Sunday, January 6, 2019

மீனாட்சி ஆண்டாளாக மாறிய கொற்றவை கோவில்கள்



கிளியும் கொற்றவையும்





சங்ககாலத்திற்கும் முன்னும் சங்கம் மறுவிய காலத்தில் பின்னும் கொற்றவையே முதன்மையான தெய்வமாக தமிழ் கூறும் நல்லுலகத்தில் மன்னர்களாலும் மறவர்களாலும்
வழிபடப்பட்டுள்ளது.

இதன் பின்பு சைவ,வைணவ பக்தி எழுச்சியினால் நிறைய கொற்றவை தெய்வம் சங்கு,சக்கரம் ஏந்திய திருமாலாகவும்,சிவனின் மனைவியாக மாற்றபட்டுள்ளது. இதற்காக போலியான பல கதைகள் சொல்லபட்டு வைதீக சடங்குகள் பின்பற்றபட்டுள்ளது.


கொற்றவை:


கொற்றவை என்பவள் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. மறவர் மற்றும் எயினர் (தற்போது எயினர் என அறியப்படும் சாதி இல்லை. ஆயினும் மறவர்கள் உள்ளனர்) கொற்றவையை வணங்கியதாகச் சங்ககாலத்துக்குப் பிற்பட்ட இலக்கியங்கள் காட்டுகின்றன. மறவர் பாலை நிலத்துக்குரிய பூர்வகுடி மக்களாக அறியப்பட்டாலும், அவர்கள் ஐவகை நிலங்களிலும் பரவி வாழ்ந்தனர்.கொற்றவை என்பவள் குறிஞ்சி நிலத்துக்குரிய தெய்வமாகப் சில பழந் தமிழ் நூல்களிலே குறிப்பிடப்பட்டாலும், பிற்காலத்தில் கொற்றவை பாலை நிலத்துக்கு உரிய தெய்வமாகவே பெரும்பாலும் விவரிக்கப்படுகிறாள். பாலைக்கு என்று தனி நிலம் இருந்திடாமல் முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து கதிரவன் வெம்மையாலே எங்கும் வளமை தீய்ந்து போயுள்ள இடங்களே பாலை என ஆனதால், குறிஞ்சி,முல்லை,பாலை நிலத்தில் வழிபட்டதாக கருதப்படும் கொற்றவை பாலை நிலக் கடவுளாக ஆகியிருக்கலாமென கருதவும் வாய்ப்புண்டு. கொற்றவை மறவர்களுக்கு தொழிலில் வெற்றியைக் கொடுப்பவள் என இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது.( நளினி, மு., கலைக்கோவன், இரா. பக். 11, 12.)


சிலப்பதிகார மதுரையில் மீனாட்சி கோவில் இல்லை கொற்றவை கோட்டம்
உண்டு.


மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,

மையறு சிறப்பின் வான நாடி

ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு - என்”

(காடுகாண் காதை, சிலம்பு)


சிலம்பு கூறும் கொற்றவை
வெண்ணிறப் பாம்புக்குட்டி போன்ற பொன் இழையால் கட்டப்பட்ட நீண்ட சடைமுடி. பிறைச் சந்திரன் போலத் தோற்றமளிக்கும்படி அச் சடைமுடியிலே சாத்திய காட்டுப் பன்றியின் வளைவான கொம்பு. கழுத்தில், அஞ்சாத வலிமை கொண்ட புலியின் வாயைப் பிளந்து பெற்ற அதன் பற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட புலிப்பல் தாலி. இடையில் வரிகளும் புள்ளியும் பொருந்திய புலித்தோல் ஆடை. கையிலே வில் ஆகியவற்றுடன் கூடி நீளமான முறுக்கிய கொம்புகளையுடைய கலைமான் மேல் ஏறி இருக்கும் தோற்றமே கொற்றவையின் தோற்றமாகக் காட்டப்படுகின்றது
புறப்பொருள் வெண்பாமாலை. துறை-கொற்றவை நிலை.

மானை வாகனமாக கொண்ட கொற்றவை. சிம்ம வாகினி அல்ல!!!!!!!!!

கிளி ஏந்தும் கொற்றவை:







கொற்றவையை குமரி,கன்னி என்ற இளம் பெண்ணாக விவரிக்கபடுகிறது. கொற்றவைக்கு கிளியை படைக்கும்  பண்பு பண்டைய காலத்தில் இருந்து உண்டு. கிளியை கொல்வதில்லை.கிளியை கொற்றவை கோவிலுக்கு நேர்ந்து விடுவது வழக்கும். காரணம் பெண் கணவனை அடையாமல் பிள்ளை பெறுவதில்லை ஆனால் கிளி பெண் என்ன சொன்னாலும்
திரும்ப சொல்லும் குழந்தையை போல. கல்யாணம் ஆகும் வரை கிளியே பெண்ணுக்குகுழந்தையாக கருதப்படும்.
அதனலே கொற்றவை என்ற குமரிக்கண்ணி கிளி ஏந்துகிறாள்

கிருத்துவத்தில் கூட கன்னி மரியால் ஏசுவை பெற்றடுப்பது கூட கிளி கொற்றவை
போலத்தான்.கிளிப்பிள்ளை தாங்கும் கண்ணி தாயாக காட்சி அளிக்கிறாள் கொற்றவை.


கிளியுடன் கூடிய பல கொற்றவை சிற்பங்களும் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இரண்டாவது பழந்துர்க்கை வடிவமாகக் கொள்ளத்தக்க சிற்பம் செஞ்சிக்கருகிலுள்ள சிங்கவரம் குன்றின் மேற்பகுதியில் குடையப்பட்டுள்ள அரங்கநாதர் குடைவரையின் தெற்கில், கீழ்ப்புறமுள்ள பாறையில் இடம்பெற்றிருக்கிறது. அண்மையில் நாங்கள் பார்க்க நேர்ந்த இச்சிற்பத்தின் விளக்கத்தைக் கீழே காணலாம்.


சடை : கரண்ட மகுடம் (நீண்ட கூந்தலைக் குறுக்கிக் கட்டப்பட்ட கோலம்)
பிறைநிலவு : இல்லை
குண்டலங்கள் : வலது செவியில் பனையோலைக் குண்டலம், இடது செவி வெறுஞ்செவி
கழுத்தணி : சரப்பளி, கண்டிகை, சவடி
கையில் உள்ள ஆயுதங்கள் : இடப்பின்கையில் சங்கும் வலப்பின்கையில் எறிநிலைச் சக்கரமும். வலமுன்கை கடகத்திலும் இடமுன்கை கடிஹஸ்தத்திலும் இருக்கின்றன. இடமுன்கையின் மணிக்கட்டு அருகே கிளி அமர்ந்திருக்கிறது.
ஊர்தி : இல்லை
நெற்றி : சென்னி இல்லை, நெற்றிக்கண் இல்லை
மார்பகங்கள் : கச்சால் மூடப்பட்டிருக்கின்றன
மேலாடை : இல்லை
காலணிகலன்கள் : சதங்கை, சிலம்பு
காலடியில் : எருமைத்தலை







விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள தச்சூர் என்ற ஊரிலுள்ள துர்க்கையின் சிற்பத்தையும் அண்மையில் நாங்கள் பார்க்க நேர்ந்தது. அதன் விளக்கம் கீழே.

சடை : கரண்ட மகுடம்
பிறைநிலவு : இல்லை
குண்டலங்கள் : இரண்டு செவிகளிலும் பனையோலைக் குண்டலங்கள்
கழுத்தணி : சரப்பளி மற்றும் வீரச்சங்கிலி, முப்புரிநூல் நிவிதமாக உள்ளது
கையில் உள்ள ஆயுதங்கள் : இடப்பின்கைகளில் சங்கும், கேடயமும், வில்லும் உள்ளன. இடமுன்கை கடியவலம்பிதமாக இருக்கிறது. வலப்பின்கைகளில் எறிநிலைச் சக்கரமும், வாளும், மணியும் உள்ளன. வலமுன்கை ஏந்தலாக இருக்கிறது. வலமுன்கையின் முழங்கைக்கு அருகே கிளி அமர்ந்திருக்கிறது. தோள்வளைகள் உள்ளன.
ஊர்தி : சிங்கம் மற்றும் மான் ஆகியன காட்டப்பட்டுள்ளன.
நெற்றி : சென்னி இருக்கிறது. நெற்றிக்கண் இல்லை
மார்பகங்கள் : கச்சு அணியப்பட்டுள்ளது.
மேலாடை : இல்லை
காலணிகலன்கள் : முழங்காலிலிருந்து கணுக்கால் வரை இரு கால்களிலும் கழல்கள், இடதுகாலில் சிலம்பு இருக்கிறது.
காலடியில் : எருமைத்தலை



விஷ்னு (எ) திருமாலாக மாற்றபட்ட கொற்றவை


ஆந்தையை ஏந்திய கிரேக்க தேவதை அத்தீனா





மானை வாகனமாக பரவை ஏந்திய கிரேக்க  பெண் கடவுள் ஆர்டிமிஸ் 





அன்னப்பரவை ஏந்திய ரோம பெண் கடவுள் டையானா








கொற்றவை குறித்த தொடக்ககாலச் சான்றுகள்



இன்று கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் நூலான தொல்காப்பியத்தின் பொருள் இலக்கணத்தில் கொற்றவை நிலை என்னும் ஒரு பிரிவு சொல்லப்படுகிறது. போருக்குச் செல்வோர் கொற்றவையின் பெருமைகளைக் கூறி அத் தெய்வத்தை வழிபட்டுச் செல்லுதலே கொற்றவை நிலை எனப்படுகின்றது[1]. காலத்தால் முற்பட்ட இந்த நூலிலேயே கொற்றவை இடம்பெற்றிருந்தும், சங்க இலக்கியங்கள் எதிலும் கொற்றவைத் தெய்வம் பெயர் குறித்துக் குறிப்பிடப்படவில்லை. கொற்றவை கானகத்தில் உறையும் மறவர்களுடைய கடவுள் ஆவாள். எனவே "ஓங்குபுகழ் கானமர் செல்வி" என அகநானூறு குறிப்பிடுவது கொற்றவையையே எனலாம். அத்துடன் குறுந்தொகையில் "விறல் கெழு சூலி" எனவும், பதிற்றுப்பத்தில் "உருகெழு மரபின் அயிரை" எனக் குறிக்கப்படுவதும் கொற்றவையையே என்பது சில அறிஞர் கருத்து. சங்க காலத்துக்குப் பிற்பட்ட சங்க மருவியகால இலக்கியங்களில் கொற்றவை பற்றிய சில குறிப்புக்கள் காணப்படுகின்றன. கலித்தொகையில், தலைவனின் தன்னிடம் கூறும் வஞ்சக வார்த்தைகளுக்கு உவமை கூறுவதாக, "பெருங்காட்டுக் கொற்றவைக்குப் பேய் நொடி சொல்வதுபோல" என்னும் பொருள்படும் பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு என்னும் வரி உள்ளது. பரிபாடலிலும், நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண் என்ற வரியில் கொற்றவை பற்றிய குறிப்பு வருகின்றது. திருமுருகாற்றுப்படை, தமிழ்க் கடவுள் எனக் கருதப்படும் முருகனைக் "கொற்றவை சிறுவ"[2], "பழையோள் குழவி"[3] என்னும் தொடர்களால் குறிப்பிடுகிறது. இது கொற்றவையை முருகக் கடவுளின் தாயாகப் பழந்தமிழர் கருதியதைக் காட்டுவதுடன், "பழையோள்" என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் கொற்றவை வழிபாட்டின் தொன்மையும் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம். இதிலிருந்து, திருமுருகாற்றுப்படைக்கு முந்திய பெரும்பாணாற்றுப்படையில் "சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும் அழகையும் உடைய இறைவி" என்னும் பொருள்படும் கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி[5] என்னும் குறிப்பும் கொற்றவையையே குறிக்கிறது என்பது வெளிப்படை.( திருமுருகாற்றுப்படை 258
திருமுருகாற்றுப்படை 259,நாராயணவேலுப்பிள்ளை, எம்., 2003. பக்.153.பெரும்பாணாற்றுப்படை, 460)

சிலப்பதிகார மதுரையில் மீனாட்சி தெய்வம் இல்லை என வாதிடுவோர் உள்ளனர். ஆனால் கொற்றவை தெய்வம் இல்லை என கூறுவோர் இல்லை.

கண்ணகி, தனது கணவன் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டவுடன், அவள் வளையல்களை உடைத்தெரிகிறாள். இதுவும் கொற்றவை கோவிலில் நடந்த நிகழ்ச்சி


கொற்றவையின் இயல்புகள்

கொற்றவை பற்றிய நேரடியானதும் மறைமுகமானதுமான குறிப்புக்கள் முற்பட்ட நூல்களிலேயே காணப்படினும் சிலப்பதிகாரமே கொற்றவை பற்றிய விரிவான பல தகவல்களைத் தருகிறது. சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது பற்றிய தகவலும் அத் தெய்வம் பற்றிய விளக்கமும் காணப்படுகிறது. மழை வளம் இல்லாத பகுதியில் வாழும் மறவர்கள் வில்லையேந்திப் பகைவரிடத்துச் செல்லும்போது அவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பவள் என்றும், அதற்குக் கைமாறாக வீரத்தன்மைக்கு அடையாளமான அவிப்பலியை எதிர்பார்ப்பவள் என்றும், அவள் நெற்றிக்கண்னை உடையவள், விண்ணோரால் போற்றப்படுபவள், குற்றம் இல்லாத சிறப்புக் கொண்ட வான நாட்டினை உடையவள் என்றும் கொற்றவையின் இயல்பும் சிறப்பும் விவரிக்கப்படுகின்றன[.
சிலப்பதிகாரம் 11:210-215

கொற்றவையின் தோற்றம்
கொற்றவை எப்படியான தோற்றம் கொண்டவள் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் சிலப்பதிகாரத்துக்கு முந்திய நூல்களில் காணப்படவில்லை. எனினும், கொற்றவைக்கு அத்தெய்வத்தின் இயல்பை விளக்கும்படியான வடிவம் இருந்தது என்பதை உய்த்து உணரும்படியான தகவல்கள் அந்நூல்கள் சிலவற்றில் காணப்படுகின்றன[. சிலப்பதிகார வரியில், மறக்குலப் பெண்ணான சாலினியைக் கொற்றவையாகக் கோலம் புனைந்தது பற்றிய விவரங்கள் தரப்படுகின்றன. இது அக்காலத்தில் மக்கள் கொற்றவையை எப்படியான தோற்றத்தில் வழிபட்டனர் என்பதை அறிய உதவுகின்றது.
நளினி, மு., கலைக்கோவன், இரா. பக். 12.


கலித்தொகையில் கொற்றி
கொற்றவையைக் கலித்தொகை கொற்றி எனக் குறிப்பிடுகிறது. கொற்றியே ஒரு பேய். அவளுக்கே பேய் பிடித்துவிட்டது என்று சொன்னால் யார் நம்புவார்கள் என்று தலைவி தலைவனிடம் கூறுவதாகப் பாடல் வருகிறது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் கொற்றவை பெயர் கொண்ட பிற் காலத்தில் கொற்றிகோடு என்ற பெயர் கொண்ட. மறவர் ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள மக்கள் கொற்றவை வழிபாட்டை செய்து வந்தவர்கள்
தலைவன் பரத்தையிடம் போய்வந்ததை மறைப்பது இவ்வாறு உள்ளதாம்.
ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி எல்லாம் வல் எல்லா!
பெருங் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து (கலித்தொகை 89 அடி 7-9).

குலோத்துங்க சோழன் எதிரிகளின் யானைகளின் எழும்பகுகளால் கொற்றவைக்கு கோவில் 
எடுத்தான் என கலிங்கத்து பரணி கூறுகிறது 

சோழர் குலதெய்வம் நிசும்பசூதினி 





போர்த் தெய்வமாகிய கொற்றவையின் நாள் பரணி. இந்நாளில் நடத்தப்படும் வழிபாடு காரணமாகப் பரணி நூல் என அழைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கின்றனர். பரணியின் நோக்கம் கொற்றவையைப் போற்றுதல் என்றும் அரசனின் வெற்றியைப் போற்றுதல் என்றும் சொல்லப்படுகிறது.

கடவுள் வாழ்த்து, தேவியைப் பாடியது, காளிக்குக் கூளி கூறியது என கலிங்கத்துப் பரணி 13 படலங்களைக் கொண்டுள்ளது. இதில் 599 தாழிசைப் பாடல்கள் உள்ளன. படலங்களின் பெயர் களில் கோயில் பாடியது, தேவியைப் பாடியது, இந்திர சாலம், காளிக்குக் கூளி கூறியது ஆகிய நான்கும் காளியோடு தொடர்புடையவை. இராச பாரம்பரியம். அவதாரம் ஆகியவை சோழன் குலோத்துங்கனோடு தொடர்புடையவை.
இவ்வாறு கொற்றவை பொருட்டுப் பரணி நட்சத்திரத்தில் கொண்டாடப் பெறும் விழாவில் மகளிர் கூழும் துணங்கையும் கொடுத்து காடு கெழு செல்வியை வழிபடும் வழக்கம் பண்டையது என்பதை முன்னர்க் குறிப்பிட்டோம். அவ்விழாவின்பொழுது துணங்கை, குரவை முதலிய கூத்துக்களையும், அம்மான பந்து ஊசல் முதலிய ஆட்டங்களையும் மேற்கொண்டு தம் அரசனைப் பாட்டுடைத் தலைவனுக்கி அவன் வெற்றித்திறன்களைக் கொண்டாடுவர்; வெற்றிக்குரிய அரசனையும் அவனது நாட்டையும் வாழ்த்துவர். பண்டையில் இவ்வழக்கம் உண்டென்பதை குறுந்தொகை, மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களாலும் அறியலாம். காவிரிப்பூம் பட்டினத்திலுள்ள மறக்குடிப் பெண்டிர் நாளங்காடி பூதத்திற்குப் பூவும் பொங்கலும் சொரிந்து குரவை யாடி அரசன வாழ்த்துவதை,
  காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை 
    புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் 
  பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து


மலையும் காடும் மிகுதியாக இருந்த சேர நாட்டினர் இத்தெய்வத்தை மிகுதியாக வணங்கினர் என்ற குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. சேர நாட்டில் இருக்கும் அயிரை மலை என்றொரு மலை குறிக்கப்பட்டு அந்த அயிரை மலையில் வாழும் கொற்றவையைப் போற்றும் பாடல்கள் இருக்கின்றன. அந்த அயிரை மலைக் காவலனாக சேரர்கள் குறிக்கப்படுகின்றனர்.


புறப்பொருள் வெண்பாமாலையில் கொற்றவையின் தோற்றம்.:
இவள் சிங்கக் கொடியும், பசுங்கிளியும் ஏந்தியவள். கலைமானை ஊர்தியாக உடையவள். பேய்களைப் படையாகப் பெற்றவள். ஒளியோடு வெற்றிமிக்க சூலப்படையை உயர்த்தியவள். நோலை(எள்ளுருண்டை) ,பொரி,அவரை,மொச்சை இவற்றின் புழுக்கல்(சுண்டல்), பிண்டி(அவல்), நிணம், குருதி, குடர்,நெய்த்தோர் என்பவற்றால் நிறைந்த மண்டையை வலக்கையில் ஏந்தியவள். மறவன் ஒருவன் ஆகோள் கருதுவானாயின் அவனுக்கு அறுளவும், பகைவர் தமது பகை நீங்கவும் முற்பட்டு வருவாள். அரசனொருவன் படையெடுக்கும்போது அவனது பகைவர் கெடுமாறும் முற்பட்டு வருவாள்.
புறப்பொருள் வெண்பாமாலை. துறை-கொற்றவை நிலை.
சிலப்பதிகாரம் 12:22-32
சிறீ சந்திரன், ஜெ., 2001. பக் 221
சிலப்பதிகாரம் 12:33-45

.

பதுக்கைகளையும் நெடுங்கற்களையும் ஆராய்ந்த ராஜன் (2004) இந்நினைவுச் சின்னங்களின் பெரும்பகுதி வெட்சிப் போரில் ஆநிரை கவர்ந்து / மீட்டு (தொறுமீட்டு) மாண்ட மறவர்க்கு நடப்பட்ட நிலையைச் சங்க இலக்கியச் சான்றுகள் வழியே விரிவாக ஆராய்ந்துள்ளார். இதன்வழிச் சங்ககாலத்திற்கும் முன்பு சுமார் ஆயிரம் ஆண்டுகள் காலப் பரப்பில் வாழ்ந்த பெருங்கற்படைப்பண்பாட்டு மக்களின் வாழ்வியலின் ஒரு பகுதி வெட்சித் திணையாக உருவெடுத்துள்ள நிலையை உணர முடிகின்றது. இப்பண்பாட்டுக் காலத்தில் கொற்றவை வழிபாடு வெகு சிறப்புடன் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை எளிதாக உய்த்துணர முடியும்.

மேலே தரப்பட்ட கொற்றவையின் தோற்றம் தமிழர் மரபுவழிக் கொற்றவையின் தோற்றத்தை வெளிப்படுத்திய அதே வேளை, ஆரியச் செல்வாக்குக்கு உட்பட்ட கொற்றவையின் தோற்ற அம்சங்களையும் சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது. இதன்படி கொற்றவை, தலையில் பிறையாகிய வெண்ணிற இதழைச் சூடியவள், நெற்றிக்கண் உடையவள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப்போல் ஒளிவீசும் புன்னகையை உடையவள், நஞ்சை உண்டதனால் கருநிறமான கழுத்தை உடையவள், நச்சுப் பாம்புகளை மார்புக் கச்சாக அணிந்தவள், கையில் வளையல்களை அணிந்திருப்பவள், சூலத்தை ஏந்தியிருப்பவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலில் சிலம்பும் வலக்காலில் கழலும் அணிந்தவள், வெற்றியைத் தருகின்ற வாளையுடையவள், மகிடாசுரனைக் கொன்று அவன் தலைமேல் நிற்பவள், கரு நிறத்தவள், கலைமானை ஊர்தியாக உடையவள் என்று கொற்றவையின் கோலம் கூறப்படுகின்றது[12]. இவற்றில் ஆரியப் புராணக் கதைகளின் தாக்கம் தெளிவாகத் தெரிவதுடன் கொற்றவை துர்க்கையாக மாற்றம் பெறும் நிலைமையையும் காண முடிகிறது. அது மட்டுமன்றி சிவனுக்குரிய தோற்ற இயல்புகளில் பலவும் கொற்றவைமீது ஏற்றிக் கூறப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கொற்றவை வழிபாடு

பாவை, கிளி, காட்டுக்கோழி, மயில், பந்து, கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்து மான் மீது கொற்றவையை உலாவரச் செய்து, பின்னால் வண்ணக் குழம்பு, சுண்ணப் பொடி, மணமுள்ள சந்தனம், அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோறு, புகை முதலியவற்றைத் தாங்கியபடி பெண்கள் வருவர். வழிப்பறியின் போது கொட்டும் பறை; சூறையாடும்போது ஊதப்படும் சின்னம், கொம்பு, புல்லாங்குழல் என்பவை முன்னால் இசைத்துக்கொண்டு வருவர்[13].

கொற்றவையும் சமசுக்கிருதவயமாக்கமும்

கொற்றவை
தொடக்கத்தில் மறவர் தமது தொழிலுக்கு வெற்றியைக் கொடுக்கும் தெய்வமாகவே கொற்றவையைக் கருதி வழிபட்டனர். பழந்தமிழ்க் கடவுள் முருகனின் தாயாகவும் கொற்றவை கருதப்பட்டாள். கலித்தொகை முருகனைச் சிவனின் மகனாகக் காட்டுகின்ற போதிலும், சிவனுக்கும், கொற்றவைக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிச் சிலப்பதிகாரத்துக்கு முந்திய நூல்கள் எதிலும் பேசப்படவில்லை. கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற சங்ககாலத்துக்குப் பிற்பட்ட நூல்கள் சிவனின் துணைவியாக உமையை முதன்மையாகப் பேசுகின்றன. எனினும் இம்மூன்று நூல்களும் கொற்றவை பற்றியும் பேசத் தவறவில்லை. திருமுருகாற்றுப்படை முருகனை "மலைமகள் மகன்" என்று உமையின் மகனாகக் காட்டுவதையும் காணலாம். இவ்வாறு பல்வேறு கருத்துக்களும் கலந்து காணப்படுவது அக்காலத்தில் சமசுக்கிருதவயமாக்கத்தின் தொடக்க நிலையைக் காட்டுவதாகக் கொள்ளலாம். சிலப்பதிகாரமும் உமை, கொற்றவை இரண்டு பெண்தெய்வ வடிவங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. இதில் கொற்றவையே முதன்மை பெறுகின்றது எனினும், முன்னரே குறிப்பிட்டபடி கொற்றவையில் சமசுக்கிருதவயமாக்கத்தின் தாக்கம் புலப்படுவதும் குறிப்பிடத்தக்கது. கொற்றவை திருமாலின் தங்கையாகக் காட்டப்பட்டதுடன் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம் முதலியவற்றையும் கொற்றவை தாங்கியிருப்பதாகக் காட்டப்பட்டது.
சிலப்பதிகாரம் 12:22-32
சிறீ சந்திரன், ஜெ., 2001. பக் 221
சிலப்பதிகாரம் 12:33-45



காலப்போக்கில், உமையின் முக்கியத்துவம் அதிகரித்ததுடன், கொற்றவை உமையின் இன்னொரு அம்சம் எனப்பட்ட துர்க்கையுடன் ஒன்றிணைக்கப்பட்ட நிலை காணப்படுகிறது. சிலப்பதிகாரத்திலேயே இதற்கான அடிப்படைகளைக் காணலாம்.

கொற்றவை வழிபாடு மறவர்களுக்கு அவசியமாகும்.

ஆங்கிலேயர் காலத்தில் ஆயுத ஒழிப்புக்கு பின் மறவர்களின் மறத்தன்மை அழிந்து போணதானது. இதை முன்னவே சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் நம்மை எச்சரித்துள்ளார் சிலப்பதிகாரத்தில்,

சிலப்பதிகாரம் 12:11-20

மறவர் குடியிலே பிறந்த சாலினி தெய்வம் ஏறிய நிலையில் கூறுவதாகக் கொற்றவைக்குப் பலி கொடா விட்டால் ஏற்படக்கூடிய நிலையையும் சிலப்பதிகாரம் கூறுகிறது. மறவரின் மன்றங்கள் பாழ்படும்
, போர் வாய்ப்பு இல்லாமல் மறவர் சினம் குறைந்து செருக்கு அடங்குவர், கொற்றவை மறவரின் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள் என்று மறவரின் தொழிலும், இயல்பும் வாழ்வும் பாழ்படும் நிலை கூறப்படுகின்றது

எனவே மறவர்கள் அனைவரும் கொற்றவை வழிபாட்டை பின்பற்றி வர வேண்டும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.