்னனஞ்சாத் தேவர் மறைந்தார்.

(கி.பி.1729-1731) இவர் காலஞ்சென்ற பின்னர் பெரியபட்டம் சிவராம சின்னனஞ்சாத்தேவர் மற்றும் பொன்னம்பலம் பிள்ளையுமகிய இருவரும் ஸ்தானாதிபதியாகவும் இருந்து ஆண்டனர். இக்காலத்தில் திருமலையாண்டவர்கோவில் மலைமீது இருந்த சுனைநீர் பெரியதாகச்செய்யவும் திருமலைக்குமார பிள்ளையவர்கள் செய்த திருப்பணிக் குறைநின்றதை யெடுத்துகட்டி முடிவாகவும் மண்டபச்சுற்றுப்பிரகாரங்குறைவேலை செய்யவும் பூவெடுத்தல் புண்ணியாவாசனம் ஆகிய செலவு பொன் இக்காலத்தில் பொன்னம்பலம் பிள்ளை குற்றாலத்தில் தனக்கு முன்னிருந்த ஸ்தானதிபதி மென்று ஒன்று தன் சொந்தத்திலிருந்து



கி.பி1731-கிபி1741.
சின்னனைஞ்சா மாப்பிள்ளைத்தேவர் மற்றும் பெரியாநாயகம் பிள்ளை பதவியேற்ற காலத்தில் நாட்டை இழந்த சிவகிரியார்  தளவாய் முதலியரிடஞ் சென்று எங்களுக்கு தீங்கிழைதத பாபத்தால் வடகரையாருக்கு துன்பம் நேரிட்டது. ஆகையால் எங்கள் பூமி எங்கட்க்கு கிடைக்கும்படி கெஞ்சி கேட்டுகொண்டார். அங்கனமே தளவாய் முதலியார் படையெடுத்து வர உத்தேசிப்போம் என ஆலோசனை கூறினார். இருப்பினும் முழு உதவி கிடைக்காத சிவகிரியார் வடகரை துரையவர்களை நாடினார். இதனை உனர்ந்த வடகரைதேவர் முதலியாரால் பின்னால் வடகரை மீது படையெடுப்பு நிகழும் என சிந்த்தித்து
 சிவகிரியாரையும் அவர் அந்தரங்க தூதநாகிய காளை சேர்வைக்கரனை வடகரையார் மாப்பிள்ளை தேவர்  ஒரு உத்திரவாதம் கேட்டார் ஆதாவது சிவகிரியாரும் காளை சேர்வையும் முதலியாரை கொன்று விட்டால் சிவகிரியாரின் பூர்வீக நிலத்தை தான் தருவதாக சத்தியம் செய்து கொடுத்தார்


இதன் பின் காளை சேர்வைக்காரனும் சிவகிரியாரும் முதலியாரை கொல்லதக்க தருனம் பார்த்தனர். ஒருநாள் இரவு அவர் தூங்கும் தருவாயில் அவரை கொன்று அவரது குடலை உறுவி வாலைகுறுத்தில் மறைத்து காவலாளிகள் அறியா வன்னம் வெளியேறினர். இதனால் முதலியாரின் படையெடுக்கும் கனவு தகர்ந்ததுடன் அவர் சேர்த்த படையும் முறிந்தது. மாப்பிள்ளை தேவர் சிவகிரியாருக்கு செய்த சத்தியத்துடன் அவரின் பூமியை கொடுத்து கோட்டைகளை புதுப்பித்து மாளிகைகளும் கட்டிக்கொடுத்தார்.


சிவகிரி என்னும் பாளையபட்டை உருவாக்கியதும் வடகரை தேவரே

சிவகிரியார் அருகே ஒரு வேப்பமரங்களும் தென்னந்தோப்புகளும் சூழ்ந்த குளிர்ச்சியான  இடமான ஒன்றை வடகரை தேவருக்கு காட்டினார். சிவகிரியார் வடகரையாரை மாப்பிள்ளை! ஊருக்கு என்ன பெயரிடலாம்? என கேட்க அதற்க்கு மைத்துனரே நீங்கள்  சிவ சிவாவென்று என்னேரமும் வடகரையார் செபிப்பதால் இந்த ஊர் மலைசாரல்கள் அருகே இருப்பதால் இதற்கு வடகரையார் சிவகிரியார் என பெயரிட்டார் இன்று  சிவகிரி என பெயர் விளங்க காரணம் வடகரை சின்னனைஞ்சா தேவராவார்.


இதனால் கோபமான அழகப்ப முதலியார் மகன் கோபம் கொண்டு சிவகிரியார் மேல் மதுரை நாயக்கன் படையை துனைகொண்டு வந்து தன் தந்தையை கொண்டதற்கு சிவகிரியாரை பழிதீர்த்து கொண்டான்.

இதன் பின் மாப்பிள்ளை பெரியசாமித்தேவரும் மரனமடைந்தார்.இதன் பின் காளத்தியப்பருக்கு வடகரையில் பட்டம் கட்டி ஸ்தானாதிபதியாக பிச்சைபிள்ளையும் ஏற்றனர். இதன் பின் 11-ஆம் பிரதானர் சிவராம தேவரின் மகனுக்கு நெல்லைக்கு மேற்கே மேலைசொக்கம்பட்டிகு அனுப்பி அங்கு ஒரு கோட்டையை  கட்டி கொடுத்து அங்கு அரசனாக்கினார் அவருக்கு சிதம்பரபிள்ளை அவர்கள் ஸ்தானாதிபதியாக்கினார்கள்.

கி.பி1743-49- கி.பி1750-முதல் 1760 வரை அரசர்கள் அவர்களுக்குள் சின்னனஞ்சாத் தேவர் பட்டமெய்தி சவரிப்பெருமாள்  பிள்ளை ஸ்தானாதிபதியாக பட்டமேற்றார்.
பின்னர் இவர்கள் இருவரும் சிவபதம் எய்தினர்.


கேரள நாட்டுடன் எல்லை போர்கள்:

இவர்களது பாளையம் இன்றைய கேரள எல்லைகளுக்கு அருகில் இருந்ததால் கேரள நாட்டினருக்கும் இப்பகுதி பாளையத்தாருக்கும் இடையில் போர்கள் பல மூண்டுள்ளது.இவர் ஆய்நாட்டின் மீது படையெடுத்து அதனை வெண்றுள்ளார்.வேணாடு என்று அழக்கப்படும் திருவேனாட்டின் மீது படையெடுத்து அதனை வென்று “திருவொன்நாட்டை கொள்ளை கொண்ட மகராஜா திருவொன்னாத தேவர்” என சிறப்பு பட்டம் சூடியுள்ளார். திருவிதாங்கூர் மீதும் பல முறை படையெடுத்து அதனை பல முறை சூறையாடி திரிந்த இம்மக்களை கண்டு “பாண்டிப்படா” என்று கேரள மக்கள் அச்சத்தோடு அழைப்பது வழக்கம்.1759 திருவிதாங்கூர் வடகரை பாளயக்காரர்களால் சூரையாடப்பட்டது.










திருவிதாங்கூர் மன்னரின் கோபம்:

நெற்கெட்டான் செவ்வல் பாளயக்காரர் பூலித்தேவருக்கு மிகவும் உறுதுணையாகயிருந்து வரும் வடகரைப் பாளையக்காரரின் பகுதிகளுக்கு பதினைந்து மைல் தொலைவில் திருவிதாங்கூரின் மன்னரின் பகுதிகள் இருந்தன.வடகரைப் பாளயக்காரர் திருவிதாங்கூர் பகுதிக்குள் செங்கோட்டை கணவாய் வழியாக அடிக்கடி சென்று தாக்குத்லைத்தொடுத்து,பொருட்களைக் கவர்ந்து,மக்களுக்கு இன்னலும் விளைவித்து வந்தார். கேரளத்து ஆண் மக்கள் வீரத்திலே தொய்வு என்பதாலும், எல்லை தாண்டி பாண்டி மக்கள் உடல் பலமிக்கவர்கள் என்பதால் எதிர்த்துப் போரிட முடியாது என உனர்ந்தார். எனவே,வடகரைப் பாளையத்தை ஒடுக்க திருவிதாங்கூர் அரசர் காலத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தார்.

எதிரிக்கு எதிரி நன்பன்:

சின்னனைஞ்சா தேவர் வெள்ளையருக்கு எதிராக போராடி வரும் பூலித்தேவருடன் நெருக்கமாக இருந்தார். பூலித்தேவருடன் சேர்ந்துகொண்டு கும்பெனி பகுதியிலும் வடககரைப் பாளையக்காரர் கும்பெனிக்கு எதிராக செயல்பட்டு வருவதால் வெள்ளையர் ஏஜெண்ட் கம்மந்தான் கான்சாகிப் அதனை அடக்க முடிவு செய்தார்.எனவே கான்சாகிப் திருவிதாங்கூர் மன்னரை சந்தித்து பேசி இருவரும் பூலித்தேவருக்கும் வடகரைப்பாளையக்காரருக்கும் எதிராக செயல்பட தீர்மானித்தார்கள். எனவே இருவரும் கூடி ஒரு செயல் திட்டம் வகுத்தனர்.

செங்கோட்டையில் கூடிய பெரும் படை:

1759- அக்-6.ல் 1400 குதிரைப்படையுடனும் 18 பவுன்ட் சக்திவாய்ந்த 4 பீரங்கிகளுடனும், திருவிதாங்கூர் மன்னனின் ஆதரவுடன் படைநடத்தி வடகரை கோட்டையை கான்சாகிப் தாக்கினார். அக். 10ம் தேதி வடகரையை தோற்கடித்து வடகரை பாளையத்தைக் கைப்பற்றினான். இதில் சின்னனைஞ்சா தேவர் தோற்கடிக்கப்பட்டு நெற்கட்டாஞ்செவ்வலுக்கு சென்று தஞ்சமானார்.அடுத்து பூலித்தேவன் கோட்டையைப் பிடிப்பது யூசுப்கானின் வீரத்திற்கும் ஆங்கிலேயர்களின் வருவாய்க்கும் அவசியமாகியது. எனவேஆட்களும்.ஆயுதங்களும் திரட்டப்பட்டன. இதன் மூலம் வடகரைப்பாளையக்காரரின் பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு கான்சாகிப் மூலம் கிடைது.

Victories over the Anglo-Nawabi forces helped the revolt spread to other polygars. [3] See also: Polygar [edit] Decline and end of vadakkarai Zamin After 1760, General yousuf khan began a systematic campaign, taking the forts of the major confederates one by one.


கி.பி.1760 முதல் 1767 வரை:
வடகரை செம்புலி சின்னனைஞ்சாத் தேவர் மற்றும் சவரிப்பிள்ளை பொறுப்பேற்றனர்.


இதன் பின் ஆங்கில அரசு வடகரையை அழித்து வடகரையை ஆங்கிலேயர்கள் எடுத்து கொண்டனர் பின்னர் சொக்கம்பட்டியை தலைநகரமாக ராஜஸ்தனமாக மாற்றினர்
.
ஆங்கிலேயர்களுக்கு  பின் சொக்கம்பட்டியில் பல்வேறு வாரிசுசண்டைகள் அரங்கேறியது. இதனால் பல கொலைகள் சொந்தகளுக்கு  இடையே நடந்தது. இதனால் சொக்கம்பட்டியின் நிலை ஏழத்துக்கு செல்லும் நிலைக்கு ஆளானது.

இதன் வரலாறு ஆங்கில அரசு அறிய பெரிய உதவி செய்த அருணாசல கவிராயர்கள் மு.ரா கந்தசாமி கவிராயர்கள் மிக்க நன்றி பாராட்ட கடமை உரிமை  பூண்டுள்ளோம். இப்பிரபதங்கள் வெளிவர உதவிய சப் அசிஸ்டெண்ட் சுப்பிரமணிய பிள்ளைவர்களுக்கும் கடமைபட்டுருக்கின்றோம். இதன் வரலாறுகள் ஜமீனின் பட்டயங்களும் மேலே குறிப்பிட்ட வருடங்களோடு ஒத்து போவதால் இதன் திறனாய்வு வருங்காளத்தில் தெளிவு பெறும்.

வடகரை ஜமீன் செய்த அறச்செயல்கள் சமுதாய கொடைகளும்:


வடகரை முன்னோர்கள் செய்த தருமங்களுட் சிலவற்றை ஈண்டுக்குறிக்கின்றோம்  கி.பி.1607 முதல் 1654 காலம் வரை ஒரு கிராமமும் அதில் சென்பகராமப்பேரியென்ற குளமும் பெரிய சாமியையன்  கோவிலென்ற சிவாலயமும்முண்டு பண்ணி அக்கிராமத்துக்கு சென்பகராமன் நல்லொரென்று பெயரிட்டு குடியேற்றி அச் சிவாலத்தை சுற்றிலும் 64 வீடுகள் கட்டிப் பிராமணர்களுக்கு தான்ஞ் செய்து 144 கோட்டை விரைப்பாடும் அவர்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்டன

1655 முதல் 1677க்குள் வடகரைக்கோட்டையும் அரண்மனையும் மிகப் பெரிதாக கட்டபட்டு கின்றுகளும் வெட்டப்பட்டன.

1677 முதல் 1726 த்துக்குள் நெடுவேலி யென்னுங் கிராமத்தில் இராஜகோபலப்பேரியெற குளமும் காலும் வெட்டி அனையுன் கட்டப்பட்டது.

தெங்காசியில் ஆனைபாலமும் குற்றாலத்தில் அன்னதான சத்திரமும் திருக்குற்றாலநாத சுவாமி கோவில் துவஜஸ்தம்பத்தை சுற்றியுள்ள மண்டபமும் திரிகூடமண்டபமும்,சபாபதி மண்டபமும் சித்திரசபையின் முகப்பு மண்டபத்தை கட்டி முடித்து சித்திர சபையும் செப்போடு வேயபட்டது.
குற்றாலநாத சுவாமி கோவில்,இலஞ்சிகுமார கோவில் தென்காசி விஸ்வநாதர்கோவில் இவைகளுக்கு திரிகாலசந்திக் கட்டளை ஏற்படுத்தினர்.

வாசுதேவநல்லூரில் இராஜ்கோபாலப்பேரியென்ற குளமும் சென்பாகராமநல்லொரிலுள்ள சென்பகராமபேரிக் குளத்தை காலும் வெட்டப்பட்டதோடு இராஜ்கோபால பெருமாளுக்கு திருக்கோவிலுக்கு  கொடுக்கபட்டது.

அதோடு மடங்களும் சாலைகலும் போடப்பட்டன இவர்கள் கட்டிய அன்னசத்திரங்கள் செம்மையாக நடைபெற்றன 1728-1751 என தெரிவிக்கின்றன.

சபாபதிகு தங்க பூனூலும் வேறு திருவாபரணங்களும் அன்ன சத்திரத்தின் சமயல் பாத்திரங்கலும் கொடுக்கபட்டன.

திருமலையியின் கோவிலைச் சுற்றி மண்டபங்கலும் சுனையின் பக்கத்துள்ள சுனைக்கரை மண்டபமும் அதன் பக்கத்தொரு சத்திரமும் சமயல் பாத்திரங்கலும் கொடுக்கபட்டன.
1752 முதல் 1760 பண்புளிப்பட்டினத்தில் திருமலை சுப்பிரமியசுவாமி மகோற்சவம்,விஷேசமாக நடபெற ஜமீன் வகை செய்தனர் ஒரு பங்களாவும் கட்டபட்டது.












1767 1782 திருக்குற்றால்த்திற்கு இரதோற்சவம் நடைபெறும் வன்னம் அனுரதங்கள் செய்யபட்டன அனசத்திரங்கள் செய்து சமயல் பாத்திரங்கள் தரப்பட்டன. கோவிலுக்கு சுன்னாம்பிலும் செப்பிலும் முகடுவேய்ந்து குற்றல்நாத சுவாமி கோவில் மூலவாசலப்பனுகு ஒரு கோவிலு கட்டபட்டன ஒரு வேத பாடசாலை பிராமணர்களுக்கு கட்டி கொடுக்கபட்டது.
1792-1796ல் குற்றாலம் அன்னசத்திரத்துகெதிரே ஜனங்கள் தங்குவதற்கு ஒரு ஆசார மண்டபம் கட்டப்பட்டது. மலையடியாரத்தில் பெரியசுவாமியையன் கோவிலை சேர்ந்த கட்டிடங்களுங்க் கட்டபட்டன.


இதுபோக பல்வேறு  வடகரை திரிகூடபதிகளால் 177982  பொன் அறச்சாலைகளுக்கு செலவு செய்யபட்டது.


இங்கனம்
பி.சி.சி. பாண்டியன் டிப்டிக் கலெக்டர்.
பிவி.சி.பாண்டியன் தாசில்தார்.
திருநெல்வேலி சரித்திரம்- கால்டுவெல்
மருதநாயகம் - ஆனந்த விகடன் - திவான்

சிறப்பு நன்றி இந்த ஆவணங்கள் அளித்த
உயர்.திரு. ஐயா. சம்சுதீன்(அல்-அமீன்)


மதுரை.(வடகரை பூர்வீகம்)