பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.

புதுக்கோட்டை மறவர்கள் சேதுபதி மறவர் என்ற வாள்கோட்டை மறவர் என்று திருச்சி மானுவேல் hemmingway கூறுகிறார் ஆக செம்பி நாட்டு மறவர்கள்
ஏழு கிளைகளில் பிச்சா மரக்கால் கிளை மட்டும் உண்டாம்
பெருவஞ்சி:
"முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று"(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் முன்னே வந்து பணிந்து சேராதாராக,அவரது வளமிக்க நாட்டினை வஞ்சி வேந்தன் பின்னரும் கோபித்தவனாக அவனது நாட்டை எரியூட்டி அழிப்பது பெருவஞ்சி ஆகும்.
பாசறை நிலை:
"மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லம் மறந்துறப்பவும் பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று"(புறப்பொருள் வென்பாமாலை:20)
நிறை மதியினை போன்ற தனது கொற்றக்கு குடையின் பகை மன்னரை எல்லம் தம் மறத்தின் கன் பனியவைத்த மறவேந்தனான பாண்டியன் தன் பாசறையை விளக்குவது பாசறை நிலை.
மாராய வஞ்சி:
"மறவேந்தனிற் சிறப்பெய்திய விரல்வேலோர் நிலையுரைத்தன்று"(புறப்பொருள் வென்பாமாலை:10) போர் மறத்தையுடைய வஞ்சி வேந்தனாற் சிறப்புகளை அடைந்தவரான,வெற்றி வேலோரான மறவர்களது நிலையை விளக்குவது 'மாராயவஞ்சி' ஆகும் சிறப்புகள் சிறப்புகள் ஏனாதி,காவிதி முதலிய பட்டங்களும்,நாடும் ஊரும் பெறுதல் 'மாராயம்' என்பது அரசனால் செய்யும் சிறப்பு. விழுப்புன் பட்ட வீரனுக்கு செய்யும் செயலே 'மாராய வஞ்சி' ஆகும்.
மழபுல வஞ்சி:
பகைவரது நாட்டை பாழ்படுத்தி கொள்ளையிடுவது மழபுழ வஞ்சி.
179. பருந்து பசி தீர்ப்பான்!
பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென, ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன், படை வேண்டுவழி வாள் உதவியும், வினை வேண்டுவழி அறிவு உதவியும், வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத், தோலா நல்லிசை, நாலை கிழவன், பருந்துபசி தீர்க்கும் நற்போர்த் திருந்துவேல் நாகற் கூறினர், பலரே.
பொருள்:
இதில் மறவரே பாண்டியருக்கு படை வேண்டுதற்கு வாள் உதவியும்,வினை வேண்டினால் அறிவுதவியும் அளித்து வந்தனர் என கூறுகின்றது.
பாண்டியர் படை அனிகளில் மறவர் படையும் ஏழகப்படையுமே முதன்மையான படையாகும். ஏழகப்படை என்பது ஏழு+அகம் ஏழு அகப்படையாகும். இந்த அகப்படையில் பங்குபெற்றது அகம்படியர் மக்களே.பாண்டியரது படைகளில் மறவர்,அகம்படிய மக்களே பிரதானம். மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டிய தேவன் கல்வெட்டில்,"புக்கிலந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகம்ழிய மறப் படையுடன் எழுக படை" என குடுமியான் மலை கல்வெட்டு கூறுகிறது.
குலோத்துங்க சோழனின் குடுமியான்மலை கல்வெட்டுகளில்"பாண்டியரது மறவர் படையையும் ஏழகப்படையையும் வென்றதாக" க.என்.(163,166) கூறுகிறது.இரண்டாம் இராஜேந்த்ரனின் சிவகங்கை சோழபுரம் பகுதி கல்வெட்டில்"பாண்டிய மறமடக்கிய இராஜேந்த்ர சோழ மங்கலம்" என பெயரிட்டதாக கல்வெட்டு கூறுகிறது.
"படிக்காக்கும் தங்கவிகை பார்வேந்தர் தன்கண்மனி,முடிகாக்கும் செங்கோன்மை முறைகாக்கும் வடமேரியல் கயல் காக்கும் மறவர் கையின் வளைதடியே"-(வாளெழுபத்:தருமபுத்திரர்)
"மறவாளேந்திய நிலவிற்திருமகன் நெடியோன் முடத்திருமாறன்"(மதுரைக்காஞ்சி)
மதுரை சிறிய பாலம் அருகே ஒரு தூம்பு கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்ளது அரிகேசரி பராங்குச மறவர் மா சுந்தரபாண்டியன்(7-ம் நூற்றாண்டு)
வடிவம்பலம் நின்ற பாண்டியர் தோன்றல் காற்று எனக்கடிதுகொட்பும் வளமிகு மறமைந்தர் தோள் முறையான் வீறுமுள்ளவும்(மதுரை காஞ்சி:45-50)
கரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர் கடுங்களிறு ஓட்டலின் கானுனர் (மதுரைக்காஞ்சி:595)
மறவர்களை பாண்டிய படைகளில் அழைத்தல்:
வில்லை கவை இகனைதாங்கு மாற்பின் மாதங்கு எழுந்தோள் மறவர் தம்மின் கல் இடிந்து கட்டிய(மதுரை காஞ்சி:730)
சுந்தரபாண்டிய தேவர் தலைமையில் சென்ற படைப்பிரிவுகளில் சில பொன்னமராவதி,விராச்சிலை பகுதிகளில் டைப்பற்றாக தங்கியது.இந்த படைப்பற்றின் ஊர்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் புதுக்கோட்டை மானுவலில் உள்ளது. பொன்னமராவதியில், குருந்தன் பிறையிலும்,விராச்சிலையிலும் இன்றும் அந்த படைப்பற்றின் மறவர் குடும்பங்கள் இருந்து வருகின்றன.
கி.பி.1219-ல் குலோத்துங்கன் இறந்த பின்னர்,இரண்டாம் இராசராசன் முடிசூடிய சில திங்களில் சுந்தர பாண்டியன் பெரும் படையை திரட்டிக் கொண்டு சோழ மண்டலத்தின் மீது படையெடுத்து வந்து இச்சோழ மன்னனைப் போரில் வென்று நாட்டை கைப்பற்றி கொண்டான். இப்படையெழுச்சியில் சோழரின் பழைய தலைநகரங்களான தஞ்சை,உறையூரும் பாண்டிய நாட்டு மறவர் படைகளாளும் ஏழகப்படை வீரர்களாலும் கொளுத்தப்பட்டன.பல மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் ஆடலரங்களும் மணிமண்டபங்களும் இடிக்கப்பெற்றன. நீர் நிலைகளும் அழிக்கபட்டன.(சோழன் கரிகாற் பெருவளத்தான் என்பவன் தன் மீது பாடிய கடியலூர் உருத்திரங்க கண்ணனார் என்ர புலவருக்கு முற்காலத்தில் பரிசாக வழங்கப்பட்ட ஒரு மண்டபத்தை ஒன்றுதான் சோழ நட்டில் இடிக்கபடாமல் விடுப்பெற்றது என திருவெள்ளாறு(புதுக்கோட்டை) கல்வெட்டு ஒன்று கூறுகின்றது
இனி, இப்போர் நிகழ்ச்சிகல் தோல்வியுற்ற இராசராசன்,தன் உரிமைச் சுற்றத்தினருடன் தலைநகரை நீங்கி,வேறிடஞ் சென்று கரந்துரை நிலை எய்தினான். வாகைசூடிய சுந்தர பாண்டியன் அந்நாளில் பழையாரை சென்று ஆயிரம் தாள் மண்டபத்தில் வீரபிசேகம் செய்து கொண்டான்.

பின் பொன்னமராவதி என்ற தன் நாட்டில் உள்ள தன் அரன்மனையில் சிலகாலம் தங்கியிருந்த காலத்தில் சோழனுக்கு சில தூதுவர்களை அனுப்பி அவனை அழைத்து சமாதானம் பேசி அவனது நாட்டை அவனுக்கே அளித்து கப்பம் கட்டி நாடாள ஆனையிட்டு சோழனாட்டை அனையிட்டான். இதன காரனமாக சோழனுக்கு சோனாட்டை வழங்கிய "சோணாடு வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்" என திருநாமம் கொண்டான். (பிற்கால சோழர் வரலாறு) இந்த செய்தி பொன்னமராவதியில் உள்ள ஒரு கோவிலிலும் வெள்ளாறு கோவிலிலும் கல்வெட்டாக உள்ளது.இந்த பெருவஞ்சிப்பாடலும் தஞ்சை மற்றும் உறந்தையை மறவர்கள் செந்தழல் கொழுத்திய செய்தியும் பின்பு பாண்டியனின் படைப்பற்றில் ஒரு பகுதி மறவர்கள் இப்பகுதியில் குடியேறினர். இவர்கள் தம்மை "ஒல்லையூர் மதுரை மறவரோம்" என கல்வெட்டுகள் கூறுகின்றது.
பாண்டியர் படைபற்றுகள்:
பாண்டியர் படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது விரையாச்சிலை பாண்டியர் படைப்பற்றில் மறவர்களே ஊரவையர்களாகவும்,அரையர்களாகவும் ஆளும் வர்கத்தினராக செயல்பட்டுள்ளனர்.இதன் கல்வெட்டுகளில் குறிக்கும் அரசமக்களாகவும் நாடாள்பவர்களாகவும் கூறும் கல்வெட்டுகளில்.மாறவர்மன் குலசேகரபாண்டியதேவன்(க.என்.395,565) மற்றும் விரையாச்சிலை மாறவர்மன் குலசேகரபாண்டிய தேவன் கல்வெட்டுகளான க.என்(346,421,455,534) குறிக்கிறது.

மறச்சக்கரவர்த்தி பிள்ளை என்பவரால் எழுதப்பட்டதாக கருதப்படும் "பெருவஞ்சி" எனும் நூல் பற்றி பொன்னமராவதி கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு பரிசாக தூத்தூர் எனும் கிராமம் வழங்கப்பட்டது.இந்த படைபற்று தலைவர்களை தான் மறமானிக்கர் என்னும் மறவர் மானிக்கம் என அழைக்கபடுகிறது.

பிறகு அங்கு ஒரு கோயிலும் இப்படைபற்று மக்களால் கட்டப்பட்டது.அது அழக்பெருமை வின்னகர் ஆழ்வார் கோயில் என்னும் அரிவீசுரமுடைய அய்யனார் கோவில் ஆகும்.அழகம்பெருமாள் என்பது சுந்தரபாண்டியத் தேவர் அல்லது அவரின் மைத்துனரின் பெயராக இருக்கலாம்.

மறவர்களுக்கு கோத்திரம் என்ற அமைப்பு என்றுமே கிடையாது கிளைகள் மட்டுமே உண்டு. ஆனால் பொன்னமராவதி பாண்டிய படைபற்று மறவர்களுக்கு மீனாட்சி கோத்திரம் என்று மீனாட்சி அம்மன் கோத்திரத்தை கூறுகிறார்கள்.

இந்த வஞ்சி பாடல் உறையூரையும்,வல்லத்தையும் தஞ்சையும் போரிட்டு கொளுத்திய மறவரின் போரின் வன்மையை இது பாடுகின்றது.இதற்கு ஆதாரமாண கல்வெட்டு ஒன்று பொன்னமரவதி புறமலைநாட்டு கோவிலில் உள்ளது.
நன்றி:முத்துராஜா(வழக்கறிஞர்)
விபரம்: பிற்க்கால சோழர்கள் வரலாறு,பாண்டியர் வரலாறு(டி.வி.சதாசிவ பண்டாறத்தார்)
மட்டியூர் என்பது இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது.
(Ins.298 of 197-28)
Inscriptions of Pudukkottai state.No.166.
என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. புதுக்கோட்டை மற்றும் தென்-இந்திய கல்வெட்டு அராய்ச்சி-க.ரா.சீனிவாசன்,194,1946, தென்பாண்டிய செப்புபட்டய வரலாறு.-சென்னை. சுப்ரமனிய அய்யர் "பழங்கால இந்திய அரசாங்கத்தின் அடித்தலம்" புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டு,சோழ அரசியல் ஆவனம்-சுப்புராயலு.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.