Sunday, September 8, 2013

இளையர் (குடி) என்ற “இளம்மக்கள்” என்ற இளம மறவர்கள்

இளையர் (குடி) என்ற “இளம்மக்கள்” என்ற இளம மறவர்கள்

https://thevar-mukkulator.blogspot.com/2013/09/blog-post_8.html


சிங்கம்புனேரி-அருள்மிகு ஸ்ரீ சேவுகபெருமாள் அய்யனார் கோயில்

சேர ராஜ வம்ச ஐந்துநிலை நாட்டார்(மறவர்) வரலாறு

https://thevar-mukkulator.blogspot.com/2013/09/blog-post_25.html


இளையர் என்ற இளமறவர் என்ற ஐந்துநிலை நாட்டு மறவர் குறிப்புகள்

https://thevar-mukkulator.blogspot.com/2023/10/blog-post.html

'தமிழ் பிராமி கல்வெட்டுகள் காட்டும் தமிழகச் சமூகப் பொருளாதார நிலை’
- தி. ஸ்ரீ. ஸ்ரீதர்

தமிழ் பிராமி கல்வெட்டுகள் மூலமாக அக்காலச் சமூகம், பொருளியல் வாழ்வைப் பற்றி அறியக் கிடைக்கும் செய்திகள் குறைவே. பொன்னையும் பொருளையும் வெறுத்து, துறவு வாழ்வை மேற்கொண்ட துறவியரையும் அவர்களது இருப்பிடங்களையும் அவற்றை உருவாக்கிக் கொடுத்த கொடையாளர்களையும் பற்றியே இவை கூறுகின்றன. எனினும் இக்குகைத்தளங்களைக் கல்தச்சர்களைக் கொண்டு பொருள் செலவுசெய்து உருவாக்கிய கொடையாளிகள் மற்றும் அவர்கள் அளித்த கொடைகள் மூலம் சமூகப் பொருளாதாரச் செய்திகளை நம்மால் ஊகிக்கமுடியும்.

சிங்கம்புனரி இளமக்கள் என்னும் இளமறவர்கள் கல்வெட்டு:
இடம்:திருமையம் திருவுடைய நாயனார் கோவில்
காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)
செய்தி:கடம்பராயன் எரிச்ச்லூர் உடையார்க்கு நிலம் வழங்கியது.

ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்............மடப்புறமாக இளமக்கள் பற்றில் கொனர்ந்தது.


இடம்:திருமையம் திருவுடைய நாயனார் கோவில்
காலம்::மாறவர்மன் சுந்தர பாண்டியன்(1308)
செய்தி:சுந்தரபாண்டியன் தன் பெயரால் சந்ததி எடுத்ததில் இளமக்கள் நன்கொடை வழங்கியது.

ஸ்வஸ்திஸ்ரீ கோமாரபன்மரான திரிபுவன சக்கரவர்திகள்............இளமக்களான தேவன் திருவாலவாயுடையான் குலோத்துங்க சோழ நாடாழ்வார்க்கும் இவன் தம்பியான உத்தமசோழ நாடாழ்வார்க்கும் பிள்ளான் பெருமா...............
.....
இளையர்:

சித்தன்னவாசல் கல்வெட்டில் முனவர்களது குகைத்தளத்தை உருவாக்கிய அறக்கொடையாளராக இளையர் என்ற குடியினர் குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் படைத் தொழிலை மேற்கொண்ட குடியினராகச் சங்ககாலத்தில் திகழ்ந்துள்ளனர். முத்துப்பட்டி கல்வெட்டில் குறிப்பிடப்படும் எளமகன் (இளமகன்) இக்குடியினரைச் சார்ந்தவனாகவே இருக்க வேண்டும். செங்கம் நடுகல் கல்வெட்டுகளில் போர்த் தொழில் செய்த படைவீரர்கள் இளமகன் என்றே குறிப்பிடப்படுகின்றனர். எனவே இளமகன் அல்லது இளமக்கள் என்பவர்கள் அரசனிடத்திலோ அல்லது சிறுகுடித்தலைவர்களிடத்திலோ பணிபுரிந்த படைத்தொழில் புரியும் குடியினராக இருக்க வேண்டும் எனலாம்.
ஊருக்கு அருகில் முத்துப்பட்டி  அமைந்து உள்ளது.  முத்துப்பட்டியில் பெருமாள் மலை எனவும் கரடிப்பட்டி மலை எனவும் அழைக்கப்படும்  220 மீட்டர் உயரமுள்ள மலையின் தென்பகுதியில் இயற்கையான குகைத்தளத்தில் மூன்று தமிழி கல்வெட்டுகள் உள்ளன.  குகைத்தள மழைவடி முகப்பிலும், படுக்கையின் அருகிலும், சிறுகுகைத்தளத்தின் தனிக் கல்லிலுமாக இவை உள்ளன.

(இளையன்)புதூர் செப்பேடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இளையன்புதூர் செப்பேடுகள் எனப்படுபவை கி.பி.726 ஆம் ஆண்டு முற்கால பாண்டிய அரசனான அரிகேசரி பராங்குசன் மாறவர்மனின் 36 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகள் ஆகும்.இந்த செப்பேடுகள் மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகள் மூலம் முற்கால பாண்டியர் வரலாறு குறித்த செய்திகள் கிடைத்துள்ளன.
  • வடிவம்பலம்ப நின்ற பாண்டியன் வழி வந்த ஜயந்தவர்மன் என்ற மன்னன மகன் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன்  காடாக கிடந்த அந்த நிலங்களை கி.பி. 726 ஆம் ஆண்டு சீரமைத்து இளையன்புதூர் என்று பெயரிட்டு பாரத்வாஜி நாராயணபட்ட சோமாயாஜி என்னும் அந்தணருக்கு கொடை வழங்கி செப்பெடும் வெட்டித்தந்தான் எனவும் அந்த நிலத்தின் நான்கு பக்க எல்லைகளும் இந்த செப்பெட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
  • சேந்தன் மகனாகிய அரிகேசரி பராங்குசன் மாறவர்மனை சேந்தமாறன் என்றும் தேர்மாறன் என்று செப்பேடு கூறுகிறது. மேலும் இந்த செப்பேடு இரணியகற்பம், துலா பாரம் செய்து கொடை கொடுத்தான் எனவும், களக்குடி என்ற ஊரில் அரிகேசரி ஈஸ்வரம் என்ற சிவாலயத்தை கட்டி எழுப்பினான் எனவும் கூறுகிறது. பாண்டி பெரும்பணைக்காரன் மகன் அரிகேசரியே, சின்னமனுர் செப்பேட்டையும் எழுதி இருக்கலாம் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது
கல்வெட்டு 17:1

சிறுகுகைத்தளத்தின் சிறு பாறை ஒன்று வழவழப்பாக செதுக்கப்பட்டு உள்ளது. இச்சிறுபாறையின் உட்புறம் செதுக்கப்படாமல் மேடும்  பள்ளமுமாக  உள்ள பகுதியில் வலம் இடமாக தலைகீழாக இக்  கல்வெட்டு  வெட்டப்பட்டு உள்ளது.

நாகபேரூரதைய் முசிறி கோடன் எளமகன்

சேரர் துறைமுக நகரம் முயிற் கோடு   எனப்படடிருப்பதால் முசிறி கோடன் இவ்வூரன் எனக் கொள்கின்றனர் அறிஞர். இளமகன் என்பது போர் மறவனைக் குறிக்கும். நகரமெய் சேர்தது  நாகபேரூர் அந்தை என படிக்கவேண்டும். நாகப்பேரூரின் அந்தை முசிறிக்கோட்டு இளமகன் தந்த கொடை என்பது இதன் பொருள்.

இளையர் என்பவர் சங்க காலக் குடிகலில் ஒருவர். ஆதன், அழிசி மற்றும் சேந்தன் ஆகியோர் இளையர்
 குடியில் தோன்றியவர்கள்.கல்வெட்டுப் பாடம்
எருமி நாடு குமுழூர் பிறந்த காவுடி ஈதென்கு சிறு போசில் இளயர்
செய்த அதிட்டானம்.
பொருண்மை:
இந்தப் படுக்கையானது எருமி நாட்டு இளயரால் செய்யப்பட்டது. எருமி நாட்டின் குமுழூரைச் சேர்ந்த காவுதிக்குச் சிறுபொசிலைச் சேர்ந்த இளயர் படுக்கை அமைத்துக் கொடுத்ததை கல்வெட்டுக் கூறுகிறது. காவுதி என்பது சமண, புத்த மதத்தின் பெண் துறவிகளைக் குறிக்கும். எருமிநாடு என்பது மைசூரைக் குறிக்கும். இளயர் என்பது பழந்தமிழ் போர் வீரர் இனத்தைக் குறிக்கும்.[1] சேந்தனின் தந்தை அழிசியும், அழிசியின் தந்தை ஆதனும் ஆவர்.
[2] இந்த இளையர் குடியினர் வெல்போர் சோழர் என்ற சோழரின் கிளைக் குடியினர் ஆவர்.[3]
பொருளடக்கம்
  [மறை]
1 ஆட்சிப்பகுதி
2 படை பலம்
3 பாண்டியர் தொடர்பு
4 இளையர் யார்
5 மூலம்
6 மேற்கோள்களும் குறிப்புகளும்
ஆட்சிப்பகுதி[தொகு]

இவர்கள் ஆர்க்காடு என்னும் நாட்டை ஆண்டுவந்தனர். இந்த ஆர்க்காட்டை இளையர் குடியில்
 தோன்றிய அழிசி ஆண்டதால் இக்காட்டை அழிசியம் பெருங்காடு என்றும் அழைப்பர்.
இக்காட்டில் நெல்லிமரங்கள் அதிகம். இப்பகுதியை பற்றி குறிக்கும் சங்க இலக்கியங்கள்
 இந்நாட்டை நீர் வளம் (கழனி), நெல்லி மரங்கள், சோழர் குடியாட்சி
போன்றவற்றொடு இணைத்துக் காட்டுவதால் இது தஞ்சை மாவட்டத்தின்
ஆர்க்காட்டுக் கூற்றமே அன்றி வட தமிழக ஆர்க்காடு இல்லை என அறியலாம்.[4]
படை பலம்[தொகு]

இந்த இளையர் குடியில் ஒருவனான அழிசி தேரில் ஏறி வந்தது கண்கொள்ளாக்
காட்சி ஆகும்.[1]
இவர்கள் யானை வேட்டையிலும் அதைக் கட்டுப்படுத்துவதிலும் சிறந்தவர்.
 யானை வெட்டையாடி அதனின் கோட்டை (தந்தம்) தனதாக்கிக் கொள்வர்.[5][6]
இவர்கள் வாட்போரில் வல்லவர்கள்.[7]
இவர்கள் செய்த போரில் வெற்றி பெறுவார்கள்.[3]
பாண்டியர் தொடர்பு[தொகு]

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில் ஆதன் அழிசி என்ற ஒருவன் இருந்தான்.[8]
 இளையர் குடி அழிசி காவிரி ஆற்றின் மருதமரக் கரையில் கட்டி வைக்கப்பட்டான் என்ற
செய்தியும் உள்ளது.[9] இந்த இரணடையும் இணைத்துக் காட்டி இருவரும் ஒருவரே என்றும்
 அழிசி சோழரோடு பகைமை கொண்டு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் அவையில்
 இருந்ததால் அதை எதிர்க்கவே ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மீது எதிரிகள் படை
 எடுத்தனர் என்று மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார்.[10] அதனாலேயே சோழ நாட்டு
கரையில் அழிசியும் கட்டி வைக்கப்பட்டான் என்றும் கூறுவர்.
இளையர் யார்[தொகு]

மேலே காட்டப்படுள்ள மேற்கோள் சான்றுகள் அனைத்தும் இளையர் என்போரை வாட்போர்
 வீரர் எனவே காட்டுகின்றன.
இளையர் என்போர் வாள் வீரர்கள்.[11]
சேந்தன் தந்தை அழிசியின் தலைநகர் ஆர்க்காடு [12]
உள்ளூர் மரத்திலிருந்த வௌவால் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அழிசிக்காட்டு
நெல்லிக்கனியை விருரும்பியதாம்.[13]
ஆதன் அழிசி ஒல்லையூர் தந்த பூதப பாண்டியனின் அவைக்கள நண்பன்.[14]
மூலம்[தொகு]

சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். 2007. pp. 135-138.
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

↑ 1.0 1.1 குறுந்தொகை - 258:6
↑ திதலை எஃகின் சேந்தன் தந்தை, தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி,-(நற்றிணை 190)
↑ 3.0 3.1 நற்றிணை - 87:3
↑ வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் அரியல் அம் கழனி ஆர்க்காடு (நற்றிணை 190)
↑ குறுந்தொகை 258:5
↑ ஏந்து கோட்டு யானைச் சேந்தன்
↑ குறுந்தொகை 258:6
↑ புறம் 71:4-19
↑ குறுந்தொகை - 258:6
↑ #மூலம்
↑ காவிரிப், பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த, ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை, அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை, நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன், அழிசி ஆர்க்காடு (குறுந்தொகை 258)
↑ நற்றிணை 190
↑ வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு, நெல்லி (நற்றிணை 87)
↑ புறம் 71

சிவகங்கை மாவட்டம் பிரான்மலைக்குத் தெற்கே 'இளமக்கள்' என்ற இளம் மறவர்கள்
 சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.இவர்கள் வாழும் பகுதி ஐந்து நிலைநாடு என அழைக்கபடுகிறது
. திருமய நாட்டிற்கே மேற்கில் சேருங்குடி நாட்டிற்கு வடக்கே துவரங்குறிச்சி நாட்டிற்கு
கிழக்கே பிரான்மலை பாதைக்கும், ஐந்துமுக நாட்டிற்கும் தெற்கே அமைந்துள்ள்
 பகுதி ஐந்துனிலைநாடு எனப்படுகின்றது. இந்நாடு சதுர்வேதிமங்கலம்,கன்னமங்கலம்,
சீர்சேந்தமங்கலம்,வேழமங்கலம் என ஐந்து மங்கலளாகப் பிரிக்கபட்டுள்ளன. ஒவ்வொறு
 மங்கலத்துக்கும் பல கிராமங்கள் உள்ளன.


இந்த ஐந்து மங்கலங்களிலும் இளமக்கள்(எ)இளம்மறவர் என்ற சமூகத்தவர்கள்
 பெருவாரியாக வாழ்கின்றனர்.அந்த இளம்மாக்கள் வம்சத்து இளம்மறவர்கள் இந்த
பகுதியின் ஐந்து மங்கலங்களிலும் தலைமை பதவிகளான ஐந்துநாட்டார்கள் என
 அழைக்கபடுகின்றனர்.இவர்களுக்கு இங்கு 'அம்பலம்' பட்டம்.பொதுவாக மறவர்களுக்கு
 தேவர் பட்டமே இருப்பினும் இவர்களுக்கு இங்கு அம்பலப்பட்டம் உள்ளது.இவர்கள்
 சிங்கம்புனேரி கோயில் திருவிழக்கலிலும் முதல்மரியாதை வாங்கும் இனமாகவும் உள்ளது.

செய்தி விபரம்:
சிவகங்கை மந்திரி, ஐந்தினிலை நாட்டை வம்சம் பரம்பரை வரலாறு, இரா.சேது.
 பாரியது பறம்யு(கட்டுரை),சிங்கம்புனேரி,நிக்கோலஸ் டிரிக்ஸ்(இந்திய வரலாறு).

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.