கோவில் மாநகரம் விழாக்கள் மாநகரம் என அழைக்கப்படும் மதுரை மாநகரம் சித்திரை திருவிழாக்கள்
மிகவும் பிரசித்தம் .
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன.
இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான தேனூரில் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்றுவருகிறது. பின்னாளில் இத்திருவிழா மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.







அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் கலந்து கொள்வார்கள்.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மறவர் மண்டகப்படிகள்:
மதுரை தெற்கு மாசி வீதி மறவர் மக்கள் மக்கள் இராமநாதபுறம் சேதுபதி மன்னர் மண்டகப்படி சிவகங்கை அரசர் மண்டகப்படிகள் மீனாட்சி திரு கல்யாண வைபவத்தில் 6 ஆம் நாள் திருவிழா ரிஷப வாகன ஊர்வலம்,9 ஆம் நாள் திருவிழா இந்திரா விமான ஊர்வலம் 11 ஆம் நாள் திருவிழா சப்த வர்ண சப்பறமும் சேதுபதி மன்னர்களுக்கும் சிவகங்கை அரசர்களுக்கும் பாத்தியப்பட்டதாகும்.
6 ஆம் நாள் திருவிழா ரிஷப வாகன ஊர்வலம்
9 ஆம் நாள் திருவிழா இந்திரா விமான ஊர்வலம்
11 ஆம் நாள் திருவிழா சப்த வர்ண சப்பறமும்
அழகர் வந்திறங்கும் மண்டகப்படிகள்:
அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் சுந்தரராஜன் பட்டி மறவர் மண்டபம் பிரசத்தியாகும் இதை தவிர
சேதுபதி அழகர் மண்டகப்படி மிகவும் பிரசித்தம். இந்த மண்டபம் திருமலை நாயக்கரையும் மதுரையையும்
காத்த இரகுநாத சேதுபதியின் நினைவாக கட்டப்பட்டது .
மூக்கறு போர்
இது திண்டுக்கல்லில் மைசூர் நாட்டின் அரசர் கந்தீரவன் படையினருக்கும், மதுரை திருமலை நாயக்கரின் படையினருக்கும் நடந்த போரைப்பற்றியது.
கந்தர்வரானின் படைவீரர்கள் போரில் எதிரிகளின் மூக்கை அறுத்து சேகரித்து மன்னருக்கு அனுப்பி பரிசை பெறுவது வழக்கம். திருமலை நாயக்கருக்கும் கந்தீரவனுக்குமிடையே நடந்த போரில், திருமலை நாயக்கர் மேல் கந்தீரவன் கொண்டிருந்த வெறுப்பால் கொடூரமான முறையில் பகைவரின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்தெடுக்கக்கூடிய கூரிய கருவியினால் கந்தீரவன் படை வீரர்கள் திருமலை நாயக்கரின் ஆட்சிப் பகுதியில் புகுந்து மக்களின் மூக்குகளை அரிந்து கட்டி மைசூர் மன்னரிடம் தக்க பரிசு பெற்றனர். பதிலடியாக இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் தலைமையில் மைசூர் ஆட்சிப் பகுதியில் நுழைந்து எதிரிகளின் மூக்குகளை மதுரைக்கு அரிந்து கட்டி அனுப்பி வைத்தனர்..
மூக்கறு போர் மண்டபம்
இந்த போரில் வெற்றி பெற்று திரும்பிய ரகுநாத சேதுபதி மன்னருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் மதுரை தல்லாகுளம் அருகே சேதுபதி மன்னருக்கு கல் மண்டபம் கட்டப்பட்டது. இது தான் அழகர் வந்திறங்கும் சேதுபதி மண்டபம்.
கள்ளழகர் வைகை ஆற்று திருக்கண் மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர், தல்லாகுளம் சேதுபதி மன்னர் மண்டபத்துக்கு இரவில் எழுந்தருள்வார். அங்கு இரவில் பூப்பல்லக்கு நடைபெறும். அதன்பின் காலையில் அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்படுவார்.
https://www.youtube.com/watch?v=VWxOzUQ6NIg&feature=youtu.be
இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சமஸ்தான தேவஸ்தான மண்டகப்படியில் எம்பெருமான் ஸ்ரீ கள்ளழகர் பூ பல்லாக்கு சிறப்பு பூஜை இராமதபுரம் மகாராஜா திருமிகு. குமரன் சேதுபதி அவர்களின் சார்பாகவும், இராமனாதபுரம் தேவஸ்தான,சமஸ்தான தர்மகர்த்தா இராணி R B K இராஜேஸ்வரி நாச்சியார் அவர்களின் சார்பாகவும், இராமனாதபுரம் சமஸ்தான திவான் திருமிகு.மகேந்திரன் அவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது... இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வீரராகவ்ராவ் அவர்களும், வெள்ளியங்குன்றம் ஜமின் அவர்களும், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் அகர்வாள் அவர்களும்,தேவஸ்தான,சமஸ்தான கண்காணிப்பாளர் திரு.விக்னேஷ் அவர்களும் மற்றும் பல்லாயிரக்கணக்காணபொதுமக்களும் கலந்துகொண்டு ஸ்ரீ கள்ளழகர் பூ பல்லாக்கு உற்சவம் சிறப்பாக
நடைபெற்றது.....
பெரிய மறவர் நாடு இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மதுரை மண்டகப்படி யில் கள்ளழகர் அவர்களுக்கு 68 வகையிலான மூலிகைகள் மற்றும் பால் பன்னீர் புஷ்பங்கள் பழங்கள் சந்தனம் தேன் கல்கண்டு தயிர் மஞ்சள் தீர்த்தம் இவைகளை கொண்டு சிறப்பு அபிசேகம் செய்து சிறப்பாக பூசைகள் செய்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் சக்கரை பொங்கல், தக்களி, தயிர், புளிசதாங்கள் அரண்மனை சார்பில் வழங்கப்பட்டது 5 லட்சம் மேல் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து அருளை பெற்று சென்றனர்......
நன்றி:
கார்த்திக் தேவர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.