Thursday, January 26, 2023

களப்பிரர் என்னும் பெயரின் உண்மையான விளக்கம்.

களப்பிரர் என்பர் 2-ஆம் நூற்றாண்டு முதல் பல்லவர்,பாண்டியர் எழுச்சியான 6-ஆம்  நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர்

சிலர் சொல்லாராய்ச்சி என்பதில் பல மடைமைகளை புகுத்தி களப்பிரர் என்பவருக்கு பல பெயர் கொடுத்து அசிங்க படுத்தி

வருகின்றனர். உண்மையில் களப்பிரர் என்பதற்க்கு உண்மையான அர்த்தம் என்ன.

மன்னர்கள் தங்களை இந்த கொடி உடையவன் என கூறுவார்கள் மகாபாரதத்தில் அர்ஜூனன் அனுமகொடி துரியோதனன்

நாகக்கொடி போன்று தமிழ் மன்னர்கள் இந்த கொடி வந்தவன் என கூறுவதுண்டு


1)பாண்டியன்-மீனவன்(அதாவது மீன் கொடியை உடையவன்)



2)சேரன்-வில்லவன்(அதாவது வில் கொடியை உடையவன்)



3)சோழன்-வய(ள)வன்(ஆதாவது புலி கொடியை உடையவன்)



4)தொண்டைமான்-தொண்டையர்(ஆதாவது தொண்டை கொடி உடையவன்)



5)வாணர்-(பணவை)(ஆதாவது பணவை என்ற கழுகு கொடி உடையவர்)




6)பல்லவர்-பல்லவன்-(பலுவ என்ற ரிஷப கொடி உடையவன்)



7)களப்பிரர்-களப்பாளன்-(களப யாணை கொடி உடையவன்)-

பொருள்

களபம்(பெ):

யானைக் கன்று

யானை





களபம் என்பதற்கு தமிழிலும் கன்னடத்திலும் சிங்களத்திலும் யாணை என்று பொருள் வருகிறது

எனவே மீனவர்,வில்லவர்,வயவர் என்ற கொடி சின்னத்தை கொண்ட தமிழ் பெயர்கள் இருப்பது போல் களப்பாளர் என்பது யானை



என்ற கஜத்தை கொடியாக கொண்டவர்கள் என்பது பொருள்.


கஜ கொடி என்ற யாணை கொடியை இந்தியா முழுவதும் உள்ள எஞ்சிய நாகர் அரசர்கள் பூராம் பயன்படுத்தி வந்தனர். மேலை கங்கர் நாகர் வம்சத்தினர்

என்பது அவர்கள் கொடி நாகம் மற்றும் யானை கொடி மூலமாக அறிகிறோம். அதே போல் இலங்கையில் இருந்த நாகர்களும் கஜ கொடி என்ற களபகொடியை

பயன் படுத்தி வந்தனர்.


மேலை கங்கரே களப்பிரர் என்பது தெளிவாக தெரிகிறது மேலும் 10-ஆம் நூற்றாண்டுக்கும் முன் கன்னட எழுத்துக்கள் கர்னாடகாவிலே கிடைக்கவில்லை

எனில் சங்க இலக்கியத்தில் கங்கர் தமிழ் மன்னர் என்பது தெளிவு. இவர்கள் பயன்படுத்திய கொடி கஜ கொடி என்ற களபகொடி. இந்த யானை கொடி உடையவர்களையே

தமிழில் களப்பிரர் என அழைக்கப்பட்டனர்.களப்பிரர் எஞ்சியவர்கள் முத்தரையர்கள் ஆவர். கங்கர்களும் தங்களை முத்தரையர் என கூறியுள்ளனர்.

Sripurusha was a Western Ganga Dynasty king who ruled from 726 - 788 CE. According to the Javali inscription Sripurusha ruled for 62 years. He had marital relations with the Badami Chalukyas and used titles such as Muttarasa, RajakesariBhimakopa and Ranabhajana. An able warrior and a scholar, he authored the Sanskrit work Gajasastra. He is known to have undertaken significant irrigation projects such as the construction of a dam (Katta).[

இலங்கையில் உள்ள நாகர்களும் தங்கள் கொடி கஜக்கொடி என்ற யானைகொடியே பயன்படுத்தியுள்ளனர்.






யானைக்கும் நாகர்களுக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை

.களப்பிரர் என்ற களபகொடி பயன்படுத்திவர்கள் கங்கர்களே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.