Monday, December 18, 2023

நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்

 நடுவக்குறிச்சி ஊராட்சி (Naduvakuruchi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை வட்டாரத்தில் 


அமைந்துள்ளது.இந்த ஊராட்சி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

ஆனால் இது முற்காலத்தில் 72 பாளையங்களில் ஒன்றான மறவர் பாளையமாக இருந்துள்ளது.இவர்கள் கீழவை நாட்டிலிருந்து வந்த கொண்டையங்கோட்டை, மறக்குலத்தைச் சேர்ந்த தலைவனார் வம்சத்தைச் சார்ந்தவர்கள்

இவர்கள் இங்கு மகட்கொடை கொடுக்க மறுத்து வந்ததாக செவி வழி கதை கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் பாண்டியனின் தளபதிகளாக வந்தவர்கள். 

ஜமீன் குடும்பத்தார் வருகை

“பதினெட்டு நற்பதியைப் கொண்ட

பலவளம் நிறைந்த நாட்டை

அதிபதியாய் ஆளப் பெற்றார்

ஆப்ப நாட்டைச் சேர்ந்த மன்னர்கள்”



இவரது ஏற்றமும், தோற்றமும் போற்றுவதற்குரியதாக இருந்தது. இவர்கள் மறவர் இனத்தில் தலைவனார் என்ற வம்சத்தைச் சார்ந்தவர்கள்.

ஜமீன் தோற்றம் :

இது நடுவக்குறிச்சி வம்சாவளி என்ற ஆங்கிலேயர் காலத்து ஓலைசுவடி(தகவல்).நடுவக்குறிச்சி ஜமீன் 13 ம் நூற்றாண்டில் 1127 ல் கொல்லம் ஆண்டு 382 ல் ஜமீன் தோன்றியது. அப்போது சீவல பாண்டிய மன்னர் ஆட்சி செய்து வந்தார். அப்போது நடுவக்குறிச்சி தலைவர் குற்றால தேவர் ஊற்றுமலை ஜமீன் மருதப்பதேவரும் நத்தம்,பழனி,மேல்நாடு பகுதியை சார்ந்த கொள்ளையர்களின் கொட்டத்தைஅடக்கினர். அதனால் மகிழ்ந்த பாண்டியமன்னன் குற்றால தேவருக்கு "வரகுனராம" குற்றால தேவர் என்ற பட்டத்தையும் வழங்கி  சீமைய ஆள ஆனை வழங்கினான். இதன் பின் சதாசிவ குற்றால தேவர் மகட்கொடை மறுத்து மருத்தப்பதேவருடன் சுந்தரபாண்டியபுரம் வந்ததாக தகவல்.

அதன் பின் கொடிக்காநாடு பகுதி கொள்ளையர்களை அடக்கி சுந்தரபாண்டியபுரம் அருகே மேலும் சில நிலங்களை பெற்று "வரகுனராம பெரும்புலி குற்றால தேவர்"

என்ற பெயரும் பெற்றார்.


இதன் கயத்தாறு வெட்டும்பெருமாள் பாண்டியனுக்கும் தென்காசிப்பாண்டியனுக்கும் போர் மூண்டது. அப்போது பராக்கிரம பாயும்புலி குற்றாலதேவர் மகன் சிதம்பரநாத குற்றால தேவர் மகனான பாயும்புலி குற்றால தேவர் தென்காசி குலசேகரராஜாவுக்கு ஆதரவாக போர் புரிந்தார். அப்போது வெட்டும் பெருமாள் இடையர்களையும்,வணிகர்களையும் சிறைபிடித்து அய்யன்பிள்ளையார் குறிச்சி அய்யன்வனம் பகுதியில் செல்லையில் சண்டையிட்டு அவர்களை மீட்டு தென்காசி ராஜாவுக்காக போர் புரிந்தார். அதனால் "ஆயர் குலம் காத்த குற்றால தேவர்" என்ற பெயரை வழங்கிய தென்காசிப்பாண்டியன் குலசேகரன் ஏரி,ரெட்டைகுளம்

ஆகிய பகுதிகளை வழங்கினான்.




இதன் பின் நடுவக்குறிச்சி பாளையப்பட்டு பிற்காலத்தில் ஊத்துமலை பாளையபட்டுடன் இனைந்தது.


ஆனால் இவை "நடுவகுறிச்சி வம்சாவளி" என்று வெள்ளையரால் வெல்லபட்டு ஆக்கிரமிக்கபட்ட காலத்தில் பாளையக்காரர் வம்சாவளி ஏனோ தானோ என எழுதியுள்ளனர் உன்மையில் இவர்கள் பாண்டியன் உறவினர்கள் என சில பாண்டியர்கால பட்டயங்கள் கூறுகிறது.





விருமாண்டி படமும் "கொத்தாள தேவர்" பெயரும்

குற்றாலத்தேவர் என்ற பெயர் காலப்போக்கில் குத்தால தேவர் என்றானது. இன்றைக்கும் குற்றாலத்தை குத்தாலம் என 
அழைப்பதை கானலாம். அப்படியே இந்த குத்தால தேவர் என்ற பெயரே கொத்தாள தேவர் என மாறியுள்ளது.
இது இன்றைக்கு நிறைய கொண்டையங்கோட்டை மறவர் சிறுதாலிகட்டி மறவர் பெயராக உள்ளது.



விருமாண்டி படமானது "The Life of David Gale" என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலே ஆகும்.
இதில் வந்த விருமாண்டி என்னும் பெயர் நமது பிரமலைகள்ளர் சமூகத்தில் பார்க்கலாம்.


விருமாண்டி,சிவனாண்டி,நல்லகுரும்பன்,நல்லமாயன்,பேய்காமன்,கழுவன் போன்ற பெயர்களை பார்க்கலாம்.

அதே மாதிரி நல்லம நாயக்கர் "தேனி" மாவட்ட நாயக்க ஜமீன் அல்ல. தூத்துகுடி



அருகே உள்ள காடால்குடி ஜமீந்தார் பெயரே நல்லமநாயக்கர்.

அதைப்போல் கொத்தாள தேவர் என்னும் பெயரும் திருநெல்வேலி மாவட்டத்தில் பயன்படுத்தும் பெயராகும்.


சொக்கம்பட்டி,நடுவக்குறிச்சி ஜமீந்தார்கள் பெயரான குற்றால தேவர் என்ற பெயராகும்.
அதுவே கொத்தாள தேவர்  என வந்துள்ளது.

கொத்தள தேவர் நல்லம நாயக்கர் நெல்லை மாவட்ட சிறுகதை தொகுப்பில் எடுத்திருக்கலாம் .மற்றபடி விருமாண்டி நடந்த கதை அல்ல ஆங்கில பட கதை தழுவலே ஆகும்.
ஜமீண்கள்
=======
நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்
முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்
திரையன் தேவர்கள்
ஊர்க்காடு ஜமீன்
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
தென்னாட்டு புலி சிங்கம்பட்டி ஜமீன்
ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் புலித்தேவன்
குருக்கள்பட்டியின் மறைந்த ஜமீன்
சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை
கொல்லங் கொண்டான் ஜமீன் 
ஊத்துமலை ஜமீன்
சிவகிரி ஜமீன்-மறவர்கள்
சேத்துர் ஜமீன்
கடம்பூர் ஜமீன்
மணியாச்சி ஜமீன்

நன்றி: கார்த்திக் தேவர்(Palayapattu Vamsavali images)

இதுவும் பத்திரிக்கை செய்திகளில் வந்துள்ளது