Monday, May 12, 2014

சிவகங்கை கௌரி வல்லபர் கல்வெட்டு மதுரை பழையனூரில் கண்டுபிடிப்பு

கௌரியர்:



பாண்டியன் பட்டமான கௌரியர் என்ற பட்டத்தை காலம் காலமாக சூடி வருபவர்கள் சிவகங்கை மன்னர்கள். இந்த பட்டம் வேறு எவரிடமும் கிடையாது. பாண்டிய நாடும் சேதுத்துறையும் கௌரியருக்கு உரியது என சங்ககாலம் செப்பும்.

சிவகங்கையை ஸ்தாபித்தது சசிவர்ணத்தேவர் என வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்க்கு முன்பே பார்த்திபனூர் அருகே அருங்குளத்திலிருந்து சிவகங்கை நாலுக்கோட்டை நெடுக மதுரை அருகே உள்ள பழையனூர் வரை பரந்து அமைந்த ராஜ்ஜியத்தின் மன்னராக இருந்த உடையார் கௌரி வல்லபத் தேவர்கள் ஆண்டிருந்தனர் என்ற நிருபத்தின் ஆதாரமாக திருப்புவனம் அருகே உள்ள பழையனூர் கோவிலில் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கம்மாய் கரையில் 300 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கபட்டது. இக்கல்வெட்டு பற்றி மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ராஜேந்திரன்,செயலர் சொ.சாந்தலிங்கம்,ஆத்மநாதன் கூறியது. 300 ஆண்டுகளுக்கு முன்பு பழையனூர் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சக வருடம் 1717 ஆம் ஆண்டு சேதுபதி காத்த ரெகுநாத சேதுபதிக்காக கௌரி வல்லப உடையத் தேவரால் தேவதானமாக நிலம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதியில் உள்ள திருச்சுழி சிவன் கோயில்,கல்வி மடை திருநாகேசுவரர் கோயில் உள்ளிட்ட சிவத்தலங்களை சேதுபதி மன்னருக்காக கௌரி வல்லபத் தேவர்கள் பராமரித்து வந்துள்ளனர் என தெரிகின்றது.

சிவகங்கை மன்னர்கள் தங்களை பாண்டியரின் உறவினர்கள் என கூறுகின்றனர். இதற்க்கு கௌரியர் என்ற பெயரே காரணமாக இருக்கிறது.

நன்றி:
தினமனி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.