Monday, February 1, 2021

கொட்டாரக்கரை மணிகண்டேஸ்வரர் கோவில் கட்டிய மறவன்

கேரள மாநிலத்தில் கொட்டாரக்கரை  கணபதி கோயில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற வரலாற்று கோயில்களில் ஒன்றாகும். கோட்டாரகர கணபதி பற்றி பல புராணக்கதைகள் உள்ளன. உண்மையில் இது ஒரு சிவன் கோவில் ஆகும் , ஆனால் கணபதி இங்கு பிரபலமானது. கோயிலின் சரியான பெயர் மணிகண்டேஸ்வரர் சிவா ஷேத்திரம் .. பிரதான தெய்வம் வேறு யாருமல்ல, சிவன் தானே - சிவா கிழக்கு நோக்கி எதிர்கொள்கிறான். உண்மையில் கணபதி இங்கே ஒரு சிறிய தெய்வம் மட்டுமே. ஆனால் இந்த கோயில் இன்று சிவன்  கோயிலாக இல்லாமல் கணபதி கோயிலாக பிரபலமானது.



இந்த கோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அவ்வளவாக இல்லை ஆனால் இந்த கோவிலை புதுப்பித்து அதில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தவரின் கல்வெட்டு ஒன்றை கேரளா கொட்டாரக்கரை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.



இது கொல்லம் வருடம் 630 கல்வெட்டு அதாவது கி.பி 1514 வருட   பழமையானது. இது இளையதன் ஸ்வரூபம்அரச குடும்பத்தின் ஆட்சிக்குட்பட்டது. 




கொட்டாரக்கரை மணிகண்டேஸ்வர தேவஸ்தானத்தின் நகல் 


கல்வெட்டு செய்தி :

சிவ பிரதிஷ்டை செய்து மணிகண்டேஸ்வரர் என்னும் பெயர் வைத்ததாக செய்தி கூறப்படுகிறது 


சிவ பிரதிட்டை செய்தவர்:


இதில் இரு கல்வெட்டு உள்ளது. முதல் கல்வெட்டு தமிழிலும் இரண்டாவது மலையாளத்திலும் உள்ளது. மறவன் பிள்ளை என்பவன் சிவன் கோவிலை புதுப்பித்தான் என்றும் மணியண்ணம்புரி என்ற பெயரை சூட்டி வேத மந்திரங்கள் ஓதி மணி கண்டேஸ்வரர் என்று பெயர் வைத்தான் என கல்வெட்டு கூறுகிறது.


இது பின்னாளில்  இரண்டு நம்பூதிரிகள் இந்த கோவிலில் பிள்ளையார் சிலையை  பிரதிட்டை செய்து வழிபாட்டு வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. அதனாலே இது சிவன் கோவில் என்பதை விட விநாயகர் கோவில் என்று வழக்கில் உள்ளது 

நன்றி:

திருவிதாங்கூர் கல்வெட்டுகள் 

தமிழ் ஓலை ஆவணங்கள் 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.