Sunday, April 21, 2013

மறவர் இனமே தொல்குடி

மறவர் இனமே தொல்குடி



"கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி" என்று புறநானூற்றில் தமிழ்குடியின் தொன்மை இவ்விழக்கியங்கள் கூறுகின்றது.இந்த மூத்த தமிழ்குடிகளில் முதன்மையான குடியினரில் மறவர்குடி மிக தொன்மையானது. இந்த இனத்தின் புகழை தமிழின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்திலிருந்து உலகில் விவிலியத்துக்கு அடுத்து அதிகமாக அச்சிட்ட திருக்குறள் வரை இக்குடியின் மேன்மையை புகழ்கின்றது. ஆனால் சில அறிவு ஜீவிகளும் இது வீரரை மட்டும் குறிக்கும் பொதுவான் சொல் என்றும் சில இழிசின ஜாதியர் இது தங்கள் இனத்தை தான் இவ்வாறு சங்க இலக்கியங்கள் கூறுகின்றது என நா கூசாமல் பேசுவது இவ்வினத்தின் புகழின் மீது உள்ள பொறாமையே.எனவே மறவரின் தொன்மை கூறுகள் சிலவற்றை இங்கு சுட்டி காட்டுவோம்.

மறவர்-பெயர்க்காரனம் :


தமிழில்:
மறவன்-வீரன்,கொலை செய்தவன்

 மறம்-வீரம்
மறக்கருனை-கொலை (மறவனின் கருனையே கொலை தான்)
மறத்தொழில்-கொலை
மறலி-எமன்,கொற்றவை
சம்ஸ்கிருதம்:
மாறோ(MARO)-கொலை
மாறவா(MARAVA)-கொலைகாரன்,வீரன்
ஆங்கிலம்:
மற்டர்(MURDER)-கொலை
மற்டரர்(MURDERER)-கொலைகாரன்.
மார்ஸ்(MAARS)-ரோமானிய போர்தெய்வம்

இவ்வாறு தமிழ்,சமஸ்கிருதம்,ஆங்கிலம் முதலிய பல மொழிகளிலும் மறம் என்றால் வீரம் மறவன் என்றால் மறத்தொழில் புரிபவனான வீரன் என்று தான் பொருள்.சங்க இலக்கியத்தில் மறவர்கள் பாலை நிலத்தையே சார்ந்தவர்கள் ஆவார்.இங்கு விவசாயத்திற்கோ அல்லது கால்நடை மேய்ப்பதற்க்கோ வழியில்லை. எனவே இம்மக்கள் ஆறலையும், வழிப்பறியும்,போரையும் தவிர வேறொன்றையும் அறியாதவர்கள்.இவர்கள் முழுநேர மறத்தொழிலான ஆநிரை கவர்தலையும் போரையும் ஆங்கிலேய அட்சி வரை செய்து வந்துள்ளனர்.
இவர்கள் விவசாயமோ அல்லது வேறு தொழிலோ அறியாது மறத்தொழில் மட்டும் புரிந்து வந்த காரணத்தால் தான் இவர்களை மூவேந்தர்கள்(சேர,சோழ,பாண்டிய) மன்னர்கள் தமது படையில் முதல் படைவீரர்களாய் அமர்த்தியியும்.இவர்களை சேர மறவன்,சோழ மறவன் மற்றும் பாண்டிய மறவன் என்று பெருமை படுத்தியும்.இவர்களுக்கு மூவேந்தர்களே தலைவர்களாய் மறவர் பெருமான்,மறவர் செம்மல் என்று பூண்ட சங்க பாடல்களின் ஆதாரமாய் நாம் காண்கின்றோம்.

கொற்றவை(ஐயை) என்ற மறவரின் முதன்மையான் போர்தெய்வம்:


மறவர்கள் கையில் வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரயைக் கவரப் போகும்போது, தான்கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும்” என்றும் வேட்டுவரி படைத்துக்காட்டும் கொற்றவை பழைய வேட்டைச் சமூகக் கொற்றவையாய் வில்லுக்கு வெற்றி தருபவளாயும், ஆநிரை கவரச் செல்லும் வீரர்களுக்கு உடன்சென்று நிரைகவரத் துணைநிற்பவளாயும் சித்தரிக்கப் பட்டுள்ளாள். இப்படி வேட்டுவவரி முழுவதிலும் பழைய வேட்டைக் கொற்றவை, வெட்சிக் கொற்றவை, புதிய வைதீக் கொற்றவை என்ற மூன்று வௌ;வேறு சமூக அடுக்குகளின் தாய்த்தெய்வ வழிபாடு மற்றும் நம்பிக்கைகள் கொற்றவை வழிபாடு என்ற ஒரே தளத்தில் காட்டப்பட்டுள்ளன. மறவர் மறக்குணம் வாய்ந்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் மறவர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையப்பொருளாகும். இவர்களுக்கோர் பிள்ளை பிறந்து முப்பத்தொராம் நாள் சடங்கு நடைபெறும் பொழுது அப்பிள்ளையை வளர்த்து மிடத்தில் சிங்கரூபங்கீறி, அதன் மேல் பிள்ளையைக் கிடத்தித் தாலாட்டுப்பாடுவது வழக்கம். சிங்கம் மறவர்களின் குலதெய்வமான துர்க்கையின் வாகனமாகும். இதனாலேயே சிங்கரூபம்கீறுவதென எண்ண இடமுண்டு.

மறவரின் முதல் போர் ஆயுதம்-வளரி(Boomerang) :


மனிதனின் முதல் வேட்டை ஆயுதம் ஈட்டி இரண்டாவது ஆயுதம் அஸ்திரேலிய பழங்குடியினர் பயன்படுத்தும் பூமராங். மறவரின் மரபனு ஆப்பிரிக்க நைஜிரிய,எத்தியியொப்பிய மக்கள் மற்றும் அஸ்திரேலிய பழங்குடியினரிடம் மட்டுமே கானப்படுகின்றது.சங்ககாலம் தொட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரை மறவரிடம் மட்டுமே இந்த பூமரங்(Boomerang) ஆயுதம் கானப்படுகின்றது.இது வேறு இனத்துக்கோ அல்லது வேறு மாநில மக்களிடமோ கானப்படவில்லை. வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி(Boomerang) )யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் மறவர், எயினர் போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய 347ஆம் பாடலில் "மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்" என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் "பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) "என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய "பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ").மறவருள் ஒரு பிரிவினராகிய அகத்தா மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகத்தா மறவர்களின் மண்டபம் திருப்பரங்குன்றம் கோயில் அருகில் உள்ளது.அகத்தா மறவர்கள் திருப்பரங்க்குன்றம்,திருச்சுழி,வருசநாடு,வத்திரயிருப்பு,அருப்புக்கோட்டை பகுதியில் கானப்படுகின்றனர். கூறப்பட்டுள்ளது. வளரி வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது மற்றும் தற்போதைய சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. இராமநாதபுரம் சேதுபதி,புலித்தேவர்,சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள் மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய வீரம் நிறைந்த மறக்குல மக்கள் தம் குலக் கருவியாக வேட்டையாடவும்,போருக்காகவும் இளம்பிறை(Boomerang) வடிவமுள்ள் தாக்கி திரும்பக் கூடிய வளைதடியை பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.  


"படிகாக்கும் தனிக் கவிகை பார்வேந்தர் தங்கமனி முடிகாக்கும் செங்க்கோன்மை முரைக்ககும் படிபாதிக் குடிக்காக்கும் வழுதி தனிக் கொடியை அடல் கெருண்டா வடமேரிற் கயல் காக்கும் மறவர் கையில் வளைதடியே" -தருமபுத்திரர்(வாளெழுபது).

இதில் பாண்டிய மன்னனின் திருமுடியையும் பாண்டிய நாட்டையும் காக்கும் மறவர்களின் முதன்மையான ஆயுதமாக வளரியை கூறுகின்றது.

" Boomerangs," Dr. G. Oppert writes,* " are used by the Maravans and Kalians when hunting deer. The Madras Museum collection contains three (two ivory, one wooden) from the Tanjore armoury. In the arsenal of the Pudukottai Raja a stock of wooden boomerangs is always kept. Their name in Tamil is valai tade (bent stick)." To Mr. R. Bruce Foote, I am indebted for the following note on the use of the boomerang in the Madura district. " A very favourite weapon of the Madura country is a kind of curved throwing-stick, having a general likeness to the boomerang of the Australian aborigines. I have in my collection two of these Maravar weapons obtained from near Sivaganga. The larger measures 241" along the outer curve, and the chord of the arc 17!". At the handle end is a rather ovate knob 2%" long and i-J-" in its maximum thickness. The thinnest and smallest part of the weapon is just beyond the knob, and measures -J-J-" in diameter by i-J." in width. From that point onwards its width increases very gradually to the distal end, where it measures 2-f-" across and is squarely truncated. The lateral diameter is greatest three or four inches before the truncated end, where it measures i". My second specimen is a little smaller than the above, and is also rather less curved. Both are made of hard heavy wood, dark reddish brown in colour as seen through the (CASTES AND TRIBES OF SOUTHERN INDIA EDGAR THURSTON, C.I.E., )
* Madras Journ. Lit. Science, XXV. 47 MARAVAN

ஐந்து தினைகளிலும் மிஞ்சிய தமிழ் தொல்குடிகள்:


ஐந்து தினை மக்கள்:

குறிஞ்சி:
குறவர் ,குறத்தியர்.

முல்லை:
இடையர்,இடைச்சியர்.

மருதம்:
உழவர்,உழுத்தியர்.

நெய்தல்:
பரதவர்,பரத்தியார்

பாலை:
மறவர்,மறத்தியார்,எயினர்,எயிற்றியர்.

நாம் மேலே குறிப்பிட்டுள்ள இனமே சங்க காலம் முதல் வாழ்ந்து வந்த குடியினர் ஆவர்.இதில் குறவர்,பரதவர்,மறவர் தான் இன்று தமிழக ஜாதிய பட்டியலில் அச்சு அசலாக கானப்படுகின்றனர்.இன்று தமிழ கெஜட்ட்டிலும் இதே பெயரில் தான் கானப்படுகின்றனர்.
மற்ற இனங்கள் இண்க்கலப்பாகி வழக்கொழிந்து விட்டனர்.இன்று 300க்கும் மேற்ப்பட்ட ஜாதியினரும் பல மொழிகளும் பேசப்பட்டாலும் இந்த நாண்கு ஜாதியினர் மட்டுமே சங்க காலத்துக்கும் முந்தி இன்று வரை வாழ்கின்றனர்.

மறவரும் பரதவருமே பாலை நெய்தல் குடிகளாகும்:



மறவரும் பரதவரும் தான் இன்றும் பண்டைய காலம் தொட்டு அருகருகே வாழ்ந்து வருகின்றனர். இருவரும் ஒரு மூலக்குடியில் தோன்றியவர்கள் என சிலர் கூறுகின்றனர்.இருவரும் நாகர் என்ற இனத்தில் இருந்து பிரிந்தவர்கள் என மனிமேகலை கூறுகின்றது.மனிமேகலையில் நாகர் என்ற இனத்தை பற்றியும் அதன் பிரிவுகளாக மறவர்,எயினர்,பரதவர்,ஒளியர்,ஓவியர்,அருவாளர் என கூருகின்றது.இருவரும் சிற்சில இடத்தில் கரையாளர்,தலைவன் என்ற பட்டங்களுடனும்.கிளை முறைகள் மறவரிடத்திலும் பரதவரிடத்திலும் மட்டுமே கானப்படுகின்றது.

மறவரின் மாறா தொன்மை:

தமிழ் தொல்குடியினரை ஆரிய புராணங்கள் பல்வேறு பெயர்களில் இதிகாசங்கள் கூறுகின்றது.யக்ஷர்,கிராதர்,நாகர்,கருடர்,அசுரர்,வானரர்,நிஷாதர்,சபரர் என பல்வேறு இனங்களாக புராணங்கள் கூறுகின்றது.ஏனெனில் வரலாற்றுக்கும் முந்தைய காலகட்டத்தில் இங்கு விவசாயம் கிடையாது.இங்கு வனங்களே கானப்பட்டிருக்கும் அந்த இடத்தில் இருக்கும் நபர்களைத்தான் வானரர்,அசுரர் என இதிகாசகாலம் கூறுகின்றது.இன்னும் துல்லியமாக கூறினால் குறவரைத்தான் புரானங்களில்(யக்ஷர்,கிராதர்[குண்றவர்],அசுரர்) என கூறுகிறது.மறவரையும் பரதவரையும் மனிமேகலையில் நாகர் என குறிப்பிட்டாலும். மறவரை சில புராங்கள்சபரர் எனவும்  வானரர்,வனவாசி என கூறுகின்றது. எனவே நம் குலப்பெருமை. காக்க மறைத்துவைக்கப்பட்டுள்ள அருமை பெருமைகளை மீட்டுவர முயற்சி செய்யவேண்டும். தமிழ் இலக்கியங்கள் கூறும் புறப்பொருள் நம் குலத்திற்குரியது என்பதை மனதில் கொள்ளவேண்டும். பழம்பெருமை எதற்கு என்று நீங்கள் நினைக்க்க்கூடாது. பழம்பெருமையைமீட்டு நாம் முன்னோர்களைப்போல் புகழ்பட வாழவேண்டும். பிறந்த மண்ணின்மீதும், தாய்த்திருநாட்டின்மீதும், தன் உடல்,பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர்கள் நம்முன்னோர்கள். அதனால்தான், அவர்களைப்பற்றி கல்வெட்டுக்கள் பேசுகின்றன. செப்புப்பட்டயங்கள் சான்று கூறுகின்றன. இலக்கியங்கள் புகழ்மாலை சூட்டுகின்றன. நாமும் அவர்களின் அடிச்சுவட்டை பிறழாது பின்பற்றவேண்டும். இது மறவர் பூமி என்றால், பகைவனும் இடியோசைகேட்ட நாகம்போல், நடுங்கி ஒடுங்கி ஓடிவிடுவான். நாட்டை நாசப்படுத்தும் நாசகார சக்திகள் சூரியனைக்கண்ட பனிபோல் விலகிஓடிவிடும்,. வாழ்வதும், வீழ்வதும் தாய்மண்ணுக்காக என்பதே நம் முன்னோர்களின் தாரக மந்திரம். அதுவே நம்முடைய வழி.! பிறந்த மண்ணையும் பெற்றதாயையும் காப்பது நம் கடமை!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.