Friday, September 9, 2022

முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்

பாண்டிய பேரரசு சிதரிய பின் தமிழகம் முகமதியர் பின் சிலகாலம் விஜயநகர பேரரசுவின் கீழ் சில காலம் இருந்தது. விஜயநகர பேரரசு காலத்தில் 72 பாளையபட்டுகளாக பிரிக்கபட்டு சில தமிழ் மன்னர்களுக்கும் அவர்கள் ஏற்கனவே ஆண்ட பகுதியை அங்கீகரித்திருந்தனர். அப்படி ஒண்று தான் முருக்க நாடு என்று அழைக்கபடும் இன்றைய வத்ராயிருப்பு முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் வரை உள்ள பகுதி இதன் பெயர் முருக்க நாடு என்று அழைக்கபட்டுள்ளது. இந்த பாளையம் 72 பாளையத்திலே ஒன்றாகும்.


 இதனை ஆண்டவன் மூவரைய தேவன் என்ற மூவரையன் ஆவான். இவர்கள் சிறுதாலி மற்றும் பெருதாலி இரு பிரிவினையும் கொண்ட மறவர் வகுப்பை சேர்ந்தவர். ஆவர். இம்மூவரையனை பாராட்டி, திருசிற்றம்பல கவிராயர் "மூவரையன் விறலி விடு தூது" என்ற நூலை பாடியுள்ளர். இது 1650ல் பாடப்பட்டது ஆதாவது சேதுபதி திருமலை நாயக்கர் காலமாகும்.



"மூவரையன் விறலி விடு தூது":

திருநெல்வேலி மாவட்டத்தில் வீரை என்னும் வீரவநல்லூரை ஆண்ட திருவேங்கடநாதன் என்ற மூவரையன் 1700 ஆண்டு வந்துள்ளார். அவனை பாட்டுடை தலைவனாக பாடப்பட்டுள்ளதே "மூவரையன் விறலிவிடுதூது" ஆகும்.




ஆனால் வீரவநல்லூர் வத்திராயிருப்பு அருகே உள்ள இலந்தைகுளம் ஆகும்.








மூவரையன் விறலிவிடுதூதுல் மூவரையன் குலத்தை பற்றியோ முன்னோர்களை பற்றியோ கூறப்படவில்லை. இவன் களவேள்வி நாட்டை சேர்ந்த வீரை என்ற பதியினை உடையவன் கருடக்கொடி உடையவன். பொதிகை மலையுடையுடைவன். வைகை ஆறினை உடையவன். சதுருகிரி மலை நாதர் மீது பக்தி உடையவன் என பல செய்திகள் கூறுகிறது.

திருவேங்கடவர்க்கு கோவிலும் மதிலும் கூட கோபுரமும் எடுத்தவன் என்றும்.திருமலை நாயக்கர் மூவரையதேவனுக்கு பல்லாக்கு,பொண்களஞ்சி,கொற்றகுடை,பொண் அனைசு,களஞ்சு முதலிவை திருமலை மூவரையதேவனுக்கு வழங்கியுள்ளார்.

மூவரையன் யானை,குதிரை,தேர்,கவசம் கொண்ட நால்வகை படைகளும் கொண்டிருந்தனர்.

நல்ல தங்காள்-நல்ல தம்பி:

நாட்டார் தெய்வமான நல்லதங்காள் என்ற குலதெய்வம் மூவரையன் குலத்தில் பிறந்தவர்களாவர்.

மகாபலி வாணன் குலம்:

திருமலை மூவரையன் தேவன் கருட கொடியை உடையவன் வைகையாருடையவன்,பொதியமலை உடையவன் என புகழை கொண்டவன். ஆகையால் இவன் மதுரையையும் ஸ்ரீவில்லிபுத்தூரையும் ஆண்ட வாணாதிராசர் எனும் மாவலி வம்சத்தினராக கருதலாம். மூவரையன் என்னும் பெயர் மூவரசரான சேர சோழ பாண்டியரை வென்றமையால் பெற்றபெயராய் இருக்கலாம்.

மூவரையன் நாடு இழப்பு:

மூவரையன் மீது பொறாமை கொண்ட சேத்தூர்,சிவகிரி,சாப்டூர் ஜமீந்தார்கள் மூவரையன் மீது போர் தொடுத்து அவனை கொன்று அவன் நாட்டை மூன்றாக பங்கு போட்டு கொண்டார்கள். அதனால் மூவரையன் பகுதி சேத்தூர் மற்றும் சாப்டூருக்கு சென்று விட்டது.



சதுரகிரி கோவிலை கட்டியவர் :




சதுரகிரி கோவிலை காட்டியது மூவரையனே. இவர் சதுரகிரி நாதர் மீது பற்று கொண்டவர். இவர் சேத்தூர் சாப்டுர் ஜமீனால் தோற்காடுக்கப்பட்ட பின் சதுரகிரி சாப்டுர் ஜமீனிடம் சென்றது.

மூவரையன் வழியினர்:









மூவரையன் வழியினர் வத்ராயிருப்பு அருகே உள்ள இலந்தைகுளத்தில் குடி இருக்கின்றனர். இவர்களிடம் திருமலை நாயக்கர் தந்த செப்பேடு உள்ளது. ஆதாவது புலியை கொன்று இப்பகுதியை காத்தமைக்கு திருமலை நாயக்கர் தந்த செப்பேடு மூவரையன் வழியினரான அன்னாமலை தேவர் என்பவரிடம் உள்ளது. இவர்கள் இந்த ஊரில் ஜமீன் என கூறுகின்றனர். இவர்கள் சேதுபதி வீட்டில் திருமணம் செய்தோம் என்ற செய்திகள் தவிர வேறு ஏதும் அரியவில்லை என கூறுகின்றனர். 
ஜமீண்கள்
=======
நடுவக்குறிச்சி ஜமீன் கொத்தாள தேவர்(குற்றால தேவர்) வம்சம்
முருக்க நாட்டு பாளையக்காரண் மூவரையன்
திரையன் தேவர்கள்
ஊர்க்காடு ஜமீன்
தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு
தென்னாட்டு புலி சிங்கம்பட்டி ஜமீன்
ஆவுடையார்புரம் ஜமீன்தார் ஆபத்துக் காத்தார் புலித்தேவன்
குருக்கள்பட்டியின் மறைந்த ஜமீன்
சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை
கொல்லங் கொண்டான் ஜமீன் 
ஊத்துமலை ஜமீன்
சிவகிரி ஜமீன்-மறவர்கள்
சேத்துர் ஜமீன்
கடம்பூர் ஜமீன்
மணியாச்சி ஜமீன்