Friday, October 20, 2017

நன்பர் ஆனந்தராஜ் சுருதிமான் மறைவு



தேவகோட்டையை பூர்வீகமாக கொண்டு மதுரை செல்லூரில் வசித்து வந்த என் நன்பரும் அண்ணனுமான திரு. ஆனந்தராஜ் சுருதிமான் அவர்கள் கடந்த 10-10-2017 செவ்வாய்கிழமை அன்று இயற்கை எய்தினார்.தனது வரலாற்று பதிவுகள் மூலம் பார்க்கவ குல சமுதாய வரலாறுகளை உலகறிய செய்த பெருமை அண்ணனையே சாரும். இந்த மன்னைவிட்டு மறைந்த தெய்வமகன் அண்ணன் அவர்களே எனக்கு முதல் முன் உதாரணமாக இருந்து ஒரு வரலாறை எப்படி தர வேண்டும் என ஊக்கம் அளித்தவர். முதன் முதலில் இவர் அளித்த அறிவுரைகளையும் யோசனையினாலே வரலாறு எழுத முடிந்தது. பார்க்கவ குலமும் முக்குலத்தோரும் சகோதரர்களே என அண்ணன் மனதில் நினைத்து என்னிடம் அடிக்கடி சொல்லி வந்தார். அவர் கள்ளனுக்கு கள்ளனாக மறவனுக்கு மறவனாக அகமுடையனுக்கு அகமுடையனாக தாங்கி பிடித்தது அனைவரையும் ஒன்றாக பாவித்து வந்தார்.

அவரை பிரிந்து வாழும் அவரது குடும்பமும் நன்பர்களுடன் நானும் தவிக்கிறேன்.
இந்த தேவர்-முக்குலத்தோர் தென்பாண்டி சிங்கங்கள் தளத்தில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளும் அண்ணனுக்கு சமர்பிக்கிறேன். இதன் ஆக்கத்தின் முன்னோடியில் அண்ணனும் ஒருவர்.

இந்த தளம் இருக்கும் வரை அண்ணன் பெயர் இருக்கும். என் வாழ்வில் என்றென்றும் அண்ணனது நினைவு இருக்கும்.

"மன்னை விட்டு நீங்கினாலும் எங்கள் மனத்தை விட்டு நீங்காத
மாணிக்கம் ஆனந்த் பாக்கவன் அவர்கள்"

அன்னாரது ஆத்மா இறைவன் திருவருள் நிழலில் இளைப்பார பிராத்திகிறோம்.

இவன்:
தென்பாண்டி சிங்கங்கள்
தேவர் முக்குலத்தோர் தளம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.