Saturday, May 4, 2024

பொன்னியின் செல்வன் நாவலும் சிவகங்கை அரியனை சண்டையும் ஒர் ஆய்வு

 பொன்னியின் செல்வன் நாவலும் சிவகங்கை அரியனை சண்டையும் ஒர் ஆய்வு





தமிழில் வந்த நாவல்களில் மணிமகுடம் என எனக்கு தெரிந்தது பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 – 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.  இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், 


நான் முதன் முதலில் 2002 நான் கல்லூரி செல்லும் காலத்தில் முதல் பாகம் படித்தேன். அதன் பின் என்னால் அதை கீழே வைக்க முடியவில்லை 20-30 தடவையாவது

படித்துள்ளேன். முதல் பாகம் மட்டும் எத்தனை தடவை படித்தேன் என எனக்கே தெரியவில்லை. அவ்வளவு பிடித்திருந்தது காரணம் அந்த காலகட்டத்தில்சோழ தேசத்தின் காவிரி கரை அழகும் சிறந்த தமிழ் பெயர் கொண்ட கதாபாத்திரங்களும் நாமும் அதனுள் ஒரு கதாபத்திரமாக மாறுவது போல் தோன்றும் அவ்வளவும் அருமையான நாவல்.

கல்கி பல சோழர் கல்வெட்டுகளையும்,வரலாறுகளையும்,சிலபல வெளிநாட்டு நாவல்களையும் சில இதிகாசங்களையும் கலந்து எழுதியுள்ளார் என்று தோன்றியது. குறிப்பாக சின்ன பழுவேட்டரையர்,பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் மருதுசகோதரர்களான சின்ன மருது,பெரிய மருது போல அப்பவே எனக்கு தோன்றியது

கல்கி எந்த கதையிலிருந்து இதை எடுத்திருப்பார் என பல கோனங்களில் சிந்தித்த எனக்கு வேறு சில கதைகளை படிக்க இப்படியும் இருக்குமோ என தோன்றியது.

எனது ஆய்வுகளை சிலவற்றை சொல்கிறேன்.


கல்கி தனது பொன்னியின் செல்வன் 1950களில் எழுதுமுன் பல நாவல்கள் பார்திபன்கனவு,மோகினிதீவு,சோலைமலை இளவரசி என எழுதியுள்ளார். ஆனால் 1948ல் வந்த "சிவகாமியின் சபதம்" என்ற நாவலே பொன்னியின்செல்வனுக்கு மிகப்பெரிய அடித்தளமாக மாறியுள்ளது.

சிவகாமியின் சபதத்தை  இந்திய சுதந்திர போராட்டம் மற்றும் இராமாயனம் போன்ற இருநூல்களில் மூலம் உருவாக்கியுள்ளார் என அவர் தெரிவித்திருந்தார்.


சிவகாமியின் சபதம்:



1948ல் வெளி வந்த சிவகாமி சபதம் சளுக்க மன்னன் புலிகேசி பல்லவ தேசத்தை அழித்து நடன மங்கை சிவகாமியையும் சிறை பிடித்து செல்கிறான். அவனை பழிக்கு பழி வாங்கி சளுக்க தேசத்தை அழித்து சிவகாமியை மீட்டு வருவதே சிவகாமியின் சபதம் நூலின் சாராம்சம். இது சீதையை கவர்ந்த ராவணனை போரிட்டு

அழித்து இலங்கையை கொளுத்தி இராமர் வெற்றி கொண்ட கதையே ஆகும். ஆனால் சிவகாமிசபதம் நம் மனதுக்குள் அதிகம் ஒட்டாது காரணம் சம்ஸ்கிருத பெயர்கள்

மாமல்லன்,நரசிம்மன்,வஜ்ரபாகு,புலிகேசி,நாகநந்தி,தாரா என வடமொழிபெயராக வரும்..மேலும் பல்லவர் சளுக்கர் என்பவர்கள் தமிழர்களுக்கு மிக அன்னியமானவர்களாக

தோன்றும்


ஆனால் பொன்னியின் செல்வனில் அருள்மொழிதேவர்,கண்டராதித்த தேவர்,பழுவேட்டரையர்,வல்லவரையன்,குந்தவை,சேந்தனமுதன் என தமிழ் பெயர்களாக வந்து

நம் சோழ தேசத்து காவிரி தமிழ் நிலங்களை வர்ணனை நமது வரலாறு என மார் தட்ட தோன்றும்.


பொன்னியின் செல்வன் நாவலின் மூலங்கள்:





எனக்கு தெரிந்த வரை கல்கி மூன்று கதைகளில் இருந்தே பொன்னியின் செல்வன் நாவலை உருவாக்கி இருக்க கூடும் என தொன்றுகிறது.

டான் குய்க்ஸோட்(Don Quixote) மிகுவல் டெ செர்வான்டெஸ்,மகாபாரதம் மற்றும் சிவகங்கை சீமையின் கதை. இந்த மூன்று கதைகளை தொட்டே

உருவாணது "பொன்னியின் செல்வன்".


மகாபாரதம்:



ஏற்கனவே சிவகாமியின் சபதம் இராமயனம் கதையின் மூலம் என கூறினோம். அதேபோல் மகாபாரத்தின் கதை என அண்ணன் தம்பி அரியனை பிரச்சனை.

அரியனைக்காக நடந்த போர் அதன் உள் சூது,வனவாசம்,குழப்பம்,சதி என அனைத்தும் வருகிறது ஆகவே மகாபாரத்த்தை ஒரு மூலமாக எடுத்துள்ளார்.

அதில் பாண்டவர் கௌரவர்களாக சுந்தரசோழன் மக்களும் அவர்கள் ஆதரவாளர்களும் கண்டராதித்ததேவர் மகனும் அவர்கள் ஆதரவாளர்களும் வருவர். இவையே

பொன்னியின் செல்வன் நாவலின் மூலம் எனலாம்.


டான் குய்க்ஸோட்(Don Quixote):



டான் குய்க்ஸோட்(Don Quixote) மிகுவல் டெ செர்வான்டெஸ் என்ற ஸ்பெயின் எழுத்தாளர் எழுதிய நாவலாகும். 1605 மற்றும் 1615 ஆண்டுகளில் இரு பாகங்களாக வந்த இந்த நாவலே நவீன இலக்கியத்தின் முதல் நாவலாகக் கருதப்படுகிறது. லா மான்ச்சாவைச் சேர்ந்த டான் குய்ஸோட் என்ற நபர், தாம் படித்த மாண்மை (chivalry) குறித்த புத்தகங்களின் அடிப்படையில் தம்மை ஓர் வீரராக (knight) உருவகித்துக்கொண்டு வீரமாகக் காப்பாற்றும் நிகழ்ச்சிகளை நகைச்சுவையுடன் கூறும் நாவலாகும். அவரை அவரது உயிர் நண்பர் வரை அனைவரும் கலாய்ப்பதுவே நாவலின் மையமாகும். இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் தாமஸ் ஷெல்டன் ஆவார்.


இதில் டான் குய்க்சோட் பயனங்களும்,கனவுகளும்,பல கதாபாத்திரங்களும் வருகின்றனர். இதல் பலவகை நாயகர்,நாயகி,வில்லன்,காமெடியன் என கதாபாத்திரங்கள்

நீள்கிறது.


சிவகங்கை அரச சரித்திரம்:

இராமநாதபுரம் ஆண்ட சேதுபதி மன்னர் தன் மகள் அகிலாண்டேசவரி நாச்சியாரை நாலுகோட்டை,சக்கந்தி,படமாத்தூர்,காளையார்கோவில், ஆகிய பகுதியை

ஆண்ட "கண்றுமேய்க்கன்" பெரிய உடையன தேவர் அவர்களிம் மகன் சசிவர்ணத்தேவருக்கு  மனமுடித்து தருகிறார். அதன் பின் சசிவர்ணத்தேவர் சேதுபதியின்

சோர புத்திரன் பவாணிசங்கரனின் சூழ்ச்சியை வென்று சிவகங்கை குளத்தை வெட்டி சிவகங்கை என்ற ஊரை உருவாக்கி அதை அரசு நிலையிட்ட தேவர் என ஆண்டு

காலமெய்துகிறார். அவரின் மகன் "முத்துவடுகநாத தேவர்" ஆற்காடு நவாப்,யூசுபுகானை வென்று மதுரையை கைப்பற்றி பின் விஜயகுமார நாயக்கரை மன்னராக்குகிறார்

அவர் பின்பு ஆற்காடு நவாப் மதுரையை கைப்பற்றவே நாயக்கருக்கு "வெள்ளிக்குறிச்சி" என்ற ஊரை தந்து அடைக்கலமாக பாதுக்காக்கிறார். முத்துவடுகநாதர்

பிரதானி மந்திரி "தாண்டவராய பிள்ளை" இதன் பின் ஆங்கிலேய ஆற்காடு நவாப்பு முத்துவடுகநாதரையும் சேதுபதியையும் வீழ்த்தி சிவகங்கையை ஹூசைன்பூர்

என்றும் இராமநாதபுரத்தை அலிநகரம் என மாற்றுகிறார். அப்போது முத்துவடுகநாத தேவர் மனைவியும் தாண்டவராயபிள்ளையும் தப்பித்து விருப்பாச்சி கோட்டைக்கு

செல்கின்றனர். அங்கு மைசூர் ஹைதர் அலி உதவி கோரி படைதிரட்டி வந்து சிவகங்கையை மீட்கிறார் வேலுநாச்சியார். இதன் பின் தாண்டவராயபிள்ளை காலமாகிறார்.

 இதன் பின் தன் மகளான வெள்ளச்சி நாச்சியாரை அரசியாக்கி அவருக்கு மனமுடிக்க முதலில் படமாத்தூர் கவுரிவல்லபதேவரை எதிர்பார்த்து அது சரிவராமல்

சக்கந்தி வேங்கன் பெரிய உடையன தேவரை மனமுடித்து வைத்து பெரியமருதுவை பிரதானியாகவும் சின்ன மருதுவை தளவாய் ஆகவும் அக்கி வைக்கிறார்.

இதன் பின் வெள்ளச்சி நாச்சியார் இறந்துபோகிறார். இதன் பின் வாரிசுரிமை சண்டை வருகிறது. பெரியமருது வேங்கன் உடைய தேவருக்கு தன்மகளை மனமுடித்து

அவரை மன்னராக்கினார். வேலுநாச்சியார் மகள் இறந்த சோகத்தில் இறந்து விடுகிறார். படமாத்தூர் கவுரி வல்லபதேவர் புதுக்கோட்டை தொண்டைமானையும்

ஆங்கிலேயரையும் அனுகி மருதுகள் வேங்கன் உடையதேவருக்கு எதிராக படை எடுக்க கோரிக்கை வைக்கிறார். அறந்தாங்கி கோட்டையில் கவுரி வல்லப தேவருக்கு

சிவகங்கை மன்னராக பட்டம் கட்டி பின் படைகளோடு சிவகங்கையை வீழ்த்தி மருதுகள் தூக்கிலிடப்பட வேங்கன் உடையதேவரும் எஞ்சிய சிவகங்கை போராளிகளும்

நாடு கடத்தபடுகின்றனர்.


இந்த மூன்று கதைகளும் சேர்ந்து தான் பொன்னியின் செல்வனை உருவாக்கியது. இப்போது இதில் வந்த கதாப்பாத்திரங்கள் எதிலிருந்து எடுக்கபட்டது என

பார்ப்போம்

பொன்னியின் செல்வனில் வரும் அருள்மொழி,வந்தியதேவன்,கரிகாலன்,குந்தவை,பழுவேட்டரையர் எல்லாம் உன்மை கதாபாத்திரம் நந்தினி,பூங்குழலி,இரவிதாசன்

இவை கற்பனை கதாபாத்திரங்கள்



வந்தியதேவன்(கதா நாயகன்):



பொன்னியின் செல்வன் கதாநாயகன் வந்தியத்தேவன் நிஜக்கதாப்பாத்திரம் அவனை வாணர்குல திலகம் என குறிப்பிடுகிறார் கல்கி. சில வந்தேரி பரதேசி

ஆய்வாளர்கள் வல்லவரையன் என்ற வல்லபன் சளுக்கன் என்றும் பல்லவன் என அவனுக்கு வேற்றுமொழி பூசி வடுகன் என எழுதுகின்றனர்.

யப்பா "தென்னன்" என்பது போல் "வடுகன்" என்பதும் தமிழ்பெயரே வடுகன் என்ற பெயர் கன்னடத்திலும் தெலுங்கிலும் கிடையாது. அவர்களே தங்கள் "தெஷின மக்களு"

என கூறுகின்றனர். விந்தியமலைக்கு தெற்கே உள்ளவர்கள் எல்லாம் தென்னவர்களாம். அதற்கு வடக்க உள்ளவர் தான் வடக்கர். வந்தியதேவன் பல்லவனோ,சளுக்கனோ

கிடையாது. அவன் வாணர் என்ற "வல்லபராஜ மகாபலிகுல திலக" என கூறுகின்றர். வாணர்கள் தர்மபுரி,கிருஷ்னகிரி,கர்னாடக கோலார் பிரதேசத்தை ஆண்ட தமிழர்கள்

சங்க இலக்கியத்தில் குமரியில் ஒரு வாண மன்னன் இருந்துள்ளான். வாணர்கள் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதும் அவர்கள் கர்னாடகா ஆந்திரா,வங்காளம்

வரை பரவினர் என்பதும் வரலாறு. எனவே வந்தியதேவன் வாணர்குல வல்லவரையன் என்ற தமிழன் தான். கன்ணடம்,தெலுங்கு கல்வெட்டுகள் 11-ஆம் நூற்றாண்டுக்கு

முன் கிடையாது. இன்றைய பெங்களூரு,மைசூரு வரை தமிழ் கல்வெட்டுகள் தான் கிடைத்துள்ளது. அதை ஆங்கிலேயர் காலத்திலே ஆவணப்படுத்தி தென் இந்திய

கல்வெட்டுகளில் சேர்த்துள்ளனர். எனவே வாணர் தமிழரே ஆவர்.


ஆனால் "பொன்னியின் செல்வன்" நாவலில் வரும் வந்தியதேவனது கதாபாத்திரம் டான் குய்க்ஸோட்(Don Quixote) என்ற நாவலில் வரும் கதாநாயகன் கதாபாத்திரம் ஆகும்

டான் குய்க்ஸோட்(Don Quixote) ஒரு இரானுவ வீரனாக கற்பனை செய்து சாகசப்பயனம் செல்கிறான் நிறைய கதாபாத்திரங்களை சந்திக்கிறான். அவனுக்கு

உதவியாக சான்சோ பான்சா என்ற கட்டையும் குட்டையுமான கதாபாத்திரம் வருகிறது அவனது முட்டாள் தனத்தை கிண்டலடித்து வரும் கதாபாத்திரம்.

அவனுக்கு லூசிடானா என்ற கற்பனை காதலியும் இருப்பாள். அவன் பின்பு ட்ரெவால்டா சீமாட்டி  மீது காதல் கொள்கிறான். அவனுக்கு அடிக்கடி பயங்கர

கணவுகள் வந்து துரத்துகிறது முட்டாள்தனமான கற்பனையும் வருகிறது.இவன் வயதான காலத்தில் ரோசாண்டோ என்ற குதிரை ஏறி சாகசப்பயனம் மேற்கொள்கிறான். 

இது ஐரோப்பிய கண்டத்தின் முதல் நாவலாகும். 16ஆம் நூற்றாண்டு இறுதியில் எழுதபட்டது ஷேக்ஸ்பியருக்கு முந்தயது. இந்த கதாபத்திரத்தையே கல்கி வந்தியதேவனாக உருமாற்றி படைத்துள்ளார்.


ஆரம்பத்தில் வீரநாரயன ஏரியில் குதிரை சவாரி செய்வது,பல இயர்கை காட்சிகளை வியப்பது,ஆழ்வார்கடியானை சந்திப்பது, நந்தினியின் பல்லக்கில் மோதுவது,

இலங்கை செல்வது, அங்கு அருள்மொழி சோழரிடம் வாள்சண்டையில் தோற்பது என அவரும் அத்தனை அத்தியாயங்களும் டான் குய்க்ஸோட்(Don Quixote)

நாவலில் வரும் கதாநாயகன் கதாபாத்திரம். வந்தியதேவனை வைத்து தான் ஒவ்வொரு இடமாக கல்கி நாவலை நகர்த்தி இருப்பார். ஆக டான் குய்க்ஸோட்(Don Quixote)

கதாபாத்திரம் தான் வல்லவரையன் வந்தியதேவன்.


ஆழ்வார்கடியான் நம்பி:



ஆழ்வார்கடியான் நம்பி திருமலை எனும் இயற்பெயர் கொண்டவர் என்றாலும் வைணவ சமயத்தினை பாடல்களால் வளர்த்த ஆழ்வார்களின் மேல் பற்று கொண்டு தன் பெயரை ஆழ்வார்க்கடியான் நம்பி என்று மாற்றிக் கொண்டார். உடல் முழுவதும் திருநாமம் இட்டுக் கொண்டும், கையில் எப்போதும் தடியுடன் இருப்பவர். அரசாங்க காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், நிதானமாக செயல்படும் தன்மையுடையவர். வைணவத்தின் மீதான பற்றினால் சைவர்களை காணும் பொழுதெல்லாம் சண்டையிடுகின்றவர். பொன்னியின் செல்வன் கதைமுழுவதும் சைவர்கள் நிரம்பியிருக்கும் போதும், வைணவத்தின் சார்பாக வந்து சமன்செய்கிறவர். நகைச்சுவை ததும்ப பேசுவதும், அறிவுப்பூர்வான ஆலோசனைகள் சொல்வதிலும் வல்லவர்.


இந்த கதாபாத்திரம் டான் குய்க்ஸோட்(Don Quixote) நாவலில் வரும் சான்சோ பான்சா(Sancho Panza)என்ற கட்டையும் குட்டையுமாக காட்சி அளிக்கும் ஒரு விவசாயி.

இவனை டான் குய்க்ஸோட்(Don Quixote) தனக்கு ஒரு பணியாளனாக வந்தால் பின்னாளில் ஒரு தீவை உணக்கு வாங்கி தருகிறேன் என அசை வார்த்தை காட்டி

அழைத்து செல்கிறான். இந்த சான்சோ பான்சா டான் குய்க்ஸோட்(Don Quixote) செய்யும் முட்டாள்தனமான கற்பனையை கிண்டலடித்தும் எச்சரித்தும் இனங்கியும்

கடைசி வரை டான் குய்க்ஸோட்(Don Quixote) செல்கிறான். சான்சோ பான்சாவே ஆழ்வார்கடியான்.




ஆதித்த கரிகால சோழன்:



சுந்தர சோழரின் மகனாகவும், அருள்மொழிவர்மன் மற்றும் குந்தவை தேவியின் மூத்த சகோதரராகவும், பட்டத்து இளவரசராகவும் ஆதித்த கரிகாலன் வருகிறார். சிறுவயதிலேயே போர்புரியும் குணம் கொண்டவராகவும், எதிரிகளைத் தன்னந்தனியே எதிர்த்து நிற்கின்ற வீரராகவும், முன்கோபம் கொண்டவராகவும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த கதாபாத்திரம் மகாபாரதத்தில் வரும் துரியோதனன் என்ற கதாபாத்திரம் போல சித்தரிக்கபடுகிறது. மற்றும் டான் குய்க்ஸோட்(Don Quixote) நாவலில் வரும்

பெர்டினாண்ட்பிரபுerdinand (Fernando)டோர்தியா என்ற பெண்ணை காதலித்து ஏமாற்றி அவளை கைவிட்டு செல்கிறான். பின் லூசிடினாவை மணக்க முயன்று அதில் வெற்றி கிடைக்காமல்

பழைபயடி டோர்தியாவை தேடி வருகிறான். ஆதித்த கரிகாலன் நந்தினியை தேடி வருவது போல்.


நந்தினி:



நந்தினி வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்க திட்டமிடும் பெண் கதாபாத்திரத்தில் வருகிறார். சோழப் பேரரசில் பெரும் செல்வாக்கு மிகுந்த பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்கிறாள். சுந்தர சோழரின் வாரிசுகளான குந்தவை தேவியையும், அருள்மொழிவர்மனையும், ஆதித்த கரிகாலனையும் தனித்தனியே கொல்வதற்காக பாண்டிய ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்படுகிறாள்.


இது மகாபாரதத்தில் வரும் சகுனியின் உள்ளிருந்து சூது செய்து பழிதீர்க்கும் வன்மம் திரவுபதியின் பழிவாங்கும் குனமும் கலந்த கதாபாத்திரம். இது டான் குய்க்ஸோட்(Don Quixote) வரும் டொர்தியா கதாபாத்திரத்தை ஒட்டியது. தன்னை காதலித்து ஏமாற்றிய பெர்ட்னாண்ட் பிரபுவை பழிவாங்க தன்னை கவர்ந்து சென்ற கார்டினோவு(பழுவேட்டரையர்) மனைவியாக வாழ்ந்து தன் சபதத்தை நிறைவேற்றும் கதாபாத்திரம்.


குந்தவை:



சுந்தர சோழரின் மகளாகவும், ஆதித்த கரிகால சோழனின் தங்கையாகவும் அருள்மொழிவர்மனின் தமக்கையாகவும் வருகிறாள்.பராந்தக சுந்தரசோழா் செம்பியன் மாதேவி அநிருத்தா் அருள்மொழி உள்ளிட்ட அரசகுலத்தோா் மட்டுமல்லாமல் சோழ நாட்டு மக்கள் அனைவாின் அன்பையும் பெற்றவள்.வந்தியத் தேவன் மேல் இருக்கும் தன்னுடைய காதலையும் தெரிவிக்கின்றாள்.


இது கொஞ்சம் டான் குய்க்ஸோட்(Don Quixote) வரும் கற்பனை கதாபாத்திரம் லூசிடானாவையும் கொஞ்சம் டுல்சினிய சீமாட்டியும் குறிக்கும்.


பூங்குழலி:



காண்போர் மயங்கும் அழகிய பெண்ணாகவும், பெரும் புயலிலும் தனித்து ஆழ்கடலில் படகோட்டிப் பயணிக்கும் திறனுடையவளாகவும், தேவாரப் பாடல்களையும், சுயமாக பாடல் புனைந்தும் பாடும் வல்லமையுடையவளாகவும் பூங்குழலியின் கதைப்பாத்திரத்தினைக் கல்கி அமைத்துள்ளார்.


இது கொஞ்சம் டான் குய்க்ஸோட்(Don Quixote) வரும் கற்பனை காதலி லூசிடானாவையை குறித்துள்ளனர். இவள் ஒரு விவசாய பெண் தன்னந்தனியாக

இருப்பவள். இவள் கற்பனையே ஒழிய நிஜத்தில் தோன்ற மாட்டாள்.



இனிதான் சிவகங்கை சீமை அரச கதாபாத்திரங்கள் வரும்,


பழுவேட்டரையர்கள்:



பெரிய பழுவேட்டரையர்:

பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர். சோழ நாட்டுத் தனாதிகாரியாக சுந்தர சோழர் ஆட்சி காலத்தில் இருந்தவர். துறைமுகப்பட்டினங்களில் சுங்கத் திறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பினையும் ஏற்றிருந்தார். வயது முதிர்ந்த காலத்தில் நந்தினி தேவியை திருமணம் செய்து கொண்டு தனது இளையராணியாக்கினார். இவ்வாறு பொன்னியின் செல்வனில் செல்வாக்கு மிகுந்த கதாபாத்தரமாக பெரிய பழுவேட்டரையர் வலம் வருகிறார்.

சின்னப் பழுவேட்டரையர் 

சின்ன பழுவேட்டரையர் என அழைக்கப்படும் காலாந்தகக் கண்டர் சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காக்கும் தளபதியாக கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வரும் கதாபாத்திரமாகும். பழுவூர் எனும் ஊரினை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர்களின் வரலாற்றினை மையமாக கொண்டு இந்த கதாபாத்தினை உருவாக்கியுள்ளார். சோழப்பேரரசின் கீழ் பழுவூர் சிற்றரசர்கள் வாழ்ந்து வந்தார்கள்.


இந்த இரண்டு கதாப்பாத்திரங்கள் சின்ன பழுவேட்டரையர்,பெரிய பழுவேட்டரையர்கள் என்ற கதாபாத்திரங்கள் நிஜத்திலும் எந்த அரசாங்கத்திலும் இல்லை

எந்த நாவலிலும் இல்லை இது முழுக்க முழுக்க பெரிய மருது,சின்ன மருது கதாபாத்திரமே.

அதில் பெரியமருது மாவீரர் புலியை கைகளில் கொண்றவர்.

சிவகங்கையின் பிரதானி(முதன் மந்திரி) தாண்டவராய பிள்ளைக்கு பின் சிவகங்கை அரசின் சர்வாதிகாரியாக கிட்டதட்ட பெரிய பழுவேட்டரையர் போலவே 

வரும்.

சின்ன மருது தளவாய்(தளபதி) என்ற பெயரில் இருந்தாலும் முழுக்க முழுக்க அரண்மனை சிறுவயலில் இருந்து கொண்டு மொத்த சிவகங்கையும் ஆட்டுவித்தவர்

சின்ன மருது. சிறந்த மேதாவி,நிபுனர்,ஆட்சி,கனக்கு வழக்குகள் சின்னவருக்கு தெரியாமல் இருக்காது..


எப்படி பழுவேட்டரையர்கள் சுந்தர சோழன் மரணபடுக்கையில் இருக்கும் போது "மதுராந்த சோழ தேவருக்கு" பட்டம் கட்ட ஆசை பட்டனரோ அதே போல்

மருது சகோதரர்கள் வேலுநாச்சியார் மரணபடுக்கையில் இருக்கும் போது "வேங்கன் பெரிய உடையன தேவருக்கு" பட்டம் கட்டி அரியனை ஏற்றினர். ஆனால்

முழு அதிகாரம் மருது சகோதரர்களே வைத்திருந்தனர்.

பழுவேட்டரையர்கள் கதாபாத்திரம் மருதுசகோதர்களே அவை டான் குய்கோட்ல் கிடையாது.


அனிருத்த பிரம்மராயர்:



மும்முடிச்சோழ பிரம்மராயர், ஸ்ரீகிருட்டிணராமன் என்கிற இயற்பெயர் கொண்டவர். அன்பில் அனந்தாழ்வார் சுவாமி என்கிற ரங்கநாதருக்குப் பணி செய்வதையே வாழ்வின் பயனாகக் கொண்டிருந்த அன்பில் அநிருத்தப் பட்டாச்சாரி எனும் நாராயணன் புகழ் பரப்பிய அந்தணரின் கொள்ளுப் பேரன். ஆழ்வார்களின் பாடல்களைப் பாடி பக்தர்களை மகிழ்விக்கும் நாராயண பட்டாச்சாரியார் என்பவரின் மகன். இவர் சுந்தர சோழன் மந்திரியாவார்.


இது முழுக்க முழுக்க தாண்டவராயபிள்ளை என்ற சிவகங்கையின் மந்திரியின் கதாபாத்திரமே. அவர் சசிவர்ணதேவர்,முத்துவடுகநாதர் மற்றும் வேலுநாச்சியார் இம்மூவருக்கும் பிரதானி(மந்திரி) ஆக இருந்துள்ளார் அரசருக்கு அடுத்து மிகப்பெரிய பதவி. முத்துவடுகநாதர் இறந்த பின் வேலுநாச்சியரை தப்பிக்க வைத்து

ஹைதர் அலியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி படைகள் பெற்று சிவகங்கையை வேலுநாச்சியாருடன் வந்து மீட்டதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

வேலு நாச்சியார் இறப்பதற்கு முன்பே இறந்து விடுகிறார். இவரது பதவிக்கே பெரியமருது வருகிறார்.


விஜயாலய சோழர்:



முத்தரையர் மகளை மனந்து தஞ்சையை சீதனமாக பெற்று சோழர் சாம்ராஜ்யத்தின் ஆனிவேரே விஜயாலய சோழன் பின் முத்தரையரை வென்று தஞ்சையை கைப்பற்றி

பிற்கால சோழருக்கு அடிகோலினார்.


இவர் அச்சு அசலாக சசிவர்ணத்தேவரின் கதாப்பாத்திரம் சேதுபதியின் மகளான அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை மணந்து சிவகங்கையை சீதனமாக பெற்று

சிவகங்கை ஸ்தாபித்தார் சேதுபதியின் சோரபுத்திரன் பவானி சங்கரனை வென்று "அரசுநிலையிட்ட தேவர்" என்று சிவகங்கை சீமையை ஸ்தாபித்தவர்.


கண்டராதித்த தேவர்:




கண்டராதித்தர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ மன்னனும், செம்பியன் மாதேவியின் கணவரும் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற கண்டராதித்தரைச் சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.சோழப் பேரரசின் மன்னராக இருந்தாலும், அரசாங்க காரியங்களில் விருப்பமின்றி, சிவ பக்தியில் திளைக்கும் மனம் படைத்தவர் கண்டராதித்தர். 


இது முழுக்க முழுக்க "முத்துவடுகநாத தேவர்" கதாபாத்திரம் ஆகும் சசிவர்ணதேவருக்கு பிறகு அரசேறிய மாவீரர் யூசுப்கானையும்,நவாப்பையும் தோற்கடித்து

மதுரையை மீட்டு பின் காளையார் கோவில் போரில் இறக்கிறார். முத்துவடுகநாதரையே கண்டாதித்த தேவர்,யானைமேல் துஞ்சிய தேவர் என மாற்றி இருக்கிறார்

கல்கி. சில ஈனர்கள் முத்து வடுகநாதன் என்ற பெயரில் தெலுங்கர் வடுகர் என சில தலித்திய,பெரியாரிய ஈனர்கள் பரப்புகின்றனர். வடுக வெள்ளாளர்,வடுக பள்ளர்,தொட்டிய

பள்ளர்,துளுவ சாணார்க,தெலுங்கு சாணார்கள் கன்ண்ட சிறுத்தை,தெலுங்கு சிறுத்தை என இருக்கும் போது "வடுகநாதன்" என்ற தமிழ் பெயர் எந்த தெலுங்கனுக்கும்,

கன்னடனுக்கும் உள்ளது. "வடுகநாதன்" சிவனின் பெயராகும் அரசர்கள் கடவுள்களின் பெயரையே வைத்து கொள்வர். மதுரையை ஆண்ட "திருமலை" நாய்க்கன் என

ஏன் பெயர் வைத்திருந்தான். "திருமலை" திருப்பதி பெயர்தானா? ஏன் வைத்தான்? அது கடவுள் பெயர். அது போல் "முத்துவடுகநாதன்" திருக்கொடுங்குன்றத்து ஈசன்

பெயரே "வடுகநாதன்" திருக்கொடுங்குன்றம்னா சிவகங்கை பிரான்மலைப்பா. தமிழ் மன்னனை அவதூரு பரப்புவோர் இறைவனால் தண்டிக்கபடுவர்.


செம்பியன் மாதேவி:





சிற்றரசராக இருந்த மழவரையர் வம்சத்தில் செம்பியன் மாதேவியார் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவ பெருமான் மீது பற்றுடன் இருந்தார். பக்தி மிகுந்து சிவனையே கணவனாக அடைய பார்வதிதேவி, தாட்சாயனி போல எப்போதுமே கோவிலில் தவம் செய்கிறாள். மங்கை பருவம் அடைந்த பின்னும் சிவ சிந்தனை மிகுந்து தன் எண்ணத்தில் தளராமல் வாழ்கிறார்.


இது கிட்டதட்ட வேலுநாச்சியார் கதாபாத்திரம் கனவரை இழந்து அரசை இழந்து பின் அரசை மீட்டு தன் ஆசை மகளை அரியனையில் அமரசெய்து.அரியனையில் 

அமர்ந்த மகள் சிறிது நாளில் இறந்துவிட புத்திர சோகத்தில் படுத்த படுக்கையாகி. அரியனை போட்டியின் கோரத்தை கண்டு. தன் உடன் பிறவா சகோதரர் கோபால

நாயக்கரின் விருப்பாச்சிக்கு சென்று ஓய்வெடுத்து வந்த நிலையில் அங்கு ஒரு புளியமரத்தில் தூக்கிட்டு கொண்டதாகவும் புத்திரசோகம் தாளமால் நோயில் இறந்ததாக

இரு கதை சொல்கின்றனர். வேலுநாச்சியார் கதாபாத்திரம்,சுந்தர சோழர்,செம்பியன்மாதேவி இரண்டு கதாபாத்திரங்களையும் கொண்டது.



சுந்தர சோழர்:



ராந்தக சோழர் சுந்திர சோழருக்கு இளவரசர் பட்டம் கட்டவேண்டுமெனவும், அவருடைய வாரிசுகளே சோழதேசத்தினை ஆள வேண்டுமெனவும் கண்டராதித்தரிடம் கூறிவிட்டு சிவபதம் அடைந்தார். கண்டராதித்தரும் அரசாங்க விசயங்களை வெறுத்தபடியால் ஒப்புக் கொண்டார். அரிஞ்சய சோழரிடமும், அவர் மகன் சுந்தர சோழரிடமும் அரசாங்க காரியங்களைக் கண்டராதித்த சோழர் ஒப்படைத்தார். பின்பு நோயால் பாதிக்கபட்டு பக்கவாதத்தில் படுத்தபடுக்கையானார்.


இது வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சி நாச்சியரை குறிக்கும். காரணம் அரியனை ஏறிய சில காலத்திலே நோயால் பாதிக்கபட்டு உயிரிழந்தார். இவரது பிரிவால்

வாடிய வேலுநாச்சியாரும் படுத்த படுக்கையானார்கள். இவரது கணவர் வேங்கன் உடையன தேவர் மருதுகள் உதவியுடன் அரியனை ஏறினார்.


மதுராந்தக தேவர்:



மதுராந்தகரின் பெற்றோர் கண்டராதித்தரும் செம்பியன் மாதேவியாரும் பெரும் சிவபக்தர்கள். எனவே மதுராந்தகரும் ஏறக்குறைய இருபது பிராயம் வரையில் சிவபக்தராக, அன்னையின் வாக்கையே வேத வாக்காகக் கொண்டு நடந்து வந்தார்.பழுவூர் இளையராணி நந்தினியைச் சந்தித்துப் பேசிய பின்னே சிவபக்தியைத் துறந்து, சோழநாடு தனக்குரியது என்று எண்ணத் தொடங்கினார். பழுவேட்டரையர்கள் முதலிய சிற்றரசர்களின் ஆதரவினைப் பெற ரகசிய கூட்டங்களைக் கூட்டினார். இதனை அறிந்த செம்பியன் மாதேவி மதுராந்தகத் தேவரை பழையாறைக்கு அழைத்தார்.


இது முழுக்க முழுக்க வேங்கன் பெரிய உடையன தேவரையே குறிக்கும்.அவர் சக்கந்தி பாளையத்தில் பிறந்து வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சி நாச்சியாரை

திருமணம் செய்கிறார். வெள்ளச்சி நாச்சியாரே அரசாள்கிறார். அவர் இறந்த பின்பே அரியனை மீது ஆசை வருகிறது. பெரியமருதுவின் மகளை மணந்து

அவர்களின் துனையோடு ஆட்சியை கைப்பற்றுகிறார். இவர் ஒரு ஓபிய போதை பிரியர் என சொல்லபடுகிறது. இவருக்கு போதை தந்து மொத்த நாட்டையும்

மருதுகள் தங்கள் வசத்தில் கொண்டு வருகின்றனர். இவர் பின்பு மருதுசகோதரர்கள் வீழ்ச்சிக்கு பின் ஆங்கிலேய அரசால் நாடுகடத்தப்பட்டு மலேசியா பினாங்கில்

இறந்த்தாக செய்தி:


அருள்மொழிதேவர்:



அருள்மொழிவர்மன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழர் குல இளவரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற இராசராச சோழனைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி. இவரை மலையமான்,கொடும்பாளூர் வேளான் ஆதரித்தனர்.


இந்த கதாபாத்திரதோடு யாரையும் ஒப்பிடமுடியாது காரணம். தமிழகத்தின் ஒப்பற்ற மன்னன். ஆனால் சிவகங்கை அரச அரியனை போட்டியில் இருந்த படமாத்தூர்

கௌரி வல்லபரை ஒப்பிடுகிறேன். எப்படி என்றால் சிவகங்கை அரசு அரியனையை கைப்பற்ற வேங்கன் உடைய தேவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி பின்

நாட்டை விட்டு அகண்று புதுக்கோட்டை தொண்டைமானையும் ஆங்கிலேயரை சந்தித்து உதவி கோறுகிறார். மருது சகோதரர்கள் வீழ்ச்சிக்கு பின்

சிவகங்கை அரசராக மூடி சூட்டப்படுகிறார்.


கொடும்பாளூர் வேளான்.



பூதி விக்கிரம கேசரி, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தின் கதாப்பாத்திரம். இவர் சோழப் பேரரசின் சேனாதிபதியாக ஈழத்துப் படையை நடத்தியவராவர். வரலாற்றில் இடம்பெற்ற பூதி விக்கிரம கேசரியை சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி


இது புதுக்கோட்டை தொண்டைமானையே குறிக்கும் மருதுகளுக்கு எதிராக உள்ள கௌரி வல்லபதேவரை அழைத்து வந்து அறந்தாங்கி கோட்டையில் சிவகங்கை 

மன்னராக முடிசூட்டப்படுகிறார். கொடும்பாளூர் வேளானே புதுக்கோட்டை தொண்டைமான் என தெரிகிறது.



இன்னும் எஞ்சிய பொன்னியில் செல்வன் கதாபாத்திரங்கள் யாவும் டான் குய்க்ஸோட்(Don Quixote)  வருபவை மற்றும் கற்பனைகள் ஆகும். எனக்கு என்ன அச்சர்யம் என்றால்

சிவகங்கை அரச சரித்திரமும் கல்கி அறிந்தது ஆச்சர்யமே. இது என்னுடைய ஆய்வு ஆனால் உண்மையை தழுவியே எழுதியுள்ளேன். என்பது படித்தால்

தெரியும்



நன்றி:

மகாபாரதம்:

சிவகங்கை சரித்திர கும்மி

சிவகங்கை சீமை வரலாறு

Don Quixote de la Mancha (first edition, 1605)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.